கோபத்தால் எமது மூக்கை நாமே வெட்டிக்கொள்ளக் கூடாது : மாணவர்களுக்கு சுமந்திரன் பதில்!!

எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தனுக்கு சொகுசு வாகனம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை சுமந்திரன் முன்வைத்திருந்ததாக மாணவன் ஒருவர் கூறிய குற்றச்சாட்டுக்கு பா.உ சுமந்திரன் பதிலளித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறையில் அமைந்துள்ள சுமந்திரனின் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

அந்த மாணவன் என்மீது வைக்கும் குற்றச்சாட்டு வேடிக்கையாக உள்ளது, நான் ஒருபோதும் அவ்வாறு கூறவில்லை குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்களை சம்பந்தன் ஐயாவுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று அவருடைய நிலையை காட்ட வேண்டும்.

விவாதத்தில் பேசும் அளவுக்கு வதந்திகள் பரப்பப்படுகின்றன, இளைஞர்கள் வாழ வேண்டும் அதற்கான வழிகளை நாம் உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

கோபம் வந்து விட்டது என்பதற்காக நாமே எம்மை தண்டிக்கக் கூடாது. எமது மூக்கை நாமே வெட்டிக்கொள்ளக் கூடாது. கோபம் வந்தால் நிதானமாக செயற்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாங்கள் எல்லோரும் நேசித்த தலைவரின் அங்கீகாரம் கிடைத்தமையினாலேயே கூட்டமைப்பை மக்கள் ஆதரிக்கின்றனரே தவிர அவர்களின் ஆளுமையின் காரணமாக அல்ல.

பெண்களுக்கு வாயோடு வாய் வைத்து வாழைப்பழம் ஊட்டிவிடும் சாமியார்!!

தமிழகத்தில் குழந்தை வரம் கேட்டு வரும் பெண்களிடம் சாமியார் ஒருவர் வாயோடு வாய் வைத்து வாழைப்பழம் ஊட்டிவிடும் சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தமிழ்நாட்டின் கோயமுத்தூர் மாவட்டம் மாதம்பட்டி குப்பனூரில் உள்ள சாமியார் ஒருவர் தன்னிடம் குழந்தை வரம் கேட்டு வரும் பெண்களுக்கு விசித்திரமான முறையில் பரிகாரம் செய்து வைப்பதாக கூறப்படுகிறது.

வரும் பெண்கள் அவரிடம் காணிக்கையாக வாழைப்பழங்களைக் கொடுத்துச் செல்வதாக கூறப்படுகிறது. அதன் பின் அவர்கள் கொடுத்த வாழைப்பழத்தை வாயில் உண்ணும் அவர் தன் வாயிலிருந்து அந்த பெண்ணின் வாய்க்கு பழத்தை ஊட்டி விடுவாராம்.

இந்த பரிகார முறைக்கு கவாள சேவை என்று கூறப்படுகிறது. பெண்களுக்கு மட்டும் தான் இந்த பரிகாரம் செய்யப்படுமாம்.

இது பற்றி அறிந்த சமூக ஆர்வலர்கள் சிலர் சாமியாரைத் தேடி வரும் பெண்களிடம், இது மோசடி வேலை என்று எடுத்துக்கூறியுள்ளனர். இருந்தாலும், சாமியாருக்கு தாய்க்குலத்தினர் மத்தியில் இருக்கும் செல்வாக்கு குறையவே இல்லை என்று கூறப்படுகிறது.

உணவில் குறைந்த அளவு உப்பு சேர்த்தால் மாரடைப்பு ஏற்படும் அபாயம்!!

உணவில் குறைந்த அளவு உப்பு சேர்த்தால் மாரடைப்பு அபாயம் ஏற்படும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

நாள் ஒன்றுக்கு 5 கிராம் உப்பை உணவில் பயன்படுத்தினால் உடல் நலம் மேம்படும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் இந்த அளவு போதியதல்ல.

உணவில் இன்னும் கூடுதலாக உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும் என கனடாவில் உள்ள மெக்மாஸ்பர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சலீம்யூசுப் தெரிவித்துள்ளார்.

