காணாமல் போய் 4 நாட்களுக்கு பின்னர் வீடு திரும்பிய மொடல் அழகி : நடந்தது என்ன?

தமிழகத்தின் சென்னையில் விளம்பர படங்களில் நடித்து வந்தவர் கானம் நாயர், இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார்.

கடந்த 26-ஆம் திகதி தனது கருப்பு நிற ஆக்டிவா இருசக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து கீழ்ப்பாக்கத்திற்கு சென்று கொண்டிருந்த போது திடீரென காணாமல் போய்விட்டார்.

இதனால் பதற்றமடைந்த அவரது குடும்பத்தினர் அப்பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

விசாரணை நடத்திய பொலிசார், அவரின் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் அனைத்திலும் சோதனை மேற்கொண்டனர், ஆனால் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

அதன் பின்னர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவையும் சோதனை செய்தனர். அதிலும் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

இதனிடையே கானம் நாயர் வழக்கமாக தான் அலுவலகம் செல்லும் பாதையில் போகாமல் காணாமல் போன தினத்தன்று வேறு பாதையில் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

காணாமல் போய் 3 நாட்கள் ஆன நிலையில் அவர் பற்றி எந்தத் தகவலும் கிடைக்காததால் அவரை கண்டுபிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து திடீரென்று பொலிசாரை தொடர்பு கொண்ட கானம் நாயர் தான் பாதுகாப்பாக இருப்பதாக கூறியுள்ளார்.

அதன் பின்னர் பிற்பகலில் தனது வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டிற்கு வந்த அவர் மிகுந்த மன அழுத்தத்துடன் காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கானம் கபூர் மாயமாகி நான்கு நாட்கள் ஆன நிலையில் திடீரென்று போன் செய்து தான் பத்திரமாக இருக்கிறேன் என்றும் அதைத் தொடர்ந்து வீடும் திரும்பியுள்ளார்.

இந்த சம்பவம் பொலிசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதால், அவரிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுநீர் கழித்ததைத் தட்டிக் கேட்டவர் அடித்துக் கொலை!!

டெல்லியில் இளைஞர்கள் இருவர் சிறுநீர் கழித்ததைத் தட்டிக் கேட்ட இ-ரிக்‌ஷா ஓட்டுநர் அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த ரவீந்தர், அங்குள்ள முகர்ஜி பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு மதிய உணவு சாப்பிட வந்துள்ளார்.

அப்போது அங்குள்ள பொது கழிப்பிட சுவற்றின் மீது டெல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 2 மாணவர்கள் சிறுநீர் கழித்துள்ளனர்.

இதைக் கண்ட ரவீந்தர், கழிப்பிடத்தை பயன்படுத்துமாறு கூறியதுடன், தனது பாக்கெட்டில் இருந்து சில்லறையை எடுத்துக் கொடுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள், ரவீந்தரின் சட்டை காலரை பிடித்து மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது.

அருகில் இருந்தவர்கள் மாணவர்களை சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். இதைத் தொடர்ந்து சில மணி நேரம் கழித்து அதே இடத்திற்கு கும்பலாக வந்த மாணவர்கள், ரவீந்தரை கல்லால் அடித்து உதைத்துள்ளனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ரவீந்தரின் சகோதரர் வீரேந்தர், அவரை மீட்டு வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பலத்த காயங்களுடன் வீடு திரும்பிய ரவீந்தருக்கு கடுமையான முதுகு வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், ரவீந்தர் இறந்தே மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுபான விடுதி திறப்பு விழாவில் பங்கேற்ற பெண் அமைச்சர்!!

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் மதுபான விடுதி ஒன்றை திறந்து வைத்த பெண் அமைச்சரால் சர்ச்சை எழுந்துள்ளது.

உத்தரபிரதேசத்தில் பெண்கள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருப்பவர் சுவாதிசி்ங், இவரது கணவர் தயாசங்கர்சிங், அந்த மாநிலத்தை ஆளும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகியாக உள்ளார்.

இந்த நிலையில் லக்னோவில் பீர் விற்பனை மையத்தில் புதிய மதுபான விடுதி ஒன்றின் திறப்பு விழாவில் பெண் அமைச்சர் சுவாதி சிங் பங்கேற்றார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவர் ரிப்பன் வெட்டி திறந்துவைக்கும் புகைபடங்கள் சமூக வலைதளங்ளிலும் வைரலாக பரவியுள்ளது.

