வவுனியாவில் பைரவா திரைப்படம் பார்க்கச் சென்ற இளைஞர்களுக்குள் திரையரங்குக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. திரையரங்குக்கு சென்ற பொலிசார் நிலமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியாவில் உள்ள திரையரங்கில் மாலை 5மணிக்கு போடப்பட்ட பைரவா திரைப்பட காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த இளைஞர்கள் சிலர் திரைப்பட காட்சிகளைப் பார்த்து கூச்சல் போட்டுக் கொண்டிருந்துள்ளனர். இதன்போது இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் வாய்தர்க்கம் ஏற்பட்டு குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தின் தமிழ் மொழி மூல தொலைபேசி முறைப்பாட்டுப் பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
உடனடியாக விரைந்து செயற்பட்ட பொலிசார் திரையரங்குக்கு சென்று அங்கு ஏற்பட்ட குழப்ப நிலையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். திரைப்படக் காட்சி தொடர்ந்து இடம்பெற்றது.
தலைமைப் பொறுப்பை ஏற்கச் சொல்லி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு அழைப்பு விடுக்கும் அ.தி.மு.க நிர்வாகிகளின் எண்ணிக்கை தொடர்ந்து கூடிக்கொண்டே போகிறது.
வாசலில் தோரணம் கட்டியும், வீட்டில் எம்.ஜி.ஆர் படப்பாடல்களை ஸ்பீக்கரில் ஒலிக்க வைத்தும் பொங்கல் நாளில் களை கட்டியது தீபாவின் வீடு.
தீபாவுக்கு பொங்கல் வாழ்த்து சொல்ல ஜனவரி 14ம் திகதி மாலை அவர் வீட்டுமுன் தொண்டர்கள் திரண்டதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப் பட்டது.
‘தீபாம்மா பொட்டு வைப்பதில்லை என்ற கருத்தை இனி யாரும் சொல்ல முடியாது… அதோ பாருங்க பொட்டு வைத்து தீபாம்மா, அம்மா மாதிரியே கையைக் காட்டிக்கிட்டு வர்றாங்க’ என்று நெகிழ்கின்றனர் ஆதரவாளர்கள்.
சென்னை மாநகராட்சி சேர்மன் மற்றும் எழும்பூர் அ.தி.மு.க. பகுதிச் செயலாளர் மகியன்பன், பெரம்பூர் தொகுதி முன்னாள் பகுதிச் செயலாளர் எஸ்.எம்.மாரிமுத்து, திரு.வி.க.நகர் முன்னாள் இளைஞரணி பகுதிச் செயலாளர் எபிநேசன், ஆர்.கே.நகர். சட்டமன்ற தொகுதி செயலாளர் பாலசுப்பிரமணி போன்ற சென்னையின் முக்கிய நிர்வாகிகள் தீபாவுக்கு பொங்கல் வாழ்த்து சொல்லி வந்திருக்கிறார்கள்.
இன்னொருபுறம் எம்.ஜி.ஆர் பிறந்தநாளான ஜனவரி 17ம் தேதியன்று சென்னையில் பகுதி வாரியாக பொதுக் கூட்டம் நடத்தும்படி அ.தி.மு.க தலைமையிலிருந்து மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவு போயுள்ளது.
தலைமையின் உத்தரவுப்படி வடசென்னை தெற்கு மாவட்ட செயலாளர் நா.பாலகங்கா, பகுதிச் செயலாளர்களைக் கூப்பிட்டு கூட்டத்தை நடத்தும்படி சொல்லியிருக்கிறார்.
ஆனால், எழும்பூர் அ.தி.மு.க. பகுதிச் செயலாளர் மகியன்பன் “அப்படியெல்லாம் எனக்கு எந்த எண்ணமும் கிடையாது நான் கூட்ட ஏற்பாடுகளை செய்ய மாட்டேன்” என்று சொல்லி விட்டாராம்.
எழும்பூர் பகுதிக் கழக ஏற்பாட்டில் நடக்கும் கூட்டத்தில் மனோபாலா பேசுகிறார் என்று போஸ்டர் அச்சடிக்கும் வேலைகளும் நடந்து விட்டது.
