வவுனியா மக்களுக்கு நகரசபையின் ஓர் அறிவித்தல்!!

 
இலங்கை சனநாயக சோசலிக குடியரசின் மேன்மைதங்கிய ஜனாதிபதியின் பணிப்பிற்கமைய வவுனியா நபரசபையின் அதிகாரப் பிரதேசத்திக்குள் கழிவுப்பொருட்களை வகைப்படுத்தி சேகரிக்கும் பணிகள் 01.06.2017ம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இவற்றின் முதற்கட்டமாக மக்களுக்கு விழிப்புணர்வுட்டும் செயற்த்திட்டம் வவுனியா நகரசபையின் செயலாளர் ஆர்.தயாபரன் தலைமையில் இன்று (31.05.2017) மதியம் 2 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா நகரசபைக்குட்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டதுடன் வவுனியா நகரமத்தியில் விழிப்புணர்வு பதாதைகளும் கட்டப்பட்டுள்ளன.

இச் செயற்றிட்டத்தில் வவுனியா வர்த்தக சங்க தலைவர் ரி.கே.இராஜலிங்கம் , பொது சுகாதாரப் பரிசோதகர், நகரசபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த வவுனியா நகரசபையின் செயலாளர், ஜனாதிபதியின் பணிப்பிற்கமைய இச் செயற்றிட்டத்தினை நாங்கள் வவுனியா நகரில் செயற்படுத்தி வருகின்றோம்.

பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் பச்சை நிற கழிவுத்தொட்டியில் உணவுப்பொருட்கள், இலை குழைகள், சமைலறைக்கழிவுகள், மக்கக்கூடிய பொருட்கள் (துணி வகைகள், ஆடைகள் தவிர்த்து ) மற்றும் செம் மஞ்சல் நிற கழிவுத் தொட்டியில் பொலித்தீன், பிளாஸ்டிக், துணிகள் மற்றும் நீல நிற கழிவுத்தொட்டியில் கடதாசி , காட்போட் அட்டைகள் மற்றும் சிவப்பு நிற கழிவுத் தொட்டியில் கண்ணாடிப்பொருட்கள், உலோகப் பொருட்கள், இலத்திரனியல் பொருட்கள், மாபில் பொருட்களை பிரித்துப் போடவும்.

வருகின்ற வெள்ளிக்கிழமைக்கு முதல் வவுனியா நகரில் பல்வேறு பகுதிகளில் நான்கு நிறங்களிலான குப்பைத்தொட்டிகள் வைக்கப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

வவுனியாவில் பாடசாலை மாணவன் மீது ஆசிரியர் தாக்குதல் : மாணவன் தற்கொலை!!

 
வவுனியா கனகராயன்குளத்தில் இன்று (31.05.2017) மாலை ஆசிரியர் தாக்கியதில் மனமுடைந்த பாடசாலை மாணவன் தற்கொலை செய்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

வவுனியா கனகராயன்குளம் குறிசுட்டான் பகுதியில் வசித்துவரும் தர்மராசா ஜனார்த்தன் (வயது 17) என்ற மாணவன் வழமை போன்று இன்று (31.05.2017) காலை 7.30 மணிக்கு கனகராயன்குளத்தில் உள்ள பிரபல பாடசாலைக்கு சென்றுள்ளார்.

பாடசாலை நேரத்தில் ஆசிரியர் சக மாணவிகள் முன்பாக குறித்த மாணவன் மீது தாக்கியதில் மனமுடைந்த பாடசாலை மாணவன் இன்று மாலை வீட்டிற்கு சென்று வீட்டிலிருந்த மருந்தினை உட்கொண்டு தற்கொலை செய்துள்ளார்.

தற்போது குறித்த மாணவனின் சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காலையில் எந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது என்று தெரியுமா?

