உலக பணக்காரர்கள் பட்டியலில் பில் கேட்ஸ் தொடர்ந்தும் முதலிடத்தில்: 220 இடங்கள் கீழிறங்கினார் ட்ரம்ப்!!

ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் பட்டியலில் மைக்ரோசொப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் இம்முறையும் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

அமெரிக்க வர்த்தகப் பத்திரிகையான ஃபோர்ப்ஸ், பில் கேட்ஸின் சொத்து மதிப்பு 86 பில்லியன் டொலர் என தெரிவித்துள்ளது.

இரண்டாவது இடத்தில் அமெரிக்காவின் முதலீட்டாளர் வாரண் பஃபெட் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 75.6 பில்லியன் டொலராகும். அமேசான் நிறுவனர் ஜெஃப் பியோஸ் மூன்றாவது இடத்தில் உள்ளார். பேஸ்புக் நிறுவனர் மார்க் ஷக்கர்பெர்க் (11.4 பில்லியன் டொலர்) ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

இந்த பட்டியலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 220 இடங்கள் கீழிறங்கி பட்டியலில் 544 ஆவது இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 3.4 பில்லியன் டொலராகும்.

அமெரிக்க விமானங்களில் இலத்திரனியல் பொருட்களை கொண்டு செல்லத் தடை!!

அமெரிக்க விமானங்களில் இலத்திரனியல் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய கிழக்கின் குறிப்பிட்ட சில நாடுகள் மற்றும் ஆபிரிக்காவில் இருந்து அமெரிக்காவுக்கு பயணிக்கும் பயணிகளின் மடிக்கணனிகள் மற்றும் tab எனப்படும் கைக் கணினிகளை சோதனைக்குட்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பை உறுதிப்படுத்துவதை நோக்காக கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு திணைக்களம் இந்த புதிய தடை தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் முன்வைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பாதுகாப்பு திணைக்களத்தின் ஒரு பிரிவான போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகமும் இது தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.

குறிப்பாக எந்தெந்த விமான நிலையங்களில் இந்த தடை அமுல்படுத்தப்படும் என்பது தொடர்பிலும் எத்தனை நாட்களுக்கு செல்லுபடியாகும் என்பது தொடர்பிலும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இலங்கையில் கடலில் உருவாகும் பிரம்மாண்டமான நகரத்தால் இலங்கை வரைபடத்தில் மாற்றம்?

இலங்கையின் வரைபடத்தில் விரைவில் மாற்றம் ஏற்படும் என அளவீட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காலிமுகத்திடலில் உருவாகும் துறைமுக நகரத்தை நிர்மாணித்த பின்னர் குறித்த மாற்றம் ஏற்படவுள்ளதாக அளவீட்டுத் திணைக்களத்தின் அதிபதி பீ.எம்.பீ. உதயகாந்த குறிப்பிட்டார்.

இது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

துறைமுக நகர நிர்மாணத்தினால் நாட்டின் கரையோரத்தில் மாற்றம் ஏற்படுவதாகவும், இதன் காரணமாக இலங்கை வரைபடத்தை மறுசீரமைக்கும் தேவை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண்ணிற்கு நடு வீதியில் நேர்ந்த அவலம்!!(வீடியோ)

இலங்கையின் அபிவிருத்திற்கு சுற்றுலாத்துறை என்பதும் பிரதான காரணம். எனினும் அனைத்து வகையிலும் அது சரியாக நடைபெற்று வருகின்றதா என்பது கேள்விக்குறிதான்.

இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண் ஒருவரையும் அவருடன் வந்த ஒருவரையும் இலங்கைச் சாரதி ஒருவர் தகாத வார்த்தைகளில் திட்டி நடு வீதியில் இறக்கி விட்டு செல்லும் காணொளி தற்போது வேகமாக பரவி வருகின்றது.

குறித்த காணொளியில் 4500 ரூபாய் வாடகைப் பணத்திற்கு ஒப்புக் கொண்டு விட்டு 3500 ரூபாய் மாத்திரம் வழங்கியதாக கூறி சுற்றுலாப் பயணிகளை நடு வீதியில் இறக்கி விடப்படுகின்றனர்.

