மாத்தளை, அகலவத்தை பிரதேசத்தை சேர்ந்த, கணவனை இழந்த நிர்மலா பத்மகுமாரி மெனிக்கே என்ற பெண்ணுக்கு இலங்கையின் கிரிக்கெட் நட்சத்திரம் திலகரட்ண தில்ஷான் தனது சொந்த செலவில் வீடொன்றை நிர்மாணித்துக் கொடுத்துள்ளார்.
இப் பெண்ணின் கணவர் கடந்த 2016 ஆம் ஆண்டில் மின்சார தாக்குதலில் உயிரிழந்திருந்தார். இந்தப் பெண்ணுக்கு 11 மற்றும் 7 வயதுகள் கொண்ட இரு பெண் பிள்ளைகள் உள்ளனர்.
தனது கணவன் உயிரிழந்ததன் பின்னர் இரு பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு குடியிருந்த வீட்டின் காணி உறுதியை அடகு வைத்து இப் பெண் ஐந்தரை இலட்சம் ரூபா கடனாக பெற்றிருந்தார்.
இந்தநிலையில் கடனாகப் பெற்ற பணத்தை செலுத்த முடியாமல் போனமையினால் தனது வீட்டை இழக்கும் நிலைமையை எதிர்நோக்கியிருந்துள்ளார்.
இவ் விடயம் தொடர்பில் கேள்வியுற்ற மாத்தறையிலுள்ள கோடீஸ்வர வர்த்தகரான விதானஆரச்சி மாத்தளைக்கு சென்று குறித்த வீட்டின் மீதான கடனை செலுத்தி வீட்டை கடனிலிருந்து மீட்டுக் கொடுத்துள்ளார்.
இதேவேளை இவ் விடயத்தை அறிந்த இலங்கை கிரிக்கெட் வீரர் திலக்கரட்ண தில்ஷான், தனது சொந்த செலவில் அப் பெண்ணுக்கு வீடு ஒன்றை நிர்மாணித்து தருவதாக உறுதியளித்தார்.
தனது பழைய வீட்டை வர்த்தகரின் உதவியுடன் நிர்மலா மீட்டிருந்திருந்த நிலையில் தான் அளித்த வாக்குறுதிக்கமைய அப் பெண்ணுக்கும் அவரது இருபிள்ளைகளுக்கும் தில்ஷான் வீடு ஒன்றை நிர்மாணித்து கையளித்திருந்ததுடன் நேற்று முன்தினம் அவ் வீட்டை யும் திறந்து வைத்தார்.
வீட்டில் தனியாக இருந்த பெண் மர்மமான முறையில் கொல்லப்பட்ட விவகாரத்தில் கணவரே கொலை செய்துவிட்டு நாடகமாடியமை பொலிஸாரின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
தமிழகத்தின் ஆரல்வாய்மொழி மங்கம்மாள் வீதியைச் சேர்ந்தவர் ஆதித்தன். செங்கல் சூளை தொழிலாளி. இவரது மனைவி ஷாலினி ( 27). கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
எனவே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். எனினும் ஷாலினியை ஆதித்தன் அவ்வப்போது சந்தித்து பொருள் உதவி செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 15ஆம் திகதி ஷாலினியை சந்திக்க ஆதித்தன் அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது வீட்டின் முன்பக்கக் கதவு பூட்டப்பட்டிருந்துள்ளது.
இதைத் தொடர்ந்து பின்பக்க கதவு திறந்திருந்த நிலையில் அவ்வழியாக சென்றபோது படுக்கை அறையில் நிர்வாண நிலையில் ஷாலினி இரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.
இதுதொடர்பாக ஆதித்தனின் பேரில் பொலிஸார் விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் ஷாலினியுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் 20க்கும் மேற்பட்ட இளைஞர்களையும் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் ஷாலினியை கொலை செய்ததற்கான எவ்வித ஆதாரமும் அவர்களிடம் கிடைக்கவில்லை.
