நைஜீரியாவில் தீவிரவாதிகள் முகாமிற்குப் பதிலாக அகதிகள் முகாமில் விமானப்படை நடத்திய குண்டுவீச்சில் 100 க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.
நைஜீரியாவில் போகோஹராம் தீவிரவாதிகளுக்கு எதிராக அந்நாட்டு அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், கேமரூன் நாட்டு எல்லையை ஒட்டிய பகுதியான ரானில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக நைஜீரிய இராணுவத்திற்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில், நைஜீரிய விமானப்படை நேற்று (17) அப்பகுதியில் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. ஆனால், தீவிரவாதிகள் முகாமிற்கு பதிலாக அகதிகள் தங்கியிருந்த முகாமில் இந்த குண்டு வீச்சு சம்பவம் நடத்தப்பட்டுள்ளது.
இதில், அகதிகள், பொலிஸார், மருத்துவ உதவியில் ஈடுபட்டிருந்தவர்கள் என 100 க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக இறந்தனர். பலர் காயமடைந்துள்ளனர்.
இது தவறுதலாக நடந்த தாக்குதல் சம்பவம் என முதன்முறையாக நைஜீரிய இராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது. இது தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பெண்களுக்கு மாத்திரம் ஒதுக்கப்பட்ட விமான ஆசனங்களை பெண் பயணிகளுக்கு வழங்க எயார் இண்டியா நிறுவனம் முன்வந்துள்ளது.
விமானப் பயணங்களின்போது பெண்கள் பலர் பாலியல் தொந்தரவுகளை எதிர்கொண்டதாக செய்யப்பட்ட முறைப்பாடுகளையடுத்து இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தனியாகப் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த எயார் இண்டியா நிறுவனம் விரும்புகிறது என அந்நிறுவனத்தின் பொது முகாமையாளர்களில் ஒருவரான மீனாக் ஷி மாலிக் தெரிவித்துள்ளார்.
“இந்தியாவின் தேசிய விமான சேவை என்ற வகையில், பெண் பயணிகளின் சௌகரியத்தை மேம்படுத்துவது எமது பொறுப்பு என நாம் கருதுகிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்குள் சேவையில் ஈடுபடும் எயார்பஸ் ஏ 320 ரகத்தைச் சேர்ந்த தனது விமானங்களில் இவ்வார இறுதியிலிருந்து இத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக எயார் இண்டியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இத் திட்டத்தின்படி, விமானங்களின் சிக்கன வகுப்புப் பிரிவில் முன்வரிசையிலுள்ள 6 ஆசனங்கள் பெண்களுக்காக மாத்திரம் ஒதுக்கப்பட்டிருக்கும்.
தனியாகப் பயணம் செய்யும் பெண்கள் இந்த ஆசனங்களைக் கோர லாம். இதற்காக மேலதிக கட்டணம் எதுவும் அறவிடப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் சில மாதங்களில் தனது ஏனைய விமானங்களிலும் இத் திட்டம் அமுல்படுத்தப்படும் என எயார் இண்டியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த இளைஞரான அர்பாப் கிசெர் ஹையாத், பாகிஸ்தானின் மிக பலசாலி மனிதர் என வர்ணிக்கப்படுகிறார். 25 வயதேயான ஹையாத்தின் தற்போதைய எடை 435 கிலோகிராம். பாகிஸ்தானின் மர்தான் நகரைச் சேர்ந்தவர் இவர்.
வெறுமனே உடற் பருமனில் மாத்திரம் வித்தியாசமானவராக அர்பாப் கிசெர் ஹையாத் இருக்கவில்லை. பளுதூக்கும் போட்டியில் சாதனை படைக்க வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்ட இவர், அண்மையில் நகரும் உழவு இயந்திரம் (ட்ரெக்டர் ) ஒன்றை கயிறு கட்டி தனது கரங்களால் இழுத்து நிறுத்தி தனது பலத்தை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
பிரமாண்ட உடல் தோற்றம் கொண்ட ‘ஹல்க்’ எனும் கொமிக்ஸ் பாத்திரம் உலகப் பிரசித்தி பெற்றது. அது ஒரு கற்பனைப் பாத்திரம். இந்நிலையில், உலகில் உயிர்வாழும் நிஜமான ஹல்க் என அர்பாப் கிசெர் ஹையாத் புகழப்படுகிறார்.
