மலேசியாவில் பெண்களிடம் சேட்டை காட்டிய இலங்கையர் கைது!!

மலேசியாவில் இரண்டு பெண்களை பாலியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இலங்கையர் கடந்த திங்கட்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார் என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தொழிற்சாலையில் பணிபுரியும் 51 வயது பெண் ஊழியர் ஒருவரை தாக்கி, அவரது கையடக்க தொலைபேசி, பணம் மற்றும் கடன் அட்டையை கொள்ளையடித்துள்ளார் என இலங்கையர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் கடந்த 19ம் திகதி இடம்பெற்றது. தாக்குதலுக்கு இலக்கான பெண், கடும் காயங்களுக்கு மத்தியில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, குறித்த இலங்கையர் மின்னியல் தொழிற்சாலையில் பணிபுரியும் 27 வயது பெண் ஒருவரையும் தாக்கியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பஸ் நிலையத்தில் பஸ்ஸிற்காக காத்துக் கொண்டிருந்த 27 வயது பெண்ணிடம் இலங்கையர் பாலியல் சேட்டை புரிந்ததுள்ளார். இந்த சம்பவம் கடந்த 20ம் திகதி இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தை தொடர்ந்து குறித்த பெண் உரத்து சத்தமிட்டுள்ளார். அதனை தொடர்ந்து சந்தேகநபர் அந்த இடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார் என பொலிஸார் கூறியுள்ளனர். இந்த நிலையிலேயே தப்பிச் செல்ல முயன்ற சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாலியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டு தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, குறித்த இலங்கையர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வீதிகளில் நாய்களை விட்டுச் செல்பவர்களுக்கு 25,000 ரூபா அபராதம் மற்றும் இரண்டு வருட சிறை!!

வீதிகளில் நாய்களை கைவிட்டுச் செல்வோருக்கு 25,000 ரூபா அபராதமும் 02 வருட சிறைத்தண்டனை வழங்குவது குறித்து அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் உள்ளூராட்சி மன்றம் மற்றும் மாகாண சபை அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வீதிகளில் நாய்களை விட்டு செல்வதனால் மக்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

அந்தவகையில் வீதிகளில் நாய்கள் மற்றும் மிருகங்களைக் கைவிட்டு செல்வோருக்கு 25,000 ரூபா அபராதம் விதிக்கப்படுவதுடன் அதனை கட்ட மறுக்கும் பட்சத்தில் 02 வருட சிறைத்தண்டனையும் வழங்கப்டும்.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் 27ம் நாளாக தொடர்கின்றது!!

 
வவுனியாவில் கடந்த 27 நாட்களாக தமது போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (22.03.2017) 27ஆவது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக்கோரியும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் அவசரகாலச்சட்டத்தினை நீக்குமாறு கோரி தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

காரைதீவில் உள்ள அதிசய வாழை மரம்!!

தற்போது உலகத்தில் எந்த விடையங்கள் வித்தியாசமாக காணப்பட்டாலும் அல்லது வித்தியாசமாக செயற்பட்டாலும் அவை அனைத்தையும் பற்றி அதிகளவில் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பேசப்படுகின்றன.

அந்தவகையில், மூன்று கண்களுடன் பிறந்த கன்றுகுட்டி , கால்கள் ஊனமாக பிறந்த ஆட்டுக்குட்டி, நான்கு கிளைகளுடன் தென்னை மரம், பனை மரம் போன்ற செய்திகள் அண்மையில் ஊடகங்களில் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், தற்போது வாழை மரம் ஒன்றின் இடை நடுவில் வாழைக்குலை முளைத்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

காரைத்தீவு 5 ஆம் பிரிவில் உள்ள ஒருவரின் வீட்டிலேயே குறித்த மரத்தில் வித்தியாசமாக வாழை குலை வந்துள்ளது.

வழக்கமாக வாழை மரம் ஒருதடவை மட்டுமே தான் குலை போடுவதுடன், அதன் ஆயுள் காலமும் அத்துடனேயே முடிவடைந்து விடும்.

ஆனால் இந்த மரமானது வித்தியாசமாக காணப்படுகின்றமையினால் அவற்றினை காண்பதற்காக பலர் அந்த வீட்டிற்கு வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா உயர் தொழில்நுட்பகல்வி நிறுவகத்தின் நேர்முகப் பரீட்சையும் மாணவர்களை பதிவு செய்தலும்!!

