வவுனியா இலுப்பையடி பேரூந்து தரிப்பிடத்தில் இ.போ.ச சாரதி மீது தனியார் பேரூந்து சாரதி தாக்கியதில் படுகாயமைந்த சாரதி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..
இன்று (27.12.2016) பிற்பகல் 3.10 மணியளவில் வவுனியா செட்டிகுளம் செல்லவிருந்த இ.போ.ச பேரூந்தில் பயணிகள் ஏறிக்கொண்டிருக்கையில் வவுனியாவிலிருந்து மன்னார் செல்லவிருந்த தனியார் பேரூந்து சாரதிக்கிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.
சம்பவத்தில் ஈடுபட்ட இரு சாரதிகளையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணைகள் மேற்கொண்டதுடன் இ.போ.ச சாரதியான மகேஸ்வரன் வயது 35 மீது தனியார் பேரூந்து சாரதி தாக்கியதில் காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் மேற்கொண்ட தனியார் பேரூந்து சாரதியிடம் நீங்கள் முதலில் செல்கின்றீர்களா? அல்லது நான் முதலில் செல்லவா? என்று இ.போ.ச பேரூந்து சாரதி கேட்டதையடுத்து பேரூந்தில் இருந்த தனியார் பேரூந்து சாரதி தனது பேரூந்து கதவைத்திறந்து குறித்த சாரதியின் முகத்தில் தாக்கியுள்ளார்.
இருவரிடமும் விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
வன்னித் தமிழனின் சிறப்புக் குணம் வெளிப்பட்ட நிகழ்வு இதோ..
இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை கண்டெடுத்து ஒப்படைத்த நல்லெண்ணம் கொண்ட மனிதரை பாராட்டுங்கள், பகிருங்கள்..
நேற்றை தினம் யாழ்ப்பாணத்தில் இருந்து திருமலைக்கு திரும்பிகொண்டிருந்த போது வவுனியாவில் வைத்து எனது அம்மாவின் கைப்பை தவறவிடப்பட்டிருந்தது. ஆயினும் திருமலை திரும்பிய பின்னரே எமக்கு தெரிய வந்தது..
அந்த கைப்பை 100,000 ஒரு இலட்சத்திற்கும் அதிக பெறுமதியை கொண்ட பொருட்களை தாங்கியிருந்தது. அதுவரை சந்தோசமாக இருந்த தருணங்கள் மாறி முழுவதும் குழப்பமான நிலமையில் என்ன செய்வது என தெரியாமல் குழம்பியிருந்த நேரத்தில் அந்த பைக்குள் இருந்த என் அம்மாவின் தொலைபேசிக்கு அழைப்பை மேற்கொண்டேன்.
அந்த அழைப்பிற்கு பதில் அளித்தார் அந்த ஒரு மனிதர். அவர் பெயர் சிவனேசன் மாங்குளம் ஒலுமடு எனும் இடத்தை சேர்ந்தவர். அவர் தன்னிடம்தான் குறித்த பை இருப்பதாகவும், உரிய அடையாளங்களுடன் தன்னிடம் வந்து பெற்றுக்கொள்ளுமாறும் கூறினார்.
இன்று காலையில் திருகோணமலையில் இருந்து புறப்பட்ட நேரம் முதல் என்னுடன் எங்கு வரவேண்டும் என்பது தொடர்பாக கதைத்துகொண்டிருந்ததுடன். எனக்காக இன்று வேலைக்கும் போகாமல் காத்திருந்து என்னிடம் குறித்த பையை கையளித்தார்..
இன்று கிடைக்கும் பொருளை அபகரிக்கு நிலையில் வாழும் மனிதர்களுக்கு மத்தியில் ஒரு நல்ல மனிதரை காண கிடைத்தது. இன்று அவருடன் கழித்த நேரங்கள் மிகவும் சந்தோசமானது. அந்த மனிதரின் தோற்றமும், குணமும், என்னுள் ஏதோ ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றது…
ஏழையின் சிரிப்பில் இறைவனை இன்று கண்டேன்.
