கொலரா நோயினால் 209 பேர் பலி : 17 ஆயிரம் பேர்வரையில் பாதிப்பு!!

ஏமனில் கொலரா நோயின் தாக்கத்தினால் கடந்த இரண்டு வாரங்களுக்குள் மாத்திரம் சுமார் 209 பேர் பலியாகியுள்ளதுடன், இதுவரை சுமார் 17ஆயிரத்திற்கும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு போர் இடம்பெற்றுவரும் ஏமனில், பாதிக்கப்பட்ட உணவு, மற்றும் சுத்தமற்ற குடிநீர் காரணமாக கொலரா நோய் பரவி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

மேலும் ஏமனில் தினமும் 3 ஆயிர பேருக்கும் அதிகமானவர்கள் கொலரா நோய் பிடிப்பிற்குட்படுவதாகவும், ஒவ்வொரு 10 நிமிடத்திற் கொருமுறை, ஐந்து வயதிற்கும் குறைவான வயதை உடைய குழந்தை 1 இறக்கும் அபாயம் நிலவுவதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

அத்தோடு ஏமனில் கொலரா நோய் காரணமாக கடந்த 18 மாதங்களில் சுமார் 10ஆயிரம் பேர் வரையில் இறந்துள்ளதுடன், 2 மில்லியன்பேர் வரை பதிப்படைந்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தகவல் பகிர்ந்துள்ளது.

குறித்த நோய் தொற்று காரணமாக கடந்த வருடம் மாத்திரம் சுமார் 2ஆயிரம் பேர் வரியில் இறந்துள்ளதாகவும், அதில் அதிகளவானவர்கள் குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கின் ஏழ்மையான நாடாக கூறப்படும் ஏமனில், உள்நாட்டு கிளர்ச்சியாளர்களுக்கும், அந்நாட்டு அரச படைக்குமிடையில் உளநாட்டு யுத்தம் இடம்பெற்று வருகின்றது. இதில் அரச படைகளுக்கு சவுதி அரேபியாவும், கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு வழங்கி வருகின்ற நிலையில் அந்நாட்டு மக்கள் சுகாதார வசதி இன்றி அவதிப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சிறுமியை கடித்த நாய்க்கு மரண தண்டனை!!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஒரு குழந்தையை கடித்த நாய்க்கு மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணம் பாக்கர் என்ற நகரில்தான் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நாயிடம் கடிபட்ட குழந்தையின் பெற்றோர், இதுபற்றி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில், பொலிஸ் உதவி கமிஷனர் ராஜா சலீம், நாய்க்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார். மனிதாபிமான அடிப்படையில் இந்த உத்தரவை பிறப்பித்ததாக அவர் கூறினார்.

நாய் செய்த தவறுக்காக, அதன் எஜமானர் ஜமீல் என்பவருக்கு ஏற்கனவே ஒரு வார சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவரும் அந்த தண்டனையை அனுபவித்து விட்டு வெளியே வந்துள்ளார். தற்போது, தனது நாய்க்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் சென்றவர் தலை நசுங்கி பலி!!

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோயில்போரதீவு பிரதான வீதியில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மீது பின்னால் வந்த கனரக வாகனம் மோதியதன் காரணமானக மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றவர் தலை நசுங்கி பலியானார்.

பெரியபோரதீவு பட்டாபுரத்தை சேர்ந்த கொல்லன் தொழில் செய்துவரும் பிள்ளையான்தம்பி – கிருஸ்ணபிள்ளை (மூத்தவன்) என்பவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பலியானார்.

அவருடன் சென்ற மட்பாண்ட தொழில் செய்கின்ற புண்ணியமூர்த்தி என்பவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாகனத்தின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தக்­காளிப் பழங்கள் புற்­றுநோய் பரவுவதை தாம­தப்­ப­டுத்தும் : ஆய்வில் தகவல்!!

தக்­காளிப் பழங்கள் வயிற்று புற்­றுநோய் பர­வு­வதை தாம­தப்­ப­டுத்தும் என புதிய ஆய்­வொன்று கூறு­கி­றது.

