இரட்டை இலை சின்னம் முடக்கம் : தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!!

அதிமுகவின் இலைச்சின்னத்தை யாருக்கும் அளிக்காமல் தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளது. அதேபோல் அதிமுக பெயரை பயன்படுத்தவும் இருதரப்புக்கும் தடை விதித்துள்ளது.

ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலைச்சின்னம் யாருக்கும் வழங்கப்படாது- அது முடக்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு இரண்டாவது முறையாக இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டுள்ளது.

அதிமுக சசிகலா அணி ஓபிஎஸ் அணி என இரண்டாக உடைந்ததை அடுத்து அதிமுகவின் வெற்றிச் சின்னமான இரட்டை இலையை கைப்பற்ற இரு தரப்புக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வந்தது.

இந்நிலையில் இன்று காலை முதலே இரு தரப்பினரிடமும் தேர்தல் ஆணையம் நேரில் விசாரணை நடத்தியது. இருதரப்பினரும் தங்களின் வாதங்களை முன் வைத்தனர். மாலை 5 மணியுடன் வாதங்கள் முடிந்த நிலையில் முடிவுகள் மாலையே வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலைச்சின்னம் யாருக்கும் வழங்கப்படாது. முடக்கி வைத்துள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கட்சி பெயரை பயன்படுத்தவும் தடை எம்.ஜிஆர். மறைவுக்குப் பின்னர் இரண்டாவது முறையாக இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளது. மேலும் அதிமுக என்ற பெயரை இருதரப்பும் பயன்படுத்தவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

இரு தரப்பும் புதிய கட்சியின் பெயரை வியாழக்கிழமை காலை 10 மணிக்குள் தெரிவிக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இரட்டை இலைச் சின்னம் முடக்கம் என்பது இடைக்கால உத்தரவுதான் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 20 பக்க ஆவணங்களை படித்து உடனடியாக தீர்ப்பு வழங்குவது கடினம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் கூடுதல் ஆவணங்களை சமர்பிக்க வரும் எப்ரல் 17ம் தேதி வரை தேர்தல் ஆணையம் இருதரப்புக்கும் கெடு விதித்துள்ளது. இரு தரப்புக்கும் நியாயமாக நடந்து கொள்ளவே சின்னம் முடக்கப்பட்டது. ஓரிரு நாளில் தெளிவான முடிவை எடுக்க இயலவில்லை.

இன்று இரு தரப்பினருக்கும் புதிய சின்னம் ஒதுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு இரட்டை இலைச்சின்னம் இரண்டாவது முறையாக முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இரட்டை இலை சின்னத்தையும், கட்சியின் பெயரையும் இடைத்தேர்தலில் யாரும் பயன்படுத்தக்கூடாது என்பதன் காரணமாக, காலை 10 மணிக்குள்ளாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும், சசிகலா தரப்பினரும் தங்களுக்கான சின்னங்களைத் தேர்வு செய்து, பெயரையும் கொடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மக்கள் வாழ்க்கைத் தர மேம்பாடு : உலகப் பட்டியலில் இலங்கைக்கு 73வது இடம்!!

மக்களின் வாழ்க்கைத் தர மேம்பாட்டில் இலங்கை 73வது இடத்தில் உள்ளதாக ஐ.நா. ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014-15-ஆம் நிதியாண்டில் உலக அளவில் மக்களின் வாழ்க்கைத் தர மேம்பாடு குறித்து ஐ.நா. ஆய்வு செய்து அண்மையில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இந்த ஆய்வறிக்கையானது ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வெளியிடப்பட்டது.

188 நாடுகளில் ஆய்வு மேற்கொண்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையில், மக்களின் வாழ்க்கைத் தர மேம்பாட்டின் அடிப்படையில் நாடுகள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

பாலின விகிதம், மக்களின் சராசரி ஆயுட்காலம், பாதுகாப்பு, அரசின் மீதான நம்பிக்கை, நீதித்துறை செயல்பாடுகள், பேறுகால மரணம், கல்வி நிலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் தரம் – நாட்டின் பாதுகாப்பு – சமூகத்தில் விரும்பியவற்றை தேர்ந்தெடுப்பதற்கான உரிமை, அரசின் மீது நம்பிக்கை, நீதித்துறை மீது நம்பிக்கை, போன்ற அம்சங்களின் அடிப்படையில், இந்தியாவுக்கு 131வது இடம் கிடைத்துள்ளது.