‘பளு தூக்குதலில் சம்பியனாக வேண்டும் என்பதே எனது இலக்கு. இந்த உடலைத் தந்த இறைவனுக்கு நன்றி தெரிவிக்கிறேன்’ என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த உடலால் எனக்கு எந்தவொரு உடல் நலக்கோளாறோ அல்லது, உடல் எடையினால் அசௌகரியமோ ஏற்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
6 அடி 3 அங்குல உயரமான அர்பாப் கிசெர் ஹையாத் 2012 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற நிகழ்வொன்றில் 5000 கிலோகிராம் எடையைத் தூக்கியதாகக் கூறுகிறார்.
தனது பிரமாண்ட உடல் தோற்றத்துக்காக விசேட உணவு முறையை அவர் கடைப்பிடிக்கிறார்.
தினமும் 10,000 கிலோ உணவு அவருக்குத் தேவைப்படுகிறதாம். இதற்காக 36 முட்டைகள், 3 கிலோ இறைச்சி, மற்றும் 5 லீற்றர் பால் ஆகியவற்றை அவர் உட்கொள்கிறார்.
கலோரி அதிகமான உணவுகளையே அவர் உட்கொள்கிறார். உலகின் மிகப் பலசாலி மனிதராக வேண்டும் என விரும்பும் அர்பாப் கிசெர் ஹையாத், அமெரிக்காவின் டபிள்யூ. டபிள்யூ.ஈ. (WWE) மல்யுத்தப் போட்டிகளிலும் பங்குபற்றுவதற்கு ஆர்வம் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
14 ஆண்டுகளாக நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திதாகக் கூறப்படும் நபரை பொலிஸார் டில்லியில் கைது செய்துள்ளனர்.
உத்தரபிரதேசம் மாநிலம் ராம்பூரை சேர்ந்த சுனில் என்பவர் தன்னுடைய 12 வயதில் பிழைப்புக்காக டில்லி சென்றுள்ளார். இவருக்கு தற்போது திருமணமாகி மனைவி, 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர்.
இவர் நாடே அதிர்ச்சியுறும் வகையில் கடந்த 14 ஆண்டுகளாக நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகளை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியமை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சிறு பெண்கள் மீது மோகம் கொண்ட சுனில், பாடசாலையில் படிக்கும் மாணவிகளை தொடர்ந்து பொலிஸாரின் வலையில் சிக்காமல் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி வந்துள்ளார்.
இவர் 7 முதல் 10 வயதிலான மாணவிகளையே குறி வைத்து செயல்பட்டுள் ளார். இவர் பாடசாலை முடிந்து வீடு திரும்பும் மாணவிகளிடம் தெரிந்தவர் போல பேச்சுக்கொடுத்து அவர்களை ஏற்கனவே திட்டமிட்டு வைத்திருந்த மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று மிரட்டி பாலியல் வல்லுறவுக்குட் படுத்தியுள்ளார்.
இதே போல தொடர்ந்து சிறுமிகளை பாலியல் வல்லுறவு செய்து வந்த சுனில் கடந்த 2004ஆம் ஆண்டு பக்கத்து வீட்டு சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட கையும் களவுமாக பிடிபட்டுள்ளார். பின்னர் அருகிலுள்ளவர்கள் அவரைப் பிடித்து அடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 10ஆம் திகதி இரு பெற்றோர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடொன்றை கொடுத்துள்ளனர். அதில் தங்கள் பிள்ளைகள் பாட சாலை முடிந்து வரும்போது யாரோ மர்ம நபரால் கடத்தி கொடுமைப்படுத்தப் படுவதாக கூறப்பட்டிருந்தது.
