தாயின் பிரிவால் உயிரை விட்ட மகள் : மனதை நெகிழ வைத்த சம்பவம்!!

 
தாய் மற்றும் பிள்ளைகளுக்கு இடையில் உள்ள உறவு இந்த உலகத்தில் உள்ள மற்றுமொரு வலுவான பிணைப்பாகும்.

அதேபோன்று காலி, அக்குரஸ்ஸ, கனஹலாகம பிரதேசத்தில் தாய், ஒருவரும் மகள் ஒருவரும் வலுவான பிணைப்பில் வாழ்ந்து வந்துள்ளனர்.

தாய்க்கு 77 வயதாகும் வரை, தாய் குறித்து மகளும், மகள் குறித்து தாய்க்கும் இடையில் அளவற்ற அன்பு காணப்பட்டுள்ளது.

குறித்த மகள் திருமணம் முடிந்து 3 பிள்ளைகளுடன் குடும்ப வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் அவரது தாயார் நோய்வாய்ப்பட்டு கடந்த 12ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

தனது தாயாரின் திடீர் பிரிவு கடுமையாக மகளை பாதித்துள்ளது. அதனால் ஏற்பட்ட துயரத்தில் மூன்று பிள்ளைகளை தவிக்க விட்டு மகளும் உயிரிழந்துள்ளார்.

52 வயதுடைய இந்திரானி ராஜபக்ச என்ற மகளும் 77 வயதுடைய கருணாவத்தி வெதசிங்க என்ற பெண்ணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

விசா இன்றி பயணிக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கையும்!!

பலமான கடவுச்சீட்டுக்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இடம்பிடித்துள்ளது. இதன்படி, இலங்கை 88 ஆவது இடத்தை பிடித்துள்ளதாக 2017 ஆம் ஆண்டுக்கான கடவுச் சீட்டு சுட்டெண் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, 2016 ஆம் ஆண்டிற்கான கடவுச் சீட்டு சுட்டெண் வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கை 87 ஆவது இடத்தை பெற்றுள்ளது.

இந்த நிலையில், 35 நாடுகளுக்கு விசா பெற்றுக்கொள்ளாமல் பயணிப்பதற்கான வாய்ப்பு இலங்கையர்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பட்டியலில் உலகின் பலமான கடவுச் சீட்டாக ஜேர்மன் கடவுச் சீட்டு பெயரிடப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் இடத்தை சுவீடன் மற்றும் சிங்கப்பூர் கடவுச் சீட்டுக்களும் பெற்றுள்ளது.

500 சிறுமிகளிடம் பாலியல் சில்மிஷம் : 12 வருடங்களாக தேடப்பட்டு வந்த நபர் சிக்கினார்!!

இந்திய தலைநகரான டில்லியில் சுமார் 12 ஆண்டுகளாக 500 க்கும் மேற்பட்ட சிறுமிகளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்த நபர் நீண்ட நாட்களாக மேற்கொண்டு வந்த தீவிர தேடுதல் நடவடிக்கைகளின் பின்னர் டில்லி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுனில் ரஸ்தோகி(38), என்பவர் இதுவரை சுமார் 500 க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முற்பட்டதை ஒப்புக்கொண்டுள்ளார்.

கடந்த 2006ஆம் ஆண்டு இவர் செய்த குற்றத்திற்காக ருத்ராபூர், உத்தரகாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் 6 மாத சிறை தண்டனை பெற்றுள்ளார்.

டில்லி, மேற்கு உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் வீட்டிலிருந்து பள்ளிக்கு நடந்துச் செல்லும் சிறுமிகளை குறிவைத்து பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கிழக்கு டில்லியில் உள்ள ஒரு தையல் கடை ஒன்றில் வேலை செய்து வந்த குறித்த நபர், வெவ்வேறு பகுதிகளுக்கு வேலை தேடி செல்லும் பேரில் இவ்வாறான குற்றச் செயல்களை புரிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த நபர் மீது டில்லியில் 3 வழக்கு, ருத்ராபூரில் 2 வழக்கு, பிலாஸ்பூரில் ஒரு வழக்கு என 6 வழகுக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக டில்லி போலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2004ஆம் ஆண்டு, மயூர் விஹார் பகுதியில் வசித்து வந்த சுனில் பக்கத்துவீட்டு சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றதையடுத்து, அவரையும், அவரது குடும்பத்தினரையும் அப்பகுதி மக்கள் விரட்டியடித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த டிசம்பர் 13ஆம் தேதி பள்ளியிலிருந்து வீடு திரும்பிய 10வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இது குறித்து எவ்வித முறைப்பாடும் தெரிவிக்காத அந்த சிறுமியின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, அவரது பெற்றோர்கள் பொலிஸ் நிலையில் முறைப்பாடு செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த அங்க அடையாளங்களைக் கொண்டு குறித்த நபரை பொலிஸார் தேடி வந்த நிலையில், கடந்த ஜனவரி 12ஆம் திதி, புது அசோக் நகர் பகுதியிலும் 2 சிறுமிகள் கடத்தப்பட்ட சம்பவத்திலும் குற்றவாளியை தேடும் பணியில் பொலிஸார் தீவிரம் காட்டினர்.

