மன்னாரில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். மன்னாரிலில் இருந்து வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் வேகமாக பயணித்துக்கொண்டிருந்த போது ஒரு மோட்டார் சைக்கிள் வழிமாறுவதற்கு முற்பட்ட வேளையிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதேவேளை படுகாயமடைந்த நான்கு இளைஞர்களும் முருங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கிளிநொச்சி ஜெயந்திரநகரைச் சேர்ந்த 17 மாணவி ஒருவர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளார்.
இவரது மரணத்திற்கு டெங்கு அல்லது எலிக்காச்சல் காரணமாக இருக்கலாம் என சந்தேகிப்பப்படுகின்ற போதும் டெங்கு காச்சலுக்கான வாய்பே அதிகமுள்ளது என i வைத்தியசாலை தகவல்கள் தெரிவிகின்றன.
மாணவியின் மரணத்திற்கான காரணத்தை அறிந்துகொள்வதற்காக மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பட்டுள்ளது எனவும் வைத்தியசாலை தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.
குறித்த மாணவி காய்ச்சல் கடந்த ஞாயிற்றுக் கிழமை கிசிச்சை பெற்றுள்ளார். பின்னர் சுகமடைந்த நிலையில் மீண்டும் கால், கை குத்து காரணமாக நேற்று வியாழக்கிழமை வைத்தியசாயைலில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை மரணமடைந்துள்ளார்.
டெங்கு காய்ச்சல் ஒரு நோயாளிக்கு மூன்று நிலைகளில் தாக்குகின்றது எனவும், அதில் ஒரு நிலை காய்ச்சல் ஏற்பட்டு பின்னர் அது சுகமடைந்த நிலையில் உடலில் டெங்கு தொற்று தீவிரமடைவது. எனவே காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சை பெற்ற பின்னர் உடல் வழமைக்கு மாறாகவும், கை,கால் குத்து வலி போன்ற அறிகுறிகள் தொடர்ந்தும் காணப்பட்டால் உடனடியாக அரச மருத்துவமனையை நாடி உரிய பரிசோதனையை மேற்கொள்ளுமாறு மருத்துவர்கள் மக்களிடம் கேட்டுக்கொள்கின்றனர்.
கிளிநொச்சி மாவட்டதத்தில் தற்போது டெங்கு தொற்று வேகமாக பரவி வருவதனால் மக்கள் நுளம்பு பெருக்கம் ஏற்படாத வகையில் சுற்றுச் சூழலை வைத்திருப்பதோடு உடனடியான உரிய சிகிகை பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றனர். மாவட்ட சுகாதார துறையினர் வேண்டு கோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 5 விக்கட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
குறித்த போட்டி அவுஸ்திரேலியா, மெல்பர்ன் கிரிக்கட் மைதானத்தில் நடைபெற்றது. இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கட்டுக்களை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இந்த நிலையில் 169 என்ற வெற்றி இலக்கை நோக்கி இலங்கை பதிலளித்தாடியது.
இதன்படி, 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுகளை இழந்து 172 ஓட்டங்களை இலங்கை அணி பெற்றது.
இறுதிப் பந்தில் ஒரு ஓட்டம் தேவைப்பட்ட நிலையில் சாமர கப்புகெதர இறுதிப் பந்தில் நான்கு ஓட்டங்களைப் பெற்று அணிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார்.
துடுப்பாட்டத்தில் அசேல குணரட்ன 52 ஓட்டங்களையும், தில்ஸான் முனவீர 44 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.
சம்சுங் நிறுவனம் அண்மைக் காலமாக ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்வதிலேயே அதிக ஆர்வம் காட்டி வந்தது. எனினும் தற்போது தனது புதிய டப் ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
Samsung Galaxy Tab S3 எனும் குறித்த டப் ஆனது 9.7 அங்குல அளவுடையதும், 2048 x 1536 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளது.
இவற்றுடன் Qualcomm Snapdragon 820 SoC Processor, பிரதான நினைவகமாக 4GB RAM, 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.
தவிர 12 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன.
எனினும் இதன் விலை மற்றும் அறிமுகமாகும் தினம் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்தியாவில் பெண் குழந்தையை சொந்த தாயே உடலில் கடித்தும், சூடு வைத்தும் கொடுமைப்படுத்திய செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ராகுல், இவர் மனைவி பெயர் பூனம், இவர்களுக்கு 11 மாத பெண் குழந்தை உள்ளது. தன் குழந்தையிடம் அன்பாக இருந்து வந்த பூனத்தின் செயலில் திடீர் மாற்றம் ஏற்ப்பட்டது.