காலை உணவை கட்டாயம் சாப்பிடுவது அன்றைய பொழுதை புத்துணர்ச்சியுடன் தொடங்குவதற்கு வழிவகுக்கும். அதேவேளையில் உணவை உட்கொள்வதற்கு முன்பாக வெறும் வயிற்றில் ஒருசில உணவு பதார்த்தங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டியது அவசியம். வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடிய மற்றும் சாப்பிடக்கூடாத உணவு வகைகள் குறித்து பார்ப்போம்.

காலையில் எழுந்ததும் டீ, கோப்பி பருகும் பழக்கத்தை பெரும்பாலானவர்கள் வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள். ஆனால் வெறும் வயிற்றில் டீயோ, கோப்பியோ பருகுவது தவறான பழக்கம்.

அதில் உள்ள ‘காபின்’ வயிற்று உபாதைகள் தோன்ற வழிவகுத்துவிடும். குமட்டல், இரைப்பை அழற்சி போன்ற அசவுகரியங்களை உண்டாக்கும். அதனால் காபி குடிப்பதற்கு முன்பாக காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் பருகுவது நல்லது.

காலையில் ஓட்ஸ் உணவுவகைகளை சாப்பிடுவது நல்லது. அது உடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைப்பதற்கு உதவும். காலை உணவுடன் முட்டை சாப்பிட்டு வருவது நல்லது. அது கலோரியின் அளவை குறைப்பதற்கு துணைபுரியும்.

காலையில் வெறும் வயிற்றில் தர்ப்பூசணி சாப்பிடுவது நல்லது. அது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். கண்கள் மற்றும் இதயத்திற்கும் நல்லது.

காலையில் தானியங்களில் தயாரித்த பிரெட் சாப்பிடுவது நல்லது. அதில் இருக்கும் ஊட்டசத்துக்கள் உடல் ஆரோக்கியத்துக்கு நலம் சேர்க்கும்.

உடல் நலனுக்கு நன்மை சேர்ப்பதில் தேனுக்கு முக்கிய பங்கு உண்டு. அதனை தினமும் காலையில் உணவு பதார்த்தங்களுடன் சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு சக்தியை கொடுக்கும். மூளை சுறுசுறுப்புடன் செயல்படவும் துணை புரியும். புத்துணர்ச்சி தரும் ஹார்மோன்களின் சுரப்பையும் அதிகரிக்க செய்யும்.

பாதாம் பருப்பை தினமும் 6 வீதம் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது. அவை செரிமானத்தை எளிமைப்படுத்தும். அல்சர், வயிற்று கோளாறு போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும். முதல்நாள் இரவில் ஊற வைத்து மறுநாள் சாப்பிட வேண்டும்.

பப்பாளி பழத்தில் தாதுக்கள், வைட்டமின்கள் இ, வைட்டமின் சி போன்றவை இருக்கின்றன. அதனை காலையில் சாப்பிடுவது செரிமானத்துக்கு துணை புரியும்.

வெறும் வயிற்றில் சாக்லேட், சுவீட்கள் போன்ற இனிப்பு பலகாரங்களை சாப்பிடக்கூடாது. அவை இன்சுலின் அளவை அதிகப்படுத்திவிடும்.

வெறும் வயிற்றில் தயிர் சாப்பிடக்கூடாது. அதில் இருக்கும் நல்ல பாக்டீரியா நொதித்து வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும்.

வாழைப்பழத்தில் மக்னீசியம் அதிகம் இருக்கிறது. அதனை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால் அதிக அளவில் மக்னீசியம் ரத்தத்தில் கலந்துவிடும்.

எப்போதுமே தக்காளியை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. அதில் இருக்கும் டான்னிக் அமிலம் இரைப்பையில் சுரக்கும் அமிலத்துடன் இணைந்து பாதிப்பை ஏற்படுத்திவிடும். குறிப்பாக அல்சர் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

மின்னல் எப்படி உருவாகின்றது எனத் தெரியுமா?

சிறு வயதில் நாம் ஆச்சரியப்பட்ட விடயங்களில் ஒன்று இடி, மின்னல்… இதெல்லாம் எப்படி உருவாகுகிறது என்று நிச்சயம் யோசித்து இருப்போம்.