எனினும் “தாம் அவ்வாறு கூறவில்லை உங்களது வியாபாரம் மிக நன்றாக இருக்கின்றது” என வெளிநாட்டு பெண் பயணி கூறுகின்றார்.

அவரது சொற்களை செவிமெடுக்காத இலங்கை சாரதி என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுமாறு கூறி அங்கிருந்து சென்று விடுகின்றார்.

இந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி தற்போது வேகமாக பரவி வருகின்றது. இதில் எவர் சரி எவர் பிழை என்பது வெளிப்படையாக தெரியாவிட்டாலும் கூட.,

இது இலங்கை தொடர்பில் ஒரு தவறான கண்ணோட்டம் எழுப்பப்படும் என்பது மட்டும் நிச்சயம். இதனால் குறித்த இலங்கை சாரதி தொடர்பில் பல்வேறு வகையான விமர்சனங்களும் எழுந்துள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் மூலம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மத்தியில் இலங்கை தொடர்பில் தவறான பார்வை பதியப்படும் என்பது மட்டும் உண்மையே.

மனிதத்துவம் வாழும் போது அந்த நாடும் முன்னேற்றமடைந்து செல்லும் என்பதனை கவனத்தில் எடுத்து எம் நாட்டு மரியாதையை நாம் காக்க வேண்டியது இலங்கையர்களின் கடமை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் 153வது பொலிஸ் வீரர்கள் தினம்!!

 
வவுனியா பொலிஸ் நிலைய வளாகத்தில் இன்று (21.03.2017) காலை 7.30 மணிக்கு உயிர் நீத்த மற்றும் யுத்தத்தில் உயிரிழந்த பொலிசாரின் 153வது பொலிஸ் வீரர்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

வவுனியா தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சோமரத்ன விஜயமுனி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வன்னி பிராந்தியப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வவுனியாவிலுள்ள ஏனைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், உயிர்நீத்த பொலிசாரின் குடும்பத்தினர்கள், உறவினர்கள், என பலரும் கலந்து கொண்டனர். உறவினர்கள் உயிர்நீத்த பொலிசாருக்க மலர் அஞ்சலி செலுத்தினர்.

யுத்தத்தின்போது 2540 பொலிசார் உயிரிழந்ததுடன் 2017 வரையான காலப்பகுதியில் 3111 பொலிசார் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா இறம்பைக்குளம் மயானத்தில் பதற்றம்!!

 
வவுனியா இறம்பைகுளம் மயானத்தில் இறந்தவரின் உடலை புதைப்பதில் இரு மதங்களுக்கிடையே ஏற்பட்ட முரன்பாடு நீண்ட நேரத்தின் பின்னர் அருட்தந்தையின் தலையீட்டையடுத்து முடிவிற்கு கொண்டுவரப்பட்டது
. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா இறம்பைக்குளம் மயானத்தில் இன்று காலை இறந்த ஒருவரைப் புதைப்பதற்கு குழி தோண்டப்பட்போது கத்தோலிக்க சமயத்தைச் சேர்ந்த சிலர் அவ்விடத்திற்குச் சென்று அனுமதி பெறப்பட்டதா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

குழி தோண்டியவர்கள் யாரிடம் ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இதையடுத்து கத்தோலிக்க அருட்தந்தை அவ்விடத்திற்கு அழைக்கப்பட்டதுடன் அவருடன் சென்ற சிலர் தோண்டிய குழியை மூவிட்டு வேறு இடத்தில் தோண்டுமாறும், தற்போது நீங்கள் தோண்டும் குழி பாதை ஓரமாக இருக்கின்றது என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கு நின்ற இளைஞர்கள் குழி தோண்டி முடிக்கப்பட்டுவிட்டது. எனவே புதிதாக தோண்ட முடியாது என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து பணம் தருகின்றோம் மூடிவிடுங்கள் என தெரிவித்துள்ளதையடுத்து முரண்பாடு மேலும் அதிகரித்துள்ளது.

