அதிகம் பொரித்த உணவுகளை உட்கொள்பவரா நீங்கள் : ஆபத்து!!

கிழங்கு வகைகளை கருஞ்சிவப்பு நிறத்தில் வறுத்துண்ணல் மற்றும் அதிக வெப்பத்தில் நீண்ட நேரம் கருகவிடப்படும் உணவுகள் உண்ணுதல் என்பன புற்றுநோயை ஏற்படுத்துமென புதிய மருத்துவ ஆய்வியல் அதிர்ச்சிகர தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

அதிகளவான மக்கள் வெப்பத்தில் நீண்ட நேரம் வறுத்த உணவு பொருட்களையே விரும்பி சாப்பிடுகின்றனர். அது குறித்து உணவு தர நிர்ணய நிறுவனத்தின் விஞ்ஞானிகள் ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த ஆய்வில் பொன்னிறத்தில் வறுக்கப்படும் உணவு வகைகள் உடல் நலத்துக்கு தீங்கு இழைப்பதில்லை. அதே நேரம் மிகவும் கருஞ்சிவப்பு நிறத்தில் வறுத்து சாப்பிடும் உணவில் வறுக்கப்படும் உணவு பொருட்களில் ‘அக்ரிலேமிட்’ எனப்படும் இரசாயன பொருளின் அளவு அதிகரிக்கிறது. குறித்த இரசாயணம் புற்றுநோயை ஏற்படுத்துமென கூறியுள்ளனர்.

குறித்த ஆய்வை பற்றி கருத்து தெரிவித்துள்ள ஆய்வாளர் ஹிலாரி,
அதிவெப்பத்தில் நீண்ட நேரம் பொரித்த உணவு பொருட்களை சாப்பிட வேண்டாம். மாறாக அவிந்த உணவுகளை உட்கொண்டு உடல்நலத்தை பேணுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை அணியின் தலைவராக உபுல் தரங்க நியமனம்!!

தென்னாபிரிக்காவிற்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடருக்கான இலங்கை அணிக்கு உப்புல் தரங்க தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அணித்தலைவர் அஞ்சலோ மெத்யூஸ் உபாதை காரணமாக நாடு திரும்பியதை அடுத்து, இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

தென்னாபிரிக்காவிற்கு கிரிக்கெட் விஜயம் செய்துள்ள இலங்கை அணி அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரை எதிர்கொள்ளவுள்ளது.

தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 28 ஆம் திகதி போர்ட் எலிசபெத்தில் நடைபெறவுள்ளதுடன், அதற்கு முன்னதாக நாளைய தினம் கடைசி சர்வதேச இருபதுக்கு 20 போட்டி கேப்டவுனில் இடம்பெறவுள்ளது.

இரண்டாவது சர்வதேச இருபதுக்கு 20 போட்டியில் உபாதைக்குள்ளான அணித்தலைவர் அஞ்சலோ மெத்யூஸ் எஞ்சிய போட்டிகளில் பங்குபற்றும் வாய்ப்பை இழந்துள்ளார்.

இதனால் உப்புல் தரங்க இலங்கை அணியை வழிநடத்தவுள்ளதுடன், புதுமுக வீரர்களான சந்துன் வீரக்கொடி, லஹிரு மதுஷங்க, சதுரங்க டி சில்வா ஆகியோர் இலங்கை குழாத்திற்கு பெயரிடப்பட்டுள்ளனர்.

நுவன் பிரதீப், தனுஷ்க குணதிலக்க ஆகியோரும் உபாதை காரணமாக நாடு திரும்பியுள்ளனர்.

சர்வதேச இருபதுக்கு 20 தொடரில் 1-1 எனும் ஆட்டக்கணக்கில் இலங்கை சமநிலை வகிப்பதுடன் நாளைய மூன்றாவது போட்டி தொடரை தீர்மானிப்பதாய் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பெண்ணின் தற்கொலையில் சந்தேகம் : பிரேத பரிசோதனைக்கு உத்தரவு!!

பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் மாத்தறை வெலிகம பிரதேசத்தைத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த பெண் அவரது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை தொடர்பான வழக்கு இன்றைய தினம் மாத்தறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

குறித்த பெண்ணின் மரணம் சந்தேகத்திற்கிடமான முறையில் உள்ளமையால், சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கொலை தொடர்பில் வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் உண்ணாவிரதமிருக்கும் உயிர்களைக் காப்பாற்றுங்கள் : ப.உதயராசா!!