இந்த நிலையில்தான், “கூட்டம் போடுவதைப் பற்றி என்னிடம் பேச வேண்டாம், கூட்ட ஏற்பாட்டில் என் பெயரையும் போட வேண்டாம்” என்று பாலகங்காவிடம் மகியன்பன் சொல்லியிருக்கிறார்.
ஜனவரி 17 அன்று எழும்பூரில் நடக்கிற கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்ற உறுதியோடு பொங்கலன்று தீபாவையும் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்து விட்டு மகியன்பன் திரும்பியிருக்கிறார்.
“பாலகங்காவை மீறி, கூட்டத்தைப் புறக்கணித்ததோடு, தீபாவை பார்த்து பொங்கல் வாழ்த்து சொல்லி விட்டு வந்ததாக சொல்கிறார்களே?” என்று மகியன்பனிடம் கேட்டதும், “நீங்க கேள்விப்பட்ட அத்தனை தகவல்களும் உண்மைதான்… நாங்கள் தீபாம்மாவை பார்த்து விட்டுத்தான் வந்தோம்” என்று ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டார்.
மகியன்பனுடன் வந்திருந்தவர்கள், “சென்னை மாவட்டமே இரண்டொரு நாளில் காலியாகி விடப் போகிறது பாருங்கள்… இனி தீபாம்மாதான் கட்சியின் எதிர்காலம்.
இப்போது சென்னையில் உள்ள 15 பகுதிச் செயலாளர்களில் ஒருவர் வந்திருக்கிறார்… அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழும்” என்றனர். தீபாவுக்கு ஆதரவு பெருகி வருவதை அடுத்து சசிகலா வட்டாரம் அதிர்ச்சியில் ஆழ்ந்திருப்பதாகத் தெரிகிறது.
அண்மையில் வெளியான ஜூனியர் விகடன் இதழ் சர்வேயில் தீபாவுக்கு அதிக ஆதரவு இருப்பது தெரிவந்துள்ளது. இதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கும் சசிகலா, தனது ஆதரவை அதிகரிப்பதற்கான வழிகளை யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
தமிழகம் முழுவதும் டூர் போவது உள்ளிட்ட திட்டங்களை அவர் கைவசம் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்களால் வென்றது.
புனே நகரில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 350 ஓட்டங்களைக் குவித்தது. ஜோ ரூட் 78 ஓட்டங்களைப் பெற்றார்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய 11.5 ஓவர்களில் 63 ஓட்டங்களுடன் 4 விக்கெட்களை இழந்தது.
எனினும், அணித்தலைவர் விராட் கோஹ்லி 122 ஓட்டங்களையும் கேதார் ஜாதவ் 72 பந்துகளில் 120 ஓட்டங்களையும் குவித்து தமது அணியை பலப்படுத்தினர்.
இந்திய அணி 48.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 356 ஓட்டங்களைக் குவித்தது.
பின்வரிசை வீரர் ஹர்திக் பாண்டியா 37 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 40 ஓட்டங்களைப் பெற்றார். ரவிச்சந்திரன் அஸ்வின் 10 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 15 ஓட்டங்களைப் பெற்றார்.
பிரேசிலில் உள்ள அல்காகஷ் சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையில் நேற்று முன்தினம் (14.01) இடம்பெற்ற மோதலில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கைதிகள் இரு தரப்பினர் வெடி குண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் பரஸ்பர தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். 14 மணித்தியால போராட்டத்தின் பின்னர் பொலிஸார் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இறந்தவர்களில் பெரும்பாலானோரின் தலைகள் துண்டிக்கப்பட்டுக் கிடந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கைதிகள் எவரும் சிறையிலிருந்து தப்பிக்கவில்லை எனவும் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
பிரேசில் சிறையில் கைதிகளுக்கிடையே இடம்பெறும் மோதல்கள் அதிகரித்து வருகின்றன. இவ்வாண்டில் இடம்பெற்ற மூன்றாவது மோதலாக இது பதிவாகியுள்ளது.
