யாழில் பெண் கூட்டுப்பாலியல் வல்லுறவு : குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறை : இளஞ்செழியன் தீர்ப்பு!!

யாழ்ப்பாணம் – நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முள்ளிவெளி என்னும் இடத்தில் காதலனுடன் இருந்த இளம் பெண்ணை மூன்று பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய வழக்கில் இரண்டு எதிரிகளுக்கு தலா பத்து ஆண்டுகள் கடூழியச்சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு யாழ்.மேல் நீதிமன்றில் இன்று விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே நீதிபதி இளஞ்செழியன் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.

இந்த வழக்கில் மூன்றாம் எதிரியான நபர் ஆரம்பத்தில் இருந்தே கைதாகாமல் தலைமறைவாக இருந்ததையடுத்து, அவர் இல்லாமலேயே கைது செய்யப்பட்ட இரண்டு எதிரிகளுக்கு எதிராக வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

இந்த சம்பவம் 2014ஆம் ஆண்டு பங்குனி மாதம் 7 ஆம் திகதி நடைபெற்றுள்ளது. சம்பவ தினத்தன்று 18 வயதுடைய பெண் ஒருவர் தனது காதலனுடன் ஒதுக்குப் புறமாக இருந்த வேளையில் அங்கு வந்த மூன்று பேர் காதலனைத் தாக்கிவிட்டு அந்தப் பெண்ணை கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியிருந்தனர்.

சம்பவம் பற்றி அறிந்த 3 இராணுவத்தினர் பாதிக்கப்பட்ட பெண்ணை உடனடியாக வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்திருந்தனர்.

சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட தேசிய அடையாள அட்டை ஒன்றின் உதவியுடன் பொலிஸார் துரிதமாக செயற்பட்டு இரண்டு பேரை கைது செய்திருந்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒருவர் தலைமறைவாகி விட்டார். இந்த சம்பவம் தொடர்பில் பாலேந்திரன் பிரபாகரன், சண்முகதாஸ் ரஜிதன், சிறிகணேஸ் சுதாகரன் என்ற மூவருக்கும் எதிரா இளம் பெண்ணை கூட்டுப் பாலியல் வல்லுறவு புரிந்ததாக குற்றம் சுமத்தி சட்டமா அதிபரினால் யாழ் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த வழக்கின் மூன்றாம் எதிரி கைதாகாமல் தலைமறைவாகி இருந்ததனால், அவர் இல்லாமல் ஏனைய இரண்டு எதிரிகளுக்கு எதிராக விசாரணைகள் நடைபெற்றன.

விசாரணைகளின் போது, பாதிக்கப்பட்ட பெண்ணும், அவருடைய தாய் தந்தையரும் மற்றும் காதலன் என கூறப்பட்டவரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்தனர்.

குற்றம் சுமத்தப்பட்ட இரண்டு எதிரிகளும் தாமாகவே முன்வந்து நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

இதனையடுத்து, இரண்டு எதிரிகளையும் கூட்டுப் பாலியல் குற்றம் புரிந்தமைக்கான குற்றவாளிகள் என தீர்ப்பளித்த நீதிபதி இளஞ்செழியன் குற்றவாளிகளாக காணப்பட்ட இரண்டு எதிரிகளுக்கும் தலா பத்து ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்தார்.

மேலும், எதிரிகள் இருவரும் தலா பத்து இலட்சம் ரூபாவை நட்டஈடாகச் செலுத்த வேண்டும் என்றும், தவறினால் பத்து ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

அத்துடன் நீதிமன்றுக்கு தலா பத்தாயிரம் ரூபா தண்டப் பணம் செலுத்த வேண்டும் என்றும் தவறினால், 6 மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

நீதிபதி இளஞ்செழியன் தனது தீர்ப்பின்போது குற்றவாளிகளாக காணப்பட்ட இரண்டு எதிரிகளையும் நோக்கி,

யாழ்ப்பாண கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் நடத்தப்பட்ட குழு பாலியல் வல்லுறவு குற்றமானது, மிகப் பாரதூரமான குற்றச்சாட்டாகும்.

எதிர்வரும் காலங்களில் எவரும் இத்தகைய குற்றச் செயல்களைச் செய்வதற்குக் கூட எத்தனிக்கக் கூடாது என்ற வகையில் இந்தக் குற்றச்சாட்டுக்கு அதிக பட்ச தண்டனை வழங்கப்படுகின்றது.

தன்னுடைய காதலனுடன் ஒதுக்குப்புறமாக நின்ற பொழுது காதலனைத் தாக்கிய 3 எதிரிகளும் 18 வயது நிரம்பிய பெண்ணை குழு பாலியல் வல்லுறவு செய்துள்ளமை மிகமோசமான குற்றச் செயலாகும்.

இந்தச் சம்பவத்தின் பின்னர் காதலனும் அந்தப்பெண்ணைக் கைவிட்டு, வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துள்ளமையும் அந்தப் பெண்ணைப் பாதித்துள்ளது.

ஆகவே பாதிக்கப்பட்ட அந்த இளம் பெண்ணின் எதிர்காலத்தை இந்த நீதிமன்றம் கவனத்திற் கொண்டு, அவருக்கு இழைக்கப்பட்ட குற்றச் செயலுக்கு குற்றவாளிகள் இருவரும் நட்டஈடாக தலா பத்து இலட்சம் செலுத்த வேண்டும் என தீர்ப்பளிக்கின்றது.

