தென்சீனக் கடல் பகுதியில் தனது ராணுவ பலத்தை மேம்படுத்தும் வகையில் சீன அரசானது, நிலத்திலும், வானிலும் செல்லக் கூடிய அதிநவீன விமானத்தை உருவாக்கியுள்ளது.
வானில் பறந்துகொண்டிருக்கும் போதே நிலத்திலும், நீரின் மேற்பரப்பிலும் இறங்கும் வகையில் இவ்விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. AG600 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம் 37 மீட்டர் மொத்த நீளமும், 38.8 மீட்டர் நீளமுள்ள இறக்கையையும் கொண்டது.
53.5 டன் சுமைகளை எடுத்துக்கொண்டு புறப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இவ்விமானம், 20 டன் நீரையும் சுமந்து செல்லும் வகையில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இடைவிடாமல் 4500 கி.மீ பறக்கும் வல்லமை கொண்ட இந்த விமானம் வானில் பறக்கும் போது 53 டன் சுமையை தாங்கக் கூடிய சக்தி கொண்டது.
நடுக்கடலில் ஏதேனும் கப்பல் விபத்து ஏற்படும் சமயத்தில் விரைந்து சென்று மீட்கும் வகையிலும், நிலப் பரப்பில் காட்டுத் தீ பற்றி எரிந்தால் உடனே சென்று அணைக்கும் வகையிலும் இவ்விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக சீன ராணுவப் பொறியாளர்கள் கூறியுள்ளனர். இந்த அதிநவீன விமானம் இந்த ஆண்டில் சோதனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டு விரைவில் ராணுவத்தில் இணைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனந்த கிருஷ்ணன் இயக்க அசோக் செல்வன் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பிற்காக படக்குழு பாண்டிச்சேரி சென்றுள்ளனர். அங்கு கடலுக்குள் நடக்கும் ஒரு சண்டை காட்சியில் அசோக் செல்வன் நடித்து வந்திருக்கிறார்.
அசோக் தண்ணீருக்குள் குதிப்பது போல் ஒரு காட்சி. கடலுக்குள் குதித்த அவர் நிறைய தண்ணீரை குடிக்க பெறும் பிரச்சனையாகியுள்ளது. அதே நேரத்தில் பக்கத்திலேயே இருந்த ஒரு படகு அவரை தண்ணீருக்கும் தாக்க வர, சட்டென்று அவர் இன்னும் தண்ணீரின் ஆழத்தில் சென்றிருக்கிறார்.
உடனே அங்கிருந்த மீனவர்கள் அவரை எப்படியோ காப்பாற்றியுள்ளனர்.
லெபனானுக்கு சென்று 15 வருடங்களாக எவ்வித தகவல் கிடைக்காத இலங்கை பணிப்பெண் ஒருவரை கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரல, காணாமல் போன பெண்ணின் உறவினர்களை சந்தித்து இதனை தெரிவித்துள்ளார்.
அதற்கமைய அவரை விரைவில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடாக எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மஹியங்கனை, ஹசலக, 7 எல, என்ற விலாசத்தில் வசித்த கே.இனோகா உதயங்கனி என்ற இந்த பெண் 2002ஆம் ஆண்டு வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.
எனினும் 2006ஆம் ஆண்டிற்கு பின்னர் அவர் தொடர்பில் எந்த தகவல்களையும் பெற்றுக் கொள்ள முடியவில்லை என குறித்த பெண்ணின் உறவினர்கள் அமைச்சரை சந்தித்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் நடவடிக்கை மேற்கொண்ட அமைச்சர் லெபனான் தூதரகத்தின் உதவியுடன் பெண்ணை கண்டுபிடித்துள்ளார்.
உயிரிழந்த நபர் ஒருவர் அடக்கம் செய்யப்படவிருந்த வேளையில், இறுதிக் கிரியை நடத்தும் நிறுவனமொன்றின் ஊழியர்களால் சவப்பெட்டியிலிருந்து அந் நபரின் சடலம் பலவந்தமாக அகற்றப்பட்ட சம்பவம் ஆபிரிக்க நாடான கானாவில் இடம்பெற்றுள்ளது.
அந் நபரின் குடும்பத்தினர் குறித்த மலர்சாலை நிறுவனத்துக்கு சுமார் 5,000 ரூபா கடன் பாக்கி செலுத்த வேண்டியிருந்தமையே இதற்கான காரணமாம்.