இந்த தரவரிசைப் பட்டியலில் நோர்வே முதலிடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 147வது இடத்திலும், வங்கதேசம் 139வது இடத்திலும் உள்ளது.இலங்கை 73வது இடத்தையும், மாலைதீவு 105வது இடத்தையும் பிடித்திருக்கின்றன. சீனா 90வது இடத்தில் உள்ளது.

ஒரு ஆடையின் விலை 80 கோடி : அப்படி என்ன சிறப்பு?

 
திருமணம் என்றதும் அனைவரும் யோசிக்கும் முக்கியமான விஷயம் ஆடை. பெரும்பாலானோர்கள் தங்களின் வசதிகேற்ப தேர்ந்தெடுப்பர். சிலர் மிக சிறப்பாக அமைய வேண்டும் என எண்ணுவர்.

சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்ட ஆடையினை அணிய வேண்டும் என்பதே அனைவரது நோக்கமாக இருக்கும்.

Luxury Brands Lifestyle என்னும் மணமகள் உடை வடிவமைப்பு நிகழ்ச்சியின் போது கலிபோர்னியாவின் Beverly Hills-ல் உள்ள திருமண நிகழ்ச்சியினை நடத்தி கொடுக்கும் நிறுவனத்தினை சேர்ந்த Staruss அமெரிக்காவில் உள்ள பிரபல நகை வடிவமைப்பாளருடன் இணைந்து மணமகள் அணியும் ஆடையினை வடிவமைத்துள்ளார்.

இந்த ஆடையில் 150 கரட் மதிப்புள்ள வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆடையின் மதிப்பானது சுமார் 80கோடி ஆகும்.

உலகிலேயே அதிக மதிப்புடைய மணமகள் உடை என்னும் பெயர் பெற்று கின்னஸ் புத்தகத்தில் 2006ம் ஆண்டு இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவரின் முகம் மீண்டும் வடிவமைப்பு : ஆராய்ச்சியாளர்கள் சாதனை!!

 
பிரித்தானியாவில் 700 ஆண்டுகளுக்கு முன்னர் மரணமடைந்தவரின் முகத்தை நவீன தொழில்நுட்பம் மூலம் ஆராய்ச்சியாளர்கள் மீண்டும் உருவாக்கியுள்ளனர்.

பிரித்தானியாவில் உள்ள Cambridge நகரில் ஒரு புகழ்பெற்ற மருத்துவமனை உள்ளது. இதன் பின்புறம் உள்ள கல்லறையில் 13ஆம் நூற்றாண்டில், அதாவது 700 ஆண்டுகளுக்கு முன்னர் புதைக்கப்பட்ட ஒருவரின் எலும்புகூட்டை விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் தோண்டி எடுத்தனர்.

அதற்கு அவர்கள் Context 958 என பெயரிட்டுள்ளனர். Context 958ன் எலும்பை வைத்து முக புனரமைப்பு தொழில்நுட்ப உதவியுடன் ஆராய்ச்சியாளர்கள் முதத்தை வடிவமைத்து ஆச்சரியப்படுத்தியுள்ளனர்.

இது குறித்து Cambridge பல்கலைகழக பேராசிரியர் John Robb கூறுகையில், Context 958 நபரின் முகத்தை வெற்றிகரமாக வடிவமைத்துள்ளோம். அவர் தனது 40 வயதில் மரணமடைந்துள்ளார்.

அவர் எலும்புகள் வலுவாக உள்ளன. அவர் நன்றாக உழைப்பவராக இருக்க வேண்டும். உடல் நிலை கோளாறு காரணமாக Context 958 இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். தங்கள் ஆராய்ச்சி தொடரும் எனவும் John தெரிவித்துள்ளார்.

சிறுத்தை புலியிடம் சிக்கிய 3 வயது குழந்தை : தன் உயிரை பணையம் வைத்து காப்பாற்றிய தாய்!!

 
மும்பையில் மூன்று வயது குழந்தையை காட்டுக்குள் இழுத்து சென்ற சிறுத்தை புலியிடம் இருந்து தைரியமுடன் அக்குழந்தையின் தாய் மீட்டுள்ளார்.