நட்டஈடாகிய பத்து இலட்சம் ரூபாவைச் செலுத்தத் தவறினால் மேலும் பத்து வருடம் கடூழியச் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் இந்த மன்று தீர்ப்பளிக்கின்றது.

அத்துடன் எதிரிகள் இருவரும் தலா பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்த வேண்டும். தவறினால் 6 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்தார்.

இந்தக் குற்றச் செயல் இடம்பெற்றதையடுத்து, துரிதமாக செயற்பட்டு பாதிக்கப்பட்ட பெண்ணை உடனடியாக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்த 3 இராணுவ உத்தியோகத்தர்களான ரத்நாயக்க, அஜித் சாகர, திலிப் குமார ஆகிய மூவரையும் அவர்களுடைய துரிதமான செயற்பாட்டுக்காக நீதிபதி இளஞ்செழியன் பாராட்டினார்.

சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட அடையாள அட்டையின் துணையுடன் 24 மணித்தியாலம், 48 மணித்தியாலத்துக்குள் இரண்டு எதிரிகளையும் கைது செய்திருந்த பொலிஸாரையும் பாராட்டியதுடன், இந்த வழக்கை துரிதமாக விசாரணை செய்த மாவட்ட நீதவானுக்கும் நீதிபதி இளஞ்செழியன் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

இந்த வழக்கில் தலைமறைவாகியுள்ள மூன்றாவது எதிரிக்கான விசாரணையை நீதிபதி எதிர்வரும் மே மாதம் 16 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

வவுனியாவில் மனதை நெகிழச்செய்யும் சம்பவம் : மரணத்திலும் இணைப்பிரியாத தம்பதிகள்!!

வவுனியா மகாரம்பைக்குளம், அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்த இணைப்பிரியா தம்பதிகளான பொன்னையா இராஜகோபால் (வயது 81), இராஜகோபால் நாகம்மா (வயது 72) ஆகிய இருவரும் மரணத்திலும் இணைபிரியாத தம்பதிகளாக உயிரிழந்துள்ளமை உறவினர்கள் மத்தியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சனிக்கிழமை இரவு கணவரான இராஜகோபால் என்பருக்கு சுகயீனம் ஏற்பட்டமையால் அவரை வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, கணவருக்கு சுகயீனம் என்பதை தாங்கிக்கொள்ள முடியாத மனைவி நாகம்மா வீட்டில் உயிரிழந்துள்ளார்.

வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்ட கணவர் சிகிச்சை பெறுவதற்கு முன்னரே மனைவி இறந்த செய்தி கேட்டதும் அவரும் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு கணவன், மனைவி இருவரும் உயிரிழந்துள்ளமை அவர்களது உறவினர்களையும், அயலவர்களையும் வியப்பிலும், ஆழ்ந்த சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

வவுனியாவில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவித்திட்டம் வழங்கிவைப்பு!!

 
வவுனியாவிலுள்ள வசதியற்ற பல்கலைக்கழக மாணவர்களுக்கு தாயக உறவுகளுக்கு உதவித்திட்டம் வழங்கு நிகழ்வு இன்று (06.03.2017) காலை 10.30 மணியளவில் வவுனியாவிலுள்ள இந்திரன்ஸ் விருந்தினர் விடுதியில் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ். சந்திரகுமார் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் லண்டன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய பரிபாலசபைத் தலைவர் து.இரத்தினசிங்கம் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட வசதியற்ற பல்கலை மாணவர்களுக்கு தலா 46 500 ரூபா வீதம் ஏழு மாணவர்களுக்கு அறிவுச்சுடர் நிதியூடாக வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் ஆலய பொருளாலர் திரு.சர்வானந்தம், செயலாளர் வைத்திய கலாநிதி பரமநாதன், ஆகியோர் கலந்து கொண்டு நிதி உதவிகளை வழங்கிவைத்தனர்.

நிகழ்வின் இறுதியில் தமிழ் விருட்சம் அமைப்பினால் லண்டன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய பரிபாலன தலைவர்களுக்கு கௌரவம் வழங்கப்பட்டதுடன் நினைவுப் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.

இன் நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியா தனியார் பேரூந்துகளில் பணியாற்றும் சாரதி நடத்துனர்களின் நலன்காக்க புதிய சங்கம்!!

 
வவுனியா தனியார் பேரூந்துகளில் பணியாற்றும் சாரதி நடத்துனர்களை உள்ளடக்கிய சங்மொன்று நேற்று (05.03.2017) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

வவுனியா தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் கீழ் செயற்படும் வகையில் சாரதி நடத்துனர்களின் நலனை மேம்படுத்தும் நோக்கோடு உருவாக்கப்பட்டுள்ள இச் சங்கமானது வட மாகாணத்தில் முன்முதலாக உருவாக்கப்பட்டுள்ளது.

தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் வவுனியா மாவட்ட தலைவர் எஸ்.ரி.இராஜேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் குறித்த சங்கத்திற்கான புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

இந் நிலையில் சாரதி நடத்துனர்களின் நடத்தை மற்றும் தனியார் பெரூந்துகளின் செயற்பாடுகள் தொடர்பாக தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் இதன்போது வளக்கமளித்திருந்தார்.

