சென்னையில் பிரபல விளம்பர மொடல் மாயம்!!

சென்னையில் விளம்பர மொடலும், கதாசிரியையுமான இளம் பெண்ணைக் காணவில்லை என அவரது உறவினர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

டெல்லியைச் சேர்ந்த பத்மநாபன் என்பவரின் மகள் ஞானம். சென்னை கேகே நகரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து டிவி சீரியல்களுக்கு கதை, வசனம் எழுதி வந்ததுடன் தனியார் நிறுவனம் ஒன்றிலும் வேலை பார்த்து வந்துள்ளார். இதுதவிர விளம்பரப் படங்களிலும் நடித்து வந்திருக்கிறார்.

இந்நிலையில் தோழியை பார்த்து விட்டு வருவதாக கூறி, கடந்த 26-ம் திகதியன்று காலையில் தனது கருப்பு நிற ஹொண்டா ஆக்டிவா வாகனத்தில் வெளியில் சென்ற ஞானம், இரவு வெகுநேரம் ஆகியும் வீடு திரும்ப வில்லை என கூறப்படுகிறது. இதனால் அவரது உறவினர் மகிஜா என்பவர் கேகே நகர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஞானத்தை யாராவது மர்ம நபர்கள் கடத்திச் சென்று விட்டார்களா? அவர் என்ன ஆனார் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் தெரியவில்லை. கேகே நகர் பொலிசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இளம்பெண் ஒருவர் திடீரென காணாமல் போயுள்ளது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

9 ஆண்டுகளாக வெளிநாட்டில் மாட்டிக் கொண்ட பெண் : மீட்டு தர பெற்றோர் கெஞ்சல்!!

 
பாகிஸ்தானில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக சிக்கி பல்வேறு துன்பங்களை அனுபவித்து வரும் தங்கள் மகளை மீட்டு தர வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு பெண்ணின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர், இந்தியாவை சேர்ந்த உஸ்மா என்ற பெண் பாகிஸ்தானில் தான் துன்புறுத்தப்படுவதாக அங்குள்ள இந்திய தூதரகத்தில் முறையிட்டார்.

இதையடுத்து இஸ்லாமாபாத் நீதிமன்றம் உஸ்மாவை இந்திய செல்ல அனுமதித்தது. இதனை தொடர்ந்து இந்தியா வந்த உஸ்மா வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜைச் சந்தித்து நன்றி தெரிவித்தார்

இந்நிலையில் ஹைதராபாத்தை சேர்ந்த முகமது பேகம் என்பவரின் பெற்றோர் இதே போன்றதொரு பிரச்சனையோடு சுஷ்மாவை நாடியுள்ளனர்.
அவர்கள் கூறுகையில், கடந்த 9 ஆண்டுகளாக எங்கள் மகள் முகமது பேகம் பாகிஸ்தானில் தவித்து வருகிறார்.

அங்கு பல்வேறு துன்பங்களை அனுபவித்து வரும் அவரை, உஸ்மாவை வீட்டது போல் சுஷ்மா சுவராஜ் எங்களுக்கு மீட்டு தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

ஓமன் நாட்டில் பணிபுரிந்தபோது, முகமது யூனுஸ் என்பவரால் ஏமாற்றப்பட்டு தங்கள் மகள் திருமணம் செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

பல இடங்களில் மீண்டும் அடைமழை : உயிரிழப்பு 164 ஆக அதிகரிப்பு, 104 பேரைக் காணவில்லை!!

 
நாட்டின் பல பிரதேசங்களில் இன்று 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சியை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதிகளவான மழைவீழ்ச்சி மத்திய மலை நாட்டு பிரதேசங்களில் எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மத்திய வங்களா விரிகுடா கடல் பிரதேசங்களின் கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தம் சுறாவளியாக மாறும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் வான்பரப்பில் காணப்படும் கருமேகங்கள் காரணமாக மழை மற்றும் காற்றுடனான நிலைமையை எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டை சுற்றிய கடல் பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் என திணைக்களத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக 15 மாவட்டங்களை சேர்ந்த 464477 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இன்று காலை வெளியிட்ட புதிய அறிக்கையின்படி இதுவரை 164 பேர் உயிரிழந்ததுடன் 88 பேர் காயங்களுக்கு உள்ளாகி உள்ளனர். 104 பேர் காணாமல் போயுள்ளதாக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி, கேகாலை, காலி, களுத்துறை, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா ஆகிய 7 மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழை பெய்தால் மண் சரிவு ஏற்படும் பிரதேசங்களில் இருந்து வெளியேறுமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக முப்படையினர் மற்றும் பொலிஸார் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றனர்.