மழையும், வெயிலும் இல்லாமல் குளிர்ச்சியான காற்று பூமியில் இருந்து மேலே எழும்பும். இந்த ஈரக்காற்று குளிர்ச்சி அடைந்து நீர்த்துளிகள் அதாவது மேகங்கள் உருவாகின்றன.

இந்த நீர்த்துளிகள் மேலே சென்று ஏற்கனவே அங்கிருக்கும் மேகங்களுடன் உராயும் போது 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் டிகிரி செண்டிகிரேடு வரை வெப்பம் உருவாகும்.

இந்த வெப்பத்தினால் அந்தப் பகுதி விரிவடைந்து வெளிச்சமும், சத்தமும் உருவாகிறது. இவ்வாறு உருவாகும் வெளிச்சத்தை மின்னலென்றும், சத்தத்தை இடியென்றும் சொல்கிறோம்.

இடியும் மின்னலும் ஒருங்கிணைந்த நிகழ்வுகள் என்றாலும் ஒலியைவிட ஒளியின் வேகம் அதிகம் என்பதால் முதலில் மின்னல் நம் கண்களுக்குத் தெரிகிறது. இடிச்சத்தம் அதற்குப் பிறகுதான் நம் காதுகளை அடைகிறது.

மிருகக் காட்சிசாலை பெண் காப்பாளரை கொன்ற புலி!!

 
பிரித்தானியாவில் மிருககாட்சி சாலையில் விலங்குகளை பராமரிக்கும் வேலை செய்த பெண்ணை அங்குள்ள புலி காயப்படுத்தி கொன்றுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் Huntingdon நகரில் Hamerton என்ற மிருககாட்சி சாலை அமைந்துள்ளது. இங்கு Rosa King (33) என்னும் பெண் விலங்குகளை பராமரிக்கும் பணியை செய்து வந்தார்.

இந்நிலையில் அங்கிருந்த புலியின் கூண்டுக்குள் நின்று கொண்டிருந்த Rosaவை புலி ஒன்று காயப்படுத்திக் கொன்றுள்ளது. இது குறித்து Rosa அம்மா Andrea King கூறுகையில், என் மகள் விலங்குகளை பராமரிக்கும் இந்த வேலையை மிகவும் விரும்பி செய்தாள்.

இதை தவிர அவர் வேறு வேலையை செய்ய விரும்பியதில்லை என சோகத்துடன் கூறியுள்ளார்.Chisholm (59) என்னும் நபர் கூறுகையில், இந்த பூங்காவே Rosaவால் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்தது. இந்த பூங்காவின் மைய புள்ளியாக அவர் தான் இருந்தார், மிருகங்களின் மீது அவர் மிகுந்த அன்பு வைத்திருந்தார் எனவும் Rosaவுக்கு பிடித்த மிருகம் சிறுத்தை எனவும் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் நடந்த போது பூங்காவில் தனது குடும்பத்துடன் இருந்த Peter Davis என்னும் நபர் கூறுகையில், நாங்கள் பூங்காவில் இருந்த போது திடீரென ஒரு இடத்தில் அலறல் சத்தம் கேட்டது. அப்போது, எங்கள் அருகில் ஒருவர் பதட்டத்துடன் ஓடினார். அவர் யாருக்கோ உதவி கேட்டு ஓடுகிறார் என நினைத்தோம்.

ஆனால், அது Rosaவை புலியிடமிருந்து காப்பாற்ற செய்த செயல் என அப்போது எனக்கு தெரியாது என கூறியுள்ளார். பின்னர், பூங்கா ஊழியர்கள் 6 பேர் சம்பவ இடத்துக்கு சென்றதாகவும் பின்னர் அவர்கள் மாமிச துண்டை புலிக்கு போட்டு அதை திசை திருப்ப முயற்சி செய்ததாகவும் Peter தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த விடயங்களால் Rosaவை புலியிடமிருந்து யாராலும் காப்பாற்ற முடியவில்லை. இந்த சம்பவம் நடந்து கொண்டிருக்கும் போதே பூங்காவில் இருந்த பார்வையாளர்களை அங்கிருந்து வெளியேற பூங்கா நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பொலிசார் கூறுகையில், இது விபத்து தான். இதில் சந்தேகப்படும் படியான விடயங்கள் ஏதும் இல்லை. Rosaவின் பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னரே மற்றவைகள் தெரியவரும் என கூறியுள்ளனர்.