நாள் ஒன்றுக்கு 3 கிராம் சோடியம் உடலில் கலக்க வேண்டும், அதற்கு குறைந்தால் மாரடைப்பு ஏற்பட்டு இதயத்தின் செயல்பாடுகள் நின்று உயிரிழக்கும் அபாயம் ஏற்படும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

நாள் ஒன்றுக்கு 7.5 முதல் 12.5 கிராம் உப்பு எடுத்தால் தான் 3 அல்லது 5 கிராம் சோடியம் பெற முடியும். எனவே 5 கிராம் உப்பு போதாது. எனவே கூடுதல் அளவில் உப்பு சேர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அது குறித்து விளக்கங்களை ஐரோப்பிய இதய ஜேர்னல் பத்திரிகையில் அவர் வெளியிட்டுள்ளார். அதே நேரத்தில் அளவுக்கு அதிகமாக உப்பு சேர்த்தால் உடல் நலம் பாதிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 வருடங்களின்பின் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் தற்போதைய நிலை!!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை புனர்நிர்மாணப் பணிகள் 75 விகிதம் பூர்த்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அதாவது ஜனவரி மாதம் 6 ஆம் திகதி ஓடுபாதை புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அதன் போக்குவரத்து பயணங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மூடப்பட்ட ஓடுபாதை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 06 ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக விமானநிலைய செய்திகள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமன்றி முன்பு இருந்ததை போல இல்லாமல் ஓடுபாதையின் அகலம் 60 மீட்டர்களிலிருந்து 70 மீட்டர்களாக அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சர்வதேச சேவைகள் நியமங்களுக்கமைய ஓடுபாதையின் பராமரிப்பு மற்றும் புனர்நிர்மாணம் என்பன 10 வருடங்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 வருடங்களின் பின்னர் இடம்பெறுகின்ற பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் புனரமைப்பு பணிகள் தற்போது 3 ஆவது மாதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மார்பகத்திற்கு வெளியே இதயத்துடன் பிறந்த குழந்தை : அதிர்ச்சியில் ஆழ்ந்த பெற்றோர்!!

இந்தியாவில் பிறந்த பெண் குழந்தை ஒன்றிற்கு மார்பகத்திற்கு வெளியே இதயம் அமைந்துள்ளது பெற்றோர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

அஸ்சாம் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் Jahirul Isma(29) Tazmina Khatun(28) என்ற தம்பதி வசித்து வருகின்றனர்.

மனைவி முதன் முறையாக கர்ப்பம் அடைந்துள்ளதை எண்ணி கணவர் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.

இந்நிலையில், பிரசவத்திற்காக அங்குள்ள அரசு மருத்துவமனையில் மனைவியை கடந்த வாரம் அனுமதித்துள்ளார்.
பின்னர், மனைவிக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

ஆனால், குழந்தையை பார்த்த பெற்றோர் மற்றும் மருத்துவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

பிறந்த குழந்தையின் இதய உறுப்பானது மார்பகத்திற்கு வெளியே அமைந்துள்ளது தான் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முதன் முதலாக குழந்தை இப்படி பிறந்துள்ளதை எண்ணி பெற்றோர் அழுது புலம்பியுள்ளனர்.

இது குறித்து மருத்துவர்கள் பேசியபோது ‘மருத்துவ துறையில் இதனை ectopia cordis என அழைப்பார்கள். மிகவும் அரிதாகவே இவ்வாறு இதயம் வெளியே தெரியுமாரு குழந்தை பிறக்கும்.

தற்போது குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய மற்றொரு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதே சமயம், இதுபோன்ற உடல் அமைப்பில் பிறக்கும் குழந்தைகளை காப்பாற்றுவது மிகவும் கடினம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளது பெற்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வீட்டில் பிணமாக கிடக்கும் பெற்றோர் : சோகத்திலும் பரீட்சை எழுதிய மாணவி : நெகிழ வைக்கும் காரணம்!!

