நாட்டில் இன்று முதல் கடும் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சம்பரகமுவ, தென், மத்திய மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம’ விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊவா மாகாணத்திலும், மட்டகளப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இன்று மாலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அதிகாரி கே,சூரியகுமாரன் தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஷன்டோங் நகரில் பாரந்தூக்கி ஒன்று சரிந்து விழுந்ததில் அறுவர் கொல்லப்பட்டனர்.
ஷிஜியாங்ஸுவாங் ரயில்வே நிலைய நிர்மாண வேலைகள் நிறைவுபெறும் தறுவாயில், பாரந்தூக்கிகளை அப்புறப்படுத்துவதற்காக தொழிலாளர்கள் சிலர் அவற்றைத் தனித்தனியே பிரித்துக் கழற்றிக்கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக பாரந்தூக்கி சரிந்தது. இதில் ஐந்து தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிப் பலியாகினர். படுகாயங்களுக்குள்ளான மற்றொருவர் வைத்தியசாலையில் சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில் உயிரிழந்தார்.
விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
23 வயதான இளைஞரை கடத்தி சென்று, மூன்று நாட்களாக பாலியல் துஷ்ப்பிரயோகம் செய்த மூன்று பெண்களை பொலிஸார் தேடி வரும் அதிர்ச்சி சம்பவம் தென்னாபிரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
தென்னாப்பிரிக்காவின் ப்ரீடோரியா நகரில் வாடகை கார் சாரதியாக பணியாற்றி வந்த 23 வயதான ஓர்டியல் என்ற இளைஞரை, 3 பெண்கள் கடத்தி அவருக்கு போதை மருந்துகள் கொடுத்து தொடர்ந்து மூன்று நாட்களாக பலமுறை பாலியல் துஷ்ப்பிரயோகம் செய்துள்ளதாக தென்னாபிரிக்க ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவந்துள்ளதாவது, கடந்த வெள்ளிக்கிழமை மயக்க மருந்து மூலம் கடத்திச் செல்லப்பட்ட ஓர்டியல், மயக்கத்தில் இருந்து தெளிந்த நிலையில், மூன்று பெண்களால் 3 நாட்கள் பலமுறை பாலியல் துஷ்ப்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக குறித்த பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், மூன்று பெண்களையும் தீவிரமாக தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.
அத்தோடு ஆண்டுதோறும் தென்னாப்பிரிக்காவில் மாத்திரம் சுமார் 5 இலட்சம் பேர் வரையில், பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்பட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் கதை திருட்டு, தலைப்பு சம்பந்தமாக பல்வேறு பிரச்சினைகள் எழுந்து வருகிறது.
படம் ஆரம்பிக்கும்போது எழாத பிரச்சினைகள் படத்தின் ரிலீஸ் திகதி நெருங்கும் சமயத்தில் வந்து தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் பெரிய இடைஞ்சலை கொடுக்கும்.
பெரிய நடிகர், சிறிய நடிகர் என்கிற பாரபட்சம் இல்லாமல் எல்லா தரப்பு நடிகர்களின் படங்களும் இந்த பிரச்சினை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
அந்த வரிசையில் தற்போது ரஜினி நடித்து வரும் காலா படத்திற்கும் பிரச்சினை எழுந்துள்ளது. இயக்குனர் கஸ்தூரி ராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்த ராஜசேகர் என்பவர்தான் இந்த பிரச்சினையை கிளப்பியுள்ளார்.
அதாவது, காலா படத்தின் மூலக்கதை என்னுடையது என்றும், என்னுடைய கதையை திருடிதான் காலா படத்தை எடுத்து வருவதாகவும் பொலிஸ் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
மேலும் காலா படத்தின் தலைப்பும் என்னுடையதே என்றும், கடந்த 1994-ஆம் ஆண்டே தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் இந்த தலைப்பை பதிவு செய்துள்ளேன் என்றும் அவர் அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
காலா படத்தின் படப்பிடிப்புகள் மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது காலா படத்தின் கதை என்னுடையது என்று எழுந்துள்ள புகார் படக்குழுவினருக்கு பெரிய தலைவலியை கொடுத்துள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளிப்பதற்கு படக்குழுவினர் தயாராகி வருகின்றனர். காலா படத்தில் சமுத்திரகனி, பொலிவுட் நடிகைகள் ஹுமா குரேஷி, அஞ்சலி பாட்டீல் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.