திடீரென தன் குழந்தையின் உடலில் கடித்தும், சூடு வைத்தும் பூனம் கொடுமைப்படுத்தியுள்ளார். இதனால் குழந்தையின் முகம் மற்றும் உடல் பகுதிகளில் காயம் ஏற்ப்பட்டுள்ளது.
இந்த செயல் அவர் குடும்பத்தாருக்கு அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது. குழந்தையை அவர் இப்படி தொடர்ந்து கொடுமைப்படுத்தியதால் பூனத்தின் கணவர் ராகுல் இது குறித்து பொலிஸில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து பொலிஸ் அதிகாரிகள் மருத்துவ குழுவின் ஆலோசனைப்படி பூனத்துக்கு மனநல சிகிச்சையளித்தனர்.
சிகிச்சையில் முன்னேற்றம் ஏதும் ஏற்படாமல் உள்ளதால் பூனம் மீது வழக்கு பாயும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கனடாவில் பழைய தொலைக்காட்சி பெட்டிக்குள் கட்டுக் கட்டாக 1.50 கோடி ரூபாய் வைக்கப்பட்டிருந்ததை கண்ட பெண் ஊழியர் ஒருவர் அதனை நேர்மையாக பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்.
ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள Barrie நகரில் பழைய பொருட்களை மறுசுழற்சி செய்யும் மையம் ஒன்று இயங்கி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் இந்த மையத்திற்கு செயல்படாத பழைய தொலைக்காட்சி பெட்டி ஒன்று மறுசுழற்சிக்காக(recycling) வந்துள்ளது.
தொலைக்காட்சி பெட்டியை வாங்கிய பெண் ஊழியர் ஒருவர் அதனை திறந்து சோதனை செய்துள்ளார். அப்போது, தொலைக்காட்சி பெட்டியின் பின்புறத்திற்குள் கட்டுக் கட்டாக பணம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனை உடனடியாக மையத்தின் உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார். மேலும், பணக் கட்டுகளை எண்ணியபோது 1,00,000 டொலர்(1,50,71,000 இலங்கை ரூபாய்) இருந்துள்ளது. இதுமட்டுமில்லாமல், பணக் கட்டுகளுடன் சில ஆவணங்களும் இருந்துள்ளது.
இவற்றை பரிசோதனை செய்தபோது Bolsover நகரை சேர்ந்த 68 வயதான நபர் தான் இந்த பணத்திற்கு சொந்தக்காரர் எனத் தெரியவந்துள்ளது.
பின்னர், பணத்தின் உரிமையாளரை நேரடியாக சந்தித்து விசாரணை செய்தபோது உண்மைகள் வெளியாகியுள்ளன.
‘என்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்காக இப்பணத்தை சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் தொகைக்காட்சி பெட்டிக்குள் பாதுகாப்பாக வைத்தேன்.
ஆனால், சில ஆண்டுகளுக்கு பிறகு பணம் வைத்ததை மறந்துப் போனதால் அந்த தொலைக்காட்சி பெட்டியை நண்பர் ஒருவருக்கு அளித்துவிட்டேன்.
இந்த தொலைக்காட்சி பெட்டி தான் தற்போது மறுசுழற்சிக்கு சென்றுள்ளதாக’ உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
தீவிர விசாரணைக்கு பின்னர் பணம் முழுவதும் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், பணத்தை பத்திரமாக வங்கியில் செலுத்துமாறு பொலிசார் அறிவுரை கூறியுள்ளனர்.
மறுசுழற்சி மையத்தில் கிடைத்த பணத்தை நேர்மையாக பொலிசாரிடம் ஒப்படைக்க காரணமாக இருந்த பெண் ஊழியரை பொலிசார் வெகுவாக பாராட்டியுள்ளனர்.
தமிழகத்தின் பொறுப்பு ஆளுநரான வித்யாசாகர் ராவை அவரது இல்லத்தில் நேரில் சென்று இளவரசியின் மகன் சந்தித்து பேசியுள்ளதாக வெளியான தகவல் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் யார் முதலமைச்சர் என்ற அதிகார போட்டி உச்சத்தில் இருந்து வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் பொறுப்பு ஆளுநரான வித்யாசாகர் ராவ்.
இந்த நிலையில் பதவிப்பிரமாணம் நடைபெறுவதற்கு முன்னர் ஆளுநர் இல்லத்தில் சென்று இளவரசியின் மகன் விவேக், ஆளுநருக்கு பூங்கொத்து கொடுத்து சில நிமிடங்கள் பேசியுள்ளார்.
