ஈழத்தமிழ் பெண்ணின் ஆய்வுக்கட்டுரைக்கு அமெரிக்காவில் விருது!!

போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இரசாயன ரீதியாக என்னென்ன தாக்கங்கள் இருக்கும், என்னென்ன இரசாயனப் பொருட்கள் இருக்கும் என ஈழத்தமிழ்ப்பெண் தயாரித்த ஆய்வுக்கட்டுரை சிறந்த ஆய்வுக்கட்டுரையாக அமெரிக்க நிறுவனத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில், வல்வெட்டித்துறை இலக்கணாவத்தையைச் சேர்ந்த இலக்கியா – சிதம்பரநாதனே இச்சாதனையை படைத்துள்ளார்.

க.பொ.த. உயர்தரம் வரை உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் கல்வி கற்றிருந்த இலக்கியா பங்களாதேஷில் BSC பட்டப்படிப்பையும், ஹொலண்டில் Environmental Technology இல் Msc உயர் பட்டப்படிப்பையும் மேற்கொண்டுள்ளார்.

இதேவேளை அவரின் ஆய்வுக்கட்டுரைக்கு அமெரிக்காவை தளமாக கொண்டியங்கும் The Sustainability Research Network நிறுவனமே இவ்விருதினை வழங்கியுள்ளது.
குறித்த நிறுவனத்தினால் சர்வதேச மட்டத்தில் பெறப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளில் 12 ஆய்வுக் கட்டுரைகள் இறுதிச் சுற்றுக்கு தேர்வாகியிருந்தது.

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இரசாயன ரீதியாக என்னென்ன தாக்கங்கள் இருக்கும், என்னென்ன இரசாயனப் பொருட்கள் இருக்கும் என மற்றைய போர் நடந்த நாடுகள் தொடர்பாக ஆய்வு செய்திருந்தார்.

அந்த இரசாயனப் பொருட்களை செயற்கையாகவும் இயற்கையாகவும் எப்படி அழிக்கலாம் என்ற தீர்வையும் முன் வைத்திருந்த ஆய்வுக்கட்டுரைக்கே சர்வதேச அளவில் பிரபலமான இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, டென்மார்க் நாட்டில் சமர்பித்து அங்கிருந்து தேர்வாகியே அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டு இந்த விருது கிடைத்துள்ளது.

இதையடுத்து அவுஸ்திரேலியாவில் குறித்த கட்டுரையை சமர்ப்பிக்க அவர் அழைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வவுனியா நோக்கி பயணித்த வாகனம் கோர விபத்து : சாரதி சம்பவ இடத்திலேயே பலி!!(படங்கள்)

இன்று (20.03.2017) மாலை 4.30 மணியளவில் பூணாவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் சாரதி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

ரம்பாவ பகுதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த பட்டா ரக வாகனமே இவாறு மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் பட்டா வாகனத்தின் சாரதி ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

கல்குனாமடு பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய அபல் தாரக்க சஞ்சீவ விமலசேன என்பவரே பலியான சாரதி என தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விபத்தானது சாரதி தூக்க மயக்கத்தில் மரத்துடன் மோதியதால் இடம்பெற்றதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பாரிய நெருக்கடிக்குள் சிக்கியுள்ள இலங்கை ரூபாய்!!

ரூபாயின் பெறுமதியை தற்போது பாதுகாப்பது என்பது பாரிய சிக்கலான விடயமாக மாறியுள்ளதாக மத்திய வங்கித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாளுக்கு நாள் குறைவடைகின்றமை மற்றும் அந்நிய செலாவணியின் வெளியேற்றம் அதிகரித்துள்ளமையினால் ரூபாயை பாதுகாப்பது என்பது பாரிய சிக்கலான மாறியுள்ளது.

அதற்கயை கடந்த வருடம் நவம்பர் மாதம் வரை நேரடி வெளிநாட்டு முதலீடு 444.5 மில்லியன் டொலர் வரை வீழ்ச்சியடைந்துள்ளது. இது நூற்றுக்கு 34.4 வீத வீழ்ச்சியாகும்.

இதேவேளை அரசாங்க பத்திரங்களில் வெளிநாட்டு முதலீடுகள் மீண்டும் வெளியேறும் வேகம் அதிகரித்துள்ளது.

2016ஆம் ஆண்டும் அரசாங்க பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டிருந்த 324.3 மில்லியன் அமெரிக்க டொலர் மற்றும் இந்த வருடம் பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி வரை 309.2 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளன.