இதனையடுத்து வவுனியா தனியார் பேரூந்து சாரதி நடத்துனர் சங்கத்தின் தலைவராக செல்வரட்னம் தவேந்திரன், செயலாளராக எம்.மயூரன், பொருளாளராக தெய்வேந்திரன் ஜெகதீஸ்வரன், உப தலைவராக கந்தசாமி நிரஞ்சன், உப செயலாளராக அமிர்தலிங்கம் சுதர்சன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதுடன், நிர்வாக உறுப்பினர்களாக எவ்.என்.கசன், புஸ்பராஜா சிவானந்தன், டபிள்யு. ஏ. காமினி, ஏ.எம்.இர்சாட் ஆகியோர் நிர்வாக உறுப்பினாகளாக தெரிவு செய்யப்பட்டதுடன் ஆலோசகராக சிவலோகமூர்த்தியும் தெரிவு செய்யப்பட்டனர்.

வவுனியாவில் 11வது நாளாக காணாமல்போனோரின் உறவுகள் உண்ணாவிரதப் போராட்டத்தில்!!

 
வவுனியாவில் கடந்த 11 நாட்களாக தமதுபோராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (06.03.2017) 11வது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக்கோரியும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் அவசரகாலச்சட்டத்தினை நீக்குமாறு கோரி தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் சமாதான விகாரை திறந்து வைப்பு!!

 
கடந்த 18.06.2016 அன்று இலங்கையின் பொலிஸ்மா அதிபர் தலைமையின் கீழ் வவுனியா பொலிஸ் நிலைய வளாகத்தில் சமாதான விகாரையின் புனர் நிர்மானம் கட்டுமாணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு இன்று (06.03.2017) காலை 6.45 மணியளவில் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தலைமையின் கீழ் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

27 அரை அடி உயரமானதும் 44 அடி சுற்றுவட்டமுடைய விகாரையினது நிதி உதவியை இலங்கை பொலிஸ் திணைக்கள பௌத்த மத பிரிவிலுள்ள பொலிஸ் அதிகாரிகளால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

வடமாகாணத்தில் ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள், அவர்களது குடும்ப உறவுகள், மற்றும் சமூக பொலிஸ் பிரிவிலுள்ள உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் நேற்று 05.03.2017 மாலை சர்வமத ஆராதனைகள் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஒரு அங்கமாக நூல் வெளியீடு, மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டதுடன் கற்பிணித்தாய்மாருக்கான போசாக்கு உணவு, வசதியற்ற பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரங்கள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கை பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர, வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர், வடமத்திய சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர், வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர், வன்னி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், வவுனியா மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், வவுனியா பிரதேச செயலாளர், யுத்தத்தினால் அங்கவீனமுற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள், குடும்ப உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியா நூலக வீதியில் விபத்து: இருவர் படுகாயம்!!

 
வவுனியா நகரசபைக்கு முன்பாக இன்று (06.03.2017) பிற்பகல் முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதிய விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ் விபத்து பற்றி மேலும் தெரியவருவதாவது..

பூங்கா வீதியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டி ரெலிகொம் வீதிக்கு திரும்ப முற்பட்ட போது வவுனியாவில் இருந்து பூங்கா வீதிக்கு வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் முச்சக்கர வண்டியுடன் நேராக மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 30,32 வயதுடைய இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் அதிவேகமாக பயணித்ததாலேயே இவ் விபத்து இடம்பெற்றதாக இவ் விபத்தை பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

68 கிலோ எடை.. 60 ஆயிரம் விலை.. 120 கி.மீ. வேகம்.. வானில் பறக்கிறது, கிராமத்து விவசாயியின் சூப்பர் பாராகிளைடர்

வானத்தில் பறந்தபடி இயற்கை காட்சிகளை ரசித்து வட்டமிட வைக்கும் பாராகிளைடரை, தொழில்நுட்ப படிப்புகள் எதுவும் படிக்காமலேயே உருவாக்க முடியும் என நிரூபித்து இருக்கிறார், ராஜா ஞானபிரகாசம் என்ற கிராமத்து விஞ்ஞானி.

38 வயதான இவருடைய பூர்வீகம் திருப்பூர் மாவட்டத்திலுள்ள கடத்தூர் கிராமம். 8–ம் வகுப்புடன் பள்ளி படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தபோதும் கல்வி அறிவை கூர்தீட்டிக்கொண்டே இருந் திருக்கிறார். பின்பு தொலைதூர கல்வி மூலம் எம்.ஏ. வரை படித்திருக்கிறார்.

வானில் பறக்க வேண்டும் என்பது, ராஜா ஞானபிரகாசத்திற்கு சிறு வயதில் துளிர்த்த மாபெரும் கனவு. தனது கனவை நனவாக்க பாராகிளைடரை சொந்தமாகவே உருவாக்குவதற்கு முயற்சி எடுத்திருக்கிறார். அதற்கு செயல்வடிவம் கொடுக்க களத்தில் இறங்கியவர் சந்தித்த சோதனைகள் ஏராளம். விடா முயற்சியால் வானத்தையே தன்வசப்படுத்திய ராஜா ஞானபிரகாசம், தான் உருவாக்கிய பாராகிளைடரில் வானில் வட்டமடித்து பறந்து கொண்டிருந்தார். அவரை சந்தித்து பேசினோம்.

பாராகிளைடரை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன், எப்போது ஏற்பட்டது?

