வவுனியா மண்ணின் இளம் நாயகன் நவில்ராஜின் ராணிமீடீயா கிரியேஷன்ஸ் தயாரிப்பிலும் அவருடைய நடிப்பிலும் வெளிவந்த விழியோரம் காணொளி பாடல் நேற்றைய தினம் வெளியிடப்பட்டது.
இப் பாடலில் நவில்ராஜ் மற்றும் தினுஷி ஆகியோர் தோன்றியுள்ளனர். தாணு எழுதிய பாடலை முஹம்மட் ஷமீல் பாடியுள்ளார்.
இப் பாடலை நெவில்ராஜ் தயாரித்து இயக்கியதுமட்டுமன்றி படத்தொகுப்பையும் சிறப்பாக செய்துள்ளார்.
வவுனியாவில் நேற்று (24.01.2017) மாலையிலிருந்து கன மழை பெய்து வருகின்றது.
பெய்துவரும் கன மழையினால் மக்களுடைய இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளதுடன் காலநிலை தொடர்ந்து மப்பும் மந்தாரமுமாக காட்சியளிக்கின்றதுடன் குளிருடனான கால நிலை நீடித்து வருகின்றது.
பாடசாலையில் மாணவர்களின் வருகையும் குறைந்து காணப்படுகின்றது.
கடந்த சில மாதங்களாக வடக்கில் வரட்சியால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் கடந்த திங்கட்கிழமை (23.01.2017) ஆரம்பிக்கப்பட்ட கையளிக்கப்பட்டு காணமற்போனோர்களின் உறவினர்களின் சாகும்வரையான உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்றும் (25.01.2017) மூன்றாவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது.
மழை, குளிர் போன்ற காலநிலையினையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து தமது போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று மூன்றாவது நாளாகத் தொடரும் உணவு தவிர்ப்புப் போராட்டம் காரணமாக உணவு தவிர்ப்பில் ஈடுபடுகின்றவர்களின் உடல் நிலையில் சோர்வு ஏற்பட்டுள்ளதுதை அவதானிக்க முடிகின்றது.
மேலும் இவர்களின் போராட்டம் தொடருமானால் உடல் நிலை மோசமடைய வாய்ப்புக்கள் அதிகமுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று இவ் உணவு தவிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவாக பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகள் போன்றோர் நேரில் சென்று ஆதரவளித்து வருகின்றனர்.
இந்திய அணி வீரரான விராட் கோஹ்லி ஒற்றைத் தொடரில் மூன்று அரைச்சதங்கள் அடித்து சாதனை படைத்திருந்ததை, ஆப்கானிஸ்தான் வீரர் சாசத் தற்போது முறியடித்து சாதனை படைத்துள்ளார்.
இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணி உடனான தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கிடையேயான முதல் டி 20 போட்டி வரும் 26 ஆம் திகதி கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணிக்கு தலைவராக விராட் கோஹ்லி செயல்பட உள்ளார்.
இந்நிலையில் துபாயில் ஐசிசி நடத்தும் Desert T20 போட்டி கடந்த ஜனவரி 14 முதல் 20 ஆம் திகதி வரை நடைபெற்றது. இதில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த Mohammad Shahzad நான்கு அரைசதங்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்னர் இந்திய அணி வீரரான விராட் கோஹ்லி கடைசியாக நடைபெற்ற உலகக்கிண்ணம் டி20 போட்டியில் மூன்று அரை சதங்கள் அடித்திருந்தார் . தற்போது அதை Shahzad நான்கு அரைசதங்கள் அடித்து முறியடித்துள்ளார்.
மேலும் இத்தொடரின் ஒரே நாளில் இரண்டு அரைசதங்கள் அடித்த ஓரே ஆப்கானிஸ்தான் வீரர் என்ற பெருமையும் சாசத் பெற்றுள்ளார்.
பிரபல போப் பாடகரான மைக்கல் ஜக்சன் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார் என்று அவரது மகள் பாரிஸ் ஜக்சன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகரான மைக்கல் ஜக்சன் (50) கடந்த 2009 ம் ஆண்டு மர்மமான முறையில் மரணமடைந்தார். அதன் பின்னர் அவரது குடும்ப மருத்துவர் கான்ராடு முர்ரே அளவுக்கு அதிகமான சக்தி வாய்ந்த மாத்திரை வழங்கியதுதான் அவர் இறப்பிற்கு காரணம் என்று கண்டறியப்பட்டது.
