வவுனியா மாவட்ட செயலகத்தில் பொங்கல் விழா!!

 
வவுனியா மாவட்டச் செயலகத்தில் இன்று (23.01.2017) காலை 9.00 மணியளவில் பொங்கல் விழா அரசாங்க அதிபர் எம்.பி.றோஹன புஸ்பகுமார தலைமையில் இடம்பெற்றது.

இவ்வருடாந்த பொங்கல் விழாவில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. த.திரேஸ்குமார், மாவட்ட செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் கொட்டும் மழையில் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கின்றது!!

 
இன்று (23.01.2017) பிற்பகல் வேளையில் தொடரும் மழையினையும் பொருட்படுத்தாமல் காணாமற்போனோரின் உறவினர்கள் தொடர்ந்தும் தமது உண்ணாவிரதத்தினை தொடர்ந்து பிரத்தியோகமாக அமைக்கப்பட்ட கொட்டகையில் மேற்கொண்டு வருகின்றனர்.

வுனியாவில் இன்று (23.01.2017) காலை 9.30மணியளவில் கையளிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு காணாமற்போன உறவினர்கள் ஒன்றிணைந்து தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

இன்று (23.01.2017) காலை வவுனியா கந்தசாமி ஆலயத்தில் ஒன்றிணைந்த காணாமற்போன உறவுகள் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர், பிரதான வீதிவழியாக ஊர்வலமாகச் சென்று, மணிக்கூட்டுக் கோபுரம் வழியாக தபால் நிலையத்திற்கு அருகில் தமது உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ் உண்ணாவிரதப் போராட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வவுனியா மாவட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு உறுப்பினர்கள் தமது ஆதரவினை வழங்கியுள்ளனர்.

வவுனியா உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனத்தில் புதிய கல்வியாண்டிற்கான விண்ணப்பம் கோரல்!!

உயர் தொழில்நுட்பவியல் நிறுவகங்களுக்கு(SLIATE) மாணவர்களை அனுமதித்தல்- கல்வி ஆண்டு 2017

விண்ணப்ப முடிவுத் திகதி : 2017.02.28

2016 ம் ஆண்டில் அல்லது அதற்கு முன்னர் க. பொ. த. (உ. த.) பரீட்சையை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்துள்ளோரிடமிருந்து இலங்கை தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகத்தால் நடாத்தப்படுகின்ற உயர் தேசிய டிப்ளோமாவிற்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

விண்ணப்பிக்கும் முறை.- கீழே தரப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப்படிவத்திற்கு அமைய தயாரிக்கப்பட்டு முறையாக ஆங்கிலத்தில் பூர்த்திசெய்யப்பட்டுள்ள விண்ணப்பங்கள், கணக்கு இல. 025-2-001-1-3397613 மக்கள் வங்கி, ஹைட் பார்க் கிளை (கொழும்பு) அல்லது வேறேதேனும் மக்கள் வங்கிக் கிளையில் ரூபா 500 (ஐந்நூறு)ஐ பற்று வைத்து பெற்றுக்கொள்ளப்பட்ட பற்றுச்சீட்டுடன் பதிவுத்தபாலில்,

கல்வி இணைப்பாளர்,
உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனம்,
A9 வீதி, வேப்பங்குளம்,
ஓமந்தை,
வவுனியா எனும் முகவரிக்கு நேரடியாக அனுப்பப்படுதல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் பாடநெறியை கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் குறிப்பிடுதல் வேணடும். ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட நிறுவகங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரிகள் ஒவ்வொரு விண்ணப்பத்துடனும் ரூபா 500 பெறுமதியான தனித்தனி பற்றுச்சீட்டை இணைத்து சமர்ப்பித்தல் வேண்டும்.

