தரையிரங்கும் போது பயணிகளுடன் பற்றி எரிந்த விமானம் : காரணம் வெளியானது!!

தெற்கு சூடானில் மோசமான வானிலை காரணமாக தரையிரங்கும் போது பயணிகளுடன் சென்ற விமானம் திடீரென்று தீப்பற்றி எரிந்ததால், அதில் பயணம் செய்த 44 பயணிகள் உயிரிழந்திருக்க கூடும் என்று தகவல்கள் வெளியாகின.

தெற்கு சூடானின் ஜூபாவில் இருந்து வாவு விமான நிலையத்திற்கு தி சவுத் சுப்ரீம் ஏர்லைன்ஸ் க்கு சொந்தமான விமானம் ஒன்று வந்தது.

விமான நிலையத்தில் தரையிறங்கிய போது, திடீரென விபத்துக்குள்ளாகி அந்த விமானம் தீப்பிடித்து எரிந்தது. விமானத்தின் வால்பகுதி மட்டும் தெரியும்படியும், மற்ற பகுதியில் எரிந்த நிலையில் செய்திகள் வெளியாகின.

இதில் 44 பயணிகள் பயணம் செய்ததாகவும், அவர்கள் அனைவரும் இறந்திருக்க கூடும் என்று முதல் கட்டத் தகவல்கள் வெளியாகின.

எனினும் 43 பயணிகள் விமானத்தில் இருந்ததாகவும், இதில் 40 பேர் பெரியவர்கள் என்றும் 3 பேர் குழந்தைகள் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் விமானம் விபத்திற்குட்பட்ட சில மணி நேரங்களில் உடனடியாக செயற்பட்ட மீட்புக்குழுவினர், ஆம்புலன்ஸ் உதவியுடன் அங்கிருந்த பயணிகள் அனைவரையும மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் 25 பேர் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும், மற்றைய 18 பேரும் பாதுகாப்பாக அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இவ்விபத்து மோசமான வானிலை காரணமாகவே ஏற்பட்டதாகவும், தரையிறங்கும் போது எதுவும் சரிவரத் தெரியாத காரணத்தினால ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இதில் பயணிகளுக்கு எந்த ஒரு பெரிய பாதிப்பு ஏற்படவில்லை என்றும், சிறிய அளவிலான காயங்கள் தான் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

HIV தொற்றுக்கு உள்ளானவர்களில் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

HIV யால் பாதிக்கப்பட்டுள்ள ஆண்களின் எண்ணிக்க அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 55 பேர் HIV யால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 30 பேர் ஆண்கள் எனவும் தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சிசிர லியனகே குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த காலப்பகுதியில் HIV யால் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஒப்பீட்டளவில் 2015 ஆம் ஆண்டை விட 2016 ஆம் ஆண்டு HIV யால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் டொக்டர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.

கின்னஸ் சாதனைக்காக 2014 பேர் இணைந்து தரையை சுத்தம் செய்தனர்!!

இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் 2014 பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து ஒரே நேரத்தில் தரையை சுத்தம் செய்துள்ளனர்.

புதிய கின்னஸ் சாதனைக்காக இந் நிகழ்வு நடத்தப்பட்டது. பி.ஜே.பி. கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஆர்.பட்டீலின் பிறந்த தினத்தையொட்டி கடந்த வாரம் இந் நிகழ்வு நடத்தப்பட்டது.

மெக்ஸிகோவில் 2015 நவம்பரில் சுமார் 1000 பேர் ஒன்றிணைந்து தரையை சுத்தம் செய்தமையே தற்போது கின்னஸ் சாதனையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

9 மாணவர்களுடன் மாணவன் செலுத்திச் சென்ற கார் கொழும்பு கறுவாத் தோட்டத்தில் விபத்து!!

கொழும்­பி­லுள்ள பிர­பல பாட­சாலை ஒன்றின் மாணவர் ஒரு­வ­ரினால் அதி­வே­க­மாக செலுத்­தப்­பட்ட மொண்­டெரோ ரக காரொன்று கறு­வாத்­தோட்டம் விளை­யாட்டு மைதானத்­துக்கு அருகில் குடை­சாய்ந்து விபத்­துக்­குள்­ளா­கி­யுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்துள்ளனர்.

விபத்து இடம்பெற்ற போது குறித்த காரி னுள் பாட­சாலை மாண­வர்கள் 10 பேர் பய­ணித்­துள்ள நிலையில் அதில் மூவர் படு­கா­ய­ம­டைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­ற­னர்.

