புத்­தளம், மது­ர­க­மவில் தலை­யில்­லாத சடலம் மீட்பு : தலையை கண்டு பிடித்த பொலிஸ் மோப்ப நாய்கள்!!

 
புத்­தளம் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட புத்­தளம் – குரு­ணாகல் வீதியின் மது­ர­கம பிர­தே­சத்தின் காட்டுப் பகு­தி­யி­லி­ருந்து தலை துண்­டிக்­கப்­பட்ட, இனந்­தெ­ரி­யாத ஆண் ஒரு­வரின் சடலம் மீட்­கப்­பட்­ட­தாக புத்­தளம் பொலிஸார் தெரி­வித்­தனர்.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை மீன் பிடிக்கச் சென்று கொண்­டி­ருந்த இரு இளை­ஞர்கள் தலை­யில்­லாத நிலையில் சடலம் ஒன்று கிடப்­பதை அவ­தா­னித்து உட­ன­டி­யாக அது தொடர்பில் புத்­தளம் பொலி­ஸா­ருக்கு வழங்­கிய தக­வ­லை­ய­டுத்து அங்கு சென்ற பொலிஸார் அச்­ச­ட­லத்தை மீட்­டுள்­ளனர்.

அதன்பின், குறித்த இடத்­திற்குச் சென்ற புத்­தளம் பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் அநுர குண­வர்­தன தலை­மை­யி­லான குழு­வினர் ஆரம்பக் கட்ட விசா­ர­ணை­களை நடத்­தினர். அப்­பி­ர­தே­சத்தில் நடத்­திய சோதனை நட­வ­டிக்­கையின் போது சடலம் காணப்­பட்ட இடத்­துக்குச் சற்று தொலைவில் வீசப்­பட்­டி­ருந்த கத்தி ஒன்­றையும் மீட்­டுள்­ளனர்.

சம்­பவ இடத்­துக்குச் சென்ற புத்­தளம் பதில் நீதிவான் எம். ஏ. பசால் விசா­ர­ணை­களை மேற்­கொண்ட பின்னர் சட­லத்தை பிரேத பரி­சோ­த­னைக்­காக புத்­தளம் வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்­லு­மாறு உத்­த­ர­விட்­ட­தோடு குறித்த பிர­தே­சத்தில் மீண்டும் தேடுதல் நட­ வ­டிக்கை மேற்­கொள்­ளு­மாறும் பொலி­ஸா­ருக்கு உத்­த­ர­விட்டார்.

இத­னை­ய­டுத்து நேற்று முன்­தினம் சனிக்­கி­ழமை புத்­தளம் பொலிஸ் நிலை­யத்தைச் சேர்ந்த மூன்று பொலிஸ் குழுக்கள் சடலம் காணப்­பட்ட பிர­தே­சத்தில் பொலிஸ் மோப்ப நாயின் உத­வி­யுடன் தேடுதல் நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டது.

இதன்போது சடலம் காணப்­பட்ட இடத்­துக்குச் சற்று தொலைவில் மீட்­கப்­பட்ட கத்தி கிடந்த திசையில் சென்ற மோப்ப நாய்கள் அவ் ­வ­ழியே சென்ற போது சற்று தொலைவில் பை ஒன்றில் காணப்­பட்ட தலையை கண்­டு­பி­டித்­தன. இத்­த­லை­யா­னது மேற்­படி சட­லத்­தி­னு­டை­ய­தாக இருக்­கலாம் என சந்­தே­கிக்­கப்­ப­டு­கி­றது.

புத்­தளம் பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஜே.ஏ. சந்­தி­ர­சேன உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் எஸ்.பி.எஸ்.சி. சந்­த­நா­யக்கா ஆகி­யோரின் உத்­த­ரவின் பேரில் புத்­தளம் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் அநுர குண­வர்­தன தலைமை யிலான குழு­வினர் இது தொடர்பில் மேல­திக விசாரணை­களை மேற்­கொண்டு வருகின்றனர்.

டிரம்பின் தொலைபேசி உரையாடலை ஒபாமா ஒட்டு கேட்டாரா?