இதனை விசாரித்த போது சுனில் தான் மாணவிகளை கடத்தி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி இவ்வாறு செய்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து சுனிலை கைது செய்த பொலிஸார் அவனிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது, பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து பொலிஸார் தெரிவித்துள்ளதாவது, பாலியல் வல்லுறவு முறைப்பாட்டில் கைது செய்யப்பட்டுள்ள டெய்லர், சுனில் ரஸ்தோகி, நூற்றுக்கணக்கான சிறுமியரை பாலியல் வல்லுறவு செய்ததாக, ஒப்புக் கொண்டுள்ளான்.
தனியாக நடந்து செல்லும், 7 – 10 வயதுக்குட்பட்ட சிறுமியரிடம், அவர்களின் பெற்றோர், ஆடை அல்லது வேறு பொருட்கள் கொடுக்கச் சொன்னதாக கூறி, அவர்களை தனிமையான இடத்துக்கு சுனில் அழைத்து செல்வான்.
பின், அவர்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி விட்டு, தப்பியோடி விடு வான். பல ஆண்டுகளாக, இந்த குற்றங்களை தொடர்ச்சியாக செய்து வந்து ள்ளதாக கூறியுள்ளான்.
இத்தனை ஆண்டுகளாக, அவன் பற்றிய உண்மைகள் தெரியாமல் போனது, ஆச்சரியமாக உள்ளது. சுனில், உத்தரபிரதேச, மாநிலம் ராம்பூரைச் சேர்ந்தவன் 1990இல், குடும்பத்தினருடன், டில்லியில் வந்து குடியேறினான்.
அவனுக்கு மூன்று பெண்கள் உட்பட, ஐந்து குழந்தைகள் உள்ளன. தனது பெண் குழந்தைகளிடமும், அவன் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டானா என்பது குறித்து, விசாரணை நடந்து வருகிறது.
கடந்த, 2014இல், கிழக்கு டில்லியில் வசித்த சுனில், ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தபோது பிடிபட்டான். அந்த பகுதியைச் சேர்ந்தோர், சுனிலை அடித்து, உதைத்து அங்கிருந்து துரத்தி விட்டனர். சுனில், திருட்டுகளில் ஈடு பட்டு வந்துள்ளதும், போதைப் பொருள் பழக்கமுள்ளது என்பதும், விசா ரணையில் தெரியவந்துள்ளது என பொலிஸார் கூறியுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் டொனால்ட் ட்ரம்ப் மீதான தமது எதிர்ப்பை பெண்கள் அமைப்பு ஒன்று வித்தியாசமாகக் காட்டியுள்ளது.
ஸ்பெயின் தலைநகர் மெட்ரிட்டில் உள்ள நூதனசாலை ஒன்றில் நேற்று ட்ரம்ப்பின் முழு உருவ மெழுகுச் சிலை ஒன்று திறந்து வைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட ‘ஃபிமென்’ (FEMEN) என்ற பெண் உரிமைகளுக்கான அமைப்பைச் சார்ந்த பெண்ணொருவர், திடீரென்று பாதுகாப்பு அதிகாரிகளை மீறிக்கொண்டு சிலைக்கருகில் சென்றார்.
சிலைக்கருகே சென்றதும் அவர் தனது மேலாடையைக் கழற்றியெறிந்ததுடன் ட்ரம்ப்பின் சிலையின் மறைவுப் பகுதியைக் கைகளால் பிடித்துக்கொண்டு கீழ்த்தரமான கோஷம் எழுப்பி தனது எதிர்ப்பைத் தெரிவித்தார்.
பாதுகாப்பு அதிகாரிகள் எவ்வளவோ கூறியும் கேட்காமல் எதிர்ப்பு கோஷம் எழுப்பிய அவரை, இறுதியில் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று அப்புறப்படுத்தினர்.
வவுனியா நகரசபைக்கு சொந்தமான நூல் நிலையத்தில் வெளிப்புறத்தில் பூட்டப்பட்டுள்ள இரகசிய கண்காணிப்பு கமராக்கள் நான்கு கடந்த செவ்வாய்கிழமை திருட்டு போயுள்ளது.