மேலே குறிப்பிடப்பட்ட கணக்கு இலக்கத்தை தவிர்ந்த வேறு கணக்கு இலக்கங்களுக்கு பற்று வைக்கப்பட்டுள்ள விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

விண்ணப்ப முடிவுத் திகதியான 2017.02.28 ஆந் திகதிக்குப் பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விண்ணப்பதாரிகள் கீழே குறிப்பிட்டுள்ள பாடநெறிப் பட்டியலிலிருந்து தமது தகைமைக்கேற்றவாறு பாடநெறிகளைத் தெரிவுசெய்தல் வேண்டும்.

முழுமையான விபரங்களை பார்வையிட இங்கு அழுத்துங்கள்

விண்ணப்பப்படிவத்தை தரவிறக்கம் செய்ய இங்கு அழுத்துங்கள்

 

தகவல்
பெ.இளங்குமரன்
கல்வி இணைப்பாளர்
உயர் தொழில்நுட்ப கல்விநிறுவனம்.

மேலதிக தொடர்புகளுக்கு 0242052733

வன்முறையாக மாறிய ஜல்லிக்கட்டு போராட்டம், காவல்நிலையம், வாகனங்கள் தீவைப்பு!!

 

சென்னையில் திருவல்லிக்கேணி காவல்நிலையத்திற்கு மர்மநபர்கள் தீவைத்துள்ளனர். இதில் 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து சாம்பலாகின.

ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி கடந்த ஒரு வாரகாலமாக அமைதியாக நடைபெற்ற போராட்டம் இன்று சென்னை உள்ளிட்ட தமிழகம் எங்கும் வன்முறையாக மாறி விட்டது. இதற்கு முக்கியக் காரணம் காவல்துறையினரின் திடீர் நடவடிக்கை.

மெரீனா கடற்கரை சாலைக்கு வரும் அனைத்து பகுதிகளும் அடைக்கப்பட்டன. இதனையடுத்து பேரணியாக சென்றவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. மாணவர்கள் போர்வையில் புகுந்த விஷமிகள் சிலர் காவல்துறையினர் மீது சிலர் கற்களை வீசவே, இதில் சில காவலர்கள் காயமடைந்தனர்.

இதனையடுத்து தடியடி நடத்தியும், கண்ணீர் குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை கலைத்தனர். இந்த நிலையில் விவேகானந்தர் இல்லத்திற்கு பின்புறம் இருந்த ஐஸ்ஹவுஸ் காவல்நிலையத்திற்கு மர்மநபர்கள் சிலர் தீ வைத்தனர்.

இதில் தீ காவல் நிலையத்திற்குள் மளமளவென பரவியது. 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. கண்ணாடியை உடைத்துக்கொண்டு சென்ற தீயணைப்பு வீரர்கள், காவல்நிலையத்திற்குள் இருந்த இரண்டு பெண் காவலர்களை மீட்டனர். இதனால் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது.

இதனையடுத்து போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. மீண்டும் நடத்தினர். தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அமைதியாக நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் சில தேவையில்லாத விஷமிகளால் வன்முறையாக மாறியுள்ளது.

வவுனியாவில் உண்ணாவிரதம் இருப்பவர்களை வெளியேற்ற பொலிசார் மேற்கொண்ட நடவடிக்கை தோல்வி!!

 
வவுனியா தபால் நிலையத்திற்கு அருகில் இன்று (23.01.2017) காலை உண்ணதவிரதம் மேற்கொண்டு வரும் காணாமற்போன உறவுகளை அவ்விடத்திற்கு வந்த வவுனியா பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி நடைபாதையில் அமர்ந்து பொதுமக்களுக்கு. இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்று தெரிவித்ததுடன் அவ்விடத்தில் உண்ணதவிரதம் இருப்பவர்களால் போடப்பட்ட கொட்டகையையும் அகற்றுமாறும் அல்லது நகரசபை செயலாளரிடத்தில் அனுமதி பெறுமாறு அறிவுறுத்தப்பட்டதை அதையடுத்து அப்பகுதிக்குச் சென்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் பொலிசார்ருடன் கலந்துரையாடியும் பொலிசார் அனுமதியளிக்கவில்லை.