இவரை வாழ்த்த வேண்டியது எம் கடமை.. முடிந்தவர்கள் பகிருங்கள், தெரிந்தவர்கள் நேரில் வாழ்த்துங்கள்..
இலங்கையின் முன்னாள் பிரதமரும் மூத்த அரசியல்வாதியுமான ரத்னசிறி விக்ரமநாயக்க சற்று முன்னர் காலமானார்.
இவர் தனது 83வது வயதில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இயற்கை எய்தியுள்ளார்.
1933ம் ஆண்டு மே 5ம் திகதி பிறந்த இவர், நீண்டகாலம் இலங்கை அரசியலில் செல்வாக்கு செலுத்தி வந்துள்ளார். முதன்முதலில் 1970ம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கத்தில் பிரதி நீதி அமைச்சராக இவர் நியமிக்கப்பட்டார்.
மேலும், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினரான இவர் 2000மாம் ஆண்டு, முதன் முதலில் நாட்டின் பிரதமராக பதவியேற்றார்.
இதற்கமைய 2000மாம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடக்கம் 2001ம் ஆண்டு டிசம்பர் வரை அவர் பிரதமராக பதவி வகித்தார்.
இதனையடுத்து 2005ம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்திலும் அவருக்கு இரண்டாவது முறையாகவும் பிரதமராகும் வாய்ப்பு கிட்டியது. மேலும் அவர் 2010ம் ஆண்டு வரை அப் பதவியில் இருந்தார்.
அத்துடன், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் விதுர விக்ரமநாயக்க இவரது புதல்வராகும்.
கோவா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஜெட் எயார்வேஸ் (9எம் 2374) விமானத்தின் சில்லு கழன்று நிலைதடுமாறி ஓடுபாதையை விட்டு விலகி விமானம் 360 டிகிரி சுழன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவம் காலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இவ் விபத்தின்போது விமானத்தில் 7 ஊழியர்கள் மற்றும் 154 பயணிகள் இருந்தனர். இதில் 15 பயணிகள் காயம் அடைந்ததுடன் உடனடியாக. காயம் அடைந்த பயணிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
ஜெட் ஏர்வேசுக்கு சொந்தமான 9எம் 2374 ரக விமானம் டபோலிம் விமான நிலையத்தில் இருந்து மும்பை புறப்பட்டு சென்றது. விமானம் தரையில் இருந்து புறப்பட்டு சென்ற போது விமானத்தின் சில்லு கழன்றதால் விமானம் நிலைதடுமாறி வீதியை விட்டு விலகி ஓடியது.
இதனால் விமானத்தின் வயிற்றுப் பகுதியானது தரையில் உரசிய வண்ணம் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதுடன் 360 டிகிரி சுழன்று நின்றது.
விமானம் மோதியதும் மீட்பு படையினர் விரைந்து வந்து விமானத்தில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டதுடன் பயணிகள் சற்றும் தாமதிக்காமல் அவசரகால கதவு வழியாக வெளியேறினர்.
இதனால் பெரும் இழப்பு தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்றுவருகிறது.
அறிவியல் ரீதியாக நமது உடம்பில் அண்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜன், அட்ரினலின் போன்ற சுரப்பிகளில் ஏற்படும் மாற்றமே ஒருவருக்கு காதல் உணர்வுகளை ஏற்படுத்துகிறது.
காதலில் ஏற்படும் பிரிவு, மனதளவில் இருவருக்கும் வலியை ஏற்படுத்தக் கூடியது.
தற்போதைய காலத்தில் காதலித்து திருமணம் செய்து கொள்பவர்களை விட காதலிக்கும் போதே பிரிபவர்கள் தான் அதிகமாக உள்ளார்கள்.
எனவே காதலில் ஏற்படும் பிரிவுகள் எதனால் ஏற்படுகிறது என்பது பற்றி தெரிந்துக் கொள்வோம்.
காதலில் ஏற்படும் பிரிவிற்கு என்ன காரணம்?