அதற்கமைய அரசாங்க பத்திரங்களில் வெளிநாட்டவர்களின் முதலீடுகளின் அளவு தற்போதுவரையில் நூற்றுக்கு 4.4 வீதம் வரை குறைவடைந்துள்ளதாக வங்கி தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, இந்த வருடம் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி வரை கொழும்பு பங்குச்சந்தையின் இரண்டாம் நிலை சந்தையில் நிகர கொடுப்பனவு 2 மில்லியன் அமெரிக்க டொலர் என குறிப்பிடப்படுகின்றது.

தெற்காசியாவில் முதல் முறையாக இலங்கையில் 5G தொழில்நுட்பம்!!

5G தொழில்நுட்பம் இதுவரையிலும் அறிமுகம் செய்யவில்லை என்றாலும் உலகம் முழுவதும் பரீட்சித்து பார்க்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதற்கமைய தெற்காசியாவின் முதலாவது 5Gயின் புதிய மையத்தை உருவாக்குவதற்காக இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது.

தொலைத் தொடர்பாடல் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சு மற்றும் மொபிடெல் நிறுவனத்துடன் இணைந்து எரிக்ஸன் நிறுவனம் தெற்காசியாவின் முதலாவது 5G மையம் உருவாக்குவதற்கான ஒத்துழைப்புக்கு முன்வந்துள்ளது.

5Gயின் புதிய மையத்தினுள் உள்நாட்டு தகவல் தொழில்நுட்ப திறன்கள் மற்றும் திறமைகள் மேலும் வளர்ச்சியடையும் என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இலங்கையை டிஜிட்டல் மற்றும் திறன் மையம் கொண்ட சமூகமாக மாற்றுவதன் ஊடாக அதிக தொழில் வாய்ப்புகளுக்கு செல்ல முடியும் என அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உடல் எடை குறைய வேண்டுமா : இந்த நீரை குடியுங்கள்!!

எலுமிச்சைப் பழத்தில் நமது உடல் நலத்தை பாதுகாக்கக் கூடிய ஆரோக்கியமான சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. கிருமி நாசினியாக பயன்படும் எலுமிச்சைப் பழத்தில் கால்சியம், பொட்டாசியம், விட்டமின் C, நார்ச்சத்து, சிட்ரிக் அமிலம் போன்ற சத்துக்கள் அதிகமாகக் காணப்படுகிறது.

எலுமிச்சைப் பழத்தில் மட்டுமில்லாமல் அதனுடைய தோலில் கூட அதிக நன்மைகள் உள்ளது. எனவே எலுமிச்சைப் பழத்தை தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைத்து, பின் அதை குளிரவைத்து அதனுடன் சிறிதளவு தேன் கலந்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அதனுடைய முழுமையான சத்துக்களும் நமக்கு கிடைக்கும்.

எலுமிச்சைப் பழம் வேகவைத்த தண்ணீரைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

நமது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, பல நோய்களின் தாக்கம் ஏற்படாமல் தடுத்து, நமது உடம்பிற்கு போதுமான ஆற்றலை கொடுத்து, புத்துணர்ச்சியுடன் இருக்கச் செய்கிறது.

நமது உடலின் மெட்டாலிசத்தை சீராக்கி, செரிமானம் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் நமது உடம்பின் pH அளவை நிலைப்படுத்துகிறது.

தினமும் காலையில் இந்த எலுமிச்சை நீரைக் குடித்து வருவதால், நமது உடலில் இருக்கும் நச்சுக்களை முழுமையாக வெளியேற்றி, உடலை எப்போதும் சுத்தமாக வைக்கிறது.

உடல் பருமன் அதிகமாக இருப்பவர்கள், தொடர்ந்து காலையில் குடித்து வந்தால், அவர்களின் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைத்து, விரைவில் உடல் எடையைக் குறைக்கிறது.
மன அழுத்தம் அதிகமாக இருக்கும் போது, எலுமிச்சை பழத்தினை வேகவைத்த நீரை ஒரு டம்ளர் குடித்தால் போதும். மன அழுத்தம் குறைந்து, மகிழ்ச்சியுடன் இருக்கலாம்.
எலுமிச்சை பழம் போட்டு வேகவைத்த நீரை மீண்டும் சூடுபடுத்த தேவையில்லை. குளிரவைத்துக் குடித்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.

அஸ்வின் மரணம் விபத்தல்ல : திட்டமிட்ட கொலை?

கார் பந்தய வீரர் அஸ்வின் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கார் விபத்தில் கருகி உயிரிழந்தது திட்டமிட்ட கொலை என்றக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நேற்று முன்தினம் அதிகாலையில் சென்னை பட்டினம்பாக்கம் அருகில் பிரபல கார் பந்தய வீரர் அஸ்வின் சுந்தர் மற்றும் அவரது மனைவி நிவேதா காரில் செல்லும் போது திடீரென்று விபத்து ஏற்பட்டு இருவரும் எரிந்து சாம்பலானார்கள்.

