காதலியின் கைகளை பிடித்துக் கொண்டே உயிர் விட்ட காதலன் : நெஞ்சை உருக்கும் சம்பவம்!!

இத்தாலியில் கடுமையான பனிச்சரிவில் புதையுண்ட ஹொட்டலில் சிக்கிய இத்தாலிய இளைஞர் ஒருவர் தமது காதலியின் கரம் பற்றிக்கொண்டே உயிர் விட்ட சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலியரான ஸ்டெஃபானோ சம்பவத்தன்று குறித்த ஹொட்டலில் தமது காதலியுடன் தங்கியிருந்துள்ளார்.

அப்பகுதியில் ஏற்பட்ட கடுமையான பனிச்சரிவை அடுத்து குறித்த ஹொட்டலும் பூமியில் புதைந்துள்ளது. இதில் அந்த ஹொட்டலில் அப்போது தங்கியிருந்த 30 பேர் இடிபாடுகளில் சிக்கினர். அதில் 8 பேர் மீட்பு குழுவினரால் பத்திரமாக மீட்கபட்டனர்.

மீட்கப்பட்டவர்களில் ஸ்டெஃபானோவும் ஒருவர். 28 வயதான ஸ்டெஃபானோவுக்கு விபத்தின் போது தூண் ஒன்று இவர் மீது சரிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் குற்றுயிரான அவரை மீட்டு இடிபாடுகளில் இருந்து வெளியே எடுத்துள்ளனர். ஆனால் சுயநினைவை இழந்த நிலையில் ஸ்டெஃபானோ தற்போது உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது.

காதலியின் அருகாமையிலேயே காதலன் உயிரழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பன்னிச்சரிவு சம்பவத்தில் புதையுண்ட ஹொட்டலில் இருந்து இதுவரை 6 பேரின் உடல்களை மீட்டுள்ளனர். மேலும் 23 பேர் மாயமானதாக கூறப்படுகிறது.

மாயமானவர்கள் பெரும்பாலும் உயிரிழந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. இதனிடையே புதையுண்ட ஹொட்டல் அறையில் இருந்து உயிருடன் 3 நாய் குட்டிகளை மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர்.

நடந்துக்கொண்டே கைப்பேசியை பயன்படுத்தினால் என்ன நடக்கும் : இந்த வீடியோவைப் பாருங்கள்!!

சீனாவில் இளம்பெண் ஒருவர் நடந்துக்கொண்டு செல்போனை பயன்படுத்தியபோது நிகழ்ந்த விபத்து வீடியோவில் பதிவாகி தற்போது வைரலாக பரவி வருகிறது.

சீனா தலைநகரான பெய்ஜிங்கில் சில தினங்களுக்கு முன்னர் இளம்பெண் ஒருவர் ஷொப்பிங் சென்றுள்ளார்.

வணிக வளாகம் ஒன்றில் பொருட்களை வாங்கி ஒரு கையில் வைத்துக்கொண்டு மறுக்கையில் செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பியவாறு நடந்துச் சென்றுள்ளார்.

பெண் நடந்தபோது அவருக்கு முன்னால் நீரூற்று ஒன்று இருந்ததை அவர் கவனிக்கவில்லை. தலை குனிந்தவாறு சென்ற அவர் கண் இமைக்கும் நேரத்தில் நீரூற்றில் விழுந்துள்ளார்.

நடந்த தவறை உணர்ந்த அப்பெண் வேகமாக எழுந்து வெளியே சென்றுள்ளார். இச்சம்பவம் வணிக வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ளது.

நீரூற்று இல்லாமல் சாலையில் இவ்வாறு நடந்துச் சென்றுருந்தால் அவரது உயிருக்கு ஆபத்தாக முடிந்திருக்கும். சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

முகநூல் ஊடாக இலங்கை பெண்ணிடம் பாரிய மோசடி செய்த நைஜீரியப் பிரஜை!!