இதையடுத்து அருட்தந்தை இரு பகுதியையும் சமாதானப்படுத்தியதுடன், நாளை இவ்விடத்தில் இவ்வாறான செயல்களில் ஈடுபட மாட்டோம் என கடிதம் ஒன்றை தருமாறும் கோரி பிரச்சனைக்கு சுமுகமான தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டதையடுத்து குழி தோண்டடிய இடத்தில் சடலத்தை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

குறித்த மயானமானது கத்தோலிக்க, மற்றும் அங்கிலிக்கன் மதங்களை உள்ளடக்கியவர்களை புதைக்கும் மயானமாகும். அவர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் அவர்களது உறவினர்களை அடக்கம் செய்து வருகின்றார்கள். மேலும் மற்றும் மாற்று சபையாருக்கெனவும் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

எனினும் சில இடங்களில் மாறியும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனாலேயே இன்று அப்பகுதியில் குழி தோண்டிய மாற்று சபையாருக்கும் கத்தோலிக்க மதத்தவருக்கும் இடையே சிறு முரண்பாடு ஏறப்பட்டு அருட்தந்தையின் தலையீட்டால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் பாடசாலைக்குள் புகுந்து ஆசிரியை மீது தாக்குதல் : ஆசிரியர் காயம்!!

வவுனியா செட்டிக்குளம் இலுப்பக்குளத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் இன்று (21.03.2017) காலை 8.30 மணியளில் பெற்றோர் ஒருவரால் பெண் ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

கடந்த 13.03.2017 அன்று வவுனியா நகரசபை மைதானத்தில் விளையாட்டுப்போட்டியொன்று இடம்பெற்றது. இவ் விளையாட்டுப் போட்டியில் மாணவியொருவர் ஒர் இளைஞனுடன் தனிமையில் கதைத்துக் கொண்டிருந்துள்ளார். இதனைப் பார்த்த குறித்த பெண் ஆசிரியர் குறித்த மாணவியின் பெற்றோரை அழைத்து இவ்விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் குறித்த மாணவியின் செயற்பாடுகளின் அதிருப்தியடைந்த பெண் ஆசிரியர் மீண்டும் பெற்றோரை அழைத்து குறித்த மாணவியின் செயற்பாடுகளை தெரிவித்துள்ளார். சரி நாங்கள் பார்க்கின்றோம் எனத் தெரிவித்து விட்டுச் சென்ற பெற்றோர் இன்று (21.03.2017) காலை 8.30 மணியளவில் அதிபரை சந்தித்துள்ளனர்.

இதன் போது அதிபருக்கு அருகே நின்ற குறித்த பெண் ஆசிரியர் சரமாரியாகத் தாக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் இவ்விடயம் தொடர்பாக செட்டிக்குளம் பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

தனுஷின் அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளது : அதிர்ச்சித் தகவல்!!

நடிகர் தனுஷ் தனது உடலில் உள்ள அங்க அடையாளங்களை லேசர் சிகிச்சையின் மூலம் அளித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை மாவட்டம், மேலூர், மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி தம்பதி, மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் திரைப்பட நடிகர் தனுஷ், தங்களது மூத்த மகன் என்று உரிமைகோரி, மனு தாக்கல்செய்தனர்.

இந்த வழக்கை ரத்துசெய்யக்கோரி நடிகர் தனுஷ், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதை விசாரித்த நீதிமன்றம், மேலூர் தம்பதியர் தாக்கல்செய்த பள்ளி ஆவணங்களில் உள்ள அங்க அடையாளங்கள், நடிகர் தனுஷ் உடலில் உள்ளதா என்பதைச் சரிபார்க்க ஆஜராகக் கூறி உத்தரவிட்டிருந்தது.

இவ்வழக்கு தொடர்பான மருத்துவ அறிக்கை இன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சமர்பிக்கப்பட்டது.