முன்னதாக இடம்பெற்ற மோதல்களின் போது சுமார் 100 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
லிபியாவில் இருந்து அகதிகளை ஏற்றிச்சென்ற படகு ஒன்று கடலில் மூழ்கியதில் சுமார் 100 பேர் பலியாகி இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மத்தியதரைக்கடலில் லிபியாவிற்கும் இத்தாலிக்கும் இடையே 50 கிலோ மீட்டர் தொலைவில் இந்த படகு மூழ்கியுள்ளது.
விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் பிரான்ஸ் கடற்படைக் கப்பலும், இரண்டு வர்த்தகக் கப்பல்களும் விமானங்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டன. ஆனால், நான்கு பேரை மட்டுமே உயிருடன் மீட்க முடிந்துள்ளது. 8 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
விபத்திற்குள்ளான படகில் ஏராளமானவர்கள் பயணம் செய்துள்ளதால் 100 க்கும் மேற்பட்டோர் கடலில் மூழ்கிப் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
படகில் பயணித்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் இல்லை.
கடந்த 15 நாட்களுக்குள் 1311 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
யாழ். மாவட்டத்திலும் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 342 பேர் டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வுப் பிரிவு குறிப்பிட்டது.
இதேவேளை, யாழ். மாவட்டத்தில் 126 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 84 பேரும் பதிவாகியுள்ளதுடன், களுத்துறை மாவட்டத்தில் 38 பேர் டெங்கு காய்ச்சலுக்குட்பட்டுள்ளதாக ஆய்வுப் பிரிவு மேலும் சுட்டிக்காட்டியது.
அத்துடன், கடந்த 15 நாட்களில் கொழும்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மாத்திரம் 157 பேர் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி, ஆனைவிழுந்தான் கிராமத்தில் சிறுவன் ஒருவன் தற்கொலை செய்துள்ளான்.
கடந்த வெள்ளிக்கிழமை 13.01.2016 அன்று மாலை தனது வீட்டின் சுவாமி அறையில் தூக்கில் தொங்கியே இறந்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். ஆனைவிழுந்தான் கிராமத்தைச் சேர்ந்த நாகலிங்கம் கஜேந்திரன் வயது 16 எனும் சிறுவனே தற்கொலை செய்துள்ளான்.
குறித்த சிறுவன் க.பொ.சாதாரண தரம் பரீட்சை எழுதிவிட்டு பெறுபேறுக்காக காத்திருந்த மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த மரணம் தொடர்பில் அயலவர்களும் உறவினர்களும் கருத்த தெரிவிக்கையில்,
அண்மையில் குறித்த சிறுவனின் நண்பன் ஒருவன் அதே கிராமத்தில் தற்கொலை செய்து கொண்டமையினையடுத்து விரக்தியடைந்த நிலையில் தனிமையில் இருந்து யோசித்து வந்ததாகவும், மரணமடைந்த நண்பன் தொடர்பில் பெரும் கவலையுற்றிருந்தாகவும் தெரிவித்தனர்.
குறித்த சிறுவனின் தற்கொலை தொடர்பில் மரண விசாரணைiயை மரண விசாரணை அதிகாரி யுடிஏ பிரியந்தவும், திடீர் மரண விசாரணையை மருத்துவர் க.திருலோகமூர்த்தியும் மேற்கொண்டனர்.
ஜனநாயக கட்சியைச் சேர்ந்த அமெரிக்க ஜனாதிபதி பெரக் ஒபாமாவின் ஆட்சிக் காலம் எதிர்வரும் 20ம் திகதியுடன் நிறைவடைகிறது. அவரோடு 8 ஆண்டுகள் துணை ஜனாதிபதியாக ஜோ பிடேன் பணியாற்றி வந்தார்.
புதிய ஜனாதிபதியாக குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு ட்ரம்ப் பதவியேற்க உள்ள நிலையில் ஜனாதிபதி மாளிகையில் நேற்று முன்தினம் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் துணை ஜனாதிபதி ஜோ பிடேனுக்கு அமெரிக்காவின் மிக உயரிய விருதான ‘மெடல் ஒப் பிரீடம்’ (சுதந்திர விருது) விருதினை ஜனாதிபதி பெரக் ஒபாமா அறிவித்தார்.