கார் பந்தய வீரரான அஸ்வின், ஓராண்டிற்கு முன்னர்தான் நிவேதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் சொகுசு காரில் எம்.ஆர்.சி. நகரில் அருகில் சென்றுக் கொண்டிருந்த போது கார் திடீரென்று தீப்பிடித்து பற்றி எரிந்தது.

இதில் காரில் இருந்து தப்ப முடியாத அஸ்வின் மற்றும் நிவேதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்கள். 3 மணி நேரமாக காருக்குள் உயிரோடு எரிந்து கருகிய நிலையிலேயே அவர்களது உடல் மீட்கப்பட்டது.

இந்த திடீர் சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்துள்ள அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இந்த விபத்து திட்டமிட்ட கொலையாக இருக்க வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர்.

கார் மோதிய விதம், தீப்பிடித்து எரிந்த நிலை உள்ளிட்டவற்றை சிலர் சந்தேகத்தோடே பார்க்கின்றனர். அஸ்வின் ஒரு கார் பந்தய வீரர் என்பதால் சாதாரணமாக சாலையில் செல்லும் போது கட்டுப்பாட்டை இழக்காமல்தான் செல்வார்.

அதுவும் மனைவியுடன் செல்லும் போது இன்னும் எச்சரிக்கை உணர்வுடன் செல்லும் அஸ்வினுக்கு விபத்து நடந்திருக்க வாய்பில்லை என்கிறார்கள் நண்பர்கள்.

சொகுசு காரில் அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் வசதிகளும் செய்யப்பட்டிருக்கும் நிலையில், அஸ்வின் கார் தீப்பிடித்தது எப்படி?

அப்படியே தீப்பிடித்தாலும் அதில் தப்பி வருவதற்கான வழிகள் என்ன ஆனது? இப்படி ஏகப்பட்ட கேள்விகளை உறவினர்கள் அடுக்கிக் கொண்டே செல்கின்றனர்.

இந்த கேள்விகள் எல்லாம் ஒரு புறம் இருக்க, அவர் சென்ற பார்ட்டியில் என்ன நடந்தது என்பதுதான் முக்கியமான கேள்வி.

அஸ்வின் யார் கொடுத்த பார்ட்டியில் தனது மனைவியுடன் கலந்து கொண்டார் என்றும் அங்கு யார் யாருடன் என்னென்ன பேசினார் என்பது பற்றி எல்லாம் தீர விசாரித்தால் பல உண்மைகள் வெளியே வரும் என்று அஸ்வினின் நண்பர்கள் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

விமானத்தில் உயிருக்கு போராடிய 262 பயணிகள்!!

பிரித்தானியாவின் லண்டனில் இருந்து புறப்பட்ட விமானத்தில் திடீரென்று ஏற்பட்ட தொழில் நுட்ப பிரச்சனை காரணமாக விமானத்தில் இருந்த பயணிகள் எந்த ஒரு விபரீதமும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக பிரார்த்தனை செய்துள்ளனர்.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டன் ஸ்டான்ஸ்டெட் விமானநிலையத்தில் இருந்து போலாந்தின் ரிஷிசவ் பகுதிக்கு போயிங் 767 என்ற விமானம் சென்றுள்ளது. இந்த விமானத்தில் சுமார் 262 பயணிகள் மற்றும் 10 விமான பணியாட்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விமான புறப்பட்டுச் சென்ற போது திடீரென்று தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. அதாவது விமானத்தில் இருக்கும் ஒக்ஸிஜன் தரும் கருவி செயல் இழந்துவிட்டதால், விமானத்தில் ஒக்ஸிஜனின் அளவு குறைந்துள்ளது.

இதனால் பயணிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக அவர்களுக்கு விமானத்தில் அவசர கால கட்டத்தில் பயன்படுத்தப்படும் ஒக்ஸிஜன் மாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் உயிருக்கு பயந்த அவர்கள் எப்படியாவது நல்ல நிலையில், விமான தரையிரங்கிவிட வேண்டும் என்றும் யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்கு தொடர்ந்து பிரார்த்தனை செய்தபடியே இருந்துள்ளனர்.

அதன் பின்னர் விமானம் பத்திரமாக நெதர்லாந்தில் உள்ள அம்ஸிடர்ம் விமானநிலையத்தில் அவசரமாக தரையிரக்கப்பட்டது. இதில் பயணிகள் அனைவருக்கும் எந்த காயங்கள் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

சென்னையில் பரிதாபமாக பலியான இலங்கைப் பெண் : சித்தப்பா உருக்கம்!!

பிரபல கார்பந்தய வீரர் அஸ்வின் மற்றும் அவரது மனைவி நிவேதா ஆகியோர் சென்னை பட்டினப்பாக்கத்தின் அருகே காரில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாரத விதமாக விபத்து ஏற்பட்டு கார் எரிந்து சம்பவ இடத்திலே பரிதாபமாக பலியாகினர்.

