பறந்து கொண்­டி­ருந்த விமா­னத்தில் பயணிகள் மத்­தியில் பாம்பு!!

 
பறந்­து­கொண்­டி­ருந்த விமா­னத்தில் பாம்­பொன்றைக் கண்டு பய­ணிகள் திடுக்கிட்ட சம்­பவம் அமெ­ரிக்­காவில் இடம்பெற்றுள்­ளது.

கடந்த ஞாயி­றன்று, அமெ­ரிக்­காவின் அலஸ்கா மாநி­லத்தின் அனியெக் நக­ரி­லி­ருந்து அம்­ மா­நி­லத்தின் மிகப் பெரிய நக­ரான அன்­க­ரேஜே நோக்கி ரவ்ன் அலஸ்கா நிறு­வன விமா­ன­மொன்று பறந்து கொண்­டி­ருந்­தது.

அப்­போது, விமானி பய­ணி­க­ளிடம் வந்து, இவ்­ வி­மா­னத்­துக்குள் பாம்­பொன்று உள்­ளது. ஆனால், அது எங்­கி­ருக்­கி­றது என்­பது தெரி­ய­வில்லை என்றார்.

அவ்­ வே­ளையில், விமா­னத்தின் பின்­புறப் பகு­தியில், பாம்பு ஒன்று கிடப்­பதைக் கண்டு, அரு­கி­லி­ருந்த தனது தாயா­ரிடம் “அங்கே பாருங்கள்,.. என்ன அது” என்று கேட்டான்.

தனது மகன், சுட்­டிக்­காட்­டிய பகு­தியை பார்த்த மேற்­படி பெண், பாம்­பொன்று கிடப்­பதை உறு­திப்­ப­டுத்­தினார்.

அப்­ பாம்பின் ஒரு பகுதி பை ஒன்­றினால் மூடப்­பட்­டி­ருந்­தது. எனினும், விமா­னத்­துக்குள் பெரும் பீதி ஏற்­ப­ட­வில்லை. அப்­ பாம்பு விஷ­மற்­றது என்­பதும் உறங்கிக் கொண்­டி­ருப்­பதும் தெரி­ய­வந்­தது.

அதை­ய­டுத்து, விமா­னத்தின் ஊழியர் ஒரு­வரும், விமா­னியும் இணைந்து அப்­ பாம்பை பை ஒன்­றுக்குள் போட்­டனர்.

அதன்பின் ஆச­னங்­க­ளுக்கு மேலா­க­வுள்ள பொதிகள் வைக்கும் பகு­தியில் மேற்­படி பாம்பு வைக்­கப்­பட்­டது. இப்­ பாம்பு சுமார் 5 அடி நீள­மா­ன­தாக காணப்­பட்­டது.

இப் ­பாம்பை விமா­னத்தின் முன்னைய பய­ணத்­தின்­போது, அதா­வது அன்­கரேஜ் நக­ரி­லி­ருந்து அனியக் நக­ருக்கு பயணி ஒருவர் எடுத்து வந்­துள்­ள­தா­கவும் ஆனால், அவர் இறங்­கும்­போது பாம்பை தன்­னுடன் எடுத்துச் செல்­ல­வில்லை எனவும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மேற்­படி பயணி தன்­னுடன் பாம்பை எடுத்துச் செல்­வ­தற்குப் பதிவு செய்­தி­ருக்­க­வில்லை. ஆனால், அவர் அனியக் நகரில் வந்­தி­றங்­கிய பின்னர் தனது பாம்பை காண­வில்லை எனவும் அது விமா­னத்தில் இருக்­கலாம் எனவும் தெரி­வித்தார் என விமான நிறு­வ­னத்தின் பேச்­சாளர் ஒருவர் கூறினார்.