விருது குறித்து பிடேனுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படவில்லை. திடீரென நாட்டின் மிக உயரிய விருது அறிவிக்கப்பட்டதால் தன்னையறியாமல் பிடேன் கண்கலங்கினார்.
ஜனாதிபதி பெரக் ஒபாமா விருதுக்கான பதக்கத்தைப் பிடேனுக்கு அணிவித்தபோதும் அவரால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
நன்றி உரை நிகழ்த்திய பிடேன், இந்த விருதுக்கு நான் தகுதியானவன் இல்லை. எனினும் இதனைப் பணிவோடு ஏற்றுக் கொள்கிறேன். அமெரிக்காவின் மிகச் சிறந்த ஜனாதிபதி பராக் ஒபாமா. அவரோடு இணைந்து பணியாற்றியதில் மிகுந்த பெருமை கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
தைத்திருநாளை முன்னிட்டு வவுனியா, புதுக்குளம் சித்தி விநாயகர் விளையாட்டுக்கழகம் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி தமது மண்ணுக்கு பெருமை சேர்த்த மாணவர்களை கௌரவித்தது.
விளையாட்டுக் கழகத்தின் தலைவர் பா.பார்த்தீபன் தலைமையில் நேற்று (14.01) இந் நிகழ்வு மைதான அரங்கத்தில் இடம்பெற்றது.
வவுனியா, புதுக்குளம் பாடசாலையில் கல்வி பெற்று தற்போது வெளியாகிய உயர்தரப் பரீட்சையில் கணித துறையில் மாவட்ட மட்டத்தில் நான்காம் இடத்தையும், வர்த்தக பிரிவில் மாவட்டத்தில் முதல்நிலையையும், கலைத்துறையில் மாவட்டத்தில் எட்டாம் நிலையையும் பெற்ற மாணவர்கள் மற்றும் இப்பகுதியில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி கல்வி கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்கள் 12 பேர் உட்பட 15 மாணவர்களுக்கு கௌரவிப்பும், அவர்களுக்கான சிறு உதவுத் தொகையும் வழங்கப்பட்டது.
மாணவர்கள் புதுக்குளம் சிவன் ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு சித்திவிநாயகர் விளையாட்டு மைதான அரங்கில் நிகழ்வுகள் இடம்பெற்றன.
இது தவிர, தைத்திருநாளை முன்னிட்டு நடைபெற்ற சிநேக பூர்வ கரப்பந்தாட்டப் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு வெற்றிக் கேடயமும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சுகாதார அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ப.சத்தியசீலன், புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் முன்னாள் அதிபரும், வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் தற்போதைய அதிபருமான தா.அமிர்தலிங்கம், புதுக்குளம் மாகவித்தியாலய அதிபர் ச.சுபாஸ்கரன், புதுக்குளம் ஆரம்ப பாடசாலை அதிபர் திருமதி க.சொக்கலிங்கம் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.
வவுனியா, ஓமந்தை சோதனைச்சாவடி அமைந்திருந்த பகுதியில் இருந்து இராணுவம் நேற்று மாலை முதல் வெளியேறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
கடந்த யுத்த காலத்தில் வடக்கில் இருந்து தெற்கிற்கும், தெற்கில் இருந்து வடக்கிற்குமான நுழைவாயிலாகவும் மக்களையும் பொருட்களையும் சோதனையிடும் பிரதான சோதனைச்சாவடியாகவும் இருந்த இப்பகுதி 21 பேருக்கு சொந்தமான 24 ஏக்கர் காணியாக காணப்பட்டிருந்தது.
இந் நிலையில் யுத்தம் நிறைவடைந்தன் பின்னர் இக்காணின் உரிமையாளர்கள் தொடச்சியாக தமது காணிகளை மீள் ஒப்படைக்கவேண்டும் என கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது இராணுவம் அப்பகுதியில் இருந்து வெளியேறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட போது குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்த போதிலும் இராணுவம் அப்பகுதியில் நிலைகொண்டிருந்தது. தற்போது இராணுவம் தமது தேவைக்காக அமைத்திருந்த கட்டிடங்களை அகற்றி வருவதுடன் தளபாடங்களையும் அப்புறப்படுத்துவதற்கான செயற்பாட்டை முன்னெடுத்துள்ளது.