அஸ்வின் சுந்தர் தந்தையின் பெயர் சண்முகசுந்தர் என்றும் வேலூரில் லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

தாயாரின் பெயர் லதா எனவும் இவர் காட்பாடி பஞ்சாயத்து தலைவராக இருந்துள்ளார் என்றும் இவர்களது ஒரே மகன் தான் அஸ்வின் சுந்தர் எனவும் கூறப்படுகிறது.

மேலும் நிவேதா இலங்கையை பூர்வீகமாக கொண்டவர். இவருடைய பெற்றோர் குமரன், ஷகிலா கொழும்பில் வசிக்கிறார்கள். நிவேதா மருத்துவம் படிப்பதற்காக சென்னை வந்தார். போரூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பு படித்துவந்தார்.

அப்போது மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நிகழ்ச்சியில் அஸ்வின் சுந்தரும், நிவேதாவும் சந்தித்துக் கொண்டதாகவும், முதல் சந்திப்பிலே இருவருக்கும் காதல் ஏற்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

அதன் பின்னர் இவர்கள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் திகதி திருமணம் செய்து கொண்டனர் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் அஸ்வினின் சித்தப்பா கணேஷ் இது குறித்து கூறுகையில், நிவேதா மருத்துவப் படிப்பை முடித்தவுடன் தேனிலவு கொண்டாட இருவரும் முடிவு செய்தனர். நிவேதா மருத்துவப் படிப்பை சில நாட்களுக்கு முன்பு நிறைவு செய்தார். இதையடுத்து அஸ்வின் சுந்தரும், நிவேதாவும் ஒரு வாரத்தில் வெளிநாடு சென்று தேனிலவு கொண்டாட திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் அதற்குள் இருவரும் இந்த உலகை விட்டே சென்றுவிட்டனரே என்று மிகவும் மனவேதனையுடன் கூறியுள்ளார்.

உறைபனியினால் முற்றாக மூடப்பட்ட வீடு!!

 
அமெ­ரிக்­கா­வி­லுள்ள வீடொன்று உறை­ப­னி­யினால் முற்­றாக மூடப்பட்­டி­ருப்­பதை புகைப்­படக் கலைஞர் ஒருவர் படம்­பி­டித்­துள்ளார். நியூ யோர்க் மாநி­லத்தில் ஒன்­ட­ரியோ ஏரிக்கு அருகில் இவ்­வீடு உள்­ளது.

கடும் குளி­ரான கால­நி­லைக்கு மத்­தியில் இந்த வீட்டை முற்­றிலும் உறை­பனி மூடி­யி­ருந்­தது. கடந்த வாரம் இவ்­வீட்டை படம்­பி­டித்த ஜோன் குக்கோ இது தொடர்­பாக கூறு­கையில், இப்­படம் உண்­மை­யா­னது என நம்­பு­வ­தற்கு சமூக வலைத்­த­ளங்­க­ளி­லுள்ள பலர் மறுக்­கின்­றனர்.

நான் முழு வீட்டின் மீதும் ஏதோ நுரையை தெளித்­து­விட்டேன் என அவர்கள் கரு­து­கின்­றனர். எனத் தெரி­வித்­துள்ளார்.

நியூயோர்க் மாநி­லத்தின் மேற்குப் பகு­தியில் கடந்த வாரம் பனிப்­புயல் கார­ண­மாக 200,000 பேர் மின்­சா­ரத்தை இழந்­தி­ருந்­தனர். இவ்­வார முற்பகுதியிலும் பல்லாயிரக் கணக்கானோருக்கு மின்சாரம் கிடைக்கவில்லை.

பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதை பொலிஸ் நேர்காணலில் அம்பலமாக்கிய இளைஞன் கைது!!

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தான் பெண் ஒரு­வரை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தி­யதை, பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் பணிக்­கான நேர்­முகத் தேர்­வின்­போது தற்­செ­ய­லாக ஒப்­புக்­கொண்ட நிலையில் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

மேற்கு வேர்­ஜீ­னி­யாவைச் சேர்ந்த 21 வய­தான டெய்லர் றே பிறைஸ் எனும் இந் ­நபர், பெண் ஒரு­வ­ருடன் இரவு நேரத்தில் மது­பானம் அருந்­திய பின், அப் பெண் மயக்­க­ம­டைந்­தி­ருந்த வேளையில், அவரின் சம்­ம­த­மின்றி பாலியல் உறவு கொண்­டாராம். அத்­துடன் இக்­ காட்­சியை செல்­போனில் படம்­பி­டித்து வைத்­தி­ருந்­த­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

நேர்­முகத் தேர்­வுக்குச் சென்­றி­ருந்த வேளையில் பொலிஸ் அதி­காரி ஒரு­வ­ருடன் உரை­யாடிக் கொண்­டி­ருந்த இந்த இளைஞர், தான் பெண் ஒரு­வ­ருடன் மது­பானம் அருந்­திய பின் அவ­ருடன் பாலியல் உறவு கொண்­ட­தாக தெரி­வித்­தி­ருந்தார். அக் ­காட்­சியை படம்­பி­டித்து வைத்­தி­ருப்­ப­தையும் அவர் ஒப்­புக்கொண் டார்.

