ஈரானில் கொடூரமானமுறையில் இலங்கைத் தமிழ் இளைஞர் படுகொலை!!

தொழில் நிமித்தம் ஈரான் சென்ற இலங்கைத் தமிழ் இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞரின் சடலம் நீர்கொழும்பு, மாவட்ட வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய போது இந்த விடயம் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.

முல்லைத்தீவு, அளம்பில் பகுதியை சேர்ந்த 23 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த இளைஞரின் தந்தையிடம் வாக்கு மூலம் ஒன்று பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த இளைஞர் கடுமையாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், முக்கிய உடற்பாகங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் பிரேத பரிசோதனைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட நபரின் புகைப்படம் வெளியானது!!

பிரித்தானியாவின் மான்செஸ்டர் பகுதியில் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட நபரின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் Manchester பகுதியில் உள்ள Hunts Bank என்ற இடத்தில் அமைந்துள்ள Manchester Arena-வில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் அமெரிக்காவின் பிரபல பாப் பாடகியான Ariana Grande-ன் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதலால் 22 பேர் பலியாகினர் மற்றும் 119 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் எட்டு வயது குழந்தை Saffie Roussos, 18-வயதுடைய Georgina Callander மற்றும் 26-வயதுடைய John Atkinson ஆகியோரும் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த கொடூர தாக்குதலால் 12 குழந்தைகளுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக பொலிசார் அப்பகுதியில் உள்ள அதாவது மான்செஸ்டரில் உள்ள வீடுகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்திய நபரின் பெயர் Salman Abedi என்று தெரியவந்துள்ளது. இவர் பிரித்தானியாவின் மான்செஸ்டர் பகுதியில் 1994-ஆம் ஆண்டு பிறந்துள்ளார்.

இவரது குடும்பம் லிபியாவைச் சேர்ந்தது. அங்கிருந்து அகதியாக வந்து பிரித்தானியாவில் குடியேறியுள்ளனர்.

Salman Abedi-க்கு பிரித்தானிய குடியுரிமை உள்ளதாக கூறப்படுகிறது. அவருடன் மூன்று பேர் உடன் பிறந்தவர்கள் என்றும் அவர்களில் இரண்டு பேர் சகோதரர்கள் மற்றும் ஒருவர் சகோதரி என்று தெரியவந்துள்ளது.

கடந்த வாரம் Salman Abedi அந்த வீதியில் இஸ்லாமிய சம்பந்தமான வார்த்தைகளை கத்திய படியே சென்றதாக, அருகில் இருப்பவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் கடந்த சில மாதங்களாகவே இஸ்லாமிய உடைகளை அணிந்த படியே சென்றதாகவும் கூறப்படுகிறது.

Salman Abedi, Know Your Chemicals-என்ற புத்தகத்தை வாங்கி படித்துள்ளார் என்றும் அவரது சகோதரர் ஒருவரை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

அவரை தீவிரவாதிகள் ஏதேனும் காரணங்களை கூறி, மனதை மாற்றியிருக்கலாம், அல்லது இவருக்கு ஏற்கனவே தீவிரவாதிகளுடன் தொடர்பு இருந்ததா என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதலில் அவர் தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது Salman Abedi-யின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

மேலும் Salman Abedi தாக்குதல் நடத்திய போது சம்பவ இடத்திலே அவர் உயிரிழந்துவிட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவிற்கு இது தான் ஆரம்பம், புனிதப்போர் தொடங்கிவிட்டது என்று ஐஎஸ் தீவிரவாதிகள் மிரட்டல் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தரையில் அமர்ந்து சாப்பிட்டால் உடல் எடை குறையும்!!

சப்பளங்கால் போட்டுத் தரையில உட்கார்ந்து சாப்பிடுவதன் அருமையும் அர்த்தமும் புரிந்திருந்தால், இன்று நாம் டைனிங்டேபிளிலோ, சோஃபாவில் கால் மீது கால் போட்டுக்கொண்டோ சாப்பிட்டுக் கொண்டிருக்க மாட்டோம்.

சப்பளங்கால் போட்டுத் தரையில உட்கார்ந்து சாப்பிடுவதன் அருமையும் அர்த்தமும் புரிந்திருந்தால், இன்று நாம் டைனிங்டேபிளிலோ, சோஃபாவில் கால் மீது கால் போட்டுக்கொண்டோ சாப்பிட்டுக் கொண்டிருக்க மாட்டோம்.