மருத்துவ அறிக்கையில், தனுஷ் உடலில் சில அங்க அடையாளங்கள் லேசர் சிகிச்சை மூலமாக அழிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வழக்கின் மிகப்பெரிய திருப்பமாக மருத்துவ அறிக்கை கருதப்படுகிறது. மேலும் விரிவான விசாரணை வரும் 27ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய பெண்களால் இலங்கை இளைஞர்களுக்கு ஏற்பட்ட பேராபத்து!!

ரஷ்யாவை சேர்ந்த இரு பெண்கள், இலங்கையிலுள்ள பல ஆண்களுக்கு எச்ஐவி நோயினை பரவச் செய்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது,

பதுளை எல்ல சுற்றுலா பகுதி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் ஈர்ப்பை பெற்ற ஒரு பிரதேசமாகும். அந்தப் பகுதியில் இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரஷ்யாவை சேர்ந்த இளம் பெண்கள் இருவர் எல்ல பிரதேசத்திற்கு சுற்றுலா விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

அந்தப் பகுதியின் சுற்று சூழல் ஆராய்வதற்காக வருகைத்தந்துள்ளதாக கூறி, அங்கிருந்த ஹோட்டலில் தங்கியிருந்தனர்.

இதன்போது குறித்த இரு பெண்களும் முறையற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அந்தப் பகுதியை சேர்ந்த பல இளைஞர்கள் இவர்களின் மாய வலைக்குள் சிக்கியுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் எல்ல பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்கள் மர்மமான முறையில் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதன்போது அவர்களின் இரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட போது, எச்ஐவி நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதில் 27 இளைஞர்களுக்கு எயிட்ஸ் நோய் தொற்றியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பலர் திருமணம் செய்தாவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

உயிர்காவி நோயினை இளைஞர்களுக்கு பரப்பிய ரஸ்ய பெண்கள், இலங்கையை விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

ஸ்மார்ட் கைப்பேசிகள் ஹேக் செய்யப்படும் புதிய தொழில்நுட்பம் தொடர்பில் எச்சரிக்கை!!

இணைய வளர்ச்சியானது மிகவும் வரவேற்கத்தக்க விடயமாக இருக்கின்ற போதிலும் பாதிப்புக்களும் இருக்கத்தான் செய்கின்றன.

அதிலும் தனிநபர் தகவல்கள் திருடப்படுகின்ற ஹேக்கிங் செயற்பாடு பாரிய எதிர்விளைவுகளை ஏற்படுத்துவதாக இருக்கின்றது.

இவ்வாறன நிலையில் தற்போது ஸ்மார்ட் கைப்பேசிகள் ஹேக் செய்யப்படக்கூடிய புதிய தொழில்நுட்பம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதாவது ஸ்மார்ட் கைப்பேசிகளின் ஒலி அலைகளைப் பயன்படுத்தி அதிலுள்ள தரவுகளை திருட முடியும் என்பது அறியப்பட்டுள்ளது.

இதனால் சுமார் மில்லியன் கணக்கான ஸ்மார்ட் கைப்பேசிகள் ஹேக் செய்யப்படும் ஆபத்துக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கைப்பேசிகள் மட்டுமல்லாது, ஸ்மார்ட் கைப்பட்டிகள், கார்கள் கூட ஹேக் செய்யப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இச் செயற்பாட்டினை “மியூசிக்கல் வைரஸ்” என அழைக்கின்றன

பெற்ற தாயை கொலை செய்து நாடகமாடிய இந்தியச் சிறுவன் : கைதுசெய்த பொலிஸ்!!

அமெரிக்காவில் பெற்ற தாயாரை கொடூரமாக கொலை செய்துவிட்டு நாடகமாடிய இந்தியச் சிறுவனை ஓராண்டுக்கு பின்னர் பொலிசார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் கரோலினா பகுதியில் குடியிருந்து வந்தவர் 57 வயதான நளினி தெல்லப்ரோலு. இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் கொல்லப்பட்டார். அவரது முகத்தில் பிளாஸ்டிக் பையை மூடி கொலை செய்துள்ளதும் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்தது.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக விசாரணை நடத்தி வந்த மாகாண பொலிஸ் படை, நளினியின் குடியிருப்பில் யாரோ பலவந்தமாக புகுந்து கொலையை நடத்தியதற்கான அடையாளம் இல்லை தெரிவித்திருந்தது.

