இம்முறை சாதாரண தரப் பரீட்சையில் 8000 இற்கும் அதிக மாணவர்கள் 9 பாடங்களில் A சித்தி!!

நேற்று வெளியாகிய கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் 8224 மாணவர்கள் 9 பாடங்களில் A சித்தி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் 6102 மாணவர்களே 9 பாடங்களிலும் A சித்தி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் கணித பாடத்தில் சித்தியடைந்தோர் 7.63 வீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் வரலாறு பாடத்தில் 80.75 வீதமானோர் சித்தியடைந்துள்ளனர்.

வெளியாகியுள்ள பெறுபேறுகளுக்கு அமைய உயர்தர வகுப்பிற்கு தோற்றுவதற்கு 69.94 வீதமானோர் தகுதி பெற்றுள்ளனர்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 0.61 வீதம் இந்த வருடம் உயர்தர வகுப்பிற்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மனித மூளையுடன் இணைந்து செயற்படும் கணனி : நியூரோலிங்கின் புதிய முயற்சி!!

மனித மூளையுடன் இணைந்து செயற்படும் கணனி மற்றும் தொழிநுட்ப சாதனங்களை உருவாக்கும் முயற்சியில், நியூரோலிங் எனும் நிறுவனத்தை உருவாக்கி உற்பத்திகளை ஏற்படுத்துவதற்கான முயற்சியில், ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா தொழிநுட்ப நிறுவனங்களின் தலைமை நிறைவேற்று அதிகாரியான எலான் மெஸ்க் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் நியூரோலிங் உற்பத்தித்தி செய்யவுள்ள தொழிநுட்பசாதனங்கள் யாவும், மனித மூளையை மென்பொருள்களுடன் இணைத்ததாகவும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மேம்படுத்தி மனித ஞாபக சக்திகளை கணனிமயமாக்கும் முயற்சியாகவே இதை நடைமுறைப்படுத்தவுள்ளதாக குறித்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

இந்நிலையில் நியூரோலிங்கின் பயன்கள் குறித்து அண்மையில் சமூகவலைத்தளங்கள் மூலம் கருத்து தெரிவித்துள்ள எலான் மெஸ்க், நியூரா லேஸ் முறையை உருவாக்குவதற்கான பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்றுவருவதாகவும், குறித்த தொழிநுட்பத்தை கொண்டு மனிதர்கள் மருத்துவ முறைகளில் பல்வேறுபட்ட நரம்பியல் சார்ந்த நோய்களை குணப்படுத்தி கொள்ளகூடிய வாய்ப்பை உருவாக்குமென தெரிவித்துள்ளார்.

எனினும் குறித்த தொழிநுட்பமுறைகளை மிகவும் ஆபத்தானவையாக கூறுவதால், அதன் பயனாளர்கள் மிகவும் குறைவாகவே இருப்பதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு நியூரோலின்க் நிறுவனத்தின் புதிய திட்டங்கள் சார்ந்த அறிவிப்புகள், எதிர்வரும் மாதங்களில் வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளநிலையில், மனிதர்களை கணினியுடன் இணைத்து செயற்படுத்த வைக்கும் வழிமுறைகளை எளிமையாக்கி, உருவாகும் ஆபத்துகளை வெகுவாக குறைக்குமென தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கென்ய படையினரின் அதிரடி தாக்குதலால் 31 தீவிரவாதிகள் பலி!!

தீவிரவாதிகளை இலக்கு வைத்து சோமாலியாவில் கென்ய படைகள் நடத்திய தாக்குதலில், அல் ஷபாப் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த 31 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும்கு குறித்த தாக்குதல் தொடர்பாக கென்ய இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சோமாலியாவின் பதாதி பகுதியில் கென்ய படைகள் ஹெலிகொப்டர்கள் மற்றும் பீரங்கிகளை கொண்டு நடத்திய அதிரடி தாக்குதலில், அந்நாட்டின் அல் ஷபாப் இயக்கத்தைச் சேர்ந்த 31 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அல் காய்தா இயக்கத்தின் கிளை அமைப்புகளில் ஒன்றான அல் ஷபாப் தீவிரவாத அமைப்பானது, கென்யா மீது கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தொடர் தாக்குதல்களை நடத்தி வருவதால், கென்யா தனது படைகளை சோமாலியாவுக்கு அனுப்பி தாக்குதல் நடத்தி வருகிறதென்பது குறிப்பிடத்தக்கது.