பின்பு நகரசபை செயலாளரை சம்பவ இடத்திற்கு அழைத்து பொலிசாருடன் கலந்தரையாடப்பட்டதுடன் நாடாளுமன்ற உறுப்பினர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருவபர்களினால் இடையூறு ஏற்பட்டால் தான் பொறுப்பேற்பதாகவும் பொலிசாருக்கு வாக்குறுதியளிக்கப்பட்டது.

வவுனியாவில் காணமற்போனோரின் உறவினர்களின் சாகும்வரை உண்ணாவிரதம் ஆரம்பம்!!

 
வவுனியாவில் இன்று (23.01.2017) காலை 9.30மணியளவில் கையளிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு காணாமற்போன உறவினர்கள் ஒன்றிணைந்து தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

இன்று (23.01.2017) காலை வவுனியா கந்தசாமி ஆலயத்தில் ஒன்றிணைந்த காணாமற்போன உறவுகள் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர், பிரதான வீதிவழியாக ஊர்வலமாகச் சென்று, மணிக்கூட்டுக் கோபுரம் வழியாக தபால் நிலையத்திற்கு அருகில் தமது உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ் உண்ணாவிரதப் போராட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வவுனியா மாவட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு உறுப்பினர்கள் தமது ஆதரவினை வழங்கியுள்ளனர்.

வவுனியா சுந்தரபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி!(படங்கள்)

வவுனியா சுந்தரபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின்   வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி கடந்த  19.01.2017 (வியாழக்கிழமை ) பாடசாலையின் அதிபர் திரு செ.யேசுநேசன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

 

 

 

 

இளம் பெண்ணுக்கு நேரலையில் பாலியல் துன்புறுத்தல் : பொலிசார் எடுத்த துணிச்சல் முடிவு!!

சுவீடனில் இளம் பெண் ஒருவரை பேஸ் புக் நேரலையில் மூன்று மணி நேரம் தொடர்ந்து பலாத்காரம் செய்த ஆண்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சுவீடன் நாட்டின் Uppsala நகரத்தில் பொதுமக்கள் தங்கும் அப்பார்ட்மெண்டில் இளம்பெண் ஒருவரை மூன்று பேர் கொண்ட கும்பல் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல்கள் கொடுத்துள்ளனர். இது பேஸ் புக் நேரலையில் தொடர்ந்து வந்துள்ளது.

இந்த நேரலையை ஏராளமானோர் கண்டுள்ளனர். ஆனால் சிலர் இது ஒரு நாடகம் என்றும் நம்மை ஏமாற்றுவதற்காகவே இது போன்று செய்கிறார்கள் என கூறியுள்ளனர். ஆனால் நேரம் செல்லச் செல்ல தொடர்ந்து நடந்ததால் பலருக்கும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனால் Josefine Lundgren (21) என்ற இளம் பெண் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இந்த நேரலையை பார்த்த பொலிசார். அந்த பெண் பாதிப்புக்குள்ளாக இருக்கும் இடத்தை பேஸ் புக் நேரலையின் போது அதில் உள்ள மேப்பில் கண்டுள்ளனர்.

அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார் அப்பெண்ணை காப்பாற்றி இந்த நேரலையையும் நிறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக பொலிசார் மூவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நேரலையை பொலிசார் நிறுத்தி அந்த மூவரையும் கைது செய்த பின்னரே இது ஒரு உண்மை சம்பவம் என நேரலையை கண்ட பலரும் நம்பியுள்ளனர்.

ஆபாசப் படத்தில் நடித்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் : அதிர்ச்சியில் மக்கள்!!

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் கடந்த 20ம் திகதி பதவி ஏற்றுக் கொண்டார்.

இவர் அமெரிக்காவின் ஜனாதியாக தேர்தலில் வெற்றி பெற்ற போது பொதுமக்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் டிரம்ப் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் வைத்து போராட்டங்கள் வெடித்தன.