முகநூல் ஊடாக அறிமுகமான பெண் ஒருவரின் எட்டரை லட்சம் ரூபா பணத்தை மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நைஜீரிய பிரஜை ஒருவரை விளக்க மறியலில் வைக்குமாறு கம்பஹா நீதவான் டி.ஏ.ருவான் பத்திரண உத்தரவிட்டுள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3ம் திகதி வரையில் குறித்த நைஜீரிய பிரஜையை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

முகநூல் ஊடாக நட்பை ஏற்படுத்திக் கொண்டு நைஜீரியாவிலிருந்து நத்தார் பண்டிகைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பரிசுப் பொருட்களை பெற்றுக் கொள்ள வரி செலுத்த வேண்டுமெனக் கூறி> குறித்த பெண்ணிடம் எட்டரை லட்சம் ரூபா பணம் பெற்றுக் கொண்டுள்ளார்.

குறித்த நைஜீரிய பிரஜையின் இலங்கையில் காணப்படும் மூன்று வங்கிக் கிளைகளுக்கு அந்தப் பெண் பணத்தை வைப்புச் செய்துள்ளார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள நைஜீரிய பிரஜையிடம் வாக்கு மூலமொன்றை பெற்றுக்கொள்ள வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவரை மொழி பெயர்ப்பாளராக பயன்படுத்திக் கொள்ள புலனாய்வுப் பிரிவினர் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.

ஒரு வார காலத்திற்குள் வாக்கு மூலத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பியோஸ் இந்திராஸி என்ற என்ற சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த காரணத்திற்காக கொள்ளுப்பிட்டி பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

கம்ஹா டிக்மன்ஸ் வீதியில் அமைந்துள்ள 29 வயதுடைய திருமணமான பெண் ஒருவரிடம் இவ்வாறு பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

865000 ரூபா பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வரலாற்றில் முஸ்லிம் சிறுவன் ஒருவர் முதன்முறையாக பௌத்த பிக்குவானார்!!

இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக முஸ்லிம் சிறுவன் ஒருவர் பௌத்த பிக்குவாக மாறியுள்ளார்.

இந்த நிகழ்வு, திம்புலாகல வன மடாலயத்தில் இடம்பெற்றுள்ளதாக மடாலயத்தின் தலைமைக்குரு தெரிவித்துள்ளார்.

குறித்த சிறுவனின் தாயார் வெளிநாடு சென்றுள்ளநிலையில் தந்தையாரான ஹமீட் இஸ்மாயில் என்பவர் சிறுவனை மடாலயத்தில் சேர்த்ததாக தலைமை பௌத்த பிக்கு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மடாலயத்தில் சிங்கள, தமிழ் மற்றும் வேடுவ இனத்தை சேர்ந்தவர்கள் பௌத்த மதத்தை தழுவியுள்ளனர்.

உலகின் அழகான ரயில் படங்கள் பட்டியலில் இணைந்த இலங்கை!!

 
உலகின் அழகான ரயில் புகைப்படங்களுக்குள் இலங்கை ரயில் வீதி புகைப்படமும் இணைக்கப்பட்டுள்ளது.

தேமோதரை, பாலத்தின் ஊடாக புகையிரம் ஒன்று பயணித்த போது எடுக்கப்பட்ட புகைப்படமே குறித்த பட்டியலில் இணைந்துள்ளது.

குறித்த புகைப்படம் ஜுலியன் பொபொவ் என்ற புகைப்பட கலைஞரினால் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய குறித்த புகைப்பட பட்டியலுக்குள் இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

அந்­த­ரங்க விட­யங்­களை பேஸ்புக் நண்­பி­­க­ளிடம் பகிர்ந்து கொண்ட மனைவி கண­வனால் கொலை!!

பேஸ்புக் நண்­பி­களிடம் அந்தரங்க தகவல்களை பகிர்ந்த மனை­வியை ஆத்­­தி­ரத்தில் கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்­ப­வ­மொன்று தமி­ழ­­கத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் ஹடப்சர் மாஞ்சரிபார்ம் வீதி­யி­லுள்­ள அடுக்குமாடி கட்டடத்தில் வசித்து வந்தவர் ராகேஷ்(வயது35). இவரது மனைவி சோனாலி(31). இந்த தம்பதியின் சொந்த ஊர் நாசிக் மாவட்டம் ஆகும். திருமணத்திற்கு பின்னர் இரு­வ­ரும் புனேயில் வசித்து வந்தனர்.