இந்நிலையில், 9 மற்றும் 10 வயது மதிக்கத்தக்க சிறுமிகள் மாலை நேர வகுப்பு முடிந்து வீடு திரும்பும்போது, புதிய ஆடை தைத்து தருவதாகக் கூறி சிறுமிகளை கட்டுமானப் பணி நடைபெற்று வந்த கட்டிடத்தின் மாடிப்படி அருகே இழுத்துச் சென்று இருவரிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்துள்ளார்.

இதனால் பதற்றமடைந்த சிறுமிகள் கூச்சலிட்டதையடுத்து அங்கிருந்து குறித்த நபர் தப்பியோடியுள்ளார். இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட தேடுதலில் கொண்ட்லி கிராமத்தில் பதுங்கியிருந்த ரஸ்தோகியை பொலிஸார் கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், கடந்த 2004ஆம் ஆண்டு முதல் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக ஒப்புக் கொண்ட ரஸ்தோகியை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், சுனில் ரஸ்தோகியின் பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்ட ஏனைய சிறுமிகளை கண்டறிய டில்லி பொலிஸ் தனிப்படை அமைத்துள்ளது. அதன் மூலம் ரஸ்தோகி மீது மேலும் சில வழக்குகள் பதிவு செய்யப்படும் என்று டில்லி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த காதலனை சூட்கேஸுக்குள் வைத்து கடத்த முயன்ற காதலி!!

சிறையில் அடைக்­கப்­பட்­டி­ருந்த தனது காத­லனை சூட் கேஸ் ஒன்­றுக்குள் வைத்து கடத்திச் செல்ல யுவதி ஒருவர் மேற்­கொண்ட முயற்­சியை வெனி­சூலா அதி­கா­ரிகள் முறி­ய­டித்­துள்­ளனர்.

வெனி­சூ­லாவின் ஜோஸ் அன்­டா­னியோ அன்­ஸோ­டெகுய் எனும் சிறைச்­சா­லையில் இப்ரெய்ன் ஜோஸ் வேர்காஸ் கார்­சியா என்­பவர் அடைக்­கப்­பட்­டுள்ளார். வாகனம் ஒன்றை திரு­டிய குற்­றச்­சாட்டில் அவருக்கு 9 வருட கால சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

அண்­மையில் இப்ரெய்ன் ஜோஸ் வேர்காஸ் கார்­சி­யாவை பார்­வை­யி­டு­வ­தற்­காக அவரின் காதலி அன்டோ­னி­யேட்டா ரொப்லெஸ் சௌடா, மேற்­படி சிறைச்­சா­லைக்குச் சென்றார். தன்­னுடன் 6 வய­தான மக­ளை யும் அன்­டோ­னி­யேட்டா அழைத்துச் சென்­றி­ருந்தார்.

சிறை­யி­லி­ருந்து வெளியே வரும்­போது சக்­க­ரங்கள் பொருத்­தப்­பட்ட சூட்கேஸ் ஒன்றை இழுத்துச் செல்வ­தற்கு அன்­டோ­னி­யேட்டா சிர­மப்­ப­டு­வதை அவ­தா­னித்­த­போது அதி­கா­ரி­க­ளுக்கு சந்­தேகம் ஏற்பட்டது.

அதனால், அந்த சூட்­கேஸை அதி­கா­ரிகள் சோத­னைக்­குட்­ப­டுத்­தினர். அப்­போது, கைதி­யான இப்ரெய்ன் ஜோஸ் வேர்காஸ் கார்­சியா சூட்­கே­ஸுக்குள் இருப்­பதைப் பார்த்து சிறை அதி­கா­ரிகள் திடுக்­கிட்­டனர்.