இதையடுத்து பொலிஸாரின் சந்தேகம் ஷாலினியின் கணவர் மீது திரும்பியது. ஷாலினி மின் கட்டணம் செலுத்த பணம் கேட்டிருந்ததாகவும், அதனை கொடுக்கச் சென்றபோது தான் ஷாலினி கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்ததாகவும் பொலிஸாரிடம் அவர் தெரிவித்துள்ளார். பின்னர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் ஷாலினியை கொன்றது அவரது கணவர் ஆதித்தன் என்பது உறுதியானது. அவரை பொலிஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.விசாரணையில் ஆதித்தன் அளித்த வாக்குமூலத்தில் , கடந்த 14ஆம் திகதி செங்கல் சூளைக்கு இரவு வேலைக்கு சென்றேன். ஷாலினிக்கு பணம் கொடுக்க ஷாலினியின் வீட்டுக்கு சென்றபோது அங்கிருந்து இரு இளைஞர்கள் வெளியே சென்றதை கண்டு ஆத்திரமடைந்தேன்.
இதனால் ஷாலினியுடன் வாக்குவாதம் செய்து தலையணையால் அழுத்தியும், கத்தியால் கழுத்தில் குத்தியும் கொலை செய்தேன்.
பின்னர் ஷாலினி பல ஆண்களுடன் தொடர்பில் உள்ளதால் அவர்கள் மீது கொலையை திசை திருப்பும் நோக்கில் ஷாலினியை நிர்வாணமாக்கி, பீரோவில் இருந்த பொருள்களை வீசினேன். பின்னர் வழக்கம் போல் சூளைக்கு வேலைக்கு சென்றேன் என வாக்குமூலத்தில் கூறினார். இதைத் தொடர்ந்து கைதான ஆதித்தனை பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
எம்மில் பலர் தற்போது சந்திக்கும் போது பசியாறிட்டீங்களா? என்று கேட்பதற்கு முன் சுகர் எவ்வளவு இருக்கிறது? என்று கேட்கிறார்கள். அந்தளவிற்கு தென்னாசியா முழுவதிற்கும் சர்க்கரை நோய் பரவியிருக்கிறது. இன்றைய திகதியில் 380 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் நீரிழிவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அதிலும் டைப் 2 டயபடீக்கால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதே நிலை நீடித்தால் 2035 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை இருமடங்காகிவிடும் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
இதனிடையே காலை உணவை அதிலும் சத்தான காலை உணவை சாப்பிட்டால் ,டைப் 2 எனப்படும் நீரிழிவு கட்டுப்படும் என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். மேலும் அவர்களின் வழிகாட்டலில் இடம்பெற்றிருக்கும் அம்சங்களை காணலாம்.
காலை உணவை தவிர்க்கக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள் என்பதற்காக சத்தில்லாத உடலின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் உணவை எடுத்துக் கொள்ளவேண்டாம். அதாவது அதிக கொழுப்புள்ள உணவு, சோடா போன்ற பானம், இரவில் அதிகமாக சாப்பிடுவது, இனிப்பு பண்டங்களை சாப்பிடுவது, உடல் எடையைப் பற்றி கவலைப்படாமல் சாப்பிடுகிறார்கள். இதை முற்றிலுமாக தவிர்க்கவேண்டும். இதற்கு மாற்றாக சத்துள்ள கால உணவை சாப்பிடவேண்டும்.