மும்பையின் சஞ்சய் காந்தி தேசிய பூங்கா அருகே ஆரே காலனியில் பிரமீளா ரின்ஜட் (23). இவருக்கு 3 வயதில் பிரணாய் என்ற மகன் இருக்கிறார். இந்த நிலையில், பிரமீளா கடந்த திங்கட்கிழமை இரவில் வன பகுதிக்கு சென்றுள்ளார். அவரை பின்தொடர்ந்து சிறுவன் பிரணாயும் சென்றுள்ளான். இதனை பிரமீளா அறியவில்லை.

இந்நிலையில், அப்பகுதிக்கு வந்த சிறுத்தை புலி ஒன்று சிறுவனை தாக்கி பிடித்துள்ளது. இதனால் சிறுவன் அலறியுள்ளான். இந்த சத்தத்தினை கேட்டு அதிர்ச்சியடைந்த பிரமீள, பின்னர் தைரியமுடன் பாய்ந்து சென்று அதனை விரட்டியுள்ளார்.

அதன்பின் சிறுத்தை புலி புதருக்குள் சென்று மறைந்து விட்டது. பிரமீளா சத்தம் போட்டதை கேட்டு உள்ளூர்வாசிகள் உடனடியாக அங்கு சென்றுள்ளனர். அவர்கள் உதவியுடன் பிரணாய் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளான். அங்கு சிறுவனுக்கு 2 தையல்கள் போடப்பட்டன. அதன்பின் சிறுவன் வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.

எறும்புகளை அழிக்க முயன்று வீட்டை தீக்கிரையாக்கிய இளைஞர்!!

எறும்புகளை அகற்றுவதற்கு முயன்ற இளைஞர் ஒருவர், வீடொன்றை தீக்கிரையாக்கிய சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் வடகிழக்கு பிராந்தியமான மேய்ன் மாநிலத்திலுள்ள பலகைகளினால் நிர்மாணிக்கப்பட்ட வீடொன்று அண்மையில் தீப்பற்றி எரிந்தது.

தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும், தீ பரவுவதற்கு காரணமான, 21 வயதான டெவோன் எனும் இளைஞன் காயங்களுக்குள்ளானதுடன் ஒரு நாயும் இரு பூனைகளும் உயிரிழந்தன.

மேற்படி இளைஞன் இது தொடர்பாக பொலிஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், தனது பெற்றோரின் வீட்டின் அடிப்பகுதியிலுள்ள எறும்புகளை தீ வைத்து அழிப்பதற்கு தான் முயன்றபோது வீடு தீப்பற்றியதாக தெரிவித்துள்ளார்.

வண்­ணத்­துப்­பூச்­சி­களை கொன்ற நபர் குற்­ற­வாளி என நீதி­மன்றம் தீர்ப்பு!!

அரி­ய ­வகை வண்­ணத்­துப்­பூச்­சி­களை பிடித்­தமை மற்றும் கொன்­றமை தொடர்­பான வழக்கில் பிரிட்­டனைச் சேர்ந்த நபர் ஒருவர் குற்­ற­வாளி என அந்­நாட்டு நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­துள்­ளது.

57 வய­தான பிலிப் குலென் எனும் இந் ­நபர், லார்ஜ் புளூ (Large Blue) எனும் வண்­ணத்­துப்­பூச்­சி­களை பிடித்துக் கொன்­ற­தாக குற்றம் சுமத்­தப்­பட்டார்.

லார்ஜ் புளூ இன வண்­ணத்­துப்­பூச்­சிகள், 1795 ஆம் ஆண்டில் பிரிட்­டனில் முதல் தட­வை­யாக கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன. 1979 இல் பிரிட்­டனில் இவ்­வினம் அழிந்­தது.

எனினும், 1983 ஆம் ஆண்டு பல லார்ஜ் புளூ வண்­ணத்­துப்­பூச்­சிகள் பிரிட்­ட­னுக்கு கொண்­டு­செல்­லப்­பட்டு அங்கு மீண்டும் அவ்­ வண்­ணத்­துப்­பூச்­சிகள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

இவ்­ வண்­ணத்துப் பூச்­சி­களை பிலிப் குலென் பிடித்து கொன்று விற்­பனை செய்து வந்­த­தாக குற்றம் சுமத்­தப்­பட்டார்.

