வவுனியா கோவில் குளம் அகிலாண்டேஸ்வரம் எனப்போற்றப்படும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் மூன்றாம் நாளான நேற்று 28-03 -2017 செவ்வாய்கிழமை காலை முதல் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கமலேஸ்வர குருக்கள் தலைமையில் அபிசேகங்கள் நடை பெற்று மதியம் எம் பெருமான் திரு வீதியில் காமதேனு வாகனத்தில் எழுந்தருளிய திருக்காட்சி இடம்பெற்று பகல் திருவிழா நிறைவு பெற்றது.
மீண்டும் மாலை கற்பகதரு காட்சிக்குரிய அலங்காரங்கள் அபிசேகங்கள்மாலை 4.30மணிக்கு ஆரம்பமாகி வசந்தமண்டப பூஜையின் பின் மாலை ஏழு மணியளவில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் கற்பகதருக்காட்சி கொண்டு காமதேனு வாகனத்திலும் விநாயகர் மூஷிக வாகனத்திலும் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் மயில் வாகனத்திலும் திருவீதி உலா வந்த நிகழ்வு இடம்பெற்று திருவிழா இனிதே நிறைவு பெற்றது.
வவுனியா பொது வைத்தியசாலை துணை மருத்துவ சேவையாளர்கள் சங்கம் அடையாள வேலைநிறுத்த போராட்டமொன்றினை மேற்கொண்டுள்ளது.
குறித்த போராட்டம் துணை மருத்துவ சேவையாளர்கள் சங்கத்தினால், தமது ஊழியர்களின் ஏழு கோரிக்கைகளை முன்வைத்து இன்று நாடு தழுவிய ரீதியில் அடையாள வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வவுனியா பொது வைத்தியசாலையின் இன்றைய பணிப்புறக்கணிப்பு காரணமாக வைத்தியசாலையில் மருந்து வழங்கும் நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நோயாளிகள் மருந்தினை பெற்றுக்கொள்ள முடியாமல் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
குறித்த போராட்டத்தில் மேலதிக கொடுப்பனவு மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட ஏழு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்த குறித்த அடையாள வேலைநிறுத்த போராட்டம் இன்று காலை 8 மணியில் இருந்து மாலை 5 மணி வரையில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் வாழ்ந்ததாகக் கருதப்படும் இராட்சத உயிரினமான டைனோசர்களின் படிமங்கள் அவ்வப்போது கண்டுபிடிக்கப்படுகின்றன.
இந்நிலையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட டைனோசரின் கால்தடங்களில் மிகவும் பெரியது எனக் கருதப்படும் கால் தடம் ஒன்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இக் கால் தடமானது அவுஸ்திரேலியாவின் ஜுராஸிக் பார்க் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
குறித்த தடமானது அவுஸ்திரேலியாவின் தெற்கு பகுதியிலிருந்து 25 கிலோ மீற்றர்கள் தொலைவில் காணப்படுவதும், கடலின் உட்பகுதியில் நீட்டப்பட்டிருப்பதுமான நிலப் பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது 1.75 மீற்றர்கள் நீளமானதாக இருக்கின்றது. அதாவது 5 அடி 9 அங்குலமாகும். இது ஏறத்தாழ ஒரு மனிதனின் உயரத்திற்கு சமனானதாகும்.
கொலம்பியாவில் நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்யாமல் மருத்துவர்கள் ஆட்டம் போட்ட வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலாம்பியாவின் போலிவார் பகுதியில் Santa Cruz de Bocagrande என்ற கிளினீக் உள்ளது. இங்கு சமீபத்தில் நோயாளி ஒருவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நோயாளி மயக்க நிலையில் அறுவை சிகிச்சைக்கு தயாராக இருந்த நிலையில், அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய செவிலியர்கள் மற்றும் உடன் இருந்த மருத்துவர்கள் சிரித்துக் கொண்டே ஆட்டம் போட்டுள்ளனர்.