அண்மையில் ஜனாதிபதியாக பதவி ஏற்கும் நாளில் அமெரிக்க மக்கள் பலர் வாஷிங்டனில் போராட்டம் நடத்தினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

அதுமட்டுமின்றி பெண்கள் அமைப்பும் டிரம்புக்கு எதிராக போராட்டங்கள் நடத்தினர். இது அமெரிக்காவில் மட்டுமில்லாமல் உலகமெங்கும் உள்ள பல்வேறு பெண்கள் அமைப்பும் டிரம்புக்கு எதிராக கோஷங்கள் இட்டனர்.

இந்நிலையில் தற்போது டிரம்ப் பற்றிய ஒரு அதிர்ச்சிகரமான தகவலை பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஆபாச படத்தில் நடித்துள்ளார் என கூறியுள்ளது.

கடந்த 2000 ஆம் ஆண்டு பிரபல தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஆபாச படம் ஒன்றில் டிரம்ப் ஒரு சிறிய வேடத்தில் நடித்ததாக கூறப்படுகிறது.

தற்போது பலரும் டிரம்புக்கு எதிராக போராடி வரும் நிலையில் இந்த செய்தி டிரம்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் என்று கூறப்படுகிறது.

கலவர பூமியான மெரீனா : போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய காவல்துறை!!

மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை காவல்துறையினர் வெளியேற்றத் துவங்கியுள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் இயற்ற வேண்டி தமிழகம் முழுவதும் இளைஞர்கள் போரட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் கூடி ஜல்லிக்கட்டுக்காக போராடி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை மெரினாவில் உள்ள போராட்டக்காரர்கள் அமைதியாக கலைந்து செல்லுமாறு சென்னை காவல்துறை அறிவுறுத்தியது. அதனைத் தொடர்ந்து கூடுதலாக 1000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மெரினா கடற்கரை சாலையில் குவிக்கப்பட்டனர்.

அதன் பின்னர் ஒலி பெருக்கி மூலமாக போராட்டக்காரர்களை கலைந்து செல்ல வேண்டும் என காவல்துறையினர் அறிவிப்பு வெளியிட்டனர். ஆனால் அதனை ஏற்காத இளைஞர்கள் ‘ஜல்லிக்கட்டு வேண்டும்’ என கோஷங்களை எழுப்பத் துவங்கினர்.

காலை 6 மணி அளவில் போராட்டக்காரர்கள் இருக்கும் பகுதிக்கு சென்ற காவலர்கள் அவர்களை வலுக்கட்டாயமாக அகற்றத் துவங்கினர். சிலரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று வெளியேற்றினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.

இன்று காலை தமிழக சட்டமன்ற கூட்டத் தொடங்க உள்ளதாலும் குடியரசு தின கொண்டாட்டங்களுக்கு இன்னும் மூன்று நாட்கள் இருப்பதாலும் தமிழக காவல்துறை இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வவுனியாவில் இ.போ.ச ஊழியர் மீது தனியார் பேருந்தின் ஊழியர் தாக்குதல்!!

வவுனியா புதிய மத்திய பேருந்து தரிப்பிடத்தில் நேற்று (22.01.2017) மாலை 5.30 மணியளவில் இ.போ.ச ஊழியர் மீது தனியார் பேருந்தின் ஊழியர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

வவுனியா புதிய மத்திய பேருந்து தரிப்பிடத்திற்கு நுழைய முற்பட்ட இ.போ.ச பேருந்தினை கடமையிலிருந்த இ.போ.ச பாதுகாப்பு உத்தியோகஸ்தர் வாயிலை திறக்க முற்பட்ட வேளையில் வாயிலை திறக்க வேண்டாமென தனியார் பேருந்தின் ஊழியரொருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த தனியார் பேருந்து ஊழியரின் வார்த்தையினை பொருட்படுத்தாது வாயிலை திறந்தமையினையடுத்து கோபமடைந்த தனியார் பேருந்தின் ஊழியர் கடமையிலிருந்த இ.போ.ச பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

அத்துடன், தாக்குதலில் சிறு காயங்களுக்குள்ளான இ.போ.ச பாதுகாப்பு உத்தியோகஸ்தர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழில் உடன் பிறந்த சகோதரிக்கு பெண் செய்த காரியம்!!