இது தொடர்­பான வழக்கில் அவர் குற்­ற­வாளி என பிரிஸ்டல் நகர நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவருக்கான தண்டனை அடுத்த மாதம் அறிவிக்கப்படவுள்ளது.

பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நபர் பால்மாற்று சிகிச்சையின் பின் பெண்கள் சிறைக்கு மாற்றம்!!

பிரிட்டனில் பாலியல் வல்லுறவு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நபர் ஒருவர், பெண்ணாக பால் மாற்றம் செய்து கொண்ட தால் பெண்கள் மாத்திரம் அடைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மார்ட்டின் பொன்டிங் எனும் இந்நபர் தற்போது ஜெசிக்கா வின்பீல்ட் என அழைக்கப்படுகிறார். இவர் ஆணாகப் பிறந்தவர். இவர் இரு சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் 1995 ஆம் ஆண்டில் இவருக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயர் பிராந்தியத்திலுள்ள, கடும் பாதுகாப்பு மிகுந்த வைட்மூர் சிறைச்சாலையில் இவர் அடைக்கப் பட்டிருந்தார். ஆனால், தான் பால்மாற்ற சத்திரசிகிச்சை செய்து பெண்ணாக மாறியுள்ளதால், ஆண்களுக்கான சிறையில் தன்னை தடுத்துவைத்திருப்பது பாரபட்சமான நடவடிக்கையாகும் என 2007 ஆம் ஆண்டு தெரிவித்தார்.

தன்னை பெண்கள் சிறைக்கு மாற்றுமாறு அவர் நீண்டகாலமாக கோரி வந்தார். இவ் வருட இறுதியில் அவர் விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அஷ்போர்ட் நகரிலுள்ள, பெண்களுக்கு மாத்திரமான புரோன்ஸ்பீல்ட் சிறைச்சாலையில் ஜெசிக்கா வின்பீல்ட் மாற்றப்பட்டுள்ளார் என பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை பாலியல் வல்லுறவு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இந் நபர், பால் மாற்ற சத்திரசிகிச்சை செய்ய அனுமதிக் கப்பட்டதை அவரால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் விமர்சித்துள்ளார். “அவரின் உடல் மாறினாலும் மூளை மாறாமல் அப்படியே இருக்கிறது” என அப் பெண் விமர்சித்துள்ளார்.

23 அங்­குல உய­ரத்தில் 21 வயது இளைஞன் கட­வுளின் அவ­தா­ர­மாக வழி­படும் கிராம மக்கள்!!

 
இந்­தி­யாவைச் சேர்ந்த 21 வய­தான இளைஞர் ஒருவர் வெறும் 23 அங்­குல உய­ர­மா­ன­வ­ராக காணப்­ப­டு­கிறார். அவரை கட­வுளின் அவ­தாரம் என பலர் வழி­பட்டு வரு­கின்­றனர்.

பஞ்சாப் மாநி­லத்தைச் சேர்ந்த மன்­பிரீட் சிங் எனும் இந்த இளைஞர் 6 மாத குழந்­தையின் உய­ரத்தில் காணப்­ப­டு­கிறார்.

உலகில் மிகக் குறைந்த உய­ர­மு­டைய நபர்­களில் ஒரு­வ­ராக இவர் கரு­தப்­ப­டு­கிறார். இவரின் எடை 6.8 கிலோ­கிராம் ஆகும்.

6 மாத வய­தின்­பின்னர் மன்­பரீட் சிங்கின் வளர்ச்சி நின்­று­விட்­ட­தாக அவரின் பெற்­றோ­ரான ஜக்தார் சிங், மன்ஜித் சிங் ஆகியோர் தெரி­வித்­துள்­ளனர்.

மன்­பரீட் சிங்­குக்கு 12 வய­தா­ன­போது அவரை கட­வுளின் அவ­தா­ர­மாக கருதி கிரா­ம­வா­சிகள் வழி­படத் தொடங்­கி­னராம்.

வறி­ய­வர்­க­ளான மன்­பரீட் சிங்கின் பெற்றோர், தமது மக­னுக்கு சிகிச்சை அளிப்­ப­தற்குப் போதிய பணம் இல்லை எனத் தெரி­வித்­துள்­ளனர்.