Hamerton பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த சம்பவத்தின் போது வேறு எந்த மிருங்களும் இங்கிருந்து தப்பி செல்லவில்லை. மேலும், அங்கிருந்த பொது மக்களின் பாதுகாப்புக்கு எந்த பங்கமும் வரவில்லை.

இது ஒரு விபத்து தான், இதற்கு தங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்வதாக கூறப்பட்டுள்ளது.

Rosa இருந்த கூண்டில் மொத்தம் எத்தனை புலிகள் இருந்தது என்ற தகவல் இன்னும் தெரியவில்லை. இந்நிலையில், Hamerton விலங்குகள் பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

மீண்டும் தீவிரவாதத் தாக்குதல் : சவுதியில் வெடித்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு!!

சவுதி அரேபியாவில் பொலிசாரின் ரோந்து வாகனத்தில் வெடிகுண்டு வெடித்ததில் இரண்டு பொலிசார் காயம் அடைந்தனர்.

இதற்கு முன்னதாக இரு தடவை குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்துள்ள நிலையில், மூன்றாவது முறையாக மீண்டும் கிழக்கு சவுதியில் உள்ள பொலிசாரின் ரோந்து வாகனத்தில் வெடிகுண்டு வெடித்தது.

அங்குள்ள பழைய கட்டிடத்தை இடிக்கும் பணியில் இருந்த தொழிலாளர்களை பொலிசார் கண்காணித்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதை சவுதியின் உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இதுகுறித்து உள்துறை சார்பில் பேசிய நபர், கிழக்கு சவுதியில் உள்ள Qatif மாகாணத்தில் உள்ள பொலிஸ் வாகனத்தில் குண்டு வெடித்துள்ளது.

இது தீவிரவாதிகள் செய்த செயல் தான் என கூறிய அவர், விசாரணையை அரசு முடுக்கி விட்டுள்ளதாக கூறியுள்ளார்.

ஏற்கனவே நடந்த தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பாக கடந்த மார்ச் மாதத்தில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், நான்கு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டதாகவும் அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

புதுமணத் தம்பதி விஷம் குடித்து தற்கொலை : அதிர்ச்சியில் குடும்பம்!!

தமிழகத்தில் திருமணமான 21 நாட்களிலேயே புதுமண தம்பதியினர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூரின் சேத்தியாத்தோப்பு மேட்டுத் தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜன், இவருக்கும் வானதிபுரத்தை சேர்ந்த கௌசல்யா என்ற பெண்ணுக்கும் கடந்த 8ம் திகதி திருமணம் நடந்தது.

டிப்ளமோ படித்துள்ள பாண்டியராஜன் விவசாய வேலை செய்து வந்துள்ளார். இது கௌசல்யாவுக்கு பிடிக்காததால் வேறு வேலை செய்யும்படி வற்புறுத்தி வந்துள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது, நேற்றும் சண்டை முற்றவே விரக்தியில் இருந்த கௌசல்யா விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதை பார்த்த பாண்டியராஜன் என்ன செய்வதென்று தெரியாமல், மீதியிருந்த விஷத்தை குடித்து மயக்கமடைந்துள்ளார்.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக இருவரையும் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

செல்லும் வழியிலேயே கௌசல்யாவின் உயிர்பிரிந்துள்ளது, சிறிது நேரத்தில் பாண்யடிராஜனும் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பேஸ்புக் நட்பால் இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்!!

இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் பேஸ்புக் மூலம் அறிமுகமான பெண்ணிற்கு மயக்க மருந்து கொடுத்து கடத்திச் சென்று அவரை கட்டாயப்படுத்தி திருமணம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மராட்டிய மாநிலம் புனேவில் சாகர் கிருஷ்ணா என்பவருக்கு பேஸ்புக் மூலம் இளம் பெண் ஒருவர் அறிமுகமாகியுள்ளார்.

பின்னர் அவர்களுடைய நட்பு தினமும் தொடர்ந்துள்ளது. முதலில் சிறிது நாட்களுக்கு பேஸ்புக்கில் உரையாடி வந்த இருவரும், சிறிது காலத்திற்கு பின்னர் மொபைல் போனிலும் பேச ஆரம்பித்துள்ளனர்.

இவர்களின் நட்பு அதிகமாகவே அவர்கள் அடிக்கடி நேரில் சந்தித்து பழகியுள்ளனர். இந்த சந்திப்புகளின் விளைவாக சாகர் கிருஷ்ணா அவரை காதலிக்க ஆரம்பித்துள்ளார்.

இதனால் அந்த பெண்ணை சந்திக்க கடந்த பிப்ரவரி மாதம் 6ம் திகதி அவருடைய கல்லூரிக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற அந்த பெண்ணிற்கு குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்துள்ளார், இதனால் அந்த பெண் சிறிது நேரத்தில் மயக்கமடைந்துள்ளார்.

மயக்கமடைந்த பெண்னை கடத்திச் சென்ற சாகர் கிருஷ்ணா, அந்த பெண் மயக்கம் தெளிந்த பிறகு அவரை மிரட்டி கட்டாயப்படுத்தி திருமணம் செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறிந்து பாதிக்கப்பட்ட பெண் பொலிசாருக்கு அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பேஸ்புக் மூலம் ஏற்பட்ட நட்பால் இளம் பெண் ஒருவர் தனது வாழ்க்கையையே இழந்துள்ள சம்பவம் புனே பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேஸ்புக் மூலம் இளம்பெண்கள் பலர் ஏமாற்றப்படுவது மராட்டிய மாநிலத்தின் புறநகர் பகுதியில் வாடிக்கையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வரன் தேடும் இணையதளத்தால் சீரழிந்த இளம்பெண்ணின் வாழ்க்கை!!

வரன் தேடும் இணையதளம் மூலம் பழக்கமாகிய இளம்பெண்ணுடன் உறவு வைத்துவிட்டு பின்னர் கொலையும் செய்ய முயன்ற இளைஞர் கைதான சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் 26 வயதான சுபைன் பர்மன். இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில் திருமண வரன் தேடும் இணையதளம் ஒன்றின் மூலம் கொல்கத்தாவை சேர்ந்த மென்பொறியாளரான 26 வயது இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவருமே மென்பொறியாளர்களாக இருப்பதால் வருமானத்திற்கு பிரச்சினையில்லை என நம்பிய அப்பெண்ணும், திருமணத்திற்கு சம்மதித்துள்ளார்.

இதன்பிறகு இருவரும் நேரில் சந்தித்து பழகியுள்ளனர். நாளடைவில் இருவரும் ஒரே வீட்டில் லிவ்விங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். மட்டுமின்றி இருவரும் திருமணம் செய்துகொள்ளும் முடிவில் இருந்ததால் வாய்ப்பு அமைந்தபோதெல்லாம் பாலியல் உறவிலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில் திருமணம் செய்துகொள்ளும்படி அந்த பெண் வலியுறுத்தியதும், பல்வேறு காரணங்களை அடுக்கி தள்ளி வைத்தே வந்துள்ளார் சுபைன்.

இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் தலையணையை வைத்து மூச்சை நிறுத்தி அந்த பெண்ணை கொலை செய்ய சுபைன் முயன்றுள்ளார்.

ஒருவழியாக அங்கிருந்து தப்பிய அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் பெங்களூர், மாரத்தஹள்ளி பொலிசார் சுபைனை கைது செய்துள்ளனர்.