பார்லி கஞ்சி, காய்கறி சூப், ராகி ஊத்தப்பம், பழுப்பு அரிசி மற்றும் பழங்கள் ஆகியவற்றை சாப்பிடலாம்.இவற்றைச் சாப்பிடும் போது உடலுக்கு தேவையான நார்ச்சத்து கிடைக்கிறது. அத்துடன் டைப் 2 நோயை கட்டுப்படுத்தும் காரணிகள் இதில் உள்ளதால் இதனை தொடர்ந்து காலையில் சாப்பிடும் போது சர்க்கரை நோய் கட்டுப்படுகிறது. அதனால் காலை உணவை தவிர்க்காதீர்கள். அதன் பிறகு சத்தான உணவை சாப்பிடுங்கள். சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள்
முடக்கப்படும் இணையதளங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் மட்டும் 32 சதவீதமாக உயர்ந்துள்ளதாக கூகிள் தகவல் வெளியிட்டுள்ளது. எனினும், இது சற்று ஆறுதலான விடயம் என்றே கூகிள் குறிப்பிட்டுள்ளது.
அங்கீகரிக்கப்படாத இணையதளங்களே அதிகமாக முடக்கப்படுவதால், இந்த உயர்வு பெரிய பாதிப்பை ஏற்படுத்தப்போவதில்லை என்றும் கூகிள் தெரிவித்துள்ளது.
இணையதளங்கள் முடக்கப்படுவது குறித்து சம்பந்தப்பட்ட இணையதளங்களுக்கு பாதுகாப்பு சமிக்ஞைகளை தாம் வெளியிடுவதாகக் கூறியுள்ள கூகிள், என்றபோதும் கூகிளால் அங்கீகரிக்கப்படாத தளங்கள் மிகையாக இருப்பதனால், முடக்கப்பட்ட சுமார் 61 சதவீதமான இணையதளங்களுக்கு தாம் சமிக்ஞைகள் வெளியிடவில்லை என்றும் கூறியுள்ளது.
யாஹூ, அமெரிக்க அரச இணையதளங்கள் மற்றும் பிரபல இணைய வர்த்தகத் தளங்கள் முடக்கப்பட்டு வருவதையடுத்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுவரும் நிலையிலேயே இந்தத் தகவலை கூகிள் வெளியிட்டுள்ளது.
இணையதளங்களை முடக்குவது அதிகரித்து வருகின்றபோதிலும், தொடர்ச்சியான ஆய்வுகள் மூலம் அவற்றுக்கு எதிரான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டே வருகின்றன என்றும் கூகிள் தெரிவித்துள்ளது.
இலங்கை அணியின் சுழற் பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் டெஸ்ட் பந்துவீச்சாளர் தரப்படுத்தலில் 4 ஆம் இடத்திலிருந்து 3 ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
ஐ.சி.சி. வெளியிட்ட டெஸ்ட் தரப்படுத்தலில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரப்படுத்தலில் முதலாம் இடத்தை இந்திய அணியின் ஜடேஜா பிடித்துள்ள நிலையில், இரண்டாம் இடத்தை இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அட்டாளைச்சேனை தைக்கா நகர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாசகம் எடுக்கச்சென்ற, முதியவர் ஒருவர் மரணமாகியுள்ளதோடு, அவரது உடலை வாங்குவதற்கு யாரும் வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த வயோதிபர் அக்கரைப்பற்று – கல்முனை வீதியை கடக்க முற்பட்ட போதே விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இந்நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இருந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதுவரை குறித்த வயோதிபரின் உடலை யாரும் உரிமை கோரவில்லை என்பதால், முதியவரின் உடல் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், வயோதிபர் தொடர்பில் எந்த தகவலும் இதுவரை கிடைக்காத நிலையில், அக்கரைப்பற்று பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு குறித்த வயோதிபரை அடையாளம் தெரிந்தவர்கள், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின், 067 22 77 213 என்ற இலக்கத்துக்கோ அல்லது 075 708 1317 (அப்துல் வஹாப் ) எனும் இலக்கத்துக்கோ அழைத்து தெரியப்படுத்தலாம் என வேண்டப்பட்டுள்ளது.
கார்பந்தய வீரர் அஸ்வினின் கார் விபத்துக்குள்ளானதில் அஸ்வின் தனது மனைவியுடன் உயிரிழந்தார்.