அவருடன் சசிகலாவின் சகோதரர் திவாகரனும் உடனிருந்துள்ளார். ஆளுநரிடம் இவர்கள் என்ன பேசினார்கள் என்ற தகவல் வெளியாகவில்லை என்றபோதும்,
சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கி தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு சிறைல் ஏதேனும் சலுகைகள் வழங்கும் பொருட்டு கோரிக்கை முன்வைத்தார்களா?
அல்லது எடப்பாடி அரசு கவிழும் சூழல் ஏற்பட்டால் அதை தடுக்கும் வியூகங்கள் குறித்து சசிகலா சார்பில் அரசியல் பேசினார்களா என்பதும் மர்மமாகவே உள்ளது என அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.
சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை, தழிழக சிறைக்கு மாற்றம் செய்வது குறித்து வழக்கறிஞர்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
வழக்கறிஞர்கள், மூர்த்திராவ், செந்தில், அசோக் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது குறித்து, சசிகலாவுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
மேலும் சசிகலாவை, பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து தமிழக சிறைக்கு இடமாற்றம் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தமிழக முதல்வராக எடப்பாடியும், அமைச்சர்களும் பதவியேற்கவுள்ள தகவலை அறிந்த சசிகலா புன்னகைத்துள்ளார்.
முதல்வரும், அமைச்சர்களும் பெரும்பான்மையை நிரூபித்த பின் தன்னை சந்திக்க பெங்களூரு வந்தால் போதும் என அவர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இளம் தாய் ஒருவரின் தவறினால் பிறந்து 14நாள் ஆண்சிசுவொன்று உயிரிழந்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது. சிசுவிற்கு வழங்கிய மருந்து வில்லையே உயிரிழப்பிற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். நல்லிணக்க புரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் வசிக்கும் 23 வயதான பெண் ஒருவருக்கு கடந்த மாதம் 31ஆம் திகதி ஆண் குழந்தையொன்று பிறந்ததுள்ளது.
குழந்தை சுகதேகியாகவே இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், குழந்த 8 மாதத்தில் பிறந்த காரணத்தினால் குழந்தைக்கென சில மாத்திரை வழங்கப்பட்டுள்ளன.
இதேவேளை, தாயாருக்கும் குருதி அழுத்தம் இருந்தமையினால் அவருக்கும் மாத்திரை வழங்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் கடந்த 13ம் திகதி மாலை குழந்தைக்கு தாயார் மருந்து கொடுத்துள்ளார்.
எனினும், மறு நாள் அதிகாலை 3 மணியளவில் குழந்தை மூச்சு விட சிரமப்படுவதனை தயார் அவதானித்துள்ளார். இதனையடுத்து, சிசுவை தாயார் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
சிசு மேலதிக சிகிச்கைளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, குழந்தை தொடர்ச்சியாக அழுதுகொண்டிருந்தமையால் பதற்றமடைந்த அந்த இளம் தாய், குழந்தைக்கு கொடுக்கவேண்டிய மாத்திரைக்கு பதிலாக, தனக்கு வழங்கிய மாத்திரையை வழங்கியிருப்பதாக விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
ஒற்றைக் கண்ணுடன் ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்துள்ள சம்பவம் ஒன்று கேகாலை பகுதியில் பதிவாகியுள்ளது.
கேகாலை – கருந்தப்பனை என்ற இடத்தில் இந்த ஆட்டுக்குட்டி நேற்று பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியில் உள்ள ஆடு ஒன்று இரண்டு ஆட்டுக் குட்டிகளை ஈன்றுள்ள போதிலும், அதில் ஒரு ஆட்டுக்குட்டி ஒற்றைக்கண்ணுடன் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், இந்த ஒற்றைக்கண் ஆட்டுக்குட்டி பார்ப்பதற்கு வேற்றுக் கிரகவாசியை போல தோற்றமளிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் கடமையாற்றிய தொண்டர் ஆசிரியை ஒருவர் காணாமல் போன நிலையில் ஒன்றரை மாதங்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரது சடலம் சிதைவடைந்த நிலையில் மன்னார் மாவட்டம் மடு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட் கீரிசுட்டான் பகுதியில் புதன்கிழமை மாலை மீட்கப்பட்டது.
