சிறுவர்களின் ஆபாச புகைப்படங்களை பயன்படுத்திய சர்ச்சைக்குரிய பேஸ்புக் பக்கம் முடக்கம்!!

சிறிய பெண் பிள்ளைகளின் புகைப்படத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய பேஸ்புக் பக்கத்தை முடக்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கணனி அவசர பிரிவு தெரிவித்துள்ளது.

அந்த பேஸ்புக் பக்கம் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளது. அந்த பக்கத்தை அதிகமாக பார்வையிட வேண்டும் என்பதற்காக, அதன் உரிமையாளர் பாலியல் கவர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் சிறுமிகளின் புகைப்படத்தை பயன்படுத்தியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென கணனி அவசர பிரிவின் பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்தா தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் விரும்பியதனை போன்று புகைப்படம் பதிவிடுவதற்கும், அவ்வாறான பக்கங்களை தயாரித்து நடத்தி செல்வதற்கும் உள்ள சுதந்திரம் காரணமாக இவ்வாறான பிரச்சினை ஏற்படும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தங்கள் புகைப்படங்களை நண்பர்கள் மாத்திரம் பார்க்கும் வகையில் உள்ள பேஸ்புக் பாதுகாப்பு முறையை பயன்படுத்துவதன் ஊடாக இவ்வாறு புகைப்படம் திருடப்படுவதனை தடுக்க முடியும் எனவும், புகைப்படங்களை வேறு செயற்பாட்டிற்காக பயன்படுத்தப்படுவதனை தடுத்துக் கொள்ள முடியும் என அந்த பிரிவு நினைவுப்படுத்தியுள்ளது.

காதலித்த மகளை கொலை செய்த தாய் : மரண தண்டை வழங்கிய நீதிமன்றம்!!

 
பாகிஸ்தானில் காதலித்து திருமணம் செய்த மகளை கொலை செய்த தாய்க்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் லாகூர் பகுதியை சேர்ந்த தாய் ஒருவர் தனது மகள் அதே பகுதியை சேர்ந்த ஒருவரை காதலித்து வந்ததை அறிந்துள்ளார். இதற்கு எதிர்ப்பும் தெரிவித்தார்.

இவ்வாறு காதல் செய்வதற்கு சம்மதம் பெற்றோர்கள் தெரிவிக்காதமையினால், கடந்தாண்டு இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து வாழ்ந்து வந்தனர்.

சிறிது காலம் சென்றதும் அவரது தாயார் மற்றும் சகோதரர் இணைந்து திருமண ஏற்பாடுகள் உங்களுக்கு செய்துள்ளதாகவும் உங்கள் இருவரையும் ஏற்றுக்கொள்வதாக கூறி அழைத்து சென்றுள்ளனர்.

தாயின் பேச்சினை ஏற்றுக்கொண்டு சென்ற இவர்களை தாய் மற்றும் சகோதரும் கடுமையாக தாக்கிய பின்னர் மகளை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து உயிருடன் எரித்துள்ளார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் தாய் மற்றும் அவரது சகோதரனும் கைது செய்யப்பட்டு வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த கொலை தொடர்பான வழக்கு விசாரணையின் இறுதியில் நீதிபதி தாயாருக்கு மரண தண்டனையினையும், அவரது சகோதரனுக்கு ஆயுள் தண்டனையும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

யாழில் இரண்டு ஆண்டுகளாக மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை!!

2015ம் ஆண்டு முதல் தனது மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தை ஒருவரை கைது செய்துள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ். கொடிகாமம் தவசிக்குளம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக சந்தேகநபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சிறுமியின் தாயார் கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், குறித்த சிறுமி தந்தையுடனும், உறவினர்களுடனும் வசித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த சிறுமி கல்வி நடவடிக்கைகளுக்காக அண்மையில் பெண்கள் விடுதியில் சேர்க்கப்பட்ட நிலையில், தனக்கு நடந்த கொடுமைகளை விடுதியில் உள்ளவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, விடுதி பொறுப்பாளரால் இந்த விடயம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாவனைக்கு உதவாத முச்சக்கரவண்டி இயந்திரத்தின் மூலம் அம்பியூலன்சை வடிவமைத்த மாணவன்!!