இத்தனைக்கும் உணவுகளைத் தேர்ந்தெடுத்துத்தான் சாப்பிடுகிறோம். உடல் உபாதைகள் வருவதற்கு முக்கிய காரணம் தரையில் அமராமல் கண்டபடி அமர்ந்து சாப்பிடும் முறையினால். தரையில் அமர்வதே ஒரு வகை யோகாதான்.

செங்குத்தாக முதுகுத் தண்டு நிமிர்ந்து நிற்க, கால்களும் தொடைகளும் எவ்வளவு விரிவான இடத்தை அடைக்க முடியுமோ அப்படி அடைத்துக் கொள்ளும்படி அமர்ந்திருப்போம். சப்பணமிட்டுச் சாப்பிடுவதில் பலன்கள் எக்கச்சக்கம்!

தரையில் அமர்ந்து சாப்பிடும்போது, இயல்பாகவே முன்பக்கமாக வளைந்தும், உணவை விழுங்கும்போது நிமிர்ந்தும் சாப்பிடுவோம்.

இப்படி முன்னும் பின்னும் அசைவதால், அடிவயிற்றில் உள்ள தசைகளின் இயக்கம் சிறப்பாக இயங்கும்.

தரையில் உட்கார்ந்து சாப்பிடும்போது, கவனம் எங்கும் சிதறாமல், உணவின் மீதும் நாம் சாப்பிடும் அளவின் மீதும் மட்டுமே இருக்கும்.

வயிறு நிறைந்தது என்ற உணர்வை மூளைக்கும் வயிற்றுக்கும் சிக்னல் கொடுக்கப் போதுமான அவகாசம் கிடைக்கும். அளவு தெரியாமல், அதிகமாகச் சாப்பிட மாட்டோம். இது, உடல் எடையைக் குறைப்பதற்கு உதவும்.

நேரடி ஒளிபரப்பு சேவையை பெற யூடியூப் வழங்கும் புதிய சலுகை!!

ஒன்லைனில் வீடியோக்களை பகிர்ந்து மகிழும் வசதியியை தரும் யூடியூப் தளமானது நேரடி ஒளிபரப்பு வசதியையும் வழங்கி வருகின்றது. எனினும் இவ் வசதியினை அனைத்து பயனர்களும் பெற முடியாது. இதற்கு தமது யூடியூப் கணக்கில் குறைந்தது 10,000 சந்தாதாரர்களைக் கொண்டிருக்க வேண்டும்.

எனினும் தற்போது வெகுவாக அதிகரித்து வரும் யூடியூப் பாவனை அடுத்து பயனர்களுக்கு சில சலுகைகள் புதிதாக வழங்க முன்வந்துள்ளது.

இதன்படி எதிர்காலத்தில் நேரடி ஒளிபரப்பினை செய்வதற்கு 1,000 சந்தாதாரர்களைக் கொண்டிருந்தாலே போதும்.

இச் சலுகையினை பிந்திய யூடியூப் அப்பிளிக்கேஷன்கள் ஊடாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.

இப் புதிய சலுகை காரணமாக எதிர்காலத்தில் யூடியூப் பாவனையானது மென்மேலும் அதிகரிக்கும் என்பது உறுதி.

சுவிஸில் இலங்கை பிரஜை கைது : அதிர வைக்கும் பின்னணி!!

சுவிஸ்லாந்தில் போலிக் கடவுச்சீட்டுகளை தயாரித்து இலங்கையில் இருந்து நபர்களை கடத்தி வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவிஸின் பேர்ன் மாகாணத்தில் Biel நகரில் இலங்கையை சேர்ந்த 27 வயதான நபரும், இவருக்கு உதவியாக செயல்பட்ட பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 24 வயதான நபரும் வசித்து வந்துள்ளனர்.