அதன்பின் கார்­சி­யாவின் காத­லி­யான அன்­டோ­னி­யேட்­டா­வையும் அதி­கா­ரிகள் கைது செய்­தனர். கார்­சியா மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

அன்டோனியேட்டாவுடன் வந்த சிறுமியை வெனிசூலாவின் சிறுவர் பராமரிப்பு அதிகார சபையினர் பொறுப்பேற்றுள்ளனர்.

13 வயது மாணவன் மூலம் கர்ப்பிணியான ஆசிரியைக்கு 10 வருடகால சிறைத் தண்டனை!!

அமெ­ரிக்­காவில் 13 வயது மாண­வ­னுடன் பாலியல் உறவில் ஈடு­பட்டு கர்ப்­ப­ம­டைந்த குற்­றச்­சாட்டில் முன்னாள் ஆசி­ரி­யை­யான யுவதி ஒரு­வ­ருக்கு 10 வருட கால சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

அலெக்­ஸாண்ட்ரா வேரா எனும் இந்த யுவதி, டெக்ஸாஸ் மாநி­லத்­தி­லுள்ள பாட­சா­லை­யொன்றில் ஆசிரி­யை­யாகப் பணி­யாற்­றி­யவர். இவர் அப்­ பா­ட­சா­லையின் மாண­வ­னான சிறுவன் ஒரு­வ­னுடன் நீண்­ட­கா­லமாக பாலியல் தொடர்பு வைத்­தி­ருந்­த­தாக குற்றம் சுமத்­தப்­பட்டார்.

அம் ­மா­ணவன் 13 வய­தா­ன­வ­னாக இருந்­த­போது, அவன் மூலம் அலெக்­ஸாண் ட்ரா வேரா கர்ப்பிணியா­ன­தா­கவும் நீதி­மன்றில் தெரி­விக்­கப்­பட்­டது.

இவ் ­வ­ழக்கில், அலெக்­ஸாண்ட்­ரா­வுக்கு 30 வருட கால சிறைத் ­தண்­டனை விதிக்­கப்­ப­டு­வ­தற்கு வாய்ப்பி­ருந்­தது. எனினும், வழக்கு விசா­ர­ணை­யின்­போது தன் மீதான குற்­றச்­சாட்டை அலெக்ஸாண்ட்ராவேரா ஒப்­புக்­கொண்டார்.

அதே­வேளை, அவர் ஏனைய சிறு­வர்­க­ளுக்கு ஆபத்­தா­ன­வ­ராக இல்லை என்­ப­தையும் நீதி­பதி மைக்கல் மெக்ஸ்­பாடென் ஏற்­றுக்­கொண்டார். எனினும், இவ்­ வி­ட­யத்தில் சமூ­கத்­துக்கு ஒரு தக­வலை தெரி­விக்க வேண்டும் எனக் கூறிய நீதி­பதி, அலெக்­ஸாண்ட்ரா வேரா­வுக்கு 10 வருட கால சிறைத்­ தண்­டனை விதித்து கடந்த வெள்­ளிக்­கி­ழமை தீர்ப்­ப­ளித்தார்.

“கல்வி போதிப்­ப­வர்கள் எமது பிள்­ளை­க­ளுக்கு கற்­பிக்க வேண்டும். பிள்­ளைகள் மீது அவர்கள் கைவைக்கக் கூடாது” எனவும் நீதிபதி மைக்கல் மெக்ஸ்பாடென் தெரிவித்தார்.

துருக்கியின் சரக்கு விமானம் விபத்திற்குள்ளானதில் 32 பேர் உயிரிழப்பு!!

துருக்கியின் சரக்கு விமானம் ஒன்று கிர்கிஸ்தானின் மனாஸ் விமான நிலையத்திற்கு அருகில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் 32 பேர் உயிரிழந்துள்ளனர்

ஹொங்கொங்கில் இருந்து துருக்கி நோக்கி பயணித்த புபோயிங் 747 என்ற விமானமே விபத்திற்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது

மீட்புப்பணியாளர்கள் சம்பவம் நடைபெற்ற இடத்தில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். விமானத்தை செலுத்திய விமானி உள்ளிட்ட 15 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

விமானம் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் பல கட்டடங்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் விபத்தில் உயிரிழந்தவர்களில் சிறுவர்களும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மனாஸ் விமானநிலையத்தில் தரையிறக்கப்படவிருத்த நிலையில் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதுடன் விபத்து இடம்பெற்றமைக்கான காரணம் இதுவரையில் அறியப்படவில்லை.

வவுனியா குருமன்காட்டுச்சந்தியில் மஞ்சள் கோட்டில் சிறுவனை மோதித்தள்ளிய மோட்டார் சைக்கிள்!!