கடந்த சனிக்கிழமை இறுதிக்கிரியையின்போது, சவக்குழிக்குள் சடலத்தை இறக்குவதற்குத் குடும்பத்தினர் தயாரான வேளையில், இறுதிக்கிரியை ஏற்பாட்டு நிறுவன ஊழியர்கள் சவப்பெட்டியை பலவந்தமாக திறந்து சடலத்தை வெளியே எடுத்தனர்.
இதனால் இறந்த நபரின் குடும்பத்தினரும் உறவினர்களும் பெரும் அதிர்ச்சியடைந்தனர். உயிரிழந்த நபரின் உறவினர்களால் தமக்கு வழங்கப்பட வேண்டிய பணம் கிடைக்கும் வரை சடலத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளப்போவதாக உள்ளூர் ஊடகங்களிடம் மேற்படி நபர்கள் தெரிவித்தனர்.
சடலத்துக்கு ஆடை அணிவித்து தயார்படுத்தியமை முதலான வேலைகளுக்கான கட்டணத்தில் 150 கானா சேடி பணம் (சுமார் 5000 இலங்கை ரூபா) வழங்கப்பட வேண்டியுள்ளதாக மேற்படி ஊழியர்கள் கூறியதாக இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.
பின்னர் மேற்படி சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக மேற்படி நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், “அனுதாபம் கொண்ட சிலர் இவ் விடயத்தில் தலையிட்டு எமக்கு 100 கானா சேடி பணத்தை வழங்கினர். நாம் இப் பணத்தை ஏற்றுக்கொண்டு சடலத்தை ஒப்படைத்தோம்” என்றார்.
எமது சேவைகளுக்காக செலுத்தப்பட வேண்டிய பணத்தை கொடுக்காமல், இறுதிக்கிரியை முடிந்தவுடன் நழுவிச் செல்ல முயற்சிப்பவர்களை எச்சரிப்பதற்காகவே இந் நடவடிக்யை நாம் மேற்கொண்டோம்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 17ம் திகதி தொடக்கம் 23ம் திகதி வரை பங்களாதேஷில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண ரோல் போல் தொடருக்காக இலங்கை அணி சார்பில், தெரிவான கிளிநொச்சி மாணவிகள் பங்களாதேஷ் பயணமாகினர்.
கிளிநொச்சி இந்துக் கல்லூரியில் கல்வி கற்கும் உயர்தர மாணவிகளான துலக்சினி விக்னேஸ்வரன், சிறிகாந்தன் திவ்யா ஆகியோரே குறித்த உலகக் கிண்ண ரோல் போல் போட்டியில் பங்குபற்றுபவராவார்கள்.
மேலும் மிக குறுகிய காலத்திற்குள் பயிற்சிகளைப் பெற்று, கடந்த வருட இறுதிப் பகுதியில் நடைபெற்ற தேசிய ரீதியிலான போட்டியில் கிளிநொச்சி மாவட்ட ரோல் போல் போட்டியில் தமது திறமையை வெளிப்படுத்தியிருந்தனர்.
அத்தோடு பெரியளவிலான வசதிகளோ, பிரத்தியேக உள்ளரங்கமோ இல்லாதநிலையில் தமது பயிற்சியை மேற்கொண்டு 56 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்குபற்றவுள்ள உலக கிண்ண போட்டிவரை செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் வித்தியாசாகர ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார். அவருடன் 31 அமைச்சர்களும் பாதவியேற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த 10 மாதங்களில் 3ஆவது அரசு பதவியேற்பு நிகழ்ச்சி இதுவாகும். ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்றார்.
2 மாதங்கள் பதவி வகித்த அவர் திடீரென ராஜினாமா செய்து, அதிமுக சட்டசபை குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். சசிகலா தம்மை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என ஆளுநர் வித்யாசாகர் ராவை கேட்டுக் கொண்டார்.
ஆனால் நேற்று சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அதிமுக சட்டசபை குழு தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டு ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் தரப்பை அழைத்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் 2 முறை ஆலோசனை நடத்தினார்.
சந்திப்பின் முடிவில் தமிழகத்தில் ஆட்சி அமைக்குமாறு எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்தார்
இன்று முதல்வராகியுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையில், தமிழகத்தின் 12ஆவது முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவிப்பிரமாணம் செய்து கொண்டமையினால் பன்னீர்செல்வம் தரப்பினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
எனினும் தர்மம் மறுபடியும் வெல்லும். தர்ம யுத்தம் தொடரும் என்று ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
தவிர, எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்திருப்பது வரவேற்கத்தக்கது என எதிர்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக குழப்பமான நிலை இருந்தது, உடனடியாக ஆட்சி அமைய திமுக சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
ஆளுநரை சந்தித்தும் எடுத்து கூறியிருந்தோம். இந்நிலையில் ஆளுநரின் அறிவிப்பு காலம் கடந்து வெளியிட்டாலும் உள்ளபடியே வரவேற்கத்தக்கது.