காதலில் ஒருவர் ஏமாறுகிறார்கள் என்பதை விட, தங்களை ஏமாற்ற அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கின்றனர் என்பது தான் உண்மை. ஏனெனில் ஒருவர் காதலிக்கும் முன்பே ஒருவரை பற்றி நன்றாக புரிந்துக் கொண்டால் பிரிவு ஏற்படும் வாய்ப்பு குறையும்.
காதலிக்கும் சிலர் பிரிந்து விடலாம் என்ற வாய்ப்பு இருப்பதால் தான் பலர் இன்று காதலில் இணைகிறார்கள். எனவே காதலிக்கும் நபர்களை பற்றி நன்றாக புரிந்து தெரிந்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.
இன்றைய காலத்தில் காதலிக்கும் சில இளம் ஆண், பெண் இருவருமே அழகை விட தனது துணை ஃபேஷனாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். அப்படி இல்லையெனில் ஃபேஷனாக இருக்கும் மற்றவர்களை தேடி செல்கின்றனர், இதனால் காதலில் பிரிவுகள் ஏற்படுகிறது.
காதலிப்பவர் இருவரும் ஒருவருக்கொருவர் நன்றாக புரிந்துக் கொள்ளாமல், பல விஷயங்களில் சந்தேக உணர்வுகள் மற்றும் ஈகோ பிரச்சனைகள் ஏற்படுவதால், காதலில் பிரிவுகள் ஏற்படுகிறது.
காதலிக்கும் போது, ஜாதி, ஜாதகம் போன்று பாராமல், திருமணம் என்ற பேச்சுவார்த்தை எழும் போது தடையாக இருக்கிறது என்று கூறுவதால், காதலில் பிரிவுகள் ஏற்படுகிறது.
காதலிக்கும் போது, எதுவும் சொல்லாமல், பின் தன்னுடைய இலட்சியம், குறிக்கோள் போன்றவற்றிற்கு காதல் தடையாக இருக்கிறது என்று கூறுவது தவறு. இதனால் தான் பல காதலில் பிரிவு நிலைகள் ஏற்படுகிறது.
கிரக வாழ்க்கைக்கு வெளியே தொடர்பு கொள்ள மனிதகுலம் முதல் முறையாக நடவடிக்கை முன்னெடுக்கவுள்ளதாக அறிவியல் ஆய்வியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
விண்வெளி ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக ஏலியன்ஸின் சிக்னல் கண்டுபிடிக்க விண்ணில் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சான் பிரான்சிஸ்கோ சார்ந்த அமைப்பான Extra Terrestrial Intelligence (METI) ஏலியன்ஸை முதல் முறையாக தொடர்பு கொண்டு ஹலோ சொல்ல திட்டமிட்டு களமிறங்கியுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் தூரத்தில் இருக்கும் கிரங்களுக்கு உரையாடல் அனுப்ப தொடங்கவுள்ளது. இந்த செய்திகள் மீண்டும் மீண்டும் 2018 இறுதிக்குள் ரேடியோ அல்லது லேசர் சிக்னல் வழியாக அனுப்பப்படும்.
METIயின் தலைவரும், SETIயின் முன்னாள் இயக்குனருமான Douglas Vakoch கூறியதாவது, பல தலைமுறையினாருக்காக இந்த பரிமாற்றத்தை தொடங்க வேண்டும் என்றால், நாம் காற்று மற்றும் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
இந்த தி்ட்டம் சிறந்த உரையாடலுக்கான தொடக்கத்தை உருவாக்க முயற்சிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இலங்கையின் தலைநகரான கொழும்பில் செயற்கை கிறிஸ்துமஸ் மரம் 187 அடி உயரத்தில் வைக்கப்பட்டது.
உலக சாதனையாக கருதப்படும் இந்த விடயம் செயல்பட மூலகாரணமாக இருந்தவர் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூன ரணதுங்கா
இதுபற்றி இந்த நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் மங்கள குணசேகர கூறுகையில், கொழும்புவில் உள்ள தேவாலத்தின் பேராயர் Malcolm Ranjith முதலில் எதற்கு இப்படி வீண் செலவுகள் செய்து இதை செய்ய வேண்டும்.