இந்நிலையில் பெற்ற தாயையே கொன்றதாக 17 வயதான மகன் உப்பலாபதி கைது செய்யப்பட்டுள்ளது குடும்பத்தினரையும் நட்பு வட்டாரத்தையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தான் பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்த பொது தாயாரின் உடல் கேரேஜில் கிடந்ததாக மகன் உப்பலாபதி விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தார்.

“பெற்ற தாயை மகனே கொல்லக்கூடிய சாத்தியம் மனதை பிசைகிறது, மிகவும் மோசமானது, அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்துவது” என்று சதீஷ் காரிமெல்லா என்ற டவுன் கவுன்சில்மேன் தெரிவித்துள்ளார்.

கொலையுண்ட நளினியின் நீண்ட நாளைய நண்பர் பத்மா தமலா கூறும்போது, “நாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளோம், இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை, அவர் குழந்தைகள் நலனுக்காகவே வாழ்க்கையை வாழ்ந்து வந்தவர்” என்றார். இன்னொரு குடும்ப நண்பர் விஜய் ஜவாதி கூறும்போது, “என்னால் இன்னும் நம்ப முடியவில்லை” என்றார்.

ஆனால் விசாரணை அதிகாரிகள் மகன் தான் தாயைக் கொன்றார் என்ற முடிவுக்கு எப்படி வந்தனர் என்ற விவரம் வெளியிடவில்லை.

மகன் உப்பலாபதி கிளாஸ் பி1 பிரிவில் கொடும்பாதகச் செயல் குற்றம்சாட்டப்பட்டுள்ளார், பரோலில் கூட வெளிவர முடியாத சிறையில் பல ஆண்டுகள் கழிக்க வேண்டிய தண்டனைக்குரிய குற்றமாகும் இது.

பிரேதப் பரிசோதனையில் கொலை ஊர்ஜிதமாகியுள்ளது. தாயார் நளினியின் கழுத்து, முகம், தலை, கைகளில் காயங்கள், கழுத்தெலும்பு முறிவு ஆகியவை தெரியவந்துள்ளது.

கொல்லப்பட்ட நளினி தெல்லப்ரோலு டியூக் மெடிக்கல் செண்டரில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைக்கு உயிருள்ள புழுக்களை உணவாக ஊட்டி விட்ட தாய் : அதிர்ச்சி வீடியோ!!

குழந்தைக்கு உயிருள்ள புழுக்களை தட்டில் வைத்து ஊட்டிய தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. சமூகவலைதளங்களில் தற்போது ஒரு வீடியோ பரவி வருகிறது. அதில் 3 வயது பெண் குழந்தை தரையில் உட்கார்ந்துள்ளது.

குழந்தையின் அருகில் இருக்கும் தாய் தட்டில் உயிருள்ள புழுக்களை வைத்துள்ளார். பின்னர், தன் கையால் புழுக்களை எடுத்து அவர் குழந்தைக்க்கு ஊட்டுகிறார். குழந்தையும் அது என்ன என புரிந்து கொள்ளாமல் மென்று சாப்பிடுவது போல வீடியோவில் உள்ளது.

இந்த வீடியோவை பார்த்த பலர் எதிர்ப்பு தெரிவித்தாலும் பலர் ஆதரவும் தெரிவித்துள்ளனர்.

இணைய பயன்பாட்டாளர் ஒருவர் கூறுகையில், உலகில் பல நாடுகளில் இப்படி உயிருள்ள பூச்சிகளை சாப்பிடுவது சகஜம் என கூறியுள்ளார்.

இந்த வீடியோ எந்த நாட்டில் எடுக்கப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை.

கணவனைக் கொன்று சடலத்தை சூட்கேசில் மறைத்து வைத்த மனைவி : அதிர்ச்சி சம்பவம்!!