இதுகுறித்து கருகிப் போன அவரது காரை பிரத்தியேக ஆய்வு செய்ய பொலிஸார் முடிவு செய்துள்ளனர். விபத்தில் சதி ஏதேனும் நடந்திருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த அஸ்வின் சுந்தர், 2 இருக்கைகள் கொண்ட பி.எம்.டபிள்யு சொகுசு காரில் மனைவி நிவேதாவுடன் நேற்று முன்தினம் இரவு, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நண்பர் ஒருவரின் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் இரவு விருந்து நிகழ்ச்சியை முடித்துவிட்டு நேற்று முன்தினம் அதிகாலை 1.30 மணி அளவில் தனது மனைவியுடன் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது சென்னை அடையாறு அடுத்துள்ள ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த அவரது கார் சாலை ஓரம் இருந்த உள்ள மரத்தில் வேகமாக மோதியது. இதில் அப்பளம் போல் நொறுங்கிய கார் தீப்பற்றி எரிந்தது.
இந்த விபத்தில் காரில் இருந்த அஸ்வின் சுந்தர் மற்றும் நிவேதா ஆகியோர் சிக்கிக் கொண்டனர். தீப்பிடித்த நொடி பொழுதில் கார் முழுவதும் தீப்பற்றியது.
20 அடி தூரத்துக்கு தீ
கார் தீப்பிடித்து எரியும் போது 20 அடி தூரத்திற்கு யாரும் நெருங்க முடியாத அளவிற்கு தீயின் தாக்கம் இருந்தது. உடனடியாக தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து, எரிந்து கொண்டிருந்த கார் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
எலும்புக்கூடான தம்பதி
சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அஸ்வின் சுந்தர், நிவேதா ஆகியோரின் உடல்களை எலும்புக்கூடாக மீட்டு ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்
நைட்ரஸ் ஆக்ஸைடு பயன்பாடு?
விசாரணையில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. நைட்ரஸ் ஆக்சைடு சிஸ்டம் என்பது, இன்ஜினில் பெட்ரோல் மற்றும் காற்று கலவையுடன் எரியும் போது அதிவேகத்திற்காக நைட்ரஸ் ஆக்சைடு பயன்படும். அதாவது, கார் கிளப்பியதும் அடுத்த நொடிகளில் வாகனம் அதி வேகமாக செல்லும் என கூறப்படுகிறது.
இதனால் பந்தய வீரர்கள் தங்கள் காரில் நைட்ரஸ் ஆக்சைடு சிஸ்டத்தை பயன்படுத்துவது வழக்கம். இந்தநிலையில் அஸ்வின் சுந்தர் தேசிய அளவில் கார் பந்தய வீரர் என்பதால், அவர் தனது காரில் அதிக வேகத்திற்காக நைட்ரஸ் ஆக்சைடு சிஸ்டத்தை பொருத்தியிருக்க வாய்ப்பு உள்ளதாக பொலிஸார் சந்தேகித்துள்ளனர்.
நொடிகளில் தீ பரவாது ஏன்னெனில் அஸ்வின் ரேஸ் பைக்கில் கூட நைட்ரஸ் ஆக்சைடு சிஸ்டத்தை பயன்படுத்தி இயக்கி இருக்க வாய்ப்பு இருக்கலாம் என பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்ததுள்ளது.
ஒரு வாகனம் விபத்து ஏற்படும் போது தீப்பிடிப்பது வழக்கம், ஆனால் இதுபோன்று நொடிகளில் பயங்கர தீ பரவாது என்று வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பிரத்யேக ஆய்வுக்கு முடிவு இதனால் பொலிஸாருக்கு சந்தேகம் அதிகரித்துள்ளது. எனவே விபத்தில் கருகிய சொகுசு காரை பிரத்யேக ஆய்வு செய்ய பொலிஸார் முடிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக பி.எம்.டபிள்யு நிறுவனத்தின் தொழில் நுட்ப வல்லுநர்களிடமும் சந்தேகங்களை கேட்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சதி ஏதேனும் நடந்திருக்கிறதா?
