இரண்டு இணைபிரியாத நாய்கள் தங்களுக்குள் மரக்கிளை துண்டொன்றை மாறிமாறி பிடுங்கி விளையாடிய நிலையில், நீரில் அடித்து செல்லப்பட்ட தனது நட்பு நாயை, மறுமுனையிலிருந்த நாயொன்று மிக சூட்சுமமாக காப்பாற்றிய சம்பவத்துடனான காணொளி ஆர்ஜெண்டினாவில் வெளியாகியுள்ளது.
ஆர்ஜெண்டினாவின் கோர்டோபா எனுமிடத்திலேயே மேற்கண்ட நிகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியிலுள்ள ஆற்றில், இரண்டு நாய்களும் ஒரு மரக்கிளை துண்டொன்றை பிடித்து விளையாடிய நிலையில், ஒரு நாய் ஆற்றின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் விழவே, மறுமுனையில் நின்ற நாய், நீரில் அடித்து வந்த நாயை லாவகமாக பிடித்து காப்பாற்றியுள்ளது.
மேலும் தங்கள் விளையாடுவதற்காக பயன்படுத்திய மரக்கிளை துண்டை நீரில் சென்ற நாய், கவ்விய நிலையில் இருந்ததாலேயே மறுமுனையில் இருந்த நாயிற்கு காப்பாற்ற வழியேற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் தீ பற்றி எரிந்து கொண்டிருந்த காரில் தன்னுடைய விலை உயரந்த கைப்பையை எடுப்பதற்கு இளம் பெண் ஒருவர் குறித்த காரின் உள்ளே செல்ல முற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் டாக்கிங் என்ற நகரத்தில் இளம் பெண் ஒருவர் தன்னுடைய காரை நிறுத்திச் சென்றுள்ளார். அப்போது திடீரென்று காரின் பெற்றோல் தாங்கியிலிருந்து தீப்பற்றியுள்ளது.
குறித்த கார் முழுவதும் தீ பற்றி எரியத் தொடங்கிய நிலையில் இதைக் கண்ட அப்பெண் திடீரென்று தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த காரில் தன்னுடைய விலையுர்ந்த கைப்பையினை எடுப்பதற்காக காரின் கதவை திறந்து உள்ளே செல்ல முயற்சித்துள்ளார்.
எனினும், அங்கிருந்த நபர் ஒருவர் குறித்த பெண்ணை தடுத்து காரின் அருகே செல்ல விடாமல் தடுத்து வைத்துள்ளார்.
மேலும் குறித்த பெண் தீயில் ஏற்பட்ட சிறு காயங்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும்,குறித்த பெண் மதுபோதையில் தான் இவ்வாறு நடந்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் அப்பெண் மதுபோதையில் வாகனத்தை ஓட்டி வந்திருந்தமை உறுதி செய்யப்பட்டால் அவரின் சாரதி அனுமதி பத்திரத்தை இழக்க நேரிடும் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
பிருத்விராஜின் கிருத்யம் என்ற படம் மூலம் மலையாள சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் பருல் யாதவ். இவர் கடந்த திங்கட்கிழமை தன்னுடைய நாயை கூட்டிக்கொண்டு வெளியில் சென்றுள்ளார்.
அப்போது தெருவில் கூட்டமாக இருந்த நாய்கள் பருல் யாதவை கொடூரமாக கடித்திருக்கிறது. இதனால் அவருடைய முகம், கால்கள், கழுத்து, தலை என உடம்பு முழுவதும் மோசமாக கடித்துள்ளது.
தற்போது அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறார்.
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தீர்க்கமான இறுதி இருபது 20 போட்டியில் சீக்குகே பிரசன்னவின் அதிரடியுடன் திரில் வெற்றி பெற்ற இலங்கை அணி தென்னாபிரிக்க அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட இருபது20 தொடரையும் கைப்பற்றியது.
கேப்டவுனில் இடம்பெற்ற இப்போட்டியில் முன்னதாக நாணய சுழற்சியில் வெற்றி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 170 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.
நிதானமாக துடுப்பெடுத்தாடிய நிரோசன் டிக்வெல 68 ஓட்டங்களையும் அதிரடியாக துப்பெடுத்தாடிய சீக்குகே பிரசன்ன 37 ஓட்டங்களையும் பெற்று அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
இப் போட்டி மற்றும் தொடரின் சிறப்பாட்டக்காரராக நிரோசன் டிக்வெல தெரிவுசெய்யப்பட்டார்.