அந்தப் பழங்­க­ளி­லுள்ள லைகோபென் என்ற இர­சா­யனம் புற்­று­நோய்க்கு எதி­ராக போராடும் ஒன்­றாக ஏற்­க­னவே மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்­வுகள் தெரி­விக்­கின்ற நிலையில், இத்­தா­லிய புதிய ஆய்­வா­னது தக்­காளிப் பழங்­களில் காணப்­படும் விசேட இர­சா­யனம் மட்­டு­மல்­லாது அதி­லுள்ள அனைத்து உள்­ள­டக்­கங்­களும் புற்­று­நோய்க்­கு எதி­ராகப் போராடும் மருத்­துவத் தன்­மையைக் கொண்­டுள்­ள­தாக தெரி­விக்­கி­றது.

தக்­காளிப் பழங்கள் பல்­வேறு வகை­யான வயிற்றுப் புற்­று­நோய்­க­ளுக்கு எதி­ரா­கவும் போராடும் வல்­ல­மையைக் கொண்­டவை என மெர்­கோ­லி­யன்கோ ஆய்வு நிலை­யத்தைச் சேர்ந்த ஆய்­வா­ளர்கள் கூறு­கின்­றனர்.

அந்தப் பழங்கள் புற்­றுநோய்க் கலங்கள் தோன்­று­வதை மட்­டு­மல்­லாது புதி­ய­தாக தோன்­றிய புற்­றுநோய்க் கலங்கள் பர­வு­வ­தையும் தாம­தப்­ப­டுத்­து­வது தமது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக மேற்படி ஆய்வுக்குத் தலைமை தாங்கிய பேராசிரியர் அந்தோனியோ சியோர்டனோ தெரிவித்தார்.

வெள்ளவத்தையில் கட்டிடம் சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு, 25 பேர் காயம்!!

கொழும்பு – வெள்ளவத்தை பகுதியில் உள்ள ஐந்து மாடிக் கட்டிடமொன்று சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 25 பேர் காயமடைந்துள்ளனர்.

வௌ்ளவத்தை சவோய் திரையரங்கிற்கு அருகில் இருந்த கட்டிடம் ஒன்றே நேற்று காலை 10.30 மணியளவில் சரிந்து வீழ்ந்தது.

இராணுவம், விமானப்படை, பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் தீயணைப்புப் படையினர் ஆகியோர் உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

அனர்த்தம் இடம்பெற்ற பகுதியில் உள்ள வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சிலவும் இதன்போது சேதமடைந்துள்ளன.

அனர்த்தத்தில் காயமடைந்த 14 பேர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் கவலைக்கிடமான நிலையில் எவரும் இல்லை என வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

அனர்த்தத்தில் காயமடைந்த மேலும் 9 பேர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

கட்டிட இடிபாட்டில் சிக்கியிருப்போரை மீட்பதற்கான பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Share This

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்!!

 
வவுனியாவில் இன்று (18.05.2017) காலை 9.30 மணியளவில் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணனின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது.

வவுனியா செட்டிகுளம் கந்தசாமி நகர் பகுதியிலுள்ள கல்லாறு பகுதியில் இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் உயிரிழந்த உறவுகளுக்கு ஆத்மா சாந்தி பிரார்த்தனை இடம்பெற்றதுடன், இதில் கலந்து கொண்ட உறவுகளை இழந்த உறவுகள் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்

இன் நிகழ்வில் தமிழ் விருட்சம் அமைப்பின் செயலாளர் மாணிக்கம் ஜெகன், அப்பகுதியிலுள்ள 50ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

வவுனியா சிறுவன் வீதி விபத்தில் சிக்கி பரிதாபமாகப் பலி!!

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 7 வயது சிறுவன் ஒருவர் பலியாகியுள்ளார்.

வவுனியா பறநாட்டுகல் ஒமந்தையை சேர்ந்த செந்தில்நாதன் சுதேசியன் என்னும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வவுனிய ஓமந்தையில் இருந்து உறவினர் வீட்டிற்கு சென்ற சிறுவனும் தாயாரும் முள்ளிவாய்க்கால் மேற்கு சந்தி பேருந்து தரிப்பிடத்தில் இருந்து இறங்கி வீதியை கடக்க முற்பட்டுள்ளனர்.

இதன்போது, அதே திசையில் இருந்து வந்த சிறுரக வாகனம் ஒன்று சிறுவன் மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் கூறியுள்ளார்.