இது குறித்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கடந்த காலங்களில் நகர சபையில் கணணிகள், ஊழியர்களின் சுயவிபரக்கோவைகள் காணாமல் போயிருந்தமை போன்று தற்போதும் தொடர்ந்தும் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தமைக்கு எதிராக தற்போது பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்று வருகின்றது.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்னால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் யுவதிகள் மற்றும் அரசியல் கட்சி உறுப்பினர்கள் ஒன்றிணைந்து குறித்த ஆர்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 03 ஆண்டுகளாக தடைவிதித்துள்ள நிலையில், அதற்கெதிராக தமிழகத்தின் பல பகுதிகளில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக உறவுகளே நீங்கள் எக்காரணம் கொண்டும் போராட்டத்தினை கைவிடாதீர்கள் என்று பதாதைகளை ஏந்தியவாறு இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் பீட்டா அமைப்பினை வன்மையாக கண்டித்தும், தமிழக அரசு இதற்கான தீர்வினை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி கோஷமிட்டனர்.
இதன் காரணமாக குறித்த பகுதியில் ஆயிரக்கணக்கில் மக்கள் ஒன்றிணைந்ததால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா மத்திய பேரூந்து தரிப்பிடத்திற்கு முன்பாக இன்று (18.01.2017) காலை 10 மணியளவில் பொஹஸ்வெவ பகுதியில் வசித்துவரும் பொதுமக்கள் ஒன்றிணை ந்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.
தமது பகுதியில் நான்கு பிரதேச செயலாளர்களிடம் சேவைகளை மேற்கொள்ளவேண்டியுள்ளதால் அக்குறையினை நிவர்த்தி செய்யுமாறு தெரிவித்து சல்லிகம, சலனிமுகுமு , நாமவகம, நந்திமித்திரகம, போகாஸ்வெவ பிரிவு ஒன்று மற்றும் இரண்டு போன்ற பகுதி பொதுமக்கள் இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு தமது பகுதிக்கான பிரதேச செயலகத்தினை ஒன்றிணைத்து ஒரு செயலகத்தில் சேவைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தத்தருமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், ஆண்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
வவுனியா வர்த்தக சங்கத்தினர் இலங்கை போக்குவரத்துச் சபை சாரதிகள், நடத்துனர்களுக்கு சார்பாக செயற்படுவதுடன் பாதிக்கப்படும் தனியார் போக்குவரத்து துறை பற்றி சிந்திக்கவில்லை என தனியார் பேருந்து உரிமையாளர்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.
புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்திற்கு, நேற்று இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் செல்லாததால் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேரூந்து சாரதி, நடத்துனர்கள், உரிமையாளர்களிடையே வவுனியா நகரில் மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில் போராட்டம் இடம்பெற்ற பகுதிக்கு வந்த வர்த்தக சங்க தலைவர் ரி.கே.இராஜலிங்கத்தை சந்தித்த தனியார் பேருந்து உரிமையாளர்கள், நடத்துனர்கள், சாரதிகள் தமது நலன் தொடர்பில் வர்த்தக சங்கம் சிந்திக்கவில்லை.
இணைந்த நேர அட்டவணைக்கு இ.போ.சபை மற்றும் தனியார் துறையை கொண்டு வருவதைவிடுத்து எம்மை பாதிக்கச் செய்யும் வகையில் வர்த்தக சங்கம் செயற்படுகிறது.
வர்த்தக சங்கத்தினர் தனியார் பேருந்து உரிமையாளர்களுடன் இ.போ சபை பேருந்து நிலையத்தை பயன்படுத்து தொடர்பிலோ அல்லது புதிய பேருந்து நிலையம் தொடர்பிலோ எந்த பேச்சுக்களிலும் ஈடுபடாது இ.போ சபைக்கு ஆதரவாக செயற்படுகிறது.