பொதுமக்களிடையே கடும் கண்டனம் எழுந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து விரிவான அறிக்கை தருமாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெண்ணை கொடூரமாக கொன்றது என் : இளைஞர் பரபரப்பு வாக்குமூலம்!!

பெங்களூரில் தமிழ்நாட்டை சேர்ந்த பெண்ணை கொலை செய்த இளைஞர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் வசித்து வருபவர் பிரியா (25), தமிழ்நாட்டை சேர்ந்தவரான இவர் அங்கு வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 24ஆம் திகதி பிரியா தனது வீட்டில் சடலமாக கிடந்துள்ளார். பிரியாவை யாரோ கழுத்தை அறுத்து கொலை செய்ததை பொலிசார் உறுதி செய்தனர். மேலும், அவருடன் தங்கியிருந்த ரியா என்பரும் மாயமாகி இருந்தார்.

கொலையாளியை பிடிக்க பொலிசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது, நஞ்சாபுரா கிராம பஞ்சாயத்து உறுப்பினர் மாதேஷ் என்பவரை அவர்கள் கைது செய்தனர்.

பிரியாவை, கழுத்தை அறுத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ள மாதேஷ் கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதுகுறித்து பொலிசார் கூறுகையில், கொலையான பிரியாவின் நிஜ பெயர் ஹொன்னம்மா. திருமணமான இவருக்கு கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கடந்த எட்டு மாதங்களுக்கு முன்னர் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து பெங்களூர் வந்த ஹொன்னம்மா சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

அந்த சமயத்தில் தான், மாதேஷுடன் பிரியாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இது கள்ளக்காதலாக மாற இருவரும் ஒரே வீட்டில் சேர்ந்து வசிக்க தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், ஹொன்னம்மாவுக்கு ரியா என்ற நபருடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த மாதேஷ் ஹொன்னம்மாவிடம் தகராறு செய்துள்ளார்.

பின்னர் மாதேஷை பிரிந்த ஹொன்னம்மா, ரியாவுடன் வேறு வீட்டில் தனியாக குடிபெயர்ந்துள்ளார். மேலும் தனது செல்போன் நம்பரையும் மாற்றியுள்ளார்.

இதை எப்படியோ கண்டுபிடித்த மாதேஷ், அவரை தொடர்பு கொண்டு அவர் வீட்டு முகவரியை அறிந்து அங்கு சென்றுள்ளார்.

பின்னர் மாதேஷும், ஹொன்னம்மாவும் இரவு அங்கு உல்லாசம் அனுபவித்துள்ளனர். அதன் பிறகு விடிகாலை 3.30 மணியளவில் கண்விழித்த மாதேஷ் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் பிளேடை வைத்து ஹொன்னம்மாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டார்.

தனக்கு தெரியாமல் வீடு மாறியதோடு, மற்றொருவருடன் நெருங்கி பழகி வந்ததால் ஹொன்னம்மாவை மாதேஷ் கொலை செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்

மண் சரிவிலிருந்து வெளி வந்த பெண்ணின் சடலம் : துணியால் சுற்றப்பட்டமையால் சோகம்!!

கடந்த சில நாட்களாக பெய்த அடைமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி உயிரிழந்த பெண்ணொருவின் சடலம் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாலிந்த நகரத்தின், கொஸ்குலன கெலின் என்ற மலை பகுதியில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக உயிரிழந்த 68 வயதுடைய பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த மண் சரிவில் 7 பேர் உயிரிழந்தனர். எனினும் அவர்களின் சடலங்களை இதுவரையில் கண்டுபிடிக்க முடியவில்லை.

கண்டுபிடிக்கப்பட்ட இந்த பெண்ணின் சடலத்தை புதைப்பதற்கு ஒன்றுமே கிடைக்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

இதன் காரணமாக குறித்த சடலத்தை துணி ஒன்றில் சுற்றி பொலித்தின் பையில் வைத்து புதைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து அந்த பகுதி மக்கள் கடும் வருத்தத்தை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை பாலிந்த நகரில் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் எந்தவொரு அரசாங்க அதிகாரியும் கவனம் செலுத்தவில்லை பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

வவுனியா தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு அரிய சந்தர்ப்பம் : சந்தர்ப்பத்தை தவறவிடாதீர்கள்!!