‘‘நான் சிறுவனாக இருந்தபோது, வானில் பறக்கும் விமானங்களை கண்டு ஆச்சரியப்படுவேன். அப்போதே ‘வானில் விமானம் எப்படி பறக்கிறது?’ என்ற கேள்வியை எனக்குள் எழுப்பி, விடைதேடினேன். முதலில் பட்டங்களை பறக்கவிட்டுப் பார்த்தேன். பின்பு விமானத்தை போல வானில் பறக்கவிடும் நோக்கில் தார்ப்பாய் மற்றும் துணிகளை கொண்டு ராட்சத பட்டம் ஒன்றை தயார் செய்தேன். அதில் ஏறி வானில் பறக்க முயற்சித்தேன். அது தோல்வியில் முடிந்தது. கடும் முயற்சிக்கு பிறகு எங்களுடைய தோட்டத்து கிணற்றின் ஒரு மூலையில் ராட்சத பட்டத்தில் ஏறி நின்று கொண்டு எதிர்முனைக்கு தாவி பயிற்சி எடுத்தேன். அதுதான் என்னுடைய கடின முயற்சிக்கு கிடைத்த முதல் பரிசு. அது கொடுத்த ஊக்கம் பாராகிளைடரில் பறக்க வேண்டும் என்ற ஆசையை துளிர்விட செய்தது. ராட்சத பட்டத்தை போல பாராகிளைடரையும் நானே தயார் செய்து அதில்தான் பறக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதுவே என் லட்சியமாக மாறியது.

உங்களுடைய லட்சியத்தில் வெற்றி பெற எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டியதிருந்தது?

‘‘13 ஆண்டுகளுக்கு முன்பு பாராகிளைடரை தயாரிக்கும் முயற்சியில் களம் இறங்கினேன். அதனை வடிவமைப்பதற்கான சில நுணுக்கங்களை, நான் வேலைக்கு சென்ற தொழிற்கூடங் களில் கற்றேன். இணையதளங்கள் மூலமாகவும் ஏராளமான தகவல்களை திரட்டினேன். பொறியியல் படிப்பு சார்ந்த புத்தகங் களையும் படித்து பாராகிளைடர் தயாரிப்பு முறை, இயங்கும் விதம் பற்றி அறிந்து கொண்டேன். நண்பர்களும் எனக்கு உதவியாக இருந்தனர்.

பாராகிளைடரை தயாரிக்க தேவையான உதிரிபாகங்கள் எப்படி கிடைத்தது?

‘‘பழனி, கோவை போன்ற இடங்களுக்கு சென்று பாராகிளைடர் தயாரிக்க தேவையான உபகரணங்களை ஒவ்வொன்றாக வாங்கினேன். ஆனால் பாராசூட் மட்டும் கிடைக்கவில்லை. அதை பெங்களூருவுக்கு சென்று வாங்கி வந்தேன். வெளிநாடுகளில் பாராகிளைடர் தயாரிக்க ரூ.10 லட்சத்துக்கும் மேல் செலவிடுகிறார்கள். எனக்கு ரூ.60 ஆயிரமே செலவானது. குறைவான செலவில் மிகவும் பாதுகாப்பான பாராகிளைடரை உருவாக்கி இருக்கிறேன்’’

உங்களுக்கு முதல் வெற்றி எப்போது கிடைத்தது?

‘‘2015–ம் ஆண்டு முதல் பாராகிளைடரை உருவாக்கினேன். மே மாதம் 15–ந்தேதி அதனை வானில் பறக்க விட்டு சோதனை செய்து பார்த்தேன். அது வெற்றிகரமாக பறந்தது. அப்பொழுது சுமார் 60 அடி உயரம் வரை அதில் பயணம் செய்து பத்திரமாக தரை இறங்கினேன். சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்ததால் அன்றைய பொழுது மிகவும் மகிழ்ச்சியானதாகவும், உணர்ச்சிகரமானதாகவும் இருந்தது. பலரும் என்னை பாராட்டினார்கள்’’

நீங்கள் இதுவரை எத்தனை பாராகிளைடர்களை உருவாக்கி இருக்கிறீர்கள்?

‘‘200 சிசி, 230 சிசி, 270 சிசி, 310 சிசி என வெவ்வேறு எந்திர திறன்கொண்ட 4 வகையான பாரா கிளைடர்களை உருவாக்கி வைத்திருக்கிறேன். இதில் இறுதியாக தயாரித்த 310 சிசி திறன் கொண்ட பாராகிளைடர் மூலம் எவ்வளவு தூரம், எவ்வளவு உயரம் வேண்டுமானாலும் பறந்து செல்லலாம். மணிக்கு அதிகபட்சமாக 120 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கலாம். அதில் உயரம், தூரத்தை கணக்கிடும் கருவிகளை பொருத்தி இருக்கிறேன். பெட்ரோல் டேங்க் 14½ லிட்டர் கொள்ளளவு கொண்டது. இதன்மூலம் 4½ மணி நேரம் இடைவிடாமல் பயணம் செய்ய முடியும். அதிகபட்சமாக 2 பேர் பயணிக்கலாம். நான் தயாரித்து இருக்கும் பாராகிளைடர் 68 கிலோ எடை கொண்டதாகும்’’

பாராகிளைடர் இயக்கும் முறை, பாதுகாப்பு பற்றி…?

‘‘பாராகிளைடரை காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில் இருந்து சிறிது தூரம் தள்ளி செல்ல வேண்டும். அப்போது, எந்திரத்தில் பொருத்தப்பட்டு இருக்கும் பாராசூட் விரிவடையும். பிறகு மேலே பறக்க தொடங்கும். அதில் கட்டுப்பாட்டு கருவிகளையும் பொருத்தி இருக்கிறேன். இதனால் நாம் பயணிக்க விரும்பும் திசையை நாமே தேர்வு செய்யலாம். திடீரென ஏதாவது கோளாறு ஏற்பட்டு அந்தரத்தில் எஞ்சின் பழுதடைந்து நின்றாலும், பத்திரமாக பாராசூட் மூலம்  தரை இறங்கலாம். அந்த அளவுக்கு பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைத்திருக்கிறேன். இதனை தரையில் இருந்து வானில் பறக்க, இயக்குவதற்கு 30 மீட்டர் தூரம் இட வசதி இருந்தால் போதும். நண்பர்கள் உதவியுடன் சிறிது தூரம் தள்ளி சென்று இயக்குகிறேன். பாராகிளைடரை பலமான காற்று வீசும் காலங்களிலும், மழைக்காலங்களிலும் பயன்படுத்த முடியாது’’

உங்கள் முயற்சிகளில் ஏற்பட்ட தோல்விகள்?