ஜனாதிபதி டிரம்பின் தொலைபேசி உரைகளை பராக் ஒபாமா ஒட்டு கேட்டதாக டிரம்பால் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை எஃப்பிஐ இயக்குநர் ஜேம்ஸ் கோமி மறுத்துள்ளார் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

டிரம்பின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நிராகரிக்க வேண்டும் என நீதித்துறையை, கோமி கேட்டுக் கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் குற்றச்சாட்டுகளை நீதித்துறை இன்னும் அவ்வாறு நிராகரிக்கவில்லை.

முன்னதாக அமெரிக்காவின் முன்னாள் தேசிய உளவுத்துறை இயக்குநர் ஜேம்ஸ் கிளப்பர், ஜனாதிபதி டிரம்பின் தொலைபேசியோ அல்லது அவரின் தேர்தல் பிரசார குழுவின் அலைபேசியோ ஒட்டுக் கேட்கப்படவில்லை என மறுத்திருந்தார்.

கடந்த வருடம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், ஒபாமாவின் அரசாங்கம் அதிகார துஷ்பிரயோகம் செய்ததா என கண்டறிய வெள்ளை மாளிகை நாடாளுமன்றத்தை கேட்டுக் கொண்டுள்ளது.

அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்த குற்றச்சாட்டு பற்றி விசாரித்து வரும் நாடாளுமன்ற உளவுத் துறை கமிட்டியும் இந்த குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அதிகரித்து வரும் காரணமற்ற காதுகேளாமை!!

உலகளவில் 360 மில்லியன் மக்கள் காரணமற்ற காதுகேளாமையால் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இது கிட்டத்தட்ட உலக மக்கள் தொகையில் 5 சதவீதமாகும். இவர்களில் இலங்கை, இந்தியா, ஆபிரிக்கா போன்ற வளரும் நாடுகளில் உள்ளவர்கள் தான் பெரும்பான்மையாகப் பாதிக்கப்படுகிறார்களாம். இதற்கு முக்கியமாக அதிகரித்து வரும் ஒலி மாசும் ஒரு காரணம் என்கிறார்கள்.

தெற்காசியாவை பொறுத்து வரை பிறக்கும் 1000 குழந்தைகளில் இரண்டு குழந்தைகளுக்கு காது கேளாமை பாதிப்பு இருப்பதாக கண்டறிந்திருக்கிறார்கள். இதற்கு பெற்றோர்களும், கர்ப்பிணிப் பெண்களும் செவித்திறன் குறித்த விழிப்புணர்வை பெறாததே காரணம். அதே சமயத்தில் காது கேளாமைக்குரிய சிகிச்சையைப் பெற்றால் 50 சதவீதமானவர்கள் இந்த பாதிப்பில் இருந்து குணமடைகிறார்கள். பேறு காலத்தின் போது கவனமுடன் செயல்பட்டால் பிறவியிலேயே செவித்திறன் பாதிப்புடன் குழந்தை பிறப்பதை தடுத்துவிட முடியும் என்கிறார்கள்.

அதே போல் பெரியவர்களும் காது கேளாமையால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்கள் தங்களின் செவியுணர்வு குறைந்து வருவதை முதலில் பின்வரும் அறிகுறிகள் மூலம் தெரிந்துகொள்ளவேண்டும்.

சொன்னதை திரும்பச் சொல்லும்படி மற்றவர்களிடம் அடிக்கடி கேட்பது, உங்களுடன் ஒருவர் பேசிக் கொண்டிருக்கும் போது, அடிக்கடி புருவத்தைச் சுருக்கி, தலையை முன்னேச் சாய்த்து, அவர் பக்கம் சாய்ந்து நின்று கேட்பது, பொது கூட்டம், மால்கள், ஏராளமானவர்கள்கூடியிருக்கும் இடம் ஆகியவற்றில் இரைச்சல் அதிகமாக இருப்பது போல் உணர்வது அல்லது மற்றவர்களின் பேச்சை கேட்க சிரமப்படுவது போன்றவற்றின் மூலம் உங்களின் செவித்திறன் குறைந்து வருகிறது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். மிக்ஸி 90 டெசிபல் ஒலியை எழுப்பக்கூடியது. இதனை தொடர்ந்து இரண்டு மணித்தியாலம் வரைக் கேட்டால் உங்களின் கேட்கும் திறன் பாதிக்கப்படும். இது ஒரு உதாரணம் தான்.

