காக்கா முட்டை நடிகையின் தவத்துக்கு இப்போது தான் வரம் கிடைத்திருக்கிறது. நன்றாக நடிக்கத் தெரிந்த நடிகை என்று பெயரெடுத்த பிறகும் கூட நடிகையால் பெரிய ஹீரோக்கள், பெரிய இயக்குநர்கள் படங்களில் நடிக்க முடியவில்லையே என்ற வருத்தம் இருந்துகொண்டே இருந்தது.
இருந்தாலும் வாய்ப்பு வரட்டுமே என்று காத்திருந்தார்.
காத்திருப்புக்கு பலனாக மதுபான நடிரை ஸ்டைலிஷ் இயக்குநர் இயக்கும் படத்தில் ஹீரோவுக்கு ஜோடியாகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இந்த ரோலுக்காக நடிகையை அணுகிய இயக்குநர் ´சம்பளம் எவ்வளவு வேண்டும்´ என்று கேட்க உங்க படத்துல நடிக்க எதுக்கு சார் சம்பளம் என்று கேட்டு சம்பளமே வேண்டாம் என்று ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார்.
வவுனியா பொதிமண்டப (குட்சைட் வீதி) வீதியிலுள்ள களஞ்சிய சாலை நேற்று (19.03) இரவு உடைக்கப்பட்டு பெறுமதியான பணம், காசோலை கொள்ளையிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்த மேலும் தெரியவருகையில்,
நேற்று முன்தினம் சனிக்கிழமை தமது கடமைகளை நிறைவு செய்த பின்னர் இரவு 8.30 மணியளவில் குறித்த களஞ்சியசாலையினை மூடிவிட்டுச் சென்றுள்ளனர் பணியாளர்கள்.
நேற்று ஞாயிற்றுக்கிமை விடுமுறை என்பதால் களஞ்சியசாலையில் பணிகள் எதுவும் இடம்பெறவில்லை. இன்று (20.03.2017) காலை 7.30 மணியளவில் களஞ்சியசாலையினை திறந்பதற்குச் சென்ற ஊழியர் களஞ்சியசாலை உடைக்கப்பட்டு திருட்டு போயுள்ளது தெரியவந்துள்ளது.
இதையடுத்து களஞ்சியசாலை உரிமையாளரூடாக வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த களஞ்சியசாலையிலிருந்து வட்டவல தேயிலை, பால் பைக்கற் போன்றவற்றை வியாபார நிலையங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
குறித்த களஞ்சியசாலை நேற்று இரவே உடைக்கப்பட்டுள்ளதாகவும், களஞ்சியசாலையிலிருந்து 43 ஆயிரம் முதல் 45 ஆயிரம் ரூபா வரையான பணம், காசோலை இருந்துள்ளதாகவும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா, ஓமந்தை, விளக்குவைத்தகுளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று இனந்தெரியாத நபர்களால் தீ வைத்து எரியூட்டப்பட்டுள்ளது. இன்று(20.03.2017) அதிகாலை 3 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டில் உள்ள தாழ்வாரத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வீட்டு உரிமையாளர்கள் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது வீட்டு வளவுக்குள் நுழைந்த இனந்தெரியாத நபர்கள் மோட்டர் சைக்கிளை தீ வைத்து எரியூட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
மோட்டார் சைக்கிள் பெற்றோல் தாங்கி எரிந்து வெடித்த சத்தம் கேட்டு எழுந்த வீட்டுக்காரர் மற்றும் அயல் வீட்டுக்காரார் தீயைக் கட்டுப்படுத்தமுயன்ற போதும் அது வெற்றியளிக்கவில்லை.
இது தொடர்பில் ஓமந்தை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வவுனியா – யங்ஸ்ரார் உதைப்பந்தாட்ட அணித்தலைவர் மீது வவுனியா, பட்டானிச்சூர் பகுதியில் வைத்து இளைஞர் குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று இரவு 9.40 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும், படுகாயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, வைரவபுளியங்குளம் யங்ஸ்ரார் விளையாட்டுக் கழகத்தின் உதைப்பந்தாட்ட அணித்தலைவர் இ.கார்த்திகேயன் (வயது 29) நகரில் இருந்து சென்ற போது வவுனியா, பட்டானிச்சூர் பகுதியில் வைத்து இளைஞர் குழு ஒன்றினால் வழிமறித்து தாக்கப்பட்டுள்ளதுடன் அவர் அணிந்திருந்த சங்கிலியும் திருடப்பட்டுள்ளது.