உலக விடுதலைப் போராட்டங்களில் எடுத்து நோக்குகையில் ஈழ விடுதலை போராட்டம் மூலமே சர்வதேசத்துக்கு ஈழத்தமிழரின் அவல நிலையை எடுத்துக்காட்டிய நாம் இன்று மீண்டும் ஒரு முறை இந்த உண்ணாவிரதத்தின் மூலம் எம் ஒற்றுமையையும், எம் அவல நிலையையும் இலங்கையின் நல்லாட்சி அரசுக்கும், சர்வதேசத்துக்கும் எடுத்துகாட்டுவதோடு இப் போராட்டத்துக்கு மேலும் வலுசேர்க்கும் முகமாக புலம்பெயர் தமிழர்களும் இப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்குமாறு சிறீ ரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது..

இலங்கையில் யுத்தம் நடந்த காலப்பகுதியிலும் அதற்குப் பின்னரான காலங்களிலும் கடத்தப்பட்டும், கைது செய்யப்படும், சரணடைந்தும் காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடி பல கட்டங்களாக போராட்டங்களை மேற்கொண்டு எந்தப்பயனும் இல்லாமல் தங்களின் உயிரை மாய்த்தேனும் உறவுகளை மீட்கவென வவுனியாவில் சாகும் வரை உண்ணாவிரதமிருக்கும் உறவுகளுக்கு சிறி ரெலோ கட்சி தனது பூரண ஆதரவினை வழங்குவதோடு நம்மால் இயன்ற அளவிற்கு இது தொடர்பான அழுத்தங்களை அரசுக்கு வழங்கவும் தயாராகி வருகின்றோம் .

காணாமல் போன தமது உறவுகளைத் தேடி பல போராட்டங்களை நடத்தி மனமுடைந்து உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடுமையாக பாதிப்புக்குள்ளான இவர்கள் நீராகாரம் இன்றி உண்ணாவிரதம் இருப்பது குறுகிய நாட்களில் பாரிய இழப்புக்களை ஏற்படுத்திவிடும் என்பதனை உணர்ந்து அரசாங்கமும் காணாமல் போனவர்கள், அரசியல் கைதிகள் தொடர்பில் தீர்வினைப் பெற்றுத் தருவோம் எனக்கூறி தேர்தல் வெற்றிகளை பெற்று அரசாங்கத்துக்கு ஆதரவுக்கரம் நீட்டி அரசுடன் நல்லுறவை பேணிவரும் தமிழ் பிரதிநிதிகளும், ஊடகங்களின் புகைப்பட கருவிக்கு முன்பாக நின்று பேசுவதை விடுத்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு போராட்டத்தில் பங்குபற்றியுள்ள அப்பாவி உயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்வதோடு

ஜல்லிக்கட்டுக்காக நாட்டின் பல பாகங்களிலும் திரண்டு போராடியது போன்று இந்த போராட்டத்துக்கும் ஆதரவு வழங்கி சகல இடங்களிலும் இளைஞர்களும், பொதுமக்களும் இந்த போராட்டத்தை உலகறியச் செய்து உரியவர்களுக்கு போதிய அழுத்தத்தை வழங்க வேண்டுவதுடன் இப் போராட்டத்தை காணாமலாக்கப்பட்டவர்களுக்கும், அரசியல் கைதிகளுக்கும் சரியான தீர்வை பெற்றுக்கொடுக்கக் கூடிய போராட்டமாக மாற்றியமைப்பது தமிழர்கள் அனைவரது கைகளிலுமே தங்கியுள்ளது என்பதை உணர்ந்து செயற்பட அனைவரையும் அழைத்து நிற்கின்றோம்.

யாழ் ஊர்காவற்துறை கொலை : கைதானவர்களின் பின்னணியும் கொலைக்கான காரணமும்!!

 
ஊர்காவற்துறை – சுருவில் பகுதியில் இன்று மதியம் படுகொலை செய்யப்பட்ட இளம் கர்ப்பிணி தாய், அவருடைய வீட்டு அறைக்குள் வைத்து வீட்டில் இருந்த கத்தியால் குத்தப்பட்டுள்ளதுடன், அடித்தும் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும் அவர் அணிந்திருந்த தங்க சங்கிலி மற்றும் காப்பு ஆகியன களவாடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்றைய தினம் மதியம் ஊர்காவற்துறை – சுருவில் பகுதியில் இளம் கர்ப்பிணி தாய் ஒருவர் விசமிகளால் குரூரமாக அடித்தும், வெட்டியும் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவரும் ஊர்காவற்துறை பகுதியை சேர்ந்த பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் இருவரும் யாழ்.மண்டைதீவு பகுதியில் வைத்து பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்த துவிச்சக்கர வண்டி ஒன்றில் இரத்த கறை காணப்பட்டுள்ளது.