இதேவேளை கொழும்பு, நுவரெலியா உட்பட நாட்டின் பல பாகங்களில் அடைமழை பெய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் வெளிநாட்டவர்களின் செயற்பாடு : சமூக வலைத்தளங்களில் பாராட்டு!!

 
இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தம் ஒன்றின் போது வெளிநாட்டவர்களின் செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி உள்ளது.

ஓஹிய பிரதேசத்தில் நேற்று மாலை மரம் ஒன்று முறிந்து வீழ்ந்தமையால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் முறிந்து வீழ்ந்த மரத்தினை ரயில் பாதையிலிருந்து அகற்றும் நடவடிக்கையில் உள்ளுர் மக்கள் ஈடுபட்டனர்.

இதன்போது குறித்த ரயிலில் பயணித்த வெளிநாட்டவர்கள் வெளியில் வந்து, மரத்தை அகற்றுவதற்கு உதவி செய்துள்ளனர்.

நாட்டின் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தமது உயிர்களை பாதுகாத்துக் கொள்ள அதிகளவான மக்கள் பாதுகாப்பான இடங்களை தேடியுள்ளனர்.

இந்நிலையில் உள்ளுர் மக்களுடன் இணைந்து மரத்தை அகற்ற உதவிய வெளிநாட்டவர்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இவர்களை பாராட்டி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் : நாட்டில் சூறாவளி ஏற்படும் அபாயம்!!

வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ள தாழமுக்கத்தினால் இலங்கையில் சூறாவளி ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் ஆர்.ஜயசேகர தெரிவித்துள்ளார்.

வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ள தாழமுக்கம் வடக்கு திசை நோக்கி நகர்ந்தால் மணிக்கு 80கி.மீ. வேகத்தில் காற்று வீசி சூறாவளியை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளதாக அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்படி தகவல் பணிப்பாளரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியிலுள்ள தாழமுக்கம் வலுவடைந்து சூறாவளியாக மாறி வடக்கு திசையை நோக்கி நகர்ந்து வங்காள தேசம் வரை பயணிக்கும் என்று வானிலை அவதான நிலைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அதன் காரணமாக இலங்கையில் சப்ரகமுவ மாகாணம், மத்திய மாகாணம், தென் மாகாணம் போன்ற பகுதிகளில் காற்றின் வேகம் மிகவும் அதிகரித்துக் காணப்படும் என்றும் குறிப்பாக காலி, மாத்தறை உள்ளிட்ட கடற்பகுதியை அண்டிய பிரதேசங்களில் காற்று பலமாக வீசக்கூடிய சாத்தியங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் கடந்த நாட்களைப் போன்று நிலைமை பாரதூரமானதாக இல்லாவிடினும் காற்றின் வேகம் அதிகரிப்பதைப் பொறுத்தே நிலைமை மாற்றமடையும் என்றும், மக்களை அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, வங்கக் கூடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தூத்துக்குடி, நாகப்பட்டினம், காரைக்கால், புதுச்சேரி, கடலூர் ஆகிய துறைமுகங்களில் நேற்று ஞாயிற்றுக்கிழமை புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளன.

வங்கக் கடலில் கொல்கத்தாவுக்கு 950 கி.மீ. தெற்கே குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி, வடக்கு, வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து, வங்கதேசம் அருகே நாளை செவ்வாய்க்கிழமை (மே 30) கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், அதிக வேகத்தில் காற்று வீசலாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

பதினான்கு வயதுச் சிறுவனுக்கு கூரிய ஊசியால் குத்திக் காயம் : பெண் கைது!!

பதினான்கு வயதுச் சிறுவன் ஒருவனின் கையில் கூரிய ஊசியால் குத்திக் காயப்படுத்திய பெண்ணொருவரை கண்டிப் பொலிசார் கைது செய்துள்ளனர்.

தெல்தெனிய பிரதேசத்தில் இருந்து கண்டி நோக்கி வந்து கொண்டிருந்த பஸ் ஒன்றில் நேற்று இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

குறித்த பஸ்ஸில் பயணித்த பெண்ணொருவர் பஸ்வண்டியில் தனக்கு அருகாமையில் நின்று கொண்டிருந்த சிறுவன் ஒருவனின் கையில் கூரிய ஊசியால் குத்திக் காயப்படுத்திவிட்டு பஸ்ஸிலிருந்து இறங்கித் தப்பியோட முயற்சித்துள்ளார்.