கொழும்பின் பிரபல பாட­சா­லையின் வரு­டாந்த கிரிக்கெட் போட்­டிக்கு ஆத­ரவு தெரி­விக்கும் முக­மாக ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த வாகன ஊர்­வ­ல­மொன்றில் கலந்து கொண்ட காரொன்றே இவ்வாறு விபத்துக்கு ள்ளாகியுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

பஞ்சத்திலா இருக்கின்றாய், பாடகர்களிடம் பணம் கேட்பது கேவலமாக இல்லையா : இளையராஜாவை திட்டி தீர்த்த கங்கை அமரன்!!

இதுவரை சம்பாதித்த பணம் போதாதா? மெல்லிசை பாடகர்கள் சம்பாதிக்கும் பணம் தான் உனக்கு தேவையா? முன்னுரிமை கேட்க வேண்டும் என்பது கேவலமான விடயம். உனக்கு பணம் வேண்டும் என்றால் நான் தருகிறேன். இப்படி அசிங்கமான வேலை செய்யாதே. எப்போது பாடல்கள் எல்லாம் பொதுமக்கள் இடத்தில் வந்ததோ அது அப்பவே பொதுச் சொத்தாக மாறிவிட்டது.

உன்னுடைய பாடல்களை பாடக் கூடாது என்றால் பாடல்களை எல்லாம் ஒரு அலுமாறியில் மூடி அடைத்து விடு. எப்போது தான் திருந்துவாயோ என்று தெரியவில்லை, மெல்லிசை பாடகர்களை பாட வேண்டாம் என்று சொல்ல நீ யார் என இசைஞானி இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன், இளைராஜாவுக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் தன்னுடைய அனுமதி பெறாமல் பாடகர் எஸ்.பி.பி பாடியதால் அதற்கு எதிராக இளையராஜா நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

இளையராஜாவின் சட்ட எச்சரிக்கை கடிதம் கிடைக்கப்பெற்ற நிலையில், மேடைகளில் படுவதற்குள்ள சட்டங்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும், இருப்பினும் சட்டத்தை மதிக்க வேண்டியது தன்னுடைய கடமை என்பதால் இனி வரும் காலங்களில் இடம்பெறும் மேடைநிகழ்ச்சிகளில் இளையராஜாவின் பாடல்களை தான் பாடப்போவதில்லையென எஸ்.பி.பி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இது குறித்கு கருத்து தெரிவித்துள்ள இசைஞானி இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன்,

”நாம் படைத்தது எல்லாம் மக்களுக்காக படைத்து விட்டாச்சு. மக்கள் பாட்டால் மயங்கி கிடக்கின்றார்கள். நாளைக்கு ஒவ்வொரு வீட்டுக்கும் நோட்டிஸ் அனுப்பி ஏன்ட பாட்ட போடாதிங்க, குழந்தைகளை தூங்க விடாதிங்க என ரோயல்டி கேப்பது அசிங்கமானது.

இளையராஜாவின் செயல் முட்டாள்தனமானது. காப்புரிமை கேட்பது அவர் பணம் சம்பாதிக்கவே ஆகும். மக்களை சுதந்திரமாக பாடல் கேட்கட்டுமே. எதற்காக இப்படி செய்கின்றீர்கள். லயிட் மியூசிக் செய்வர்கள் கச்சேரி கிடைக்காமல் தவிக்கின்றார்கள். இந்த பாடல்கள் மூலமே அவர்கள் உழைக்கின்றார்கள். அந்த பணம் உங்களுக்கு வேண்டுமா? அவ்வளவு பஞ்சத்துலையா இருக்கின்றோம். இந்த பணத்தை வாங்கியா பிழைக்க வேண்டும்.

பாடல்களை பாடியவர்கள் அவரின் பாட்டை பாட முன் அனுமதி எதற்காக பெறவேண்டும். இளையராஜா பாடிய தியாகராஜ கீர்த்தனைக்கோ, எம்.எஸ். விஸ்வநாதம் பாட்டுக்கோ முன்னுரிமை வாங்கியா பாடினார்?. தியாகராஜா கீர்த்தனை பாடும் போது தியாகராஜாவுக்கு கப்பம் கட்டினாரா?