‘‘சிறு வயதில் இருந்தே ஏராளமான தோல்விகளை கடந்து வந்திருக்கிறேன். தோல்விகள்தான் எனக்கு பாடங்களை கற்றுக்கொடுத்து பாராகிளைடர் முழுவடிவம் பெறுவதற்கு உந்துசக்தியாக இருந்திருக்கிறது. அதனை தயாரித்து வானில் பறக்க வைக்க முயற்சித்தபோதும் தோல்விகள்தான் தொடர்கதையானது. முதலில் ஏதாவது தொழில்நுட்ப தவறுகள் ஏற்பட்டுக் கொண்டே இருந்தன. அதனை கண்டுபிடித்து திருத்தி அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவேன். ஏராளமான தோல்விகளை எதிர்கொண்டபோதிலும், துவண்டுபோனதில்லை. பெற்றோரும், உறவினர்களும் உற்சாகமூட்டினார்கள். பழனி வயலூரை சேர்ந்த சாத்தப்பன், கிருஷ்ணன் உள்ளிட்ட நண்பர்கள் பிரதிபலன் எதிர்பார்க்காமல் உதவி செய்தனர். சாத்தப்பனின் ‘லேத்’ பட்டறையில் நேரம் காலம் பாராமல் பாராகிளைடர் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டேன். அதுவும் எனது வெற்றிக்கு முக்கிய பங்கு ஆற்றியது’’

இதுவரை எத்தனை முறை பாராகிளைடரில் பறந்து இருக்கிறீர்கள்?

‘‘நான் 25 தடவைக்கு மேல் பாராகிளைடரில் பறந்திருக்கிறேன். மரங்கள், இயற்கை காட்சிகள், குடியிருப்புகளுக்கு மேலே வானில் பறந்து வட்டமடிக்கும்போது சொர்க்கத்தில் பயணிப்பதாகவே எண்ணுவேன். அப்போது, ஏற்படும் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. நான் வானில் பறப்பதை கிராம மக்கள் ஆச்சரியமாக பார்ப்பார்கள்’’

பாராகிளைடரில் பறக்க அனுமதி பெற வேண்டுமா?

‘‘பாராசூட்,பாரா கிளைடர் போன்றவற்றில் குறிப்பிட்ட உயரம் வரை மட்டுமே பறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. நான் அதிகபட்சமாக 500 மீட்டர் உயரத்தில் பறப்பேன். நான் பாராகிளைடர் தயாரித்து வானில் பறப்பதை அறிந்த போலீசார் என்னிடம் விசாரித்தனர். அதன்பிறகு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் என் மீது குற்ற வழக்குகள் எதுவும் இல்லை என்பதற்கான சான்று வாங்கினேன். மற்றபடி இதை பயன்படுத்த சிறப்பு அனுமதி பெற வேண்டியதில்லை. பள்ளிகளில் என்னை மாணவர்களோடு உரையாற்ற அழைக்கிறார்கள். நான் மாணவர்களிடம் பாராகிளைடரை இயக்கி காண்பித்துள்ளேன். அதன் செயல்முறை, உருவாக்கும் முறை பற்றியும் விளக்குகிறேன். மாணவர்கள் ஆர்வமாக கவனிக் கிறார்கள். தொடர்ந்து, மாணவர்கள், இளைஞர்களை சந்தித்து நான் சந்தித்த சோதனைகள், போராட்டங்களை எடுத்துக்கூறி அவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி கொடுத்து ஊக்குவிப்பேன். விடா முயற்சி விஸ்வரூப வெற்றியை தரும். தோல்விகளை கண்டு துவண்டுவிடக்கூடாது. சோதனைகளை கண்டு சோர்ந்துபோக கூடாது. இலக்கை அடையும் வரை ஓய்ந்துவிடக்கூடாது. இவற்றைதான் இளைஞர்கள் வெற்றியின் தாரக மந்திரமாக கருத வேண்டும்’’

உங்களுடைய அடுத்த கட்ட முயற்சி?

‘‘நான் பாராகிளைடரை உருவாக்கி, இயக்கியதோடு திருப்தி அடைந்திடவில்லை. எனக்குள், ஹேண்ட்கிளைடர் விமானம் (இறக்கை உடைய சிறிய விமானம்) தயாரிக்கும் எண்ணம் உருவாகி உள்ளது. தற்போது, அதற்கான முயற்சிகளில் களம் இறங்கி உள்ளேன். இதிலும் வெற்றி காண்பேன். இந்த விமானத்தை பயன் படுத்த விமான போக்குவரத்து ஆணையம் போன்ற சில துறைகளிடம் சிறப்பு அனுமதி பெற வேண்டும். அவற்றை பெறுவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறேன். விதிமுறைகளுக்கு உட்பட்டு அதை பயன்படுத்துவேன்’’ என்றார், இந்த கிராமத்து விஞ்ஞானி.