அதனால் அதிக ஒலி உள்ள இடங்களில் அதிக நேரம் இருப்பதைத் தவிர்ப்பது நல்லது. அத்துடன் உங்களின் சுற்றுப்புறத்தில் ஒலியின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும். இரைச்சலை கூடுமானவரை தவிர்க்கவேண்டும். கர்ப்பிணி பெண்கள் சில மருந்துகளை பேறு காலத்தின் போது தவிர்க்கவேண்டும். இதனால் வயிற்றில் இருக்கும் சிசு காது கேளாமை பாதிப்பிற்கு ஆளாகாமல் தப்பிக்கலாம். காதுகளில் ஏதேனும் பிரச்சினை என்றால் தவறாமல் மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை பெறவேண்டும்.

வவுனியாவில் பல்வேறு திருட்டுச்சம்பவங்களுடன் தொடர்புடைய நால்வர் கைது!!

வவுனியாவில் பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நால்வரை நேற்று முன்தினம் (03.03.2017) பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 30.01.2017ம் திகதி வவுனியாவில் தொலைபேசி விற்பனை நிலையத்தில் 12,500 ரூபா பெருமதியான தொலைபேசியினை திருடிச்சென்ற நபரை வவுனியா பொலிஸார் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்.

மற்றும் கடந்த சில தினங்களுக்கு முன் வவுனியாவில் காரினுள் இருந்து பணத்திணை திருடிச்சென்ற ( 38,25,30) வயதுடைய இளைஞர்கள் மூவரையும் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் ஆயர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

கடற்பரப்பில் வயோதிபரின் சடலம் மீட்பு!!

 
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கல்லடி – நாவலடி கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

கடலுக்கு மீன்பிடிப்பதற்காக இன்று அதிகாலை சென்ற மீனவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமையவே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட நபருக்கு 55, 60 வயது இருக்கலாம் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர். இதேவேளை இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

குவைத்தில் இலங்கைப் பெண் கொலை : நானே தீ மூட்டினேன் என இலங்கையர் வாக்குமூலம்!!

குவைத் நாட்டில் இலங்கைப் பெண் ஒருவரை இலங்கை இளைஞர் ஒருவர் தீ மூட்டி கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குவைட் சிட்டி நகரின் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் கடந்த வாரம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட அந்த நாட்டு பொலிஸார் குறித்த இலங்கையரை கைது செய்துள்ளனர்.

சம்பவத்தின் போது கடும் தீக்காயத்திற்கு உள்ளான இலங்கைப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.

இது தொடர்பில் விசாரணை மேற்கொண்ட அந்நாட்டு பொலிஸார், குறித்த பகுதியில் பணிப்புரிந்த இலங்கை இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

எனினும், குறித்த பெண் தீ மூட்டி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததாகவும், அவரை காப்பற்றச் சென்ற தமக்கும் தீக்காயம் ஏற்பட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

எவ்வாறாயினும், பின்னர் தானே குறித்த பெண்ணுக்கு தீ மூட்டியதாக இளைஞன் வாக்கு மூலம் அளித்துள்ளதாக, த அரப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள இலங்கையர் அந்த நாட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வானத்தில் திடீரென தோன்றிய மர்ம உருவம் : ஆச்சரியத்தில் மக்கள்!!

கிழக்கு ஆபிரிக்காவின் zambiatவில் உள்ள kitwe நகரில் உள்ள புகழ்பெற்ற வணிக வளாக கட்டிடத்திற்கு மேல் ஆவி போன்ற உருவம் ஒன்று நேற்று தென்பட்டுள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்கா வானத்தில் மர்ம உருவம் தோன்றியமை அங்குள்ள மக்கள் அவதானிக்க கூடிதாக அமைந்ததுடன் அனைத்து மக்களை பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன், இந்த உருவத்தை அங்கியிருந்தவர்கள் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளனர். குறித்த உருவத்தை நேரில் அவதானித்த ஒருவர் கூறுகையில்,

100 அடி உயரத்தை கொண்ட அந்த உருவம் வானத்தில் மிதந்தபடி அரை மணி நேரம் வணிக வளாகத்தை பார்த்த படி இருந்தது.

