வவுனியாவில் டெங்கு விழிப்புணர்வு பேரணி!!

 
வவுனியா பொலிஸ் தலமையகத்தின் ஏற்ப்பாட்டில் வவுனியாவில் இன்று (24.03.2017) காலை 9 மணியளவில் டெங்கு விழிப்புணர்வுப் பேரணியொன்று இடம்பெற்றது.

இப்பேரணியானது வவுனியா பொலிஸ் நிலையத்திலிருந்து ஆரம்பமாகி வவுனியா மணிக்கூட்டு சந்தியூடாக வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமணையினை சென்றடைந்து பின்னர் மீண்டு அதே வழியால் மணிக்கூட்டு சந்தியினை வந்தடைந்து பஸார் வீதியுடாக ஹொரவப்பொத்தானை வீதியினை சென்றடைந்து றோயல் விடுதியில் நிறைவடைந்தது

இப் பேரணியில் வவுனியா பொலிஸ் நிலையப் பொலிஸார், தொழிநுட்பக் கல்லூரி மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நீர் தேங்கும் இடங்களை இல்லாதொழித்தல், நீர் வடிந்தோடும் வடிகால்த் தொகுதிகளை முறையாகப் பேணுதல், டெங்கு இறப்பளிக்கும் நோயாகும், அடுத்த இரை நீங்களாயிருக்கலாம் தயது செய்து இருமுறை சிந்தியுங்கள் என பல்வேறு பதாதைகளை ஏந்திய வண்ணம் விழிப்புணர்வு நடைபவனியில் ஈடுபட்டனர்.

வவுனியாவில் பெண்ணை வழிமறித்து கொள்ளை : பொலிசார் வலைவீச்சு!!

வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோவில் புதுக்குளம் பகுதியில் நேற்றிரவு (23.03.2017) தனியாகச் சென்ற பெண்ணை வழிமறித்த இருவர் அவரை தாக்கிவிட்டு பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் வீதியில் வசித்துவரும் குறித்த பெண் மீன் வியாபாரம் செய்து வருகிறார். அவர் தனது வியாபாரப் பணத்தை சேகரித்து கொண்டு இரவு 8.30 மணியளவில் வீடுநோக்கி செல்கையிலேயே இருவர் அவரை வழிமறித்து முகத்திற்கு “டோர்ச் லைட்” வெளிச்சத்தை பாய்ச்சிய பின், பெண்ணை தாக்கிவிட்டு பணப்பையை அபகரித்து சென்றுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார்.

பறிகொடுத்த பணப்பையில் 30 ஆயிரம் ரூபா பணம் மற்றும் காசோலைகள் வங்கி கடன் அட்டைகள் இருந்ததாக தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக உடனடியாக வவுனியா பிரதிபொலிஸ் மா அதிபர் காரியாலயத்தின் தமிழில் முறைப்பாடு வழங்கும் இலக்கத்துடன் தொடர்பினை ஏற்படுத்தி முறைப்பாடு மேற்கொண்டதாக தெரிவித்த குறித்த பெண், விபரங்களை கேட்டறிந்த பொலிஸார் கொள்ளையர்கள் தப்பிச் சென்றிருக்கும் நிலையில் வவுனியா பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாட்டினை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியதாகவும் தெரிவித்தார்.

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் மகோற்சவ விஞ்ஞாபனம்-2017

சமய குரவர்களால் பாடல் பெற்ற சிவகுகஸ்தலங்கள்  நிறைந்தஇலங்கா தீபத்தின் வடபால் வவுனியா கோவில்குளம் திவியசேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்  திருக்கோவிலில்  (26.03.2017)ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் கொடிஏற்றதுடன் ஆரம்பமாகவுள்ளது ..

வவுனியாவில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

 
வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்று (24.03.2017) காலை 6.05 மணியளவில் வவுனியா மாவட்ட மதுவரித் திணைக்களத்திற்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக மதுவரி அத்தியட்சகர் எஸ்.செந்தூர்செல்வன் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

இன்று காலை தமது திணைக்களத்திற்குக் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் சென்றபோது யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையிலிருந்து வெளிமாவட்டத்திற்கு கடத்தி வரப்பட்ட ஒரு தொகுதி கேரளா கஞ்சாவினை புளியங்குளம் பகுதியிலிருந்து நெடுங்கெணி செல்லும் பேருந்து தரிப்பிடத்தில் பயணப்பொதியுடன் நின்ற சந்தேக நபருடன் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்,

மதுவரி பரிசோதகர் த.நளிதரன் தலைமையில் சென்ற குழுவினர் குறித்த கேரளா கஞ்சாவினைக் கைப்பற்றியுள்ளதாகவும் வல்வெட்டித்துறைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாகவும் விசாரணைகளின் பின்னர் நீதவான் நிதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக மேலும் தெரிவித்தார்.

மாரடைப்பை முன்பே கணிக்கும் கருவியைக் கண்டுபிடித்து சாதனை படைத்த தமிழக மாணவன்!!