வெள்ளம் மற்றும் மண்சரிவில் 194 சடலங்கள் இதுவரை மீட்பு, 99 பேரைக் காணவில்லை!!

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 194 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இறுதியாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கையில் கடந்த வாரம் அடை மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் பெருமளவான வாகனங்களும், உடமைகளும் அழிவடைந்துள்ளன. ஆயிரத்து 402 வீடுகள் முழுமையாகவும், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.

இதேவேளை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 194 ஆக அதிகரித்துள்ளது. 99 பேர் காணாமல்போயுள்ளனர். இடம்பெயர்ந்துள்ள 20 ஆயிரத்து 907 குடும்பங்களைச் சேர்ந்த 83 ஆயிரத்து 224 பேர் 376 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 63 பேர் காயமடைந்துள்ளனர்.

இலங்கையில் கடந்த 14 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மோசமான இந்த வெள்ளம் மற்றும் மண்சரிவால் 6 இலட்சத்து 4 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவான வீடுகள் சேதமடைந்துள்ளன.

கடந்த வியாழன், வெள்ளி ஆகிய தினங்களில் அடைமழை பெய்தபோதிலும் அதன்பின்னர் சற்று குறைவடைந்தது. இந்நிலையில், திங்கட்கிழமை முதல் மீண்டும் மழை ஆரம்பித்துள்ளது. இதனால், ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. வீதிகளில் தேங்கிய வெள்ளநீரும் வழிந்தோடாமல் இருக்கின்றது.

வெள்ள ஆபத்துள்ள பகுதிகளிலும், பலமிழந்து போயுள்ள அணைக்கட்டுகளை மண்மூடைகளைக் கொண்டு பலப்படுத்துவதிலும் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக, 15 மாவட்டங்களில் சீரற்ற காலநிலை நிலவினாலும் இரத்தினபுரி, களுத்துறை, காலி, அம்பாந்தோட்டை, கொழும்பு, கம்பஹா, கேகாலை ஆகிய மாவட்டங்களிலேயே அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

குறித்த மாவட்டங்களிலுள்ள பிரதான பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. குளங்களில் கழிவுநீர் கலந்துள்ளது. இதனால், தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் படையினரின் உதவியுடன் அரசு மீட்புப் பணிகளையும் துரிதப்படுத்தியுள்ளது. தொண்டர் படைகளும், அரசியல் கட்சிகளின் நிவாரணப் பிரிவும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

அதேவேளை, தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. விழிப்பாக இருக்குமாறு பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களிடம் சுகாதாரத்துறை அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தென்னிலங்கையில் எட்டு மாணவர்கள் உயிரிழப்பு : எட்டுப்பேரைக் காணவில்லை!!

இயற்கை அனர்த்தங்கள் காரணமாக தென்னிலங்கையில் எட்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் எட்டுப் பேர் காணாமல் போயுள்ளனர்.

அனர்த்தக் கல்வி தொடர்பான தென்மாகாண பிரதிப் பணிப்பாளர் பிரசஞ்சலி கமகே இந்தப் புள்ளிவிபரங்களைத் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கையில் தொடர்ந்தும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அனர்த்தங்கள் காரணமாக உயிரிழந்த எட்டு மாணவர்களில் ஆறு பேர் மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஏனைய இரண்டு பேரும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

அதேபோன்று காணாமல் போயுள்ள எட்டு மாணவர்களும் மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களேயாகும். தெனியாய கல்வி வலயத்தைச் சேர்ந்த மாணவர்களே காணாமல் போயுள்ளனர்.

அங்குள்ள கொடபொல கனிஷ்ட பாடசாலை மண்சரிவுக்குள் அகப்பட்டபோது குறித்த மாணவர்கள் காணாமல் போயுள்ளனர்.

சடலங்களைத் தேடும் பணி தொடர்ந்தும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்றும் பிரசஞ்சலி கமகே தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

மண் சரிவில் காணாமல் போன மகள் : ஏக்கத்துடன் காத்திருந்த தந்தை மரணம்!!