வவுனியா மதினா நகர் பகுதியில் அமைந்துள்ள இரு முஸ்ஸிம் கடைகள் நேற்று (30.05.2017) இரவு இனந்தேரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வவுனியா மதினா நகர் பள்ளிவாசலுக்கு அருகே அமைந்துள்ள முஸ்ஸிம் உணவத்தின் முன்பக்கம் தீயுட்டப்பட்டதுடன் அருகே இருந்த தொலைத்தொடர்ப்பு நிலையத்தின் விளம்பரபலகை, மின்குமிழ் என்பவற்றை இனந்தெரியாத நபர்கள் சேதமாக்கிவிட்டு தப்பித்சென்றுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மகாறம்பைக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஜுன் மாதம் 2ம் திகதி முதல் 30 ம் திகதிவரை வட மாகாணத்தில் மின்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும்பராமரிப்பு வேலைகளுக்காக இந்த மின் விநியோகத்தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் குறிப்பிட்டசில நாட்களில் முற்பகல் 9 மணிமுதல் பிற்பகல் 5 மணிவரை அமுலில் இருக்கும் எனவும்இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
கடந்த 26 ஆம் திகதி வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் 09 ஆவது அமர்வு போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள அமைச்சரது உப அலுவலகத்தில் காலை 10:30 மணியளவில் நடைபெற்றது. மேற்படி கூட்டம் தொடர்பாக அமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்..
மேற்படி கூட்டத்தில் இரண்டு முக்கிய பிரச்சினைகளை தீர்க்கும்பொருட்டு விசேட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், கடந்தவருடம் மட்டும் வீதி விபத்துக்களால் ஏறக்குறைய 2900 பேர் மரணமடைந்துள்ளதாகவும், 7500 க்கும் மேற்பட்டவர்கள் உடல் அவயவங்களை இழந்துள்ளதாகவும் ஏறக்குறைய 35000 க்கும் மேற்பட்ட வீதி விபத்துக்கள் நடைபெற்றுள்ளதாகவும், அதில் அதிகமான வீதி விபத்துக்கள் எமது மாகாணத்திலேயே இடம்பெற்றுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிப்பதாகவும், இதனைக் கட்டுப்படுத்தாமலும் ஒழுங்குபடுத்தாமலும் விடுவோமெனில் கடந்த காலத்தைவிட எதிர்காலத்தில் பன்மடங்குகளால் அதிகரிப்பதற்கான அபாயம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்தவகையில் மேற்படி விடயங்களை ஒழுங்குபடுத்தும் பொருட்டு கடந்த 15 ஆம் திகதி பல்வேறு சட்ட ஒழுங்குகள் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
குறிப்பாக வடமாகாணத்திற்குள் சேவை வழங்குகின்ற இலங்கை போக்குவரத்து சபையினருக்கு 40 வீதமும் தனியார் பேருந்துகளுக்கு 60 வீதமும் என்ற வகையில் பேரூந்து சேவைகளை ஒழுங்குசெய்யவும், அதனடிப்படையில் இணைந்த நேர அட்டவணையை தயார்செய்து அமுல்படுத்துவது தொடர்பில் விசேட ஏற்பாடுகள் பிரசுரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்தோடு இவற்றை மீறுகின்ற தரப்பினருக்கு எதிராக 10,000 ரூபாய் தண்டப்பணமும் அல்லது இரண்டுவருட சிறைத்தண்டனை வழங்கவும் அல்லது இரண்டு தண்டனைகளையும் அனுபவிக்கநேரிடும் என்றும் தெரிவித்தார்.