இந்நிலையில் ஜக்சன் மகளான Paris Jackson தன் அப்பா ஜாக்சன் கொலை செய்யப்பட்டார் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், எனது அப்பா கொலை செய்யப்பட்டுள்ளார். இது என் குடும்பம் மற்றும் பெரும்பாலான ரசிகர்கள் பலருக்கும் தெரியும் என கூறியுள்ளார்.
என் அப்பாவை திட்டமிட்டு கொலை செய்துள்ளனர். இது ஒரு சதியாக இருக்கலாம். காரணம் தன் அப்பா பாடகராக இருந்த காலக்கட்டங்களில் ஏராளமான பாடகர்கள் நிறைய சிக்கல்களில் இருந்தனர். அவர்கள் நிலைமை மிகவும் வருந்ததக்க வகையில் இருந்தது.
மேலும் இது ஒரு சதுரங்க விளையாட்டு. இதை சரியான முறையில் விளையாடி வெற்றி பெற முயற்சிப்பேன். மேலும் தன் அப்பாவுக்கு மர்மமான முறையில் நிறைய எதிரிகள் இருந்ததாகவும் கூறியுள்ளார்.
இதில் நான் யாரையும் குறிப்பிட்டு கூறிப்பிடவில்லை என்றும் ஆனால் இதை நினைக்கும் போது தனக்கு மிகவும் கடினமாக இருப்பதாகவும், இதற்கு மேல் தான் எதையும் கூற விரும்பவில்லை என்று மனம் வருந்தி கூறியுள்ளார்.
தமிழகத்தில் வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்பனை முற்றிலும் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அதிரடியாக அறிவித்துள்ளது.
மேலும், இது மார்ச் 1ம் திகதி முதல் அமலுக்கு வரவுள்ளதாகவும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட போராட்டம் உலக அளவில் கவனத்தை ஈர்த்தது. இதில் கோக், பெப்ஸி போன்ற வெளிநாட்டு குளிர்பானங்களுக்கும் தடை வேண்டும் என கோரிக்கையும் எழுந்தது.
இந்நிலையில் மார்ச் 1ம் திகதி வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்பனை நிறுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு குளிர்பானங்கள் விற்பனையை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை எடுக்க உள்ளதாக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா தெரிவித்துள்ளார்.
பீட்டா இந்தியா சி.இ.ஒ பூர்வா ஜோஷிபுரா நடிகர் கமலஹாசன் ட்வீட்டுக்கு பதலிளித்துள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டத்தை அடுத்து நடிகர் கமலஹாசன் டுவிட்டரில் பீட்டாவை சாடி பதிவிட்டிருந்தார்.
அந்த பதிவில், அமெரிக்காவில் காளையை அடக்கும் போட்டிக்கு தடை விதியுங்கள். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என சாடியிருந்தார்.
இந்நிலையில் பத்திரக்கை ஒன்றிற்கு பேட்டியளித்த பீட்டா இந்தியா சி.இ.ஒ பூர்வா ஜோஷிபுரா கூறியதாவது, விலங்குகள் எதிரான கொடுமையை தடுத்து, அதன் உரிமையை நிலைநிறுத்தும் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது.
பீட்டா இந்தியா, இந்தியாவுக்குள் மட்டும் மிருகவதைக்கு எதிராக குரல் கொடுக்கும் அமைப்பு.
அதே போல் பீட்டா அமெரிக்கா அமைப்பு, கடந்த 1980-ஆம் முதல் அமெரிக்காவில் நடக்கும் மிருகவதை பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து வருகிறது என பதிலளித்துள்ளார்.
வெளிநாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியை குறைக்கும் ஆவணங்களில் அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டிரம்ப், நாட்டின் நிதி திட்டமிடல்கள் தொடர்பான பரிசீலனைகளை மேற்கொண்ட நிலையிலேயே குறித்த ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளார்.