 
வவுனியா குருமன்காட்டுச்சந்தியில் காணப்படும் மஞ்சள் கோட்டில் இன்று (16.01.2017) மாலை 5.50 மணியளவில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளான். இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

குருமன்காட்டுச்சந்தியில் காணப்படும் மஞ்சள் கடவையினை சிறுனொருவன் கடக்க முற்ப்பட்ட சமயத்தில் வவுனியாவிலிருந்து மன்னார் வீதியுடாக பயணித்த மோட்டார் சைக்கிள் இச் சிறுவனை மோதித்தள்ளியது. இவ்விபத்தில் காயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

வவுனியா மத்திய பேரூந்து நிலையம் திறந்து வைப்பு!!

 
வவுனியா, யாழ் வீதியில் அமைக்கப்பட்ட புதிய மத்திய பேரூந்து நிலையத்தை மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று(16.01.2017) திறந்து வைத்தார்.

மத்திய அராங்கத்தினால் 195 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட உள்ளூர் மற்றும் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்தை மேற்கொள்கின்ற பேரூந்துக்களுக்கான பிரதான தரிப்பிடமே திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதில் 13 பேரூந்துகள் மாகாணங்களுக்கிடையிலான சேவையிலும், 21 பேரூந்துகள் உள்ளூர் சேவையிலும் ஈடுபடத்தக்க வகையில் A9 வீதியில் மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் நாளாந்தம் 100 பேரூந்துகள் வந்து செல்லத்தக்க வகையில் நவீன முறையில் இப் பேரூந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் அபயசிங்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மத்திய போக்குவத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, பிரதி போக்குவரத்து அமைச்சர் அபேக்க அபயசிங்க, வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிவமோகன், கே.கே.மஸ்தான், வடமாகாண ஆளுனர் றெஜினோல்ட் குரே, வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், ம.ஜெயதிலக, அரசாங்க அதிபர் ரோஹண புஸ்பகுமார, தனியார் பேரூந்து சஙகத் தலைவர் மற்றும் அதன் உரிமையாளர்கள், இலங்கை போக்குவரத்து சபையினர் எனப்பலரும் இதில் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் குடும்பஸ்தர் மீட்பு!!

வவுனியா ஓமந்தையில் இன்று (16.01.2017) காலை கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஒருவர் ஓமந்தை காட்டுப்பகுதியில் கிடப்பதாக ஒமந்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த ஒமந்தை பொலிஸார் குறித்த நபரை மீட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை திடீர் விபத்துப்பிரிவில் அனுமதித்துள்ளனர். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..

கடந்த (30.12.2016) அன்று கணவன் மனைவி இருவரும் வவுனியா செட்டிக்குளம் உறவினரின் இறுதிக்கிரியைக்கு சென்று கொண்டிருக்கும் போது வவுனியா தாண்டிகுளத்தில் மனைவி (நிஷாந்தன் யாழினி வயது 34) அவசரமாக கனகராயன்குளம் செல்லவேண்டியுள்ளதாக தெரிவித்து பேரூந்திலிருந்து இறங்கியுள்ளார். எனினும் கணவன் உறவினரின் இறுதிக்கிரியைக்கு சென்றுள்ளார்.

மனைவி மாலையாகியும் வீட்டுக்கு வராததையடுத்து கணவரால் கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 02.01.2016 அன்று கடமைக்காக குறித்த நபர் ( தனபாலசிங்கம் நிஷாந்தன் வயது – 33 ) மன்னார் நோக்கி பேரூந்தில் பயணித்துள்ளார். எனினும் இவர் மன்னார்க்கு செல்லவில்லை இதனையடுத்து குறித்த நபரின் தந்தையினால் மகனை காணவில்லையோன்று கனகராயன்குளம் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இன்றைய தினம் (16.01.2016) காலை ஓமந்தை பஸ்தரிப்பிடத்திற்கு அருகே காணப்படும் காட்டுப்பகுதியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஓமந்தை பொலிசாரால் மீட்கப்பட்டு வவுனியா விபத்துப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் சிறுமி மீது துஸ்பிரயோகம்!!