சமூகவலைதளங்களில் உலகளவில் முன்னணி வகிக்கும் வட்ஸ் அப் நிறுவனமானது அடிக்கடி புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் வட்ஸ் அப்பில் வீடியோ கோலிங் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு அது வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது இன்னொரு புதிய விடயத்தை வட்ஸ் அப் செயல்படுத்தியுள்ளது. அதாவது, இன்டர்நெட் கவரேஜ் அல்லது சரியாக சிக்னல் இல்லாத இடத்திலிருந்தும் இனி வட்ஸ் அப்பிலிருந்து மெசேஜ் அனுப்ப முடியும்.
ஒரு இடத்தில் இன்டர்நெட் சிக்னல் சரியாக இல்லை என வைத்து கொள்ளுங்கள்.
அந்த இடத்திலும் நாம் வட்ஸ் அப்பில் மெசேஜ் டைப் செய்து queue வரிசையில் வைத்து விட வேண்டும். அங்கு இன்டர்நெட் சிக்னல் வந்துவிட்டால் அந்த மேசேஜ் அனுப்பபட்டு விடும்.
திரும்ப மெசேஜை Resend செய்ய Send பட்டனை மட்டும் அழுத்த வேண்டியது இதில் அவசியமாகும்.
தற்போது இந்த வசதியானது ஐபோனில் மட்டுமே கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் காணாமல் போன உறவுகளின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியா மாவட்ட முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் நாளை (26.01.2017) காலை 8 மணியளவில் சாரதிகள் சங்கத்திலிருந்து அமைதி ஊர்வலமாக பஜார் வீதி வழியாக சென்று உண்ணாவிரதம் மேற்கொள்பவர்களுடன் இணையவுள்ளதாக சாரதிகள் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.
காணாமல் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி மேற்கொள்ளப்பட்டுள்ள தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், விடுதலையை வலியுறுத்தியும் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
இப் போராட்டத்தில் குறைந்தது ஐநஂநூறு பேருக்கு மேல் கலந்து கொள்ளவுள்ளதாகவும் வவுனியா மாவட்ட முச்சக்கர வண்டி சாரதிகள் சங்க தலைவர் சிவலிங்கம் ரவீந்திரன் தெரிவித்தார்.
பிரிட்டனைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் தனது முன்னாள் காதலியின் மீது கொண்ட பொறாமையால், காதலியின் வீட்டை உடைத்துக்கொண்டு புகுந்து, காதலியின் உள்ளாடையை திருடியதன் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.
21 வயதான கெய்லர் புரோபி எனும் இந்த இளைஞனும் 20 வயதான குளோ றீஸ் எனும் யுவதியும் காதலித்தனர். பின்னர் இவர்களின் காதல் முறிந்தது.
எனினும், இந்த உத்தரவுகளை மீறும் நடவடிக்கையில் கெய்லர் ஈடுபட்டதாக மீண்டும் வழக்குத் தொடுக்கப்பட்டது. தனது முன்னாள் காதலி குளோஸ் றீஸின் வீட்டுக்குள் புகுந்து குளோஸின் உள்ளாடையை திருடியதாகவும் வேறு பல ஆடைகளை துண்டு துண்டாக கத்தரித்ததாகவும் கெய்லர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
அத்துடன், கெய்லரும் அரோனும் பிக் அப் வாகனமொன்றில் சென்றுகொண்டிருந்தபோது குளோ றீஸ் மீது சுத்தியல் ஒன்றை எறிந்ததாகவும் கெய்லர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இவ் வழக்கை விசாரித்த ஸ்வான்ஸ் கிரவுண் நீதிமன்றமானது, முந்தைய உத்தரவுகளை விடுத்து கெய்லர் புரோப்பிக்கு இரு வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
கெய்லர் புரோப்பி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் தான் பாதுகாப்பாக உணர்வதாக குளோஸ் றீஸ் நீதிமன்றிடம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டுத் தடைக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் காரணமாக, மதுரை விமான நிலையத்தினுள் செல்வதற்கான பிரதான வழி தடைப்பட்டிருந்ததால், ஸ்ரீலங்கன் விமான உத்தியோகத்தர்கள் விமான நிலையத்தினுள் நுழைந்து கடமைக்கு சமுகமளித்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு பாகங்களிலும் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் காரணமாக தமிழ்நாட்டின் சில விமான நிலையங்களினூடான விமான பயணங்கள் தாமதமாகின.