தமிழகத்தில் மாணவி ஒருவர் பெற்றோர் உயிரிழந்த நிலையில் பன்னிரண்டாம் பொதுத்தேர்வெழுத வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மேட்டூர் பகுதியை சேர்ந்த அமிர்த கௌரி என்ற மாணவியே இவ்வாறு எழுச்சியூட்டும் செயலில் ஈடுபட்டுள்ளார்.

நேற்று அமிர் கௌரியின் பெற்றோர்களான முருகேசன், சுமதி இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கார் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில், முருகேசன் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சுமதியும் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், இந்த தம்பதியினரின் மூன்றவாது மகளான அமிர்த கௌரி, பொறியாளராக வேண்டும் என்ற பெற்றோர்களின் கனவை நிறைவேற்ற, மிகுந்த துக்கத்திற்கு இடையேயும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதியுள்ளார்.

பெண்­களை மாத்­திரம் ஊழி­யர்­க­ளாகக் கொண்ட பய­ணிகள் விமானம் முதல் தடவையாக உலகை சுற்றி வந்­தது!!

 
பெண்­களை மாத்­திரம் ஊழி­யர்­க­ளாகக் கொண்ட விமான பய­ணிகள் விமா­ன­மொன்றை முதல் தட­வை­யாக உலகை சுற்­றி­வரும் பய­ணத்தில் தான் ஈடு­ப­டுத்­தி­ய­தாக எயார் இண்­டியா நிறு­வனம் அறி­வித்­துள்­ளது.

நாளை அனுஷ்­டிக்­கப்­ப­ட­வுள்ள சர்­வ­தேச மகளிர் தினத்தை முன்­னிட்டு, கடந்த வாரம் இந்த விசேட விமான சேவை நடத்­தப்­பட்­ட­தாக அந்­நி­று­வனம் தெரி­வித்­துள்­ளது.

எயார் இண்­டி­யாவின் பிளைட் ஏ.ஐ. 173 விமானம், கடந்த 27 ஆம் திகதி புது டில்­லி­யி­லி­ருந்து அமெ­ரிக்­காவின் சான் பிரா­சிஸ்கோ நகரை நோக்கி புறப்­பட்­டது. பசுபிக் சமுத்­தி­ரத்­துக்­கூ­டாக அமெ­ரிக்­காவை அடைந்த அவ்­வி­மானம் பின்னர், அத்­தி­லாந்திக் சமுத்­தி­ரத்தைக் கடந்து, கடந்த 3 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை மீண்டும் புது டில்­லியை அடைந்­தது.

இதன் மூலம் உலகை சுற்­றி­வரும் பய­ணத்தை இவ்­வி­மானம் பூர்த்தி செய்­தது. போயிங் 777 ரகத்தைச் சேர்ந்த இவ்­வி­மா­னத்தின் விமா­னிகள், விமான சிப்­பந்­திகள், விமா­னத்தை சோத­னை­யிட்டு அதன் பய­ணத்­துக்கு அனு­மதி அளித்த பொறி­யி­ய­லா­ளர்கள், விமானம் புறப்­ப­டு­வ­தற்கு அங்­கீ­காரம் அளித்த வான் போக்­கு­வ­ரத்துக் கட்­டுப்­பாட்டு அதி­கா­ரிகள் அனை­வரும் பெண்­க­ளாக இருந்­தனர் எனவும் எயார் இண்­டியா நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.

முற்­றிலும் பெண்­களை மாத்­திரம் ஊழி­யர்­க­ளாகக் கொண்ட பய­ணிகள் விமா­னிகள் சேவை பல நாடு­களில் நடத்­தப்­பட்­டுள்ள போதிலும், அத்­த­கைய ஒரு விமானம் உலகை சுற்றி வந்­தமை இதுவே முதல் தட­வையாகும் என எயார் இண்­டியா நிறு­வனம் கூறு­கி­றது.