இரு வாரங்­களின் பின்னர், மேற்­படி யுவ­தி­யிடம் பொலிஸார் வாக்­கு­மூலம் பெற்­றனர். டெய்லர் றே பிறை­ஸுடன் பாலியல் உறவில் ஈடு­ப­டு­வ­தற்கு இப் பெண் சம்­மதம் தெரி­வித்­தி­ருந்­தாரா என பொலி­ஸாரால் வின­வப்­பட்­டது.

டெய்லர் றெ பிறை­ஸுடன் பாலியல் உறவில் ஈடு­ப­டு­வ­தற்கு தான் சம்­மதம் தெரி­விக்­க­வில்லை எனவும், உண்­மையில் அவ­ருடன் தான் பாலியல் உறவில் ஈடு­பட்ட விட­யமே பொலிஸார் கூறும் வரை தனக்குத் தெரியாது எனவும் அப் பெண் கூறினார். அதையடுத்து, டெய்லர் றெ பிறைஸை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

புகையில்லை, மாசு கிடையாது : பட்டரியால் இயங்கக்கூடிய பறக்கும் கார் அறிமுகம்!!(வீடியோ)

சுவிட்சர்லாந்தின் தலைநகரான ஜெனிவாவில் அதிநவீன வாகனங்களை அறிமுகப்படுத்தும் மாபெரும் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.

இந்த கண்காட்சியில் இடம்பெற்ற ‘பொப் அப் சிஸ்டம்’ (Pop. Up System) என்ற பெயர் கொண்ட பறக்கும் காரின் வடிவமைப்பு பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

சிறிய ரக காராக தோற்றமளிக்கும் இந்த ‘பொப் அப் சிஸ்டம்’ சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத முறையில் பேட்டரியால் இயங்கக் கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்ட அதிநவீன தொழில்நுட்பத்துடன் இயங்கும் இந்த கார் ஓசையோ, புகையோ இல்லாமல் சாலையில் எழிலாக வழுக்கிச் செல்கிறது.

சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் வேளையிலும், செல்ல வேண்டிய தூரத்தை மிக வேகமாகக் கடந்து செல்ல வேண்டும் என்று கருதும் நேரத்திலும், ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா விமானம் மூலம் இந்த காரை குட்டி விமானமாக மாற்றி, பறந்து செல்லலாம்.

வானத்தின் வழியாக பறந்து செல்ல சுலபமான பாதை எது என்பதை இந்த காரில் உள்ள கம்ப்யூட்டரே தீர்மானித்துக்கொள்ளும்.

இதற்காக, வானத்தில் வட்டமடித்தபடி வரும் ஆளில்லா விமானம் சாலையில் நிற்கும் ‘பொப் அப் சிஸ்டம்’ காரின் மேல் அமர்ந்துகொள்ளும்.

இந்த காரின் பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் சாலையில் சுமார் 60 கிலோமீட்டர் தூரம் வரை தொடர்ந்து செல்ல முடியும் என்பது மேலும் ஒரு சிறப்பம்சமாகும்.

காரின் உடல் பகுதியை சக்கரங்களில் இருந்து தனியாக பிரித்தெடுத்து பறந்து செல்ல முடியும் என இந்த பறக்கும் கார்களைத் தயாரிக்கும் ஆராய்ச்சியில் கூட்டாக ஈடுபட்டுவரும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த எயார்பஸ் மற்றும் இத்தாலி நாட்டைச் சேர்ந்த இட்டால்டிசைன் ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த பொறியியலாளர்கள் கருதுகின்றனர்.

2030 ஆம் ஆண்டளவில் உலகம் முழுவதும் ஏற்படவுள்ள வாகனப்பெருக்கம் காற்று மாசுபாடு ஆகியவற்றை கருத்திற்கொண்டு இத்தகையை கார்களை விரைவில் உருவாக்கும் முயற்சிகளும் ஆராய்ச்சிகளும் படுவேகமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மூழ்கிய டைட்டானிக் கப்பலை அருகில் சென்று பார்ப்பதற்கு வாய்ப்பு!!(படங்கள்)

 
மூழ்கியிருக்கும் டைட்டானிக் கப்பலைப் பார்ப்பதற்கான திட்டங்களில் களமிறங்கியுள்ளது ஒரு சுற்றுலா நிறுவனம்.