வவுனியா உயர் தொழில்நுட்பகல்வி நிறுவகத்தின் 2017 ஆம் கல்வி ஆண்டிற்கான HND கற்கை நெறிக்களுக்கான நேர்முகப் பரீட்சையும் மாணவர்களை பதிவு செய்தலும் முறையே..

03.04.2017 HNDA முழுநேரம் (Full Time)
01.04.2017 HNDA பகுதிநேரம் (Part Time)
24.03.2017 HNDE முழுநேரம் (Full Time)
25.03.2017 HNDE பகுதிநேரம் (Part Time)
27.03.2017 HNDIT முழுநேரம் (Full Time)

மேற்குறிப்பிட்ட திகதிகளில்; இடம்பெறும் என்பதனை ஆறியத்தருகின்றேன். மேலதிக தொடர்புகளுக்கு 0242052733

தகவல்
பெ.இளங்குமரன்
கல்வி இணைப்பாளர்
உயர் தொழில்நுட்பகல்வி நிறுவனம்.

வவுனியாவில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!!

 
வவுனியாவில் இன்று (22.03.2017) மதியம் 3 மணியளவில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் உயிர்ச்சேதங்கள் எவையும் ஏற்ப்படவில்லை. இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா மத்திய அஞ்சல் அலுவலகத்திற்கு முன்பாக உள்ள மஞ்சல் கடவையில் இன்று (22.03.2017) மதியம் 3 மணியளவில் பாதசாரி ஒருவர் பாதையினை கடக்க முற்பட்டுள்ளார். A9 வீதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த கார் பாதசாரி கடவைக்கு முன்பாக தரித்து நின்றுள்ளது.

காருக்கு பின்னால் வந்த பல்சர் ரக மோட்டார் சைக்கிலும் தரித்து நின்றுள்ளது. பல்சர் ரக மோட்டார் சைக்கிலுக்கு பின்னால் வந்த மோட்டார் சைக்கில் பல்சர் ரக மோட்டார் சைக்கிலிலுடன் மோதியதில் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்த பல்சர் மோட்டார் சைக்கில் காருடன் மோதி விபத்துக்குள்ளானது.

வவுனியாவில் ஐ.நாவே இலங்கை அரசாங்கத்திற்கு கால நீடிப்பை வழங்காதே என ஆர்ப்பாட்டம்!!

 
ஐநா மனித உரிமைகள் ஆணையம் இலங்கைக்கு இரண்டு வருடகால அவகாசம் வழங்கக்கூடாது என தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று (22.03.2017) முன்னெடுத்தனர்.

ஐக்கிய நாடுகள் சபையால் மனித உரிமைப் பேரவையில் 2015 இல் தீர்மானிக்கப்பட்டு இலங்கை அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கடந்த 18 மாத காலப்பகுதிக்குள் எந்தவிதமான பிரச்சனைகளும் தீர்க்கப்படுவதற்கான எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளாத காரணத்தினால் கால அவகாசம் வழங்கக்கூடாது அவ்வாறு கால அவகாசம் வழங்குமிடத்து தமிழ் மக்களின் பிரச்சனைகள் யுத்த மீறல்கள் போன்றவற்றை நீர்த்துப்போகச் செய்வதற்கான வேலையை இலங்கை அரசு மேற்கொள்கிறது, ஆகவே எக்காரணம் கொண்டும் மேலதிக கால அவகாசம் வழங்கக் கூடாது என தெரிவித்தே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஐ.நாவே இலங்கை அரசாங்கத்திற்கு கால நீடிப்பை வழங்காதே, சர்வதேசமே எங்களுக்கு தீர்வைத் தா, வழங்காதே வழங்காதே காலநீடிப்பை வழங்காதே, சர்வதேசமே நீதியை புதைக்காதே என எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பினர்.

வவுனியாவில் தொடர்ச்சியாக சுழற்ச்சி முறையில் உண்ணாவிரதப்போராட்டத்தை மேற்கொண்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்றுடன் 27 நாட்களாக நீதியை எதிர்பார்த்து போராடிக்கொண்டிருக்கிறார்கள் எனபது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல் : திரு சோமசுந்தரம் நவரட்ணம்!!