எனினும் பஸ்ஸில் இருந்த ஏனைய பயணிகள் அவரை மடக்கிப்பிடித்து கண்டி பொலிசில் ஒப்படைத்துள்ளனர்.

காயமடைந்த பையன் சிகிச்சைக்காக கண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். கைது செய்யப்பட்ட பெண்ணிடம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கையில் எட்டு மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை!!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக எட்டு 8 மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படலாம் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ்.பண்டார எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த மூன்று நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக 12 மாவட்டங்கள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் வசித்து வந்த மக்களின் இயல்வு வாழ்க்கை ஸ்தம்பித்துப் போயிருக்கிறது.

தென்மாகாணம் முழுவதும் வெள்ள நீர் காடாக மாறியிருக்கிறது. இலங்கையின் முப்படையினரும், இந்திய கடற்படையினரும், மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதுவரை 151 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காணாமல் போயிருக்கின்றனர். மண்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கின் காரணமாக பெரும் பொருளாதார இழப்பும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அடுத்தடுத்த பல மணிநேரங்களில் முக்கியமாக எட்டு மாவட்டங்களில் மண் சரிவு ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இரத்தினபுரி, காலி, கேகாலை, களுத்துறை, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலேயே இந்த மண்சரிவு ஆபத்து இருப்பதாகவும், மக்களை அவதானமாக செயற்படுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

12 மாவட்டங்களில் டெங்கு நோயின் தாக்கம் தீவிரம்!!

டெங்கு நோயின் தாக்கம் 12 மாவட்டங்களில் தீவிரமாகியிருப்பதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, குருநாகல், புத்தளம், இரத்தினபுரி, கேகாலை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோயின் தாக்கம் அதிகம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் 50 ஆயிரம் பேர் இந்த நோயால் பீடிக்கப்பட்டிருப்பதாகவும், இவ்வருடத்தில் மாத்திரம் 130 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் ஆலோசகரான விசேட வைத்திய நிபுணர் பிரெச்சிலா சமரவீர தெரிவித்துள்ளார்.

டெங்கு பரவும் இடங்களைச் சுத்திகரிப்பதற்காக சுகாதார அமைச்சு எதிர்வரும் வியாழக்கிழமை முதல் நாடெங்கும் இருநாள் வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறான பல சுத்திகரிப்புப் பணிகள் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இம்முறை சுத்திகரிப்புப் பணிகளின் முறை வித்தியாசமாக இருக்கும் எனவும், இந்த இருநாள் பணி தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு நடைபெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியா தாண்டிக்குளத்தில் இளைஞன் மீது 15 பேரடங்கிய குழுவினர் தாக்குதல்!!

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று (28.05.2017) பிற்பகல் வீட்டிற்குள் புகுந்த 15 பேரடங்கிய குழுவினர் அங்கிருந்த இளைஞன் மீது சரமாரியாகத்தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த இளைஞன் வவுனியா பொது வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

இன்று நண்பகல் 12 மணியளவில் தாண்டிக்குளம் முதலாம் ஒழுங்கையில் மோட்டார் சைக்கிலில் தாயாருடன் சென்ற சிவதீஸ்வரன் கஜராஜ் என்ற 21 வயதுடைய இளைஞனை 15ற்கும் மேற்பட்ட குழாய்க்கிணறு தோண்டும் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து மதுபோதையில் வீட்டிற்குள் சென்று சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதை தடுக்கச் சென்ற தாயார் மீதும் குறித்த குழுவினர் தாக்கியுள்ளனர். இளைஞனைத் தாக்கிவிட்டு இளைஞனின் மோட்டார் சைக்கிலையும் சேதப்படுத்தியுள்ளனர்.

இதையடுத்து படுகாயமடைந்த இளைஞனை வைத்தியசாலையின் அனுமதித்துவிட்டு வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால் இரவு 7 மணிவரையும் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு பொலிசார் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் தொழில் முயற்சியை இனங்காணலுக்கான விழிப்புணர்வு சேவை!!

 
தொழில் முயற்சியை இனங்காணலுக்கும் ஊக்கமூட்டலுக்குமான விழிப்புணர்வு சேவை இன்று(28.05.2017) வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது.

வர்த்தக கைத்தொழில் அமைச்சின் ஏற்பாட்டில் இவ் அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் திணைக்களங்கள் இதற்கான ஏற்பாட்டை மேற்கொண்டிருந்தன.