குறித்த சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரரனைகளை முல்லைத்தீவு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா குடியிருப்பு கலாச்சார மண்டபம் டெங்கு நுளம்பு பெருகும் இடமாக!!

 
வவுனியா குடியிருப்பு கலாச்சார மண்டபம் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டு கடந்த 6 மாதங்களுக்கு மேலாகியுள்ள நிலையிலும் புனரமைக்கப்படாமல் பாதுகாப்பற்ற பகுதியாகவே தற்போது காட்சியளிக்கின்றது.

மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியான இந்த பகுதியில் இளைஞர்கள் ஒழுக்கமற்ற முறையில் பயன்படுத்தி வருவதால் டெங்கு நுளம்பு பெருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த பல தடவைகள் உயர் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்று அப்பகுதியிலுள்ளவர்கள் கூறியுள்ளனர்.

இதேவேளை, இது தொடர்பாக உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

காதலியை மிரட்ட காதலன் செய்த வேலை : சோகத்தில் மூழ்கிய குடும்பம்!!

காதலியை அச்சுறுத்துவதற்கு விஷம் அருந்திய இளைஞர் இறுதியாக உயிரிழந்த சோகமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

உயிரிழந்த இளைஞர் அவரது குடும்பத்தில் ஒரே மகனாகும். பெற்றோர் மிகவும் அன்புடன் வளர்த்த திறமையான இளைஞராக அவர் காணப்பட்டுள்ளார்.

சாதாரண தர பரீட்சை போன்று உயர்தர பரீட்சையிலும் சிறந்த சித்தி பெற்ற இந்த இளைஞர் தனது காதலியை பயமுறுத்துவதற்கு நினைத்து நண்பர்களுடன் இணைந்து ஒரு திட்டமிட்டுள்ளார்.

எனினும் இது நகைச்சுவைக்காக செய்யவில்லை எனவும், காதலியுடன் உள்ள பிரச்சினை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டார் எனவும் அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று திட்டமிட்டு சிறிதளவு விஷத்தை குடித்துள்ளார். எனினும் அவர் மரணிக்க எண்ணவில்லை. எனினும் அவருக்கே தெரியாமல் விஷம் அதிகமாகியுள்ளது.

என்னால் முடியவில்லை சீக்கிரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு குறித்த இளைஞர் தனது நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். எனினும் அவரது உயிர் பிரிந்து விட்டது என நண்பர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இவரின் உயிரிழப்பு காரணமாக குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவரும் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ஜெயலலிதாவைக் கொன்ற மாதிரி நாங்கள் கொல்ல மாட்டோம் : சசிகலாவை அதிரவைத்த சிறை அதிகாரி!!

என்னை பெங்களூரு சிறையிலிருந்து கூடிய விரைவில் தமிழக சிறைக்கு மாற்றுங்கள் என்கிற கதறல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவிடமிருந்து வெளிப்பட்டிருக்கிறது என்கின்றன மன்னார்குடி வட்டாரங்கள்.

சசிகலாவை சந்திக்க வருபவர்கள் யார் அவருக்கு வீட்டு உணவு வழங்கப்படுகிறதா அவருக்கு என்ன மருந்துகள் வழங்கப்படுகின்றன அவர் இரவு நேரத்தில் சிறையை விட்டு வெளியே செல்கிறாரா இவையெல்லாம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெங்களூருவில் உள்ள சமூகஆர்வலர்கள் கேட்கும் கேள்விகள்.

ஆரம்பத்தில் சிறை உடைகளை அணிந்து கொண்டு காலையில் வாக்கிங் செல்வதும், மதிய வேளையில் இளவரசியுடன் சேர்ந்து சிறை வளாகத்தில் உள்ள மரத்தடியில் அமர்ந்து பேசுவதும் சசிகலாவின் வழக்கமாக இருந்தது.

தன் அண்ணன் மகன் மகாதேவன் மரணச் செய்தி கேட்டு குலுங்கிக் குலுங்கி அழுத சசி, தினகரன் கைது செய்தி வந்த பிறகு பேசாமடந்தையாகிப் போனார்.

இந்நிலையில் இளவரசிக்கு சுவாசக்கோளாறும் இதயக்கோளாறும் தாக்க அவரை வெளியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என சிறை அதிகாரிகளைக் கேட்டார்.