 
நிந்­தவூர் அல் -­ அஷ்ரக் தேசியப் பாட­சாலை மாண­வ­னான ஆதம்­பாவா முஹம்­மது அல்-­அஸீம், பாவ­னைக்கு உத­வாத முச்­சக்­கர வண்டி ஒன்றின் இயந்­தி­ர­மொன்றை கொள்­வ­னவு செய்து, தனது தொழி­ல்நுட்ப திறனை பயன்­டுத்தி அம்பியூலன்ஸ் வாகனம் ஒன்றை தயா­ரித்­துள்ளார்.

தரம் 13 பொறி­யியல் முறைமை தொழி­ல்நுட்­ப­வியல் பிரிவில் கல்வி கற்கும் ஆதம்­பாவா முஹம்­மது அல்-­அஸீமின் செயற்­பாட்டை பாட­சாலை சமூ­கத்­தினர் பாராட்­டி­யுள்­ளனர்.

அவ­ருக்­கான பாராட்டு வைபவம் கடந்த திங்­கட்­கி­ழமை நடை­பெற்­றது. இதில் அல் – அஷ்ரக் தேசியப் பாட­சாலை அதிபர் மற்றும் பிர­தேச கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டு இம்மாணவனை பாராட்டினர்.

யாழ். மாவட்டத்தில் கடந்த 16 நாட்களில் 291 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு!!

நாடளாவிய ரீதியில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள இரண்டாவது மாவட்டமாக யாழ்ப்பாணம் காணப்படுகின்றது. யாழ். மாவட்டத்தில் கடந்த 16 நாட்களில் 291 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உடுவில், சாவகச்சேரி மற்றும் யாழ். மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளிலேயே அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக யாழ். மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் கனகராஜா நந்தகுமாரன் குறிப்பிட்டார்.

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் யாழ். மாவட்டத்தில் உள்ள பல வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு காய்ச்சாலால் யாழ். மாவட்டத்தில் கடந்த வருடம் மூவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தடுமாறும் சூர்யா!!

சூர்யா நடித்த சிங்கம் 3 படம் ஜனவரி 26ம் திகதியன்று உலகம் முழுவதும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சூர்யா இந்த படத்தை ஏற்கனவே திட்டமிட்டப்படி வெளியிடாமல் தள்ளிவைத்ததற்கு காரணம் ஒரே திகதியில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியிடவேண்டும் என்பதற்காகத்தான்.

ஆனால் தற்போது அதுவும் நடக்காது போலிருக்கிறது. காரணம் என்னவெனில் பொங்கலுக்கு வெளியான சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணாவின் படங்கள் திரையிட்ட இடமெல்லாம் நல்ல வசூலுடன் போய்க் கொண்டிருக்கிறது. அதனால் பட மாளிகை அதிபர்கள் தங்கள் படமாளிகையை சூர்யாவின் படமான சிங்கம் 3 க்கு கொடுப்பதற்கு யோசித்து வருகின்றனர்.

சூர்யாவின் சிங்கம் 3 படத்தின் தெலுங்குவெளியிட்டிற்கு பொறுபேற்றிருக்கும் முன்னணி தயாரிப்பாளர்களான அல்லு அரவிந்த் மற்றும் தில் ராஜு ஆகியோர் என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பதில் இருக்கிறார்களாம். படத்தை ஒத்திவைக்க சூர்யா தரப்பு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் சூர்யாவும் படக்குழுவினரும் தடுமாறி வருகின்றனர். பெரிய பட்ஜட் படமென்றால் இது எல்லாம் சகஜம்தானோ என்னவோ..!

வவுனியா புதிய பேரூந்து நிலையத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கான சேவை ஆரம்பம்!!

 
வவுனியா யாழ் வீதியில் நேற்று முன்தினம் (16.01.2017) மத்திய போக்குவரத்து அமைச்சரினால் திறந்துவைக்கப்பட்ட புதிய பேரூந்து நிலையத்தில் செயற்பாடுகள் இன்று நடைபெறுகின்றது.