போப் ஆண்டவரின் தொப்பியை கழற்றிய சிறுமி!!(காணொளி)

ஆசிர்வதிக்கும் சந்திப்பின் போது, போப் ஆண்டவரின் தலையில் அணியப்பட்டிருந்த தொப்பியை, சிறுமி ஒருவர் கழட்டிய நெகிழ்ச்சியான சம்பவம் வத்திக்கானில் இடம்பெற்றதுள்ளது.

உலக கத்தோலிக்க மதத் தலைவராக போற்றப்படும், போப் பிரான்ஸிஸ் ஒவ்வொரு வாரமும் பக்தர்களை ஆசிர்வதித்து வருவார், இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குழந்தை ஒருவரை அரவணைத்து ஆசிர்வதிக்க முனைகையில், குறித்த சிறுமி போப்பின் தொப்பியை கழற்றி அருகிலிருந்த பாதுகாப்பு அதிகாரிகளை அதிர்ச்சியடையச்செய்துள்ளது.

இந்நிலையில் போப் பிரான்சிஸ் புன்னகைத்த வாரே, தனது தொப்பியை மீளப்பெற்று, சரிசெய்துகொண்டு, தனது ஆசிர்வதிக்கும் பணியை தொடர்ந்தமை அனைவரையும் நெகிழ வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசை எதிர்த்து இந்தோனேசிய விவசாயிகள் வித்தியாசமான போராட்டம்!!

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில், விவசாயிகள் சிலர் கால்களில் சீமந்தைப் பூசிக்கொண்டு வித்தியாசமான முறையில் போராட்டம் நடத்திவருகிறார்கள்.

மத்திய ஜாவா பகுதியில் உள்ள கென்டங் என்ற மலைக் கிராமத்தில் வாழும் விவசாயிகளே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கென்டங் மலை அமைந்திருக்கும் ரெம்பாங் பிரதேசத்தில், அரசுக்குச் சொந்தமான ‘பி.டி. செமேன் இந்தோனேசியா’ என்ற சீமந்து தொழிற்சாலை இயங்க இந்தோனேசிய அரசு அனுமதியளித்துள்ளது. குறித்த சீமந்து தொழிற்சாலை அமைக்கப்பட்டால், கென்டங் மலையில் இருந்து கிடைக்கும் தண்ணீர் மாசடையும் என்றும், அந்த நீரைக் கொண்டு விவசாயம் செய்ய முடியாமல் போகும் என்று கூறியே விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

சீமந்து தொழிற்சாலையால் தமது எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதை உணர்த்த, மரப் பெட்டிகளில் தம் கால்களை வைத்து அவற்றின் மேல் சீமந்தை ஊற்றி போராடி வருகிறார்கள் இந்த விவசாயிகள். சீமந்து பூசப்பட்ட தமது கால்களுக்கு என்ன நிலை நேருமோ, அதுதான் தம் எதிர்கால சந்ததியினருக்கும் நேரும் என்று அவர்கள் தமது போராட்டத்துக்கு விளக்கமளித்துள்ளனர்.

பண்டைய ஜாவா பாரம்பரியத்தை ஒட்டிய இவர்களுக்கு ஆதரவாக இந்தோனேசியாவின் ஒட்டுமொத்த ஜாவா இனத்தவரும் ஒன்று கூடிப் போராடவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியா நோக்கிச் சென்ற இ.போ.ச. பஸ் மீது தாக்குதல் : ஐவர் வைத்தியசாலையில்!!

கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இ.போ.ச பஸ் மீது இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் ஐவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து நேற்று (23.03.2017) மாலை வவுனியா நோக்கி பயணித்த இ.போ.ச. பஸ் இரவு 10.30 மணியளவில் அனுராதபுரத்தினை அண்மித்தது.

இதன் போது கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பஸ் இ.போ.ச. பஸ்ஸிற்கும் இடையே போட்டித்தன்மை ஏற்பட்டுள்ளது. அனுராதபுரம் உலுக்குளம் பகுதியில் வைத்து இ.போ.ச. பஸ்ஸை தனியார் பஸ் முந்திச் சென்ற 2 நிமிடங்களில் இ.போ.ச. பஸ் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்தாக்குதலில் இ.போ.ச. பஸ்ஸின் சாரதி உட்பட ஐவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பாடசாலை மீது குண்டு வீச்சு : 33 பேர் பலி!!

சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி வைத்திருக்கும் ஐ.எஸ். தீவிரவதிகளை அங்கிருந்து விரட்டுவதற்காக அமெரிக்காவின் ஆதரவுடன் அந்நாட்டு முப்படைகளும் ஆவேச தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், அந்நாட்டின் தென் பகுதியான ரக்கா மாகாணத்தின் அல்-மன்சோரா நகரில் உள்ள ஒரு பாடசாலை கட்டிடத்தின் மீது அமெரிக்காவின் ஆதரவு பெற்ற விமானப் படை நடத்திய தாக்குதலில் 33 பேர் பலியானதாக தெரிய வந்துள்ளது.

பலியானவர்கள் அனைவரும் உள்நாட்டுப் போருக்கு பயந்து அலெப்போ மற்றும் ரக்காவின் பிறபகுதிகளில் இருந்து அடைக்கலம் தேடிவந்து, இந்த பாடசாலையில் தங்கி இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திடீரென பைத்தியமான பிரபல நடிகை!!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளிலும் பரபரப்பாக நடித்து வருபவர் நடிகை பூர்ணா. இவருடைய நடிப்பில் அண்மையில் மணல் கயிறு2 என்ற படம் வெளியாகி இருந்தது.

பூர்ணா சினிமாவில் நடிப்பதை தாண்டி பல விருது நிகழ்ச்சியில் நடனமாடுவதில் அதிக அக்கறை காட்டுவார். இந்த நிலையில் அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.

அதோடு பாலிவுட்டின் ஹிட் படமான DDLJ படத்தின் ஒரு பாடலை டப்மேஷ் செய்து தனது டுவிட்டரில் பதிவேற்றியுள்ளார். இன்றைக்கு நான் பைத்தியம் ஆகிவிட்டேன் என பதிவு செய்துள்ளார்.

இவருடைய இந்த சுட்டித் தனமான வீடியோ ரசிகர்களிடம் அதிகமாக பரவி வருகிறது.

வவுனியாவில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!!

 
வவுனியா கோவில்புதுக்குளம் இந்துக்கல்லூரி சரஸ்வதி மண்டபத்தில் வறிய பாடசாலை மாணவர்கள், பெண்தலைமை தாங்கும் குடும்பங்களின் 2017ம் ஆண்டு புலமைப்பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், கைநூல்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (23.03.2017) மாலை 3.30 மணியளவில் பாடசாலை அதிபர் அ. பூலோகசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

வவுனியா இறம்பைக்குளம் ஈஷி பூரண சுவிஷேச சபையின் அனுசரனையில் ஆயர் பி.எம்.இராஜசிங்கத்தினால் பெண் தலைமைதாங்கும் குடும்பங்கள், பின்தங்கிய வறிய மாணவர்களைத் தெரிவு செய்து 110 மாணவர்களுக்கு 2017ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கு கைநூல்கள், கற்றல் உபகரணங்கள் என்பன வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா உதவி பொலிஸ் அத்தியட்சகர் மல்வழகே, சிறப்பு விருந்தினராக வன்னி பிராந்திய சமூதாயப்பிரிவு பொறுப்பதிகாரி விஜயவர்த்தன, மற்றும் வவுனியா தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சோமரத்தின விஜயமுனி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கற்றல், கைநூல்களை வழங்கி வைத்தனர்.

நிகழ்வில் அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியாவை வந்தடைந்தது மன்னார் பக்தர்களின் பாதயாத்திரை!!

 
கிறிஸ்துவின் பாடுகளை நினைவுகூர்ந்து மன்னாரிலிருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வவுனியாவை வந்தடைந்தனர்.