இந் நிலையில் குறித்த காணியின் உரிமையாளர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ள நிலையில் சில தினங்களில் இக் காணிகள் உத்தியோகபூர்வமாக கையளிப்பதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வவுனியா கண்ணாட்டி கணேசபுரம் பகுதியில் இன்று (15.01.2017) காலை 8.30 மணியளவில் தமது கிராமத்திலுள்ள கிராம அபிவிருத்திச்சங்கத்தின் புதிய நிர்வாகத்தினை தெரிவு செய்யுமாறு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஒன்றினைந்து ஆர்ப்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியா கண்ணாட்டி கணேசபுரம் பகுதியிலுள்ள இரண்டு கிராம அபிவிருத்திச்சங்கங்களின் புதிய நிர்வாகத்தினை பொதுமக்கள் முன்நிலையில் மேற்கொள்ளுமாறு தெரிவித்து அப்பகுதி மக்களால் இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மக்களை புறக்கணித்து செயற்படும் அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய், ஐந்து வருடம் கிராமத்தில் சேவை செய்யும் உத்தியோகத்தர்கள் கிராமத்தில உண்மை செயற்பாட்டாளர்களை புறக்கணிப்பது ஏன், இரத்துச் செய் இரத்தச் செய் புதிய நிர்வாகத்தை இரத்துச் செய், வேண்டும் வேண்டும் பாதிக்கப்பட்ட மக்களுக்களுக்கு நீதி வேண்டும். என பல்வேறு சுலோகங்களை தாங்கியவாறு இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பல ஆண்டுகளாக நிர்வாகம் தெரிவு செய்யப்படவில்லை, தற்போதைய நிர்வாகத்தினர் கிராமத்தின் தேவைகளை அறிந்து கிராமத்தில் அபிவிருத்தி மேற்கொள்ளப்படவில்லை கிராமசேவையாளர் தமக்கு வேண்டியவர்களை நிர்வாகத்தில் உள்ளாங்கி செயற்பட்டு வருகின்றார், பொதுக்கூட்டம் வைப்பதாகத் தெரிவித்து கிராம அபிவிருத்திச்சங்கத்தினை தெரிவு மேற்கொண்டுள்ளதாகவும் இதனை அப்பகுதியிலுள்ள மக்கள் எதிர்ப்பதாகவும் தமது கிராமத்திலுள்ளவர்களை கிராம அபிவிருத்திச்சங்கத்தில் இணைத்துக்கொள்ளுமாறு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தினை அப்பகுதி மக்கள் மேற்கொண்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதிக்குச் சென்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன், அப்பகுதி மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்ததுடன், புதிய நிர்வாகத்தெரிவினை மேற்கொள்வதற்கு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருடன் நாளை கலந்துரையாடி தீர்வினைப் பெற்றுத்தருவதாகவும் தெரிவித்தனர்.
வவுனியாவில் நாளை (16.01.2016) திறந்து வைக்கப்படவுள்ள புதிய பேரூந்து நிலையத்திறப்பு விழா நிகழ்வினை மக்கள் பிரதிநிதிகள், வடமாகாணசபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்க வேண்டுமேன வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நாளை மத்திய அமைச்சர்களினால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ள புதிய மத்திய பேரூந்து நிலையத்திறப்பு விழாவில் மக்கள் பிரதிநிதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாணசபை உறுப்பினர்கள் என பலர் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் வடமாகாண முதலமைச்சர் வெளிநாடு சென்றுள்ள நிலையில் அவரையும் புறக்கணித்து இப்பேரூந்து நிலையம் திறக்கப்பட உள்ளதையிட்டு நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாளை திறந்துவைக்கப்படவுள்ள பேரூந்து நிலையத்தின் திறப்பு விழாவினை புறக்கணிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
வவுனியா யாழ் வீதியில், புதிய பஸ் நிலையத்திற்கு அருகாமையில் நியூ லங்கா மருத்துவ நிறுவனம் (NEWLANKA CHANNELING) தனது சேவைகளை நாளை (16.01.2017) திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கின்றது.