ராகேஷ் புனேயிலுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறி­யி­ய­லா­ள­ராக பணியாற்றி வந்தார். திருமணம் நடந்து 3 ஆண்டுகள் ஆனபோதும் ராகேஷ், சோனாலி தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. எனவே அவர்கள் இதற்காக வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்தநிலையில் சோனாலியின் தாய் கடந்த புதன்கிழமை மகளின் செல் போனுக்கு தொடர்பு கொள்ள முயன்றுள்­ளார். ஆனால் சோனாலி அழைப்பை எடுத்து பேசவில்லை. மருமகன் ராகேஸும் செல்போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர், தனது மகனை புனேயிலுள்ள சோனாலியின் வீட்டிற்கு அனுப்பி வைத்­துள்ளார்.

இந்தநிலையில் அவர் புனே சென்று பார்த்தபோது, சோனாலியின் வீடு உட் பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. வெகு நேரமாக தட்டிப்பார்த்தும் கதவு திறக் கப்படவில்லை.

இதனால் சந்­தே­க­ம­டைந்த சோனா­லியின் சகோ­தரன் பொலிஸ் நிலை­யத்­துக்கு தகவல் கொடுத்­துள்ளார். பொலி­ஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்­று கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது வீட்டின் படுக்கை அறையில் சோனாலி சட­ல­மாக கிடந்தார். மேலும் ராகேஷ் மின்விசிறியில் தூக்கில் சட­ல­மாக தொங்­கி­யுள்ளார்.

இதைத்தொடர்ந்து பொலிஸார் இரு­வரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள வைத்­தி­ய­சா­லைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, பொலி­ஸார் ராகேஸின் சட்டை பையிலிருந்து கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்ததாவது, “எனது மனைவி எப்போது பார்த்தாலும் சமூக வலைதளங்களில் தோழிகளிடம் பேசிக் கொண்டு இருப்பார்.

இந்தநிலையில் அவர் எங்களுக்கு குழந்தை பிறக்காததை பற்றியும், எங்கள் அந்தரங்கங்களை பற்றியும் பேஸ்புக் தோழிகளிடம் பகிர்ந்து கொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.

எனவே ஆத்திரத்தில் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, நானும் தற்கொலை செய்து கொள்கிறேன்.” என அந்த கடிதத்தில் எழுதியுள் ளார். இந்த சம்பவம் குறித்து பொலி­ஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாம்புகளை விட குதிரைகளே ஆபத்தானவை : ஆய்வில் தகவல்!!

பாம்பு கடித்து இறப்பவர்களை விட, குதிரை தாக்கிக் கொல்லப்படுபவர்களே அதிகம் என அவுஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ரொனெல்லே வெல்டன், தொடர்ச்சியாக 13 ஆண்டுகள் வைத்தியசாலையில் பதிவான உயிரிழப்பு சம்பவங்களை ஆராய்ந்து குறித்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

குறித்த ஆய்வறிக்கையின் பிரகாரம் 13 ஆண்டுகளில் குதிரைகளால் 74 பேர் உயிரிழந்துள்ளனர். விஷப் பூச்சி கடிக்குள்ளாகி 27 பேரும், பாம்புகளினால் 27 பேரும் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவுஸ்திரேலியாவில் விஷப் பூச்சிகளாலும் பாம்புகளாலும் அதிகமானோர் உயிரிழக்கிறார்கள் என கூறப்பட்ட நிலையில் குறித்த ஆய்வு முடிவுகள் அதிர்ச்சி தருவதாக அமைந்துள்ளதாக ரொனெல்லே வெல்டன் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் சூறாவளியில் சிக்கி 18 பேர் பலி!!

அமெரிக்காவின் தெற்கு பிராந்தியங்களில் ஏற்பட்ட பாரிய சூறாவளியில் சிக்கி இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜோர்ஜியா, அலபாமா, புளோரிடா மற்றும் மிசிசிப்பி உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே கடும் மழை பெய்துள்ளது.