கிறிஸ்தவர்கள் தற்பொழுது கிறிஸ்துவின் பாடுகளை நினைவுகூர்ந்துவரும் தவக்காலத்தை முன்னிட்டு வவுனியா கோமரசன்குளத்தில் அமைந்துள்ள கல்வாரியில் நாளை வெள்ளிக்கிழமை (24.03.2017) நடைபெற இருக்கும் சமய வழிபாட்டில் கலந்து கொள்ளும்முகமாக மன்னார் பகுதியிலிருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக இன்று (23.03.2017) மாலை 5 மணியளவில் வவுனியாவை வந்தடைந்தனர்.

கடந்த புதன்கிழமை (22.03.2017) அதிகாலை மன்னார் பேராலயத்தில் ஒன்றுகூடி பேராலய பங்குதந்தை அருட்பணி பெப்பி சோசை அடிகளாரால் நடாத்தப்பட்ட வழிபாட்டில் கலந்து கொண்டு அவரிடமிருந்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டபின் சிலுவை சுமந்தவர்களாக தலைமன்னார் மதவாச்சி வீதியினூடாக வவுனியாவிற்கு தங்கள் பாதயாத்திரியை ஆரம்பித்த பக்தர்கள் இன்று (23.03.2017) மாலை 5 மணியளவில் வவுனியா இறம்பைக்குளம் புதிய அந்தோனியார் ஆலயத்தினை வந்தடைந்தனர்

இவர்கள் வெள்ளிக்கிழமை காலை (24.03.2017) வவுனியாவில் அமைந்துள்ள கல்வாரியை சென்றடைந்து அன்று அங்கு நடைபெறும் சிலுவைப் பாதை மற்றும் திருப்பலியிலும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இவர்கள் செல்லும் வழிகளில் வவுனியா பிரதேச செயலகம் உட்பட பல அரச மற்றும் அரசார்பற்ற நிறுவனங்கள் தாக சாந்திக்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பொலிசாரும் இவர்களின் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலய கத்தோலிக்க இளைஞர் ஒன்றியம் , இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயம் என இணைந்து பக்தர்களுக்காக தங்குமிடவசதி, இரவு உணவுகள் என்பனவற்றை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்த சிறு வியாபாரிகள் சிரமதானம்!!

 
வவுனியா நகரத்தில் டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நடடிக்கையின் ஒரு பகுதியாக வவுனியா சிறு வியாபாரிகள் சங்கமும் வவுனியா பொலிஸ் நிலைய சூழல் பாதுகாப்பு பிரிவினரும் இணைந்து டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக சிரமதான பணியில் இன்று (23.03.2017) காலையில் ஈடுபட்டனர்.

வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள சிறு வியாபார கடைப் பகுதிகளிலேயே இச் சிரமதானப் பணிகள் வவுனியா சிறு வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் யு.அயூப் கான் தலைமையில் நடைபெற்றது. சிறு வியாபாரிகளின் கடைத்தொகுதி உரிமையாளர்கள் ஊழியர்கள் இச் சிரமதானப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வர்த்தக நியைங்கள் மற்றும் வீடுகளில் டெங்கு நுளம்பு பெருக்கம் ஏற்படக்கூடிய இடங்கள் அடையாளம் காணப்படுமிடத்து அதற்கு தண்டப்பணம் அல்லது வழக்கு தாக்கல் செய்யப்படும் என வவுனியா சுகாதாரப்பனிமனையின் பொது சுகாதார பரிசோதகர் மே.ஜெயா தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் 28வது நாளாக தொடரும் போராட்டம் : தீர்வு எப்போது?

 
வவுனியாவில் கடந்த 28 நாட்களாக தமது போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் வவுனியா மத்திய அஞ்சல் அலுவலகத்திற்கு அருகே இன்று (23.03.2017) 28வது நாளாக தமது சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

கையளிக்கப்பட்ட தமது உறவுகளை விடுவிக்கக்கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும், அவசரகாலச்சட்டத்தினை நீக்குமாறு கோரி தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் 32 பேருக்கு பன்றிக்காய்ச்சல் : அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!!