இந்நிலையில், மதுரையிருந்து கொழும்பு நோக்கி பயணமாகவிருந்த ஸ்ரீலங்கன் விமானத்தின் தலைமை விமானியான கெப்டன் அல்விஸ் மற்றும் விமான உத்தியோகத்தர்கள், தங்களுக்கு தங்குவதற்காக ஒழுங்கு செய்துகொடுக்கப்பட்டுள்ள ஹோட்டலில் இருந்து மதுரை விமான நிலையம் நோக்கிச் சென்றனர்.
அதன்போது ஆர்ப்பாட்டங்களின் காரணமாக வீதியெங்கும் பெரும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டிருந்ததன் காரணமாக விமான நிலையத்துக்கு சென்ற பயணிகளும் வேறு சில விமான பணிக்குழுவினரும் மீண்டும் தாம் தங்கியிருந்த ஹோட்டலுக்கு திரும்பினர்.
எனினும் கடமை உணர்வு கொண்ட ஸ்ரீலங்கன் விமானசேவை பணிக்குழுவினர் அவ்வாறான முடிவெதனையும் எடுக்காது தாங்கள் பயணித்த வாகன சாரதியின் உதவியுடன் மாற்றுவீதியில் விமான நிலையம் நோக்கிச் சென்றனர். அதன் பின்னரும் பிரதான வாயிலுக்கூடாக அவர்கள் செல்ல முடியவில்லை.
இதனால், விமான நிலையத்தை அண்மித்தவுடன் தமது உடைமைகளுடன் நடந்து சென்ற மேற்படி உத்தியோகத்தர்கள், விமானநிலையத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த முட்கம்பி வேலிக்குள் புகுந்து தமது விமானத்தை அடைந்தனர்.
இவ்வாறு இவர்கள் விமான நிலையத்துக்குள் நுழைந்த காட்சிகள் இணையத்தில் தற்போது வெளியாகியுள்ளன.
படுக்கை வசதி, குளியலறை, சமயலறை என வீட்டில் இருக்கும் அத்துனை வசதிகளுடன் மற்றும் ஹெலிகொப்டர் இறங்கும் தள வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ள புதிய மோட்டார் இல்லம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்ப்பினை பெற்றுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த பியூரின் என்ற நிறுவனம் உயர் வகை மோட்டார் இல்லத்தை தயாரித்துள்ளது. எலிசியம் என்ற பெயரில் இந்த மோட்டார் இல்லத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.
குறித்த மோட்டார் இல்லம் 45 அடி நீளம், 8 அடி அகலம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. சில சொகுசு தொடர்மாடி குடியிருப்பு வீடுகளில் இருப்பதைவிட அதிக வசதிகளை கொண்டுள்ளதாக இந்த மோட்டார் இல்லம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த மோட்டார் இல்லத்தின் மேற்கூரையில் ஹெலிகொப்டர் இறங்கும் தள வசதியுடன் கட்டமைக்கப்பட்டுள்ளமை பலரையும் கவர்ந்துள்ளது. மேலும், இரண்டு பேர் பயணிக்கும் வசதி கொண்ட ராபின்சன் ஆர்22 ஹெலிகொப்டரும் இந்த மோட்டார் இல்லத்திற்காக வாங்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேவைப்படும்போது பயணிகள் பயன்படுத்தக் கொள்ளலாம்
மோட்டார் இல்லத்தின் உள்பகுதி மிக சிறப்பான இடவசதியை கொண்டுள்ளது. அத்துடன், ஓய்வாக அமர்வதற்கான பெரிய அளவிலான இருக்கை, 75 இன்ச் திரையுடன் கூடிய எல்இடி தொலைகாட்சி பொருத்தப்பட்டு இருக்கிறது. குறித்த தொலைகாட்சி மிக மோசமான வானிலையிலும் மிகவும் துல்லியமாக இயங்குமாம்.