இச்சூழலில் குறித்த மாநிலங்களில் கடுமையான காற்று வீசியுள்ளதோடு, நேற்றைய தினம் சூறாவளியாக மாறி குடியிருப்பு பகுதிகளை சேதப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் குறித்த சூறாவளியில் சிக்கி இது வரை சுமார் 18 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பிராந்தியங்களுக்கு விடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை அறிவிப்பையடுத்து, வெளியேறிய குடியிருப்பாளர்களுக்கு தற்காலிக தங்குமிட முகாம்கள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், பாதிப்படைந்த இடங்களில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகதிகள் முகாம் மீது குண்டு வீச்சு : பலி எண்ணிக்கை 236!!

நைஜீரியாவில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். போகோ ஹாரம் தீவிரவாதிகளுக்கு எதிராக நைஜீரியா ராணுவம் பல்வேறு கட்ட பதில் தாக்குதல்களை நடத்தி வருகின்றது

இந்தநிலையில், நைஜீரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள ரான் பகுதியில் அகதிகள் முகாம் மீது கடந்த ஜனவரி 17ம் திகதி அந்த நாட்டு ராணுவ விமானப் படையை சேர்ந்த ஜெட் விமானம் தவறுதலாக குண்டு வீச்சை நடத்தியது.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள் உயிரிழந்ததாக முதலில் அறிவிக்கப்பட்டது. பலர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்தனர்.

தாக்குதலுக்கு உள்ளானவர்களில் முகாமில் சேவை செய்து கொண்டிருந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவர் நல உதவியாளர்களும் பலர் அடங்குவர்.

இந்த நிலையில், அகதிகள் முகாம் மீது தவறுதலாக நடத்தப்பட்ட இந்த குண்டு வீச்சு சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 236-ஆக உயர்ந்துள்ளது.

இதில் சம்பவம் நடைபெற்ற ரான் முகாமிலேயே 234 பேரும் உயிரிழந்தனர். மீதமுள்ள இரண்டு பேர் அருகில் உள்ள மாய்துகுரி மருத்துவ முகாமில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

கடற்கன்னிகளாக வாழ்க்கை நடத்தும் யுவதிகளும் இளைஞரும்!!

அமெரிக்காவின் வோஷிங்டன் மாநிலத்தில், யுவதிகள் மூவரும் இளைஞர் ஒருவர் கடற்கன்னிகளாக வேடமணிந்து தொழில்புரிகின்றனர்.

கெய்ட்லின் நீல்சன், டெசி லமோரியா, மோர்க்ன் கால்ட்வெல் ஆகிய யுவதிகளும் எட் பிரவுண் எனும் இளைஞருமே இந்நால்வரும் ஆவர்.

வோஷிங்டன் மாநிலத்தின் தலைநகர் சியாட்டிலில் இவர்கள் கடற்கன்னிகளாக நீந்தி பார்வையாளர்களை மகிழ்விக்கின்றனர்.

கெய்ட்லின் நீல்சன், உயிரியில் பட்டதாரி ஆவார். தான் செய்து கொண்டிருந்த வேலையிலிருந்து 2015 ஆம் ஆண்டு ராஜினாமா செய்துவிட்டு கடற்கன்னியாக தொழில் புரிய ஆரம்பித்தார். தற்போது அவர் சியனியா கடற்கன்னி என அழைக்கப்படுகிறார்.

இவர் பிறக்கும் போது ஒரு காலில் குறைபாடு இருந்தது. தற்போது அவர் காலால் நடப்பதைவிட கடற்கன்னி வாலைப் பொருத்திக் கொண்டு நீந்துவதில் மகிழ்ச்சியடைவதாகக் கூறுகிறார்.

32 வயதான கெய்லின், ஏரிகளில் நீந்தி புகைப்படங்கள், வீடியோக்களுக்கு போஸ் கொடுக்கிறார். அத்துடன் கடற்கன்னி வால்களை தயாரிப்பதற்கான பயிற்சி வகுப்புகளையும் நடத்துகிறார்.