நேற்று வவுனியா பேரூந்து நிலையத்தில் இடம்பெற்ற அசம்பாவித சம்பவங்கள் தொடர்பில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஆராயப்பட்டதுடன் இன்றிலிருந்து வெளி மாவட்டங்களுக்கான போக்குவரத்துச் சேவைகளை மேற்கொள்வதற்கு அரச மற்றும் தனியார் பேரூந்துகள் முடிவு எடுக்கப்பட்டதுடன் இன்று முதல் அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி இன்று காலை முதல் தனியார் மற்றும் அரச பேரூந்துகள் இணைந்த நேர அட்டவணையில் ஒருவாரத்திற்கு சேவை மேற்கொள்வதற்கும் இணங்கி செயற்பட்டு வருகின்றனர்.

பழைய பேரூந்து நிலையத்தில் அரச மற்றும் தனியார் பேரூந்துகள் உள்ளுர்களுக்கான சேவைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதிக எடை தூக்கிய வீரரின் முதுகெலும்பு இரண்டாக உடைந்து சரிந்த சோகம் : அதிர்ச்சி வீடியோ!!

உடற்பயிற்சி கூடத்தில் வீரர் ஒருவர் அதிக எடை தூக்கிய போது முதுகெலும்பு இரண்டாக உடைந்து கீழே சரிந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர வைத்துள்ளது.

குறித்த வீடியோவில், இளைஞர் ஒருவர் ஜிம்மில் உடற்பயிற்சி ஆடை அணிந்து நிற்கிறார். பின்னர், கீழே அதிக எடையுடன் இருக்கும் பளுவை தூக்குகிறார்.

பளுவை தூக்கி நிமிர்ந்து நிற்கும் போது திடீரென கீழே போடுகிறார். பின்னர், அப்படியே சரிந்து கீழே விழுகிறார்.

பின்னர், அவருக்கு எக்ஸ்-ரே எடுத்து பார்த்ததில் அவரின் முதுகெலும்பு இரண்டாக உடைந்துள்ளது தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் சீனாவில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. யூடியூப்பில் வெளியான குறித்த காட்சியை கண்ட பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

வவுனியா சேமமடு சண்முகானந்தா மகா வித்தியாலயத்தின் பொங்கல் விழா!(படங்கள்)

பல்லினத் தன்மையை மற்றும் பல்லினத் தன்மையின் அழகை இரசிப்போம்” எனும் கல்வியமைச்சின் கருப்பொருளுக்கமைவாக  வவுனியா சேமமடு சண்முகானந்தா மகா வித்தியாலயத்தின் தைப்பொங்கல் விழாவானது அதிபர் திரு.செ.சசிக்குமார்   அவர்களின் தலைமையில் நேற்று   (17.01.2017) வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.

ஆசிரியர்கள் , மாணவர்கள்,பெற்றோர் ,பழையமாணவர் ஆகியோரது பங்குபற்றலுடன் மேற்படி பொங்கல்  விழா இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது .

விபத்தில் மூளைச்சாவடைந்த இளைஞரின் இதயம் தானம் செய்யப்பட்டதால் இளம்பெண்ணிற்கு மறுவாழ்வு!!

உடல் உறுப்பு தானம் செய்வதன் மூலம் இறந்த பின்னும் மற்றொருவர் உடலில் நாம் உயிர் வாழ முடியும். மேலும் இறந்தும் இன்னொருவருக்கு வாழ்வு கொடுக்க முடியும் என்பதால் உடல் உறுப்பு தானம் செய்ய வேண்டியதின் அவசியம் பற்றி தற்போது வலியுறுத்தப்படுகிறது. இதன்மூலம் விழிப்புணர்வு ஏற்பட்டு பலரும் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

கேரள மாநிலம் கொச்சியில் விபத்தில் மூளை சாவு அடைந்த ஒரு வாலிபர் தனது இதயம், நுரையீரல் தானம் மூலம் ஒரு இளம்பெண்ணிற்கு மறு வாழ்வு கொடுத்துள்ளார். அவரது பெயர் நிதின் (வயது 26).

மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்தில் சிக்கிய நிதின் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் கொச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் அவர் மூளை சாவு அடைந்தார்.

இதனால் அவர் இனி உயிர் பிழைப்பது கடினம் என்பதால் இதை அவரது பெற்றோரிடம் டாக்டர்கள் கூறினார்கள். மகனின் இந்த நிலை குறித்து மிகவும் கவலையடைந்த பெற்றோர் டாக்டர்களின் அறிவுரைப்படி நிதினின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி அவரது இதயம் மற்றும் நுரையீரல் கொச்சி தனியார் ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜெனிஷா (24) என்ற இளம்பெண்ணுக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது.

இதைதொடர்ந்து டாக்டர்கள் நிதினின் இதயம் மற்றும் நுரையீரலை அகற்றி அதை பாதுகாப்பாக ஆம்புலன்ஸ் மூலம் 10 நிமிடத்தில் ஜெனிஷா சிகிச்சை பெற்ற ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதற்கு போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சரிசெய்து மிகவும் உதவியாக இருந்தனர். அங்கு 12 மணி நேரம் ஆபரே‌ஷன் நடத்தி ஜெனிஷாவுக்கு வெற்றிகரமாக மாற்று இதயம் மற்றும் நுரையீரல் பொருத்தப்பட்டது. தற்போது அவர் நலமாக உள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

நிதினின் இதயம் மற்றும் நுரையீரல் மூலம் மறுபிறவி எடுத்துள்ள ஜெனிஷாவின் குடும்பத்தினர் இதற்காக நிதினின் பெற்றோருக்கு கண்ணீர்மல்க தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.

கண்ணிவெடிகளை அகற்ற ஆளில்லா விமானத்தைக் கண்டு பிடித்த 14 வயது மாணவன்!!

கண்ணிவெடிகளை பாதுகாப்பாக அகற்ற ஆளில்லா சிறிய ரக விமானம் ஒன்றை குஜராத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் உருவாக்கியுள்ளார்.

உலகம் முழுவதும் கண்ணி வெடிகளை அகற்றும் பிரச்சினை மிகப்பெரும் சவாலாக உரு வெடுத்துள்ளது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் குஜராத்தைச் சேர்ந்த 14 வயது மாணவர் கண்ணிவெடிகளை கண்டுபிடித்து அழிக்கும் ஆளில்லா குட்டி விமானத்தை உருவாக்கியுள்ளார்.

குஜராத்தின் அகமதாபாத் பாபு நகரைச் சேர்ந்த 14வயதுடைய ஹர்ஷவர்தன் ஜாலா அங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.

சிறுவயது முதலே ஏரோநாட்டிக்கல் இன்ஜினீயரிங் துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட அவர், கண்ணிவெடிகளை அகற்றுவதற் காக 3 விதமான ஆளில்லா குட்டி விமானங்களை உருவாக்கியுள் ளார்.

இதில் 2 விமானங்களை தயாரிக்க அவரது தந்தை ரூ.2 லட்சம் வழங்கினார். மாணவரின் திறமையை அறிந்த மாநில அரசு ரூ.3 லட்சம் நிதியுதவியை அளித் தது. அதன் மூலம் மேம்படுத்தப்பட்ட 3வது ஆளில்லா விமானத்தை ஜாலா உருவாக்கியுள்ளார்.

மகாகவி பாரதியாரின் 98 ஆண்டு பழமையான புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது!!

ஆங்கிலேய ஆட்சியில் அடிமைப்பட்டுக் கிடந்தவர்களை தனது புரட்சிகரமான கவிதைகளால் தட்டி எழுப்பியவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.

தனது தனிச்சிறப்பு வாய்ந்த கட்டுரைகளால் மக்களிடையே விடுதலை வேட்கையைத் தூண்டிய பாரதியாரின் 98 ஆண்டுகால பழமையான புகைப்படம் ஒன்று தற்போது கிடைத்துள்ளது.