“பல மருத்­து­வர்­க­ளிடம் அவ நாம் காண்­பித்தோம். ஆனால், தை ரோயிட் பாதிப்பின் கார­ண­மாக மன்­பரீட் சிங்கின் வளர்ச்சி நின்­று­விட்­டது எனவும், இந்­நி­லையை குண­மாக்க முடியாது எனவும் கூறினர்” என ஜக்தார் சிங், மன்ஜித் சிங் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

குறைந்த விலையில் அப்பிள் ஐபேட் அறிமுகம்!!

அப்பிள் நிறுவனம் ஐபேட் மினி 4, இரண்டு ஐபேட் ப்ரோ சாதனங்கள் மற்றும் புதிய ஐபேட் உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்துள்ளது.

அப்பிள் அறிமுகம் செய்துள்ள புதிய ஐபேட் 9.7 இன்ச் திரை கொண்ட மாடல் 329 டொலர் அதாவது இலங்கை மதிப்பில் சுமார் 50,000 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் 32 ஜிபி மெமரி மற்றும் Wi-Fi வசதிகள் உள்ளதுடன் சில்வர், தங்கம் மற்றும் சாம்பல் ஆகிய மூன்று நிறங்களில் வெளியாகின்றன.

இதேவேளை, 7.9 இன்ச் திரை கொண்ட ஐபேட் மினி 4 இன் விலையை அப்பிள் குறைத்துள்ளது. இந்த மாடல் 128 ஜிபி மெமரியுடன் 399 டொலர்கள் அதாவது இலங்கை மதிப்பில் சுமார் 60,528 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய ஐபேட் சாதனங்களில் அதிவேக A9 சிப் மற்றும் பிரகாசமான திரை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஏற்கனவே வெளியிடப்பட்ட ஐபேட் எயார் 2- வை விட சற்றே பெரியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அப்பிள் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் வடிவமைப்புகளில் சிவப்பு நிற ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் ஒன்றும் வெளியிடப்பட்டது. இதேபோல், ஐபோன் SE மாடல் 32 மற்றும் 128 ஜிபி மெமரியுடன் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

புதிய சாதனங்களுடன் வீடியோக்களை உருவாக்கி, அதனை ஐஓஎஸ் சாதனங்களைப் பயன்படுத்தும் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் வசதியை வழங்கும் செயலியையும் அப்பிள் அறிமுகம் செய்துள்ளது.

கிளிப்ஸ் (clips) என பெயரிடப்பட்டுள்ள புதிய செயலியில் வீடியோக்களை அழகாக்க பல்வேறு வசதிகளும், இவற்றை பேஸ்புக், இன்ஸ்டாகிராம் அல்லது அப்பிளின் சொந்த குறுந்தகவல் செயலிகளில் பகிர்ந்துகொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

விளையாட்டுலகின் ட்ரம்ப் விராட் கோலி : அவுஸ்திரேலிய ஊடகம் கேலி!!

தமது நாட்டு வீரர்களைப் பற்றி தவறான தகவல்களைப் பரப்பி வரும் விராட் கோலி, விளையாட்டு உலகின் டொனால்ட் ட்ரம்ப் என்று அவுஸ்திரேலியாவின் ‘டெய்லி டெலிகிராஃப்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

கோலி ஆதாரமற்ற தகவல்களை வெளியிட்டு வருவதாகவும், அவரது இந்த நடவடிக்கை குறித்து இந்தியா கிரிக்கெட் சபையோ, உலக கிரிக்கெட் சபையோ எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காதது வருத்தமளிப்பதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பைப் போலவே கோலியும் தனது தவறுகளை மறைப்பதற்காக ஊடகங்கள் மீது தொடர்ச்சியாகப் பழி கூறி வருகிறார். அவர் கூறும் கருத்துக்கள் நம்பத்தகுந்தவையல்ல” என்று அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் இந்திய-அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரில், அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் களத்தில் இருந்தவாறே ஓய்வறையில் உள்ள சகாக்களிடம், நடுவரின் தீர்ப்பை மறு பரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ். ஆய்வுக்கான அறிவுரையைப் பெற்று வருவதாக கோலி குற்றம் சாட்டியிருந்தார்.