அண்மையில் ஏற்பட்ட பேரனர்த்தம் காரணமாக 200 பேர் வரையில் உயிரிழந்தும் நூற்றுக்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர்.

இந்நிலையில் மண்சரிவில் காணாமல் போன மகளை காணாமையால் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார். காணாமல் மகள் மீண்டும் வருவார் என்ற நம்பிக்கையில் காத்திருந்த E.W. குணரத்ன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

எஹேலியகொட பகுதியை சேர்ந்த இவர், மகள் காணாமல் காலப்பகுதியில் எந்தவித உணவும் உட்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவரின் மகளான நிரோஷா சாமினி என்ற 22 வயது பெண் மண் சரிவில் சிக்கிய போதிலும் இதுவரையில் அவரது சடலத்தை கண்டுபிடிக்கவில்லை.

நோயினால் பாதிக்கப்பட்டிருந்த தந்தையிடம் இது தொடர்பிலான தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளன. எனினும் அவர் உண்மை அறிந்து கொண்டுள்ளார்.

இதனையடுத்து உணவு, நீர் இன்றி மகளுக்காக காத்திருந்த நிலையில் நேற்று காலை அவர் உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சவப்பெட்டி வாங்க வசதியின்றி பொலித்தீனைக் கொண்டு சடலத்தை சுற்றி அடக்கம் செய்த சோகம்!!

இரத்தினபுரி – களுத்துறைக்கு இடையில் அமைந்துள்ள கொலம்பெவ ஆயகம பகுதியில், சவப்பெட்டி வாங்க வசதியின்றி பொலித்தீனைக் கொண்டு சடலங்களை சுற்றி அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் ஏற்பட்ட மண் சரிவின் போது மண்ணில் புதையுண்டு உயிரிழந்த ஐந்து பேரின் சடலங்கள் இவ்வாறு புதைக்கப்பட்டுள்ளன.

இறுதிக் கிரியைகள் எதுவும் நடத்தப்படாது பொலித்தீனால் சடலங்கைள சுற்றி குழி தோண்டி உறவினர்கள் புதைத்துள்ளனர்.

இறுதிக் கிரியை நடத்தவோ அல்லது சவப்பெட்டி கொள்வனவு செய்து அதில் சடலங்களை வைத்து நல்லடக்கம் செய்யவோ தங்களிடம் பண வசதி கிடையாது என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் எட்டு பேர் மண்ணில் புதையுண்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதில் நான்கு சடலங்கள் முன்னதாக கண்டு மீட்டெக்கப்பட்டு சவப்பெட்டி இன்றி அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

பின்னர், 62 வயதான குணவதி என்பவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவரது சடலத்தையும் இறுதிக் கிரியைகளோ அல்லது சவப்பெட்டியோ இன்றி பொலித்தீனால் சுற்றி அடக்கம் செய்துள்ளனர்.

கனடிய நீதிமன்றில் கதறிய இலங்கையர்!!

கனடாவில் கொலை குற்றம் சுமத்தப்பட்ட இலங்கையரான அமலன் தண்டபாணிதேசிகரின் வழக்கு விசாரணை நேற்று கனேடிய உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.

இதன்போது கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் ஜெயராசன் மாணிக்கராசாவின் மகளிடம், தண்டபாணிதேசிகர் உணர்ச்சிபூர்வமாக மன்னிப்பு கோரியுள்ளார்.

ஜெயராசன் மாணிக்கராசாவின் குடும்பத்தினர் முன்னிலையில், தண்டபாணிதேசிகர் கருத்து வெளியிட்டார்.