மெல்லிசை பாடகர்கள் எல்லாம் பாடல்களை பாடியே சம்பாதிக்கின்றார்கள். அவர்களை பாட வேண்டாம் என்று சொல்வதற்கு நீ யார்?. உன்னுடைய பாடல்களை ஏற்கனவே பணத்துக்கு விற்பனை செய்து விட்டாய். அதற்கான சம்பளத்தையும் பெற்று விட்டாய்.

பாடல்கள் எல்லாம் மக்கள் சொத்தாகிவிட்டது. உனக்கு பணம் தேவை என்றால் நான் தருகிறேன். அசிங்கமான வேலை செய்யாதே. கேவலமாக இருக்கின்றது.

இசை வரலாற்றில் இவ்வாறு நடந்ததில்லை. கார்ல போகும் போது பாட்டு கேட்கலாம். ஆனால் முனுமுனுக்க கூடாது. அவ்வாறு முனுமுனுத்தால் பணம் வேண்டும் என்பது கேவலமான ஒன்றாகும்.

இன்று வெளிப்படையாக கூறுகின்றேன். எம்.எஸ். விஸ்வநாதனின் நிறைய பாடல்களை கொப்பியடித்துள்ளோம். அவருக்கு எதனை கொடுத்தோம். தியாகராஜ கீர்த்தனை, பழைய பாடல்கள், ஸ்ரீ ஜெயராம் பாடல்களை மாற்றி மாற்றி பாடியுள்ளோம். இவர்களுக்கும் பணம் கொடுத்தோமா?.

அகங்காரம் வரக் கூடாது. இசையில் தெய்வமாக பார்க்கும் இவரை, எனது பாட்டை பாட வேண்டாம் வாயை மூடு என கூறுவது அப சகுணமாகும். பணத்துக்காகதான் இதனை செய்கின்றார். இதுவரை சம்பாதித்த பணம் போதாததா? நீ சாப்பிடுறதும் கொஞ்சம் தான். எதற்காக புதிய சட்டங்களை இயற்றுகின்றாய். ஏனையவர்களை முட்டாளாக்காதீர்கள்.

மழை, வெயில் போன்று பாடல்களும் இயற்கையாக கிடைக்க வேண்டும். இசை சரித்திரத்தில் இப்படி நடந்தது இல்லை. இளையராஜாவுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. எப்ப திருந்த போகின்றார் என்று தெரியவில்லை.”

உயிருள்ள மீன்களை குதத்தில் நுழைத்துக் கொண்ட நபர் : குடலுக்குள் மீன் சென்றதால் வைத்தியசாலையில்!!

நபர் ஒருவர் தனது குதத்தில் உயி­ருள்ள இரு மீன்­களை நுழைத்துக் கொண்­ட­தை­ய­டுத்து, அம் மீன்கள் அந்­ ந­பரின் குட­லுக்குள் ஊடு­ரு­விய நிலையில் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது.

45 வய­தான இந்­ நபர், அதிக மது­போ­தையில் இருந்­த­வே­ளையில், இரு சிறிய மீன்­களை தனது குதத்தில் நுழைத்­துக்­கொண்டார் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

உயி­ரு­ட­னி­ருந்த மேற்­படி மீன்­களில் ஒன்று, அந் ­ந­பரின் குடலை சென்­ற­டைந்­தது. இதனால் கடு­மை­யான வயிற்­று­வ­லி­யினால் பாதிக்­கப்­பட்ட மேற்­படி நபர் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டார்.

சீனாவின் தென் பிராந்­தி­யத்­தி­லுள்ள குவாங்ஸோ நக­ரி­லுள்ள வைத்­தி­ய­சா­லை­யொன்றின் வைத்­தி­யர்கள் சத்­தி­ர­சி­கிச்சை மூலம் மேற்­படி மீன்­களை அந் ­ந­பரின் வயிற்­றி­லி­ருந்து அகற்­றினர்.

24 மணித்­தி­யா­லங்­க­ளுக்கு மேலாக மேற்­படி மீன்கள் அந்­ ந­பரின் வயிற்­றுக்குள் இருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. இம் ­மீன்­களில் ஒன்று 4 அங்­குல நீளமும் 0.8 அங்­குல அக­லமும் உடை­யது என மருத்­துவர் ஒருவர் தெரி­வித்­துள்ளார்.

இம்­ மீன்கள் வேறு உறுப்புக்களை அடைந்திருந்தால் அந் நபரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் எனவும் அம் மருத்துவர் கூறியுள்ளார்.