இதற்கு செலவாகும் $200,000 அளவிலான பணத்தை நாட்டுக்கு நலன் தரக்கூடிய வேறு எதாவது விடயத்துக்கு செலவிடலாம் என கூறினார்.
பின்னர் இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவரிடம் பேசி இதற்கு சம்மதம் பெற்று தந்ததாகவும் அவரின் ஆசியுடன் தான் இதை செய்ததாகவும் குணசேகர கூறியுள்ளார்.
மேலும், இந்த செயற்கை மரத்தை 328 அடி உயரத்துக்கு செய்யவே நாங்கள் முதலில் திட்டமிட்டோம். ஆனால் நேரமின்மை காரணமாக எங்களால் 187 அடி உயரத்துக்கே செய்ய முடிந்தது.
ஆனாலும் தெற்கு சீன மாகாணத்தில் போன வருடம் வைக்கப்பட்ட செயற்கை கிறிஸ்துமஸ் மரத்தை விட இது 2 அடி உயரம் என கூறியுள்ளார்.
இந்த கிறிஸ்துமஸ் மரத்தை அதிக உயரமான செயற்கை மரம் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக இந்த குழு தற்போது காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மியான்மாரில் சிறுமிகள் தங்கள் முகம் முழுவதும் பச்சைக் குத்தி கோரமாக்கிக் கொண்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது. மியான்மாரின் உயர் மலைகளில் வாழும் சின் பழங்குடி இனத்தை சேர்ந்த சிறுமிகளே இச்செயலலில் ஈடுபட்டுள்ளனர்.
12 முதல் 14 வயதிற்குள்ளான சின் பழங்குடி சிறுமிகள் முகம் முழுவதும் துடி துடிக்க பச்சை குத்திக் கொண்டுள்ளனர். முகம் முழுவதும் குத்தி முடிக்க சில நாட்கள் ஆகும் என தெரிவித்துள்ளனர்.
புராணத்தின் படி, பண்டைய மன்னர் தான் விரும்பும் பெண்களை கடத்தி வைப்பாட்டியாக வைத்து கொண்டுள்ளார்.
இதிலிருந்து தங்களை காப்பாற்றி கொள்ளவே சின் பழங்குடி பெண்கள் சிறுவயதிலே முகத்தில் பச்சை குத்திக்கொண்டு தங்களை கோரமாக்கி கொண்டுள்ளனர். மேலும், அதை பாரம்பரியமாக எதிர்வரும் காலத்திலும் பின்பற்றி வந்துள்ளனர்.
பின்னர், 1960ம் ஆண்டு அரசாங்கம் இதற்கு தடை விதித்ததை தொடர்ந்து இந்த பாரம்பரியம் முடிவிற்கு வந்துள்ளது.
ஆனால், வயதான பெண்கள் இன்னும் முகத்தில் பச்சை குத்திய வடுக்களுடன் வாழ்ந்து வருகின்றனர்.
மேலும், தோல்லை நீட்டும் பெரிய காதணிகளை அணிந்துள்ளனர். தற்போதும், விரும்பத்துடன் சில சிறுமிகள் பச்சைக் குத்திக் கொள்வதாக கூறப்படுகிறது.
புகைப்படக்காரர் மற்றும் இணைய பாதுகாப்பு வல்லுனரான Teh Han Lin, அண்மையில் மியான்மாருக்கு மேற்கொண்ட பயணத்தின் போது சின் பழங்குடி இன பெண்கள் குறித்த உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆவி ஆத்திரம் தீராமல் உலாவி வருவதாகவும், வரும் 2023 ஆம் ஆண்டு மறுபிறவி எடுப்பார் என்றும் பிரபல ஜோதிடர் அசோக்ஜி கூறியிருப்பது சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல ஜோதிடரான அசோக்ஜி கூறுவது அனைத்தும் பலிக்கும் என்று பலரும் கூறிவருகின்றனர்.