குறித்த மோட்டார் இல்லத்தில் அனைத்தும் தொடுஉணர்வு கட்டுப்பாட்டு ஆளிகள் கொண்டதாக இருக்கிறது. வாகனத்தை இயக்குவது கூட மிக எளிதானது என தெரிவிக்கப்படுகின்றது. மேலும், அனைத்து வசதிகளையும் சாரதியின் இருக்கை அருகேயுள்ள தொடுதிரை சாதனத்தின் மூலமாக கட்டுப்படுத்த முடியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வாகனத்தின் பின்புறத்தில் படுக்கையறை இரண்டு பேர் தங்குவதற்கான மிக சொகுசான படுக்கை வசதியுடன் இந்த அறை உருவாக்கப்பட்டுள்ளது.
மரத்தாலான மாடிப்படிகளில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாடியில் சுடுநீர் குளியலிற்காக பெரிய நீர் தொட்டி, ஓய்வாக அமர்ந்து இயற்கையை ரசிப்பதற்கான இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகிலேயே ஹெலிகாப்டர் இறங்குவதற்கான இறங்குதளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
சகல வசதிகளுடன் கூடிய இந்த மோட்டார் இல்லம் 2.5 மில்லியக் அமெரிக்க டொலர் மதிப்பு கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இந்த மோட்டார் இல்லத்தை விற்பனை செய்யப்போவதில்லை.
தங்களது தொழில்நுட்பத்தையும், தயாரிப்புகளையும் பிரபலப்படுத்தும் நோக்கில் தயாரித்துள்ளதாகவும் பியூரின் நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி உள்ளிட்ட பலருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் தோனிக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரியோ ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக் போட்டியில் நான்காவது இடம் பிடித்த தீபா கர்மாக்கர் உள்ளிட்ட 20 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன், தமிழகத்தை சேர்ந்த மறைந்த மருத்துவர் சுனிதி சாலமோன், ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷ், திரைப்பட பின்னணி பாடகி அனுராதா படுவால், பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன், தட்டு எறிதல் வீரர் விகாஸ் கவுடா உள்ளிட்ட பலருக்கு இவ்வாறு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தலையின் பின்பகுதியில் பலமாக தாக்கப்பட்டதால் மூளை சிதைவடைந்தமையே மரணத்திற்கான காரணமென பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை பகுதியிலுள்ள வீடொன்றில் கொள்ளையிட வந்தவர்களால் 7 மாத கர்ப்பிணிப் பெண்ணொருவர் (வயது 27) மிகக் கொடூரமான முறையில் அடித்துக்கொலை செய்யப்பட்டிருந்தார். இச் சம்பவம் நேற்று இடம்பெற்றது.
இதையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் சந்தேகத்தின் பேரில் நேற்று கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனையில் தலையில் பலமாக தாக்கப்பட்டதையடுத்து மூளை சிதைவடைந்தமையே இறப்பிற்கான பிரதான காரணமெனவும் கழுத்தில் வெட்டுக்காயம் காணப்படுவதாகவும் தோள் மற்றும் முதுகுப்பகுதி எலும்புகள் முறிவடைந்துள்ளதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் அறையில் பொலிஸாரினால் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அடையாள அணிவகுப்பிற்காக எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதிவரை சந்தேகநபர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
குழந்தைகள் என்றாலே அழகு, குழந்தைகளை அழுத்தி தூக்க கூட மனது வராது. ஆனால், கோபால்பூர் பகுதியை சேர்ந்த தாய் ஒருவர். தனது குழந்தையின் சதையை அறுத்து தின்றுள்ளார்.
எப்படி தான் மனது வந்ததோ அந்த தாய்க்கு. சிலருக்கு இருக்கும் அதிகமான மனநோய் அல்லது போதை பழக்கம் இது போன்ற காரியங்களை செய்ய தூண்டுகிறது…
கொடூர மனம் படைத்த அந்த தாய் கோபால்பூர் எனும் இடத்தில் வசித்து வருபவர். இவருக்கு வயது 40. இவரது பெயர் பிரமிளா. சதையை அறுத்து தின்றார்.
உறவினர் வீட்டுக்குள் நுழைந்த போது குழந்தை கத்தி அழுதுக் கொண்டிருந்தது. அப்போது பிரமிளா தன் குழந்தையின் தலைப் பகுதியிலுள்ள சதையை அறுத்து தின்றுக் கொண்டிருந்தார்.