15 நாட்களுக்குள் என்பது பெரிய அவகாசம், இது ஏன் என்பது எனக்கு தெரியவில்லை . இதற்குள் பல குதிரை பேரங்கள் நடக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு ஏதும் நடக்காமல் ஆளுநர் பார்த்து கொள்ள வேண்டும்.
ஆளுநர் ஜனநாயகத்தை காப்பார் என நம்புகிறேன் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எனினும் தற்போதைய நிலையில் தமிழக அரசியலில் நீடித்து வந்த குழப்பம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்த வேலைக்க கொடுக்க வேண்டிய சம்பளத்தை கொடுக்காததால், பிணத்தை ஒழுங்கு செய்யும் தொழிலாளர் இருவர், பிணத்தை தூக்கிச்சென்ற அதிர்ச்சி சம்பவம் கானாவில் இடம்பெற்றுள்ளது.
கானாவின் கிரேட் அக்ரா எனும் பகுதியில், பிணங்களை ஒழுங்கு செய்யும் தொழிலாளர்கள் இருவர், தமக்காகன சம்பளம் வழங்கப்படாத கோபத்தில், சவப்பெட்டியிலிருந்த பிணத்தை தூக்கி, தமது தோளில் சுமந்தவாறு சென்றுள்ளனர்.
இந்நிலையில் இறுதி அஞ்சலிக்காக கூடியிருந்த நூற்றுக்கணக்கானவர்கள், செய்வதறியாது குறித்த நபர்கள் பிணத்தை தூக்கி செல்வதை வேடிக்கை பார்த்தவர்களாக நிற்கும், காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா மறவன்குளம் பகுதியில் நேற்று (15.02.2017) காலை எட்டு வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோக முயற்சி மேற்கொள்ளப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
நேற்று காலை குறித்த சிறுமி வீட்டிற்கு பின்பக்கம் நின்று விளையாடிக் கொண்டிருந்தபோது அப்பகுதியிலுள்ள 45 வயதுடைய நபர் ஒருவர் சிறுமியை அழைத்துச் சென்றதை சிறுமியின் சகோதரன் கண்டுள்ளார்.
இதையடுத்து அயலவர்களின் உதவியுடன் சிறுமி மீட்கப்பட்டுள்ளார். இதையடுத்து ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது சம்பவத்தினை விசாரணை மேற்கொண்டபொலிசார் குறித்த சந்தேக நபரை கைது செய்து மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணைகளின் பின்னர் மாவட்ட நீதவான் நிதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக ஈச்சங்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடுவோருக்கு 25000 ரூபா அபராதம் விதிப்பது குறித்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது.
25000 ரூபா அபராதம் விதிப்பது குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட குழுவிற்கும், தனியார் பஸ் உரிமையாளர் சங்கங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது.
நேற்று நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் தீர்வு எதுவும் எட்டப்படவில்லை.ஏழு வகையான மோட்டார் போக்குவரத்து விதி மீறல்களுக்கு 25000 ரூபா அபராதம் விதிப்பது குறித்து பேசுவதற்காக நேற்றைய சந்திப்பு நடத்தப்பட்டிருந்தது.
எனினும், வேறும் சில போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராதம் குறித்து ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவினர் யோசனை முன்வைத்த காரணத்தினால் அதற்கு இணங்க முடியாது எனத் தெரிவித்ததாக அகில இலங்கை தனியார் பஸ் சங்கத்தின் செயலாளர் அன்ஜன இந்திரஜித் தெரிவித்துள்ளார்.
புதிய அபராதத் திட்டம் தொடர்பில் இரண்டு வாரங்களில் யோசனைகளை முன்வைக்குமாறு தனியார் பஸ் உரிமையாளர் சங்கங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 25000 ரூபா அபராதம் தொடர்பில் மீளவும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளன
அமெரிக்க யுத்தக்கப்பல் ஒன்றுக்கு மிகவும் நெருக்கமாக, ஒன்றுக்கும் மேற்பட்ட ரஷ்ய போர் விமானங்கள் பறந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கடந்த 10ஆம் திகதி கருங்கடல் பகுதியில் வைத்து இடம்பெற்ற இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், ரஷ்யாவின் இந்த நடவடிக்கை “ஆபத்தானது மற்றும் தொழில் நிபுணத்துவம் அற்ற நடத்தை” என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்ய போர் விமானங்கள் தொடர்புபட்ட மூன்று வெவ்வேறு சம்பவங்கள் நிகழ்ந்ததாக அமெரிக்காவின் ஐரோப்பிய கட்டளையகம் தெரிவித்துள்ளது.