திரு சோமசுந்தரம் நவரட்ணம்
(பாவற்குளமணியம்)
பிறப்பு : 23 பெப்ரவரி 1942 — இறப்பு : 21 மார்ச் 2017

யாழ். நயினாதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் நவரட்ணம் அவர்கள் 21-03-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், உத்தமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், அப்புத்துரை, இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும், இந்திராணி, சிவபாக்கியம் ஆகியோரின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற தயாளன், இந்திராதேவி, காலஞ்சென்ற வில்வரட்ணம், நந்தினிதேவி, காலஞ்சென்றவர்களான ஸ்ரீதேவி, குணரட்ணம்(உரிமையாளார்- கபிலன் ரவல்ஸ்), மற்றும் ஜீவரட்ணம்(உரிமையாளர்- ஜீவன் அரிசி ஆலை, கனடா), ரஞ்சினிதேவி(கால்நடை உதவியாளர், சுகாதாரத் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்), றஜனிதேவி, தயாளினி, விஜயரட்ணம்(உரிமையாளர்- ரட்ணா ரவல்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நீலாம்பிகை(கனடா), காலஞ்சென்ற இராசரட்ணம், செல்வரட்ணம்(கனடா), வேதநாயகி அம்பாள்(கனடா), சுந்தரலிங்கம், தெய்வநாயகி அம்பாள், வள்ளிநாயகி அம்பாள், இராசலிங்கம், காலஞ்சென்றவர்களான செல்வராணி, புஸ்பராணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற பத்மநாதன், பத்மநாதன், சுவந்தி, கிருஷ்னாள், வஸ்தியாம்பிள்ளை, காலஞ்சென்ற சந்திரன், சந்திரபோஸ், சுஜாந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இராசேந்திரம், சிவயோகம், மகேந்திரன், காலஞ்சென்ற ரகு, பிரேமகுமாரி, காலஞ்சென்ற ஜெயகுமாரி, தவனேந்திரன், தெய்வேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பார்த்தீபன், கிருத்திகா(பிரான்ஸ்), ஜெகதீபன்(உரிமையாளார்- ஜீவன் அரிசி ஆலை, வவுனியா), நிரஞ்சனா, கௌசிகன்(கனடா), நிரஞ்சலா(ஆசிரியை- இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம், வவுனியா), இந்திரதீபன்(பிரான்ஸ்), திருக்குமரன்(பிரான்ஸ்), குபேரன்(பிரான்ஸ்), குகநாதன்(பிரான்ஸ்), கபிலன், அபிஷன், விதுஷன்(கனடா), நிவேதா(கனடா), ஜீவிதா(கனடா), தனுசியன், பவதாரணி, காலஞ்சென்ற கோஷிகன், தர்சினி, யசோதன்(டுபாய்), மௌசியா, மதுமிதா, கோபிகா, கோபிநாத், சங்கவி, ரிசோபன், பிரணதி, டினுஷ் ஆகியோரின் அன்புப் பேரனும், விதுரன், அச்சன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23.03.2017 வியாழக்கிழமை அன்று பி.ப 1 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று தச்சனாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல: 74/58, A.G.A ஒழுங்கை,
மன்னார் வீதி,
வவுனியா.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
இலங்கை
தொலைபேசி: +94242221183

உயிரிழை அமைப்பின் தொழிற்பயிற்சி கட்டடம் பிரமாண்டமாக திறப்பு விழாவிற்கு தயாராகின்றது!!

 
வடக்கு கிழக்கு மாகாணங்களில் போரினாலும் விபத்துக்களாலும் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் பெரும் சவால்களின் மத்தியில் வாழ்வினை கொண்டு செல்லும் உறுப்பினர்களின் நலனை கவனிக்க அவர்களாலேயே உருவாக்கப்பட்டு இயங்கி வரும் உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிபுற்றோர் அமைப்பு தன் பணிகளை விரிவாக்கி செயற்பட ஏ 9 வீதி மாங்குளத்தில் அமைக்கப்பட்டிருக்கும் அலுவலகத்தினுடனான தொழிற்பயிற்சி கட்டிட நிர்மாண வேலைகள் வெறும் 2 மாதங்களிலேயே முடிவடைந்து 30.03.2017 பிரமாண்டமாக திறந்து வைப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன என அமைப்பின் தலைவர் வி.ஜெயகாந்தன் குறிப்பிட்டுள்ளார்.