இதனையடுத்து காயமடைந்த குறித்த நபர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா உதைப்பந்தாட்ட சம்மேளனத்தால் தடை செய்யப்பட்ட உதைப்பந்தாட்ட அணி ஒன்றின் உறுப்பினர்களே மேற்படி தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா மத்திய பேருந்து தரிப்பிடத்தில் வைத்து நபர் ஒருவர் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..
கிளிநொச்சிப் பகுதியிலிருந்து ஒரு கிலோ 700 கிராம் கேரள கஞ்சாவினை பொதி செய்து எடுத்து வந்த மொனாராகல பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் இன்று (19.03.2017) மதியம் 1 மணியளவில் மத்திய பேருந்து நிலையத்தில் வைத்து வன்னிப் பிராந்தியப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் செயற்படும் போதை ஒழிப்பு பிரிவிற்கு கிடைத்த தகவல் அடிப்படையில் குறித்த நபரைக் கைது செய்துள்ளதாகவும் வவுனியா மத்திய பேருந்து நிலையத்திலிருந்து வெளிமாவட்டத்திற்குச் செல்ல முற்பட்டபோது கைது செய்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 4 விக்கட்டுக்களால் வெற்றிபெற்று பங்களாதேஷ் அணி தனது வரலாற்று டெஸ்ட் வெற்றியை பதிவு செய்துள்ளது.
இன்று நிறைவுக்கு வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி பங்களாதேஷ் அணிக்கு நூறாவது போட்டியாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது இன்னிங்சில் 191 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கில் விளையாடிய பங்களாதேஷ் அணி 4 விக்கட்டுகளால் இலங்கையினை வீழ்த்தி தனது வரலாற்றில் இந்த டெஸ்ட் போட்டியினை பதிவுசெய்தது.
இதற்கு முன்னர் ஒருபோதும் பங்களாதேஷ் அணி டெஸ்ட் போட்டியொன்றில் இலங்கையை அணியினை வெற்றிகொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பங்களாதேஷ் அணியின் பிரதான மற்றும் துடுப்பாட்ட பயிற்சியாளர்களாக இலங்கை வீரர்களாக சந்திக ஹத்துருசிங்க மற்றும் திலான் சமரவீர ஆகியோர் செயற்படுகின்றனர்.
நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மாணித்து களமிறங்கியது. அதன்படி முதல் இன்னிங்சில் இலங்கை அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 338 ஓட்டங்களை பெற்றது.அதற்கு பதிலளித்தாடிய பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்சில் 467 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
தனது இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய இலங்கை அணியினை பங்களாதேஷின் பந்து வீச்சாளர்கள் தடுமாற செய்ய சகல விக்கட்டுகளையும் இழந்து 319 ஓட்டங்களை பெற்று கொண்டது. இதில் இலங்கை அணி சார்பாக கருணாரத்ன 126 ஓட்டங்களை பெற்றுகொடுத்தார்.
இதன்படி 191 என்ற வெற்றியிலக்கை நோக்கி கடைசி நாளான இன்று களமிறங்கிய பங்களாதேஷ் அணியின் தமிம் இக்பாலின் 82 ஓட்டங்களினால் பலமடைந்து 6 விக்கட்டுக்களை இழந்து தனது வரலாற்று போட்டியில் வரலாற்று சாதனையினை படைத்துள்ளமை பங்களாதேஷ் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
குறித்த போட்டியில் பங்களாதேஷ் அடைந்த வெற்றியினால் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரினை 1-1 என பங்களாதேஷ் அணி சமநிலை செய்துள்ளது.போட்டியின் ஆட்டநாயகனாக பங்களாதேஷ் அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரரான தமிம் இக்பால் தெரிவுசெய்யப்பட்டார்.
Sri Lankan Test captain Rangana Herath (L) and Bangladesh Test captain Mushfiqur Rahim pose for photographers with the series trophy after Bangladesh’s victory over Sri Lanka by four wickets on the fifth and final day of the second and final Test cricket match between Sri Lanka and Bangladesh at The P. Sara Oval Cricket Stadium in Colombo on March 19, 2017. The rare win, Bangladeshs only fourth away from home and first ever against Sri Lanka in 18 attempts, helped them finish the two-Test series 1-1 after a 259-run loss in the opening Test in Galle. / AFP PHOTO / Ishara S. KODIKARA (Photo credit should read ISHARA S. KODIKARA/AFP/Getty Images)
வவுனியா வைரப்புளியங்குளம் குளக்கட்டு வீதியில் பாதீனியச் செடிகள் தோட்டம் போன்று வளர்ந்து காணப்படுகின்றது.