விவசாய குடும்பத்தை சேர்ந்த ராஜா ஞானபிரகாசத்தின் பெற்றோர் அருட்பிரகாசம்–முத்துலட்சுமி. தந்தையோடு சேர்ந்து விவசாய பணிகளையும் கவனிக்கும் இவர், ஆழ்குழாய்கள் அமைக்கும் பணிகளையும் செய்து வருகிறார்.

லண்டனில் வெடித்துச் சிதறிய இரண்டாம் உலகப்போர் குண்டு : பீதியில் வெளியேறிய மக்கள்!!

 
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் கண்டெடுக்கப்பட்ட இரண்டாம் உலகப்போர் குண்டு பாதுக்காப்பாக வெடித்துச் சிதறவைத்து அழிக்கப்பட்டுள்ள சம்பவம், அப்பகுதி மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் வடமேற்கு லண்டனில் Brondesbury பூங்காவில் கடந்த வியாழக்கிழமை இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்திய பெரிய ஜேர்மன் வெடிகுண்டு கண்டு பிடிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

இந்த குண்டு எந்த நேரத்திலும் வெடித்து விடுமோ என்று அவர்கள் பீதியில் இருந்ததாகவும் கூறப்பட்டது.

கண்டு பிடிக்கப்பட்ட குண்டின் எடை சுமார் 500lb இருக்கும் என்று கூறப்பட்டது. இதனால் அந்த வெடிகுண்டை ஒரு வெட்ட வெளியான இடத்தில் வைத்து அதிகாரிகள் வெடிக்க வைத்துள்ளனர்.

இதுதொடர்பான வீடியோவையும் தற்போது வெளியிட்டுள்ளனர். இது குறித்து பாதுகாப்பு அமைச்சர் டுவிட்டரில் பாரிய வெடிகுண்டு பாதுகாப்பாக அழிக்கப்பட்டுவிட்டது என்றும் இதற்கு உதவிய அதிகாரிகளுக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.

தற்போது அக்குண்டு எந்த ஒரு பாதிப்புமின்றி அழித்துவிட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர்.

வவுனியாவில் டெங்கு நுளம்பை ஒழிக்க வவுனியா பொது சுகாதார பணிமனையினரின் அதிரடி நடவடிக்கை!!

 
வேப்பங்குளம், பட்டகாடு பகுதியில் டெங்கு நுளம்பை ஒழிக்க விசேட நடவடிக்கை நேற்று (05.03.2017) மேற்கொள்ளப்பட்டுள்ளளது.

நெளுக்குளம் பொலிஸாரும், வவுனியா பொது சுகாதார பணிமனையினரும் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதனை அழிக்கும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இதன்போது வீடு வீடாகச் சென்று மக்களுக்கு டெங்கு நுளம்பின் தாக்கம் தொடர்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் அமைந்திருந்த பொதுமக்களின் வீடுகள் என்பவற்றில் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் நுளம்பு பெரும் இடங்களும் அழிக்கப்பட்டன.

மேலும், டெங்கு ஒழிப்பு விசேட நிகழ்வில் வைத்தியர் லவன், பொது சுகாதார பரிசோதகர் வாகீசன், நெளுக்குளம் பொலிஸ் உத்தியோகஸ்தர், கிராம சேவையாளர் தவராசா, சமுதாய பாதுகாப்பு குழு தலைவர் நாகூர்கனி ஸாபி, அதன் பொருளாளர் ஜெமீல் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் A.R.M.லறீப் , சமுதாய பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்துக்கொண்டுள்ளனர்.

தொலைக்காட்சிகளைப் போன்றே நிகழ்ச்சிகளை வழங்கவுள்ள பேஸ்புக்!!

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் விரைவில் தொலைக்காட்சிகளைப் போன்றே நிகழ்ச்சிகளை வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக அமெரிக்காவிலிருந்து வெளிவரும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்னும் இதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் முதலில் ‘பேஸ்புக் லைவ்’ என்னும் பெயரில் பயனாளர்கள் தங்களது வீடியோக்களை நேரலை ஒளிபரப்பு செய்யும் முறையை அறிமுகப்படுத்தியது.

அதற்குக் கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து தற்போது தொலைக்காட்சிகளில் வருவதைப்போன்றே நிகழ்ச்சிகளை வழங்க முடிவு செய்துள்ளது.

விளையாட்டு தொடங்கி அறிவியல் வரையிலான பல்வேறுபட்ட வகைகளில் நிகழ்வுகளை ஒளிபரப்ப ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இவை அனைத்தும் வாரம் ஒரு முறை அரை மணி நேரம் ஒளிபரப்பாகும் வகையில் வடிவமைக்கப்படவுள்ளன.

இத்தகைய நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்குவோருக்கு கணிசமான அளவில் பணம் தரவும் பேஸ்புக் நிர்வாகம் தயாராகவுள்ளது.

சில மாதங்களுக்கு முன்னால் பயனாளர்களின் டைம்லைனில் போலிச் செய்திகள் அதிக அளவில் இடம்பெறுவதாக சர்ச்சைகள் எழுந்த காரணத்தால் இந்த புதிய நிகழ்ச்சிகளில் செய்திகள் இடம்பெறாது என தெரிகிறது.

ஸ்மார்ட்போன்களில் வாழும் 3 விதமான புதிய நுண்ணுயிரிகள் : ஆய்வாளர்கள் அதிர்ச்சித் தகவல்!!

நம் கையில் எந்நேரமும் தவழ்ந்து கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன்கள் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் ஸ்மார்ட்போன்களில் 3 புதிய நுண்ணுயிரிகள் வாழ்வது தெரியவந்துள்ளது.