வவுனியா தொழிநுட்பக் கல்லூரியில் குறுங்கால கற்கை நெறிகள் ஜூலை மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளன. அதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக வவுனியா தொழிநுட்ப கல்லூரியின் அதிபர் இன்று உத்தியோகபூர்வமாக தெரிவித்தார்.

ஏசி மெக்கானிக், வீட்டுப்பாவனை மின் உபகரணங்கள் திருத்துதல், மோட்டார் சைக்கில் திருத்துதல், கள உதவியாளர், விவசாயம், கணிய அளவை உதவியாளர், வயரிங், ஆங்கிலம் என பல்வேறு கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

விண்ணப்பபடிவங்களை வவுனியா தொழிநுட்பக் கல்லூரி அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள முடியுமெ னவும் 25.06.2017ம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வவுனியா தொழிநுட்பக் கல்லூரியில் நடைபெறவிருந்த ACS, BCS பரிட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன!!

வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் நாளை (31.05.2017) நடைபெறவிருந்த ACS, BCS ஆகிய ஆங்கில கற்கைநெறிகளுக்கான NVQ பரீட்சையானது தொழில்நுட்பக் கல்லூரி தலமை அலுவலகத்தின் அறிவுறுத்தலுக்கமைய பிற்போடப்பட்டுள்ளதாகவும் புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியின் அதிபர் தெரிவித்தார்.

வலுப்பெறும் மோரா புயல் : பலியானவர்களின் எண்ணிக்கை 201ஆக அதிகரிப்பு!!

 
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 201ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் தென்மேற்கு பகுதியில் கடந்த 25ஆம் திகதி முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்து வரும் இந்த மழையால் வெள்ளப்பெருக்கும், பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டு உள்ளது.

இதனால் சுமார் 5 இலட்சம் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். நிலச்சரிவால் மண்ணுக்குள் புதைந்து கிடந்த பலரின் உடல்கள் நேற்றும் மீட்கப்பட்டன. இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 201 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை, வெள்ளத்தில் சிக்கி உள்ள மக்களை மீட்கும் பணியிலும், நிவாரண உதவிகள் வழங்குவதிலும் இலங்கை முப்படையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

நேற்று இந்த பணியில் ஈடுபட்டிருந்த விமானப்படை ஹெலிகாப்டர் ஒன்று மோசமான வானிலை காரணமாக விழுந்து நொறுங்கியது. எனினும் அதில் இருந்த விமானி அதிர்ஷ்டவசமாக தப்பினார்.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக (மோரா) உருவாகி இருப்பதால், அங்கு மேலும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது பாதிக்கப்பட்ட மக்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. இயற்கை பேரிடரில் சிக்கியுள்ள இலங்கைக்கு உதவிக்கரம் நீட்ட சீனா முன்வந்துள்ளது.

22 இலட்சம் டாலர் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் விரைவில் இலங்கைக்கு வழங்கப்படும் என சீன அரசு அறிவித்து உள்ளது.

இதற்கிடையே நிவாரண பொருட்கள் மற்றும் மீட்புக்குழுவினரை ஏற்றிச்சென்ற இந்தியாவின் 2வது போர்க்கப்பலான ஐ.என்.எஸ்.ஷர்துல், நேற்று முன்தினம் கொழும்பு வந்திருந்தது.

வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை, தற்போது வலுவடைந்து அதி தீவிர புயலாக மாறி வருகிறது. ‘மோரா’ எனப் பயரிடப்பட்ட இந்தப் புயல் மேற்குவங்கத்துக்குத் தென்கிழக்குக் கடலில் மையம் கொண்டுள்ளது.

இந்தப் புயலால் வங்கதேசம், ஒடிசா, அருணாச்சல்பிரதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலப் பகுதிகளில் தீவிரமாக மழை பெய்யும். வங்கக்கடலைக் கடக்கும் இந்தப் புயலால் தமிழகத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், வானிலையில் எவ்வித மாற்றமுமின்றி தமிழகத்தில் வெப்பம் தொடர்ந்து நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் கடந்து போவதால் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் வங்கக்கரையிலுள்ள துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன.