திணைக்களம் மற்றும் நிறுவனங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் பயிற்சிகள் தொழில் முயற்சிக்கான உதவித்திட்டங்கள் தொடர்பாக இதன்போது மக்களுக்கு தெளிவுறுத்தப்பட்டிருந்ததுடன் தொழில் முயற்சியை இனங்காணும் செயற்பாடும் இடம்பெற்றிருந்தது.

காலை 10 மணிக்கு ஆரம்பமான இந் நிகழ்வில் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுதீன், வட மாகாணசபை உறுப்பினர்களான ஏ.ஜெயதிலக, ரிப்கான் பதியுதீன், வவுனியா மேலதிக மாவட்ட செயலாளர் தி.திரேஸ்குமார் உட்பட வர்த்தக கைத்தொழில் அமைச்சின் அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

யாழ். மாவட்ட முன்னாள் எம்.பி அப்பாத்துரை வினாயகமூர்த்தி காலமானார்!!

யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான அப்பாத்துரை வினாயகமூர்த்தி இன்று காலமானார்.

அப்பாத்துரை வினாயகமூர்த்தி, தனது 84 வயதில் இன்றைய தினம் காலமானார். இவர் இலங்கை தமிழ் அரசியல்வாதியும், சட்டத்தரணியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமாவார்.

இதேவேளை, அப்பாத்துரை வினாயகமூர்த்தி, அகில இலங்கை தமிழ் காங்கிரசின் முன்னாள் தலைவராகவும் செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அப்பாத்துரை வினாயகமூர்த்தியின் இறுதிச் சடங்கு யாழ்.கொக்குவிலில் அமைந்துள்ள அவரது வீட்டில் செவ்வாய்க்கிழமை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் விசேட தேவைக்குட்பட்டடோருக்கான போட்டியில் அல்- இக்பால் மாணவர்கள் சாதனை!!

 
விசேட தேவைக்குட்பட்ட மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் வவுனியா அல்- இக்பால் மகாவித்தியாலய மாணவர்கள் நால்வர் முதலிடம்.

வவுனியா தெற்கு வயலத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கல்வி கற்கும் விசேட தேவைக்குட்பட்ட மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் அல் – இக்பால் மகாவித்தியாலய மாணவர்கள் நால்வர் முதலாமிடம் பெற்றுள்ளனர்.

வவுனியா தெற்கு வலயத்தில் நேற்று நடைபெற்ற விசேட தேவைக்குட்பட்ட மாணவர்களுக்கான 100 மீற்றர் ஓட்டம், 60 மீற்றர் ஓட்டம், நீர் நிரப்புதல், நிறம் தீட்டுதல் ஆகியவற்றிலேயே குறித்த பாடசாலை மாணவர்கள் நால்வர் முதலாமிடத்தினைப் பெற்றுள்ளனர்.

ஆயுதப்போராட்டத்தால் தான் மாகாணசபை உருவாகியுள்ளது : சிவசக்தி ஆனந்தன் எம்.பி!!

ஆயுதப்போராட்டத்தால் தான் மாகாணசபை உருவாகியுள்ளது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

வவுனியா, ஓமந்தை, நாவற்குளத்தில் வாழ்ந்த கனகசபை நல்லதம்பியின் (உடையார்) நூற்றாண்டு விழாவும் ஞாபகார்த்த மண்டப திறப்பு விழாவும் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது..

எங்களது கிராமங்களை பிரதேசங்களை கட்டியெழுப்ப பல ஆயிரம் கோடி நிதி தேவையாகவுள்ளது. ஒரு பக்கம் நாங்கள் அரசாங்கத்துடன் மோத வேண்டியுள்ளது. மறுபக்கம் எங்களது கட்சிக்குள்ளே தனிநபர் ஆதிக்கம் காரணமாக எடுக்கப்படுகின்ற முடிவுகளால் கட்சிக்குள்ளும் நாங்கள் சில விடயங்களை கையாள வேண்டியுள்ளது.