இந்தியாவில் கணவனை கொலை செய்து சடலத்தை சூட்கேசில் மறைத்து வைத்திருந்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொகாலியை சேர்ந்தவர் Ekam Singh Dhillon (40) இவர் மனைவி Seerat Kaur. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

Ekam Singh செய்து வந்த தொழில் சில மாதங்களாக கடும் சரிவை சந்தித்துள்ளது. இதை புரிந்து கொள்ளாத அவர் மனைவி Seerat கணவனிடம் அதிகம் பணம் சம்பாதியுங்கள்.

மேலும், சமூகத்தில் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என நச்சரித்துள்ளார். இது சம்மந்தமாக இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்ப்பட்டுள்ளது.

இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் இருவருக்கும் சண்டை அதிகமாக தான் வைத்திருந்த துப்பாக்கியால் கணவனை Seerat சுட்டு கொன்றுள்ளார்.

பின்னர் இது குறித்து தன் தாய் மற்றும் இரு சகோதரர்களுக்கு Seerat தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் வந்த பின்னர் Ekam Singh சடலத்தை சூட்கேசில் அடைத்து வீட்டிலிருந்து அவர்கள் வெளியில் எடுத்து வந்துள்ளனர்.

சூட்கேசிலிருந்து இரத்தம் வருவதை பார்த்த ஒருவர் இது குறித்து பொலிசுக்கு தகவல் கொடுத்தார். ஆனால், உஷாரான Seerat மற்றும் அவர் குடும்பத்தினர் பொலிஸ் வருவதற்குள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

7 வயது மகளை வெறித்தனமாக கொலை செய்த தந்தை : தப்பித்து ஓடிய மகன்!!

தமிழகத்தில் பெற்ற மகளையே தந்தை நீரில் முழ்கடித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் சிவகாசியைச் சேர்ந்தவர் முனியசாமி. இவர் அருணா என்பவரை திருமணம் செய்து வாழந்து வந்துள்ளார். இவர்களுக்கு அசோக் ராஜா(9) என்ற மகன் மற்றும் ஹரிஷ்மா(7) என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில் அருணா மற்றும் முனியசாமிக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டுள்ளது. இன்று தகராறு முற்றியுள்ளது, இதனால் மனைவி மீது ஏற்பட்ட கோபத்தால், அவர் தன் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இருந்துள்ளார்.

இன்று அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக கூறி, அருகே உள்ள கண்மாயிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு இருவரையும் வெறித்தனமாக அடித்து நீரில் மூழ்கடித்து கொலை செய்ய முயற்சித்திருக்கிறார்.

மகன் அசோக்ராஜா தந்தையின் பிடியிலிருந்து தப்பி ஓடிவிட்டான். ஹரிஸ்மாவை அடித்து, கண்மாயில் தேங்கிக் கிடந்த நீரில் மூழ்கடித்துக் கொலை செய்துவிட்டு, தப்பி ஓடிவிட்டார் முனியசாமி.

சிறுவன் அசோக்ராஜா கூறிய தகவலின் பேரில், கண்மாயில் கிடந்த ஹரிஸ்மாவின் உடலை பொலிசார் கைப்பற்றினர்.

அசோக்ராஜா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொலையாளி முனியசாமியை பொலிசார் தேடி வருகின்றனர்.

என் தாயின் கல்லறையில் அடக்கம் செய்யுங்கள் : இங்கிலாந்தை உலுக்கிய சிறுவனின் கோரிக்கை!!

போலந்து நாட்டைச் சேர்ந்த சிறுவன் பிலிப்புக்கு திடீரென்று உடல்நிலை மோசமானது. என்ன நோய் என்றே தெரியவில்லை. தாயைப் பறி கொடுத்தவன். தந்தைதான் சிறுவனுக்கு எல்லாமே. சிறுவனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என பதை பதைத்துப் போகிறார் தந்தை.

இங்கிலாந்து நாட்டுக்கு சிறுவனை அழைத்து செல்ல முடிவு செய்கிறார்.இங்கிலாந்து புறப்படும் முன் , தாயின் கல்லறைக்கு செல்கிறான் சிறுவன்.