மாரடைப்பை முன்பே கணிக்கும் கருவியை கண்டுப்பிடித்த தமிழக மாணவனுக்கு இந்திய குடியரசு தலைவர் விருது வழங்கி கொளரவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் ஓசூரை சேர்ந்தவர் ஆகாஷ் மனோஜ். பள்ளி மாணவரான இவர் மாரடைப்பை முன்பே கண்டறியும் கருவியைக் கண்டுபிடித்துள்ளார்.

அவர் சாதனையை கொளரவிக்கும் விதத்தில் இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகாஷுக்கு ராஷ்ட்ரபதி நவ பிரவர்த்தன் புரஸ்கார்’ விருதை வழங்கி கொளரவித்துள்ளார்.

இது குறித்து மாணவர் ஆகாஷ் கூறுகையில், சின்ன வயதிலிருந்தே எனக்கு மருத்துவ அறிவியலில் ஈடுபாடு உண்டு. பல அறிவியல் கண்காட்சிகளில் என் புராஜெக்ட்களுக்காக பல பரிசுகள் வாங்கியிருக்கேன்.

நான் வடிவமைத்திருக்கும் மாரடைப்பு கருவி தோலில் ஒட்டக்கூடியது. இதிலிருந்து சின்னதாக ஒரு பாசிட்டிவ் மின்சாரத் தூண்டுதல் (Electrical impulse) வெளியாகும். அது, இதயத்துல இருந்து ஹார்ட் அட்டாக் வரப்போறதுக்கான எச்சரிக்கையை நமக்கும் உணர்த்தும். இந்த திட்டத்தை அரசே ஏற்றால் 900 ரூபாய்க்கு இந்த கருவி கிடைக்கும் என ஆகாஷ் கூறுகிறார்.

பிரித்தானியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதல்: தேம்ஸ் ஆற்றில் குதித்த பெண் யார்?

பிரித்தானியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலின் போது ரோமானியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிருக்கு பயந்து அங்கிருந்த தேம்ஸ் ஆற்றில் குதித்து சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் லண்டன் மாநகரில் நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் 5 பேர் பலி மற்றும் 40 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் அந்த மர்மநபர் பாராளுமன்ற வளாகத்திற்கு உள்ளே நுழைவதற்கு முன்னர், அருகே இருந்த பாலத்தில் விபத்தை ஏற்படுத்தினார்.

குறித்த விபத்தில் இரண்டு பேர் பலியாகினர். மர்மநபர் காரில் தொடர்ந்து அங்கிருந்த பயணிகள் மீது விபத்தை ஏற்படுத்தி வரும் போது, இளம் பெண் ஒருவர் பாலத்தின் கீழே உள்ள தேம்ஸ் ஆற்றில் குதித்தார்.

ஆற்றில் உயிருக்கு போராடிய அவரை பொலிசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது யார் அவர் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆற்றில் குதித்த பெண் ரோமானியாவைச் சேர்ந்தவர் என்றும் தன் வருங்கால கணவருடன், தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுவதற்கு லண்டன் வந்துள்ளார்.

அந்த பெண்ணின் பெயர் Andreea Cristea(29) என்றும் அவருடன் வந்த வருங்கால கணவரின் பெயர் Burnaz என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்தில் Burnazக்கிற்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவதாக கூறப்படுகிறது.

4 வருடங்களாக அறைக்குள்ளேயே பூட்டி கொண்டிருந்த தாய், மகள் : அதிர வைக்கும் காரணம்!!

இந்தியாவில் 4 வருடங்களாக அறைக்குள்ளேயே தங்களை பூட்டிக் கொண்டிருந்த தாய் மற்றும் மகளை பொலிசார் மீட்டுள்ளனர்.

டெல்லி மஹாவீர் பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்தே 42 வயதான கலாவதி மற்றும் 20 வயதான அவரது மகள் தீபாவை பொலிசார் மீட்டுள்ளனர்.

அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் அளித்த தகவலை அடுத்து பொலிசார் சம்பவயிடத்திற்கு விரைந்த இருவரையும் மீட்டுள்ளனர்.

மேலும், இவர்களுடன் கலாவதியின் மாமனார் மகாவீர் மிஷ்ரா என்பவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

விசாரணையில் மகாவீர் மிஷ்ரா, 2000ம் ஆண்டு தன மனைவி மரணமடைந்தார். தனது 2 மகன்களும் 4 வருடங்களுக்கு முன் சாலை விபத்தில் பலியாகி விட்டனர்.

அன்று முதல் கலாவதி மற்றும் தீபா இருவரும் அறைக்குள்ளேயே தங்களை பூட்டி கொண்டு இருந்து வருகின்றனர் என கூறியுள்ளார்.

தனக்கு கிடைக்கும் ஒய்வூதிய தொகையை வைத்து இருவருக்கும் உணவு வழங்கி வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

கிணற்றில் உயிருக்கு போராடிய மாணவர்களை திறமையாக காப்பாற்றிய சிறுவன்!!

தமிழகத்தில் கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு பேராடிய மாணவர்களை சிறுவன் ஒருவன் காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ வைத்துள்ளது.