ஜனாதிபதியாக பதவியேற்ற நாள் முதல் டிரம்ப் பல்வேறு திட்டங்களுக்கு தடையை ஏற்படுத்தியிருந்தார். அதில் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா அறிமுகப்படுத்திய மருத்துவ காப்பீடு திட்டமே முதலாவது தடை உத்தரவை பெற்றது.
மேலும் சீனாவை புறக்கணித்து ஜப்பான், கனடா, மெக்ஸிகோ, அவுஸ்திரேலியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளை கொண்டு ஒபாமா அறிமுகப்படுத்தியிருந்த டிரான்ஸ் பசிபிக் கூட்டு ஒப்பந்தத்தையும் டிரம்ப் தற்போது திரும்ப பெற்றுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது அமெரிக்க தொண்டு நிறுவனங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த பாரிய நிதியை குறைக்கும் ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தென் சீனக் கடலுக்கு சொந்தம் கொண்டாடும் விவகாரத்தில் ஒருபோதும் பின்வாங்க போவதில்லை என அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கைவிடுத்துள்ளது.
தென் சீனக் கடலை நீண்ட நாட்களாக சொந்தம் கொண்டாடி வரும் சீனாவுக்கும் பிலிப்பைனஸ், மலேசியா, தைவான், வியட்நாம் ஆகிய நாடுகளுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது.
இந்த விவகாரத்தில் தலையிட்ட அமெரிக்காவை ”தென் சீனக் கடலில் தங்களுக்கும், பிற நாடுகளுக்கும் இடையே நிலவும் பிரச்சினையில் அமெரிக்கா தலையிட வேண்டாம்” என சீனா எச்சரித்ததை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது.
இதனையடுத்து, தென் சீனக் கடல் விவகாரத்தில் முட்டுக்கட்டை ஏற்படுத்தினால் போருக்குத் தயாராக இருக்குமாறு அமெரிக்காவுக்கு சீனா கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்தது.
ஆனால், தென் சீனக் கடல் சர்வதேச செயல்பாடுகளுக்கு உரிய பகுதி என்றும், அதற்கு சீனா சொந்தம் கொண்டாட முடியாது என்றும் அமெரிக்கா மீண்டும் எச்சரித்தது.
இந்த விவகாரம் தொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தித் தொடர்பாளர் சீன் ஸ்பைசர் பேசும்போது, “தென் சீனக் கடல் என்னைப் பொறுத்தவரை சர்வதேச செயல்பாடுகளுக்கு உரியது என்றே நான் நினைக்கிறேன்.
அதனை சீனா சொந்தம் கொண்டாட முடியாது. தொடர்ந்து அமெரிக்க தென் சீனக்கடல் பாதுகாப்பை உறுதி செய்யும்” என்று கூறினார்.
இந்நிலையில், தென் சீனக் கடலுக்கு சொந்தம் கொண்டாடும் விவகாரத்தில் ஒருபோதும் பின்வாங்க போவதில்லை என்று அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கைவிடுத்துள்ளது.
இது தொடர்பாக சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ஹுவா சுன்யிங் கூறுகையில், ”தென் சீனக்கடலில் சீனா தனது இறையான்மையை நிலைநாட்டியே தீரும். தங்களது உரிமைகளையும், நலன்களையும் உறுதி செய்யும்” என குறிப்பிட்டுள்ளார்.
கனடாவில் இருந்து வருகைத்தந்த தமிழர் ஒருவர் பிரித்தானியாவில் கிரேட் லின்ஃபோட் பகுதியில் வைத்து படுகொலை செய்யப்பட்ட நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
32 வயதான சுரேன் சிவானந்தன் என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது உறவினர்களால் அடையாளம் காட்டியுள்ளனர்.