காரை முழுமையாக ஆய்வு செய்த பிறகே விபத்தின் முழு விவரமும் தெரியவரும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அஸ்வின் சுந்தர் சர்வதேச கார் பந்தய வீரர் என்பதால் விபத்தில் சதி ஏதேனும் நடந்திருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
எட்டு மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க நாடுகளிலிருந்து வரும் விமானங்களில், விமானிகள் தங்களுடன் விமானத்திற்குள் எடுத்துச் செல்லும் பைகளில் மடிக்கணிணினி மற்றும் டேப்லட் போன்ற மின்னனு சாதனங்களை எடுத்துச் செல்வதற்கு அமெரிக்க அரசாங்கம் தடை விதித்துள்ளது.
இந்த நடவடிக்கை 10 விமான நிலையங்களில் இயங்கும் ஒன்பது விமான சேவைகளை பாதிக்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வெளிநாடுகளில் உளவுத் துறையால் சேகரிக்கப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டே இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதில் மின்னனு சாதனங்களான மடிக்கணினி, கையடக்க அகல்திரை, புகைப்பட கருவி, இருவட்டு சாதனம் மற்றும் மின்னனு விளையாட்டு பொருட்கள் ஆகியவை அடங்கும் என செய்திகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் அலைபேசிகள் மற்றும் தொடுதிரை அலைபேசிகளை தங்களுடன் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும்.
உள்நாட்டு பாதுகாப்பு துறை, இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. இந்த புதிய தடை கடந்த சில வாரங்களாகவே பரிசீலனையில் இருந்ததாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்ற தண்டனை பெற்ற மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படம், பெயர் ஆகியவற்றை அரசு அலுவலகங்களிலும், அரசு திட்டங்களிலும் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக நீதி வழக்கறிஞர் பேரவையின் தலைவர் கே.பாலு, தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.
அந்த மனுவில், அரசு செலவில் ஜெயலலிதாவின் சமாதியை புதுப்பிப்பது சட்டவிரோதமாகும் என்றும் கூறியிருந்தனர்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக பொதுத்துறை முதன்மை செயலாளர் சிவ்தாஸ் மீனா பதில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது..
தமிழக பொதுத்துறை கடந்த 1970, 1989 மற்றும் 2006-ம் ஆண்டுகளில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளின்படி, அரசு அலுவலகங்களில் குடியரசு தலைவர், பிரதமர், மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, திருவள்ளுவர், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், மூதறிஞர் ராஜாஜி, தந்தை பெரியார், டொக்டர் பி.ஆர்.அம்பேத்கர், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர், வ.உ.சிதம்பரனார், காயிதே மில்லத், இந்திரா காந்தி, தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர்கள், தமிழக முதல்-அமைச்சர் ஆகியோரது புகைப்படங்களை வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணைகளின் படி ஜெயலலிதாவின் புகைப்படங்கள் அரசு அலுவலகங்களில் வைக்கப்படுகிறது.
ஜெயலலிதா இறந்துவிட்டதால், சொத்துக்குவிப்பு வழக்கில் அவருக்கு உச்ச நீதிமன்ற தண்டனை விதிக்கவில்லை. எனவே, மறைந்த முதல்-அமைச்சர் என்ற வகையில் அவரது புகைப்படங்களை அரசு அலுவலகங்களில் வைப்பதில் தவறு இல்லை. இந்த புகைப்படத்தை வைப்பதில் எந்த விதிமீறலும், சட்டவிரோதமும் இல்லை.