திண்டுக்கல், பட்டிவீரன்பட்டியை சேர்ந்த 12 வயதான மைதிலிநாதன், குகன், லோகேஷ்குமார் ஆகியோர் 7ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

சம்பவத்தின் போது, மூவரும் கிணற்றில் ஆமை பிடிக்க சென்றுள்ளனர். அப்போது, குகனும், லோகேஷ்குமாரும் சரிந்து கிணற்றுக்குள் விழுந்து தத்தளித்துள்ளனர்.

உடனே மைதிலிநாதன் இருவரின் கைகளை பிடித்து மேலே துாக்கியுள்ளார். பின்னர், மைதிலிநாதன் கிணற்றுக்குள் விழுந்துள்ளார்.

இந்நிலையில், அலறல் சத்தம் கேட்டு விரைந்த இளைஞர்கள் மைதிலிநாதனை காப்பற்றியுள்ளனர். இதில் மைதிலிநாதனுக்கு கை முறிவும், இடுப்பில் காயமும் ஏற்பட்டுள்ளது.

தற்போது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மைதிலிநாதனை பொது மக்களும், பொலிசாரும் பாராட்டியுள்ளனர்.

காணாமல் போன ஏரியைக் கண்டுபிடித்தார் அரியலூர் கலெக்டர் : குவியும் வாழ்த்துக்கள்!!

தமிழகத்தின் பல பகுதிகளில் ஏரி, குளங்களைக் காணவில்லை; ஏரிகள் தூர்வாரப்படவில்லை என்று மக்கள் அங்காங்கே புகார்கள் கொடுத்தவண்ணம் இருக்கிறார்கள். அதேபோல ஏரியைத் தூர்வாரவில்லை என்று நீதிமன்றமும் பல்வேறு விதத்தில் தமிழகஅரசுக்கு பல நெருக்கடிகளைக் கொடுத்துவருகிறது. நீதிமன்றத்தைச் சமாதானப்படுத்த அரசு பல முயற்சிகளை எடுத்துவருகிறது.

இதன் ஒரு கட்டமாக அரியலூரில் தூர்ந்துபோய் ஆக்கிரமிக்கபட்டுக் காணாமல்போன ஏரியை, அரியலூர் கலெக்டர் முயற்சியால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், அவரே முன்னின்று ஏரியைத் தூர்வாரவும் ஐடியா கொடுத்துள்ளார். தற்போது, கலெக்டருக்கு தமிழகம் முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிகின்றன. இவரைப் பாராட்டி, ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வளைதளங்களில் செய்திகள் இரண்டு நாளாக வந்துகொண்டிருக்கின்றன.

அரியலூர் மாவட்டம், கல்லாத்தூர் அருகே, மருக்காலங்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ளது, மங்களா ஏரி. இதைக் காணவில்லை என்று கடந்த வருடம் ஜூலை மாதம் அரியலூர் கலெக்டர் சரவணவேல்ராஜிடம் புகார் கொடுத்துள்ளார்கள் கிராம மக்கள். அதன் அடிப்படையில் ஏரியைக் கண்டுபிடித்துள்ளார், கலெக்டர்.

ஏரியைக் காணோம் என்று புகார் கொடுத்த உதயகுமாரிடம் பேசினோம். “மங்களா ஏரி 18 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அந்தக் காலகட்டத்தில், இந்த ஏரியால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் நேரடியாகப் பயன் அடைந்திருக்கிறார்கள். அதேபோல வரத்து வாய்க்கால்கள் சரியாக இருந்ததால், மழைநீர் ஏரியில் கலந்ததால், வற்றாத ஏரியாக இருந்துள்ளது. இருபோகம் விவசாயம்செய்து, எங்கள் பகுதி செழுமையாக இருந்துள்ளது. ஆனால், இப்போது இந்த நிலைமை தலைகீழாக உள்ளது.

காரணம், இந்த ஏரியை 50 வருடங்களாகத் தூர்வாராமல் விட்டதால், ஏரி தூர்ந்துபோய், சரிசமமான கட்டாந்தரையாக மாறிவிட்டது. ஒரு சிலர், இந்த இடத்தைச் சரிசெய்து விளைநிலங்களாக மாற்றி, பயிர் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். ஒருசில கட்சிப் பிரமுகர்கள், ஆளுக்குஆள் இடத்தை அபகரித்துக்கொண்டு, வீடு கட்டவும் தொடங்கினார்கள். இதை எதிர்த்து, நாங்கள் காவல்நிலையத்தில் புகார்கொடுத்தோம். அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சம்பந்தப்பட்டவர்கள், எங்களை உங்களால் ஒன்றும் செய்யமுடியாது என்று மிரட்டினார்கள். அதன் பெயரில், கடந்த ஆண்டு ஏரியைக் காணோம் என்று கலெக்டரிடம் புகார் கொடுத்தோம். அவரும் எங்க முன்பே இதை உடனடியாக விசாரித்துத் தகவல் சொல்லுங்கள் என்று தாசில்தாருக்கு உத்தரவிட்டார்.