100 கிலோ தங்க நாணயம் கொள்ளை!!

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் அருங்காட்சியகம் ஒன்று உள்ளது. இங்கு 100 கிலோ எடையுள்ள தங்க நாணயம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

இந்த தங்க நாணயம் நேற்று முன்தினம் இரவு கொள்ளையிடப்பட்டுள்ளது. அதன் மதிப்பு 4 மில்லியன் டாலர் (ரூ.3 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது.

கொள்ளை போன நாணயம் கனடா அரசால் கடந்த 2007-ம் ஆண்டு வழங்கப்பட்டது. ‘பெரிய பனை ஓலை’ என பெயரிடப்பட்டிருந்தது.

அதில் ராணி 2-வது எலிசபெத்தின் உருவப்படம் பொறிக்கப்பட்டிருந்தது. சுத்த தங்கத்தால் இது உருவாக்கப்பட்டிருந்தது. எனவே இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

53 சென்டி மீட்டர் நீளமும், 3 சென்டி மீட்டர் பருமனும் கொண்டது. இது ‘புல்லட் புரூப்’ கண்ணாடி பெட்டிக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.

அருங்காட்சியகத்தின் ஜன்னலை உடைத்து ஏணி மூலம் கொள்ளையர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த தங்க நாணயத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த அருங்காட்சியகத்தில் உலக நாடுகளின் நாணயங்கள் சேகரித்து பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இங்கு 5 லட்சத்து 40 ஆயிரம் வகை நாணயங்கள் உள்ளன.

வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் ஆ.சங்கீதன் முதலிடம்!!

வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியலாய மாணவன் ஆ.சங்கீதன் 7A,2B சித்திகளைப் பெற்று பாடசாலை மட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

மேலும் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர் விபரம் வருமாறு ..

1. பிலோமீரா அன்ரனி ஜோர்ஜ் விக்டர் ராஜா 7A,B,C
2. றொகேந்திரன் சயந்தன் 6A,B,C.S
3. சுகுணலிங்கம் சுரேஸ் 4A, 3C, 2S
4. கவிப்பிரியா கணேசன் 4A,2B,C,S
5.சுகந்தினி பிரான்விக்னராஜா 4A, 2B,C,S சித்திகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

சிறப்பான பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.

வவுனியா மதீனா வித்தியாலயம், பரமேஸ்வரா வித்தியாலய பெறுபேறுகள்!!

வவுனியா மதீனா வித்தியாலயம்

அப்துல் மஜித் முகமட் மனாஸ் 5A, 1B, 3C
ஹாஜாமுகைதீன் றியாஸ் 1A, 3B, 3C, 2S.

வவுனியா பரமேஸ்வரா வித்தியாலயம்

அரியகுலேந்திரன் அஜித்குமார் 8AC
விஜயவீரன் சகிலன் 8AS.
இராம்ராஜ் சரத்குமார் A,3B, 3C, 2S.

வவுனியா முஸ்லீம் மகாவித்தியாலய மாணவன் றிப்கி அகமட் 9A சித்திகளைப் பெற்று சாதனை!!

2016 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் இன்று அதிகாலை வெளியாகிய நிலையில், வவுனியா முஸ்லீம் மகாவித்தியாலய மாணவன் றிப்கி அகமட் 9A சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

மேலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர் விபரம் வருமாறு..

R.F.றிப்கி அகமட் 9A
J.ஜஸ்கானா 8AB
N.F.சிம்ரா 6A3B

சித்தியடைந்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.

27 மாணவிகள் 9A, 28 மாணவிகள் 8A : கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலயம் சாதனை!!

நடைபெற்று முடிந்த க.பொ.த சாதாரண தர பரீட்சையில் கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலயம் சிறந்தபெறுபேறுகளை பெற்றுள்ளது.