வைரவப்புளியங்குளத்தில் இருந்து பண்டாரிகுளம் நோக்கிச் செல்லும் ஆதிவிநாயகர் ஆலயம் அருகில் உள்ள குளக்கட்டு வீதியில் பரவலாக பாதீனியம் செடிகள் வீதியால் பயணிப்பவர்களை மறைக்கும் அளக்கு உயரமாக வளர்ந்துள்ளது. இதனால் பாடசாலை செல்லும் சிறிய மாணவ, மாணவிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதுடன், அச் செடி வேகமாக பரவலடைந்தும் வருகின்றது.
வவுனியா நகருக்கு அண்மித்ததாகவுள்ள இப்பகுதியில் உள்ள பாதீனியச் செடிகளை அகற்றுவதற்கு உரியவர்கள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமையால் அந்தச் செடிகள் தற்போது தோட்டச் செய்கை போன்று வளர்ந்து உயர்ந்து காட்சியளிப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியலாய கேட்போர் கூடத்தில் இன்று (19.03.2017) பிற்பகல் 3 மணியளவில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோஹண புஸ்பகுமார தலைமையில் வன்னி மாவட்டம், கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி மக்கள் சேவை தொடர்பான தேசிய நிகழ்ச்சித்திட்டம் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கே.காதர் மஸ்தான், சிவசக்தி ஆனந்தன், சாள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண சபை உறுப்பினர் ஜெயதிலக, மேலதிக அரசாங்க அதிபர், வன்னி மாவட்ட பிரதேச செயலாளர்கள், கணக்காளர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள், கிராமசேவையாளர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகதர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
வவுனியாவில் கடந்த 24 நாட்களாக நாளாக தமது போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (19.03.2017) 24வது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக்கோரியும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் அவசரகாலச்சட்டத்தினை நீக்குமாறு கோரி தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
இப் போராட்டத்திற்கு ஆதரவினை வழங்குமாறு போராட்டக்காரர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கின்றனர்.
வவுனியாவில் 24ஆவது நாளாக தமது போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (19.03.2017) 24வது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
இவ் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று (19.03.2017) மதியம் 2.30 மணியளவில் வவுனியா மாவட்ட இளைஞர்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடைபெறும் இடத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வீதியில் இருக்கும் தாய்மாரின் கண்ணீருக்கு பதில் என்ன? , அரசே காணாமல் ஆக்கப்படோருக்கு பதில் கூறு, அனைத்து அரசியல் கைதிகளையும் உடனே விடுதலை செய் என பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் கவனயீர்ப்புப் போராடத்தில் ஈடுபட்டனர்.
பிரபல கார் பந்தய வீரர் அஸ்வின் சுந்தர் கார் விபத்துக்குள்ளானதற்கு, அதிக பாதுகாப்பு வசதியே காரணம் என பொறியாளர் ஆர். ராஜீ கூறியுள்ளார். அவர் கூறியதாவது,
அஸ்வின் சுந்தர் ஓட்டிச்சென்றது ‘பி.எம்.டபிள்யு இசட் 4’ வகை கார். இருவர் மட்டுமே அமர்ந்து செல்லக்கூடிய சொகுசு கார்.
இதன் விலை 70 லட்சம் முதல் 1 கோடி வரை உள்ளது. பொதுவாக, இசட் 4 வகை கார்கள் அதிக பாதுகாப்பு அம்சங்கள் கொண்டவை. அதுதான் தற்போது அவர்களது உயிரைப் பறித்தது என்று கூறலாம்.
தற்போது விற்பனைக்கு வரும் ஆடி, பிஎம்டபிள்யு போன்ற சொகுசு கார்கள் விபத்துக் குள்ளானால், திறந்துகொள்ளாத அளவுக்கு கதவுகள் தானாகவே ‘லொக்’ ஆகும்.
காற்றுப் பைகளும் (ஏர்பேக்) உடனடியாக திறந்துவிடும். இதனால் கார் எப்படி உருண்டாலும்உள்ளே இருப்பவர்களுக்கு அடிபடாது.
அஸ்வின் காரும் இதேபோல விபத்துக்குள்ளானதும், கதவுகள் தானாகவே ‘லொக்’ ஆகி, காற்றுப்பைகள் திறந்துவிட்டன.