நாம் அன்றாடம் கையில் வைத்து பயன்படுத்தி வரும் ஸ்மார்ட்போன்களில் மூன்று விதமான புதிய நுண்ணுயிரிகள் வாழ்வதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மேற்கத்தேய நாடுகளில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு ஆய்வுகளில் நாம் பயன்படுத்தி வரும் ஸ்மார்ட்போன்களில் அதிகப்படியான கிருமிகள் மற்றும் பக்டீரியா உள்ளிட்டவை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கழிவறைகளில் காணப்படுவதை விட பலமடங்கு பக்டீரியா மற்றும் கிருமிகள் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

கழிவறைகளில் வழக்கமாக இரண்டு அல்லது மூன்று வகையான கிருமிகள் மட்டுமே இருக்கும் ஆனால் ஸ்மார்ட்போன்களில் சராசரியாக 10-12 வகையான கிருமிகள் இருப்பது முன்னதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டது.

இவற்றில் சில கிருமிகளை எவ்வித கிருமி நாசினிகளாலும் அழிக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மத்திய அரசின் தேசிய செல் அறிவியல் மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் ஸ்மார்ட்போன் திரையில் மூன்று விதமான புதிய நுண்ணுயிரிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அறிவியல் இலக்கியத்தில் இதுவரை இல்லாத இரண்டு வித பக்டீரியா மற்றும் பூஞ்சை (ஃபங்கஸ்) இருப்பது பயோடெக்னொலஜி துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் இது போன்ற கிருமிகளில் இருந்து பாதிக்கப்படாமல் இருக்க ஸ்மார்ட்போன் திரைகளை அவ்வப்போது மெல்லிய துணியை கொண்டு சுத்தம் செய்வது நல்லது என கூறப்படுகிறது.

எனினும் ஸ்மார்ட்போன்களை சுத்தம் செய்யும் போது அவற்றை நிறுத்தி வைக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் 6 பேர் உயிரிழப்பு!!

கவனயீனத்துடன் வாகனம் செலுத்துவதால் தினமும் பல உயிரிழப்புக்களை சந்திக்க நேரிடுகின்றது. கடந்த 24 மணித்தியாலங்களில் சில பகுதிகளில் பதிவான வாகன விபத்துக்களில் 6 பேரின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. உயிரிழர்வர்களில் கர்ப்பிணித் தாயொருவரும் அடங்குகின்றார்.

நேற்றிரவு ஏழு மணியளவில் அவிசாவரள – நீர்கொழும்பு பிரதான வீதியின் அமிதிரிகல எரெந்தெனிய பகுதியில் தனியார் பஸ்ஸூம் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

இந்த விபத்தில் மூவர் உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான வேனில் 9 பேர் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த ஆறு பேர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், கவலைக்கிடமான நிலையிலிருந்த பெண்கள் இருவர் தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

இதேவேளை, நேற்றிரவு கந்தளாய் – திருகோணமலை பிரதான வீதியின் பாலம்போட்டாறு பகுதியில் மற்றுமொரு விபத்து பதிவானது.

திருகோணமலையிலிருந்து கந்தளாய் நோக்கி நெல் அறுவடை இயந்திரத்தை ஏற்றிப் பயணித்த உழவு இயந்திரம், முன்னாள் வந்த சிறிய ரக லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

சிறியரக லொறியில் பயணித்த 16 பேர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இன்று அதிகாலை 3.30 அளவில் ஹிக்கடுவை – திரானகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்தார்.

காலியிலிருந்து – ஹிக்கடுவை நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டி வேகக்கபட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி மதில் சுவருடம் மோதி விபத்துக்குள்ளானது.

முச்சக்கரவண்டியில் நால்வர் பயணித்துள்ளதுடன், இதில் காயமடைந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதேவேளை, கஹட்டகஸ்திகிலிய – மெக்கிச்சாவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 11 வயது சிறுவனொருவன் உயிரிழந்துள்ளார்.

தனது தாயுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த சந்தர்ப்பத்தில், பின்னால் வந்த வாகனமொன்று மோதியதில் சிறுவன் உயிரிழந்துள்ளார்

விபத்தில் படுகாயமடைந்த சிறுவனின் தாய் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இன்று முற்பகல் இடம்பெற்ற மற்றுமொரு வாகன விபத்தில் பண்டாரவளை – எத்தலபிடிய பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணித் தாயொருவர் உயிரிழந்தார்.

தனது பிள்ளையுடன் சந்தைக்குச் சென்று வீடு திரும்பிய இவர் காரை நிறுத்துவதற்கு முயன்றபோது அது 150 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த பிள்ளை பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை கிரிக்கெட் முகாமையாளர் என்ற புதிய பதவிக்கு அசங்க குருசிங்க நியமனம்!!

இலங்கை கிரிக்கெட் முகாமையாளர் என்ற புதிய பதவியொன்றை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

1996 ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்தை வென்ற இலங்கை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்ந்த அசங்க குருசிங்கவுக்கு இந்த புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

1990 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இலங்கை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்ந்த அசங்க குருசிங்க 1996 ஆம் ஆண்டு உலகக்கிண்ண போட்டிகளில் இலங்கை அணி, சம்பியனாவதற்கு முக்கிய காரணமாக விளங்கியவர்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிசிறப்பான ஆற்றல்களை வெளிப்படுத்திய குருசிங்க 41 டெஸ்ட் போட்டிகளிலும் , 147 ஒருநாள் சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளிலும் இலங்கை அணிக்காக விளையாடியுள்ளார்.

இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முகாமையாளராக செயற்படவுள்ளமை தொடர்பில் குருசிங்க கருத்து வெளியிட்டார்.

இலங்கை அணியுடன் மீண்டும் இணைந்து செயற்படவுள்ளமை அதிக மகிழ்ச்சியளிக்கின்றது.இந்த பதவியை எனக்கு தந்தமைக்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.2019 ஆம் ஆண்டு உலகக்கிண்ண போட்டிகளை முன்னிலையாகக் கொண்டு விளையாடி வருகின்ற இளம் இலங்கை அணி, சிறப்பான பெறுபேறுகளை பெற முடியும். இலங்கை கிரிக்கெட் அணிக்கு நான் கடமைப்பட்டிருக்கின்றேன்.
அசங்க குருசிங்கவுக்கு இந்த பதிவி வழங்கப்பட்டமை தொடர்பில இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால கருத்து வெளியிட்டார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தை மறுசீரமைக்கும் ஒரு அங்கமாக அசங்க குருசிங்கவுக்கு இந்த முகாமையாளர பதவி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த பதவியின் பொறுப்பினை அசங்க குருசிங்க உணர்ந்து செயற்படுவார் என நினைக்கின்றேன் . இலங்கை கிரிக்கெட் அணியை அசங்க குருசிங்க வலுவான அணியாக கட்டமைப்பார் எனறும் நினைக்கின்றேன்.

வெள்ளை மாளிகை ஓவல் மண்டபத்தில் விநோதமான கோலத்தில் அமர்ந்திருந்த ட்ரம்பின் ஆலோசகர்!!

அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்பின் ஆலோ­ச­கர்­களில் ஒரு­வ­ரான கெலியென் கொன்வே, வெள்ளை மாளி­கை­யி­லுள்ள ஜனா­தி­ப­தியின் பிர­தான அலு­வ­லக அறை­யான ஓவல் மண்­ட­பத்­தி­லுள்ள கதி­ரை­யொன்றில் வித்­தி­யா­ச­மான பாணியில் அமர்ந்­தி­ருந்­த­போது பிடிக்­கப்­பட்ட புகைப்­படம் இணை­யத்தில் வேக­மாக பரவி வரு­கி­றது.

50 வய­தான கெலியென் கொன்வே, குடி­ய­ரசுக் கட்­சியின் பிர­சார முகா­மை­யாளர் ஆவார். தற்­போது ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்­பின்­ஆ­லோ­ச­க­ராக பணி­யாற்­று­கிறார்.

அமெ­ரிக்கப் பல்­க­லைக்­க­ழ­கங்கள், கல்­லூ­ரி­களின் கறுப்­பினத் தலை­வர்­களை கடந்த திங்­கட்­கி­ழமை ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் சந்­தித்தார்.

ஓவல் மண்­ட­பத்தில் நடந்த சந்­திப்­பின்­போது அங்­குள்ள சோபாவில் அமர்ந்து தனது செல்போன் மூலம் புகைப்­படம் பிடித்த கெலியென், பின்னர் அப்­ப­டங்­களை செல்­போனில் பார்த்­துக்­கொண்­டி­ருந்தார். இதன்­போது பிடிக்­கப்­பட்ட படமே இணை­யத்தில் பர­வி­யுள்­ளது.

பாத­ணி­களை அணிந்த நிலையில், ஷோபாவில் முழந்­தா­ளிட்­ட­தைப்போல் கெலியென் அமர்ந்­தி­ருந்­ததை சிலர் விமர்­சித்­துள்­ளனர்.

குழந்தையை குழிதோண்டி புதைத்த தாய் : கிளிநொச்சி ஆனைவிழுந்தானில் சம்பவம்!!

கிளி­நொச்சி ஆனை விழுந்தான் பிர­தே­சத்தில் பிறந்த சிசுவை குழி தோண்டி புதைத்த சம்­பவம் ஒன்று இடம்­பெற்­றுள்­ளது. கடந்த 5 நாட்­க­ளுக்கு முன்னர் 22 வய­து­டைய யுவதி ஒருவர் வீட்டில் பிர­ச­வித்த குழந்­தையை வீட்டின் பின்னால் உள்ள மல­சல கூடத்­துக்கு அருகில் குழி­தோண்டி புதைத்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

சம்­ப­வத்­துடன் தொடர்­பு­பட்ட யுவதி மகப்­பேற்றின் பின்னர் ஏற்­பட்ட கடும் இரத்தப் போக்கின் கார­ண­மாக வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­ட­போது சம்­பவம் தொடர்பில் வைத்­தி­யர்­களின் விசா­ர­ணை­களின் பின்னர் தெரியவந்­துள்­ளது.

இத­னை­ய­டுத்து கிளி­நொச்சி பொலி­ஸா­ருக்கு கிடைத்த தக­வ­லை­ய­டுத்து சம்­பவம் தொடர்­பி­லான விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

சம்­ப­வத்­துடன் தொடர்­பு­பட்ட பெண் கொழும்பில் ஆடை­த்தொ­ழிற்­சாலை ஒன்றில் பணி புரிந்து வந்­துள்­ள­தா­கவும் குறை மாதத்தில் பிறந்த குழந்தை இறந்து பிறந்த நிலையில் பிள்­ளையை இவ்­வாறு குழி தோண்டி புதைத்­துள்­ள­தா­கவும் பொலி­ஸாரின் ஆரம்ப கட்ட விசா­ர­ணை­களில் தெரிய வந்­துள்­ளது.