ஒரு சம்பவத்தில் ரஷ்யாவின் இரு எஸ்.யூ 24 ஜெட்களும், மற்றொன்றில் எஸ்.யூ 24 ஜெட் ஒன்றும், மூன்றாவது மிகப்பெரியதாக ஐ.எல் 38 விமானமும் தொடர்புபட்டுள்ளது.
இதன்போது எஸ்.யூ 24 போர் விமானம், யூ.எஸ்.எஸ் போர்டர் அமெரிக்க யுத்தக் கப்பலுக்கு 300 அடி உயரத்தில் 200 யார்கள் வரை நெருங்கி வந்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, அவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெறவில்லை என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு மறுப்பு வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தலையணை இல்லாமல் எப்படி உறங்க முடியுமா என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழும். சிலர் தலைக்கு ஒன்று, காலுக்கு ஒன்று, கட்டிப்பிடித்துக் கொள்ள ஒன்று என பல தலையணை பயன்படுத்தி உறங்குவார்கள். சிலருக்கு தலைக்கே இரண்டு தலையணை வைத்து படுத்தால் தான் உறக்கம் வரும்.
தண்டுவடம்
தலையணை பயன்படுத்தாமல் படுத்து உறங்குவதால் தண்டுவடம் அதன் இயற்கை நிலையில் இலகுவாக இருக்கும். இதனால் தண்டுவட பிரச்சனை, உடல் வலி போன்றவை ஏற்படாது. கெட்டியான / கடுமையான தலையணை பயன்படுத்துவதால் தண்டுவடத்தில் தீய தாக்கங்கள் உண்டாகலாம்.
கழுத்து
தலையணை இல்லாமல் உறங்குவதால் தோள்பட்டை மற்றும் கழுத்து வலி உண்டாகாமல் தடுக்க முடியும். வலியை குறைக்க முடியும்.
சீரமைப்பு
தலையணை இல்லாமல் படுத்து உறங்குவதால் உடலின் எலும்பு நிலைகளை சீராக்க முடியும். ஆனால், சிலருக்கு மருத்துவ நிலை காரணமாக தலையணை பயன்படுத்துவதாக கட்டாயமாக இருக்கும், அவர்கள் தலையணை பயன்படுத்த வேண்டியது அவசியம்.
முக சுருக்கங்கள்
தலையணை பயன்படுத்தாமல் உறங்கினால் முகத்தில் சுருக்கங்கள் அதிகமாகாது என கூறப்படுகிறது.
மெல்லிய தலையணை
நேராக படுத்து உறங்கும் பழக்கம் உடையவர்களுக்கு மெல்லிய தலையணை சிறந்தது. இது கழுத்து, தலை, தோள்ப்பட்டை பிரச்சனைகள் உண்டாகாமல் காக்கும்.
அடர்த்தியான தலையணை
ஒருபக்கமாக படுத்து உறங்கும் நபர்களுக்கு அடர்த்தியான தலையணை சிறந்தது. இது தோள்பட்டை மற்றும் காதுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்தி கொடுக்கும்.
தட்டையான தலையணை
குப்புறப்படுத்து உறங்கும் நபர்களுக்கு தட்டையான தலையணைகள் சிறந்தது.இது தலையின் நிலை அசௌகரியமாக உணராமல் இருக்க உதவும். மேலும், முதுகு, இடுப்பு வலி ஏற்படாமல் தடுக்கும்.
உலகளாவிய ரீதியில் வீடியோ மற்றும் குரவல் வழி அழைப்புக்கள் மட்டுமன்றி குறுஞ்செய்திகள், கோப்பு பரிமாற்றம் என்பவற்றினை இலவசமாக வழங்கும் சேவையாக ஸ்கைப் காணப்படுகின்றது.
மிகவும் பிரபல்யமான இச் சேவையினை மைக்ரோசொப்ட் நிறுவனம் வழங்கி வருகின்றது. இப்படியிருக்கையில் இச் சேவைக்கு போட்டியாக அமேஷான் நிறுவனம் Amazon Chime எனும் சேவையை அறிமுகம் செய்யவுள்ளது.
வியாபார நிறுவனங்களை இலக்காகக் கொண்டு வழங்கப்படவுள்ள இச் சேவையின் ஊடாக அதி உயர் தரம் கொண்ட வீடியோ மற்றும் குரல் வழி அழைப்புக்களை மேற்கொள்ள முடியும்.