மேலும் கொலை செய்யப்பட்ட பெண் அவருடைய வீட்டு அறைக்குள் வைத்து அவருடைய வீட்டில் இருந்த கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் அவருடைய வீட்டு அறைக்குள் காணப்பட்ட இரத்த கறையை கொலையாளிகள் தண்ணீர் ஊற்றி கழுவி உள்ளனர்.

இந்நிலையில் வாய்பேச முடியாத மாற்றுவலுவுள்ள இளைஞர் ஒருவரே சம்பவம் தொடர்பாக பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி பின்னர் பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டு இளைஞர்கள் இருவரை கைது செய்துள்ளனர்.

மேலும் இந்த கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் அந்த ஊரை சேர்ந்தவர்கள் அல்ல எனவும் அவர்கள் வெளியிடத்தில் இருந்து வந்தவர்களாக இருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை குறித்த கொலை சம்பவத்தின் போது பெண்ணின் கணவன் வேலை நிமித்தம் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நின்றதாகவும், பெண் வீட்டில் தனியே இருந்த நிலையில் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னர் அயல் வீட்டுக்கு சென்று அங்குள்ளவருடன் பேசிவிட்டு சமைக்க வேண்டும் என கூறிவிட்டே வீட்டுக்கு சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் வை.எம்.எம்.றியால் சம்பவ இடத்திற்கு சென்று மரண விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

இதேவேளை சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

170 ஆங்கில வார்த்தைகளைக் கொண்டு 50 இலட்சம் வசனங்கள் : பின்தங்கிய கிராம ஆசிரியர் சாதனை!!

வெறும் 170 ஆங்கில வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தி 50 இலட்சம் வசனங்களைக் கொண்ட கட்டுரையொன்றைத் தயாரித்து, மகாராஷ்ட்ர மாநில ஆசிரியர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

பாலாசாஹேப் சாவன் (37) என்பவர் ஒரு ஆங்கில ஆசிரியர். இவர் மகாராஷ்ட்ராவின் மிகப் பின்தங்கிய மாவட்டமான தஹனுவில் உள்ள பாடசாலையில் பணிபுரிந்து வருகிறார்.

இங்கு கல்வி கற்கும் மாணவர்கள் ஆங்கில வார்த்தைகளை ஞாபகத்தில் வைத்திருக்கவும் அவற்றைக் கொண்டு வசனம் அமைக்கவும் சிரமப்படுவதைக் கண்டு வருந்திய இவர், அவர்களுக்கு உதவும் வகையில் ஏதாவது செய்யவேண்டும் என்று விரும்பினார்.

அதன்படி, தனது மாணவர்கள் இலகுவாகப் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையான வசனங்களை, மிகக் குறைவான வார்த்தைகளைக் கொண்டு அமைக்கத் தொடங்கினார். இதுவே நாளடைவில் உத்வேகமாக மாறவே, மேலும் மேலும் வசனங்களை வடிவமைக்கத் தொடங்கினார்.

இந்த முயற்சியை சாவன் ஆரம்பித்த மூன்றாவது மாதமே இந்திய சாதனைப் புத்தகத்தில் சாதனையாக இது பதியப்பட்டது. அப்போதும் தனது முயற்சியை நிறுத்தாத சாவன், குழந்தைகளுக்கு எப்படி கல்வி புகட்டுவது என்பது குறித்து 50 இலட்சம் வசனங்களைக் கொண்ட பெரியதொரு கட்டுரைத் தொகுப்பை தற்போது பூர்த்தி செய்துள்ளார்.

இதற்காக அவர் பயன்படுத்திய ஆங்கில வார்த்தைகளின் எண்ணிக்கை…. வெறும் 170 தான்! இந்த வார்த்தைகளையே மாற்றி மாற்றி ஒழுங்கமைத்தே இந்தப் புத்தகத்தை சாவன் எழுதியுள்ளார்.

இவரது முயற்சியைப் பெரிதும் பாராட்டும் பாடசாலை அதிபர், தற்போது தங்களது மாணவர்கள் எவரும் ஆங்கிலத்தைக் கண்டு பயப்படுவதே இல்லை என்று பெருமைபடக் கூறுகிறார். மேலும், இதற்குக் காரணமாக இருக்கும் ஆசிரியர் சாவனை தங்களது பாடசாலைக்குக் கிடைத்த பொக்கிஷம் என்றும் குதூகலிக்கிறார்.