அது மட்டுமில்லாமல், இதை விசாரிக்க ஒரு குழுவை அமைத்தார். அந்தக் குழு விசாரித்ததில், 6 ஏக்கருக்கும் மேல் ஏரியை ஆக்கிரமித்து விவசாயம் செய்துவந்தது தெரியவந்தது. அவர்களை அழைத்து, ”ஏரியின் இடத்தை அபகரித்துள்ளதால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க என்னால் முடியும். இருந்தாலும் உங்களுக்கு ஆறு மாதம் அவகாசம் கொடுக்கிறேன்” என்று சொல்லிவிட்டுச் சென்றார். நேற்று, ‘தண்ணீர் தினம்’ என்பதால், எல்லா ஆக்கிரமிப்புகளையும் அகற்றிவிட்டு, கலெக்டரே வந்து நின்று ஏரியைத் தூர்வாரவும் உத்தரவிட்டார். உடனடியாக ஜே.சி.பி எந்திரம் கொண்டு தூர்வாரப்பட்டது.

இந்த ஏரி, முறையாகத் தூர்வாரி விவசாய பயன்பாட்டுக்கு வந்தால், வடவீக்கம், மருக்காலங்குறிச்சி, தண்டலை, மா மங்களம், வடுகர் பாளையம் என 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயனடைவதோடு 86 ஏக்கருக்கும் மேல் விளைநிலங்கள் பயன்தரும். கலெக்டர் முயற்சியால் எங்க ஊர் மக்களுக்கு ஒரு விமோசனம் கிடைக்கப்போகிறது” என்றார்.

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் விசுவநாதனிடம் பேசினோம். “காவிரி நீரின் மூலமாக ஆற்றுப் பாசன கோட்டத்தில், 54-க்கும் மேற்பட்ட ஏரிகளும், மருதையாற்றுப் பாசனக்கோட்டத்தில், 69-க்கும் மேற்பட்ட ஏரிகளும் உள்ளன. திருச்சி ,திருமழப்பாடி, புள்ளம்பாடி, திருமானூர், குருவாடி, டி பழூர் என, திருச்சி முதல் ஜெயங்கொண்டம் வரையிலும் 123-க்கும் மேற்பட்ட ஏரிகள் இருந்துள்ளன.

ஆனால், இப்போது 25-க்கும் மேற்பட்ட ஏரிகள் தூர்வாரபட்டு செயல்பாட்டில் இருந்து கொண்டிருக்கிறது. மற்ற ஏரிகள் என்ன ஆனது. தமிழக அரசு ஏன் விவசாயிகளின் வாழ்க்கையில் விளையாடுகிறது. மத்திய, மாநில அரசுகள் ஏரி, குளங்களை முறையாகத் தூர்வாரி வரத்து வாய்க்கால் பகுதியைச் சரிசெய்தால், குடிநீர்ப் பஞ்சமே தமிழ்நாட்டில் ஏற்படாது. ஆனால் இவர்கள், ‘எரிகிற வீட்டில் பிடுங்குகிற வரைக்கும் லாபம்’ என்று செயல்படுவதால்தான் இதுபோன்ற பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

மங்களம் ஊராட்சியில் உள்ள ஒரு ஏரியை மட்டும்தான் கலெக்டர் கண்டுபிடித்துத் தூர்வார உத்தரவிட்டுள்ளார். இதுபோல பல ஏரிகள் கண்டுபிடிக்க முடியாமல் தூர்ந்து போய் உள்ளன. அந்த ஏரிகளையும் கண்டுபிடித்துத் தூர்வார வேண்டும். அப்படிச் செய்தால், அரியலூர் மாவட்டம் வறட்சியான மாவட்டம் என்பதை மாற்ற முடியும். கலெக்டரைப் போல எல்லா கலெக்டரும் சிறப்பாகச் செயல்பட்டால், தண்ணீர்ப் பஞ்சம் தமிழ்நாட்டில் இருக்காது” என்று முடித்தார்.

வடக்கில் கடந்த ஆண்டு எச்.ஐ.வி தொற்றால் 10 பேர் பாதிப்பு!!

வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் கடந்த ஆண்டு எச்.ஐ.வி தொற்றால் 10 பேர் பாதிப்படைந்துள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சின் புள்ளி விபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யுத்தம் முடிவடைந்த பின் வடக்கில் திடீரென அதிகரித்த எச்.ஐ.வி தொற்று தற்போது குறைவடைந்து வருகின்றது.

அதன் அடிப்படையில் கடந்த 2015 ஆம் ஆண்டு எச்.ஐ.வி தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணத்தில் 63 பேரும், வவுனியாவில் 18 பேரும், கிளிநொச்சியில் 3 பேரும், மன்னாரில் 6 பேரும், முல்லைத்தீவில் 5 பேருமாக 95 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

ஆனால் 2016 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் 6 பேரும், வவுனியாவில் 2 பேரும், மன்னார் மற்றும் முல்லைத்தீவில் ஒருவர் வீதமும் ஆக 10 பேர் பாதிப்படைந்து சிகிச்சை பெற்றுள்ளனர்.

உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழர்கள்!!

இந்த வருடத்திற்கான போர்ப்ஸ் பத்திரிகையின் பணக்காரர்கள் வரிசையில் மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார் பில் கேட்ஸ்.

இந்த வருடம், உலகளவில் பெரும் பணக்காரர்கள் 13 சதவீத அளவில் 2,043 ஆக உயர்ந்துள்ள நிலையிலும் பில் கேட்ஸ் தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

போர்ப்ஸ் பத்திரிகையின் இந்த ஆண்டு பணக்காரர்கள் பட்டியல் படி, பில் கேட்ஸின் சொத்துக்கள் 75 பில்லியன் டாலரிலிருந்து 86பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.

ஆனால் இந்த வரிசை அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு மகிழ்ச்சியளிக்கக்கூடியதாக இல்லை; அவர் 220ம் இடத்திலிருந்து 544ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

தற்போது அவரிடம் 3.5பில்லியன் டாலர்கள் அளவே சொத்துக்கள் உள்ளன.அவரது சொத்துக்களில் ஒரு பில்லியன் அளவு குறைந்ததற்கு காரணம், அமெரிக்க சந்தையில் ஏற்பட்ட தொய்வு நிலையாகும்.

இந்த பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த எச் சி எல் டெக்னாலஜிஸின் நிறுவனர் ஷிவ் நாடார் 102வது இடத்தை பிடித்துள்ளார். தற்போது எச் சி எல் நிறுவனம் 6.6பில்லியன் டாலர் வருவாய் ஈட்டுகிறது.

மலேசிய வாழ் தமிழரும், பெரும் செல்வந்தருமான ஆனந்த கிருஷ்ணன், போர்ப்ஸ் செல்வந்தர்கள் பட்டியலில் மீண்டும் இடம் பிடித்திருக்கிறார்.2,043 பெரும் கோடீஸ்வர்களில் 219 வது இடத்தை பிடித்துள்ளார். இவரின் சொத்தின் மதிப்பு $6.5 பில்லியன்கள்.

ஆனந்த கிருஷ்ணனின் தகவல் தொலைத்தொடர்பு நிறுவனமான மேக்சிஸ் மற்றும் எண்ணெய் வயல் சேவைகளை வழங்கும் பூமி அர்மாடாவின் பங்குகள் வீழ்ச்சியடைந்ததை அடுத்து, மலேசியாவின் இரண்டாவது செல்வந்தர் என்ற இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு வந்துவிட்டார்.

16.2% மேக்சிஸ் பங்கு விற்பனையில் குழப்பம் இருப்பதாக செளதி தொலைதொடர்பு நிறுவனம் கூறுகிறது. ஆனந்த கிருஷ்ணன், ஹாவர்ட் பிசினஸ் ஸ்கூலில் எம்.பி.ஏ படித்தவர். தாய்லாந்தில் வசித்து வரும் அவரது ஒரே மகன் புத்த மதத் துறவியாக மாறிவிட்டார்.

இதேவேளையில், 27.6பில்லியன் டாலர்களாக இருந்த சொத்துக்கள் 72.8பில்லியன் டாலர்களாக அதிகரித்து அமேசான் நிறுவனர் மூன்றாம் இடத்தில் உள்ளார்.முகநூல் நிறுவனர் மார்க் சக்கர்ப் ஐந்தாவது இடத்திலும், ஆரக்கல் துணை நிறுவனர் லார்ரி எல்லிசன் ஏழாவது இடத்திலும் உள்ளனர்

இந்த ஆண்டு பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை சர்வதேச அளவில் 2,043 ஆக உயர்ந்துள்ளது.இந்த பட்டியல் தொடங்கப்பட்டதிலிருந்து, இந்த அளவு எண்ணிக்கை உயர்ந்துள்ளது 31 வருடங்களில் இதுவே முதல்முறையாகும்.

இந்த பட்டியலில் அமெரிக்க பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை 565 ஆக உள்ளது இதற்கு காரணம் டிரம்ப் நவம்பர் மாதம் 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

319 எண்ணிக்கையில் சீனா இரண்டாம் இடத்தையும், ஜெர்மனி 114 எண்ணிக்கையில் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.

இந்த பட்டியலில் இடம்பெற்ற பெண்களின் எண்ணிக்கை 202லிருந்து 227 ஆக உயர்ந்துள்ளது, மொத்த பெண்களின் சொத்து மதிப்பு 852.8பில்லியன் டாலர்களாக உள்ளது.

இரண்டாம் வருடமாக லாரியல் அழகு சாதன நிறுவனத்தின் வாரிசு 39.5பில்லியன டாலர்கள் சொத்து மதிப்புடன்,

•கடந்த 23 வருடங்களில் 18வது முறையாக பில்கேட்ஸ் இந்த பட்டியலில் முன்னிலை வகிக்கிறார்.

•இந்த வருடம், 195 பேர் புதியதாக இடம் பிடித்துள்ளனர் குறிப்பாக சீன பெருநிலப்பரப்பிலிருந்து அதிகம் பேர் இடம் பிடித்துள்ளனர்.