போலியான அடையாள அட்டை மற்றும் போலியான கையெழுத்து ஆகியவற்றை சமர்பித்து தனது சகோதரியின் வங்கி கணக்கில் இருந்து பணம் மோசடி செய்த பெண் ஒருவரை தெல்லிப்பழை பொலிஸார் தேடி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பெண் செய்த முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

மணற்குளம் அளவெட்டி தெற்கு பகுதியினை சேர்ந்த பெண் ஒருவருக்கு சமூர்த்தி வங்கியில் இருந்து பணம் கிடைத்துள்ளது. குறித்த பணத்தை அளவெட்டி பகுதியில் உள்ள அரச வங்கி ஒன்றில் அவர் வைப்புச்செய்துள்ளார்.

இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 16ம் திகதி தனது வைப்பிலிருந்து பணத்தினை எடுப்பதற்கு குறித்த பெண் சென்ற போது, 45 ஆயிரம் ரூபாய் பணம், கணக்கிலிருந்து எடுக்கப்பட்டமை தெரியவந்துள்ளது.

அதிர்ச்சியடைந்த பெண், தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது அவரது சகோதரியே பணத்தைப்​பெற்றுக்கொண்டமை தெரியவந்தது.

இதனையடுத்து, குறித்து பெண்ணை கைதுசெய்ய முற்பட்ட போது, அவர் தலைமறைவாகியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. எனவே, அவரை கைதுசெய்ய நீதிமன்றத்தின் உத்தரவைப் பெற்று சகல பொலிஸ் நிலையங்களுக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மைத்திரியின் மற்றும் ஒரு அதிரடி நடவடிக்கை!!

மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் முறி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய்வதற்கு விசேட ஆணைக்குழு ஒன்றை நியமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

மத்திய வங்கி முறி மோசடி தொடர்பிலான பரிந்துரைகளை முன்வைக்கும் பொறுப்பும் இந்த ஆணைக்குழுவுக்கு ஒப்படைக்கப்படுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஆணைக்குழு இன்னும் ஒரு வாரத்துக்குள் அமைக்கப்படும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். இதேவேளை, மத்திய வங்கி முறி மோசடி தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்தன.

குறிப்பாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் மற்றும் அவரது மருமகள் ஆகியோருக்கு குறித்த மோசடியில் தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மெரினா கடற்கரையில் பதற்றம் : வலுக்கட்டாயமாக இளைஞர்களை விரட்டும் பொலிஸ்!!

மெரினாவில் கடந்த 8 நாட்களாக நடந்து வந்த ஜல்லிக்கட்டு போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெற்றுக்கொள்வதாக போராட்டக்குழு அறிவித்துள்ளது.

போராட்டத்திற்கான குறிக்கோள் அடையப்பட்டுள்ளதால் கலைந்து செல்லும்படி இளைஞர்களுக்கு சென்னை காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

எனினும் இளைஞர்கள் கலைத்து செல்ல மறுப்பதால் அங்கிருந்து வலுகட்டயமாக பொலிஸாரினால் விரட்டப்படுதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அங்கிருந்து கலைந்து செல்வது குறித்து தாம் ஆலோசிக்க கால அவகாசம் தேவை என போராட்டக்காரர்கள் பொலிஸாரை கேட்டுள்ளனர். அதற்கு அனுமதி மறுத்தால் அங்கிருந்து வெளியேறப் போவதில்லை என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

அதனை மறுக்கும் பொலிஸார் உடனடியாக கலைத்து செல்லுமாறு இளைஞர்கள் விரட்டப்படுகின்றனர். இதன் காரணமாக அங்கு பெரும் தள்ளுமுள்ளு நிலை ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இளைஞர்களின் எழுச்சி பெரும் விஸ்பரூபம் எடுத்துள்ள நிலையில், அதனை முறியடிக்கும் வகையில் அரசியல் அதிகாரம் பிரயோகிக்கப்படுவதாக பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.