மேலும், அரசு திட்டங்களுக்கு ‘அம்மா’ என்று பெயர் சூட்டப்படுவதும் தவறில்லை. ‘அம்மா’ என்பது பொதுவான வார்த்தையாகும். எனவே, இந்த வழக்குகளை தள்ளுபடி செய்யவேண்டும். இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த பதில் மனுவை நீதிபதிகள் படித்து பார்த்தனர். அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் அட்வகேட் ஜெனரல் ஆஜராக உள்ளதால், விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக்கொண்டு, விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சில நாட்களாக ரன்பீர் கபூர், மாஹிரா கானின் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. மாஹிரா கான், ரன்பீர் கபூரின் அறை முன்பு கைகூப்பி கெஞ்சுவது போல் அந்த வீடியோவில் தெரிகிறது.
அண்மையில் இருவரும் துபாயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர். மாஹிரா, ரன்பிர் கபூரை பார்த்த மகிழ்ச்சியில் அப்படி பேசியுள்ளார்.
அவர் அனைவரிடமும் இப்படித் தான் பேசுகிறார் என்று விபரம் தெரிந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதோடு தான் நடித்திருக்கும் ஷாருக்கானின் ரயீஸ் பட புரொமோஷன் நிகழ்ச்சிக்கு தடையை மீறி வர நினைத்தேன் என மாஹிரா, ரன்பிரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஸ்மார்ட்போன்களைக் கட்டுப்படுத்தும் புதிய வகை இலத்திரனியல் டாட்டூக்களை, ஜெர்மனியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் வடிவமைத்துள்ளனர்.
பெர்லினில் உள்ள சார்லேண்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ள இந்த இ-டாட்டூவினை தோலின் மேல் ஒட்டிக் கொள்ளலாம்.
தலைமுடியை விட மெல்லியதாக வடிவமைக்கப்பட்ட இந்த இ-டாட்டூவுக்கு ஸ்கின் மார்க்ஸ் (Skin Marks) என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த டாட்டூவினை ஸ்மார்ட்போனில் இணைத்து, ஒலி அளவைக் கூட்டி, குறைப்பது மற்றும் பாடல்களை இயக்குவது மற்றும் இடைநிறுத்துவது உள்ளிட்டவைகளை செய்ய முடியும்.
இதேபோன்று ஸ்மார்ட்போன்களின் மற்ற இயக்கங்களையும் இதன் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
பூண்டு இயற்கையாகவே பல்வேறு மருத்துவ நன்மைகளை கொண்டுள்ளது.
அதிலும் இந்த பூண்டை வறுத்து சாப்பிட்டால், 24 மணிநேரத்தில் உடலினுள் ஏற்படும் அற்புத மாற்றங்கள் இதோ..
1 மணிநேரம்
வறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்ட ஒரு மணிநேரத்தில், அது இரைப்பையில் நன்கு செரிமானமானம் அடைந்து, உடலுக்கு சிறந்த உணவாக உதவுகிறது.
2-4 மணிநேரம்
பூண்டு உடலில் உள்ள ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடி, உடலினுள் இருக்கும் புற்றுநோய் செல்களை 2-4 மணி நேரத்தில் அழிக்கிறது.
4-6 மணிநேரம்
உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி, உடலினுள் இருக்கும் அதிகப்படியான நீர்மம் மற்றும் கொழுப்புகளை 4-6 மணிநேரத்தில் கரைத்து வெளியேற்றுகிறது.
6-7 மணிநேரம்
பூண்டில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், ரத்த நாளங்களில் நுழைந்தப் பின், அது ரத்தத்தில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடுகிறது.
7-10 மணிநேரம்
பூண்டில் உள்ள ஆரோக்கியமான சத்துக்கள் உடலால் உறிஞ்சப்படுவதோடு, பூண்டு உடலுக்கு நல்ல பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்துகிறது.
10-24 மணிநேரத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?
கொலஸ்ட்ராலின் அளவௌ சீராக்குகிறது.
தமனிகளை சுத்தம் செய்து, இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.
உடலின் ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது.
உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்குகிறது.
எலும்புகளின் வலிமை அதிகரிக்கச் செய்கிறது.
பூண்டு உடலில் உள்ள சோர்வைப் போக்கி, உடலில் உள்ள செல்களின் வாழ்நாளை நீட்டிக்கச் செய்கிறது.