குழந்தை வலி தாங்காமல் கதறி அழுதுக் கொண்டிருந்தது. உறவினர் காப்பாற்றினார். அந்த கொடூர தாயின் உறவினர் தான் அந்த குழந்தையை காப்பற்றியுள்ளார்.
பக்கத்து வீட்டார் மற்றும் உறவினர் அந்த குழந்தையை மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த சம்பவத்தை அறிந்த ஊர் மக்கள் பிரமிளாவை இழுத்து சென்று மரத்தில் கட்டிவைத்து அடித்து, உதைத்து பிறகு போலீஸில் ஒப்படைத்து உள்ளனர். போலீசார் தான் பிரமிளாவை காப்பாற்றி காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.
பிரமிளா இப்படி கொடூரமான தாயாக ஆனதற்கு காரணம் அவருக்கு இருந்த மிகுதியான போதைப்பொருள் தான். இவருக்கு குடிப் பழக்கம் அளவிற்கு அதிகமாக இருந்திருக்கின்றது. என்ன இருந்தாலும் பிரமிளா செய்த காரியம் மனிதத்தன்மையற்ற செயல் ஆகும்.
வவுனியாவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக உணவு தவிர்ப்பில் ஈடுபடுபவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற வைத்திய குழுவினர் பரிசோதனை நடாத்தியதுடன் தொடர்ந்தும் உண்ணாவிரதம் மேற்கொண்டால் மேலும் உடல் நிலை மோசமடைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
எனினும் தொடர்ந்தும் உண்ணாவிரதம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வவுனியாவில் காணால் போனோரின் உறவுகளால் மூன்றாவது நாளாக மேற்கொள்ளப்பட்டு வரும் உண்ணாவிரத்தில் உண்ணாவிரதிகளின் உடல் நிலைமோசமடைந்து வருவதாக வவுனியா பொது வைத்தியசாலையின் வைத்தியர் தெரிவித்தார்.
உண்ணாவிரதம் இடம்பெற்ற இடத்திற்கு வருகைதந்த வைத்திய குழு உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களை பரிசோதனை செய்ததன் பின்னரே இவ்வாறு தெரிவித்தார்.
இந் நிலையில் வயோதிப தாய்மார் இருவரின் உடலில் சர்க்கரையின் அளவு மிகக்குறைவடைந்துள்ளதாகவும் இருவரும் மயக்கமுறும் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந் நிலையில் மயக்கமுறும் சந்தர்ப்பத்தில் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு வந்து அனுமதிக்குமாறும் அவர் அங்கிருந்தவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை உண்ணாவிரதப் போராட்டத்திற்கு இளைஞர்கள் சிலர் ஆதரவு வழங்கி வரும் நிலையில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் அதிகளவில் பிரசன்னமாகியுள்ளனர்.
உண்ணாவிரதம் இருப்போருக்கு ஆதரவாக முற்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம் நாளை பேரணியொன்றினை நடத்த திட்டமிட்டுள்ளதுடன் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை நடத்தவுள்ளார்.
மூன்றாவது நாளாகவும் தொடரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு இன்றயை தினம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், வட மாகாண முதலமைச்சரின் பொதுசன தொடர்பாடல் உத்தியோகத்தர், வட மாகாண சபை உறுப்பினர்களான எம்.தியாகராசா, செ.மயூரன், சிறிடெலோ கட்சியின் பிரதிநிதிகள், கிறிஸ்தவ மதத் தலைவர்கள், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
சற்றுமுன் கிளிநொச்சி 155 ம் கட்டை பகுதியில் புகையிரதம் மோதியதில் சம்பவஇடத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.
யாழ்ப்பணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடுகதிப் புகையிரதமும்புகையிரதக் கடவையை கடக்க முற்ப்பட்ட மோட்டார் சைக்கிளும் மோதியதாலேயே விபத்து இடம்பெற்றுள்ளது
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் சம்பவ இடத்தில்பலியாகியுள்ளத்தாகவும் விபத்து தொடர்பான மேலதிக விபரங்கள் எதனையும் உடனேபெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிகின்றார்.
விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.