இதை கின்னஸ் சாத­னை­யாக பதிவு செய்­வ­தற்கு விண்­ணப்­பிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேவேளை, நாளை மறுதினம் வேறு பல சர்வதேச மற்றும் உள்ளூர் சேவைகளில் ஈடுபடும் விமானங்களில் பெண்களை முற்றிலும் மாத்திரம் சேவையில் ஈடுபடுத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெண்ணின் பணத்தை திருடியவர்கள் கடனட்டையில் ஆடைகளும் கொள்வனவு : தகவல்களை வழங்குமாறு வேண்டுகோள்!!

பொரளை பிர­தே­சத்தில் பஸ் ஒன்றில் பய­ணித்துக் கொண்­டி­ருந்த பெண் ஒரு­வரின் பெருந்­தொ­கை­யான பணத்துடனான பையை திரு­டி­ய­துடன் அதிலிருந்த கட­னட்­டையை கொண்டு வர்த்­தக நிலையம் ஒன்றில் ஆடை­களை கொள்­வ­னவு செய்த சந்தேக நபர்­க­ளான இரு பெண்­களை கைது செய்­வ­தற்­காக பொலிஸார் பொது­மக்­களின் உத­வியை கோரி­யுள்­ளனர்.

கடந்த 27 ஆம் திகதி காலை 10 – 11 மணிக்கு இடைப்­பட்ட நேரத்தில் இச்­சந்­தே­க­ந­பர்கள் இரு­வரும் பஸ்ஸில் பய­ணித்துக் கொண்­டி­ருந்த பெண் ஒருவ­ரி­ட­மி­ருந்து 102, 300 ரூபா பணத்­துடன் கூடிய கைப்பை ஒன்றை திரு­டி­ய­துடன் அதி­லி­ருந்த கட­னட்­டையை பயன்­ப­டு த்தி பொரளை பிர­தேசத்திலுள்ள பிர­பல ஆடை விற்­பனை நிலை­ய­மொன்றில் சுமார் 270, 705 ரூபா பெறு­ம­தி­யான ஆடை­களை கொள்­வ­னவு செய்­துள்­ளமை தொடர்பில் பொரளை பொலிஸ் நிலை­யத்­துக்கு கிடைக்­கப்­பெற்ற முறைப்­பா­டு­க­ளுக்­க­மைய பொலிஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர்.

இச்­சந்­தேக நபர்கள் இரு­வரும் திருட்டு கட­னட்­டையை உப­யோ­கித்து ஆடை கொள்­வ­னவில் ஈடு­படும் காட்­சிகள் குறித்த ஆடை விற்­பனை நிலை­யத்தில் பொருத்­தப்­பட்­டுள்ள பாது­காப்பு கெமராக்­களில் பதி­வா­கி­யுள்­ளன. அக்­காட்­சி­களை கொண்டு சந்­தேக நபர்­களின் முகங்­களை இனங்­கண்­டுள்ள பொலிஸார், அவர்­களை கைது செய்யும் பொருட்டு பொது­மக்­களின் உத­வியை கோரி­யுள்­ளனர்.

சந்­தே­க­ந­பர்­க­ளான படத்தில் காணும் பெண்கள் தொடர்பில் தகவல் தெரிந்­த­வர்கள் 071 – 85 91 587, 077 – 72 64 299, 011 – 26 93 938, 011 – 26 94 019 ஆகிய இலக்கங்களுடன் தொடர்புகொண்டு தெரியப்படுத்துமாறு பொலிஸ் ஊடக மத்திய நிலையம் பொதுமக்களை கோரியுள்ளது.

இரண்டாவது திருமணம் செய்ய முனைந்த கணவரை நடுவீதியில் வைத்து அடித்த முதல் மனைவி!!(காணொளி)

கணவன் இரண்டாவது திருமணம் செய்ய முனைந்தபோது, முதல் மனைவியினால் வீதியில் வைத்து தாக்கப்பட்ட சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வந்துள்ளதாவது, இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சோனு என்பவர் கடந்த 14 வருடங்களுக்கு முன்னர் ராக்கி என்ற பெண்ணை மணந்துள்ளார். மேலும் இவர்களுக்கு 12 வயதில் மகனொருவர் இருக்கிறார்.

இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக ராக்கி தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனால் சோனு 18 வயது பெண்ணை இரண்டாவது திருமணம் செய்ய முடிவுசெய்துள்ளார்.

மேலும் தனது முதல் மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்யாமல், சோனு இரண்டாவது திருமணத்தை செய்ய முனைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விடயத்தை அறிந்த ராக்கி தனது உறவினர்களுடன் சென்று சோனுவிடம் சண்டையிட்டுள்ளார். இந்நிலையில் சோனு ராக்கியை யார் என்றே தெரியாது எனக்கூற, நடு வீதியில் வைத்து ராக்கியால் சோனு தாக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

4000 பெண்களை கடத்தி விற்றதால் வசமாக சிக்கிய தம்பதியினர்!!

பெண்களை கடத்தி, விபசாரத்தில் ஈடுபடுத்துவதையும், விற்பனை செய்வதையும் மிகப்பெரிய தொழிலாக செய்து வந்த தம்பதியினரை கைது செய்த சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் டெல்லி நகரில் பெண்களை கடத்தும் குழுவினரை பிடிக்க தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது டெல்லியைச் சேர்ந்த கணவன், மனைவியான அபக் உசேன், சாய்ரா பேகம் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

குறித்த தம்பதியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டபோது, அவர்கள் பெண்களை கடத்தி, விபசாரத்தில் ஈடுபடுத்துவதையும், விற்பனை செய்வதையும் மிகப் பெரிய தொழிலாக செய்து வந்த அதிர்ச்சிகரமான விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 10 ஆண்டுகளாக இவர்கள் சுமார் 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட, இளம் பெண்களை ஏமாற்றி கடத்தியுள்ளதோடு, விபசாரத்துக்காக மற்றவர்களிடம் விற்பனை செய்து வந்துள்ளனர், அத்தோடு நாடளாவிய ரீதியில் கடத்தல் குழுக்களை உருவாக்கி செயற்பட்டுள்ளார்கள்.

அபக்உசேன், சாய்ரா இருவரும் பெண்களை கடத்தி வாங்கியுள்ள பல்வேறு பெறுமதி மிகு சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதோடு, அவர்களுக்கெதிரான மேலதிக விசாரணைகளை, டெல்லி பொலிஸார் தீவிரகமாக மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சுசித்ராவுக்கு மனநிலை பாதித்து விட்டது – கணவர் பரபரப்பு தகவல்!!

பிரபல சினிமா பின்னணி பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனுஷ் ஆட்கள் தன்னை காயப்படுத்தி விட்டதாக கூறி இருந்தார். படமும் வெளியானது.

பின்னர் அந்த தகவலுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று சுசித்ரா கூறி இருந்தார். இதுபற்றி சுசித்ராவின் கணவர் கார்த்திக் வெளியிட்ட தகவலில், ‘சுசித்ராவின் டுவிட்டர் யாரோ சிலரால் முடக் கப்பட்டு விட்டது. அதில் வெளியான படத்துக்கும், செய்திக்கும் எனது மனை விக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சம்பந்தப் பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறி இருந்தார்.

தொடர்ந்து டுவிட்டரில் வெளியான செய்தியில் சுசித்ரா அவரது கணவர் கார்த்திக்கை டைவர்ஸ் செய்துவிட்டதாக கூறப்பட்டிருந்தது. பின்னர் அதற்கும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. முடக்கப்பட்ட டுவிட்டர் மீட்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் நேற்று சுசித்ராவின் டுவிட்டர் வலைத்தள பக்கத்தில் நடிகர் தனுஷ், நடிகைகள் திரிஷா, ஹன்சிகா, ஆன்ட்ரியா, டி.வி. தொகுப்பாளர் டி.டி. ஆகியோரின் அந்தரங்க படங்கள் வெளியானது. இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது

வவுனியாவில் பேருந்திற்காக தனியாக நின்ற ஆசிரியை மீது பாலியல் மற்றும் கொலை முயற்சி!!