Nawaloka Metropolis நிறுவனத்தின் நவீன ஆய்வுகூட வசதிகளுடன் இணைந்ததாக, Ultra Sound Scanning, ECG வசதிகளுடன் வெளிநோயாளர் பிரிவு, மருந்தகம் என்பனவற்றையும் உள்ளடக்கியதாக இந்நிறுவனம் இயங்கவுள்ளது.
அனைத்துத் துறைகளையும் சார்ந்த விசேட வைத்திய நிபுணர்களின் சேவைகளையும் இங்கு பெற்றுக்கொள்ள முடியும், நிறுவனம் ஆரம்பிக்கப்படுவதை முன்னிட்டு பல சலுகைகளை நிறுவனத்தினர் அறிவித்துள்ளனர்.
குறித்த சலுகைகளாவன,
1. வெளி நோயாளர் பிரிவு இலவசமாகச் சேவைகளை வழங்கும்.
2. ECG பரிசோதனை முற்றிலும் இலவசம்
3. ஏனைய பரிசோதனைகளுக்கு 25 வீதம் வரையான விலைக்கழிவு உண்டு.
4. மருந்துகளுக்கு 5 வீத விலைக்கழிவு உண்டு.
சிறப்புச் சலுகைகளாக
* தினமும் முதலில் பதிவு செய்யும் பத்துப் பயனாளிகளுக்கு விசேட வைத்தியர்களைப் பார்வையிடும்போது வைத்தியரின் கட்டணம் இலவசமாகும்.
* ஏனைய நோயாளிகள் அனைவருக்கும் விசேட வைத்திய நிபுணரைப் பார்வையிடும்போது வைத்தியசாலைக் கட்டணம் இலவசமாகும்.
* ஒவ்வொரு வார இறுதியிலும் சிறுநீரக நிபுணரின் சிகிச்சை இலவசமாக வழங்கப்படும்.
* Ultra Sound Scanning பரிசோதனை செய்யும்போது 50 வீத கட்டணக்கழிவு உண்டு.
* முதல் வாரத்தில் பதிவு செய்யும் கர்ப்பிணித்தாய்மார்கள் அனைவருக்கும் பிரசவம் வரையான Ultra Sound Scanning இலவசம்.
இவற்றை விட ஆரம்ப தினத்தில் உடல் பரிசோதனை, வைத்திய ஆலோசனைகள், குருதிக் குளுக்கோஸ் பரிசோதனை என்பன இலவசமாக வழங்கப்படவுள்ளன.
இவை அனைத்தும் வரையறுக்கப் பட்ட காலப்பகுதிக்கே வழங்கப்பட உள்ளன. அத்துடன் சலுகைகள் அனைத்தும் முன்பதிவு செய்துகொள்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். எனவே தொலைபேசி மூலமோ/ நேரிலோ முன்பதிவு செய்து சலுகைகளைப் பெற்றுப்பயனடையுமாறு நிறுவனத்தினர் அன்புடன் அழைக்கிறார்கள்.
Newlanka Channeling
52 யாழ் வீதி,
வவுனியா
தொலைபேசி : 0244930095, 0244930096
வவுனியாவில் நேற்று இரவு 10.30 மணியளவில் கைக்குண்டு, இடியன் துப்பாக்கி என்பனவற்றுடன் காட்டில் வசித்து வந்த கணவன் மனைவி ஆகிய இருவரையும் ஓமந்தைப் பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..
ஓமந்தைப் பொலிசார் நேற்று மேற்கொண்ட நடவடிக்கையின்போது வவுனியா பாலமோட்டை, காட்டுப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் வசித்து வந்த கணவன் மனைவி ஆகியோரைக்கைது செய்துள்ளதாகவும் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின்போது இவர்களிடமிருந்து கைக்குண்டு இடியன் துப்பாக்கி என்பனவற்றைக் கைப்பற்றியுள்ளதாகவும் இவர்கள் இருவரும் காட்டில் பல காலமாக வசித்து வந்துள்ளதாகவும் கணவன் மீது மாங்குளம், ஓமந்தை ஆகிய பொலிஸ் நிலையங்களில் கசிப்பு உற்பத்தி செய்துவருவதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் பாலமோட்டை கோவில்குஞ்சுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் இவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.