இதை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார். தற்போது அந்த வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இதற்கு அந்த கிளினிக் சார்பில் கூறுகையில், இது போன்ற தவறான செயலில் ஈடுபட்ட ஐந்து பேரையும் நீக்கவிட்டதாகவும், ஒரு உயிரின் நிலைமை உணராமல் அவர்கள் இவ்வாறு செய்துள்ளார்கள். இது ஒரு தவறான செயல் என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த கிளீனிக் துவங்கி ஏழு வருடங்கள் ஆகியுள்ள நிலையில் எந்த ஒரு தவறும் இதுவரை நடந்ததில்லை. இது போன்ற தவறுகள் இனிமேல் நடக்காமல் பார்த்துக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகியதால், பலரும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
பெரு நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு கிளம்பிய பயணிகள் விமானத்தின் இறக்கையில் திடீரென தீப்பற்றி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரு நாட்டின் தலைநகரான Limaவிலிருந்து தெற்கு அமெரிக்காவுக்கு பயணிகள் விமானம் ஒன்று 141 பயணிகளை ஏற்றி கொண்டு கிளம்பியது.
வானத்தில் பறந்து கொண்டிருக்கும் போது விமானத்தின் வலது பக்க இறக்கை திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த விமானி, விமானத்தை அவசர அவசரமாக பெருவின் Jauja நகரில் உள்ள ஒரு சிறிய விமான நிலையத்தை நோக்கி இயக்கினார்.
பின்னர் அங்கு விமானத்தை, விமானி சாதுர்யமாக தரை இறக்கினார். பின்னர் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் நெருப்பு விமானத்தில் முழுவதுமாக பரவுவதற்குள் வேக வேகமாக வெளியேறினார்கள்.
இதுவரை வந்த தகவலின் படி யாருக்கும் பெரிய காயங்கள் ஏற்படவில்லை.
இது குறித்து அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வரும் வேளையில், விமானம் தீப்பற்றி எரியும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
கர்நாடகாவில் ஜோதிடரின் பேச்சை நம்பி 10 குழந்தைகளை பெற்றேடுத்த தந்தையின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணப்பா(47). இவர் பாக்கியம்மா(32) என்ற பெண்ணை 23 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளார்.
திருமணம் செய்த நேரத்தில் ஜோதிடர் ஒருவர் உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தால், வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் என்றும் வசதிகள் பெருகி அமோகமாக வாழ்வீர்கள் என்று கூறியுள்ளார்.
இதனால் அந்த தம்பதிகளுக்கு ஆண் குழந்தை மீது நாட்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கு முதலில் பெண் குழந்தை தான் பிறந்தது. இதைத் தொடர்ந்து அவர்களுக்கு 9 பெண் குழந்தைகள் பிறந்துள்ளது.
இதற்கிடையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆனால் பிறந்த சில மணி நேரங்களிலே அக்குழந்தை இறந்துவிட்டது.
இதைக் கண்ட கிராமத்தினர் அவர்களை கிண்டல் செய்துள்ளனர். உங்களுக்கு தொடர்ந்து பெண் குழந்தை தான் பிறக்கும் என்று கூறியுள்ளனர்.
ஆனாலும் ராமகிருஷ்ணன் திடமாக தனக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் 10வது முறையாக பாக்கியம்மா மீண்டும் கர்ப்பம் அடைந்து, தற்போது ஒரு அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
தங்களின் ஆசை தற்போது நிறைவேறிவிட்டது எனவும், இனிமேல் தங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் என ராமகிருஷ்ணப்பா கூறியுள்ளார்.
இலங்கை போக்குவரத்து பொலிஸாரின் நடவடிக்கையை இலகுபடுத்தும் வகையில் புதிய இயந்திரம் ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.