வவுனியா வேப்பங்குளம் 7ம் ஒழுங்கைப் பகுதியில் பேருந்து தரிப்பிடத்தில் பாடசாலை செல்வதற்காக காத்திருந்த ஆசிரியை ஒருவர் மீது இளைஞன் ஒருவன் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு முயன்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..

நேற்று (06.03.2017) காலை 6.30 மணியளவில் வேப்பங்குளம் 7ம் ஒழுங்கைக்கு முன்பாக உள்ள பேருந்து தரிப்பிடத்தில் பாடசாலை செல்வதற்காக பேருந்து தரிப்பிடத்தில் பேருந்துக்காக காத்திருந்த ஆசிரியை மீது அப்பகுதிக்கு திடீரென வந்த இளைஞன் ஒருவர் துஷ்பிரயோகம் மேற்கொள்ள முயற்சி செய்ததுடன் கொலை முயற்சியையும் மேற்கொண்டுள்ளார்.

மேலும் ஆசிரியை அதிலிருந்து தப்பிக்க முயற்சி செய்ததையடுத்து குறித்த இளைஞன் ஆசிரியை மீது கண்மூடித்தனமாக தாக்குதலை மேற்கொண்டதுடன், கடித்து குதறியும் உள்ளான்.

அதன் பின் யாரும் காணாதவாறு அவ்விடத்திலிருந்து தப்பித்து சென்றுள்ளான். கூக்குரல் சத்தம் கேட்டதையறிந்த முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் அவ்விடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட ஆசிரியையை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

குறித்த நபர் மட்டக்களப்பை வதிவிடமாக கொண்டவன் எனவும் ஆசிரியை ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்துள்ளான் எனவும் அறியப்படுகின்றது.

வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் பெண் தூக்கில் தொங்கி தற்கொலை : நடந்தது என்ன?(வீடியோ)

 
வவுனியா மகாறம்பைக்குளத்தில் நேற்று (06.03.2017) இரவு 7.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணொருவரின் சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

வவுனியா மகாறம்பைக்குளம் 9ம் ஒழுங்கையில் வசித்துவரும் விநாயகமூர்த்தி ரமணி என்ற வயது 60 பெண்ணே தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

இவர் மனநலம் பாதிப்படைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கிளினிக் சென்று வந்துள்ளார். இவ்வாறு இருக்கையில் நேற்று (06.03.2017) மாலை வீட்டில் அவரது உறவினர்கள் வெளியே சென்றிருந்த வேளையில் வீட்டில் அவரும் அவரது பெறாமகளும் இருந்துள்ளனர்.

இவரது பெறாமகள் தொலைக்காட்சி பார்வையிட்டுக்கொண்டிருந்த சமயத்தில் இவர் வீட்டில் வெளியே நடமாடிக்கொண்டிருந்துள்ளார்.

இரவு 7.30 மணியளவில் வெளியே சென்ற இவரது உறவினர்கள் முச்சக்கரவண்டியில் வீட்டிற்கு திரும்பிய வேலையில் முச்சக்கரவண்டியின் ஒளியில் குறித்த பெண் (விநாயகமூர்த்தி ரமணி) வீட்டின் வெளியே காணப்படும் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

உடனடியாக வவுனியா பொலிஸ் நிலையம் மற்றும் மகாறம்பைக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு உறவினர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் தடவியல் பொலிஸார் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த சடலத்தினை மீட்டுள்ளனர்.

அதன் பின்னர் குறித்த சடலம் மருத்துவ அறிக்கைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதற்குறிய மருத்துவ அறிக்கை மற்றும் கிளினிக் சென்றதற்கான ஆதாரங்களை பொலிஸாரிடம் உறவினர்கள் ஒப்படைத்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!!