கட்டிடத் தொகுதி நிர்மாணத்திற்கான முழுப்பொறுப்பை கனடா வாழ் ஈழ உறவுகளும் ஏனைய நல்லுள்ளம் கொண்ட உறவுகளும் ஏற்றிருந்தனர். கனடா பிரம்ரன் தமிழ் ஒன்றியத்தினரும் பிரம்ரன் தமிழ் முதியோர் அமைப்பினரும் கனடா உறவுகளான V.அஜந்தன் , S.துசிதா , தாஸ் கதிரமலை ஆகியோரும் சுவிஸ் வலே தமிழ்சங்கம் , பிரான்ஸ் ஈழவர் இணைந்து இதற்கு தேவையான 55 லட்சத்திற்கு மேற்பட்ட தொகையை திரட்டி வழங்கியுள்ளனர். இதற்காக பங்களிப்பு நல்கிய அனைத்து நல்லுள்ளங்களின் ஆதரவுக்கரங்களையும் அன்புடன் பற்றிக் கொள்வதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

கழுத்துக்கு கீழே இடுப்புக்கு கீழே இயக்கம் அற்றவர்கள் இவ்வமைப்பால் பராமரிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்தைதீவு வவுனியா மன்னார் திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை ஆகிய மாவட்டங்களில் நிர்வாக பொறுப்பாளர்களைக் கொண்டு அவ்வாறு பாதிப்புற்றுள்ளோரை இவ்வமைப்பு தனது கவனப்பிற்குள் கொண்டுவந்து அவர்களுக்கான செயற்திட்டங்களான சிறுதுளி செயற்திட்டம் , நம்பிக்கை செயற்திட்டம் , மாணவர்களுக்கான கல்வி செயற்திட்டம் என்று பல்வேறு செயற்திட்டங்களை புலம்பெயர் உறவுகள் அமைக்கள் இடம் இருந்து உதவிகளை பெற்று சிறப்பாக செயற்படுத்தி வருகின்றனர் இச்செயற்பாடுகளை இணைக்கும்

தலைமையகமாகவும் பாதிப்புற்றோருக்கான சுயதொழில் பயிற்சிகளை வழங்குதல் முதல் கொண்டு பல்வேறு நலத் திட்டங்கள் இங்கிருந்து முன்னெடுக்கப்படவுள்ளது.

கட்டிடம் தயாராகியுள்ள நிலையில் தொழில் பயிற்சி உபகரணங்களை பெற்றுக்கொள்ளல் மற்றும் பாடநெறிகளைத் தயாரித்தல் போன்றவை முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கு தேவையான மேலதிக நிதியை தமிழ் நலனில் அக்கறையுள்ள தமிழ் உறவுகள் அனைவரும் தந்துதவுவார்கள் என்றும் இப்பணியை விரைந்து முடிக்க அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்பதாக உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிப்புற்றோர் அமைப்பினர் தெரிவித்தனர்.

இதற்கான பணியை அனைவரிடமும் கேட்டு இருப்பதாக தெரியப்படுத்தினார்கள். இப்புனிதப்பணியில் தம்மையும் இணைத்து பங்களிப்பு செய்ய விரும்பும் நல் உள்ளம் கொணடவர்கள் அனைவரையும் உடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். அத்தொடு 30.03.2017 காலை திறப்புவிழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்புடன் வரவேற்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.தொடர்புக்கு அழைக்க வேண்டிய தொலைபேசி இலக்கம் 0213900202, 0774761192அல்லது மின்அஞ்சல் uyirilaisci.org@gmail.com ​

இலங்கை கிரிக்கெட் அணியின் மரணச் செய்தியை வெளியிட்டு பத்திரிகைகள் தாக்குதல்!!

பங்களாதேஸ் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்ததால் மரணச் செய்தியை வெளியிட்டு பத்திரிகைகள் இலங்கை அணியை தாக்கியுள்ளது.

பங்களாதேஸ் கிரிக்கெட் அணி இலங்கையில் சென்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.

காலியில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இலங்கை அணி வெற்றி பெற்றது.கொழும்பில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இலங்கை அணி நான்கு விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.

பங்களாதேஸ் அணி தனது 100-வது டெஸ்டில் வெற்றி பெற்று சரித்திர சாதனை படைத்தது. அத்துடன் இலங்கைக்கு எதிராக தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

இலங்கை அணியின் தோல்வியை அங்குள்ள பத்திரிகைகளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இலங்கை அணி மீது கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது.

ஒரு பத்திரிகை மரணச் செய்தி என இலங்கையின் தோல்வியை குறிப்பிட்டு, ஆஷஸ் தொடர் வரலாற்றுடன் ஒப்பிட்டுள்ளது.

கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் 2017-ம் ஆண்டும் மார்ச் 19-ந்தேதி இலங்கை அணி மரணமடைந்து விட்டது. அணியின் உடலை எரித்து, அந்த சாம்பல் பங்களாதேஸ் நாட்டிற்கு கொண்டு செல்லப்படும் என்று எழுதியுள்ளது.

முன்னதாக, 1882-ம் ஆண்டு லண்டன் ஓவலில் நடந்த டெஸ்ட் போட்டியை மறக்க முடியாது. இங்கிலாந்துக்கு எதிரான அந்த போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அந்த அணியின் பிராட் ஸ்போபர்த்தின் அசுர வேகப்பந்து வீச்சால், இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் தனது முதல் தோல்வியை சந்தித்தது.

இது குறித்து லண்டன் “ஸ்போர்ட்டிங் டைம்ஸ்” பத்திரிகையில் ரெஜினால்டு ஷர்லி புரூக்ஸ் மிகவும் கேலியாக விமர்சனக் கட்டுரை எழுதினார்.

அதில் “1882-ம் ஆண்டு 29ந்தேதி ஓவல் மைதானத்தில் இங்கிலாந்து அணி மரணம் அடைந்து விட்டது. இதற்காக ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். அணியின் உடல் எரிக்கப்பட்டு அதன் சாம்பல் அவுஸ்திரேலியாவுக்கு எடுத்து செல்லப்படும்’’ என கண்ணீர் அஞ்சலி போல குறிப்பிடப்பட்டிருந்தது.

தற்போது இலங்கை பத்திரிகையும் ஆஷஸ் தொடரை இந்த தொடருடன் ஒப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

– மாலைமலர்-

3 வயதுக் குழந்தையை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய தந்தை : நீதிமன்றத்தில் கூறிய அதிர்ச்சிக் காரணம்!!

அவுஸ்திரேலியாவில் தந்தை ஒருவர் மனைவிக்கு முன் 3 வயது குழந்தையை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது.

பெர்த் நகரத்திலே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது. குற்றவாளியான 43 வயதான எட்வர்ட் ஹெர்பர்ட் நீதிமன்ற விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

சம்பவத்தன்று பகல் முழுவதும் மது அருந்திய ஹெர்பர்ட், அதன் பின் கஞ்சா அடித்துள்ளார். பின்னர், நள்ளிரவு மனைவியை கொன்றுவிடுவேன் என மிரட்டிய ஹெர்பர்ட் 3 வயது குழந்தை மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளார். இதனையடுத்து, 7 வயது குழந்தையின் உடலிலும் பெட்ரோல் ஊற்றியுள்ளார்.

உடனே அண்டை வீட்டுக்காரரான டேனியல் மேக்மில்லன் என்பவர் ஹெர்பர்ட் வீட்டில் நுழைந்து உதவியுள்ளார்.

அப்போது, குழந்தை அழகாக இருந்ததால் கொளுத்தியதாக டேனியலிடம் கூறிய ஹெர்பர்ட், அது என் குழந்தை நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என டேனியலையும் மிரட்டியுள்ளார்.

இதில் குழந்தையின் முகம் மற்றும் உடலின் மேல் பகுதியில் பயங்கர தீ காயம் ஏற்பட்டுள்ளது.

நீதிமன்ற விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்ட ஹெர்பர்ட், சம்பவத்தின் போது போதையில் தான் பைத்தியம் போல் இருந்ததால், இது குற்றம் இல்லை என நீதிமன்றத்தில் கூறியுள்ளார். இந்நிலையில், நீதிபதி வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.

ஏலியன் போல் பிறந்த குழந்தை : பால் தர மறுத்த தாய்!!

இந்தியாவில் ஏலியன் போன்ற உருவம் கொண்ட குழந்தை பிறந்ததால், தாய் குழந்தைக்கு பால் தர மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் பீகார் மாநிலத்தின் கதிகார் பகுதியைச் சேர்ந்த Khalida Begum என்பவருக்கு கடந்த திங்கட் கிழமை ஆண் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தையை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக இந்த குழந்தையை எடுத்துச் சென்றுவிடுங்கள், எனக்கு இந்த குழந்தை வேண்டாம் என்று கூறியுள்ளார்.