பெண்கள் சிறையின் ஜெயில் வார்டனான ராணி, அதெல்லாம் முடியாது என சசியின் முகத்திற்கு நேராக சொன்ன போது என்னங்க இது அநியாயம் என கோபத்தின் உச்சிக்கே போய்விட்டார் சசிகலா.

இது உலகத் தரம் வாய்ந்த சிறை. இங்குள்ள மருத்துவமனையில் மிகச்சிறந்த தீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளது.

ஜெயலலிதாவை கொன்றது மாதிரி நாங்க யாரையும் சாகடிக்க மாட்டோம் (ஜெயலலிதான்னா சாயிஸ்தங்கே வேறே யார்னுனு சாயிஸ்சல்லா) என கன்னடத்தில் ராணி கத்தியதை தமிழில் கேட்டுத் தெரிந்துகொண்ட சசிகலா நொறுங்கிப் போனார்.

அந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இளவரசியைப் பார்ப்பதும், அவரது உடல்நிலை பற்றி சென்னையில் இருந்து இதற்காகவே வரவழைக்கப்படும் சிறப்பு டாக்டரிடம் விவாதிப்பதும்தான் சசிகலாவின் வேலையாக இருந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை இளவரசி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டபோது தான் நிம்மதி அடைந்தார் சசிகலா.

இளவரசிக்கு உடல்நிலை சரியில்லாத போது ஒரேமுறை தான் சிறைத்துறை நிர்வாகம் அவரது மகன் விவேக்கை சந்திக்க அனுமதித்தது.

மற்ற நேரமெல்லாம் சசிகலாவை வக்கீல் நாமக்கல் செந்தில் மட்டுமே சந்தித்தார். அவர் மூலம்தான் கட்சி, ஆட்சி, மத்திய அரசு பற்றிய செய்திகளைத் தெரிந்துகொண்டார்.

உடல்நலம் இல்லாமல் சிகிச்சை பெறும் கணவர் நடராஜனைப் பற்றிய கவலையும் சசியை வாட்டுகிறது.

நாங்க மட்டும்தான் பாவம் செய்தோமா? எதற்காக இந்தக் கஷ்டம்?” என கொக்கரித்துப் பேசும் சசிகலாவின் துயரத்தைக் கேட்ட அவரது உறவினர்கள் சசிகலாவை, ஜெ.வைப் போல நடத்த வேண்டும்.

பரப்பன அக்ரஹாராவில் இருந்த ஜெ.வை அப்போது ஜெயில் சூப்பிரெண்ட்டாக இருந்தவர் ஏ.சி. அறையில் தங்கவைத்தார். அவருக்குத் தேவையான செல்போன் வசதிகள் செய்து கொடுத்தார்.

அதுபோல சசிக்கும் செய்துதர வேண்டும். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை’ என பரப்பன அக்ரஹாரா சிறையின் சூப்பிரெண்ட்டான கிருஷ்ணகுமாரிடமும், டி.ஐ.ஜி.யான சத்யநாராயணாவிடமும் பேசிப் பார்த்துவிட்டார்கள்… எதுவும் நடக்கவில்லை.

சிறை சூப்பிரெண்ட் கிருஷ்ணகுமார் வழக்கத்தை விட அதிகமான கண்காணிப்பை செலுத்தும் வகையில், சசிகலாவை கண்காணிப்பு நிறைந்த அறைக்கு மாற்றிவிட்டார்.

அவ்வப்போது சிறை ஊழியர்கள் மூலம் கிடைத்துவந்த வீட்டுச் சாப்பாடும் அடிக்கடி கிடைப்பதில்லை என்பதோடு, சசிகலா இருக்கும் சிறை பகுதிகளில் கண்காணிப்பு கமராக்களை அதிகப்படுத்தி விட்டார்.

இது சசிகலாவை இன்னமும் நொந்துபோக வைத்துள்ளது என்கிறார்கள் மன்னார்குடி வகையறாக்களைச் சேர்ந்தவர்கள்.சசிகலா, இளவரசி மட்டுமல்ல சுதாகரனையும் சிறைவாசம் கடுமையாகப் பாதித்துள்ளது.