இணைய பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி : நுாறு மடங்கு அதிவேக இணைய சேவை!!

நுாறு மடங்கு அதிவேக இணைய சேவை வழங்கும் புதுவகை வைபையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இன்பாரெட் சிக்னல்களின் உதவியோடு தற்போது இருப்பதை விட அது 100 மடங்கு வேகத்தில் இணைய சேவை பெறமுடியும். புதிய வழிமுறையால் அதிகளவு சாதனங்களுக்கு ஒரே சமயத்தில் இணையத்தில் வழங்க முடியும்.

இன்பாரெட் பயன்படுத்துவதால் இது உடல் ரீதியில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய வைபைக்களில் 2.5 அல்லது 5.0 ஜிகாஹெர்ட்ஸ் ரேடியோ சிக்னல்களை பயன்படுத்துகின்றன. புதிய அமைப்பு இன்பாரெட் அமைப்புகள் 1500 நானோமீட்டர் மற்றும் அதற்கும் அதிகமான அளவுகளை பயன்படுத்துகின்றன.

ஆய்வின் போது சுமார் 2.5 மீட்டர் தொலைவில் நொடிக்கு 42.8 ஜிபி என்ற வேகத்தில் இணையத்தினை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் வழிமுறைகளில் அதிசிறந்த நிலைகளிலும் நொடிக்கு 300 எம்பி என்ற வேகத்தில் மட்டுமே இணையத்தினை பயன்படுத்த முடியும்.

இளம் தாயாகும் 11 வயதுச் சிறுமி!!

இங்கிலாந்து உள்ளிட்ட மேலை நாடுகளில் இளம் வயதிலேயே சிறுமிகள் தாய் ஆகிறார்கள். அந்த வகையில் இங்கிலாந்தில் 11 வயதில் ஒரு சிறுமி குழந்தை பெற தயாராக இருக்கிறார்.

அதே நேரத்தில் பிறக்க இருக்கும் குழந்தையின் தந்தைக்கு இவளை விட ஓரிரு வயதே அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் விரைவில் குழந்தை பெற இருக்கும் 11 வயது சிறுமி இங்கிலாந்தின் இளம் தாய் ஆகிறாள். இதற்கு முன்பு 12 வயதில் குழந்தை பெற்ற தெரசா மிடில்டன் என்ற சிறுமி இளம் தாய் என்ற பட்டம் பெற்றாள்.

கடந்த 2014-ம் ஆண்டு இவள் குழந்தை பெற்றாள். அக்குழந்தையின் வயது 13. தெரசா தற்போது 2-வது குழந்தையை பெற தயாராக இருக்கிறார்.

தன் மீதான பாலியல் வல்லுறவு : 25 ஆண்டுகளாக போராடும் கதாநாயகி!!

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பன்வாரி தேவி, கல்வியறிவு இல்லாதவராகவும், தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும், தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து சுமார் 25 ஆண்டுகளாக போராடி வருகிறார்.

உயர் சாதியை சேர்ந்த அண்டை வீட்டாரால் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட இவர், நீதிக்கான சட்டப்போராட்டதைக் கைவிடத் தயாராக இல்லை.

இவரது வழக்கு, பணியிடத்தில் பாலியல் கொடுமைகள் நடைபெறுவதை தடுக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை உச்சநீதிமன்றம் உருவாக்க அடிப்படையாக இருந்தது. ஆனால், அவரை வன்கொடுமைக்கு ஆளாக்கியவர்கள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை, விசாரணை நீதிமன்றம் நிராகரித்துவிட்ட நிலையில், அவர்கள் சுதந்திரமாக வாழ்கிறார்கள்.

ஆனால், உயர் நீதிமன்றத்தில் பன்வாரி தேவி செய்த மேல்முறையீடு, 22 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கிறது. இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் இரண்டு பேர் இறந்து போய்விட்டனர்.

தற்போது 56 வயதாகும் பன்வாரி தேவி, 1992 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 -ஆம் நாளன்று தனக்கு நிகழ்ந்த கொடுமையான நிகழ்வின் தேதியை நினைவுபடுத்த முடியாவிட்டாலும், அந்தத் தாக்குதலும், அதன் ரணமும் அவர் மனதில் ஆழப் பதிந்துவிட்டது.