ஆகவே சம்பந்தப்பட்ட சேவை வழங்குகின்ற இரு தரப்பினரும் வீதிகளில் வருகிற பொதுமக்களது உயிர்களில் அக்கறையுள்ளவர்களாக செயற்படுமாறும், ஒழுங்கு விதிகளையும் சட்ட ஏற்படுகளையும் கடைப்பிடிக்குமாறும் கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
அத்தோடு இரண்டாவது தீர்மானமாக வவுனியா மாவட்டத்தில் ஏறக்குறைய 195 மில்லியன் ரூபாய்களில் கட்டப்பட்டு பயன்படுத்தப்படாமல் இருக்கின்ற புதிய பேரூந்து நிலையத்தை மீள இயங்கவைப்பதுதொடர்பிலும், அதனை ஒழுங்குபடுத்துவது தொடர்பிலும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.
மேற்படி இரண்டு விடயங்களையும் செயற்படுத்தும்பொருட்டு அமைச்சர் நீதிமன்ற கட்டளையையினை பெறுவதற்கான தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
ஆகவே சம்பந்தப்பட்ட அனைத்துத்தரப்பினரும் ஒத்துழைப்புவழங்கி எமது மாகாணத்தை வீதி விபத்துக்கள் அற்ற மாகாணமாக மாற்றுவதற்கும், அதி உச்ச சிறந்த போக்குவரத்து சேவையினை மக்களுக்கு வழங்குவதற்கும் அனைவரும் ஒற்றுமையாக செயற்படுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
கனமழையால் பாதிக்கப்பட்ட தென்பகுதி மக்களுக்கு உதவும் முகமாக இன்று (30.05) வவுனியாவில் பொலிசார் நிவாரணம் சேர்க்கும் பணியை மேற்கொண்டனர்.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவைப்படும் அத்தியவசிய பொருட்களை தந்துதவுமாறு கோரி வவுனியா நகரப்பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் வவுனியா பொலிசார் நிவாரணப் பொருட்களை சேகரித்து வருகின்றனர்.
வன்னி மாவட்ட பிரதிபொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இந் நிவாரண பொருட்கள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகின்றது.
அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்க விரும்புவோர் எதிர்வரும் யூன் 01 திகதிவரை வவுனியா பொலிஸ் நிலையத்திலோ அல்லது வன்னி மாவட்ட பிரதிபொலிஸ் மா அதிபர் அலுவலகத்திலோ பொருட்களை வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிலங்கையில் ஏற்பட்ட அசாதாரண காலநிலை மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அவசர நிவாரண உதவிகளை வவுனியா மாவட்டசெயலகம், வவுனியா பிரதேச செயலகம் மற்றும் வவுனியா தெற்கு பிரதேச செயலகம் ஆகியவற்றில் உடனடியாக வழங்குமாறு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோகண புஸ்பகுமார வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர்..
கடந்த வாரம் தென்னிலங்கையில் தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணமாக தாழ் நிலப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் இதன் காரணமாக பெருமளவான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
விசேடமாக இரத்தினபுரி, கழுத்துறை, காலி ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளதுடன் பலர் மண்சரிவு காரணமாக மண்ணுள் புதைந்துள்ளனர்.
அனர்த்தத்தில் பாதிக்கப்படாத மக்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய வேண்டிய தருணம் இதுவென்றும் பாதிக்கப்பட்ட மக்கள் உணவுப்பொருட்கள் மற்றும் ஆடைகளை எதிர்பார்த்துள்ளதுடன் மழை தொடருமாயின் அப்பிரதேச மக்கள் மேலும் அனர்த்தங்களுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்பதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவியாக வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.
உலர் உணவுப்பொருட்கள் ஒரு குடும்பத்திற்கு தேவையான அளவு பொதி செய்து பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அனுப்பப்படவுள்ளது. அத்துடன் வவுனியாவைச் சேர்ந்த அரிசி ஆலை உரிமையாளர் ஒருவர் 10 கிலோ அரிசி பக்கற் 1000 வழங்கவுள்ளதாகவும் இவ்வாறாக உணவுப்பொருட்களை முன்வந்து வழங்கிக்கொண்டிருக்கும் மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நிவாரணப்பொருட்கள் இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கு அனுப்பப்டவுள்ளது எனவும் தெரிவித்தார்.