எதிர்பாராதவிதமாக காரில் தீ பிடித்துக்கொண்டதால், வெளியே வரமுடியாமல், பரிதாபமாக தீயில் சிக்கி இறந்துள்ளனர்.
விபத்தில் சிக்குபவர்களுக்கு 10 விநாடிகள் வரை தங்களுக்கு என்ன நடக்கிறது என்பதையே உணர முடியாது. மற்றவர்கள் உதவிக்கு வந்தால் மட்டுமே அவர்களைக் காப்பாற்ற முடியும்.
காரில் ஏன் தீ பிடிக்கிறது?
காரின் முன் பகுதியில் ஏராளமான மின் வயர்கள் இருக்கும். விபத்து ஏற்படும்போது இந்த வயர்கள் சேதம் அடைந்து தீப்பிடிக்கும்.
முன் பகுதியில் மின் விளக்குகள், பட்டரி, ஏசி மெஷின் என எளிதில் தீப்பிடிக்கக் கூடிய கருவிகள் அதிகம் இருப்பதால், மோதிய வேகத்தில் உடனே தீப்பிடித்துக் கொள்ளும். அஸ்வின் காரில் பெட்ரோல் டேங்க்கும் வெடித்ததால், கார் முழுவதுமாக எரிந்துவிட்டது.
5 விநாடிக்குள் 100 கி.மீ. வேகம்
அஸ்வின் கார் இன்ஜின் 2,979 சிசி சக்தி கொண்டது. புறப்பட்ட 5 விநாடிகளுக்குள் 100 கி.மீ. வேகத்தை எட்டிவிடும்.
ஸ்போர்ட்ஸ் மொடல் கார் என்பதால் தரையை ஒட்டியவாறு இருப்பதுபோல வடிவமைக்கப்பட்டிருக்கும். இங்குள்ள சாலைகளில் இதை ஓட்டுவதே கடினம்.
சாதாரண வேகத்தடையில்கூட காரின் அடிப்பகுதி சாலையில் உரசும். இதனால் அதிவேகத்தில் சென்றபோது காரின் அடிப்பகுதி வேகத்தடையில் உரசி கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.
கொட்டதெனியாவ பிரதேசத்தில் திடீரென சுகவீனமடைந்த யுவதி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
22 வயதான இந்த யுவதியை காதலன் ஏமாற்றி விட்டு கைவிட்டுச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. கல்வி கற்று வந்த இந்த யுவதியும் முகநூல் மூலம் அறிமுகமான இளைஞரும் காதலித்து வந்துள்ளனர்.
இவரும் சுமார் இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். மேற்படி சம்பவம் நடப்பதற்கு இரு வாரங்களுக்கு முன்னர் இளைஞர், யுவதியுடனான காதல் தொடர்பை துண்டித்துள்ளார்.
யுவதிக்கு ஏற்பட்ட சுகவீனம் காரணமாக யுவதியின் தாய் அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். யுவதியை பரிசோதனை செய்த போது யுவதி கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் தங்கொட்டுவ பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து யுவதியின் தாய் கொட்டதெனியாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எய்ட்ஸ் தொற்று தொடர்பில் சிறுவன் ஒருவர், பாடசாலை வாய்ப்பை இழந்திருந்த சம்பவம் ஒன்று இதற்கு முன்னர் ஊடகங்களில் வெளியாகியிருந்தது.
அதே போன்றதொரு சம்பவம் மீண்டும் கனேமுல்ல பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. தாய் எயிட்ஸ் நோய் தொற்றுக்கு உள்ளாகியமையால், மாணவி ஒருவர் பாடசாலை வாய்ப்பை இழக்க காரணமாகியுள்ளது. கனேமுல்ல குடாபொல்லத்த கல்லூரியிலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்த பாடசாலையில் கல்வி கற்ற மாணவியின் தாய் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் பாடசாலையின் ஆசிரியர், அதிபர் மற்றும் ஏனைய மாணவர்களின் பெற்றோர்கள், குறித்த மாணவிக்கு எதிராக கடுமையான எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
இதன்காரணமாக குறித்த மாணவியை பாடசாலைக்கு வருவதனை தவிர்த்துக் கொள்ளுமாறு அதிபர் மற்றும் ஆசிரியர் அறிவித்துள்ளனர்.
தனது மகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் ஆராய்வதற்காக அந்த மாணவியின் தாயார் ஊடகவியலாளர் குழுவொன்றை அழைத்துக் கொண்டு பாடசாலைக்கு சென்றுள்ளார்.