குடிபோதையில் வாகனத்தை செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நோக்கில் இந்த இயந்திரம் பொலிஸ் நிலையங்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
குடிபோதையில் உள்ள சாரதிகளை கைது செய்யும் போது மேற்கொள்ளப்படுகின்ற மூச்சுக்காற்று சோதனைப் பகுப்பாய்வு அறிக்கையை பெற்றுக் கொள்ளும் செயற்பாட்டினை இலகுபடுத்துவதே இந்த இயந்திரத்தின் நோக்கமாகும்.
அதற்கடைய பிரேடலைஸர் என்ற இந்த இயந்திரம் முதல் முறையாக போக்குவரத்து பிரிவுகளிடம் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த இயந்திரத்தின் செயற்பாடு தொடர்பில் பொலிஸ் போக்குவரத்து அதிகாரிகளுக்கு விழிப்புணர்வூட்டு நடவடிக்கைகள் எதிர்வரும் 30ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
வீதியில் கிடந்த தங்க சங்கலியை கண்டெடுத்த மாணவர்கள் அதனை பாடசாலை அதிபரிடம் ஒப்படைந்துள்ளனர்.
அம்பலந்தொட்டை, டேரபுத்த பாலர் பாடசாலையின் பிரதான நுழைவாயிலுக்கு அருகாமையில் இந்த தங்க சங்கிலி ஐந்தாமாண்டு மாணவர்களினால் மீட்கப்பட்டுள்ளது.
பென்டனுடன் கண்டெடுத்த தங்க சங்கிலியை பாடசாலை அதிபரிடம் ஒப்படைத்துள்ளனர். மாணவர்களின் நேர்மையான குணத்தை கண்டு பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
குறித்த பாடசாலையில் கல்வி கற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவியான என்.ஏ.பியுமி அஹின்சாவினால் தங்க சங்கலி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது மேலும் மூன்று மாணவர்களும் அவருடன் இருந்துள்ளனர்.
கடந்த 18ஆம் திகதி பாடசாலை நேரத்தில் பாடசாலைக்கு அருகில் விழுந்து கிடந்த இந்த தங்க சங்கிலியை மாணவர்கள் பார்த்துள்ளனர். இதனை எடுத்து சென்ற மாணவர்கள் அதிபரிடம் ஒப்படைத்துள்ளனர். அதன் பின்னர் உரிமையாளர்களிடம் இந்த சங்கிலி ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பின்னர் சங்கிலியின் உரிமையாளர் குறித்த மாணவர்களின் நேர்மையை கண்டு பெறுமதியான பரிசு பொருட்களை வழங்கியுள்ளதாக ரெிவிக்கப்படுகின்றது.
இவ்வளவு நேர்மையாக பிள்ளைகளை வளர்ப்பதற்கு பெற்றோர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை மற்றும் இந்த மாணவர்கள் ஏனைய மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாகியுள்ளார்கள் என அதிபர் உட்பட அனைவரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் டெங்கு நோய்க்கு இணையான நோய் மற்றும் இன்புளூயன்ஸா போன்ற வைரஸ் தொற்று ஒன்று தற்போது பரவி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
காய்ச்சல், உடல் வலி, தும்மல், தலைவலி, போன்ற அறிகுறிகள் இந்த நோய்க்கான பொதுவான அறிகுறிகளாகும் என மருத்துவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரத்தம் பரிசோதிக்கும் போது இரத்த எண்ணிக்கை குறைவாக காணப்படலாம். எனினும் சில சந்தர்ப்பங்களில் அது டெங்கு அற்ற வைரஸ் தொற்றாக இருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கைக்குட்டை பயன்படுத்தல், கை முழங்கை, வாய் மற்றும் மூக்கு போன்ற பகுதிகளை மூடிக் கொள்வதன் ஊடாக மற்றுமொறு நபருக்கு தொற்றுவதனை தவிர்க்கலாம் என மருத்துவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
காய்ச்சல் ஏற்பட்டால், ஓய்வு எடுப்பது கட்டாயம் எனவும், பாடசாலை செல்லும் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.