வவுனியா முருகனூர் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் கடந்த 28.05.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் மகோற்சவகுரு சிவஸ்ரீ சிதம்பர லட்சுமி திவாகர குருக்கள் தலைமையில் கொடியேற்றதுடன் ஆரம்பமானது.
வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவம் நாளை 31.05.2017 புதன் கிழமை காலை 10.00 மணியளவில் மகோற்சவகுரு சிவஸ்ரீ செல்வ சர்மில குருக்கள் தலைமையில் கொடியேற்றதுடன் ஆரம்பமாகவுள்ளது.
பத்து தினங்கள் இடம்பெறும் உற்சவத்தில்
கொடியேற்றம் 31.05.2017 புதன்கிழமை காலை 10.00 மணி
சப்பர திருவிழா 07.06.2017 புதன்கிழமை
இரதோற்சவம் 08.06.2017 வியாக்கிழமை காலை 8.45 மணி
தீர்த்தோற்சவம் 09.06.2017 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி
பூங்காவனம் 10.06.2017 சனிக்கிழமை ஆகியன இடம்பெறும் ..
வவுனியா கனகராயன்குளத்தில் நேற்று (29.05) இரவு 10.30 மணியளவில் டொல்பின் ரக வாகனம் மோதியதில் ஸ்தலத்திலேயே ஒருவர் பலியான சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இவ்விபத்தில் பலியானவர் முள்ளியவளையையை சேர்ந்த சி.கருணேஸ்வரன் வயது 55 என அடையாளம் காணப்பட்டுள்ளார். இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது
கனகராயன்குளம் ஏ9 வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தவர் மீது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதையடுத்து நிலைதடுமாறி பிரதான வீதியில் விழுந்தவர் மீது வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வேகமாக சென்றுகொண்டிருந்த டொல்பின் ரக வாகனம் ஏறிச்சென்றதன் காரணமாக தலைசிதறி சம்பவ இடத்திலேயே பலியானதுடன் மோட்டார் சைக்கிளில் வந்தவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பாக கனகராயன்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
வவுனியா மூன்று முறிப்பு பகுதியில் நேற்று (29.05.2017) மாலை இடம்பெற்ற அன்புலன்ஸ் மற்றும் மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அன்புலன்ஸ் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியாவிருந்து மூன்றுமுறிப்பு பகுதி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் வீதியின் மறுபகுதிக்கு மாற முற்பட்ட சமயத்தில் ஏ9 வீதியூடாக வவுனியா நோக்கி பயணித்த அன்புலன்ஸ் வண்டியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அன்புலன்ஸ் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
வவுனியாவில் நேற்றையதினம் (29.05.2017) இரவு பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்தின் பெயரில் 4பேர் கைது செய்யப்பட்டதுடன் வாள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
கடந்த ஞாயிற்றுக்கிழமை (28.05.2017) மதுபோதையில் தாண்டிக்குளம் பகுதியில் இளைஞன் ஒருவர் மீது 15பேரடங்கிய குழு தாக்குதல் மேற்கொண்டதுடன் குறித்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் பொலிசாரின் விசாரணைகள் பக்கசார்பாக இடம்பெறுவதாக பாதிக்கப்பட்டவர்கள் நேற்று (29.05.2017) இரவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் வவுனியா பொலிசாரின் செயற்பாட்டில் நம்பிக்கையில்லை அவர்கள் தாக்கியவர்களைக் கைது செய்யவில்லை என்று தெரிவித்து பிறிதொரு முறைப்பாடு மேற்கொண்டனர்