ஜெய்ப்பூரில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பட்டேரி கிராமத்தில், சம்பவ தினத்தன்று அந்தி சாயும் பொழுதில் வயலில் வேலை செய்துக் கொண்டிருந்த பன்வாரி தேவியின் கணவரை ஐந்து பேர் தடிகளால் தாக்கத் தொடங்கினார்கள்.

கணவருக்கு உதவி செய்ய அங்கு ஓடிச்சென்று அவர்களிடம் கெஞ்சிய பன்வாரி தேவியை மூன்று பேர் பலாத்காரம் செய்ய, மீதமிருந்த இரண்டு பேர், கணவரை சுற்றிவளைத்துக் கொண்டனர்.

செல்வாக்குமிக்க இனமாகக் கருதப்படும் குஜ்ஜர் இனத்தை சேர்ந்த தாக்குதல்தாரிகள், கிராமத்தில் வசதியானவர்கள். பன்வாரி தேவியும், அவரது கணவர் மோகன்லால் பிரஜாபதியும் தாழ்த்தப்பட்ட சாதியினராக கருதப்படும் குயவர் இனத்தை சேர்ந்தவர்கள்.

சில மாதங்களுக்கு முன்னதாக, குஜ்ஜர் இனத்தை சேர்ந்த ஒன்பது மாத பெண் குழந்தைக்கு நடைபெறவிருந்த திருமணத்தை பன்வாரி தேவி தடுத்ததுதான் அவர்களின் கோபத்திற்கான அடிப்படை காரணம்.

பன்வாரி தேவி, 1985 ஆம் ஆண்டு முதல், மாநில அரசின் மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தில் இணைந்து பணிபுரிந்துவந்தார்.

கிராமங்களில் வீடு-வீடாகச் சென்று, சமூக அநீதிகளுக்கு எதிராகவும், சுகாதாரம், குடும்பக் கட்டுப்பாடு, பெண் குழந்தைகளுக்கு கல்வி வழங்குவது, பெண் சிசுக் கொலை, கருவிலேயே பெண் சிசுக்களை அழிப்பது, வரதட்சணை மற்றும் சிறார் திருமணம் போன்ற சமூக பிரச்சனைகள் தொடர்பான விழிப்புணர்வை அவர் ஏற்படுத்தி வந்தார்.

சிறு வயதிலேயே திருமணம் செய்வது ராஜஸ்தான் மாநிலத்தில் பாரம்பரியமான வழக்கம். பிறந்து சில மாதங்களே ஆன குழந்தைகளுக்கும் திருமணம் செய்வது அங்கு இயல்பான ஒன்று.

பன்வாரி தேவிக்கு ஆறு அல்லது ஏழு வயது இருக்கும் போது, எட்டு வயது சிறுவருடன் திருமணம் நடந்தது.

இந்த பழக்கத்தை மாற்றுவதோ, எதிராகவோ போராடுவதோ பன்வாரி தேவியின் இலட்சியம் அல்ல, அவர் தனது கடமையைத் தான் செய்தார். குஜ்ஜர்களின் விவகாரத்தில் தலையிடுவது, பிரச்சனையை விலை கொடுத்து வாங்குவதற்கு சமம் என்று அவருக்கு தெரியும்.

ஆனால் அந்த சமயத்தில் பன்வாரி தேவியால் வேறு எதுவும் செய்யமுடியவில்லை. குழந்தை திருமணத்தை தடுக்க காவல்துறையிடம் கோரிக்கை வைத்தபோது, அவர்கள் திருமணத்திற்கு வந்து, விருந்து சாப்பிட்டுவிட்டு சென்றுவிட்டார்கள்.

பன்வாரி தேவி தங்களை அவமானப்படுத்திவிட்டதாக குஜ்ஜர்கள் குற்றம் சாட்டிய நிலையில், அடுத்த நாள் நடைபெறவிருந்த திருமணத்தை நிறுத்திவிட்டதால் அவர்களின் கோபம் உச்சத்தை அடைந்தது.

கலாசாரத்தை போற்றும் இந்தியாவில், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானவர்கள், அதை அவமானமாக நினைத்து வெளியில் சொல்லாமல் மறைத்துவிடும் சூழ்நிலை இன்றும் நிலவும்போது, 25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை இன்னமும் மோசமாகவே இருந்தது. ஆனால் பன்வாரி தேவியின் போராட்டத்திற்கு எதுவும் தடையாக இருக்கவில்லை என்று அவருடன் இணைந்து பெண்கள் மேம்பாட்டுத் திட்டத்தில் பணியாற்றிய டாக்டர் ப்ரீதம் பால் கூறுகிறார்.