காரணமாக கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் எனக் கூறியதாகவும், அதே போல அதிமுக வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா சிறையில் இருந்து விடுதலையாகி வருவார் என கூறினாராம். மேலும் சென்னையில் வெள்ளம் வரும் எனவும் கூறினாராம் அவை அனைத்தும் அவர் சொன்னது போல் நடந்ததாக கூறப்படுகிறது.
தற்போது பலருக்கும் பீதியை ஏற்படுத்தும் வகையில் ஜெயலலிதாவின் ஆவி சாந்தி அடையவில்லை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
மேலும் இந்து மத தர்மப்படி எந்த ஒரு ஆத்மாவும் 3 நாள் கழித்துதான் கர்மாவை சேரும் என்பது விதி.
ஜெயலலிதாவின் ஆன்மா திருப்தியற்ற நிலையில் இருப்பதால் அவரது உடலை விட்டு இன்னும் முழுமையாக வெளியேறவில்லை.
இந்து மத ஆகம விதிப்படி ஜெயலலிதாவின் குடும்பத்தில் சடங்குகள் செய்யாமல் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டு இருக்கிறது.
இதனால் அவரது ஆவி அதிதீவிர ஆத்திரத்தோடு இருக்கிறது. ஜெயலலிதா விரும்பிய வீடு, ஆசைப்பட்டு அணிந்த ஆடைகள், பொருட்கள் இவைகளை யார் பயன்படுத்தினாலும் அவர்களுக்கு ஜெயலலிதா சரியான பாடத்தை, தண்டனையை வழங்குவார்.
மேலும் ஜெயலலிதா ஆவி பூலோகத்தில் 2023 வரை நிச்சயம் இருக்கும். ஜெயலலிதா ஆவி அடுத்த பிறவி எடுக்க இன்னும் 6 ஆண்டுகள் ஆகும் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவை நடிகர் அஜித் நேற்று சந்தித்து பேசியுள்ளார்.
ஜெயலலிதா மறைவடைந்த போது நடிகர் அஜித் பல்கோரிய நாட்டில் படப்பிடிப்பில் இருந்தார். இதனால் அவரால் உடனடியாக ஜெயலலிதாவை பார்க்க வரமுடியவில்லை.
பின்னர் பல்கோரியாவில் இருந்து திரும்பிய அஜித், விமான நிலையம் வந்திறங்கியதும் நேரடியாக ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில் நேற்று அஜித் போயஸ் கார்டன் சென்று ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவை சந்தித்து பேசியுள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து பலவிதமாக பேசப்படும் அதே நிலையில், இது மரியாதை நிமித்தமானது எனவும் கூறப்படுகிறது.
நாட்டில் ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 152 வருடங்கள் பூர்த்தியாகின்றன.
முதலாவது ரயில் சேவை 1864ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 27ஆம் திகதி கொழும்புக்கும், அம்பேபுஸ்ஸவுக்கும் இடையில் ஆரம்மமானது.
இதன்போது ஜி.எல்.மொலஸ்வன் என்பவரே ரயில்வே பணிப்பாளர் நாயகமாக பணியாற்றியுள்ளார். இவர் ஆரம்பித்து வைத்த முதலாவது சேவையில் 84 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழில் எம்.ஜி. ஆர் நினைவாக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி எனும் பெயரில் புதிய கட்சி அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ்.கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய ஆலய முன்றலில் அனைத்துலக எம்.ஜி. ஆர் பேரவையின் ஏற்பாட்டில் தமிழக முன்னாள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நினைவு நாள், மற்றும் முன்னாள் அனைத்துலக எம்.ஜி.ஆர் பேரவையின் தலைவர் பொன் மதிமுகராஜாவின் 18ஆவது ஆண்டு நினைவு நாள் நேற்று இடம்பெற்றது.