இருவரும் போலி கடவுச்சீட்டுகளை தயாரித்து இலங்கையில் இருந்து நபர்களை சுவிஸ் நாட்டிற்கு கடத்தி வருவதை முக்கிய தொழிலாக செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில், ரகசிய தகவல் பெற்ற பொலிசார் கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் இருவரையும் அதிரடியாக கைது செய்துள்ளனர். இத்தகவலை தற்போது தான் அதிகாரப்பூர்வமாக பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து பொலிசார் வெளியிட்ட தகவலில், ‘சுவிஸில் போலியான கடவுச்சீட்டுகளை தயாரித்து வந்துள்ளனர்.
இவரது ஆலோசனையின் பேரில் இலங்கையில் நபர்கள் விமானம் மூலம் துபாய், கத்தார் ஆகிய நாடுகளுக்கு பயணமாகின்றனர்.

பின்னர், தரை வழியாக ஈரான் அல்லது துருக்கி நாடு வழியாக செங்கன் நாடுகளுக்கு கடத்தி வருகின்றனர். இவர்களுக்காக ஏற்கனவே தயாரிக்கப்பட்ட போலி கடவுச்சீட்டுகளை அவர்களுக்கு கொடுத்து சுவிஸ் நாட்டிற்குள் கடத்தி வர இருவரும் உதவியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

2015 ஆகஸ்ட் முதல் 2016 மே மாதம் வரை இவர்கள் இருவரும் எண்ணற்ற நபர்களை சுவிஸ் நாட்டிற்கு கடத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

பழைய 500 ரூபாய் நோட்டில் மின்சாரம் தயாரித்து சாதனை படைத்த மாணவன்!!

மத்திய அரசினால் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பழைய 500 ரூபாய் நோட்டுக்களை வைத்து, மின்சாரம் தயாரித்து, ஒடிசா மாணவன் சாதனை படைத்துள்ளார்.

ஒடிசாவில், நுவாபடா மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும், லக்மண் துண்ட்(17) எனும் மாணவன் ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்தவர்.

இவர் கல்லூரி நேரத்திற்கு பின், மின்சார பல்பு விற்பனை செய்து வந்த நிலையில், தற்போது, பழைய, 500 ரூபாய் நோட்டில் இருந்து, மின்சாரம் தயாரிக்கும் முறையை கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.

இது குறித்து லக்மண் கூறியதாவது, செல்லாத, 500 ரூபாய் நோட்டை பயன்படுத்தும் வழி குறித்த யோசனையில், ரூபாய் நோட்டை கிழித்தேன். அப்போது, அதில் இருந்த, சிலிக்கான் பிளேட்டை பார்த்ததும், மின் உற்பத்தி செய்வதற்கான திட்டம் தோன்றியது.

பின் மின்சாரத்தை சேமிப்பதற்காக, ஒரு டிரான்ஸ்பார்மரை உருவாக்கி, அதை சூரிய ஒளியில் வைத்து, மின்ஒயரால் டிரான்ஸ்பார்மருடன் இணைத்து, ஒரு, 500 ரூபாய் நோட்டில் இருந்து, 5 வோல்ட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்பதை கண்டுபிடித்தேன்.

இந்த மின்சாரம் திட்டம், 15 நாட்களில் வெற்றியடைந்ததால், இத்திட்டம் குறித்து, மாநில அரசு மற்றும் மத்திய அரசிற்கு கடிதம் ஒன்றை எழுதினேன்.

என்னுடைய மின்சார கண்டுபிடிப்பினால் கவரப்பட்ட, பிரதமர் அலுவலகம் அந்த திட்டத்தை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி, மாநில அரசுக்கு பரிந்துரைத்திருந்தது.

இது குறித்து கடந்த, 17 ஆம் திகதி மாநில மின் வாரிய அதிகாரிகள், மின் உற்பத்தி திட்டத்தை ஆய்வு செய்து, அளித்த அறிக்கையை பார்த்து நான் மிகவும் பெருமைக் கொள்கிறேன் என்று மாணவன் லக்மண் கூறியுள்ளார்.

ரஜினியை வெளுத்து வாங்கிய சீமான்!!

ரஜினிகாந்த் விரைவில் அரசியலுக்கு வருவது உறுதி என பலரும் பேசி வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீமான், ரஜினி அரசியலுக்கு வர வேண்டாம் எனவும், ரஜினி வந்தால் என்னென்ன செய்வேன் என்று சொல்கிறாரோ அதனை தாங்களே செய்து கொள்கிறோம் என்றும் கூறியுள்ளார்.