இனி நடிக்கவே மாட்டேன் நடிகை திடீர் முடிவு!!

தனுஷ் நடித்த திருடா திருடி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சாயா சிங். அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடித்து வந்தவர் கன்னடம், போஜ்புரி மொழிப்படங்களிலும் நடித்தார்.

பின் சினிமா வாய்ப்புகள் இல்லாமல் போக கன்னடம், தெலுங்கு சிரீயல்களில் சின்னத்திரையில் நடித்து வந்தார். தமிழில் நாகம்மா என்னும் தொடரில் நடித்து வந்தார்.

பின் இது கதிர்வேலன் காதல் என்னும் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் ரீ எண்ட்ரீ கொடுத்தார். ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்த இவர் இப்போது சின்னத்திரையே வேண்டாம் என முடிவெடுத்துள்ளாராம்.

இப்போது முழுக்க முழுக்க தமிழ் சினிமாவில் மட்டும் நடிப்பதில் முழுகவனம் செலுத்துவேன். மேலும் இனி நான் படமும் எடுப்பேன், சீரியலிலும் எடுப்பேன் என அவர் கூறியுள்ளார்.

கைத்தொலைபேசி வாங்கச்சென்ற இளைஞரை 3 தினங்களாக காணவில்லை!!

கைத்தொலைபேசி வாங்குவதற்காகச் சென்ற 17 வயது இளைஞனை கடந்த மூன்று நாட்களாக காணவில்லை என கல்முனைப் பொலிஸாரிடம் முறைப்பாடொன்று பதிவாகியுள்ளது.

கல்முனை முதலாம் பிரிவு கொஸ்தாபல் வீதியைச் சேர்ந்த ஜெயந்திரன் டிலான் எனும் இளைஞனே காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு பதிவாகியுள்ளது.

கடந்த சனிக்கிழமை காலை வீட்டிலிருந்து சென்றவர் இன்னும் வீடு திரும்பவில்லையெனவும், உறவினர் வீடுகளில் தேடியபோதும் இன்னும் கிடைக்கவில்லை எனவும் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞன் க.பொ.த சா.த பரீட்சைக்குத் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கைத்தொலைபேசி வாங்க வேண்டும் என்ற விடாபிடியுடன், கைச்செயினை விற்றாவது கைத்தொலைபேசி வாங்கவேண்டும் என குறித்த இளைஞர் நண்பர்களிடம் தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது.

பொலிசே வாகனங்களுக்கு தீ வைத்து எரித்து நாடகமாடிய கொடூரம் : வெளியான அதிர வைக்கும் காட்சிகள்!!

சென்னையில் இடம்பெற்ற வன்முறையின் போது பொலிஸ் அதிகாரி ஒருவர் ஆட்டோவிற்கு தீ வைக்கும் சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர வைத்துள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரீனாவில் அமைதியாக போராடி வந்த போராட்டகாரர்களை இன்று பொலிசார் தடியடி நடத்தி களைக்க முயற்சி செய்தனர்.

மெரீனாவிற்குள் வாகனம் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதைகண்டித்து சென்னையில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மெரீனாவிற்கு அருகே உள்ள பகுதிகளில் வன்முறை வெடித்தது.

இதன்போது, வாகனங்கள் பல தீ வைத்து எரிக்கப்பட்டது. மக்கள் தான் வாகனங்களுக்கு தீ வைத்து எரித்ததாக குற்றம்ச்சாட்டப்பட்டு வரும் நிலையில் தற்போது பரபரப்பு வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

அதில், பொலிஸ் அதிகாரி ஒருவர் ஆட்டோ ஒன்றிற்கு தீ வைக்கும் அதிர வைக்கும் காட்சி பதிவாகியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள காட்சி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

26 வருடங்களின் பின் வீடு திரும்பிய பெண் : மீண்டு வருவதற்கு பணத்தை எப்படி சேர்த்தார் தெரியுமா?