வவுனியாவில் கடந்த சில தினங்களில் 32பேருக்கு இன்புளுவன்சா (H1N1) தொற்று எற்பட்டுள்ளதாக வவுனியா பொது வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது..

வவுனியாவில் இன்புளுவன்சா தொற்றுக் காரணமாக இதுவரை 32 பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வைத்திய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றது. இதில் 20 பேர் வரையில் சிகிச்சையின் பின் வீடு திரும்பியுள்ளனர். ஏனையோர் வைத்தியசாலையில் விடுதியில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் தொற்று ஏற்பட வாய்புக்கள் உள்ளதால் சிறியவர்களை தேவையின்றி வைத்திய சாலையில் தங்கியுள்ள உறவினர்களைப் பார்வையிடுவதற்கு அழைத்து வருவதைத் தவிர்க்கவும். குறிப்பாக கற்பிணித்தாய்மார், சிறுவர்கள் அவதானமாக இருக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வைத்தியசாலையில் வைத்தியர்கள், தாதியர்கள், வைத்தியசாலைக்கு வரும் குழந்தைகள, சிறுவர்கள் அனைவருக்கும் சுவாசத்தை பாதிக்காதவாறு முககவசம் அணிந்து இருப்பதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

இதேவேளை, இன்புளுவன்சா வைரஸ் தொற்று காரணமாக அண்மையில் வவுனியா வைத்தியசாலையில் இளம் குடும்பப் பெண் ஒருவர் மரணமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

பங்களாதேஷ் தொடரில் குசல் பெரேரா விளையாடுவதில் சிக்கல்!!

இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா பங்களாதேஷ் அணிக்கெதிரான தொடரில் இணைத்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று பங்களாதேஷ் அணியுடனான பயிற்சி போட்டியின் போது அவரின் தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் பங்களாதேஷ் அணிக்கெதிரான தொடரில் இவர் விளையாட முடியாத நிலை ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய பயிற்சி போட்டியின் போது குசல் பெரேரா 64 ஓட்டங்களை பெற்ற வேளை மைதானத்திலிருந்து வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைப் பெண்ணொருவர் பெங்களூரில் கைது!!

போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த இலங்கை பெண் ஒருவர் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

64 இலட்சத்திற்கும் அதிகமான பெறுமதியுடைய போதைப் பொருளுடன் 39 வயதுடைய இலங்கை பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்தப் பெண் கொழும்பில் இருந்து பெங்களூர் ஊடாக சென்னை செல்ல முற்பட்டிருந்த போது கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

இலங்கையிலிருந்து வழங்கப்பட்ட தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், 01 கிலோ 640 கிராம் நிறையுடைய ஹேசிஸ் என்ற போதைப் பொருள் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த பெண் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தூக்கம் இல்லாமல் புரண்டு தவிப்பவரா நீங்கள் : அப்படியாயின் இதைக் கொஞ்சம் படியுங்கள்!!

ஆழ்ந்த தூக்கம், அடுத்த நாள் பொழுதை சுறுசுறுப்புடன் தொடங்குவதற்கு மிக அவசியம். ஆனால் உண்மை என்னவென்றால், இரவில் தூக்கம் இல்லாமல் புரண்டு தவிப்பவர்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

அவர்கள் நீண்ட நேரம் கடந்த பின்னரே சிரமப்பட்டு தூங்குகிறார்கள். அப்படி தூக்கமின்றி தவிப்பவர்களுக்கு தான் இந்த முறைகள்…

தூங்க செல்வதற்கு முன்பாக இளம் சுடுநீரில் குளியல்போடுவது நல்லதுகுளிக்கும் நீரில் சில துளி லாவண்டர் ஆயில் அல்லது ஜாஸ்மின் ஆயிலை கலப்பது நறுமணம் பரப்பி தூக்கத்தில் ஆழ்த்தும்.