மேலும், 44 ஆண்டுகள் தமிழகத்தில் வாழ்வதால் தான் பச்சை தமிழன் என ரஜினி கூறியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய சீமான், நீண்ட காலமாக மகாராஷ்டிரத்தில் வாழும் தமிழர்கள் மராட்டியர்கள் ஆகி விடுவார்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.

திரைத்துறையினர் இங்கு வந்து நடித்து விட்டும், சம்பாதித்து விட்டு போகட்டும் எனவும், நாட்டை ஆளும் உரிமை தனக்கே உள்ளது எனவும் சீமான் கூறியுள்ளார்.

இனியும் அடிமையாக வாழ முடியாது எனவும், தமிழகத்தின் வரலாறு தெரியாதவர்கள் தமிழகத்தின் அரசியலுக்கு வர வேண்டாம் என்றும் சீமான் ரஜினியை பற்றி ஆவேசமாக கூறியுள்ளார்.

நடிகையை பேஸ்புக்கில் விளாசிய பிரபல நடிகரின் மனைவி!!

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறிய நடிகை ரம்யாவை, பிரபல நடிகரின் மனைவி தனது பேஸ்புக் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பிரபல கன்னட நடிகர் கணேஷின் மனைவி ஷில்பா, கர்நாடக பாஜக மகளிர் அணியின் துணை தலைவியாக உள்ளார்.

இந்நிலையில், பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று விமர்சித்த ரம்யா குறித்து ஷில்பா தனது பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது,

மேடம் ரம்யா! நீங்கள் சோனியா மற்றும் ராகுலுக்கு செய்யும் சிறப்பான சேவையை தொடருங்கள். ஆனால் தயவு செய்து ராகுல் காந்தி போன்று பேசாதீர்கள்.

நிர்பயா பலாத்கார விவகாரத்தில் காங்கிரஸ் அரசு உரிய நடவடிக்கை எடுத்ததாக கூறினீர்கள். ஆனால் நிர்பயா விஷயத்தில் நடவடிக்கை எடுக்காததால் தான் டெல்லியில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது என்பதை உங்களுக்கு நினைவுபடுத்துகிறோம்.

உங்க கட்சி உறுப்பினர் ராஜராஜேஷ்வரிநகர் எம்.எல்.ஏ. முனிரத்னாவின் ஆதரவாளர்கள் ஜேடிஎஸ் கட்சி பெண் கவுன்சிலரின் சேலையை பிடித்து இழுத்தபோது எங்கிருந்தீர்கள்? உங்களின் கர்நாடக முதல்வர் இருந்த இடத்தில் தான் இந்த சம்பவம் நடந்தது என்று தெரியுமா? அந்த பெண் புகார் தெரிவித்ததும் அவரை கொலை செய்வேன் என்று முனிரத்னா மிரட்டியது உண்மையா?

முன்னதாக முனிரத்னா உங்கள் காங்கிரஸ் கட்சி பெண் கவுன்சிலரையே தாக்கியுள்ளார் என்று உங்களுக்கு தெரியுமா? முன்ரத்னா பெண்களுக்கு தொல்லை கொடுப்பதாக ஆஷா சுரேஷ் புகார் அளித்துள்ளார்.

பெண்களுடன் செக்ஸ் விவகாரத்தில் சிக்கிய அமைச்சர் மெட்டிக்கு எதிராக உங்கள் கட்சி என்ன நடவடிக்கை எடுத்தது மேடம்? உங்கள் கட்சியின் தலைவர் ஒரு பெண். அவருக்கு அமைச்சர்கள் இது போன்று இருந்தால் சரியா? நாட்டை பற்றி பேசும் முன்பு, உங்கள் கட்சியை பற்றி பேசுங்கள்.

முதலில் உங்கள் கட்சியில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு அளியுங்கள். அதன் பிறகு மற்றவர்களை கிண்டல் செய்யலாம். உங்கள் ஆட்சியில் மத்திய அமைச்சரின் மனைவிக்கே(சுனந்தா புஷ்கர்) பாதுகாப்பு இல்லை. அதனால் பெண்கள் பாதுகாப்புக்கு காங்கிரஸின் பங்களிப்பு குறித்து நாட்டுக்கே தெரியும்.