இ.போ சபை பேருந்துகள் நகரில் இருந்து தமது சேவையை வழங்கும் போது நாம் ஏ9 வீதியில் அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்திற்கு சென்றால், நாம் தான் பாதிக்கப்படப் போவது.
நாம் வாகன லீசிங் கட்ட முடியாது தற்கொலை செய்ய வேண்டும் என விரும்புகிறீர்களா என தனியார் பேரூந்து உரிமையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
தமது புகைப்படங்களை முகப்புத்தகத்தில் பதிவிடுவதற்க்காக தண்டவாளத்தில் இருந்து செல்பி எடுக்க முற்பட்ட இரு இளைஞர்கள் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று இந்தியாவின் டெல்லியில் இடம்பெற்றதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தண்டவாளத்தில் சில இளைஞர்களுடன் புகையிரதம் வரும் வேளையில் செல்பி எடுக்க முற்பட்டுள்ளனர். புகையிரதம் வருவதனை பார்த்த சில இளைஞர் தண்டவாளத்தை விட்டு விலகியுள்ள நிலையில், இந்த இரண்டு இளைஞர்களும் சிறிது நேரம் அங்கு நின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக அந்த இரு இளைஞர்களும் புகையிரத்தினால் மோதப்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் யாஷ் குமார் 16 வயதுடையவர் மற்றும் சுப்கான் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டில் செல்பி எடுப்பதற்க்காக சென்று அதிகளவில் உயிரிழந்தவர்கள் பட்டியலில் இந்தியாவும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா, செட்டிகுளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு சி.ஐ.டி என தம்மை தெரியப்படுத்தி சென்ற இருவர் வீட்டை சோதனை செய்வதாக கூறி 5 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நகைகளை திருடிச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..
நேற்று இரவு 7.30 மணியளவில் செட்டிகுளம், முகத்தான்குளம், பாம்- 2 பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு சென்ற இருவர் தாம் சி.ஐ.டி எனவும் உங்களது வீட்டில் கசிப்பு மற்றும் டைனமேற் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது வீட்டை சோதனை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளனர். அப்போது அவர்கள் கைத்துப்பாக்கி வைத்திருந்ததாக வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வீட்டு உரிமையாளர்கள் சோதனையிட அனுமதித்த போது வீட்டில் இருந்த 5 இலட்சத்து 20 ஆயிரம் பெறுமதியான தங்க நகைகளை திருடிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர் செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பான விசாரணைகளை செட்டிகுளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
அவுஸ்திரேலியாவில் இடம்பெறும் பிக் பாஸ் லீக் கிரிக்கட் போட்டியில் எடிலைட் ஸ்ட்ரைகருக்கு எதிரான போட்டியில் மெல்போர்ன் ரெனேகேட்ஸ் அணி 6 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற எடிலைட் ஸ்ட்ரைகர் களத்தடுப்பாட தீர்மானித்தது. முதலில் துடுப்பாடிய மெல்போர்ன் ரெனேகேட்ஸ் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுகளை இழந்து 171 ஓட்டங்களை பெற்று கொண்டது.
பதிலுக்கு துடுப்பாடிய எடிலைட் ஸ்ட்ரைகர் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுகளை இழந்து 165 ஓட்டங்களையே பெற்றது.
இந்த போட்டியில் மெல்போர்ன் ரெனேகேட்ஸ் அணி சார்பில் பந்து வீசிய திசர பெரேரா 3 ஓவர்கள் பந்து வீசி 25 ஓட்டங்களை கொடுத்து 4 விக்கட்டுகளை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
இவருடைய சிறந்த பந்துவீச்சானது எடிலைட் ஸ்ட்ரைகர் அணியின் ஓட்டங்களை 165 க்கு மட்டுப்படுத்த பெரிதும் உதவியது.
டென்மார்க் நாட்டின் சர்வதேச விமான நிலையம் ஒன்றில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் ஒரு வீரரை தொலைக்காட்சி ஒன்று நேரலையில் பேட்டி எடுத்தது.