150 கைதிகளுடன் சத்திரம் போன்ற கொட்டடியில் அடைக்கப்பட்டுள்ள சுதாகரன், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளி முருகனைப் போல் ஜடாமுடி வளர்த்து, சாமியார் போல வாழ்கிறார்.

ஆன்மிகம், பஜனை என சாமியார் போல வாழும் சுதாகரனைப் பார்க்க யாரும் வருவதில்லை. எப்போதாவது வருபவர்களிடம் எடப்பாடி பற்றி பேசும் சுதாகரன், எடப்பாடி நான் சொன்னால் எதையும் செய்யமாட்டேன்கிறார் என சின்னப்பிள்ளை புலம்புவது போல புலம்புகிறாராம்.

மறுசீராய்வு மனுவை பெரிதும் நம்பிக்கொண்டிருந்தார் சசிகலா. இந்நிலையில், சுப்ரீம்கோர்ட்டின் தலைமை நீதிபதியான கேஹார், ஜெ.வுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதி பினாக்கி சந்திரகோஷ் வழங்கிய தீர்ப்பை அவரது பிரிவு உபசார விழாவில் பாராட்டிப் பேசினார் என்பதைக் கேட்டதும் நொந்து போனார்.

விரைவில் பிரதமர் மோடியை சந்திப்பேன்’ என சிறைக்கு மெஸேஜ் அனுப்பியுள்ளார் திவாகரன். என்னை எப்படியாவது தமிழகத்திலுள்ள சிறைக்கு மாற்றுங்கள். என்னால் இங்கிருக்க முடியாது என திவாகரனின் மெஸேஜ் கொண்டுவந்த ஆளிடம் சொல்லி அனுப்பியுள்ளார் சசிகலா.

-நக்கீரன்-

இத்தாலியை அடுத்து இலங்கையில் உருவாகும் அதிசயம்!!

இலங்கையில் முதன்முறையாக புதிய வகையிலான வீட்டுதொகுதி கட்டடம் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.

கொழும்பு நவம் மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற Altair என்ற பெயரில் புதிய வகையிலான வீட்டுத்தொகுதி நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இதன் நிர்மாணிப்பு நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

Altair கட்டடம் – 240 மீற்றர் உயரத்திலான 68 மாடிகளை கொண்ட கட்டடமாக நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.

இத்தாலியிலுள்ள பீசா கோபுரம் போன்று இந்த கட்டடமும் சற்று சாய்ந்த வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளமையே இதன் சிறப்பம்சமாகும். பீசா கோபுரம் உலக அதிசயங்களில் ஒன்றாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சாய்ந்த நிலையில் இலங்கையில் நிர்மாணிக்கப்படும் முதலாவது கட்டடம் இதுவாகும்.

இந்த வருட இறுதிக்கு முன்னர் இந்த கட்டடத்தின் அனைத்து நடவடிக்கைகளும் நிறைவு செய்வதற்கு அதன் நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தினமும் இரவில் பூண்டு ஒரு பல் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!

தற்போது அனைவருமே உடலில் உள்ள பிரச்சனைகளுக்கு இயற்கை வழிகளின் மூலம் தீர்வு காண விரும்புகின்றனர். உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வு காண பல இயற்கை வழிகள் உள்ளன. அதில் ஓர் அற்புதமான இயற்கைப் பொருள் தான் பூண்டு.

பூண்டில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. அதற்கு அந்த பூண்டை அன்றாட உணவில் சேர்த்தும் வரலாம் அல்லது வெறும் வயிற்றில் சாப்பிடலாம் அல்லது இரவில் படுக்கும் முன் கூட சாப்பிடலாம். அப்படி இரவில் ஒரு பல் பூண்டு சாப்பிட்டதும், ஒரு டம்ளர் நீரைக் குடிக்க வேண்டும்.

இரத்த உறைவைத் தடுக்கும்

தினமும் இரவில் ஒரு பல் பூண்டு சாப்பிடுவதால், உடலினுள் இரத்த உறைவு ஏற்பட்டு, இரத்த ஓட்டத்தில் இடையூறு ஏற்படுவது தடுக்கப்படும்.

சளி சளி அல்லது இருமலால் அவஸ்தைப்படுபவர்கள், இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிட்டால், சளி மற்றும் இருமலில் இருந்து விரைவில் விடுபடலாம்.