மேலும், அந்த மர்ம உருவத்தை பலர் கடவுள் என கூறி வணங்கினர்.ஒரு சிலர் பயந்து அங்கிருந்து ஓடி விட்டனர் என குறிப்பிட்டுள்ளார்.

சவுதியில் சித்ரவதை அனுபவிக்கும் மனைவியை காப்பாற்றத் துடிக்கும் கணவன்!!

இந்தியாவிலிருந்து சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்ற தன் மனைவியை மீட்டு இந்தியா கொண்டு வர உதவ வேண்டும் என அப்பெண்ணின் கணவர் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூரு நகரை சேர்ந்தவர் பாஸ்கரன் (42) இவர் மனைவி ரஞ்சிதா. இந்த தம்பதிகளின் மகள் திருமணத்துக்கு பணம் தேவைப்பட்டதால் அதை சமாளிக்க வெளிநாட்டுக்கு சென்று வீட்டு வேலை செய்ய முடிவெடுத்தார் ரஞ்சிதா.

அதன்படி ஒரு முகவர் மூலம் மாதம் 30000 சம்பளம் பேசப்பட்டு சவுதி அரேபியாவுக்கு கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் சென்றுள்ளார்.

கடந்த 7 மாதங்களாக ரஞ்சிதா சவுதியில் படும் துன்பங்கள் ஏராளம். அங்கு அவர் வீட்டு வேலை செய்யும் வீட்டில் அவருக்கு சம்பளம் தராமல் கடுமையாக வேலை வாங்கியுள்ளனர். மேலும் அடித்து துன்புறுத்தியுள்ளனர். பின்னர் அவர் அங்கிருந்து வேறு இடத்துக்கு வேலைக்கு மாற்றப்பட்டார்.

இப்படியே 37 வீடுகளில் அவர் சம்பளம் இல்லாமல் வேலை செய்துள்ளார். இரு தினங்களுக்கு முன்னர் ரஞ்சிதா வேலை செய்யும் வீட்டிலிருந்து தப்பித்து பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.

இது குறித்து ரஞ்சிதாவின் கணவர் பாஸ்கரன் கூறுகையில், என் மனைவி தவறான நபர்கள் மூலம் சவுதி அரேபியா சென்று மிகவும் துன்பபடுகிறார். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை என்னிடம் அவர் போனில் அழுது கொண்டே பேசுவார் என கூறியுள்ளார்.

மேலும், பெங்களூர் காவல் நிலையத்தில் நான் போராட்டம் நடத்தியும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தியாவின் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தான் என் மனைவி இந்தியா வர உதவ வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

10 இலட்சம் கார்களை திரும்ப பெறும் பென்ஸ் நிறுவனம்!!

பிரிட்டனிலிருந்து முதல் கட்டமாக சுமார் 75 ஆயிரம் மெர்ஸிடிஸ்-பென்ஸ் கார்களையும், உலக நாடுகளிலிருந்து 10 இலட்சம் பென்ஸ் கார்களையும் திரும்பப் பெறுவதாக குறித்த கார் நிறுவனம் அறிவித்துள்ளது.

உலக சந்தையில் விற்பனையான பென்ஸ் கார்களில் சுமார் 51 வரையான கார்கள் தீ பிடித்துள்ளதாக எழுப்பப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து உலகமெங்கிலும் விற்கப்பட்ட சுமார் 10 இலட்சம் கற்களை அந்நிறுவனம் திரும்ப பெறுவதாக அறிவித்தது.

மேலும் குறித்த தீ பிடிப்பு சம்பவங்களால் எவ்வித உயிர் சேதங்களும் இடம்பெறாத நிலையில், முதல் கட்டமாக 75 ஆயிரம்கற்களை பென்ஸ் நிறுவனம் திரும்ப பெறுவதற்கு முடிவு செய்துள்ளதாக அந்நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மெர்ஸிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளான ஏ,பி,சி, இ (A, B, C, E) வகுப்பு கார்கள் மற்றும் சிஎல்ஏ(CLA), ஜிஎல்ஏ (GLA) மற்றும் ஜிஎல்சி (GLC) கார்களில், உள்ள செயலாக்கிகலில் ஏற்படும் கோளாறு காரணமாக, சில தனிப்பட்ட சூழலில் மின் பிறப்பாக்கிகள் அதிக சூடாவதாக குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்தோடு குறித்த கார் நிறுத்தப்பட்டு, மீண்டும் இயக்கப்படும் பொது குறித்த தீபிடிக்கும் பிரச்சினைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவில் மாத்திரம் சுமார் 3 இலட்சத்திற்கும் அதிகமான கற்கள் குறித்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜேர்மனிய கார்நிறுவனமான பென்ஸ் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

சோமாலியாவில் பட்டினியால் 110 பேர் உயிரிழப்பு!!