அப்போது அவருக்கு பின்னால் இருந்த இளம்பெண் ஒருவர் பேசிக் கொண்டிருக்கையில் திடீரென மாயமாகி விடுகிறார். கமெராவில் இந்த காட்சிகள் அனைத்தும் தெளிவாக பதிவாகியது. இந்த வீடியோவை தொலைக்காட்சியில் ஒளிபரப்பிய போது அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
அது ஒளியியல் மாயையாக இருக்கும் என்று சிலர் கருத்து தெரிவிக்க, சிலர் அது ஏலியனாக கூட இருக்கலாம் என்று கூறுகின்றனர்.
இது கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த சம்பவம். இருப்பினும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் விவாதிக்கப்பட்டு வைரலாகி வருகிறது.
புனே நகரில் 10 ரூபாய் நோட்டால் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக இளம்பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏழை குடும்பத்தை சேர்ந்த சுந்தரம்மா(30), தனது மகன் ராகுலிடம் மளிகை கடைக்கு சென்று பொருள் ஒன்றை வாங்கி வருமாறு கூறியுள்ளார்.
ராகுல் கடைக்கு சென்றுகொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டுக்காரின் 12 வயது மகள், ராகுலிடம் சண்டையிட்டு, 10 ரூபாயை கசக்கி எறிந்துள்ளாள். தனது பணத்தினை திருப்பி தருமாறு ராகுல் கேட்டும் அவள் மறுத்துள்ளான்.
இதனையடுத்து வீடு திரும்பிய ராகுல், நடந்தவற்றை தனது தாயிடம் தெரிவித்துள்ளான். இதனைகேட்க சென்ற சுந்தரம்மாவை, அச்சிறுமியின் பெற்றோர் தரக்குறைவான முறையில் அவமானப்படுத்தியுள்ளனர்.
மேலும், இது சம்பந்தமாக நீ எதாவது பிரச்சனை செய்தால் உன்னை கொலை செய்துவிடுவோம் என எச்சரிக்கை வேறு விடுத்தனர்.
இதனால் மனமுடைந்த சுந்தரம்மாள், வீட்டுக்கு திரும்பியவுடன் தனது உடலில் தீவைத்து எரித்துக்கொண்டார். இதில் சுந்தரம்மாளின் உடல் அதிகமாக எரிந்துவிட்டதால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தற்போது, 12 வயது சிறுமி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே பிரசவத்தில் இரு ஆண் குழந்தை மற்றுமொரு பெண் உட்பட மூன்று குழந்தைகள் பிரசவிக்கப்பட்ட சம்பவம் ஒன்று யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலை விடுதி 22 ல் சத்திரசிகிச்சையின் மூலம் 3 குழந்தைகள் பிரசவிக்கப்பட்டுள்ளன. மகப்பேற்று பெண்ணியல் நிபுணர் கே. சுரேஸ்குமார் குறித்த சத்திரசிகிச்சையினை மேற்கொண்டுள்ளார்.
ஊர்காவற்துறை பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த வசீகரன் காயத்திரி தம்பதியினருக்கே இந்த மூன்று குழந்தையும் பிறந்துள்ளது. 3 குழந்தைகள் நேற்று முன்தினம் 16 ம் திகதி நள்ளிரவு 11.28 மணியளவில் பிறந்துள்ளன.
இரு ஆண்குழந்தையும் ஒன்று பெண்குழந்தையுமாக பிறந்துள்ளன. நள்ளிரவு 11.27 மணியளவில் இரண்டு ஆண் குழந்தைகளும், 11.28 மணியளவில் ஒரு குழந்தையும் பிறந்துள்ளது.
1கிலோவும் 900 கிராம் மற்றைய குழந்தை 1கிலோ 560 கிராம் அடுத்த குழந்தை 2கிலோவும் 100 கிராம் எடையிலும் பிறந்துள்ளன.
மூன்று குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் , கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரும் இதேபோன்று ஒரே சூலில் மூன்று குழந்தைகள் சத்திரசிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த சத்திரசிகிச்சையினை குறித்த வைத்திய நிபுணரே மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.