இதுபோன்ற முயற்சி இதுவரை செய்யப்படாததால், கின்னஸ் சாதனையாகவும் இது பதியப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவில் 10 விநாடிகளில் 19 அடுக்குமாடி கட்டிடங்கள் வெடிவைத்து தகர்ப்பு!!(வீடியோ)

சீனாவில் உள்ள ஹூபேமா காணம் ஹன்கூ நகரில் 15 ஹெக்டேர் பரப்பளவில் இருந்த 19 அடுக்குமாடிக் கட்டிடங்கள் வெடிவைத்து தகர்க்கப்பட்டுள்ளன.

உலகிலேயே மிக உயரமான கட்டிடங்களில் ஒன்றாக இருந்து வந்த மிகப் பழமையான 707 மீட்டர் உயரம் கொண்ட 19 அடுக்குமாடி கட்டிடங்கள் வெடிவைத்து, ரிமோட் கண்ட்ரோல் மூலம் 10 விநாடிகளில் தகர்க்கப்பட்டுள்ளன.

கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமான காட்சி பதிவாகியுள்ள வீடியோ வெளியாகியுள்ளது.

வவுனியாவில் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட இளைஞனின் உடல் 12 நாட்களின் பின் நல்லடக்கம்!!

வவுனியாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட குடும்பஸ்தரான பாலரஞ்சன் பாலநிஷாந்தன் என்பவரின் உடல் 12 நாட்களுக்கு பின்னர் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 11 ஆம் திகதி வீட்டில் நித்திரையில் இருந்தபோது கோடரியால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட நபர் 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஆவார்.

குடும்பஸ்தரின் சடலம் கிராம மக்கள் மற்றும் உறவினர்களின் இறுதி அஞ்சலியுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

குறித்த நபரின் தாயார் வெளிநாட்டில் இருந்து வருவதற்காக காத்திருந்த நிலையில், அவர் வரமுடியாத நிலையில் தற்போது நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

வவுனியாவில் உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை!!

 
வவுனியா மத்திய அஞ்சல் அலுவலகத்திற்கு அருகே நேற்று (23.01.2017) தொடக்கம் தமக்கு நீதி வேண்டி சாகும்வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் வேண்டுகோளுக்கினங்க வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளரின் பணிப்பின் கீழ் இன்று (24.01.2017) உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இவ் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவமோகன், அடைக்கலநாதன் வடமாகாண சபை உறுப்பினர்களான ம.தியாகராஜா, செ.மயூரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் இரண்டாவது நாளாகவும் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்!!

 
நேற்றைய தினம் (23.01.2017) தமக்கு நீதி வேண்டி சாகும்வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் உணவு, நீர் எதுவுமின்றியும், கொட்டும் மழையிலும், இரவு வேளையில் கடும் குளிர், காரிருளில் தமது போராட்டத்தை இன்றைய தினம் (24.01.2017) இரண்டாவது நாளாக தொடர்ந்த வண்ணம் இருக்கின்றனர்.

இப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

வவுனியாவில் மேற்கொள்ளப்படும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு இளைஞர்கள் ஆதரவு வழங்க வேண்டும் : செல்வம் அடைக்கலநாதன்!!

ஆணைக்குழு அமைத்து காலம் கடத்தும் அரசு காணாமல்போனோரின் உறவினர்களுக்கு தீர்வு வழங்கவில்லை என தெரிவித்துள்ள என வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தமிழ் இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு வழங்கியது போன்று இப் போராட்டத்திற்கும் ஆதரவு வழங்வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் காணாமல் போனோரின் உறவினர்களால் நடத்தப்பட்டு வரும் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..

யுத்த காலத்திலும் அதன் பின்னரான காலப்பகுதியிலும் கடத்தப்பட்டவர்களும் இராணுவத்திடம் உறவினர்களால் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டவர்களும் என பலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இவாகளது நிலைப்பாடு தொடர்பில் அரசாங்கம் அவர்களது உறவினர்களுக்கு தகுந்த பதிலை தெரியப்படுத்தவில்லை.