கொள்ளையில் ஈடுபட்ட ஏழு பெண்கள் : மடக்கிப்பிடித்த இளைஞர்கள்!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறில் உள்ள ஆலயம் ஒன்றில் கொள்ளையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஏழு பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பெரியகல்லாறு ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலயத்தின் கும்பாபிசேகம் நேற்றுபிற்பகல் சிறப்பாக நடைபெற்றது. இதில் பெருமளவான பக்தர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது நான்கு பெண்களின் கழுத்துகளில் இருந்த மாலைகள் அறுக்கப்பட்டதை தொடர்ந்து ஆலய நிர்வாகத்தினரும் இளைஞர்களும் துரித கதியில் செயற்பட்டதன் காரணமாக ஆலயத்தின் வளாகம் மற்றும் வீதிகளில் இருந்து ஏழு பெண்களை பிடித்துள்ளனர்.

அவர்களை விசாரணை செய்தபோது அவர்களிடம் இருந்து கொள்ளையிடப்பட்டதாக தெரிவிக்கப்படும் ஒரு தங்க மாலை மீட்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் ஏழு பேரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த ஏழு பெண்களும் குழுவாக இரண்டு ஆண்களுடன் வந்து இந்த கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் இரண்டு ஆண்களும் தப்பிச்சென்றுள்ளதாகவும் பொதுமக்கள் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.

இந்த குழுவினர் ஆலய உற்சவங்களுக்கு சென்று இவ்வாறான கொள்ளைகளில் ஈடுபட்டுவருவதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கங்கையிலிருந்து வெளிவரும் ஆபத்தான முதலைகள் : மக்களுக்கு அவசர எச்சரிக்கை!!

தென் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ள நிலையை அடுத்து, கங்கையிலுள்ள பாரிய முதலைகள் கிராமங்களுக்குள் ஊடுவியுள்ளன.

இந்நிலையில் மாத்தறை நில்வளா கங்கையிலிருந்து வெளிவரும் வெள்ள நீருடன் பாரிய முதலைகள் வந்துள்ளமையால் அவதானத்துடன் செயற்படுமாறும் வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த முதலைகளின் எண்ணிக்கைகளை சரியான முறையில் கணக்கிட முடியாதெனவும், வெள்ள நீரில் குறைந்த போதிலும் நீரில் இறங்குவதனை தவிர்க்குமாறு திணைக்களம் மக்களுக்கு அறிவித்துள்ளது.

வெள்ள நீர் குறையும் போது மீண்டும் முதலைகள் கங்கைகளுக்கு செல்வதற்கான வாய்ப்பு உள்ளமையினால் வனவிலங்கு அதிகாரிகள் இது தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை தவிர வெள்ள நீரை பார்வையிடுவதற்கு வரும் பலர் நீரில் இறங்குவதாகவும் இதன்போது முதலைகளின் தாக்குதலுக்கு முகங்கொடுக்க வேண்டிய அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

சிறையிலிருந்து 4 கைதிகள் தப்பியோட்டம்!!

நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து 4 கைதிகள் தப்பியோடியுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்றிரவு 11 முதல் 12 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இடம்பெற்றதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நான்கு கைதிகளும், சிறைச்சாலை மதிலை துளையிட்டு தப்பிச் சென்றதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தப்பிச் சென்ற கைதிகளை மீண்டும் கைது செய்ய விசாரணைகள்முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆபத்திலிருந்து காப்பாற்ற மேல் மாடியில் இருந்து மகளை தூக்கி வீசிய தந்தை!!

 
ஆபத்தான நிலையில் பிள்ளையின் உயிரை காப்பாற்ற தந்தையொருவரின் செயற்பாடு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

கெக்கிராவ, கல்கிரியாகம பிரதேசத்திலுள்ள இரண்டு மாடி வர்த்தக நிலையத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது அங்கு இரண்டு ஊழியர்கள் கடுமையான தீ காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கல்கரியாகம பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்கள் இருவரும் தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தீயில் சிக்கியமையினால் வர்த்தக நிலையத்தின் உரிமையாளர், அவரது மனைவி மற்றும் இரண்டு வயது மகள் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த தீ சம்பவம் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் மகளுடன் மேல் மாடியில் இருந்த இந்த தம்பதியினர் தங்கள் மகளை காப்பாற்றுவதற்காக மேல் மாடியில் மகளை வீசி எறிந்துள்ளனர்.