குழந்தை பிறக்கும் போதே harlequin ichthyosis என்ற நோயின் தாக்கத்தால் பிறந்துள்ளது. இதனால் குழந்தை காண்பதற்கு ஏலியன் போன்று இருந்துள்ளது.

சிறியதலை, வீங்கிய கண்கள் மற்றும் தடித்த தோல்கள் என பல்வேறு பிரச்சனைகளுடன் பிறந்துள்ளது. காண்பதற்கு சற்று பயத்துடனே இருந்துள்ளது. இதன் காரணமாகவே குழந்தையின் தாயார் அதிர்ச்சியடைந்து தாய் பால் தர மறுத்துள்ளார்.

Khalida Begum-க்கு இப்படி ஒரு குழந்தை பிறந்ததை அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். ஒரு சிலர் இது கடவுள் என்றும் ஒரு சிலர் இது இந்து மத கடவுளான ஹனுமான் என்று கூறியுள்ளனர்.
அதன் பின் அவர் சமாதானம் ஆனதாக கூறப்படுகிறது.

இது குறித்து Khalida Begum கூறுகையில், தனக்கு நான்கு குழந்தைகள் இருக்கிறது, அவர்கள் அனைவரும் நன்றாக இருக்கிறார்கள். இவன் மட்டும் எப்படி என்று அதிர்ச்சியடைந்தேன்.

அதன் பின் இவனை யாராவது எடுத்துச் சென்று விடுங்கள் என்று கூறினேன் என கூறியுள்ளார்.

குழந்தையின் தந்தை Mohammed Imtiyaz கூறுகையில், இது கடவுள் தமக்கு கொடுத்தது என்றும், ஒரு வேலை கடவுளே கூட பிறந்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.

6 வயதுச் சிறுவனுக்கு இப்படி ஒரு நிலைமையா : நீதிபதிகள் வருத்தம்!!

பல சட்டங்கள் இருந்தும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுவனுக்கு நீதி கிடைக்காதது துரதிருஷ்டம் என்று நீதிபதிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் கடந்த 2011-ஆம் ஆண்டு தனது ஆறு மாதக் குழந்தைக்கு தடுப்பூசி போட்டுள்ளார்.

அதன் பின்னர் ஊசிப்போட்ட இடத்தில் சிறிய ரத்தக்கட்டு உருவானது. இது நாளைடைவில் சரியாகி விடும் என்று அவர்கள் கருதியுள்ளனர்.

ஆனால், கட்டி பெரிதாக வளர்ந்து வந்துள்ளது. தற்போது, சிறுவனுக்கு 6 வயதாகும் நிலையில், ரத்தக் கட்டி 3 கிலோ எடையில் புற்றுநோய் கட்டியாக மாறியுள்ளது.

இந்த செய்தி ஊடகங்களில் வெளியானதால் தாமாக முன்வந்து இந்த வழக்கை எடுத்து உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தியது. விசாரணையின் முடிவில் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

அதில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். சிகிச்சை அளிப்பது குறித்து சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் உறுதி செய்ய வேண்டும்.

சிறுவனை புற்று நோய் சிகிச்சை மையத்தில் அனுமதிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். சிறுவனுடன் பெற்றொர் தங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

மேலும், பல சட்டங்கள் இருந்தும் சிறுவனுக்கு நீதி கிடைக்காதது துரதிருஷ்டம் என்று நீதிபதிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இளைஞர் மீதான தாக்குதல் சம்பவம் : மூவருக்கு விளக்கமறியல்!!

வவுனியா, யங்ஸ்ரார் விளையாட்டுக் கழக உதைப்பந்தாட்ட அணித் தலைவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூவருக்கு எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9.40 மணியளவில் வவுனியா நகரில் இருந்து வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த போது யங்ஸ்ரார் விளையாட்டுக் கழக உதைப்பந்தாட்ட அணித் தலைவர் இ.கார்த்திகேயன் (வயது 29) என்பவர் பட்டானிச்சூர் பகுதியில் வைத்து சகோதர இனத்தைச் சேர்ந்த இளைஞர் குழுவொன்றினால் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்ததுடன், அவர் அணிந்திருந்த சங்கிலியும் காணாமல் போயிருந்தது.

இந்நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குறித்த நபரின் வாக்கு மூலத்தை பொலிசார் பதிவு செய்ய மறுத்ததுடன் சமரசம் செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.

இதேவேளை, வவுனியசாலைக்கு சென்ற வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் அவர்களும் இது தொடர்பில் முறைபாடு செய்ய வேண்டாம் என பாதிக்கப்பட்ட இளைஞனின் தரப்பிடம் கூறியிருந்தார்.