மாறி மாறி வந்த அரசுகளை நம்பியவர்களாக அவர்கள் இருந்தபோதிலும் எந்த அரசாங்கமும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்ததாகவும் இல்லை. இந் நிலையில் ஆணைக்குழுக்களை அமைத்து விசாரணை என்ற பெயரில் காலங்களை கடத்தியதே தவிர அதனூடாக தீர்வினை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அவர்கள் தமது சாத்வீக ரீதியிலான போராட்டங்களின் ஊடாக தமது உரிமையை கோருகின்ற போது வாக்குறுதியை அளிக்கும் பெரும்பான்மை அரசியல் சக்திகள் அவர்களின் உணர்வுகளை உணர்ந்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான செயலகம் ஒன்றினை அமைப்பதிலேயே காலத்தினை கடத்தும் அரசு தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கின்றதா என்கின்ற கேள்வியையே எழுப்புகின்றது.

இந் நிலையில் சாகும் வரையிலான உண்ணாவிரதப்போராட்டத்தினை ஆரம்பித்துள்ள காணாமல் போனோரின் உறவினர்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் என்பதுடன் ஜல்லிக்கட்டு தமிழ் நாட்டில் நடத்தப்படவேண்டும் என்பதற்காக உணர்வுபூர்வமாக இளைஞர்கள் ஆதரவு வழங்கி போராட்டங்களை நடத்தியிருந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் இப் போராட்டத்திற்கும் இளைஞர்கள் அணிதிரண்டு தமது ஆதரவினை வழங்க வேண்டும்.

இந் நிலையில் காணாமல் போனோரின் உறவினர்களின் கோரிக்கைக்கு திர்வு கிடைக்கும் வரையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசுக்கு அழுத்தத்தினை பிரயோகிக்கும் என்பதனையும் உறுதிபடத்தெரிவிக்கின்றேன் என அவர் தனது அற்கையில் தெரிவித்துள்ளார்.

யாழில் தனிமையில் இருந்த கர்ப்பிணிப் பெண் வெட்டிக்கொலை : இருவர் கைது!!

 
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் தனிமையில் வீட்டில் இருந்த 27 வயதுடைய 7 மாதக் கர்ப்பிணிப் பெண்ணொருவரை, பெண் ஒருவர் உள்ளிட்ட இளைஞர்கள் மூவர் வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு பொது மக்கள் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளமையினால் ஊர்காவல்துறை பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஊர்காவற்துறை – சுருவில் பகுதியிலுள்ள வீடொன்றில் திருட்டுச் சம்பவத்திற்காக பெண் ஒருவர் உள்ளிட்ட மூன்று இளைஞர்கள் முச்சக்கர வண்டியில் சென்றுள்ளனர்.

இதன்போது, வீட்டில் தனிமையில் இருந்த ஒரு பிள்ளையின் தாயும் 7 மாதக் கர்ப்பிணியுமான 27 வயதுடைய நாநேந்திரன் கம்சிகா என்ற பெண்ணை தடியால் அடித்தும், வெட்டியும் கொலை செய்துள்ளனர்.

இதனையடுத்து, முச்சக்கர வண்டியில் குறித்தவர்கள் தப்பியோட முற்பட்ட போது, பொது மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இரு இளைஞர்கள் ஊர்காவல் துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அதேவேளை, பெண் ஒருவர் உள்ளிட்ட மற்றுமொரு இளைஞர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஊர்காவல் துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இருவரையும் தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி பொது மக்கள் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளதனால் அப்பகுதியில் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ஊர்காவற்துறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் பணியாற்றி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் வீதிச்சட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு!!

 
வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் இன்று (24.01.2017) வீதிச்சட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு சிவில் சமூக பொலிஸ் குழு மற்றும் போக்குவரத்து பொலிசாரின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

கல்லூரி அதிபர் திருமதி. கி.நந்தபாலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வானது வன்னி மாவட்டத்திற்கான பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் நெறிப்படுத்தலில் நடைபெற்று வருவதுடன் இம்மாத இறுதிக்குள் கணேசபுரம் மற்றும் மறவன்குளம் பாடசாலைகளில் வீதிச்சட்டங்கள் தொடர்பான மாணவர்களுக்கு விழிப்பூட்டும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

மாணவர்களுக்கான வீதிச்சட்டங்கள் தொடர்பான விளக்கங்களை பொலிஸ் அதிகாரி எஸ்.ஜெயபிரகாஸ் வழங்கியதுடன், நிகழ்வில் சிவில் சமூக பொலிஸ் குழுவின் அதிகாரி கே.புஸ்பகுமார, போக்குவரத்து பொலிஸ் அதிகாரி எ.அசோக் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

நீங்கள் உறங்கும் நிலையை வைத்து உங்கள் குணாதிசயங்களை தெரிந்துகொள்ளுங்கள்!!