தான் சில தடவைகள் அப்படிச் செய்ததாக ஸ்டீவ் ஸ்மித் ஒப்புக்கொண்டிருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது.

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மற்றுமொரு சம்பவம் இடம்பெற்றது. கோலி தோற்பட்டையில் காயமடைந்து களத்தை விட்டு வெளியேறினார். பின்னர் அதை குணப்படுத்திக்கொண்டு மீண்டும் களம் திரும்பினார். இதன் பின்னர் கோலி ஆட்டமிழந்தபோது, ஸ்டீவ் ஸ்மித் தனது தோற்பட்டையைத் தொட்டுக் காட்டி கேலி செய்ததான காட்சியொன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

எனினும், இதன்போது ஸ்மித்தின் தோற்பட்டையை சக வீரர் ஒருவரே தொட்டுக்கொண்டு நின்றதாகவும், தாம் படம் பிடித்த கோணத்தில் இருந்து பார்க்கும்போது ஸ்டீவ் ஸ்மித்தே தனது தோற்பட்டையைத் தொடுவது போல அமைந்திருந்ததாகவும் குறித்த தொலைக்காட்சி நிறுவனம் ஆதாரபூர்வமாக நிரூபித்திருந்தது.

ஆனால், பதிலுக்கு, வோர்னர் ஆட்டமிழந்து செல்லும்போது கோலி அவரைக் கேலி செய்யும் விதமாக களத்தில் ஓடியபடியே தனது தோற்பட்டையைத் தொட்டுக் காட்டினார். இது இந்திய ரசிகர்கள் உள்ளிட்ட பலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தது.

இதைக் குறிப்பிட்டிருக்கும் அப்பத்திரிகை, தவறாகச் சித்திரிக்கப்பட்ட காட்சி என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரும் கூட, அதற்காக அவுஸ்திரேலிய வீரர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்திய விராட் கோலி, வேண்டுமென்றே தான் செய்த கேலிக்காக மன்னிப்புக் கேட்க முன்வராதது, கிரிக்கெட் விளையாட்டின் மகத்துவத்தையே பழிப்பது போல் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

சுறாவின் வாயில் மதுபான டின்னை உடைத்து பருகிய இளைஞன் : காணொளியால் சர்ச்சை!!

அமெரிக்க பல்கலை மாணவன் எனக்குறிப்பிடப்படும் ஒருவர், தான் அருந்தவேண்டிய மதுபான டின்னை, இறந்த சுறாவின் பல்லை கொண்டு திறந்து, பருகிய காட்சி சமூக வலைத்தளங்கள் மூலம் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் குறித்த காட்சியில், இளைஞன் தனது நண்பனிடம் சுறாவின் வாயை திறக்க சொல்லி, தனது கையிலிருந்த மதுபான திண்ணை உடைத்து பருகிய கட்சியினால் சமூகவலைத்தளத்தின் மூலம் பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

விரைவில் இலங்கை வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் : ஏன் தெரியுமா?

லைகா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளையின் சார்பில் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள 150 புதிய வீடுகளை மக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு, வீடுகளை மக்களிடம் வழங்கிவைக்கவுள்ளார்.

வவுனியாவின் சின்னடம்பன் கிராமம் மற்றும் புளியங்குளம் ஆகிய இடங்களில் 150 வீடுகளை, அப்பகுதியில் உள்ள இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு இலவசமாகக் கட்டித் தருகிறது ஞானம் அறக்கட்டளை. லைகா அதிபர் சுபாஸ்கரன் அல்லிராஜாவின் தாயார் ஞானாம்பிகை அவர்களின் பெயரில் அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளை இது.

இந்த வீடுகளை மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி வரும் ஏப்ரல் மாதம் 9ம் திகதி இலங்கையில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. விழாவில் தனது கரங்களால், தமிழ் மக்களுக்கு இந்த புதிய வீடுகளை வழங்குகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இலவச வீடுகள் வழங்கும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளவேண்டும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் கேட்டபோது, ஈழத்தமிழர்களுக்கான நிகழ்ச்சி என்ற காரணத்தினால் உடனே மகிழ்ச்சியுடன் வரச் சம்மதித்தார். அவர் இதுபோன்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்வது இதுவே முதல்முறையாகும்.