தூக்கத்திற்கும் மூளைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இரவில் பிரகாசமான வெளிச்சம் மூளையின் ஓய்வுக்கு தடையாக அமையும். ஆகையால் தூங்க செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே அறையில் மங்கலான வெளிச்சம் பரவட்டும்.

பகல் வேளையில் ஆழ்ந்த தூக்கத்திற்கு இடம் கொடுத்துவிடக்கூடாது. தொடர்ந்து பகல் நேரத்தில் தூங்கும் வழக்கத்தை கடைப்பிடித்தால் இரவு நேர தூக்கத்திற்கு உடல் ஒத்துழைப்பது குறைய தொடங்கும். அதனால் இரவில் ஆழ்ந்து தூங்காமல் அவதிப்பட வேண்டியிருக்கும்.

இரவில் தூங்குவதற்கு முன்பு எளிய வகை யோகாசன பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. அவை கடினமான பயிற்சியாக அமைந்துவிடக்கூடாது. நிதானமாக கை, கால்களை அசைக்கும்படி இருக்க வேண்டும். அவை மன அழுத்தத்தை குறைத்து தூக்கத்திற்காக மனதையும் ஒருங்கிணைக்கும்.

மது அருந்திவிட்டு தூங்கச் செல்வதை தவிர்த்திடுங்கள். அதிலிருக்கும் ஆல்ஹகால் தொடக்கத்தில் மயக்க நிலைக்கு கொண்டு சென்று தூக்கத்தை வரவழைப்பதுபோல் தோன்றும். ஆனால் சில மணி நேரத்திலேயே தூக்கத்தை கலையச்செய்துவிடும்.

முக்கியமான வசதியினை அதிரடியாக நீக்கும் யூடியூப்!!

முன்னணி வீடியோ பகிரும் தளமாக திகழும் யூடியூப் ஆனது பயனர்களுக்கு மட்டுமின்றி வீடியோக்களை தரவேற்றம் செய்பவர்களுக்கும் பல வசதிகளை வழங்கியுள்ளது. அதில் ஒன்றுதான் ஏனைய வீடியோக்கள் தொடர்பில் குறித்த வீடியே ஒன்றின் மீது விளம்பரம் செய்தல் ஆகும்.

இவ் வசதி வீடியோக்களை தரவேற்றம் செய்பவர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக காணப்படுகின்ற போதிலும், ஏனைய பயனர்களுக்கு சற்று அசௌகரியமானதாகவே இருக்கின்றது.

இதனைக் கருத்தில் கொண்டு அவ் வசதியினை முற்றாக நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் மே மாதம் 2ம் திகதியிலிருந்து குறித்த வசதியினை வீடியோக்களை தரவேற்றம் செய்பவர்கள் பயன்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் வீடியோ ஒன்றின் முடிவில் பிறிதொரு வீடியோ தொடர்பான விளம்பரம் அல்லது மாற்றமடையக்கூடிய மேல் விளம்பரங்களை (Dynamic Overlays) உட்புகுத்த முடியும்.

சவுதியில் மூன்று தமிழர்கள் உயிரிழப்பு!!

சவுதி அரேபியாவில் மூன்று தமிழக மீனவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவிலை அடுத்த கேசவன்புத்தந்துரை மற்றும் ராஜாக்கமங்கலத்தை சேர்ந்த ஜார்ஜ், ஜோசப் சுகந்தன், நெவில் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மூன்று பேரும் சவுதி அரேபியாவில் தரின் என்ற இடத்தில் படகில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது வெளிநாட்டு கப்பல் இவர்களது படகின் மீது மோதியுள்ளது.

இதில் படகு நொறுங்கி மூன்று பேரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், உடல்களை கண்டுபிடித்து தருமாறு மூன்று பேரின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக அரசும், மத்திய அரசும் தூதரகங்கள் மூலம் மீனவர்களை உடனடியாக கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.