 
சோமாலியாவில் பட்டினியால் 110 பேர் உயிரிழந்துள்ளனர். ஆபிரிக்க நாடான சோமாலியாவில் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில் குடிநீர் மற்றும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, அதன் காரணமாக அங்கு வாழும் 30 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சோமாலியாவின் தென் மேற்கு வளைகுடா பகுதியில் மாத்திரம் 48 மணி நேரத்தில் 110 பேர் பட்டினியால் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

பலியானவர்களில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் அதிகளவில் காணப்படுவதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே சோமாலியாவை வறட்சியில் பாதித்த பேரழிவு நாடாக சோமாலிய அதிபர் முகமது அப்துல்லாகி பார்மஜோ அறிவித்துள்ளார்.

மேலும் உதவி செய்யும்படி அமெரிக்காவிலுள்ள முன்னணி 13 அறக்கட்டளை நிறுவனங்களுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

சோமாலியா அடிக்கடி வறட்சியால் பாதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த 1992 ஆம் ஆண்டில் 220,000 பேர் வறட்சி காரணமாக உணவின்றி உயிரிழந்துள்ளனர், அதே போன்று 2010 முதல் 2012 ஆம் ஆண்டு வரையிலும் 260,000 பேர் பட்டினியால் பலியாகியுள்ளனர்.

மேசைப் பந்தில் கின்னஸ் சாதனை படைத்த ரோபோ!!(காணொளி)

 
ஜப்பானின் இயந்திர தொழிநுட்ப நிறுவனமான ஓம்ரான், உலகின் முதல் ரோபோ மேசை பந்து, பயிற்சியாளரை உருவாக்கி கின்னஸ் சாதனை படைக்கச்செய்துள்ளது.

மூன்று வருட கடின உழைப்பின் பயனாக, 90 சதவிகிதம் துல்லியத்துடன் விளையாடக்கூடிய, ரோபோ பயிற்சியாளரை உருவாக்கியிருக்கிறார்கள். அத்தோடு புதியவர்களுடன் மெதுவாகவும், அனுபவமுடைய வீரர்களுடன் வேகமாகவும் விளையாடுகிறது குறித்த ரோபோ.

குறித்த பயிற்சியளிக்கு ரோபோ தன்னை எதிர்த்து விளையாடுபவருக்கு உக்திகளைச் பயிற்றுவிப்பதோடு, எதிரில் விளையாடுபவரை மிகச் சிறந்த விளையாட்டு வீரராக மாற்றுகிறது.

மேலும் மனிதர்களைப்போல ரோபோ பயிற்சியாளர் சோர்வோ, கோபமோ படுவதில்லை. இதனால் எதிரில் பயிற்சி பெறுபவர்களுக்கு புத்துணர்வு தரும் வகையில் ரோபோ அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பயிற்சி பெறுபவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், அவரை உற்சாகப்படுத்தும் வகையில் அபாரம், அற்புதமான பந்து வீச்சு என வசனங்கள் உற்சாகம் அளித்தும் வருகிறது. அத்தோடு வீரர்கள் தவறாக விளையாடும்போது, தவறு என்ன என்பதையும் அதை எப்படிச் சரி செய்ய வேண்டுமென்பதையும், சொல்லிக்கொடுக்கும் வல்லமையுடைய ரோபோவிற்கு கின்னஸ் சாதனையை விருது.

வவுனியா உண்ணாவிரதப் போராட்டத்தில் ஒரு தாயின் அழுகுரல்!!

 
பன்றிகெய்தகுளத்தில் வைத்து பாடசாலை போவதாக 1990 ஆண்டு புரட்டாதி மாதம் இரண்டாம் திகதி காணாமல் போனவர் தொடர்பில் இன்னும் ஒரு முடிவும் இல்லை. இராணுவம் தான் கொண்டு போய் இருக்கும் என்று உறுதியாக நம்புகின்றோம்.