2016ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் நேற்று (28) அதிகாலை பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம் இது வரையில் கிடைக்கபெற்ற தகவலின் அடிப்படையில் ஒன்பது பாடங்களிலும் 9A பெற்று சாதனைப்படைத்த மாணவர்களின் விபரங்கள் இதோ….
01-கொழும்பு மாவட்டம்
கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலயத்தில் 27 மாணவிகள் 9A சித்திகளை பெற்றுள்ளனர்.
கொழும்பு இந்துக் கல்லூரியில் 13 மாணவர்கள் 9A சித்திகளை பெற்றுள்ளனர்.
02-கண்டி மாவட்டம்
கண்டி மஹமாயா மகளிர் பாடசாலையின் எஸ்.எம்.முணசிங்க என்ற மாணவி அகில இலங்கை ரீதியில் 2 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
03-நுவரெலியா மாவட்டம்
கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தை சேர்ந்த மாணவி பரசுராம் மதுரா 9A சித்திகளை பெற்றுள்ளார்.
04-யாழ்ப்பாணம் மாவட்டம்
யாழ்.இந்து கல்லூரி மாணவன் அ.அபிநந்தன் 9 பாடங்களில் A தர சித்தி பெற்று யாழ்.மாவட்டத்தில் முதலாம் இடத்தையும், தேசிய மட்டத்தில் தமிழ் மொழிமூலம் முதலாம் இடத்தினையும், தேசிய மட்டத்தில் 5ஆம் இடத்தினையும் பெற்றுள்ளார்.
05-வவுனியா மாவட்டம்
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் க.பொ.த. சாதாரண தரத்தில் 234 மாணவர்கள் தோற்றிய நிலையில் 10 மாணவர்கள் 9A சித்திகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.
வவுனியா மாவட்டத்தில் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் தமிழ் மொழி மூலத்தில் 9 மாணவிகள் 9 ஏ சித்திகளை பெற்றுள்ளனர்.
அதன்படி, தமிழ் மொழி மூலத்தில் மயூரி பேரின்ப நாயகம், கிசோபிகா சஜரூபன், நிதிகா கரிகரசக்தி, சுஜித்திகா ஜெயபற்றிக் ரஞ்சித், தர்சிகா கிரிதரன், கிருசிகா திருச்செல்வம், சாம்பவி தவராசா, கோபிசாளினி குமாரசிங்கம், லதுசிகா கிருபானந்தம் ஆகிய மாணவிகள் 9 ஏ சித்திகளை பெற்றுள்ளனர்.
இதேவேளை ஆங்கில மொழி மூலத்தில் 9 மாணவிகள் 9 ஏ சித்திகளை பெற்றுள்ளனர்.
அதன்படி சஜனி கணேசலிங்கம், சின்மதி சத்தியலிங்கம், மதுசா ஜெயக்குமார், லபிரா அகிலநாயகம், சங்கவி புவனேசன், சரோனி இவன்சிலின் அன்ரனி ஜெயனாத், அட்சயா சிவபாதசுந்தரம், சரண்ஜா சூரியகுமாரன், குசேதா குகநாதன் ஆகிய மாணவிகள் ஆங்கில மொழி மூலத்தில் 9ஏ பெற்றுள்ளார்கள்.
06-முல்லைத்தீவு மாவட்டம்
முல்லைத்தீவு கல்வி வலயத்திற்குட்பட்ட மு /புதுக்குடியிருப்பு மத்தியக்கல்லூரி மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.
மாணவன் சிவராசா பகீரதன் 9A ஆகியோர் ஒன்பது ஏ சித்திகளை பெற்றுள்ளனர்.