தாயின் கல்லறையில் விழுந்து வணங்கி ஆசி வாங்கிக் கொண்டான். தாயுடன் நின்று புகைப்படம் எடுப்பது போலவே… அந்த கல்லறைக்கு அருகில் நின்றும் புகைப்படமும் எடுத்துக் கொண்டான்.

அங்கேயே வர இருக்கிறோம் என்று தெரியவில்லை அந்தச் சிறுவனுக்கு. வாழ்க்கைதான் சில சமயங்களில் மிகவும் கொடூரமானதாயிற்றே!

தாயின் கல்லறையில் அடக்கம் செய்யப்படவுள்ள சிறுவன் போலந்து நாட்டைச் சேர்ந்தவர் Piotr Kwasny. இவரது மனைவி அக்னீஸ்கா.

கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்தனர். இரு ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பிறந்தது. ஆண் குழந்தை. பிலிப் என பெயரிட்டு செல்லமாக வளர்த்தனர்.

சிறிய குடும்பம். வாழ்க்கை சந்தோஷமாக போய்க் கொண்டிருந்தது. யார் கண் பட்டதோ தெரியவில்லை அக்னீஸ்காவைப் புற்றுநோய் தாக்கியது.

க்வான்சியால் மனைவியை காப்பாற்ற முடியவில்லை. உயிருக்குயிரான மனைவியை புற்று நோய் அவரிடம் இருந்து பறித்தது.

போலந்து நாட்டில் உள்ள Wadowice அக்னீஸ்காவின் சொந்த ஊர். அந்த சிறிய கிராமத்தில் மனைவியின் உடலை புதைத்தார் க்வான்ஸி. தந்தையும் மகனும் தனியாக வாழத் தொடங்கினர். க்வான்ஸியால் மகனைத் தனித்து பார்த்துக் கொள்ள முடியவில்லை.

மகனுக்காக இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்தார். ஒரு குழந்தை பிறந்தது. இரு குழந்தைகளை தத்தும் எடுத்தனர்.
வாழ்க்கை சகஜ நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்த போதுதான், மகன் பிலிப்புக்கும் அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

மகனைக் காப்பாற்ற லண்டன் கொண்டு செல்ல முடிவெடுத்தார். பல்வேறு கட்ட பரிசோதனைக்கு பிறகு சிறுவனுக்கு இரத்தப் புற்றுநோய் முற்றிய நிலையில் இருப்பது தெரியவந்தது.

துடித்துப் போனார் க்வான்ஸி. ஏற்கனவே மனைவியை புற்று நோய்க்கு பலி கொடுத்து விட்ட நிலையில், மகனுக்கும் புற்று நோய் என்றால்… எந்த தந்தையால்தான் தாங்கிக் கொள்ள முடியும்?

கடந்த 2013ம் ஆண்டு லண்டனில் உள்ள குழந்தைகள் புற்று நோய் மையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தார். சற்று உடல் நிலைத் தேறி வந்த நிலையில் கடந்த செப்டம்பரில் பிலிப்பின் உடல்நிலை மோசமானது.

மூக்கில் இருந்து இரத்தம் வழியத் தொடங்கியது. கால்களில் ரண வலி ஏற்பட்டது. தாங்க முடியாத வேதனையில் சிறுவன் துடித்தான். கடைசி கட்டமாக பிலிப்புக்கு அளிக்கப்பட்ட கீமோதெரபியும், ஸ்டெம் செல் மாற்று சிகிச்சையும் அளிக்கப்பட்டது. எவையும் பலன் அளிக்கவில்லை.

தற்போது வலி நிவாரண சிகிச்சை மட்டுமே பிலிப்புக்கு அளிக்கப்பட்டு வருகிறது. சிறுவனுக்கு தனது தனது வாழ்நாள் எண்ணப்படுவது தெரிந்தே இருந்தது.

என்ன நினைத்தானோ தெரியவில்லை. ‘நான் இறந்த பின், எனது உடலை தாயின் கல்லறையிலேயே அடக்கம் செய்து விடுங்கள்’ என வேண்டுகோள் விடுத்தான்.