மடு பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் மிகவும் உருக்குழைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் வவுனியா பாண்டியன் குளம் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான நிஷாந்தன் யாழினி (32) என தெரிய வந்துள்ளது. இவரது மரணம் தொடர்பில் மன்னாரில் கடமை புரியும் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சடலம் மீட்கப்பட்டுள்ள இடத்திற்கு நேற்று வியாழன் மாலை சென்ற மன்னார் மாவட்ட நீதவான் சடலத்தை பார்வையிட்டுள்ளதோடு மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார். மேலதிக விசாரனைகளை மடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த ஆசிரியர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி காணாமல் போயுள்ளதாக தெரிய வந்துள்ள நிலையில் அவரது சடலத்தை ஆடைகள் மற்றும் தடையங்கள் மூலம் அவரது உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டது.
குழந்தைப் பாக்கியத்தைப் பெற்றுக் கொள்வதற்காக நாகொல்லாகொட பிரதேசத்தில் தேவாலயம் ஒன்றுக்குச் சென்ற பெண் ஒருவரை அந்த தேவாலயத்தினுள் நிர்வாணமாக்கி வல்லுறவுக்கு உட்படுத்த முயன்றதாகச் கூறப்படும் தேவாலய பூசகர் ஒருவர் பிங்கிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு ஹெட்டிபொல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் ஹல்மில்லேவ பிரதேச வீடொன்றில் இடம்பெற்ற பூஜை ஒன்றில் சந்தேக நபரான பூசகரைச் சந்தித்து தனக்கு குழந்தைப் பாக்கியம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதன்பின்னர் அவளது உடம்பில் உள்ள திருஷ்டியை நீக்கினால் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்றும், நாகொல்லாகொட பிரதேசத்தில் அமைந்துள்ள தனது தேவாலயத்துக்கு குளித்துவிட்டு சுத்தமாக பூஜைப் பொருட்களுடன் வருமாறும் பூசகர் அப்பெண்ணிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த பெண் தனது கணவருடன் தேவாலயத்துக்குச் சென்றுள்ளதோடு பூசகர் அப்பெண்ணின் கணவரை வெளியே அமரச் செய்துவிட்டு அவரை மாத்திரம் தேவாலய அறையினுள் அழைத்துச் சென்று உடம்பில் எண்ணெய் தேய்க்க வேண்டும் எனக் கூறி பெண்ணின் மேலாடைகளை கழையச் செய்து எண்ணெய் தேய்த்துள்ளார்.
அதன்பின்னர் பாய் ஒன்றில் அப்பெண்ணைப் படுக்க வைத்து உடம்பில் ஏனைய பகுதிகளுக்கும் எண்ணெய் தேய்க்க ஆயத்தமாகி தானும் நிர்வாணமானதால் அச்சமடைந்த பெண் அங்கிருந்து வெளியே ஓடிவந்து பிங்கிரிய பொலிஸ் நிலைத்தில் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த முறைப்பாட்டையடுத்து குறித்த தேவாலயத்திற்கு பொலிஸார் சென்ற போது சந்தேக நபரான பூசாரி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதோடு பின்னர் மறுநாளான நேற்று முன்தினம் பொலிஸ் நிலையத்தில் அவர் சரணடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பாகிஸ்தானின் சூஃபி வணக்கஸ்தலம் ஒன்றில் நேற்றிரவு நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் 72 பேர் கொல்லப்பட்டதுடன் 150க்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
வணக்கஸ்தலத்தின் பெண்கள் பிரிவை இலக்குவைத்து நடத்தப்பட்டதால் 30 குழந்தைகள் உட்படப் பெண்களே பெருமளவில் பலியாகினர். ஐ.எஸ். அமைப்பின் பாகிஸ்தான் பிரிவு இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது.
காயமடைந்தவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.
தீவிரவாதத் தாக்குதல்களைத் தடுக்கும் பொருட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்து வருவதாக பாகிஸ்தான் அரசு கூறிவரும் நிலையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
அண்மைக்காலங்களில் பாகிஸ்தானில் நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல்களுள் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது
வீதிகளில் நாய்களை விட்டு செல்பவர்கள் மற்றும் வீதிகளில் திரியவிடுபவர்களுக்கு எதிராக ரூபாய் 25 ஆயிரம் அபராதம் மற்றும் 6 மாத சிறைத் தண்டனையும் விதிப்பதற்கு சட்டத்தை உருவாக்கவுள்ளதாக மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் பைசர் முஸ்தபா மேற்கொண்டவாறு தெரிவித்துள்ளார்.
பொது இடங்களில் நாய்களை கொண்டு வந்து விட்டு செல்லும் நபர்களை இனங்கண்டு கொள்ளுவதற்கு சிசிரிவி கெமராக்களையும் பொருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.