தனக்கு நடந்த கொடுமை பற்றி புகார் கொடுக்க பொதுமக்களுடன் சென்ற பன்வாரி தேவி, பொய் சொல்வதாக குற்றம் சாட்டப்பட்டார், இரு தரப்பினரிடையே சண்டை மூண்டதாகவும், பாலியல் பலாத்காரம் ஏதும் நடைபெறவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மறுத்தனர். புகாரை நிராகரிக்கும் மனநிலையிலேயே செயல்பட்ட காவல்துறை, புகாரை விசாரிப்பதில் மெத்தனப்போக்கை கடைபிடித்தது.

பலாத்காரம் நடைபெற்றதா என்பதை உறுதி செய்யும் பரிசோதனையானது பலாத்காரம் நடந்த 24 மணி நேரத்திற்குள் நடத்தப்படவேண்டும், ஆனால் பன்வாரி தேவிக்கு 52 மணி நேரத்திற்கு பிறகே பரிசோதனை நடத்தப்பட்டது. அவருக்கு ஏற்பட்ட காயங்களும், சிராய்ப்புகளும், உடல்ரீதியான தாக்குதல் குறித்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை.

உள்ளூர் நாளிதழ்களில் பன்வாரி தேவிக்கு நடந்த கொடுமை குறித்து வெளியான செய்திகளும், மகளிர் அமைப்புகளின் போராட்டங்களுமே சி.பி.ஐ விசாரணைக்கு வழக்கை மாற்றியது.

சம்பவம் நடந்த ஓராண்டிற்கு பிறகுதான் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். குற்றவாளிகளில் ஒருவரான ராம்கரணின் மகளின் திருமணத்தை நிறுத்தியதால் பன்வாரி தேவி பழிவாங்கப்பட்டதை ஏற்றுக்கொண்ட ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிமதி என்.எம் டைப்ரிவால், 1993 ஆம் ஆண்டு அவர்களுக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டார்.

ஆனால் அதற்கு பிறகு பன்வாரி தேவிக்கு எதிராகவே அனைத்தும் நடந்தன. விசாரணையின் போது ஐந்து முறை நீதிபதிகள் மாற்றபட்டனர். 1995 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அளிக்கப்பட்ட தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் வெறும் ஒன்பது மாத சிறை தண்டனையுடன் தப்பித்துவிட்டார்கள்.

கூட்டு பாலியல் வன்கொடுமை என்று நீதிமன்றம் தெளிவாக கூறிய நிலையில், பன்வாரி தேவிக்கு நீதி மறுக்கப்பட்டது, மாநில அரசும் பன

மலைப்பாம்பால் மசாஜ் செய்யும் சிகை அலங்கார நிலையம்!!(காணொளி)

சிகை அலங்கார நிலையத்தில், சிகை அலங்காரம் தவிர்த்து மலைப்பாம்பை கொண்டு கழுத்து மசாஜ் செய்யும் நிகழ்வு ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளது.

ஜேர்மனியின் டிரெஸ்டென் நகரிலுள்ள சிகை அலங்கார நிலையத்தில் வாரத்திற்கு இரண்டு முறை மட்டுறும் எனும் சலுகையில் அடிப்படையில் முன் பதிவுகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு கட்டணமற்ற மலைப்பாம்பின் மூலமான மசாஜ் வழங்கப்பட்டு வருகிறது.

குறித்த மசாஜ் முறையில், மலைப்பாம்பை கழுத்தில் சுற்ற வைத்து மசாஜ் செய்யப்படுவதோடு, கழுத்திலுள்ள தசைப்பிடிப்புகளை நீக்குவதற்கான சிகிச்சை முறையாகவும் செய்யப்படுவதாக சிகை அலங்கார நிலையத்தின் உரிமையாளர் பிராங்க் டோசியன் தெரிவித்துள்ளார்.