•20 வயதாகும் அலெக்சாண்டரா ஆண்டர்சன் இந்த பட்டியலில் இடம் பிடித்த இளம் வயது நபர் ஆவார்.

•சுய முயற்சியில், பணக்காரராக, “ஸ்டிரைப்” என்ற இணைய வழி பணம் செலுத்தும் வலைத்தளத்தை நிறுவிய 26 வயது ஜான் கோலிசன் இடம் பெற்றுள்ளார்.

•இந்த பட்டியலில், சுய முயற்சியில் பணக்காரர்களில் புதிதாக வந்த பெண் தாய்-லி ஆவார். குழந்தையாக இருக்கும் போது அமெரிக்காவில் குடிபெயர்ந்து தற்போது எஸ் எஸ் ஐ என்னும் நிறுவனத்தை அவர் நடத்திக் கொண்டிருக்கிறார்.

– BBC தமிழ்-

லண்டன் தாக்குதலில் ஈடுபட்டவர் அடையாளத்தை வெளியிட்டது காவல்துறை!!

லண்டன் வெஸ்ட்மின்ஸ்டரில் தாக்குதல் நடத்தியதாக நம்பப்படும் நபர் காலித் மசூத் என்பவர் என்று போலீசார் அடையாளம் தெரிவித்துள்ளனர்.

வெஸ்ட்மின்ஸ்டர் தாக்குதலில் ஈடுபட்ட காலித் மசூத், அதே இடத்தில் சுடப்பட்டார்தாக்குதலின்போது, போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட அவர், கென்ட் பகுதியில் பிறந்தவர். தற்போது எந்தவிதமான போலீஸ் விசாரணைகளுக்கும் உட்படுத்தப்படாதவர்.

ஆனால், முன்பு பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டவர்.மேற்கு மிட்லேன்ட்ஸ் பகுதியில் வாழ்ந்து வந்த அவரது வயது 52.காவலர் கீத் பால்மர், ஆய்ஷா ஃபரேட் என்ற பெண் மற்றம் அமெரிக்க சுற்றுலாப் பயணி குர்த் கோச்ரன் ஆகியோர் கொல்லப்பட்ட இந்தத் தாக்குதல் சம்பவத்தை நடத்தியது தாங்கள்தான் என இஸ்லாமிய அரசு (ஐஎஸ்) என்று கூறிக்கொள்ளும் அமைப்பு தெரிவித்துள்ளது.

முதலில், வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தில் நடைபாதையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது காரை மோதிய மசூத், அதன் பிறகு நாடாளுமன்ற வளாக மைதானத்துக்குள் காரை ஓட்டிச் சென்றார். அப்போது கத்தியுடன் இருந்தார். போலீசார் அவரைச் சுட்டுக் கொல்வதற்கு முன்னதாக, காவலர் பால்மரை அவர் கத்தியால் குத்தினார்.

ஆசிரியர் என்ற அடையாளத்துடன்மசூத்தின் தாக்குதல் நோக்கம் தொடர்பாக முன்கூட்டியே புலனாய்வுத் தகவல்கள் கிடைக்கவில்லை என பெருநகர போலீசார் தெரிவித்தனர்.ஆனால், போலீசாருக்கு அவரைப் பற்றிய விவரங்கள் தெரிந்திருக்கின்றன.

உடலில் காயம் ஏற்படுத்தும் அளவுக்கு தாக்குதல் நடத்துதல், ஆபத்து விளைவிக்கக் கூடிய ஆயுதங்களை வைத்திருத்தல், பொது ஒழுங்கிற்கு கேடு விளைவித்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக அவர் அறியப்பட்டவர்.

குற்றச் செயல்களுக்காக, முதன் முதலில் 1983-ஆம் ஆண்டு அவர் தண்டிக்கப்பட்டார். கடைசியாக, 2003-ஆம் ஆண்டு கத்தி வைத்திருந்த குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டார். ஆனால், தீவிரவாதம் தொடர்பான குற்றங்களுக்காக அவர் தண்டிக்கப்படவில்லை.

தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார், பர்மிங்காம் கிளையிலிருந்து வாடகைக்கு எடுக்கப்பட்டதாக என்டர்பிரைஸ் என்ற வாடகைக் கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தான் ஓர் ஆசிரியர் என்ற அடையாளம் சொல்லி, ஹூண்டாய் எஸ்யுவி ரக காரை மசூத் வாடகைக்கு அமர்த்தியதாக அறியவருகிறது.

அன்புதமான தந்தை,

கணவர் மசூத்தினால் கத்தியால் குத்தப்பட்ட பால்மரின் வயது 48. நாடாளுமன்ற மற்றும் ராஜாங்க பாதுகாப்புப் படையில் ஆயுதம் இல்லாத அதிகாரியாக பணியாற்றி வந்த அவர், ஆயுதம் ஏந்தாத அதிகாரியாக இருந்தார். அவர் ஓர் அற்புதமான தந்தையாகவும், கணவராகவும் நினைவு கூரப்படுவார் என்று அவரது குடும்பத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெரீசா மே

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் தெரீசா மே, பால்மரின் செயல் எப்போதும் மறக்க முடியாதது என்றும், ஒவ்வொரு அங்குலமும் அவர் கதாநாயகனாகக் காட்சியளிக்கிறார் என்றார்.ஃபிரேட் என்ற பெண்ணும், அமெரிக்க சுற்றுலாப் பயணி கோச்ரனும் வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தில் மசூத் காரில் மோதியதில் உயிரிழந்தனர்.