இலங்கையில் நிலவிய போர்ச் சூழலில் காணாமல்போன பெண் சுமார் 26 வருடங்களின் பின் திரும்பி வந்துள்ள நிலையில் அவர் குறித்து மேலும் ஒரு விடயம் தெரியவந்துள்ளது.

திருமணமாகி மூன்றே மாதங்களில் கணவரை இழந்து வீட்டில் தனித்து இருந்த நிலையில் நாவலப்பிட்டியிலுள்ள கணவரின் உறவினர் வீட்டுக்கு சென்ற பெண்ணை கொழும்புக்கு அழைத்துச் சென்று வீடொன்றில் ஒப்படைத்தனர். அப்போது குறித்த பெண்ணுக்கு 18 வயது மாத்திரமே.

கொழும்பில் குறித்த பெண்ணை வீட்டுச்சிறையில் வைத்துள்ளார்கள். இது குறித்து கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் விரிவான செய்திகளை வழங்கியிருந்தோம். இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு தகவலை குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

இவர் அந்த வீட்டில் சிறை வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் அங்குள்ள ஆண்களின் உடைகளை கழுவும் சந்தர்ப்பங்களில் அதற்குள் தவறி விடப்படும் பணத்தை இரகசியமாக சேமித்து வைத்துள்ளார்.

அவ்வாறு சேமித்து வைத்த பணத்தில்தான் குறித்த பெண் தப்பி வந்து தனது செலவுகளுக்காகவும், வீட்டிற்கு செல்வதற்கான பயண செலவையும் கவனித்துள்ளார்.

43 வயதாகும் பத்மகுமாரி என்பவரே இவ்வாறு 26 வருடங்களின் பின் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து திரும்பி வந்துள்ளார்.

பத்மா குமாரி காணாமல் போயிருந்த காலப்பகுதியில் இவரின் உறவினர்களால் இவருக்கு ஆத்ம சாந்தி கிரியைகள் செய்யப்பட்டுள்ளதுடன் கங்கஹியல கோரல பிரதேசசெயலகத்தின் ஊடாக காணாமல் போனோருக்கான நிவாரணமும் பெறப்பட்டுள்ளதோடு நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

லசித் மாலிங்கவுக்கு தனி விமானம் ஒன்றை அனுப்பி வைத்த அம்பானி!!

 
இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவுக்கு மும்பாய் இந்தியன்ஸ் அணியின் உரிமையாளரான கோடீஸ்வர வர்த்தகர் முக்கேஷ் அம்பானி விசேட விமானம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

மாலிங்கவை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்காக அம்பானி இந்த விசேட விமானத்தை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.பீ.எல் போட்டிக்கு லசித் மாலிங்கவை இணைத்துக் கொள்வதற்காக முக்கேஷ் இந்த விமானத்தை மாலிங்கவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மும்பாய் இந்தியன்ஸ் அணிக்கு வீரர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். அவ்வணியில் மாலிங்க இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருடன் என நினைத்து மனைவியை சுட்டு கொன்ற கணவன்!!

வீட்டிற்குள் திருடன் வந்துள்ளதாக கருதி வெளியிலிருந்து வந்த தனது மனைவியை, கணவன் சுட்டு கொன்ற சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்திலுள்ள கோல்ட்ஸ்போரோ நகரிலுள்ள பில்லி வில்லியம்ஸ் என்பவர் அவரது மனைவி ஜினா வில்லியம்ஸ் என்பவரை சுற்று கொண்டுள்ளார்.

ஜினா வில்லியம்ஸ் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த நிலையில், பணி முடிந்து இரவில் வீடு சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டின் கதவு திறக்கும் சத்தம் கேட்கவே, கண் விழித்த பில்லி வில்லியம்ஸ் வீட்டிற்குள் திருடன் வந்துள்ளதாக கருதி மனைவியை சுட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நடந்த போது அவர்களின் இரு குழந்தைகளும் வீட்டில் உறக்கத்தில் இருந்துள்ளனர். மேலும் போலீசார் கொலை தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டதுடன் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட துப்பாக்கியையும் கைப்பற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.