 
வவுனியா மகாறம்பைக்குளம் 9ம் ஒழுங்கை பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது. விநாயகமூர்த்தி ரமணி(60)என்ற நான்கு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

இன்று (௦6.03.2017) இரவு மகளுடன் உணவு உட்கொண்டுவிட்டு வீட்டின் பின்புறம் தாய் சென்றதாகவும் நீண்ட நேரம் வராததையிட்டு தேடிச்சென்ற வேளையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டதாகவும் பிள்ளைகள் தெரிவித்தனர்.

இதேவேளை இறந்த இப் பெண் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிசார் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரியும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.

மேலதிக விசாரணைகளுக்காக சடலம் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

வெள்ளவத்தை பகுதியில் புகையிரதத்தில் மோதி ஒருவர் பலி!!

கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தானது நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக வெள்ளைவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாணந்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்தில் மோதியே குறித்த நபர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் அவசரமாக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இவ்வாறு உயிரிழந்தவர் தொடர்பில் தகவல்கள் என்னும் கிடைக்கவில்லை என தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் : முறைப்பாடு செய்யச்சென்ற தாய்க்கு நேர்ந்த சோகம்!!

வவுனியாவில் நீதிபதியின் உத்தரவுக்கு அமைய முறைப்பாடு ஒன்றை பதிவு செய்வதற்கு சென்ற தாயாரிடம் பொலிஸார் அலட்சியமாக நடந்துள்ளதுடன், முறைப்பாட்டையும் பதிவு செய்ய மறுத்துள்ளார்கள். இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

வவுனியா – நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஒலுமடு கிராமத்தில் கடந்த வருடம் பத்து வயது சிறுமி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளானது தொடர்பான வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

கடந்த வருடம் 24.05.2016 அன்று பாடசாலைக்கு மேலதிக வகுப்பிற்கு சென்ற பத்து வயது மாணவி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளானார்.

குறித்த சிறுமி சந்தேகநபரால் தாக்கப்பட்டதாக வவுனியா நெடுங்கேணி பொலிஸார் குற்றவாளிக்கு சார்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தனர். அதனடிப்படையில் சந்தேகநபருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியிருந்தது.

இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் “தனது மகள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக” நீதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தார். இதையடுத்து குறித்த வழக்கில் விசேட கவனம் செலுத்திய நீதிபதி எதிர்வரும் 31.03.2017 மீண்டும் வழக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாரை நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் மீண்டும் முறைப்பாடு பதிவு செய்யுமாறு நீதிபதி அறிவுறுத்தியிருந்தார்.

மாவட்ட நீதிமன்றின் நீதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் முறைப்பாடு பதிவு செய்ய வவுனியா நெடுங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு இன்று சென்றிருந்தார்.

இதன்போது குறித்த முறைப்பாட்டை பொலிஸார் ஏற்க மறுத்த நிலையில் தாயாரை திருப்பி அனுப்பியுள்ளனர். இச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார்,

“நீதிமன்றத்தில் நீதிபதியால் எனக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைவாக இன்று (06.03.2017) நெடுங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய சென்றிருந்தேன்.

அங்கிருந்த பொலிஸ் அதிகாரி எனது முறைப்பாட்டை ஏற்க மறுத்ததுடன் நீதிமன்றத்திற்கு கோப்பு (File) மாறி சென்றுவிட்டது. அதனால்தான் தவறு நடந்தது.

எங்களிடம் பழைய முறைப்பாடு இருக்கிறது என தெரிவித்ததுடன் நீதிமன்ற நடவடிக்கையை மேற்கொள்ளும் பொலிஸார் நித்திரைகொள்வதாகவும் அவ்வாறு முறைப்பாடு பதிவு செய்ய வேண்டுமானால் மாலை வரை பொலிஸ் நிலையத்தில் காத்திருக்குமாறும் கூறினார்கள்” என கண்ணீருடன் தெரிவித்தார்.

அத்துடன் நீதிமன்றத்தில் கொடுப்பதற்காக பொலிஸ் அதிகாரியின் இலக்கம் மற்றும் பெயரை பதிவுசெய்துள்ளதாகவும் குறித்த தாயார் தெரிவித்தார்.