விவசாயிகளுக்கு பாஜக அரசு நிதி அளிக்கவில்லை என்று கூறுகிறீர்கள் நீங்கள். மத்திய அரசிடம் இருந்து கர்நாடக அரசுக்கு ரூ. 28 ஆயிரத்து 750 கோடி கிடைத்துள்ளது என்று நிதி அமைச்சக ஆவணங்களில் உள்ளது. அந்த பணம் எல்லாம் எங்கே மேடம்?

மேடம், நீங்கள் ஆங்கிலத்தில் நன்றாக பேசுகிறீர்கள். ஆனால் கர்நாடாக மக்களுக்கு உங்களின் போலியான அமெரிக்க உச்சரிப்பு புரியவில்லை என்று விளாசியுள்ளார்

89 வயதுப் பெண்ணை அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவாசலில் விட்டுச் சென்ற நபர்கள்!!

வெலி­கம, கப்­பு­வத்தை பிர­தே­சத்தைச் சேர்ந்­தவர் எனக் கூறப்படும். 89 வய­தான நான்கு பிள்­ளை­களின் தாய் ஒருவர் மாத்­தறை அதி­வேக நெடுஞ்­சா­லையின் நில்­வலா நுழை­வா­யிலில் அநா­த­ர­வாக விட்டுச் செல்­லப்­பட்டார்.

கடந்த 19 ஆம் திகதி மாலை கடும் மழை பெய்த போது இந்த வயோ­திபத் தாய் சுமார் 200 மீட்டர் தூரம் கொட­கம பண்­டா­ராம மாவத்தை வரை நடந்து வந்­துள்ளார்.

அப்­போது பிர­தே­ச­வா­சிகள் பொலிஸ் அவ­சர இலக்­க­மான 119 க்கு தொடர்பு கொண்டு தெரி­வித்­ததை அடுத்து மாத்­தறை பொலிஸார் அந்த இடத்­துக்கு வந்து இந்த வயோ­திபத் தாயை பொறுப்­பேற்று மாத்­தறை வைத்­தி­ய­சா­லையில் சேர்ந்­துள்­ளனர்.

தமக்கு நான்கு பிள்­ளைகள் இருப்­ப­தா­கவும் கடந்த 19 ஆம் திகதி தனது மகளும் மரு­ம­கனும் தன்னை வாக­ன­ மொன்றில் ஏற்றி நெடுஞ்­சா­லையில் அநா­த­ர­வாக விட்டுச் சென்றதாகவும் அத்தாய் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

மழைக்கு ஒதுங்கிய இளம் பெண்களுக்கு நேர்ந்த அவலம்!!

ஆந்திர மாநிலத்தின் தலைநகர் விசாகப் பட்டினத்தில், மழைக்கு ஒதுங்கிய இரண்டு இளம் பெண்களை எட்டுப் பேர் அடங்கிய கும்பல் ஒன்று தூக்கிச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர்.

விசாகப் பட்டினத்தின் டஜாங்கி என்ற பகுதியில் திருவிழா ஒன்று நடைபெற்றது. அதில் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. அதைக் காண்பதற்காக குறித்த இரண்டு பெண்களும் அவர்களது நண்பர்கள் சிலரும் அங்கு சென்றிருந்தனர்.

திடீரென மழை பெய்ய ஆரம்பித்ததால், அங்கிருந்த ஒரு கட்டிடத்தில் மழைக்காக அவர்கள் ஒதுங்கினர். இளம் பெண்கள் இருவர் இருளில் நிற்பதைக் கண்ட எட்டுப் பேர் அடங்கிய கும்பலொன்று, நண்பர்களைச் சரமாரியாகத் தாக்கிவிட்டு பெண்கள் இருவரையும் தூக்கிச் சென்ற பின் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்கள் இருவரும் பொலிஸில் புகாரளித்தனர். அதில், அப்பகுதி அரசியல்வாதி ஒருவரின் மகனும், பொலிஸ் அதிகாரி ஒருவரின் மகனும் இன்னும் ஆறு பேரும் சந்தேக நபர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தலைமறைவாகியிருக்கும் எட்டுப் பேரையும் தேடும் நடவடிக்கையில் பொலிஸார் இறங்கியுள்ளனர்.

சூர்யா, சத்யராஜ் உள்ளிட்ட 8 நடிகர்களுக்கு எதிராக பிடியாணை!!(வீடியோ)

நடிகர்கள் சூர்யா, சத்யராஜ் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக நேற்று (23.05) நீலகிரி குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை ஒன்றை பிறப்பித்துள்ளது.

பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம் ஆஜராகாத நடிகர்கள் சூர்யா, சத்யராஜ், சேரன், சரத்குமார், விவேக், விஜயகுமார், அருண்விஜய் மற்றும் நடிகை ஸ்ரீபிரியா ஆகியோருக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் ராஜவேல் பிறப்பித்துள்ள இந்த உத்தரவில், இந்த நடிகர்களை நீதிமன்றம் முன்பாக ஆஜர்ப்படுத்தவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு நடிகர் சங்கம் நடத்திய பத்திரிகையாளர்களுக்கு எதிரான கண்டன கூட்டம் ஒன்றில் பங்கேற்ற நடிகர்கள் மற்றும் நடிகைகள், பத்திரிகையாளர்களின் சமூக தகுதியை குறைக்கும் வகையிலும், அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையிலும் பேசியதாக குற்றஞ்சட்டப்பட்டது.

தொடர்ந்து, அந்த கூட்டத்தில் பங்கேற்ற நடிகர்களுக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு, அவர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடுக்கப்பட்டன.

அவ்வாறு உதகையை சேர்ந்த பத்திரிகையாளர் ரொசாரியோ என்பவர் தொடுத்திருந்த வழக்கு, நீலகிரி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

ஒரு தசாப்த காலத்திற்கும் மேலாக தொடர்ந்து வரும் இந்த வழக்கில்தான் இவ் உத்தரவும் வெளிவந்துள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு விபச்சார வழக்கில் கைதாகியிருந்த நடிகை புவனேஸ்வரி அளித்திருந்த தகவலாக கூறி, விபச்சாரத்தில் ஈடுபடும் நடிகைகளின் பட்டியல் ஒன்றை பிரபல தமிழ் நாளிதழ் ஒன்று வெளியிட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியாகவே நடிகர் சங்கத்தில் கண்டன கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய நடிகர்களின் பேச்சு பத்திரிகையாளர்களை மிக கேவலமாக சித்தரித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்து.

இந்த பேச்சுக்கள் அடங்கிய வீடியோக்கள் சமூகவலைத்தளங்கள் வாயிலாக பரப்பப்பட்டிருந்தது.
அந்த வீடியோக்களை ஆதாரமாக கொண்டே இது தொடர்புடைய வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜேம்ஸ் பொண்ட் நாயகன் காலமானார்!!

ஜேம்ஸ் பாண்ட் கதாப்பாத்திரத்தில் நடித்து நன்கு அறியப்பட்ட நடிகர் சர் ரோஜர் மூர் தனது 89 வது வயதில் காலமாகிவிட்டதாக அவருடைய குடும்பத்தார் அறிவித்துள்ளனர்.

‘லிவ் ஆண்ட் லெட் டை´ மற்றும் ´தி ஸ்பை ஹூ லவ்டு மீ´ உட்பட ஏழு ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களில் பிரபல இரகசிய உளவாளி கதாபத்திரத்தில் அவர் நடித்திருந்தார்.

சமூக வலைத்தளமான ட்விட்டர் மூலம் சர் ரோஜர் மூரின் குடும்பத்தார் இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளனர்.

குறைந்த காலமே என்றாலும் புற்றுநோயை எதிர்த்து மூர் தைரியமாக போராடினார் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறவுள்ளதாக சங்கக்கார அறிவிப்பு!!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் உலகின் தலைசிறந்த கிரிக்கெட் ஜாம்பவானுமாகிய குமார் சங்கக்கார, முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள இங்கிலாந்து பிராந்திய அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின் பின்னர், முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற எண்ணியுள்ளதாக குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற 39 வயதான குமார் சங்கக்கார, இங்கிலாந்தின் பிராந்திய அணியான சரே அணிக்காக தற்போது விளையாடி வருகின்றார்.