உலகத்தின் பெரிய கப்பலாகக் கருதப்பட்ட டைட்டானிக், 1912 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் தென் கடலோரப் பகுதியில் அமைந்திருக்கும் சௌதாம்டனிலிருந்து, நியூயார்க்கிற்கு பயணித்த போது, உடைந்து மூழ்கியதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் நடந்து ஏறக்குறைய 100 வருடங்களுக்கு மேலாகிவிட்டது, ஆனால் அந்த கப்பலின் மீதுள்ள பிரியமும், சுவாரஸ்யங்களும் இன்னும் குறையவில்லை.

இதற்காகவே டைட்டானிக் கப்பல் கதை, திரைப்படமாக வெளிவந்து மேலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இங்கிலாந்தில் செயற்பட்டுவரும் ப்ளூ மார்பிள் எனும் தனியார் சுற்றுலா நிறுவனம், கடலில் மூழ்கியுள்ள டைட்டானிக் கப்பலை, அருகில் சென்று சுற்றிப்பார்க்க ஏற்பாடு செய்து வருகிறது.

நியூஃபவுன்லாந்து பகுதியில் இருந்து ஹெலிகொப்டர் மூலம் பறந்து அதன்பின் அந்தக் குழுவால் அமைக்கப்பட்டுள்ள பாய்மரப்படகு ஒன்றில் இறங்கி, பிறகு நீர்மூழ்கி கப்பல் மூலம் டைட்டானிக் மூழ்கியுள்ள பகுதி வரை, பயணிகளை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கப்பலின் முக்கிய பகுதிகள் அனைத்தையும் உரிய வல்லுனர்களால் சுற்றிக் காண்பிக்கவும் ஏற்பாடு செய்துள்ளனர். கோடை விடுமுறையை டைட்டானிக்குடன் கொண்டாட, அடுத்த ஆண்டு மே மாதம் வரை காத்திருக்க வேண்டும்.

தற்போது 9 பயணிகளுக்காக மட்டுமே இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதன்பின், இரண்டாவது குழுவினரை 2019 ஆம் ஆண்டு அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் ப்ளூ மார்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொடூர தாயை தேடிவரும் பொலிஸார் : காணொளி இணைப்பு!!

தனது 5 வயதான மகனை, நடு வீதியில் வைத்து கொடூரமான முறையில் கயிற்றினால் கட்டி கொடுமைப்படுத்திய தாயை பொலிஸார் தேடிவரும் சம்பவம் தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளது.

பேங்கொக்கிற்கு அருகிலுள்ள நொந்தபுரி மாகாணத்தின் பிரதான உணவு நகரத்தில், ஒரு தாய் தனது 5 வயதே ஆன மகனை கொடூரமான முறையில் தாக்குவதோடு, சிறுவனின் தலையை அழுத்தி, அவனால் மூச்செடுக்க முடியவில்லை என அலறிய போதும் கயிற்றால் கட்டி தண்டனை கொடுத்த சம்பவத்துடன் தொடர்புடைய காணொளி வெளியாகியுள்ள நிலையில் குறித்த தயை தேடி வருவதாக தாய்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த தாய் மன இரக்கமின்றி சிறுவனை தாக்கி, கயிற்றில் கட்டியுள்ள சம்பவமானது, அத்தாயிற்கு இருதயம் இல்லை என்பதை உணர்த்துவதாக அந்நாட்டு பொலிஸ் அதிகாரி கருத்து தெரிவித்துள்ளார்.

அத்தோடு குறித்த சிறுவன் தன்னால் மூச்செடுக்க முடியவில்லை என அறிவித்த நிலையிலும், அதை ஒருவர் படமெடுத்துள்ளதோடு, சிறுவனுக்கு உதவாமல் இருப்பது வேதனையான விடயமெனவும், இருப்பினும் குறித்த காணொளியை கொண்டு சம்பவம் இடம்பெற்ற பகுதியை அடையாளம் கொண்டுள்ளதோடு, தாயை தேடும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளதாக பொலிஸ் உயரதிகாரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் புதிய நோய் : எச்சரிக்கையாக இருக்க அறிவுரை!!

யாழ்ப்­பா­ணத்தில் ஒரு­மா­த­கா­ல­மாக புதியதொரு­ சு­வாசம் தொடர்­பு­பட்ட நோய் ­ப­ர­வி­வ­ரு­வ­தாக யாழ். போதனா வைத்திய­சா­லை­யின் ­வெ­ளி­நோ­யாளர் பிரி­வு ­பொ­றுப்­பு­ வைத்­திய அதி­காரி வைத்­தியர் ஜமு­னாநந்தா தெரி­வித்துள்ளார்.