பொலிஸாரின் அடக்கு முறை அதிகரிப்பதால் இளைஞர்கள் சிலர் கடலை நோக்கி செல்வதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. உணர்ச்சிவசப்பட்டு எந்தவொரு தவறான முடிவும் எடுக்கப்படக் கூடாது என இளைஞர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை நீக்கி, நிரந்த சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என உலகம் முழுவதும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுடனான ஒருநாள் தொடரில் இங்கிலாந்துக்கு ஆறுதல் வெற்றி!!

இந்திய அணியுடனான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 3 ஆவது போட்டியில் இங்கிலாந்து அணி 5 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

கொல்கத்தாவில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 321 ஓட்டங்களைக் குவித்தது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 316 ஓட்டங்களையே பெற்றது. கேதார் ஜாதவ் 75 பந்துகளில் 95 ஓட்டங்களையும் அணித்தலைவர் விராட் கோஹ்லி 63 பந்துகளில் 55 ஓட்டங்களையும் பெற்றனர்.

இங்கிலாந்து பந்துவீச்சாளர்களில் பென் ஸ்டோக்ஸ் 63 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

எனினும் 3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் இந்திய அணி 2-1 விகிதத்தில் வெற்றியீட்டி வெற்றிக்கிணண்ணத்தை கைப்பற்றியது.

நிலவில் உங்கள் பெயர் : கட்டணம் ஆயிரம் ரூபா மட்டுமே!!

விண்வெளி ஆய்வு நிறுவனம் ஒன்று தனது ஆய்வு முயற்சிக்குத் தேவையான பணத்தை பொதுமக்களிடம் இருந்து பெற வித்தியாசமான வழிமுறையைக் கண்டுபிடித்திருக்கிறது. அது, நிலவில் உங்கள் பெயரை எழுதுவதுதான்.

பெங்களூருவில் உள்ள இந்த நிறுவனம், இம்மாத இறுதியில் இந்தியா அனுப்பவுள்ள விண்கலத்தில் தாம் உருவாக்கிவரும் ரொபோ ஒன்றை அனுப்பவுள்ளது.

எதிர்வரும் 2018ம் ஆண்டு ஜனவரி 26ம் திகதி – அதாவது, இந்தியாவின் 71வது குடியரசு தினத்தன்று – பிஎஸ்எல்வி ரொக்கெட் மூலம், சந்திரனில் விண்கலம் ஒன்றை அனுப்ப இந்தியா தயாராகிவருகிறது. அதனுடன், மேற்படி நிறுவனம், தான் உருவாக்கிவரும் ரொபோ ஆய்வு இயந்திரம் ஒன்றையும் அனுப்ப எண்ணியுள்ளது.

இதற்குத் தேவையான பணத்தை மக்களிடம் இருந்து பெறுவதற்கு வித்தியாசமான வாய்ப்பை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளது.

அதன்படி, இலங்கை ரூபா மதிப்பில் சுமார் ஆயிரம் ரூபாவைச் செலுத்தினால், ஒரு சிறு அலுமினியத் துண்டில் உங்கள் பெயரை மிக நுண்ணிய அளவில் செதுக்கி அதை நிலவின் மேற்பரப்பிலேயே விட்டுவருவதாக இந்த நிறுவனம் விளம்பரம் செய்துள்ளது.

‘எதிர்காலத்தில் உங்கள் சந்ததியினர் சந்திரனுக்கு சுற்றுலாச் செல்லும்போது, தங்களது மூதாதையரான உங்களது பெயர் நிலவில் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்படலாம்’ என்றும் இந்த நிறுவனம் தனது விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளது.

தற்போது, சுமார் பத்தாயிரம் பேர் தங்களது பெயரை நிலவில் விட்டுவருவதற்காக தம்மைப் பதிவுசெய்திருப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.