ராணி அனுதாபம்

இந்த கொடூர வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது பிரார்த்தனைகள் மற்றும் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாக ராணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்களை, பிரதமர் தெரீசா மே, மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்தார்.பாதிக்கப்பட்டவர்களில், 12 பேர் பிரிட்டிஷார். 3 பிரான்ஸ் சிறுவர்கள், இரண்டு ரூமேனியர்கள், நான்கு தென் கொரியர்கள், இரண்டு கிரேக்கர்கள், தலா ஒரு ஜெர்மன், போலந்து, அயர்லாந்து, சீனா, இத்தாலி, அமெரிக்கா நாட்டினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பர்மிங்காம், கிழக்கு லண்டன், வேல்ஸ் உள்பட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து சோதனைகள் நடைபெறுகிறது.

பழமைக்கு திரும்பும் வட்ஸ்அப்!!

வட்ஸ் அப் நிறுவனம், மீண்டும் பழைய எழுத்து மூலமான ஸ்டேட்டஸ் வசதியை கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

கடந்த மாதம் வட்ஸ் அப் நிறுவனம், ஸ்டேட்டஸில் வீடியோ, போட்டோ, ஜிஃப் போன்றவற்றை வைக்கக்கூடிய விதத்தில் அப்டேட் செய்யப்பட்டது.

இந்த ஸ்டேட்டஸ் 24 மணி நேரத்தில் அழிந்துவிடும் என்றும், தினமும் புதியதாக மீண்டும் மீண்டும் ஸ்டேட்டஸ் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற நிலை இருந்தது.

வாட்ஸ் ஆப் பயன்படுத்துவோர் மத்தியில் இந்த புதிய அப்டேட்டை பலரும் விரும்பாததாக தகவல் வெளியானதை அதையடுத்து, மீண்டும் பழைய எழுத்து முறையிலான ஸ்டேட்டஸ் வசதியை மறு அறிமுகம் செய்யப் போவதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடுத்த வாரம் முதல் இந்த வசதி அன்ட்ரொய்ட் போன்களில் கொண்டுவரப்படும் என்று வட்ஸ் அப் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது

கம்போடிய தாய்மார்களிடமிருந்து தாய்ப்பாலை விலைக்கு வாங்கும் அமெரிக்க நிறுவனம்!!

ஆசியாவிலேயே ஏழ்மையான நாடான கம்போடியாவில் உள்ள தாய்மார்களிடமிருந்து தாய்ப்பாலை விலைக்கு வாங்கி அதை அமெரிக்காவில் விற்பனை செய்யும் நிறுவனத்திற்கு யுனிசெஃப் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த அம்ப்ரோஸியா லேப்ஸ் எனும் நிறுவனம், கம்போடியா தலைநகர் நாம்பெனில் கிளை அலுவலகத்தைக் கொண்டுள்ளது.

நாம்பெனின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள அந்த நிறுவனத்தின் தொழிற்சாலை மூலம் அந்த நகரையும், சுற்றியுள்ள பகுதிகளையும் சேர்ந்த தாய்மார்களிடமிருந்து தாய்ப்பாலை விலைக்கு வாங்கி, அதனைப் பதப்படுத்தி வருகிறது.

அந்தப் பால் பிறகு போத்தல்களில் அடைக்கப்பட்டு, அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய தாய்மார்களிடமிருந்து குறைந்த விலைக்குப் பெறப்பட்ட தாய்ப்பால், 5 அவுன்ஸ் (147 மிலி) கொண்ட போத்தல் 20 டொலருக்கு அதாவது சுமார் மூவாயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

அம்ரோஸியா நிறுவனத்தின் இந்த நடவடிக்கை, ஏற்கனவே ஊட்டச்சத்துக் குறைபாடு அபாயத்தை எதிர்நோக்கியிருக்கும் கம்போடியக் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் அநீதி என்று ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெஃப் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, பிற உடலுறுப்புகள் மற்றும் இரத்த விற்பனையைப் போல, தாய்ப்பால் விற்பனையையும் சட்டவிரோதமாக்குவது குறித்து பரிசீலித்து வருவதாகவும், அதனால் தாய்ப்பால் ஏற்றுமதிக்கு தாற்காலிகத் தடை விதித்துள்ளதாகவும் கம்போடிய அரசு அறிவித்துள்ளது

டெஸ்க்டொப்பிலிருந்தும் இனி பேஸ்புக் லைவ் வசதியைப் பயன்படுத்த முடியும்!!