இன்று எங்களுக்குள்ளே ஒரு மாகாணசபை உருவாகியுள்ளது என்றால் அது ஒரு ஆயுதப்போராட்டத்தால் தான் உருவாகியுள்ளது. ஆயுத போராட்டம் தான் பல கசப்பான அனுபவங்களை எங்களுக்கு தந்தாலும் கூட அந்த ஆயுத போராட்டம்தான் உலகத்தை தமிழ் மக்கள் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

வடகிழக்கு இணைந்த மாகாண சபை இருந்தது என்றால் எங்களது ஆயுத போராட்ட காலத்தில் தான். எங்களது போரிலே பாதிக்கப்பட்ட கை, கால், கணவனை இழந்து பாதிக்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்ற காலகட்டத்தில் தான் நாங்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆகவே எங்களுக்கு கீழ் ஆயிரக்கனக்கானவர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கும் நாங்கள் உதவி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

வவுனியாவில் அமைச்சர் ரிசாட்டை சுற்றிவளைத்த சுகாதாரத் தொண்டர்கள்!!

 
வவுனியா காமினி மகா வித்தியாலயத்தில் இன்று (28.05.2017) காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற கைத்தொழிலாளர்களுக்கான செயலமர்வு ஒன்றிற்கு வருகை தந்த அமைச்சர் ரிசாட் பதியுதீனை சுகாதாரத் தொண்டர்கள் மறித்து தமது நிரந்தர நியமனம் தொடர்பாக கலந்துரையாடினர்.

அவர்களின் வேண்டுகோளிற்கு கருத்து தெரிவித்த அமைச்சர், உங்களுடைய சுகாதார அமைச்சரிடம்தான் உங்களுக்கு நியமனம் பெற்றுக்கொடுக்க வேண்டிய அதிகாரம் உள்ளது அவருடன் கலந்துரையாடி பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்தார்.

வவுனியாவில் கடந்த 25 நாட்களாக சுகாதாரத் தொண்டர்கள் தமக்கு நிரந்தர நியமனம் பெற்றுத்தருமாறு கோரி தொடர்ந்து போராட்டம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் மரணம்!!

இலங்கையில் இடம்பெற்ற பாரிய வெள்ளத்தினால் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் உயிரிழந்துள்ளனர். மண் சரிவு ஒன்றில் சிக்கி இவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

நேற்று மாலை குறித்த ஐவரின் இறுதி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கணவர், மனைவி மற்றும் இளம் பிள்ளைகள் மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இந்த ஐவரும் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டுள்ளனர்.

எனினும் இந்த குடும்பத்தின் மூத்த மகன் மாத்திரம் இந்த வெள்ளத்தின் போது உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் இடம்பெற்ற போது அவர் வீட்டில் இல்லாத காரணத்தினால் உயிர் பிழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாளை முதல் மீண்டும் மழை?

தென்­மேற்கு பரு­வப்­பெ­யர்ச்சி காலநிலை கார­ண­மாக நிலை ­கொண்­டி­ருந்த கடு­மை­யான மழை­ யு­டன்­கூ­டிய கால­நிலை தற்­கா­லி ­க­மாக குறை­வ­டைந்­துள்­ளது.

எனினும் நாட்டின் தென்­மேற்கு பிர­தே­சங்­களில் நாளை முதல் மீண்டும் மழை­யுடன் கூடிய கால­நிலை பதி­வா­க­வுள்­ள­தாக வானிலை அவ­தான நிலையம் எதிர்­வு­கூ­றி­யுள்­ளது.

ஆகவே மேல், சப்­ர­க­முவ, தென், மத்­திய மற்றும் வடமேல் மாகா­ணங்­களில் அப்­வப்­போது மழை அல்­லது இடி­யு­டன்­கூ­டிய மழை பெய்­ய­வுள்­ள­தா­கவும் . சில பிர­தே­சங்­களில் 100 மில்­லி­மீற்றர் வரை­யி­லான மழை­வீழ்ச்சி பதி­வா­கலாம் என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது .

மேலும் ஏனைய மாகா­ணங்­களில் குறிப்­பாக ஊவா மற்றும் கிழக்கு மாகா­ணங்­களில் மாலை வேளையில் ஆங்­காங்கே மழை அல்­லது இடி­யு­டன்­கூ­டிய மழை பெய்யும்.மேலும் அவ்­வப்­ப­போது இலங்­கையை ஊட­றுத்து மணித்­தி­லா­யத்­திற்கு 50 – 60 கிலோ­மீற்றர் வேகத்தில் காற்று வீசக்­கூடும். இதே­வேளை மழை­பெய்யும் வேளையில் காற்றின் வேகம் மேலும் அதி­க­ரிக்கும் அபாயம் உள்­ளது.

ஆகவே சீரற்ற கால­நி­லையால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் மக்கள் அவதானமாக நடந்துகொள்ளுமாறு வானிலை அவதான நிலையம் கேட்டுள்ளது.