வவுனியாவில் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரிக்கான குடிநீர் வடிகட்டும் இயந்திரத்தொகுதி வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்தினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த இயந்திரத்தொகுதி இன்று (21.03.2017) பாடசாலை அதிபர் அருட்சகோதரி ஜெயநாயகி தலைமையில் மாணவர்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
வவுனியா மாவட்டத்தில் சிறுநீரக நோயின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் சுகாதார அமைச்சினால் இதுவரையில் எட்டு பாடசாலைகளுக்கு குடிநீர் வடிகட்டும் இயந்திரத் தொகுதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
அமைச்சரின் வேண்டுகோளிற்கிணங்க வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் கனடா கிளையின் நிதியுதவியுடன் இந்த குடிநீர் வடிகட்டும் இயந்திரத்தொகுதி அமைக்கப்பட்டுள்ளதுடன் இதற்காக 3 இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த இயந்திரத்தொகுதியிலிருந்து நாளொன்றிட்கு இரண்டாயிரம் லீற்றர் வடிகட்டிய குடிநீரை பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும் இந்த நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திக்குழுவின் செயலாளர் சி.வில்வராசா, ஏ.ஜே.எஸ் நிர்மாணிகள் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் அகிலன், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் கடந்த 26 நாட்களாக தமது போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (21.03.2017) 26வது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக்கோரியும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் அவசரகாலச்சட்டத்தினை நீக்குமாறு கோரி தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் நோர்வே முதலிடம் பிடித்துள்ளது. சர்வதேச மகிழ்ச்சி தினம் உலகம் முழுவதும் நேற்று (20) கடைப்பிடிக்கப்பட்டது.
இதனையொட்டி, சமூக ஆதரவு, நம்பிக்கை, வாழ்க்கை முடிவுகளை எடுக்கும் சுதந்திரம், பெருந்தன்மை உள்ளிட்ட 6 காரணிகளைக் கொண்டு உலகின் அதிக மகிழ்ச்சியான நாடு எது? என சமீபத்தில் ஆய்வொன்று நடத்தப்பட்டது.
இதில் அதிக புள்ளிகள் பெற்று நோர்வே நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது. உலகின் வல்லரசு நாடான அமெரிக்கா இந்தப் பட்டியலில் 14 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் இந்த பட்டியலில் இலங்கை 120 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
இதில் முதல் 10 இடங்களைப் பிடித்த நாடுகளின் பட்டியல் பின்வருமாறு…
தூங்கும் வேலையை சிறப்பாகச் செய்தால் வருடத்திற்கு 20,000 சிங்கப்பூர் டொலர்களை (சுமார் 21,69,000 ரூபா) சம்பளமாக வழங்குகிறது சீன நிறுவனமொன்று.
பிரபல சீன உடல்நல ஊட்டச்சத்து நிறுவனமான ‘நாவ் பாய்ஜின்’ (Nao Baijin) இந்த அரிய வாய்ப்பை வழங்குகின்றது.
சீன இணையவாசிகளால் ‘உலகின் மிக சொகுசான வேலை’ என்ற பாராட்டை இது பெற்றுள்ளது.
இந்த வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள், நிறுவனத்தின் பொருட்களை சோதிக்கத் துணைபுரிவார்கள்.
நிறுவனத்தால் வழங்கப்படும் ஊட்டச்சத்து பொருளை உட்கொண்டு, அது தூக்கத்தின் தரத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என்பதே இவர்களின் பிரதான வேலை.
இந்த வேலை சீனாவில் இப்போது பிரபலமடைந்து வருகிறது. தற்போதைய பரபரப்பான உலகில் பலரும் முறையாகத் தூங்குவதில்லை. தூக்கமின்மையால் அவதியுறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனைத் தொடர்ந்தே தூக்கத்தைச் சோதிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது மருத்துவ உலகம்.