எனினும் கீழே இருந்தவர்கள் குழந்தை பாதுகாப்பாக ஏந்தியமையால், அவர் எந்தவித உயிராபத்தும் இன்றி பாதுகாப்பாக உள்ளார்.

மேல் மாடியில் இருந்து கணவன் – மனைவி தமது உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக கீழே குதித்தமையினால் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

இதேவேளை, குறித்த தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள போதிலும் தீ சம்பவத்திற்கான காரணம் இதுவரையிலும் கண்டுபிடிக்கப்படவில்லை.

பாரிய வெள்ளத்தை பார்வையிட சென்ற 18 பேர் பரிதாபமாக மரணம்!!

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட சென்ற 18 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் வஜித அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ஆபத்தான நிலைமைகளில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்கு செல்வதனால் ஏற்படும் மரணங்களை தவிர்க்குமாறு அமைச்சர், பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

“நான் பத்தேகம பகுதிக்கு சென்ற சந்தர்ப்பத்தில், எச்சரிக்கை விடுக்கப்பட்ட பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பலர் செல்வதனை அவதானித்தேன். அவர்கள் தங்கள் பிள்ளைகளை கூட அவ்விடத்திற்கு அழைத்து சென்றிருந்தனர்.

இவ்வாறான நடவடிக்கையினை மக்கள் முற்றாக தவிர்த்துக் கொள்ள வேண்டும் என அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

போதைப் பொருள் கடத்திய புறா பிடிபட்டது!!

போதைப்பொருட்களை கடத்திச் சென்ற புறா ஒன்றை குவைத் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

ஈராக்கிய எல்லைக்கு அருகிலுள்ள குவைத்திய சுங்கத் திணைக்கள கட்டடம் ஒன்றுக்கு அருகில் மேற்படி புறா கண்டுபிடிக்கப்பட்டதாக குவைத் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அப்புறாவின் முதுகில், போதைப் பொருளான 178 குளிசைகள் அடங்கிய பொதியொன்று கட்டப்பட்டிருந்தது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புறாக்களின் மூலம் போதைப்பொருள் கடத்தப்படுவதாக குவைத் சுங்க அதிகாரிகள் அறிந்திருந்தனர் எனவும், ஆனால், போதைப் பொருள் கடத்துவதற்குப் பயன்படுத்தப்படும் புறா ஒன்று போதைப்பொருளுடன் கைப்பற்றப்பட்டமை இதுவே முதல் தடவை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வௌ்ளம், மண்சரிவால் உயிரழந்தவர்களின் எண்ணிக்கை 201 ஆக அதிகரிப்பு!!

நாட்டில் அதிக மழையுடனான வானிலையால் ஏற்பட்டுள்ள வௌ்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 201 ஆக உயர்ந்துள்ளது.

இந்த அனர்த்தங்கள் காரணமாக மேலும் 110 பேர் காணாமற்போயுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.

இதுதவிர, சீரற்ற வானிலையால் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அனர்த்த நிலையால் இடம்பெயர்ந்த 75,366 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

16 ஓட்டங்களால் சாதனையை தவறவிட்ட சங்கக்கார!!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார தற்போது இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் கவுன்டி கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றார்.

சர்ரே அணிக்காக விளையாடிவரும் சங்க கடந்த 5 இன்னிங்ஸ்களில் தொர்ச்சியாக சதம் விளாசி, முதற்தர போட்டிகளில் தொடர்ச்சியாக அதிக சதம் விளாசிய பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்திருந்தார்.

இந்நிலையில் நேற்றைய எசெக்ஸ் அணிக்கெதிரான இரண்டாவது இன்னிங்ஸில் சதம் விளாசி சாதனையை சமப்படுத்துவார் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்க்க, 84 ஓட்டங்களை பெற்று, 16 ஓட்டங்களினால் சாதனையை தவறவிட்டுள்ளார்.

முதற்தர போட்டிகளில் அதிக சதம் விளாசிய பட்டியலில், சிபி பரை, டோன் பிரட்மேன் மற்றும் மைக் பிரொக்டர் ஆகியோர் 6 சதங்களுடன் முதலாவது இடத்திலும், குமார் சங்கக்கார, பார்த்திவ் பட்டேல், எவர்டன் வீக்கஸ், பிரைன் லாரா மற்றும் மைக்கல் ஹசி ஆகியோர் 5 சதங்களுடன் ஆறாவது இடத்திலும் உள்ளனர்.