வவுனியா சுந்தரபுரம் பகுதியில் நேற்று (15.01.2017) காலை 9 மணியளவில் 14 வயதுச் சிறுமி மீது துஸ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்தாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவருகையில்,

நேற்று காலையில் வீட்டில் தனியாக இருந்த 14 வயதுச் சிறுமி ஒருவரை அவரது 26 வயதுடைய உறவினர் ஒருவர் கடைக்கு அழைத்துச் சென்றுள்ளார். கடை மூடியிருந்ததையடுத்து அருகிலுள்ள யாருமற்ற வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

இதையடுத்து வீட்டிற்கு வந்த சிறுமி சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துள்ளதை அறிந்த வீட்டார் சிறுமியிடம் விடயத்தினை கேட்டறிந்ததுடன் சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளதுடன் சிறுமியை வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

முறைப்பாட்டினைடுத்து மேற்கொண்ட விசாரணைகளின் பின் உறவு முறையான குறித்த இளைஞனைக் கைது செய்ததுடன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா இராசேந்திரன்குளம் சமுதாய பொலிஸ் குழுவின் ஏற்பாட்டில் பொங்கல் நிகழ்வு!!

 
வவுனியா இராசேந்திரன்குளம் கிராமசேவகர் பிரிவிற்கு உட்பட்ட ‘சமுதாய பொலிஸ் குழு’ மற்றும் கிராமசேவகரின் ஏற்பாட்டில் தைப்பொங்கல் நிகழ்வு வவுனியா நெளுக்குள பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ரத்தனாயக்க தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பொலிஸ் உத்தியோகத்தர்கள்,பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

ஆண் பெண் குரலுக்கு வித்தியாசம் இருப்பது ஏன் என்று தெரியுமா?

மனிதர்களில் ஒருவருடைய குரலானது மற்றொருவரின் குரலோடு 100% பொருந்துவது கிடையாது. இதனால் தான் ஒருவரை அவரின் குரலின் மூலம் அடையாளம் காணமுடிகிறது.

ஆனால் இவ்வுலகில் ஆண் மற்றும் பெண் ஆகிய இருபாலர்களின் குரல்கள் வித்தியாசமாக இருப்பது ஒரு இயல்பான இயற்கையான விஷயமாக இருந்தாலும் அதற்கு என்ன காரணம் என்று யோசித்தது உண்டா?

ஆண் பெண் குரலுக்கு வித்தியாசம் ஏற்படுவதற்கு என்ன காரணம்?

ஆண்களின் குரலானது, பெண்களின் குரலை விட சற்று தடிமனாகவும் கொஞ்சம் கரகரப்பாகவும் இருக்கும்.

அதுவே பெண்களின் குரல் ஆண் குரலை விட மென்மையாகவும் இனிமையாகவும் இருக்கும். இந்த வித்தியாசத்தின் மூலம் தான் நாம் ஆண் மற்றும் பெண் குரல்களுக்கு இடையே இருக்கும் வித்தியாசங்களைக் கண்டுபிடிக்கின்றோம்.

மனிதர்களின் தொண்டைப் பகுதியில் இருக்கும் குரல்வளையில் கிடைமட்டமாக அமைந்து இருக்கும் குரல்நாண்கள் என்னும் தசைமடிப்புகள் தான் நாம் பேசுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த தசைமடிப்புகள் நாம் மூச்சை உள்ளிழுக்கும் போது தளர்ந்த நிலையிலும், நாம் பேச முயற்சிக்கும் போது வீணையில் இழுத்துக் கட்டப்பட்டிருக்கும் நரம்பைப் போல விறைப்பான நிலையிலும் செயல்படுகிறது.

சாதாரணமாக குரல்நாண் ஆணில் 17.5mm முதல் 25mm வரையிலும், பெண்ணில் 12.5mm – 17.5mm வரை நீளமும் இருக்கும்.

ஆண்களின் குரல்நாண் வளர்ச்சி அதிகரிக்கும் போது, அதன் விறைப்புத்தன்மை குறைந்து விடுகிறது. இதனால் அவர்களின் குரலில் மென்மை குறைந்து ஒருவித கரகரப்புத்தன்மை ஏற்படுகிறது.

எனவே ஆண்களின் குரல்நாண்களை, பெண்களின் குரல்நாண்களோடு ஒப்பிடும் போது, அவை அளவிலும், வளர்ச்சியிலும் குறைவாக இருப்பதால் பெண்ணில் குரல்நாண்கள் விறைப்படைந்து குரலில் மென்மை அதிகமாகி, இனிமை கூடுகிறது.

இதனால் தான் ஆண்கள் குரலில் இருந்து பெண்களின் குரல் முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது.

புதிய அம்சங்களுடன் அறிமுகமாகியது Google Map அப்டேட்!!