ஐந்து வருடங்களுக்கு முன் புதைக்கப்பட்ட மனைவியின் சவப்பட்டியைத் தோண்டி எடுத்து மகனின் ஆசையை நிறைவேற்ற போக்குவரத்து உள்ளிட்டவற்றிற்கு போதிய பணம் இல்லாத நிலையில் இருந்தார் க்வான்ஸி.

6500 பவுண்டுகள் வரை ஆகும் என்ற தகவல் ஆன்லைனில் தகவல் பரவியது. இங்கிலாந்து நாடே உருகிப் போனது. 6,500 பவுண்டு நிதிஉதவி திரட்ட திட்டமிடப்பட்டது.

இப்போதுவரை 37000 பவுண்டு நிதி திரட்டப்பட்டுள்ளது. (சிகிச்சைக்கு முன்பும் இப்போதும்.. பிலிப்)லண்டனில் சிறுவன் பிலிப் அனுமதிக்கப்பட்டுள்ள புற்று நோய் மையம் பிரசித்தி பெற்றது.

புற்று நோயை தொடக்க நிலையில் கண்டுபிடித்தால், குணப்படுத்தி விடலாம். இந்த மருத்துவமனையில் புற்று நோய் சிகிச்சை பெற்று குணமடைந்து வீட்டுக்கு திரும்பும் குழந்தைகள், வார்டில் உள்ள மணியை மூன்று முறை அடித்து ஓசையை எழுப்புவார்கள்.

அந்த மணிச்சத்தம் மற்ற குழந்தைகளுக்கும் தைரியத்தையும் நம்பிக்கையையும் அளிக்கும் என்பதால் இது ஒரு பாரம்பர்ய நிகழ்வாக இந்த மருத்துவமனையில் நிகழும்.

என் மகன் பிலிப்பின் கரங்கள் மட்டும் அந்த மணியை நோக்கி நீளப் போவதில்லை.. நான் என் மகனை அடக்கம் செய்ய வேண்டும் என்று நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது.

இந்த நிலை எவருக்கும் வரக்கூடாது. எனது மனைவியின் கல்லறையில் மகன் புதைக்கப்பட்டால் சொர்க்கத்தில் அவனை அவள் பார்த்துக் கொள்வார் என்று நான் திடமாக நம்புகிறேன் என்கிறார் க்வான்ஸி.

மார்ச் மாத ஆரம்பத்திலேயே மருத்துவர்கள் கைவிரித்து விட்டனர். வலிக்கான சின்ன சிகிச்சைகள் மட்டும் தற்போது நடைபெற்று வருகின்றன.

பிலிப் வாழ்க்கை சில சமயம் காட்டும் கோரமுகம், பார்க்கவே இயலாத அளவு கொடுமையானது.

இவ்வளவுதான் வாழ்க்கை என்றான பின்னும், கோபம், வெறுப்பு, பொறாமை, சூழ்ச்சி, வஞ்சகம் என்று வாழ்ந்து கொண்டிருப்பது அர்த்தமேயற்றது.

-விகடன்-

டெங்கின் கோர தாண்டவம் : இளைஞன் உயிரை பறித்த சோகம்!!

திருகோணமலையில் டெங்கு நோய் தாக்கத்தினால் இன்று (20) இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் டெங்கு நோய் தாக்கத்தினால் 6 வயது மாணவி அஞ்சனா உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது.

இந்த சோகம் மறைவதற்குள் தோப்பூர் அல்லைநகர் பிரதேசத்தைச் சேர்ந்த நூர் முஹம்மது நுபைர் (வயது 27 ) டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிர் இழந்துள்ளார்.

இதேவேளை, உயிர் இழந்த நபரின் சகோதரரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்தில் இதுவரைக்கு 3821 பேர் டெங்கு நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும், அதில் திருகோணமலையில் 2088 பேரும், மட்டக்களப்பு பிராந்தியத்தில் 900 பேரும், கல்முனை பிராந்தியத்தில் 733 பேரும், அம்பாறை பிராந்தியத்தில் 100 பேர் பாதிப்படைந்துள்ளனர்.