இது குறித்து சைவ மங்கையர் வித்தியாலயத்தின் அதிபர் சாந்தினி வேலுப்பிள்ளை கருத்து தெரிவிக்கையில்,

எமது பாடசாலை மாணவிகள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர். இதில் சித்தியடைந்த மாணவிகளுக்கு தமது பாராட்டுக்களை தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.

இந்த மாணவிகள் சித்தியடைவதற்கு பல வழிகளிலும் உதவிய ஆசிரியர்களுக்கு நன்றிகளையும் அதிபர் தெரிவித்தார்.

கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலயத்தில் 27 மாணவிகள் 9A தித்தியும், 28 மாணவிகள் 8A, 18 மாணவிகள் 7A, 7 மாணவிகள் 6A, 10 மாணவிகள் 5A சித்தியும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அம்பாறையில் இரட்டைச்சகோதரிகள் இருவரும் 9A சித்திகளை பெற்று சாதனை!!

அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை வலயத்தில் நாவிதன்வெளிக் கோட்டத்தில் இரட்டைச் சகோதரிகள் இருவரும் 9A சித்திகளைப் பெற்றுள்ளனர்.

றாணமடு இந்து மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த அற்புதராஜா மிராளினி மற்றும் அற்புதராஜா விதுசனா எனும் இரட்டையர்களே இவ்வாறு சித்தியடைந்துள்ளதாக பாடசாலை அதிபர் எஸ்.தியாகராஜா தெரிவித்துள்ளார்.

குறித்த மாணவர்களுக்கு நாவிதன்வெளிக் கோட்டக்கல்வி பணிப்பாளர் எஸ்.சரவணமுத்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதேவேளை மாணவர்கள் இருவருக்கும் சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீமும் தமது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கல்கிஸ்ஸையில் வீட்டுப் பணிப் பெண்ணொருவர் மர்மமான முறையில் மரணம்!!

கல்கிஸ்ஸை பிரதேசத்தில் வீட்டுப் பணிப்பெண்ணொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீடொன்றில் பணிப்பெண்ணாக வேலைபார்த்து வந்த மலையகப் பெண்ணொருவர் உடலில் தீக்காயங்களுடன் குளியலறையில் விழுந்திருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

பொலிசாரின் விசாரணையில் குளியலறையில் இருந்து மண்ணெண்ணெய் போத்தல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பொலிசார் அவரை உடனடியாக களுபோவிலை போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர். எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணுக்கு 37 வயது இருக்கலாம் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர். இவர் மலையகத்தின் மடூல்சீமை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சவுதியில் உயிரிழந்த இலங்கைப் பெண்ணின் உடல் 5 மாதங்களுக்கு பின் உறவினர்களிடம் கையளிப்பு!!

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சவூதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாக சென்று உயிரிழந்த மலையகப் பெண்ணின் உடல் ஐந்து மாதங்களின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மஸ்கெலியா, ஸ்டெர்ஸ்பி சூரியகந்த (லேட்புரூக்) தோட்டத்தைச் சேர்ந்த பழனியாண்டி கற்பகவள்ளி (வயது – 41) எனும் மூன்று பிள்ளைகளின் தாயின் சடலமே 5 மாதங்களின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் தனது குடும்ப வறுமையின் காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் ஊடாக சவூதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.

2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இலங்கையிலிருந்து பணிப்பெண்ணாக சென்ற இவர் சவூதி அரேபியா றியாத் ஒலேய்யா பபா என்ற தடுப்பு முகாமில் தடுத்து வைத்திருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து உறவினர்களுக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.

01.11.2016 அன்று இவர் உயிரிழந்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து உறவினர்கள் குறித்த வேலைவாய்ப்பு நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் என்பவற்றோடு தொடர்புகளை ஏற்படுத்தி உடனடியாக உயிரிழந்தவரின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்து தருமாறு கோரியுள்ளனர்.