“உங்கள் தந்தையை கொலை செய்யும் எண்ணம் எனக்கு இல்லை, நீங்கள் என்னை அறிவீர்கள். நான் செய்த காரியத்திற்காக வருந்துகின்றேன். என்னை மன்னித்து விடுங்கள்” என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

கனேடிய உச்சநீதிமன்றத்தில் தனது தீர்ப்பின் அறிக்கையை வெளியிட்டபோது, அமலன் தாண்டபாணிதேசிகர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது மாணிக்கராசாவின் மனைவியும் அவருடைய மகனும், மகளின் பக்கத்தில் அமர்ந்திருந்தார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

தனது வழக்கறிஞரான எலிஸ் பின்ஸோனல்ட் அதை எதிர்த்து வாதாடிய போதிலும் தண்டபாணிதேசிகர், உணர்ச்சிபூர்வமாக நடந்து கொண்டுள்ளார்.

தண்டபாணிதேசிகர், மீதான குற்றச்சாட்டு ஆதாரபூர்வமாக நீதிமன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அவர் குறைந்தபட்சம் 17 வருட சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என கனேடிய அரசாங்க தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் வழக்கு தொடர்பான தீர்மானம் எதிர்வரும் ஜுன் மாதம் 21ஆம் திகதி தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2014ஆம் ஆண்டு ஜுன் மாதம் 23ஆம் திகதி 40 வயதான ஜெயராசன் மாணிக்கராசா கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

இலங்கையில் ஒரே நகரத்திலிருந்து மாணிக்கராசாவும், அமலனும் கனடாவுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். மாணிக்கராசா 2000 ஆம் ஆண்டில் சென்றுள்ள நிலையில், அதற்கு அடுத்தாண்டில் அமலன் தண்டபாணிதேசிகர் கனடா சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இலங்கை அகதி தூக்கிட்டு தற்கொலை!!

தமிழகத்தில் அகதிகள் முகாமில் வசித்து வந்த இலங்கையர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கரூர் ராயனூர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் அந்தோணிராஜ், இவரது மகன் ஜோன்சன்(வயது 21).
சுமை தூக்கும் தொழிலாளியான ஜோன்சனுக்கும், அதே முகாமை சேர்ந்த கிருத்திகா என்ற பெண்ணுக்கு கடந்த எட்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

ஜான்சன் மதுப்பழக்கத்துக்கு அடிமையாக இருந்துள்ளார், மதுப்பழக்கத்தை கைவிடும்படி கிருத்திகா வற்புறுத்தியுள்ளார். இதனால் விரக்தியில் இருந்த ஜோன்சன் நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள பசுபதிபாளையம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மன்செஸ்டர் தாக்குதல் : மகளை தேடும் தந்தையின் கண்ணீர் காட்சிகள்!!

பிரித்தானியாவின் மான்செஸ்டரில் கடந்த 22ம் திகதி சல்மான் அபேதி என்ற ஐஎஸ் தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 22 பேர் பலியாகினர்.

இந்த வழக்கு தொடர்பாக இதுவரையிலும் 14 பேரை கைது செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீவிரவாத தாக்குதல் நடந்து ஒருவாரம் ஆன நிலையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிலையில் தாக்குதல் நடந்து முடிந்த வேளை Nick Bickerstaff என்பவர் தன் மகளை தேடும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து Nick Bickerstaff கூறுகையில், சுமார் 25 அடி உயரத்துக்கு வெடிப்பு நிகழ்ந்ததை கவனித்தேன், 2 நிமிடங்கள் அமைதியான மயானம் போல காட்சியளித்தது.

என்னை சுற்றி உடல் உறுப்புகள், சடலங்கள் சிதறி கிடந்தன, எங்கு பார்த்தாலும் மரண ஓலம் தான் என தெரிவித்துள்ளார்.

தாக்குதல் நடந்த இடத்திலிருந்து சிறிது தூரத்தில் Nick Bickerstaff -ன் மனைவி பிள்ளைகளுடன் பத்திரமாக இருந்துள்ளார்.

இன்று வரையிலும் கூட தன் பதட்டம் குறையவில்லை என கூறும் Ellen, பாதுகாப்பற்ற நிலையை உணர்வதாக குறிப்பிட்டுள்ளார்.