இந்த நிகழ்ச்சியில் வட மாகாண முதல் அமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன், மலேசிய செனட் தலைவர் எஸ் விக்னேஸ்வரன், பிரிட்டன் அனைத்துக் கட்சி தமிழ் பாராளுமன்ற குழுத் தலைவர் ஜேம்ஸ் பெர்ரி மற்றும் ஜஸ்டிஸ் கமிட்டி உறுப்பினர் கீத் வாஸ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

சோமாலியாவில் 26 பேர் பட்டினியால் உயிரிழப்பு!!

வட கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ள நிலையில், அங்கு பட்டினிச்சாவை எதிர்நோக்கியுள்ள மக்களின் அவலம் தொடர்கின்றது.

சோமாலியாவின் ஜூப்லேண்ட் பகுதியில் ஒன்றரை நாளில் 26 பேர் பட்டினியால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அந்நாட்டின் அரசாங்க வானொலி தனது இணையத்தளத்தில் இத்தகவலை வெளியிட்டுள்ளது.

சோமாலியாவில் சுமார் 62 இலட்சம் பேர் பட்டினியால் பரிதவிப்பதாகவும் அவர்களுக்கு உடனடியாக உணவுப்பொருட்கள் தேவைப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

கடுமையான வறட்சியாலும் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாலும் கால்நடைகள் மடிவதாலும் மக்கள் பெரும் பாதிப்புகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

பாடசாலை கழிவறை நெரிசலில் பாலகர்கள் இருவர் பலி!!

சீனாவின் பாலர் பாடசாலை ஒன்றில், கழிவறையில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இரண்டு சிறார்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இருபது பேர் காயமடைந்தனர். எனினும், கழிவறைச் சுவர் இடிந்து விழுந்ததே மாணவர்கள் உயிரிழக்கக் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

மத்திய சீனாவின் புயாங் நகர பாலர் பாடசாலை ஒன்றில், காலை நேர இடைவேளையின்போது, மாணவர்கள் சிலர் கழிவறைக்குச் சென்றிருக்கின்றனர். அங்கே, மேலும் பல மாணவர்கள் வந்து நெருக்கத் தொடங்கியதால், உள்ளே இருந்த இரண்டு சிறார்கள் கீழே விழுந்து உயிரிழந்ததாகக் சொல்லப்படுகிறது.

காயமடைந்த சிறார்களில் சிலரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து விசாரணைகளை முடுக்கி விட்டிருப்பதாக புயோங் நகரசபை கூறினாலும், இவ்விபத்து எதனால் இடம்பெற்றது என்பது குறித்து எவ்வித தகவலையும் வெளியிடவில்லை.

சீனாவில் இதற்கு முன்னரும், 2014ஆம் ஆண்டு பாடசாலை ஒன்றில் படிக்கட்டில் ஏற்பட்ட நெருக்கடியால் ஆறு குழந்தைகள் உயிரிழந்ததோடு 25 மாணவர்கள் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டு குளத்தில் குதித்த நபர் சடலமாக மீட்பு!!

மட்டக்களப்பு பிரதேசத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் சட்டவிரோத மணல் அழ்வு விவகாரத்தில் நேற்று ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு பதுளை வீதியை அண்டிய மாவளையாறு கிராமத்தைச் சேர்ந்த 48வயதுடைய சுப்பிரமணியம் இளவரசன் என்பவரே உயிரிழந்தவராவார்.

மட்டக்களப்பு – கித்துள் கிராமசேவகர் பிவிலுள்ள கல்வாடித்துறை ஆற்றுப்பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. முந்தானையாற்றின் கல்வாடித்துறைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை சட்டவிரோதமாக ஆற்றுமண் ஏற்றுவதற்காக மூன்று உழவு இயந்திரத்தில் சென்ற நபர்களை விசேட அதிரடிப்படையினர் தடுத்து கைதுசெய்ய முற்பட்டுள்ளனர்.

இதில் மூன்று சாரதிகள் உட்பட நால்வர் கைதுசெய்யப்பட்டனர். எனினும் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார். தப்பிச் சென்றவரை தேடும் பணியில் ஈடுபட்டபோது அவர் ஆற்றிப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக கரடியனாறு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.