ஒருவர் தூங்கும் நிலையை வைத்தே அவரின் குணாதிசயங்களை சொல்லிவிடலாம்.

தாயின் கருப்பையில் குழந்தை இருப்பது போன்று கை, கால்களை சுருக்கியபடி தூங்கும் பழக்கம் கொண்டவர்கள் மிகவும் சாந்தமாகவும், எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக இருப்பார்கள்.

இடதுபுறம் அல்லது வலதுபுறமாக கையை கீழே இறக்கி, ஒரு பக்கமாக தூங்கும் பழக்கம் கொண்டவர்கள், பிறரிடம் எளிதில் நட்பாக பழகும் தன்மை கொண்டவராக இருப்பார்கள். ஆனால் இவர்கள் அதிகம் ஏமாறுபவர்களாக இருப்பார்கள்.

இடதுபுறம் அல்லது வலதுபுறம் திரும்பி, கையை முகத்தின் அருகில் வைத்துக் கொண்டு தூங்கும் பழக்கம் உடையவர்கள், பிறரின் மீது அதிக குறை கூறுபவர்களாக இருப்பார்கள். மேலும் இவர்களுக்கு தொழில் குறித்த சிந்தனைகள் அதிகமாக இருக்கும்.

தனது கை மற்றும் கால்களை நீட்டி நேராக நிமிர்ந்து தூங்குபவர்கள், நாவடக்கம் தன்மை கொண்ட நல்ல குணம் கொண்டவராக இருப்பார்கள்.

கை, கால்களை தாறுமாறாக நீட்டித் தூங்கும் பழக்கம் கொண்டவர்கள், பெருந்தன்மைகள் மிக்க பணிவான தன்மை பெற்றவர்களாக இருப்பார்கள். மேலும் இவர்கள் பெரியவர்களுக்கு மதிப்பு கொடுத்து நடந்துக் கொள்வார்கள்.

உருளைக்கிழங்கு உண்பதால் புற்றுநோய் வருமா?

உருளைக்கிழங்கு, பாண் மற்றும் உணவு வகைகளை உயர் வெப்பநிலையில் சூடாக்கிஉண்பதால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பாண் போன்ற உணவு வகைகளை வெப்ப உபகரணங்கள் கொண்டு பிரவுன் நிறம் வரும் வரைசூடாக்கி உண்பதும் பொருத்தமானது அல்ல என குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு சில உணவு வகைகளை சூடாக்கி உண்ண வேண்டும் என்றால் ஒரு முறை மாத்திரம்அதாவது தங்க மஞ்சள்(golden yellow) நிறம் வரும் வரை மாத்திரம் சூடாக்கிஉண்ணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவை அதிக வெப்பநிலையில் சூடாக்குவதன் மூலம் இரசாயன தாக்கத்திற்கு உள்ளாகிபுற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உண்டு என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

எனவே,தினசரி உணவு வேளைகளில் இயற்கை உணவுகள் பழங்கள் மற்றும் காய்கறிகளை தெரிவுசெய்து உண்ண வேண்டும் என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

புத்தம் புதிய வடிவமைப்புடன் LinkedIn இணையத்தளம்!!

வேலைவாய்ப்பினை அடிப்படையாகக் கொண்டு 2002ம் ஆண்டு உருவாக்கப்பட்ட மிகப்பெரிய சமூக வலைத்தளமே LinkedIn ஆகும்.

கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்ட இயங்கும் இவ் வலைத்தளத்தில் இன்று பல மில்லியன் கணக்கானவர்கள் கணக்கினை வைத்துள்ளனர்.

இவர்கள் மொபைல் சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய வகையில் அப்பிளிக்கேஷன்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இப்படியிருக்கையில் டெக்ஸ்டொப் கணினிகளில் பயன்படுத்தப்படும் இணையத்தளத்தின் பக்கத்தினை புதிய வடிவமைப்பில் மெருகூட்டி அறிமுகம் செய்துள்ளதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் இம் மாற்றம் தற்போது அமெரிக்காவில் உள்ள பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதுடன், உலகளாவிய ரீதியில் அடுத்த சில வாரங்களில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இம் மாற்றத்தில் புதிய தொழில்நுட்பங்கள் உட்பட, கவர்ச்சிகரமான வடிவமைப்பு, இலகுவாக பயன்படுத்தக்கூடிய தன்மை என்பன புகுத்தப்பட்டுள்ளது.