இதையடுத்து சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் உத்தரவின் பெயரில் பொலிசார் மேற்கொண்ட நடவடிக்கையின் போது குறித்த இளைஞரைத் தாக்கியதாகத் தெரிவித்து 4 பேரை சந்தேகத்தில் கைது செய்துள்ளதுடன் மேலும் ஒருவரை தேடிச் சென்றபோதும் அவர் தலைமறைவாகியுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்கள் பயன்படுத்தும் குளாய்க்கிணறு தோண்டும் கனரக வாகனத்திலிருந்து புதிய வாள் ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்டவர்களை மேலதிக விசாரசணைகளின் பின்னர் மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்
வவுனியா ஓமந்தை கதிரவேலர் பூவரசங்குளத்தைப் பிறப்பிடமாகவும், குருமன் காட்டை வதிவிடமாகவும் கொண்ட தெய்வநாயகி சிவசுப்பிரமணியம் அவர்கள் 28-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்தி(இளைப்பாறிய கிராமசேவகர், ஆயுர்வேத வைத்தியர்) அன்னமுத்து தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்ற வைரமுத்து சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவசுப்பிரமணியம்(ஐயா மானேஜர்- இளைப்பாறிய பலநோக்கு கூட்டுறவுச் சங்க முகாமையாளர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
சிவசுந்தரம்(ஜெர்மனி), சிவநேசமலர்(லண்டன்), சிவானி(ஆயுர்வேத வைத்தியர்- இலங்கை), சிவரஞ்சனி(ஜெர்மனி), சிவராஜினி(லண்டன்), சிவராசா(ஆசிரிய ஆலோசகர்- வலய கல்வி அலுவலகம்- வவுனியா வடக்கு )ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இந்திராதேவி, தெய்வேந்திரம்பிள்ளை ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சிவரஞ்சனி(ஜெர்மனி), சிவபாலன்(லண்டன்), புவனேந்திரராஜா(GM- பலநோக்கு கூட்டுறவுச் சங்க பொது முகாமையாளர், இலங்கை), சற்குணானந்தம்(ஜெர்மனி), குணசீலன்(லண்டன்), சசிதா(ஆசிரியை- இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமியும்,
ராகுலன், பிரவீன்(லண்டன்), காலஞ்சென்ற அகர்சன், டிலானி, நிஷானி, பவிஷன், பபித்தன், சயனி(ஜெர்மனி), தேசினி, விபீசன், ரபீசன், அகீசன், தரங்கினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-05-2017 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று கதிரவேலர் பூவரசங்குளம் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
ஸ்பெயின் அருகே உள்ள தீவு நாடான மயோர்காவில் அமைந்துள்ள பரபரப்பான விமான நிலையத்தில் மர்ம நபர் முழு நிர்வாணமாக அலைந்த காட்சிகள் வைரலாகியுள்ளது.
மயோர்கா தலைநகர் பால்மாவில் அமைந்துள்ளது சுற்றுலாப்பயணிகளால் பரபரப்பாக காணப்படும் Son Sant Joan விமான நிலையம்.
குறித்த விமான நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் நிர்வாணமாக இருக்கை ஒன்றில் ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் காட்சி உள்ளூர் நாளேடு ஒன்றில் வெளியாகி வைரலாகியுள்ளது.
அந்த நபர் அருகே அவரது பயணப் பெட்டிகள் எதுவும் இல்லை என்பது மட்டுமல்ல, அவர் அணிந்திருந்த உடைகளும் அருகாமையில் இல்லை.
மேலும், சில நிமிடங்கள் அவர் அந்த அறையில் அங்குமிங்கும் நடந்து நின்ற பின்னர், ஒருகட்டத்தில் கழிவறை நோக்கி நடந்து சென்றுள்ளார்.
இதனிடையே விமான நிலைய கண்காணிப்பு கமெராவில் குறித்த காட்சிகளை காண நேர்ந்த அதிகாரிகள், அந்த நபரை தேடியதாகவும் ஆனால் பிடிபடவில்லை எனவும் கூறப்படுகிறது.
நடுத்தர வயதான வெளிநாட்டு மனிதராக இருக்கலாம் அவர் என தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே குறித்த புகைப்படம் வெளியானதும் விமான நிலையத்தின் பாதுகாப்பில் அதிகாரிகள் அலட்சிய போக்கை கடைப்பிடிப்பதாக புகார் எழுந்தது.
இருப்பினும் இதுவரை குறித்த நபர் யார் என விமான நிலைய அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை என கூறப்படுகிறது.