குறித்த விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் பொலிசாருடன் தமது முறைப்பாட்டை பதிவு செய்யுமாறு நீண்ட நேரமாக வாக்குவாதப்பட்டதன் விளைவாக திங்கள் கிழமை இரவு 8 மணியளவில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதுடன் சம்பவம் தொடர்பில் சகோதர இனத்தைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும் நேற்றைய தினம் (21.03) வவுனியா நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் அவர்கள் மூவரையும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கம்பஹா திரையரங்கில் ஜோடியாக சினிமா பார்த்த பாடசாலை மாணவ மாணவிகள் 48 பேர் சிக்கினர்!!

கம்பஹா நகரிலுள்ள திரையரங்கு ஒன்றில் ஜோடி, ஜோடியாக சினிமா பார்த்துக் கொண்டிருந்த குற்றச்சாட்டில் 48 பாடசாலை மாணவ, மாணவிகள் கம்பஹா பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

மேலதிக வகுப்புகளுக்கு செல்வதாக பெற்றோரிடம் தெரிவித்து விட்டு கம்பஹா நகருக்கு வந்து திரையரங்குகளுக்கு சென்று சல்லாபித்துக் கொண்டிருந்தபோதே சனிக்கிழமை இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பஹா பொலிஸார் மாணவ மாணவிகளின் பெற்றோரை பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து மாணவ மாணவியரை கடுமையாக எச்சரித்த பின்னர் அவர்களிடம் ஒப்படைத்தனர்.

நீர்வீழ்ச்சியில் மரம் முறிந்து வீழ்ந்ததில் 18 மாணவர்கள் உட்பட 20 பேர் பலி!!

 
கானாவில் நீர்­வீழ்ச்சி ஒன்றில் மர­மொன்று முறிந்து வீழ்ந்­ததில் 20 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

கானாவின் கின்­டம்போ பகு­தி­யி­லுள்ள பிர­சித்தி பெற்ற நீர்­வீழ்ச்­சி­யி­லேயே நேற்று முன்­தினம் இந்த சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

நீர்­வீழ்ச்­சியில் நீராடிக் கொண்­டி­ருந்­த­போது ஏற்­பட்ட புயல் கார­ண­மாக குறித்த மரம் முறிந்து வீழ்ந்­துள்­ளதால் இந்த உயி­ரி­ழப்பு இடம்­பெற்­றுள்­ள­தாக மீட்புப் படை அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

இந்தச் சம்­பவம் தொடர்பில் கானாவின் தேசிய தீய­ணைப்புப் படையின் பேச்­சாளர் பிரின்ஸ் பில்லி அநக்லேட், இது வழ­மைக்கு மாறான ஒரு சம்­ப­வ­மாகும் என தெரி­வித்­துள்ளார். சரிந்து வீழ்ந்த மரத்தை அகற்றும் பணியில் ஒருங்­கி­ணைந்த பொலிஸ் பிரி­வினர் மற்றும் தீய­ணைப்புப் படை­யினர் ஈடு­பட்­டுள்­ளனர்.

பாரிய மர­மொன்று மலையோடு சேர்ந்து சரிந்து வீழ்ந்­தது என சம்­ப­வத்தை நேரில் கண்ட ஒருவர் தெரி­வித்­துள்ளார். இதன்­போது உயி­ரி­ழந்­த­வர்­களில் அதி­க­மா­ன­வர்கள் வென்ச்சி உயர் பாட­சா­லையைச் சேர்ந்த மாண­வர்கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. ஏனை­ய­வர்கள் சுற்­றுலாப் பய­ணி­க­ளாவர்.

மேலும் தீய­ணைப்புப் படை பேச்­சாளர் அநக்லேட், 18 மாண­வர்கள் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­த­தா­கவும் ஏனைய இருவர் வைத்­தி­ய­சா­லையில் வைத்து உயி­ரி­ழந்­த­தா­கவும் ஏ.எவ்.பி. க்கு தெரி­வித்­துள்ளார்.
காய­ம­டைந்த 20 பேரும் கின்­டம்போ பிர­தேச வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வரு­கின்­றனர் என தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இதனால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக கானாவின் சுற்றுலாத் துறை அமைச்சர் கதெரின் அபெலெமா அபெகு தெரிவித்துள்ளார்.