அத்­துடன் இந்­நோ­யி­னால் ­ச­ரா­ச­ரி ­யாக­ நாௌான்றுக்கு 1000 பேர் வரை ­யில்­ சி­கிச்­சைக்­காக ­வந்­து­செல்­வ­தா­க­வும் ­தெ­ரி­வித்­துள்ளார். இந்­நி­லையில் இந்­நோயின் தாக்கம் தொடர்­பா­கவும், அதனை தவிர்ப்­ப­தற்­கா­ன­வ­ழி­மு­றை­கள்­தொ­டர்­பா­க­வும்­வைத்­தி­யர்­ஜ­மு­னாந்­தா­கே­ச­ரி­வா­ர­வெ­ளி­யீட்­டிற்­கு­தெ­ரி­வித்­த­தா­வது,

தற்­போது அண்­மை­யா­ன­ஒ­ரு­மா­த­கா­ல­மா­க­பு­தி­ய­ஒ­ரு­நோய்­ப­ர­வி­வ­ரு­கின்­றது. இந் நோயா­ன­து­இன்­பு­ளு­வன்­ஸா­வை­ர­ஸால்­ஏற்­ப­டு­கின்­றது. இதனால் சரா­ச­ரி­யா­கயாழ். போதனா வைத்­தி­ய­சா­லை­யின்­வெ­ளி­நோ­யா­ளர்­பி­ரிவில்400 பேர் வரை­யில்­சி­கிச்­சைக்­கா­க­வ­ரு­கை­த­ரும்­நி­லை­யில்­தற்­போ­து­இவ்­எண்­ணிக்­கை­ஆ­யி­ர­மாக அதி­க­ரித்­துள்­ளது.

இந் நோயின்­தாக்­க­மா­ன­து­வித்­தி­யா­ச­மா­ன­தா­க­உள்­ளது. குறிப்­பாக இந்­நோ­யின்­அ­றி­கு­றி­யா­க­தொ­டர்ச்­சி­யா­ன­காச்சல், உடல் வலி, சளி, தும்மல் காணப்­ப­டல்­போன்­ற­அ­றி­கு­றி­கள்­தென்­படும். குறிப்­பாக இந்­நோ­யின்­அ­றி­கு­றியும், டெங்கு நோயின்­அ­றி­கு­றி­யும்­ஒ­ரே­மா­தி­ரி­யா­க­இ­ருப்­ப­தால்­மக்­கள்­இந்­நோ­யை­டெங்­கு­நோ­யா­க­த­வ­றா­க­நி­னைக்­கும்­சந்­தர்ப்­பங்­க­ளும்­உண்டு.

ஒரு­வ­ருக்கு இந்­நோய்­கா­ணப்­ப­டும்­போ­து­அ­வ­ர­து­தும்­ம­லா­லே­யே­இந்­நோ­யாய்­மற்­றை­ய­வர்­க­ளுக்­கு­தொற்­று­கின்­றது. அதா­வது ஒரு­வர்­மற்­ற­வ­ருக்­கு­எ­தி­ரா­க­தும்­மும்­போ­து­அ­வ­ர­து­தும்­ம­லில்­இ­ருந்­து­மற்­ற­வ­ருக்­கு­சிந்­தும்­ச­ளி­யால்­இந்­நோய்­ப­ர­வு­கின்­றது.

இந் நோயா­ன­து­கு­ழுந்­தைகள் மற்­றும்­வ­ளர்ந்­த­வர்­க­ளில்­ச­ள­ரோ­க­நோ­யா­ளர்கள், கர்­ப­வ­திகள், அஸ்மா நோயா­ளிகள், போன்­ற­வர்­களை அதி­கம்­தாக்­கு­கின்­றது. இந்­நி­லையில் இந்­நோ­யால்­பா­திக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கு­நீர்­ரா­காரம், நீர்­சத்து நிறைந்­த­உ­ண­வு­கள்­கொ­டுக்­க­வேண்­டி­ய­து­டன்­வைத்­தி­ய­சா­லைக்­கு­வ­ரு­ப­வர்­க­ளுக்­கு­அ­வர்­க­ளின்­நோ­யின்­தாக்­க­அ­ள­வை­பொ­றுத்­து­சி­கிச்­சை­வ­ழங்­கப்­பட்­டு­வ­ரு­கின்­றது.