பின்னர் 2008ம் ஆண்டு ஆனி மாதம் 25ம் திகதி வீரபுரத்தில் அண்ணனின் மகன் வீட்டில் சாப்பிடப் போய் இருக்கும் போது வெள்ளை வானில் வந்தவர்கள் மகனை சேட்டில் பிடித்து இழுத்து, அவர் ஓடுவதற்குத் தீர்மானிக்கின்றார் என்று நினைத்து தள்ளி விழுத்தி 5,6 பேர் சேர்ந்து வெள்ளை வானில் கொண்டு போனவர்கள்.

என் மகனுக்கு இரண்டு பிள்ளைகள் அவரை கொண்டு போகும் போது மூன்றரை வயது இப்போது பன்னிரண்டு வயதாகி விட்டது. தாய் வேறு திருமணம் செய்துவிட்டார். இரண்டு பிள்ளையையும் நான் தான் பராமரித்து வருகின்றேன். எங்களுடைய நிலைமை ஒருவருக்கும் தெரியாது. கடவுள் ஒருவருக்கு தான் தெரியும். இந்த பிள்ளைகளை எப்படி வளர்கின்றேன். என்ன மாதிரி வளர்கின்றேன் என்று.

இதே போல் எத்தனையோ ஆயிரம் மக்களுக்கு இப்படியான நிலைமை. என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து கொண்டிருக்கின்றார்கள். அதனால் இந்த போராட்டத்திற்கு ஒரு முடிவு வர வேண்டும். இன்றைக்கு பத்தாவது நாளாக இந்த போராட்டத்தில வருந்திக்கொண்டு இருக்கின்றோம்.

அது மட்டுமல்ல போன மாதமும் நான்கு நாள் போராட்டத்தில வெளிவிவகார அமைச்சரின் பேச்சை கேட்டு எல்லோரும் ஏமாந்து போனோம். இது போல் ஏமாறமால் வெளிநாடு எந்த நாடாக இருந்தாலும் இதற்கு ஒரு முடிவு தர வேண்டும்.

ஐநா, ஜெனீவா, வெளிநாடு என்றில்லாமல் இதற்கு ஒரு முடிவு வேண்டும். மகிந்த செய்தது போல் அல்லது மைத்திரி செய்தது போல் என்று குறித்து சொல்லவில்லை. ஒரு நல்லாட்சி கிடைக்க வேண்டும். நல்ல முடிவு கிடைக்க வேண்டும். இந்த மக்கள் கண்ணீர் விட்டு அழுவதற்கு ஒரு முடிவு கிடைக்க வேண்டும் என்ற நம்பிக்கையோடு இருக்கின்றோம்.

இதற்கு நல்லாட்சி நல்ல நிலைமை, நல்ல முடிவு, நல்ல தீர்வு காண வேண்டும் என்று வருந்தும் மக்களுக்கோர் நல்ல முடிவு கிடைக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

வவுனியாவில் 10வது நாளாக காணாமல் போனோரின் உறவுகள் உண்ணாவிரதப் போராட்டத்தில்!!

 
வவுனியாவில் தமதுபோராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (05.03.2017) 10வது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக்கோரியும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் அவசரகாலச்சட்டத்தினை நீக்குமாறு கோரி தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

ஜனநாயகப் போராட்டங்களை கொச்சைப்படுத்துவோரை மக்கள் இனங்காணவேண்டும் : சிவசக்தி ஆனந்தன்!!

ஜனநாயகப் போராட்டங்களை கேவலப்படுத்தி, அரசாங்கத்திற்கு ஆதரவளிப்போரை இனங்கண்டு அவர்களை வெளிப்படுத்த வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி நேற்றைய தினம் நடாத்திய ஆர்ப்பாட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில்,

போராட்டங்களைக் கொச்சைப்படுத்துகின்ற வகையில் நடந்துகொள்வதுடன், அரசாங்கத்திற்கு ஆதரவளித்துக் கொண்டிருக்கும் ஒரு சிலர் எமக்குள் இருந்தே செயற்படுகின்றார்கள். ஆகவே எங்களது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை விடுத்து இந்த மக்களுக்காக எல்லோரும் ஒருமித்து குரல் கொடுங்கள். அதன் மூலம் தான் இந்த நாட்டில் ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் சகல அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள், ஊடகத்துறை சார்ந்தவர்கள் இந்த பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்கு நல்லதொரு செய்தி கிடைப்பதற்காக எல்லோரும் அணிதிரண்டு ஆதரவு வழங்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தி இருந்தார்.