வாய்வுத் தொல்லை

பூண்டு வாய்வுத் தொல்லையில் இருந்து விடுதலை அளிக்கும். ஆனால் அதற்காக பூண்டை அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. எனவே வாய்வு தொல்லை அதிகமாக இருந்தால், இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிடுங்கள்.

புற்றுநோய்

பூண்டில் புற்றுநோய் எதிர்ப்பு பொருட்கள் உள்ளன. ஒருவர் இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிட்டு வந்தால், புற்றுநோயின் அபாயத்தில் இருந்து விடுபடலாம்.

பூஞ்சை தொற்று

காது அல்லது பாதங்களில் பூஞ்சை தொற்றுகள் இருந்தால், ஒரு பூண்டை நன்கு அரைத்து, அதன் சாற்றினை அவ்விடத்தில் விடுங்கள். இதனால் பூஞ்சை தொற்று விரைவில் போய்விடும்.

குறிப்பு: பூண்டு சிலருக்கு வயிற்று எரிச்சல் மற்றும் செரிமான பிரச்சனைகளை உண்டாக்கிவிடும்.

சாதாரண மனிதரை திருமணம் செய்வதற்காக அரச பதவியை துறந்த இளவரசி : நெகிழ வைக்கும் சம்பவம்!!

ஜப்பான் இளவரசி ஒருவர் தமது காதலுக்காக அரச பதவியை துறந்துள்ள சம்பவம் அந்த நாட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

ஜப்பான் பேரரசர் அக்கிஹிட்டோவின் பேத்தியும் இளவரசியுமான Mako தமது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து கொள்ளும் பொருட்டு தனக்கான அரச பதவிகள் அனைத்தியும் துறந்துள்ளார்.

இளவரசி Mako தமது வருங்கால கணவராக அரச குடும்பத்து உறுப்பினரல்லாத நபர் ஒருவரை தெரிவு செய்துள்ளார். கடல் மீது ஆர்வம் கொண்டவரும் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் பொருட்டு சாகசங்கள் மேற்கொள்பவருமான 25 வயதான Kei Komuro என்பவருடன் திருமணம் நடைபெற உள்ளது.

இதன் பொருட்டு அரச குடும்பத்தினரிடம் அதிகாரப்பூர்வமான அனுமதியை பெற வேண்டி இளவரசி Mako கோரிக்கை வைத்துள்ளார்.

இளவரசியின் கோரிக்கையை அரச குடும்பம் தீவிர ஆலோசனைகளுக்கு பின்னர் ஏற்றுக்கொள்ளும் எனில், ஜப்பானிய இளவரசி Mako தமக்கான அனைத்து அரச பதவிகளையும் துறக்க நேரிடும். இதுநாள் வரை இளவரசியாக வலம் வந்த Mako அவரது திருமணத்திற்கு பின்னர் பொதுமக்களில் ஒருவராக கருதப்படுவார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அமைந்துள்ள சர்வதேச கிறிஸ்தவ பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றவர் 25 வயதாகும் இளவரசி Mako. குறித்த பல்கலைக்கழகத்தில் உடன் பயின்றவர் தற்போது இளவரசி திருமணம் செய்து கொள்ளவிருக்கும் Kei Komuro என்பவர்.

அரச குடும்பத்தின் அனுமதி பெற்ற பின்னர் இளவரசிக்கு உரிய அனைத்து பதவிகளும் துறக்க நேர்ந்தாலும், திருமணம் என்பது மிகவும் ஆடம்பரமாகவும் ஜப்பானிய அரச குடும்பத்திற்கே உரித்தான பாணியில் மிகவும் விமரிசையாக நடைபெறும்.

முதலில் திருமணம் செய்து கொள்ளும் மணமகன் மணமகள் பெயரை கோலாகல விழா ஒன்றில் அரச குடும்பம் அறிவிக்கும். இதனையடுத்து முறைப்படி மணமகனும் மணமகளும் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களிடம் அனுமதி கோர வேண்டும். அதன் பின்னர் திருமண நாள் குறித்த அறிவிப்பு வெளியாகும்.

இளவரசி Mako தமது காதலரை ஏற்கெனவே அரச குடும்பத்தினரிடம் அறிமுகப்படுத்தி அனுமதியும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மணமகனின் தலையில் துப்பாக்கியை வைத்து கடத்திய காதலி : சுவாரஸ்ய சம்பவம்!!