மேலும் மாண்டி என பெயரிடப்பட்டுள்ள மலைப்பாம்பானது கடந்த 13 வருடங்களாக மசாஜ் செய்வதற்கு பயன்படுத்தப்படுவதோடு, மசாஜ்ஜிற்கென தனியா கட்டணங்கள் எதுவும் அறிவிடப்படுபவதில்லை எனவும், அனால் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் மாண்டியின் பராமரிப்பிற்காக நாகொடைகள் அளிப்பதாக அதன் உரிமையாளர் பிராங்க் டோசியன் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த சிகை அலங்கார நிலையத்தில் மலைப்பாம்பு மசாஜை ஏராளமான வாடிக்கையாளர்கள் விரும்பி செய்கின்றனர். அத்தோடு தனது இரையை வேட்டையாடும் மலைப்பாம்புகள் அதை பிடித்து உடலை நசித்து கொன்று சாப்பிடும். ஆனால் மனிதர்களை கொல்வது மிகவும் அரிது என அந்நாட்டு பாம்பு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கைவரிசை காட்டியவரை காட்டிக்கொடுத்த சீ.சீ.டீ.வீ!!(வீடியோ)

ஹட்டன் நகரிலுள்ள தொலைத்தொடர்பு நிலையமொன்றில் திருட்டுத்தனமாக தன்னியக்க மீள் நிரப்பு இயந்திரத்தில் தனது கைபேசிக்கு மீள் நிரப்பிய ஒருவரை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்

குறித்த தொலை தொடர்பு நிலையத்தின் நேற்று முன்தினம் (19) இரவு 8.55 பணியாளர்கள் வெளியில் சென்றிருந்த போது அந்த இடத்திற்கு வந்த இளைஞன் ஒருவன் தன்னியக்க மீள் நிரப்பு இயந்திரத்தில் தனது கைபேசிக்கு 500 ருபா மீள் நிரப்பிய காட்சி வர்த்தக நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டீ வி கமராவில் பதிவாகியிருந்தது

சம்பவம் தொடர்பில் தொலைத்தொடர்பு நிலைய உரிமையாளரினால் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் நேற்று (20) இரவு 8 மணியளவில் அதே தொலைத்தொடர்பு நிலையத்திற்கு வந்த குறித்த இளைஞன் தொடர்பில் சந்தேகம் கொண்ட உரிமையாளர் உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவரை தடுத்துவைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

 

கொழும்பில் இடம்பெறும் காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்துக்கு ஆதரவு!!

 
சமவுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு பதில் கூறு, பயங்கரவாதச் சட்டத்தை இரத்துச் செய் ஆகிய தமிழ் பேசும் மக்களின் முக்கிய பிரச்சினைகளை முன்னிறுத்தி சமவுரிமை இயக்கம் முன்னேடுக்கும் போராட்டத்திற்கு புதிய ஜனாநாயக மாக்சிச லெனினிசக் கட்சி தன்னுடைய முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளது.

இப் போராட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்திவேல் மற்றும் கட்சியின் ஆதரவாளர்களுடன் போராட்டக்கரர்களுக்கு ஆதரவு வழங்கினர். அத்துடன் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பும் தன்னுடைய ஆதரவை தெரிவித்தது.

ஈரானில் சுனாமி : நகரத்தை மூழ்கடித்த கடல் நீர் : அதிர்ச்சி வீடியோ!!

ஈரான் நாட்டை சுனாமி ஆழிப்பேரலைகள் தாக்கியுள்ள சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானில் தெற்கு பகுதியில் உள்ள Dayyer நகரத்தை சுனாமி தாக்கி மூழ்கடித்தது.

குறித்த வீடியோ பேரலைகள், கட்டிடங்களை தகர்த்துக்கொண்டு நகரத்திற்குள் செல்கிறது. மக்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடுகின்றனர். தற்போது, Dayyer நகரம் மூழுவதும் கடல் நீர் சூழ்ந்துள்ளது.

நீரில் உயிரிழந்த 40 வயதுடைய நபரின் உடல் மீட்க்கப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுனாமியில் சிக்கி நான்கு சுற்றுலா பயணிகளும், நான்கு வயது சிறுவன் ஒருவனும் காணாமல் போயுள்ளனர். 17 பேர் பலத்த காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படாத நிலையில் சுனாமி கடற்கரையை தாக்கியதில் மீன் பிடி படகுகள் பயங்கர சேதமடைந்துள்ளது.

தற்போது, மீட்புக்குழுவினரும், நீச்சல் வீரர்களும் காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுனாமி தாக்கும் என்று ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிறிய தவறினால் பல்கலைக்கழக வாய்ப்பை இழந்த மாணவி!!