வவுனியாவில் ஜனாதிபதி சாரணர்களின் ஒழுங்கமைப்பில் மாபெரும் இரத்ததான முகாம்!!

 
வவுனியாவில் ஜனாதிபதி மற்றும் திரிசாரணர்களின் ஒழுங்கமைப்பில் சாரணர் அமைப்பின் ஸ்தாபகர் பேடன் பவல் பிரபுவின் 160 ஆவது பிறந்த தினத்தினை நினைவு கூரும் முகமாக இன்றையதினம் (05.03) காலை 9 மணி முதல் இலங்கை திருச்சபை தமிழ் மகாவித்தியாலயத்தில் ஜனாதிபதி சாரணர் மன்றத்தின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் த.நிகேதன் தலைமையில் இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வின் அதிதிகளாக சாரண மாவட்ட ஆணையாளர் எம்.எஸ்.பத்மநாதன் அவர்களுடன் உதவி மாவட்ட ஆணையாளர்களான கு.கமலகுமார், வ.ஜதீஸ்கரன், உதவி மாவட்ட ஆணையாளரும் ஜனாதிபதி சாரணர் மன்றத்தின் செயலாளருமான சு.காண்டீபன் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய நிகழ்வில் ஜனாதிபதி சாரணர் மன்றத்தின் உப தலைவர் அ.அனந்தன், ஜனாதிபதி சாரணர் மன்றத்தின் பொருளாளரும், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீ.கேசவன் ஜனாதிபதி சாரணர் மன்றத்தின் உப செயலாளர் வ.பிரதீபன் மற்றும் உறுப்பினர்களான அ.அனோஜன், வி.சஜீவ்நாத், பி.கேர்சோன் ,திரி சாரணன் கு.நிதர்சன், மற்றும் ஊடகவியலாளர்கள், சாரணர்களுடன் பெருமளவான இளைஞர்களும் இன்றைய இரத்ததான நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

இன்றைய இரத்ததான நிகழ்விற்கு சரவணாஸ் புடவையகம், சபரி அச்சகம், திருப்பதி உணவகம் என்பன அனுசரணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

     

வவுனியாவில் நகரசபைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!!

 
வவுனியாவில் இன்று (05.03.2017) காலை 10.30 மணியளவில் மன்னார் வீதி, வேப்பங்குளம் பகுதி மக்கள் நகரசபையினருக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா வேப்பங்குளம் 6ம் ஒழுங்கையிலுள்ள பொதுமக்கள் தமது குப்பபைகளை நகரசபையினர் கடந்த இரண்டு மாதங்களாக எடுப்பதற்கு வரவில்லை, இது தொடர்பாக வவுனியா நகரசபையினருக்குத் தெரிவித்தும் தமது குப்பைகளை அகற்ற நகரசபை ஊழியர்கள் முன்வரவில்லை என்று தெரிவித்து இன்று காலை அப்பகுதியில் ஒன்றிணைந்து நகரசபையினரின் செயற்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

நேற்று அப்பகுதிக்குச் சென்ற நகரசபை ஊழியர்கள் அப் பகுதியிலுள்ள குப்பைகளை அகற்றவில்லை தமது பகுதியைக்கடந்து சென்று வேறுபகுதிகளில் குப்பைகளை அகற்றி வருகின்றார்கள் என்று தெரிவித்துள்ளார்கள்.

இது தொடர்பாக வவுனியா நகரசபை செயலாளரிடம் தொடர்பு கொண்டபோது, நகரபைக்கு குறித்த பகுதி மக்களால் எழுத்து மூலமான அறிவிப்பு விடுக்கப்படவில்லை என்றும் ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வதற்கு எழுத்து மூலமான அறிவிப்பு விடுக்கும் பட்சத்தில் நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.