கூகுள் நிறுவனத்தன் மேப் சேவையினை அறிந்திராதவர்கள் இருக்கவே முடியாது. அந்த அளவிற்கு மிகவும் பயனுள்ள வசதியாக திகழ்கின்றது.

இவ் வசதியினை மொபைல் சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய வகையில் அப்பிளிக்கேஷனும் உருவாக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தொடர்ச்சியாக அப்டேட்களினையும் கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்து வருகின்றது. இந்நிலையில் மற்றுமொரு புதிய அப்டேட்டினை வெளியிட்டுள்ளது.

Android மற்றும் iOS மொபைல் சாதனங்களுக்கான இந்த அப்டேட்டில் சில புதிய வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

புதிய வடிவமைப்பு பயணிக்க வேண்டிய பாதைகளை மேலும் இலகுவாக அடையாளம் காட்டுதல் உட்பட மேலும் சில வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஒரே ஒரு வீடியோவால் இணையத்தை கலக்கி கொண்டிருக்கும் சிறுமி!!

பெண்களால் முடியாதது எதுவும் இல்லை என்பதை நிரூபித்துவிட்டார் ஒன்பதே வயதான Evnika Saadvakass.

ரஷ்யாவை சேர்ந்த Evnika Saadvakass மரத்துடன் பொக்ஸிங் செய்யும் வீடியோ தான் இன்ஸ்ட்ராகிராமின் ஹாட் டாபிக்.

மூன்று வயதில் இருந்தே தந்தை சொல்லிக் கொடுக்க சமத்தாக கற்றுக் கொண்ட Evnika Saadvakass காட்டில் உள்ள மரத்துடன் மோதுகிறார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் இவர் செய்த சாதனை, உலகின் அதிவீரமான பெண் என்ற பெயரை பெற்றுக் கொடுத்துள்ளது.

விண்வெளியில் நடந்து சாதனை படைத்த பிரான்ஸ் வீரர்!!

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த Thomas Pesquet (38) மற்றும் அமெரிக்காவை சேர்ந்த Shane Kimbrough (49) என்ற விண்வெளி வீரர்கள் முக்கிய விடயத்தை வெற்றிகரமாக முடித்து விட்டு வந்திருக்கிறார்கள்.

அதாவது, சர்வதேச விண்வெளி நிலையத்தின் Power System- அதிகப்படுத்த ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் அங்கு சென்று அதன் பேட்டரிகளை மாற்ற வேண்டியது அவசியமாகும்.

அதன் படி 194 கிலோ எடைகள் கொண்ட லித்தியம் அயன் பேட்டரிகள் மூன்றை Thomas மற்றும் Shane வெற்றிகரமாக மாற்றியுள்ளனர். இதை இருவரும் 3 மணி நேரத்தில் செய்து முடித்துள்ளார்கள்.

விண்வெளியில் முதன்முறையாக நடந்து Thomas Pesquet சாதனை படைத்துள்ளார், Shane Kimbrough-க்கு இது நான்காவது நடைபயணமாகும்.

மொத்தம் 48 பேட்டரிகள் அங்கு உள்ளது, ஒன்றன் பின் ஒன்றாக எல்லாமே மாற்றப்பட வேண்டியது கட்டாயமாகும்.

திரிஷாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த நடிகர் கருணாஸ்!!

பீட்டாவுக்கு ஆதரவாக செயல்படும் நடிகை த்ரிஷாவின் படப்பிடிப்பை எங்கும் நடத்தவிட மாட்டோம் என்று நடிகர் சங்க துணைத் தலைவர் கருணாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜல்லிக்கட்டு தொடர்பான சர்ச்சையில் சிக்கிய நடிகை த்ரிஷாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

நேற்று ஜல்லிக்கட்டுக்கு எதிராக அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவான பதிவுகள் பலரை மேலும் கோபப்படுத்தியது.

ஆனால் அதை தான் பதிவிடவில்லை என்றும், தான் ஒருபோதும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசியதில்லை எனவும் குறிப்பிட்ட த்ரிஷா, டுவிட்டர் கணக்கை செயலிழக்க செய்துள்ளார்.

இந்நிலையில் நடிகை த்ரிஷாவுக்கு நடிகர் சங்க துணைத் தலைவர் என்ற அடிப்படையில் கருணாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

த்ரிஷாவின் படப்பிடிப்பை எங்கும் நடத்தவிட மாட்டோம் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நடிகர் சங்க துணைத் தலைவர் பதவியில் இருக்கும் கருணாஸ் இப்படி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.