இந்நிலையில், குறித்த படுகொலை வழக்கு தொடர்பில் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதில் 37 வயதான ஞானச்சந்திரன் பாலச்சந்திரன் என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
அத்துடன், கிரோராஜ் யோகராஜா (30) என்பவரும் கைது செய்யப்பட்டுள விசாரிக்கப்பட்டு வருகின்றார். கைது செய்யப்பட்டுள்ள நபர்களை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கடந்த வெள்ளி அதிகாலை 4 மணியளவில் கிரேட் லின்ஃபோர்டு பகுதியில் இருந்து படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலம் ஒன்றை அந்நாட்டு பொலிஸார் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டின் பல இடங்களிலும் இன்று மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல இடங்களிலும் மேகமூட்டத்துடன் கூடிய மந்தமான காலநிலை நிலவும். வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை காரணமாக வானிலையில் மாற்றம் ஏற்படுவதாக காலநிலை அவதான நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய மாவட்டங்களில் காலநிலை தொடர்பான விபரங்கள்,
அம்பாறை – மிதமான காலநிலை
அனுராதபுரம் – மிதமான காலநிலை
பதுளை – மழையுடன் கூடிய காலநிலை
மட்டக்களப்பு – மழையுடன் கூடிய காலநிலை
கொழும்பு – மிதமான காலநிலை
காலி – மிதமான காலநிலை
கம்பஹா – மிதமான காலநிலை
அம்பாந்தோட்டை – மிதமான காலநிலை
யாழ்ப்பாணம் – தூறல் மழையுடன் கூடிய காலநிலை
களுத்துறை – மிதமான காலநிலை
கண்டி – மழையுடன் கூடிய காலநிலை
கேகாலை – மிதமான காலநிலை
கிளிநொச்சி – மிதமான காலநிலை
குருணாகல் – தூறல் மழையுடனான காலநிலை
மன்னார்- மழையுடன் கூடிய காலநிலை
மாத்தளை – மழையுடன் கூடிய காலநிலை
மாத்தறை – மழையுடன் கூடிய காலநிலை
மொனராகலை – மழையுடன் கூடிய காலநிலை
முல்லைத்தீவு – மிதமான காலநிலை
நுவரெலியா – மழையுடன் கூடிய காலநிலை
பொலன்னறுவை – மழையுடன் கூடிய காலநிலை
புத்தளம் – தூறல் மழையுடனான காலநிலை
இரத்தினபுரி – மேகமூட்டத்துடன் கூடிய மந்தமான காலநிலை
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறையில் இன்று இடம்பெற்ற படுகொலை தொடர்பில் 12 வயதான சிறுவன் ஒருவர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
நேற்று யாழ். ஊர்காவற்துறை – சுருவில் பகுதியில் 7 மாத கர்ப்பிணி பெண்ணான ஞானசேகரன் ஹம்சிகா மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்த சம்பவத்தினால் குறித்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இந்த படுகொலை சம்பவத்தை நேரில் பார்த்ததாகவும் சந்தேக நபர்களை அடையாளம் காட்ட முடியும் என 12 வயதான சிறுவன் ஒருவர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
குறித்த சிறுவன் வாய் பேச முடியாதவர் என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், சிறுவனின் தெரிவித்துள்ள தகவல்களுக்கு அமைவாகவும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நெடுந்தீவு பகுதியை சேர்ந்த படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் கடமையாற்றி வருகின்றார்.
இதன் காரணமாக வாடகைக்கு வீடு எடுத்து ஊர்காவல்துறையில் அவர்கள் தங்கி வந்துள்ளனர். வழமையினை போன்று இன்றைய தினமும் வேலைக்கு சென்ற கணவர் மனைவிக்கு தொலைபேசிமூலம் அழைப்பை ஏற்படுத்தியுள்ளார்.
எனினும், அழைப்புக்கு பதில் கிடைக்காததன் காரணமாக அயல்வர்களை தொடர்புகொண்டு மனைவி குறித்து விசாரித்துள்ளார் இதனையடுத்து, அயல் வீட்டார்கள் சென்று பார்த்து போது குறித்த பெண் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.
குறித்த பெண் தலையின் பின்புறத்தில் தாக்கியும், கழுத்து பகுதியில் வெட்டியும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தார். உடனடியாக அயல்வர்கள் பொலிஸாருக்கும் பெண்ணின் கணவருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து பொலிஸார் விசாரணைகளை துரிதகதியில் மேற்கொண்டனர். மேலும் குறித்த பகுதியில் இரும்பு சேகரிக்க வந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களே இந்த கொலையை செய்திருக்கலாம் என பொது மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தனர்.
இதனையடுத்து விரைந்து செயற்பட்ட பொலிஸார் ஊர்காவற்துறை – யாழ்ப்பாண வீதியில் மண்டைதீவு சந்தியில் வைத்து பொலிஸார் சந்தேகநபர்களை கைது செய்தனர். இதன் போது சந்தேகநபர்களை அந்த பகுதியில் இருந்தவர்கள் தாக்குவதற்கு முற்பட்டனர்.
இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. எனினும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களின் பாதுகாப்பு கருதி யாழ். பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் சுழிபுரம் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகநபர்களை நாளை ஊர்கால்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இதேவேளை, பெண்ணை படுகொலை செய்த பின்னர், தடயங்களை அழிக்கும் நோக்குடன் கொலையாளிகள் செயற்பட்டுள்ளனர். இரத்தகறைகளை கழுவியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
11,000 ஆண்டுகளுக்கு முன்பு சஹாரா பாலைவனம் 10 மடங்கு பசுமையாக இருந்தது என புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
உலகிலேயே மிகப்பெரிய பாலைவனமான ஆபிரிக்க கண்டத்தில் உள்ள சஹாரா பாலைவனம் அதிக வெப்பம் கொண்ட பாலைவனமாகும்
ஆனால் இந்த பாலைவனம் 5000 முதல் 11000 ஆண்டுகளுக்கு முன்பு தற்போது இருப்பதை விட 10 மடங்கு பசுமையாகவும், ஈரப்பதமாகவும் இருந்தது.
அந்த கால கட்டத்தில் அங்கு அதிகமான மழை பொழிவு இருந்தது அப்பகுதி முழுவதும் பசுமையாக இருந்ததால் மக்கள் அதிக அளவில் குடியிருந்தனர். கால்நடைகளின் மேய்ச்சல் பகுதியாகவும் இருந்தது.
இதனால் கால்நடைகளும் பெருமளவில் வளர்க்கப்பட்டன. ஆனால் 8,000 ஆண்டுகளுக்கு முன்பு சஹாரா பாலைவனம் வறட்சி பிடியில் சிக்கியது. 1000 ஆண்டுகள் படிப்படியாக வறண்டு வெப்பம் மிகுந்த பாலைவனமாக மாறியது.
இந்த தகவல் புதிய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் அரிசோனாவில் உள்ள ஜெசிகா டயர்னி பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் கடந்த 25 ஆண்டுகளாக சஹாரா பாலைவனம் பகுதியில் பெய்த மழை அளவு குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
அந்த ஆய்வில் இத்தகைய தகவல் தெரிய வந்துள்ளது, பருவநிலை மாற்றம் காரணமாக சஹாரா படிப் படியாக பாலைவனமாக மாறி இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அகழ்வாராய்ச்சி மூலம் இங்கு மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் காணப்படுவதும் அறியப்பட்டுள்ளது.
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் காதை கடித்து காயப்படுத்திய யுவதி ஒருவருக்கு அமெரிக்க நீதிமன்றம் ஒன்றினால் 4 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மசாசூசெட்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயதான எம்மா விலே எனும் யுவதிக்கே இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓகஸ்ட் 7 ஆம் திகதி அதிகாலை 00.45 மணியளவில், வீதியொன்றில் எம்மாவிலேவும் மற்றொரு பெண்ணுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதையடுத்து, அங்கிருந்தவர்களால் பொலிஸாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அங்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் எம்மாவை கைது செய்ய முற்பட்டபோது அவர் எதிர்ப்புத் தெரிவித்தார். பின்னர், எம்மாவை கைது செய்த பொலிஸார் அவரை பொலிஸ் வாகனத்தில் ஏற்றியபோது, பெண் பொலிஸ் உத்தியோகத்தரான ஜெஸி க்கா ரோன்டினெலின் காதை கடித்தார் என சட்டத்தரணி ஏ.ஜே. கெமிலியோ நீதின்றில் தெரிவித்தார்.
அவ்வேளையில், பொலிஸ் திணைக்களத்தில் ஜெஸிக்கா இணைந்து 6 வாரங்களே ஆகியிருந்தன எனவும் இத்தாக்குதலினால் அவருக்கு இரு சத்திரசிகிச்சைகள் செய்யப்பட்டதாகவும் சட்டத்தரணி கெமலியோ கூறினார்.