புதுடெல்லியில் கிடைத்த இந்த புகைப்படத்தை சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையின் பேராசிரியர் மணிகண்டன் நேற்று (16) சென்னையில் நடந்த ஒரு விழாவில் வெளியிட்டுள்ளார்.

முன்னாள் மதராஸ் மாகாணத்தின் விக்டோரியா ஹாலில் 2-3-1919 அன்று நடந்த கருத்தரங்கில் பாரதியார் பேச வந்தபோது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

தலையில் முண்டாசு கட்டி, முறுக்கு மீசையுடன் கம்பீரமாக தோற்றமளிக்கும் இந்த பழமையான புகைப்படத்தையும் சேர்த்து பாரதியாரின் அசல் புகைப்படங்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.

இறந்தவர்களின் கால் கட்டை விரல்கள் கட்டப்படுவது ஏன் என்று தெரியுமா?

மனிதர்கள் இறந்த பின்னர் பல்வேறு சடங்குகள் மேற்கொள்ளப்பட்டு அவர்களது உடல் அடக்கம் செய்யப்படுகிறது. அதில், ஒன்றுதான் இறந்தவர்களின் கால் கட்டை விரல்களை ஒன்று சேர்த்து கட்டி வைப்பது.

மரணம் நிகழ்ந்த பிறகுகூட பிராண சக்தி ஸ்தூல உடலை விட்டு முழு வதும் அகன்றுவிடுவதில்லை. என வே, அந்த உயிர் உடலை சுற்றிக் கொண்டே இருக்கிறது. இதனால் தான் இறந்தவர்களின் கால் விரல்கள் கட்டப்படுகின்றன.

மேலும், மரணம் நிகழ்கிற போது கால்கள் அகலமாகத் திறந்து கொள்கின்றன. அந்த நிலையில் பின்புறத் துவாரம் திறந்திருக்கும். எனவே பிரிந்து போன உயிர் அந்த மூலாதாரம் வழியே உள்ளே நுழைய முயலும். அது அந்த உயிருக் கும் அந்தச் சூழலுக்கும் நல்ல தல்ல.

எனவே, கால் கட்டை விரல்களைக் கட்டுவதன் மூலம் மூலாதாரம் மூடப்படுகிறது. யோகக் கிரியைகள் செய்வதற்காக நீங்கள் கால்கட்டை விரல்களை ஒன்று சேர்க்கும்போது பின்புறத் துவாரம் இயல்பாகவே மூடிக்கொள்ளும்.

இதையேதான் இறந்தவர்களுக்கும் செய்கிறார்கள். எனவே உடலை கைக்கொள்ளலாம் என்கிற அந்த உயிரின் முயற்சி இப்போது பலிக்காது.

மூலாதாரம் திறந்திருக்கிற போது அந்த உடலின் உள்ளே நுழைய வேறு சில ஆவிகளும் முயலக்கூடும். பிரிந்து சென்ற ஆன்மாவைப் பலவிதங்களில் துன்புறுத்துவதாக இருக்கும்.

அதனால் தான் ஒரு மனிதர் இறந்துவிட்டார் என்று தெரிந்ததும் அவரின் கால் கட்டைவிரல்கள் ஒன்று சேர்த்துக் கட்டப்படுகின்றன.

2050 இல் கடலில் மீன்களை விட பிளாஸ்டிக் கழிவுகளே அதிகமாக இருக்கும் : ஆய்வில் தகவல்!!

சர்வதேச அளவில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகள் அதிகரித்து வருகின்றன. ஆனால், பிளாஸ்டிக் பொருட்கள் மக்கும் தன்மையற்றவை என்பதால் அவை மனித இனத்திற்கு கேடு விளைவிப்பவையாக உள்ளன.

1964 ஆம் ஆண்டில் தொடங்கிய பிளாஸ்டிக் பாவனை, கடந்த 2014 ஆம் ஆண்டில் 311 மில்லியன் டன் (31 கோடி டன்) ஆகிவிட்டது. எனவே, பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி முறையில் அதிக அளவில் மீண்டும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கடலில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு அதிகரித்துள்ளது. இந்த நிலையை உடனடியாக மாற்றாவிட்டால், 2050 ஆம் ஆண்டில் கடலில் வாழும் மீன்களின் எடையை விட பிளாஸ்டிக் கழிவுகளின் எடை அதிகமாக இருக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆகவே, பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி முறையில் மீண்டும் பயன்படுத்துவது குறித்த ஆலோசனைக்கூட்டம் இங்கிலாந்தின் தவோஸ் நகரில் நடைபெற்றது.