கைபேசிகள் வழியாக மட்டுமின்றி டெஸ்க்டொப் / லப்டொப் (desktop and laptop) கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துவோரும் பேஸ்புக் லைவ் வசதியைப் பயன்படுத்த முடியும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சமூகவலைத்தளமான பேஸ்புக் தனது பயனாளர்களுக்காக பேஸ்புக் லைவ் வசதியை அறிமுகப்படுத்தியிருந்தது.
இதன்மூலம் அவர்கள் தங்கள் கைபேசி வழியாக பதிவு செய்யும் வீடீயோக்களை நேரடியாக ஒளிபரப்பும் வசதி இருந்தது.

கைபேசி மூலம் செயற்பட்டு வந்த இந்த வசதி ஆரம்பத்தில் தனியான பயனாளர்களுக்கு அல்லாமல், முகநூல் பக்கங்களைப் பயன்படுத்துவோருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.

தற்போது இந்த வசதியை டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் வழி பேஸ்புக் பயனாளர்களும் பயன்படுத்த முடியும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயம் பேஸ்புக் நிறுவன வலைப்பூ பதிவொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மேம்படுத்தப்பட்ட வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வசதியானது வீடியோ ப்ளாக்கிங் செய்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்குமென்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நண்பனின் பிறந்த நாளை பாடசாலையில் மது அருந்தி கொண்டாடிய 8 மாணவர்கள் வைத்தியசாலையில்!!

மிஹிந்­தலை நக­ரி­லுள்ள பிர­பல பாட­சாலை ஒன்றின் மாண­வர்கள் மது­பானம் அருந்தி அதி­க போதை­ய­டைந்த நிலையில் மிஹிந்­தலை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்கப்பட்­டுள்­ளனர்.

இப்­பா­ட­சா­லையின் 11 ஆம் தரத்தில் கல்­வி­ ப­யிலும் மாண­வர்கள் இவ்­வாறு மது­பானம் அருந்­தி­யுள்­ளனர். அவ்­ வ­குப்பில் கற்­று­வரும் மாணவர் ஒரு­வரின் பிறந்த தினத்தை முன்­னிட்டு இம்­ மா­ண­வர்கள் எட்டு பேரும் நேற்றுமுன்தினம் காலை 6. 30 மணி­ய­ளவில் பாட­சா­லை­யி­லுள்ள ஆசி­ரியர் விடு­தியின் அறையில் வைத்து மது­பானம் அருந்­தி­யுள்­ளனர்.

இந்த ஆசி­ரியர் விடுதி நீண்­ட­கா­ல­மாக ஆசி­ரி­யர்­களின் பயன்­பாட்டில் இல்­லா­தி­ருந்­த­மை­யினால் பாட­சாலை நிர்­வாகம் அதனை மாண­வர்­களின் பயன்­பாட்­டுக்கு அனு­ம­தித்­தி­ருந்­தது. இதனை சாத­க­மாக பயன்­ப­டுத்திக் கொண்ட இம் ­மா­ண­வர்கள் மது­பான போத்­த­லொன்­றினை கொண்­டு­வந்து ஆசி­ரி­யர்கள் எவரும் வரு­வ­தற்குள் அதனை அருந்­தி­யுள்­ளனர்.

இம்­ மா­ண­வர்கள் மது­பானம் அருந்­து­வதைக் கண்ட அப் ­பா­ட­சா­லையின் மாண­வர்கள் சிலர் ஆசி­ரியர் மற்றும் அதி­ப­ருக்கு அறி­வித்­துள்­ளனர். எனினும் ஆசி­ரி­யர்கள் அவ்­வி­டத்­துக்கு சென்று பார்த்­த­போது மது அருந்­திய மாண­வர்கள் அங்­கி­ருந்து தலை­ம­றை­வா­கி­யி­ருந்த போதிலும், பின்னர் அவர்கள் பாட­சாலை வளா­கத்­தினுள் போதையில் காணப்­பட்ட நிலையில் அவர்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­துடன் மிஹிந்­தலை பொலி­ஸா­ருக்கும் அறி­வித்­துள்­ளனர்.

அதிக போதையை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய மது­பான போத்தல், மென்­பான போத்தல் மற்றும் நொருக்கு தீணிகள் (பைட்ஸ்) என்­ப­வற்­றினை குறித்த மாண­வர்கள் பாட­சாலை வளா­கத்­தினுள் கொண்டு வந்­துள்ள நிலையில் பாட­சா­லைக்கு ஆசி­ரி­யர்கள் வரு­வ­தற்கு முன்­பாக இச்­சம்­பவம் இடம்­பெற்­றி­ருந்த கார­ணத்­தினால் அதனை தடுக்க முடி­யாமல் போயுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இம்­ மா­ண­வர்கள் போமையில் இருப்­ப­தனை உறு­திப்­ப­டுத்திக் கொள்­வ­தற்­காக அவர்கள் மிஹிந்­தலை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இந்த எட்டு மாணவர்களது பெற்றோரை வரவழைத்து அவர்களுடன் கலந்துரையாடி குறித்த மாணவர்கள் மீது தகுந்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்துள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.