பொலிஸ் உத்தியோகத்தரின் காதைக் கடித்த குற்றச்சாட்டை எம்மாவிலே ஏற்றுக்கொண்டார். அதையடுத்து மோதலில் ஈடுபட்டமைக்காக இரண்டரை வருட சிறைத்தண்டனையும் பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிய குற்றத்துக்காக ஒன்றரை வருட சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி திமோதி ஃபீலி கடந்த வாரம் தீர்ப்பளித்தார்.
இவ்விரு தண்டனைகளையும் ஒன்றன்பின் ஒன்றாக எம்மா விலே அனுப விக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
கலைப்பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடையொ ன்றை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்த திருடர்கள், அங்கிருந்த பாலியல் பொம்மையைப் பார்த்து பயந்தோடிய சம்பவம் பிரிட்டனில் இடம்பெற்றுள்ளது.
ஓவியரான டெரிக் தொம்சன் என்பவர், இங்கிலாந்தின் மேற்கு சசெக்ஸ் பிராந்தியத்திலுள்ள டேரிங் நகரில் கலைப்பொருட்கள் விற்பனை நிலையமொன்றை நடத்தி வருகிறார்.
வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக, பெண் போன்ற தோற்றம் கொண்ட பாலியல் பொம்மையொன்றையும் இவர் கடந்த வருடம் வாங்கி வைத்திருந்தார். ஷேலா எனப் பெயரிடப்பட்ட 6 அடி உயரமான அந்த பொம்மைக்கு விதம் விதமான ஆடை அலங்காரங்களைச் செய்து தனது கடையிலுள்ள ஆசனமொன்றில் அமர வைத்திருந்தார் டெரிக் தொம்ஸன்.
இந்நிலையில், கடந்த 8 ஆம் திகதி இரவு மேற்படி கடையில் திருடுவதற்காக உள்ளே புகுந்த திருடர்கள், அந்த பாலியல் பொம்மையைக் கண்டவுடன் பயந்தோடி விட்டனராம். கதிரையில் உண்மையான பெண் ஒருவர் அமர்ந்திருக்கிறார் என அவர்கள் எண்ணியமையே இதற்கான காரணம்.
திருடர்கள் சுமார் 1,000 ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் (சுமார் 185,000) ரூபா பெறுமதியான பொருட்களை திருடிச் சென்றதாகவும், “ஷேலா” இல்லாதிருந்தால் திருடர்கள் மேலும் பொருட்களை திருடியிருக்கக்கூடும் எனவும் 42 வயதான டெரிக் தொம்சன் கூறியுள்ளார்.
காதலர்களுக்கு உதவி செய்த 13 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டு கோவிலிலுள்ள சூலாயுதத்தில் குத்தி வைக்கப்பட்ட சம்பவமொன்று தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது.
தமிழகத்தின் தஞ்சை மாவட்டம், பாபநாசம் வீராஞ்சேரி வடக்கு வீதியைச் சேர்ந்தவர் முருகானந்தம். விவசாயி. இவரது மகன் அருண்குமார்(13). 8ஆம் தரம் படித்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் குறித்த பகுதியிலுள்ள கோவிலின் சூலாயுதத்தில் அருண்குமார் உடல் குத்திவைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து பொலிஸார் விசாரணை செய்ததில், அதே பகுதியை சேர்ந்த குருநாதன் மகள் கலைசெல்வி(19). குடந்தையிலுள்ள தனியார் வைத்தியசாலையில் தாதியாக பணி புரிந்து வருகிறார்.
இவருக்கும், தேவனோடை பகுதியை சேர்ந்த அழகர் மகன் அருள் (22) என்பவருக்கும் காதல் இருந்து வந்தது. இவர்களது காதலுக்கு அருண்குமார் உதவி செய்து வந்துள்ளார்.
3 மாதங்களுக்கு முன் காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். ஆத்திர மடைந்த கலைசெல்வியின் சகோதரன் பொன்னுசாமி கதிரவன் (23), தாய்மாமன் சரவணன் (35) ஆகியோர் அருண்குமார் மீது கோபத்தில் இருந்து வந்தனர்.
அவர்கள் இருவரும் அருண்குமாரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து உடலை கோயில் சூலாயுதத்தில் தலைகீழாக குத்தி வைத்துள்ளனர்.
இதனையடுத்து பொன்னுசாமிகதிரவன், சரவணன் ஆகியோரைக் கைது செய்த கபிஸ்தலம் பொலிஸார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.