அதில் உலகின் முன்னணி தொழிற்சாலைகளின் அதிபர்கள் 40 பேர் கலந்துகொண்டனர்.

தற்போது 14 சதவீதம் பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி முறையில் பயன்படுத்தப்படுகின்றது. அதை 70 சதவீதமாக உயர்த்த புதிய திட்டம் தயாரிக்கப்பட்டு, அது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு நடைபெறும்வரை போராட்டம் தொடரும் : இயக்குனர் அமீர் ஆவேசம்!!

அலங்காநல்லூரில் இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் அமீர் ஜல்லிக்கட்டு நடக்கும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மதுரை அலங்காநல்லூரில் இளைஞர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதில் பங்கேற்பதற்காக திரைப்பட இயக்குனர் அமீர் அலங்காநல்லூர் வாடிவாசல் பகுதிக்கு வந்தார். அவர், இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு, பீட்டா அமைப்பை கண்டித்தும், ஜல்லிக்கட்டை தடை செய்த மத்திய அரசை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் பின்வருமாறு தெரிவித்தார்..

தமிழர்களின் பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றின் சான்றாக நடக்கும் ஜல்லிக்கட்டை தடைசெய்வது கண்டிக்கத்தக்கது. தமிழரின் பாரம்பரியத்தை தடை செய்ய நினைக்கும் பீட்டாவை தடை செய்ய வேண்டும்.

தமிழகம் முழுவதிலும் இருந்து அலங்காநல்லூரில் நடைபெறும் போராட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு போராடி வருகின்றனர். இளைஞர்களின் இந்த போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும். இளைஞர்களுடன் நாங்களும் தொடர்ந்து போராடுவோம்.

ஜல்லிக்கட்டு நடத்தும் வரை எங்கள் போராட்டம் தொடரும். உச்சநீதிமன்றம் மறுபரிசீலனை செய்து ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் தீர்ப்பு வழங்க வேண்டும். தமிழர்களின் உண்மையான உணர்வை உச்சநீதிமன்றமும், மத்திய அரசும் புரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

பிரித்தானியாவை தொடர்ந்து அச்சுறுத்தும் ஏலியன்ஸ்: கமெராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி!!

பிரித்தானியாவில் ஏலியன்ஸ் விண்கலம் சுற்றி திரியும் புகைப்படம் வெளியாகி அதிர வைத்துள்ளது.

மான்செஸ்டர் பகுதியிலே குறித்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. 35 வயதான Ben Carlin என்ற நபரே குறித்த காட்சியை முதலில் கண்டு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

சம்பவம் குறித்து Ben Carlin கூறியதாவது, சம்பவத்தின் போது அருகில் உள்ள கடைக்கு பால் வாங்க சென்றேன்.

அப்போது, எதார்த்தமாக வானத்தை பார்த்தே போது நிலவுக்கு அருகில் ஒரு அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் ஒன்றை கண்டு அதிர்ச்சியடைந்தேன்.

உடனே நான் போனை எடுத்து அதை புகைப்படம் எடுத்தேன். என்னை பார்த்து மற்றொரு நபரும் அந்த மர்ம பொருளை பார்த்தார். சுமார் ஐந்து நிமிடம் பறந்த அந்த பொருள் உடனே மறைந்தது.

இதன்மூலம் கண்டிப்பாக யாரே நமது பிரபஞ்சத்தை கண்காணித்து வருகிறார்கள் என தெளிவாக தெரிவதாக Ben Carlin கூறியுள்ளார்.

சமீபத்தில் பிரித்தானியா வானில் ஏலியன்ஸ் விண்கலம் சுற்றிய வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது நினைவுக்கூரத்தக்கது.