பாடசாலைக்கு சென்ற அவரால் அதிபரை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொள்ள இயலவில்லை. ஊடகவியலாளர்களுக்கு எதிர்ப்பு வெளியிட்ட ஆசிரியர்கள், அதிபர் பாடசாலையில் இல்லை என தெரிவித்துள்ளனர்.
பின்னர் மாணவி மற்றும் அவரது தாயார் Positive woman network என்ற நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியுடன் பாடசாலைக்கு சென்ற போதிலும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கு அவருக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
வடமாகாணத்தில் வட்டிக்கு கடன்பெற்று, அதனை மீள செலுத்த முடியாமையால் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
யுத்தத்தின் பின்னர் வடபகுதி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் இதுவரை மேற்கொள்ளாமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
கைத்தொழில் மற்றும் பயிர்செய்கை நடவடிக்கைகளுக்காக பல்வேறு நிதி நிறுவனங்கள் அதிக வட்டிக்கு கடன் வழங்குகின்றன.
விசேடமாக யுத்தம் காரணமாக கணவர் மற்றும் குடும்பத்தின் ஆண்களை இழந்த பெண்களே இவ்வாறு அதிகமாக தற்கொலை செய்துக் கொள்கின்றனர்.
கடந்த ஜனவரி மாதம் கைத்தொழிலுக்காக கடன் பெற்றுக் கொண்ட 32 வயதுடைய 4 பிள்ளைகனின் தாயான பெண் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
அவர் முல்லைத்தீவு, விஸ்வமடு பிரதேசத்தில் வாழ்கின்ற நிலையில் சிறிய வர்த்தக வங்கி மற்றும், நிதி நிறுவனங்களில் சிறிய அளவு கடன் பெற்றுள்ளார்.
செலுத்த வேண்டிய கடன் மற்றும் வட்டிப்பணமாக 80 ஆயிரம் ரூபாய் என்ற சிறிய தொகையே காணப்பட்டுள்ளது.
இதேபோல் கடந்த பெப்ரவரி மாதம் புதுக்குடியிருப்பு பகுதியில் சிவாஜிலிங்கம் சத்தியேந்திரன் என்ற 5 பிள்ளகளின் தந்தை கடன் பணத்தை செலுத்த முடியாமல் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
2 லட்சம் ருபாய் கடன் பணத்தை செலுத்த முடியாமலேயே அவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
இந்த வறுமையான பிரதேசத்தில் மேலும் பல தற்கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடன் செலுத்த முடியாதவர்களை கடன் வழங்கிய அதிகாரிகள் தாக்குதல் மேற்கொண்ட பல சம்பவங்களும் இவ்வாறு பதிவாகியுள்ளன.
கடந்த காலங்களில் ஆவா குழு என்ற பெயரில் செயற்பட்டவர்களும் நிதி நிறுவனங்களின் பின்னால் உள்ளவர் என தெரியவந்துள்ளது.
கடனை பெற்று மீள அதனை செலுத்தாதவர்களை மிரட்டும் நடவடிக்கைகளுக்காக ஆவா குழு, இந்த நிதி நிறுவனங்களினால் உருவாக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஐக்கிய நாடுகளின் பெண்களுக்கு எதிராக பாகுபாட்டினை ஒழிப்பது தொடர்பான குழு, இந்த நிலைமை தொடர்பில் உடனடியாக அவதானம் செலுத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா மாவட்டத்தில் நீதிபதியாக இதுவரை கடமையாற்றி வந்த ரி.எல்.ஏ.மனாப் மார்ச் முதலாம் திகதியில் இருந்து மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றதையடுத்து வவுனியா மாவட்ட நீதிபதியாக எஸ்.லெனின்குமார் பதவியேற்கவுள்ளார்.
இவர் தனது பதவியை நாளை ஏற்றுக்கொள்ளவுள்ளார். இதேவேளை வவுனியா மேலதிக மாவட்ட நீதிபதியாக எச்.எம்.தஸ்னீம் பௌஸான் பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாண சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய பிரஜை ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.
இந்த நபர் வீசா அனுமதியின்றி இலங்கையில் தங்கியிருந்து ஆடை விற்பனையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
குறித்த நபர் சில காலம் விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
44 வயதான இந்த இந்திய பிரஜையை தமிழகத்தை சேர்ந்தவர் எனவும் திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக அவர் யாழ் போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.