உத்திரப்பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் இரண்டு நபர்களுடன் வந்து மணமகனை துப்பாக்கி முனையில் மிரட்டி கடத்திச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேசத்தின் Bundelkhand-பகுதியில் நேற்று இரவு திருமணம் நடைபெற இருந்தது. அப்போது திடீரென்று SUV-காரில் இரண்டு இளைஞர்களுடன் வந்த 25-வயது இளம்பெண் ஒருவர் மணமகனான அசோக் யாதவ் தலையில் துப்பாக்கியைவைத்து இவன் என்னை காதலிக்கிறான், என்னைத் தான் திருமணம் செய்யப்போகிறான், பின்னர் எப்படி நான் மற்றவருக்கு விட்டுத் தரமுடியும் என்று கூறிச் சென்று கடத்திக் கொண்டு போயுள்ளார்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிக்கையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அசோக் யாதவ் தான் வேலை செய்யும் இடத்தில் ஒரு பெண்ணை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனால் அவரின் பெற்றோர் வேறொரு திருமணத்திற்கு வற்புறுத்தியுள்ளனர். இதன் காரணமாகவே அவர் இந்த திருமணத்திற்கு ஒத்துழைத்ததாக அங்கிருக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார், கடத்தப்பட்ட அசோக்யாதவ் மற்றும் அவரது காதலியை தேடிவருகின்றனர்.

இளம்பெண்ணை வெட்டி சூட்கேஸில் வைத்து எரித்த கொடூரம்!!

தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில், ரயில் நிலையம் அருகே 20 வயது மதிக்கதக்க இளம் பெண் சூட்கேஸ்சில் வைத்து எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டத்தில் முக்கிய ரயில் நிலையத்திற்கு மிக அருகே உள்ள ரெட்டிப்பட்டி மேம்பாலத்திற்கு அடியில் உள்ள முட்புதரில் முழுவதுமாக எரிந்த நிலையில் சடலம் ஒன்று இருப்பதாக சேலம் சூரமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சூரமங்கலம் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது இருபது வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணை வெட்டி பெரிய அளவிலான சூட்கேஸ் ஒன்றில் வைத்து எரித்து விட்டு சென்றுள்ளது தெரியவந்தது.

மேலும், சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களும், தடவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தபட்டது. உடல் முழுவதும் எரிந்த நிலையில் இருப்பதால் இறந்தவர் யார் என்பதை கண்டறிவதில் சிக்கல் நீடிக்கிறது.

இளம்பெண்ணை பாலியல் தொல்லைக்கு உட்படுத்தி கொடூரமான முறையில் கொலை செய்து உடலை எரிந்திருக்கலாம் என்ற கோணத்தில் தற்போது பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆப்கானிஸ்தான் பெண் விமானியின் உலக சாதனை பயணம்!!

ஆப்கானிஸ்தானில் பிறந்த பெண் விமானி ஒருவர் தனியாக உலகம் முழுவதும் விமானத்தில் சுற்றி உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷயஸ்தா வயஷ் என்ற பெண் விமானி, சுமார் 40,000 கிலோ மீற்றர் தூரம் பறந்து உலக சாதனை படைக்க திட்டமிட்டுள்ளார்.

மேலும் தனியாக தனது பயணத்தை அமெரிக்காவின் புளோரிடாவில் மாநிலத்திலுள்ள டேடோனா கடற்கரை விமான நிலையத்திலிருந்து இம்மாதம் 13 ஆம் திகதி ஆரம்பித்துள்ள நிலையில், அவர் ஸ்பெயின், எகிப்து மற்றும் இந்தியா உள்ளிட்ட 18 நாடுகளுக்கு செல்ல முடிவு செய்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

சோவியத் போர் இடம்பெற்ற காலத்தில் ஆப்கானிஸ்தான் அகதிகள் முகாமில் பிறந்துள்ள இவர், அமெரிக்காவில் விமானி பயிற்சியை பெற்று, ஆப்கானிஸ்தான் பயணிகள் விமானத்தின் மிக இளமையான விமானியாக பணியாற்றுபவராவார் என்பது குறிப்பிடத்தக்கது.