நீண்ட முயற்சியின் காரணமாக 5 மாதங்கள் கடந்த பின் குறித்த பெண்ணின் சடலம் நேற்றிரவு கொழும்பில் வைத்து உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மாரடைப்பு காரணமாகவே இப்பெண் உயிரிழந்திருப்பதாக பிரேத பரிசோதனை சான்றிதழை சவூதி அரேபியா நாட்டு அதிகாரிகள் இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதேவேளை உறவினர்களால் சந்தேகம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் சடலத்தை மரண பரிசோதனை செய்யப்பட வேண்டும் என விடுத்த வேண்டுகோளுக்கமைவாக கொழும்பில் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கூரிய ஆயதங்களால் தாக்கப்பட்டமையினாலேயே குறித்த பெண் உயிரிழந்ததாக இலங்கையின் வைத்திய அறிக்கை தெரிவித்துள்ளதாக உறவினர்கள் குறிப்பிடுகின்றனர்.

மலையக தோட்டப்பகுதியிலிருந்து குடும்ப பிரச்சினை மற்றும் வறுமையை கருத்திற் கொண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கென செல்லும் பெண்களின் நிலை இவ்வாறாகவே அமைகின்றது.

எனவே மலையக பெருந்தோட்ட பகுதிகளிலிருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கென செல்லும் பெண்கள் இவ்வாறான சம்பவங்களை அறிந்து வெளிநாடுகளுக்கு பணிப்பெண்ணாக செல்வதை தடுத்துக் கொள்ள வேண்டும் எனவும், எமது குடும்பத்தின் உறவுக்கு ஏற்பட்ட இந்த நிலைமை வேறு எந்த பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது எனவும் குறித்த பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்தில் துலக்சன் முதலிடம்!!

வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவன் ர.துலக்சன் 8AB சித்திகளைப் பெற்று பாடசாலை மட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

மேலும் மா.டிலோஜினி 8AB , சொ.யாழினி 8AB, நி.தேனுசன் 8AC. சித்திகளை பெற்று பாடசாலைக்கும் வவுனியா மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

7 மாணவர்கள் 7AB சித்திகளை பெற்றதுடன் 147 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறப்பான பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலத்தில் ம.அபினுசன் முதலிடம்!!

வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலய மாணவன் ம.அபினுசன் 8AC சித்திகளைப் பெற்று பாடசாலை மட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

மேலும் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர் விபரம் வருமாறு..

1. ம.லக்ஷன் 7A,BC
2. தி.தனுசாயினி 7A,C,S
3. ர.பிருந்தா 6A,B,2C
4. பி.சிந்திசை 6A,2B,S
5. ப.சரண்யா 6A,B,2C
6 ர.லக்சனா 6A,2B,C சித்திகளை பெற்று பாடசாலைக்கும் வவுனியா மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

71 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தமையுடன் உயர்தரத்திற்கு 53 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

சிறப்பான பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் 10 பேர் 9A சித்திகளைப்பெற்று சாதனை!!

2016 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் இன்று அதிகாலை வெளியாகிய நிலையில், தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் 10 பேர் 9A சித்திகளைப்பெற்று சாதனை படைத்துள்ளனர்.

சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர் விபரம் வருமாறு..

சித்தியடைந்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.

வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவி மிதுசிகா 9A சித்திகளைப் பெற்று சாதனை!!

2016 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் இன்று அதிகாலை வெளியாகிய நிலையில், வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவி ஆர்.மிதுசிகா 9A சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

மேலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர் விபரம் வருமாறு..

ஆர்.மிதுசிகா 9A
ஏஸ்.நிதுர்சன் 8AB
R.தர்சிகா 8AB
கே.தவாரகன் 8AB
R.விதுரா 8AC
N.அபினயா 8AC

சித்தியடைந்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் ஆலய இரண்டாம் நாள் !(படங்கள்,வீடியோ)

இலங்கையின் ஆறாவது ஈஸ்வர தலமாக விளங்குகின்ற அகிலாண்டேஸ்வரத்தில் அதாவது இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் வருடாந்தமகோற்சவத்தின் சிவன் உறசவத்தின்  இரண்டாம் நாளான நேற்று  27.03.2017 காலை முதல் கிரியைகள இடம்பெற்று  வசந்த மண்டப பூஜையின் பின்   அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்   காமதேனு  வாகனத்திலும்  வினாயகபெருமான்  மூஷிக  வாகனத்திலும்  வீதியுலா  வந்த நிகழ்வு இடம்பெற்றது.