பல்கலைக்கழகத்திற்கு செல்வதற்கான அனைத்து தகுதிகள் இருந்த போதிலும், மாணவி ஒருவருக்கு அந்த வாய்ப்பு கைநழுவி போயுள்ளது.

தெஹிஅத்தகண்டிய, சிறிபுர பிரதேசத்தை சேர்ந்த ஹசினி சந்தமாலி விஜேரத்ன என மாணவியே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

குறித்த மாணவி கலைபிரிவில் உயர்தரம் பரீட்சை எழுதியுள்ள நிலையில் அவர் பல்கலைக்கழகத்திற்கு செல்வதற்கான தகுதியையும் பெற்றுள்ளார்.

எனினும் பல்கலைக்கழக விண்ணப்பத்திற்காக சமர்ப்பித்த விண்ணப்ப பத்திரத்தில் காணப்பட்ட சிறிய குறைப்பாடுகள் காரணமாக அவர் பல்கலைக்கழக வாய்ப்பை இழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

“நான் இணையம் ஊடாக அனுப்பி வைத்த விணப்ப பத்திரத்தில் இரண்டாம் பக்கம் காணப்படவில்லை என எனக்கு கடிதம் ஒன்று பல்கலைக்கழக ஆணைக்குழுவிடம் இருந்து கிடைத்தது.

மீளவும் பிழைகளை சரிபார்த்து 7 நாட்களுக்குள் மீண்டும் அனுப்பி வைக்குமாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், கடிதம் 6வது நாளே எனக்கு கிடைத்ததது.

நான் மீண்டும் ஒரு நாளுக்குள் பிழைகளை திருத்தி விண்ணப்பத்திரத்தை அனுப்பி வைத்தேன். எனினும் இம்முறை அந்த விண்ணப்பத்திரம் நிராகரிக்கப்பட்டது.

நான் கொழும்பிற்கு நேரடியாக சென்று இதற்கான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்துவிட்டு வந்தேன். எனினும் சில காலங்களின் பின்னர் எந்த விண்ணப்பத்தை ஆராய்ந்து பார்க்க முடியாதென கடிதம் ஒன்று வந்தது.

தொழில்நுட்பத்தின் பிழை காரணமாக ஏற்பட்ட இந்த தவறை மன்னித்து மீண்டும் தனக்கு பல்கலைக்கழத்திற்கு செல்லும் வாய்ப்பை வழங்குமாறு குறித்த மாணவி கண்ணீருடன் கேட்டுக் கொண்டுள்ளார்.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டம் 25ம் நாளாக தொடர்கின்றது!!

 
வவுனியாவில் கடந்த 25 நாட்களாக தமது போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (20.03.2017) 25வது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக்கோரியும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் அவசரகாலச்சட்டத்தினை நீக்குமாறு கோரி தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் நடைபெற்ற மென்பந்து சுற்றுப்போட்டியில் நியூசன் விளையாட்டுக்கழகம் வெற்றி!!

 
வவுனியா நெளுக்குளம் சாம்பல் தோட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று(19.03.2017) இடம்பெற்ற மலைமகள் விளையாட்டு கழகம் (MCC) விளையாட்டு கழகம் ஏற்பாட்டில் அணிக்கு 6பேர் கொண்ட மென்பந்து சுற்றுப்போட்டியில் நியூசன் விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்று வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்துள்ளனர்.

இறுதிப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிப்பெற்ற நியூசன் அணியினர் துடுப்பாட்டத்தை தெரிவு செய்து 65 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தனர்.

ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக களம் இறங்கிய தனுசன் மற்றும் அருளானந் 62 ஓட்டங்களை ஆரம்ப அதிககூடிய இணைப்பாட்டமாக இவ்மைதானத்தில் பதிவுசெய்தனர் மேலும்
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய MCC அணியினர் ஆரம்பத்திலிருந்தே நியூசன் அணியினரின் பந்திற்கு நெருக்கடிகளை கொடுத்த போதும் வசிகரன் மற்றும் செல்வா ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சுகளால் 23 ஓட்டங்களால் நீயூசன் அணியினர் வெற்றிபெற்று வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்துள்ளனர்

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 29 ஓட்டங்களை பெற்ற அருளானந் பெற்றதுடன், தொடர் ஆட்டநாயகனாக 72 ஓட்டங்களை பெற்ற தனுசன் தெரிவு செய்யப்பட்டார். மேலும் இப்போட்டிகளில் 26 இற்கு மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.