இவ்­வா­றான நிலை­யில்­இந்­நோ­யி­னை­த­விர்க்­க­வேண்­டு­மா­யின்­தற்­போ­தை­ய­சூழ்­நி­லை­யில்­அ­தி­க­ள­வா­ன­ச­ன­நெ­ருக்­கம்­நி­றைந்­த­இ­டத்­திற்­கு­செல்­வ­தை­த­விர்க்­க­வேண்டும். ஏனெ னில்­சு­வா­சம்­தொ­டர்­பா­ன­நோ­யா­த­தால்­அ­தி­க­ள­வா­ன­மக்­கள்­நெ­ரி­ச­லா­ன­இ­டத்­தில்­இந்­நோய்­ப­ர­வு­வ­து­இ­ல­கு­வா­ன­தா­க­இ­ருக்கும். மேலும் ஒரு­வர்­தும்­மும்­போ­து­மற்­றை­ய­வ­ருக்­கு­எ­தி­ரே­தும்­மா­து­இ­ருக்­க­வேண்டும். இந் நோயின்கிருமியானதுசுமார்ஒருமீற்றர்வரைதொற்றிக்கொள்ளும்தன்மையுடையதாகும்.

அத்துடன் ஒருவர் தும்மும்போது கைக்குட்டைகளை பயன்படுத்துவதுடன் சளி ஏற்படும்போது அதற்காக பயன்படுத்தப்படும் துண்டுகளை பின்னர் தீயிட்டு எரிக்கவேண்டும். இதேபோன்று கைகளை நன்கு சுத்தமான நீரில் சவர்காரம்இட்டு கழுவிய பின்னரே எந்தவிதமான வேலைகளையும் செய்யவேண்டும்.

இவற்றினூடாகவே இந்நோயின் தாக்கத்தைகட்டுப்படுத்தமுடியும். இவற்றைவிட இந்நோய் தொடர்பான அறிகுறிகள் காணப்படுமாயின் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைகளுக்கு சென்று வைத்தியரின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளவேண்டும் எனவும் வைத்தியர் ஜமுனாந்தா மேலும் தெரிவித்திருந்தார்.

வவுனியாவில் பாடசாலையில் இருந்து கைக்குண்டு மீட்பு!!

 
வவுனியாவிலுள்ள பாடசாலை ஒன்றிலிருந்து இன்று (20.03.2017) பிற்பகல் 3.30 மணியளவில் கைக்குண்டின் சிதறல் துண்டுகள் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

வவுனியா தாண்டிக்குளம் பிறமண்டு வித்தியாலயம் பாடசாலையிலிருந்து இன்று (20.03.2017) காலை 9 மணியளவில் பாடசாலையில் மாணவர்கள் வகுப்பறைக்கு முன்பாக சிறிய மதில் அமைப்பதற்காக கிடங்கு வெட்டியபோது அதற்குள் வெடிகுண்டின் வெடித்த பகுதி துண்டுகள் காணப்பட்டுள்ளது.

இதையடுத்து பாடசாலை நிர்வாகத்தினால் வவுனியா குற்றத்தடுப்பு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் இன்று (20.03.2017) பிற்பகல் விசாரணைகளை மேற்கொண்டதுடன் விஷேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டு இன்று மாலை பாடசாலைக்கு சென்ற விஷேட அதிரடிப்படையினர் அப்பகுதியில் மேலும் கிடங்குகளை அகலமாக தோண்டியபோதும் அதற்குள் வெடித்த வெற்றுத்துண்டுகள் மீட்கப்பட்டதுடன் ஆபத்துக்கள் எதுவும் இல்லை என்று பொலிசார் தெரிவித்தனர்.

மீட்க்கப்பட்ட கைக்குண்டின் சிதறல் துண்டுகளை விஷேட அதிரடிப்படையினர் எடுத்துச் சென்றுள்ளனர். இப் பாடசாலை வளாகத்தினுள் கடந்த யுத்தகாலத்தில் இரானுவ முகாம் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

20 ஆண்டுகளில் இல்லாத வெள்ளம் : 72 பேர் பலி!!(வீடியோ)

பெரு நாட்டில் கடந்த இரண்டு தசாப்தங்களில் ஏற்பட்டுள்ள மோசமான வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் குறைந்த 72 பேர் பலியாகியுள்ளதாக இதுவரை தெரியவந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல நாட்களாக பெய்த கன மழையால் ஆறுகள் நிரம்பி பல பகுதிகளில் நிலச்சரிவை ஏற்படுத்தியது. 800க்கும் மேலான நகரங்களில் அவசரக் கால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது; தலைநகர் லிமாவில் திங்கட்கிழமையிலிருந்து குடிநீர் கிடைக்கவில்லை.

கடலின் வெப்பநிலை அதிகரிப்பதால், நீராவியாதல் அதிகரித்து கனமழையை பொழியச் செய்யும் நிகழ்வாக கருதப்படும் எல் நினோ என்னும் பாதிப்பால், பெரு மற்றும் பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள நாடுகள் இந்த ஆண்டின் கோடைக் காலத்தில் நிலையற்ற வானிலையை சந்தித்து வருகின்றன.