07-கிளிநொச்சி மாவட்டம்
முதல் முறையாக கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயத்தில் இருவர் 9ஏ சித்திகள் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
08-மட்டக்களப்பு மாவட்டம்
மட்டு நகர் சிவாநந்தா தேசிய பாடசாலை மாணவன் நாகராஜன் சொரூபன் 9 பாடங்களிலும் A தர சித்தியினை பெற்று பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமை தேடிக்கொடுத்துள்ளார்.
கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை இந்துக்கல்லூரி வரலாற்றின் முதல் தடவையாக ஐந்து மாணவர்கள் ஒன்பது ஏ சித்திகளை பெற்றுள்ளனர்.
இதில் வி.ஹர்ஷாந், கோ.அனுராஜிதன், ந.அஞ்சனன், க.அஞ்சைகுமார், த.கேந்துஜன் ஆகியோரே ஒன்பது ஏ சித்தி பெற்றுள்ள மாணவர்களாவர்.
08-அம்பாறை மாவட்டம்
சம்மாந்துறை அல்மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியில் அப்துல் றசூல் பாத்திமா றிஸ்தா மற்றும் அமீர்அலி பாத்திமா றொஸ்னி ஆகியோர் 9 A சித்திகளை பெற்றுள்ளனர்.
சம்மாந்துறை முஸ்லிம் தேசிய பாடசாலையில் 14 மாணவர்கள் 9 A பெற்றுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை வலயத்தில் நாவிதன்வெளிக் கோட்டத்தில் இரட்டைச் சகோதரிகள் இருவரும் 9 A சித்திகளைப் பெற்றுள்ளனர்.
றாணமடு இந்து மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த அற்புதராஜா மிராளினி மற்றும் அற்புதராஜா விதுசனா எனும் இரட்டையர்களே இவ்வாறு சித்தியடைந்துள்ளனர்.
குறித்த விபரங்கள் இது வரையில் கிடைக்கபெற்ற தகவலின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வவுனியாவிலிருந்து செட்டிகுளம் செல்லும் இ.போ.ச சாலை பேருந்துகள் சீரில்லை மற்றும் நேரகாலத்திற்குச் செல்வதில்லை என்று தெரிவித்து இன்று (29.03.2017) காலை 7.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியாவிலிருந்து செட்டிகுளம் செல்லும் பேருந்து குறித்த நேரத்திற்குள் செல்வதில்லை. வவுனியாவில் இருந்து 7மணிக்குச் செல்லும் பேருந்து 9 மணிக்கு செட்டிகுளம் செல்கின்றது. இதனால் அரச ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள் தமது கடமைகளை எவ்வாறு சரியாக மேற்கொள்ளமுடியும்?
பாடசாலை செல்லும் மாணவர்கள் சில பாடங்கள் முடிந்த பின்னரே பாடசாலை செல்லவேண்டி எற்பட்டுள்ளது. அதேபோல் அரச ஊழியர்களும் குறித்த நேரத்திற்குள் அலுவலகத்திற்குச் செல்லமுடியவில்லை. இது தொடர்பாக பல தடவைகள் இ.போ.ச. சாலைக்குத் தெரியப்படுத்தியிருந்தோம் எமது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திலும் இது தொடர்பாக தெரியப்படுத்தியிருந்தோம்.
நேரக்கணிப்பாளர் அலுவலகத்திலிருக்கும் தொலைபேசியில் அழைப்பு ஏற்படுத்த முடியாது. வரும் அழைப்பை மட்டுமே பெறமுடியும். பேருந்து வந்தால் செல்லும் என்றும் நேரக்கணிப்பாளர் தெரிவித்துள்ளார். எமக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. அதன் காரணமாகவே இன்று போராட்டம் மேற்கொள்ளவேண்டி ஏற்பட்டுள்ளது என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
இவ்வாறு இன்று மத்திய பேருந்து நிலையத்தில் அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டபோது செட்டிகுளத்திற்கு திடீரென ஒரு பேருந்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டவர்களை விட்டுவிட்டுச் சென்றுள்ளது. அரச ஊழியர்கள் துரத்திச் சென்றும் பேருந்து நிற்காமல் சென்றதைக்காணக்கூடியதாக இருந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இது தொடர்பாக மனு ஒன்றை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரிடம் இன்று கையளிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதேவேளை செட்டிகுளம் பகுதியில் பேருந்து நிலையத்தில் பாடசாலை அதிபர் தலைமையில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. இவ் ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் கிராமசேவையாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
யுக்ரைனைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவர், தனது மகன் உரிய வேளைக்குப் பாடசாலைக்குச் செல்வதை உறுதிப்படுத்துவதற்காக அவனை ஹெலிகொப்டரில் அனுப்பி வைத்துள்ளார்.