மேலும் டெக்ஸ்டாப் கணினிகள், iOS மற்றும் Android சாதனங்களின் ஊடாகவும் இச் சேவையினை பயன்படுத்த முடியும்.
பிரித்தனியாவைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவர் கூகுள் நிறுவனத்திற்கு எழுதிய வேலை வாய்ப்பு கடிதம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பிரித்தானியாவின் Hereford பகுதியைச் சேர்ந்தவர் Chloe (7). இவர் அண்மையில் கூகுள் நிறுவன CEO அதாவது தலைமை அதிகாரி அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், தன்னுடைய பெயர் Chloe என்றும் தன்னுடைய மிகப் பெரிய விருப்பம் கூகுள் நிறுவனத்தில் வேலை செய்வது என்று கூறியுள்ளார். மேலும் தனக்கு சொக்லேட் நிறுவனத்தில் வேலை செய்வதும் மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.
அதைத் தொடர்ந்து ஒலிம்பிக்கில் நீச்சல் பிரிவில் பங்கேற்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்காக தான் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் நீச்சல் பயிற்சிக்கு செல்வதாக கூறியுள்ளார்.
தன்னுடைய அப்பா சொன்னார் கூகுள் நிறுவனத்தில் வேலை செய்தால், அங்கு பீன்ஸ் இருக்கையில் அமர்ந்து வேலை பார்க்கலாம் என்றும் அங்கு வேலை பார்ப்பது ஒரு விளையாட்டு போன்று இருக்கும் என்று கூறியதாக எழுதியுள்ளார்.
தான் தற்போது TABLET பயன்படுத்தி வருவதாகவும், அதில் தான் ரோபாட் விளையாட்டுக்கள் மற்றும் பல அதில் தான் கற்றுக்கொண்டு வருவதாகவும், இதனால் கம்யூட்டர் பற்றி அனைத்தையும் தெரிந்து கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
இதனால், தான் ஒரு நாள் நிச்சயம் கம்ப்யூட்டர் வாங்குவேன் என்று தன் அப்பா கூறியதாக தெரிவித்துள்ளார். தான் ஒரு சிறந்த குழந்தை என்றும், தன்னுடைய படிப்புகள் அனைத்தும் மிகச்சிறப்பாக உள்ளது என்று தன் அம்மா, அப்பாவிடம், தன்னுடைய பள்ளி ஆசிரியர்கள் கூறியதாக தெரிவித்துள்ளார்.
கூகுளில் வேலை செய்ய வேண்டும் என்றால் தன் அப்பா உங்கள் முகவரிக்கு இணையத்தில் அனுப்ப வேண்டும் என்று கூறினார். அதனால் தங்களுக்கு தான் கடிதம் எழுதியுள்ளதாகவும், நிச்சயம் ஒரு நாள் தான் கூகுளில் வேலை செய்வேன் என்று உறுதிப்பட கூறியுள்ளார்.
இதற்கு கூகுள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி CEO உடனடியாக பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், தங்களுடைய கடிதம் கிடைத்தது.
மிக்க நன்றி, நீங்கள் கம்யூட்டர் மற்றும் ரோபட் போன்றவைகளில் மிகுந்த ஆர்வமாக இருக்கிறீர்கள், அதனால் தங்களுடைய குறிக்கோளில் கவனம் சிதறாமல் செயல்படுங்கள் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
அதுமட்டுமின்றி நீங்கள் ஒலிம்பிக்கிலும் பங்கு பெறலாம் என்று கூறியுள்ளார். மேலும் தங்கள் படிப்புகளை முடித்து விட்டு, வேலை வாய்ப்பு தொடர்பாக தங்கள் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்புங்கள் என்று கூறியுள்ளார்.
உயிரிழந்த இளைஞர் ஒருவரின் சடலம் ஒன்றை வீதியில் வைத்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்று இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கட்டுகஸ்தோட்டை – செனரத்கம பகுதியை சேர்ந்த 32 வயதான இளைஞர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில், வரக்காபொல பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
பஸ்யால பகுதியில் தொழில் செய்து வரும் குறித்த இளைஞர், கடந்த 9ஆம் திகதி வீடு செல்வதாக தெரிவித்து பஸ்யாலையிலிருந்து புறப்பட்டுள்ளார்.
எனினும், மறுநாள் காலை வரக்காபொல பகுதியில் இருந்து குறித்த இளைஞர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த இளைஞரின் படுகொலைக்கு நீதிகோரி இளைஞனின் சடலத்தை கண்டி- குருநாகல் பிரதான வீதியில் வைத்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.