“ நான் லோட்ஸ் மைதானத்தில் 4 நாள் போட்டியொன்றில் கலந்துகொள்வது இதுவே இறுதி சந்தர்ப்பமாகும். இன்னும் சில மாதங்களில் எனக்கு 40 வயதாகின்றது. பிராந்திய கிரிக்கெட் தொடரிலிருந்து விலகுவதற்கான சரியான நேரமும் இதுதான். ஒவ்வொரு கிரிக்கெட், அல்லது விளையாட்டு வீரர்களுக்கும் ஓய்வுக்கான நாளொன்றுள்ளது. அதுவரும்போது விலகிச்செல்ல வேண்டும்” என கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

முதல்தர போட்டிகளில் சரே அணிக்காக விளையாடிவரும் குமார் சங்கக்கார, இந்த சீசனில் 1000 ஓட்டங்களுக்கு மேல் குவித்துள்ளதுடன் மிடில்செக்ஸ் அணிக்கெதிராக இரு சதங்களையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள இங்கிலாந்து பிராந்திய அணிகளுக்கிடையிலான தொடரையடுத்த முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறவுள்ளதாக சங்கக்கார அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.யுவதிக்கு சர்வதேச ரீதியில் கிடைத்த வாய்ப்பு!!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த யுவதி ஒருவருக்கு தாய்லாந்தில் இடம்பெறவுள்ள சர்வதேச மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் பங்குப்பற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது.

பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் சாதனைப் படைத்த அனித்தா ஜெகதீஸ்வரனே குறித்த போட்டிக்கு தெரிவாகியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் கலந்துக் கொள்வதற்காக மேலும் இருவர் தெரிவாகியுள்ளனர். குறித்த மூவரும் முதல் தடவையாக சர்வதேச மெய்வல்லுநர் போட்டி ஒன்றில் கலந்துகொள்ள தெரிவாகியுள்ளனர். இவர்கள் மூவரும் வெளிநாடு செல்லவிருப்பதும் இதுவே முதல் தடவையாகும்.

தாய்லாந்தில் ஜூன் மாதம் 12ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ள தாய்லாந்து பகிரங்க மெய்வல்லுநர் போட்டிகளில் இம் மூவருடன் மேலும் ஐவர் பங்குபற்றவுள்ளனர்.

தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் கடந்த மாதம் நடைபெற்ற கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டிகளில் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் அனிதா, 3.45 மீற்றர் உயரம் பாய்ந்து இலங்கையில் சாதனையை நிலைநாட்டினார்.

சம்மட்டி எறிதல் வீராங்கனைகளான அயேஷா மதுவன்தி, பத்தம்ச ஆகியோரும் முதல் தடவையாக சர்வதேச ரீதியான போட்டிகளில் பங்குப்பற்றவுள்ளனர்.

இதேவேளை, காலிங்க குமாரகே, தனூக்க லியனபத்திரண (நீளம்­பாய்தல்), டி. எஸ். ரணசிங்க (ஈட்டி எறிதல்), விதூஷா லக்ஷானி (முப்பாய்ச்சல்), நிலானி ரத்நாயக்க (3,000 மீ. தடைதாண்டி ஓட்டம்) ஆகியோரும் தாய்லாந்து பகிரங்க மெய்வல்லுநர் போட்டிகளில் பங்குபற்றவுள்ளனர்.

ஹிக்கடுவ பிரதேச செயலகத்துக்கு அருகில் துப்பாக்கி சூடு : இருவர் பலி!!

ஹிக்கடுவ பிரதேச செயலகத்துக்கு அருகில் உள்ள அச்சகம் ஒன்றினுள் நுழைந்த மர்ம நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்களே இந்த துப்பாக்கி சூட்டை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த நபர்கள் கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹிக்கடுவ குமாரகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய துசார தனுந்தர, 34 வயதுடைய சுஜீத் ஹிமால் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பளையில் புகையிரதம் மோதி இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி!!

பளை கச்சார்வெளியில் அதிவேக புகையிரதம் மோதி இரண்டு பிள்ளைகளின் தந்தை நேற்று உயிரிழந்துள்ளார்.

புகையிரத கடவையை மோட்டார் சைக்கிளில் கடக்க முற்பட்ட போதே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்து தொடர்பில் பளை வைத்திய அதிகாரி சிவரூபன் தெரிவிக்கையில்,

புகையிரதத்தில் மோதி கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை முரளிதரன் எனும் 28 வயதான நபரே உயிரிழந்துள்ளார்.

இதன்போது, அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அவசர சிகிச்சை வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.