யுக்ரைனின் தலைநகர் கீவ் இலுள்ள பாடசாலையின் வெளியிலுள்ள வாகனத் தரிப்பிடத்தில் தரையிறங்கிய ரொபின்சன் ஆர்22 பீட்டார ரக ஹொலிகொப்டரிலிருந்து இச் சிறுவன் வகுப்பறை நோக்கி செல்வதை சிலர் படம் பிடித்துள்ளனர்.
இச் சிறுவன் யுக்ரைனின் முன்னாள் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் அன்ட்ரே பெல்செவ்ஸ்கியின் மகன் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அன்ட்ரே பெல்செவ்ஸ்கி கருத்துத் தெரிவிக்கவில்லை. ஆனால், ஹொலிகொப்டரில் மாணவனை பாடசாலைக்கு அனுப்பி வைத்தமை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பலர் வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்டுள்ளனர்.
வீடியோ கேம்களை (Video Games) விளையாடுபவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் எளிதாக மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த முடியும் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட வீடியோ கேம், குறிப்பாக ரிமைன்டர்கள் கொண்ட கேம்களை விளையாடினால் மன அழுத்தத்தை எதிர்கொள்ள முடியும் என அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
கலிபோர்னியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் 160 மாணவர்கள் 21 வயதிலேயே குறைந்த அளவு மன அழுத்தத்தை எதிர்கொண்டதாகத் தெரிவித்துள்ளனர். இதில் நான்கில் மூன்று பேர் பெண்கள் என்றும் பாதிக்கும் மேற்பட்டோர் ஆசிய பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
ஆறு நிமிடம், மூன்று நிமிடம் என பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள வீடியோ கேம்களை விளையாடும் போது மன அழுத்தத்தை அவர்களால் கட்டுப்படுத்த முடிந்தது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உடலினுள் ஏற்படும் உயிரியல் மாற்றங்களால் மன அழுத்தம் ஏற்படுகிறது என்ற ரீதியில், பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கேம்களை விளையாடும் போது மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த முடிவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
எனினும், இந்த முடிவுகள் தற்காலிகமானது தான் என்றும் இவற்றில் நீண்டகால பயன்கள் இருக்காது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
2016 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளில் அதிசிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று சந்தித்தனர்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று ஜனாதிபதியை சந்தித்த மாணவர்களுக்கு அன்பளிப்புகள் வழங்கி வைக்கப்பட்டன.
உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 35 மாணவர்களும், புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 12 மாணவர்களும் ஜனாதிபதியை சந்தித்திருந்தனர்.
பொஸ்னியாவைச் சேர்ந்த 16 வயதான கெரிம் அஹ்மெட்ஸ்பேஹிக் என்பவர் 35 நொடிகளில் 111 கான்ங்ரீட் பலகைகளை தலையால் உடைத்து உலக சாதனை படைத்துள்ளார்.
டேக்வாண்டோ என்ற தற்காப்புக் கலையைப் பயின்று வரும் இவர், கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறுவதற்காக இந்த முயற்சியை மேற்கொண்டார். இவரது இந்த சாதனை கின்னஸ் பிரதிநிதிகள் முன்னிலையில் நிகழ்த்தப்பட்டது.