இதன் போது கட்சியின் செயலாளர் இரவு 07.30 மணியளவில் புதிய கட்சி தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பைப் பொதுமக்கள் முன்னிலையில் வெளியிட்டார்.
இதன்படி தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் மாநகர சபை உறுப்பினரும், தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி. ஆரின் தீவிர இரசிகருமான செல்லையா விஜயரட்ணம் கட்சியின் தலைவராகவும்,
அனைத்துலக எம்.ஜி.ஆர் பேரவையின் தலைவர் பொன் மதிமுகராஜா விஜயகாந்த் கட்சியின் செயலாளர் நாயகமாகவும், இ.வசந்த் கட்சியின் பொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் அறிவித்தார்.
மேலும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி கட்சியின் செயலாளர் நாயகமாகத் தெரிவாகியுள்ள பொன்மதிமுகராஜா விஜயகாந்த்,
இந்த மண்ணுக்கும் எமது மக்களுக்கும் என்றும் எனது உயிர் மூச்சுள்ள வரை உயிரைத் துச்சமென மதித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமாக ஏற்றுக் கொண்டு செயற்பட ஆரம்பிக்கிறேன் என மேடையில் வைத்து வழங்கிய உறுதி மொழி வழங்கினார்.
முன்னதாகத் தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் உருவப் படத்திற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
அத்துடன், அண்மையில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் மற்றும் முன்னாள் அனைத்துலக எம்.ஜி.ஆர் பேரவையின் தலைவர் பொன் மதிமுகராஜாவின் உருவப் படங்களிற்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் செல்லையா விஜயரட்ணம் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
அத்துடன் ஈழத்தின் பிரபல பாடகரான சுகுமாரும் எம்.ஜி.ஆரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
இதேவேளை, நினைவுரைகளை வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், முன்னாள் மாநகர சபை உறுப்பினர் செல்லையா விஜயரட்ணம் ஆகியோர் நிகழ்த்தினர்.
கின்னஸ் சாதனையை இலக்கு வைத்து கொழும்பு காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நத்தார் மரம் திட்டமிட்டதனை விட குறைவான உயரத்தினையே கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
325 அடி உயரம் கொண்டதாக இருக்கும் என தெரிவித்து பல மில்லியன் செலவில் அமைக்கப்பட்டுள்ள போதிலும், திட்டமிட்டதனை விட குறைவான உயரத்திலேயே குறித்த நத்தார் மரம் அகை்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
முன்னதாக குறித்த நத்தார் மரம் அமைக்கப்படுவதற்கு கர்தினால் மல்கம் ரஞ்சித் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் திடீரென இதன் கட்டுமானப் பணிகள் இடை நிறுத்தப்பட்டன.
எனினும், குறித்த கட்டுமான பணிகள் மீட்டும் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் கடந்த 24ம் திகதி இரவு அமைச்சர் அர்ஜூன ரனதுங்கவினால் இந்த நத்தார் மரம் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நத்தார் மரம் திட்டமிட்டதைப் போன்று 325 அடி உயரம் கொண்டதாக அமைக்கப்படவில்லை. நிர்மான பணிகள் இடைநிறுத்தப்பட்டமையினால் 73 மீற்றர் (238 அடி) உயரமுள்ள நத்தார் மரமே தற்போது அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே, தற்போது உலகின் உயரமான நத்தார் மரமாக சீனாவின் குவாங்சூ நகரில் அமைக்கப்பட்ட, 55 மீற்றர் (180 அடி) உயரமான நத்தார் மரமே காணப்படுகின்றது.
எவ்வாறாயினும், காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நத்தார் மரமே உலகில் மிக உயரமானது என்பதை கின்னஸ் உலக சாதனைப் பதிவு இன்னமும் உறுதிப்படுத்தவில்லை.
இதேவேளை, நல்லிணக்கத்தை நோக்காக கொண்டு குறித்த நத்தார் மரம் அமைக்கப்பட்டிருந்த போதிலும், இதன் திறப்பு விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின், அ.தி.மு.க.,வின் பொதுச் செயலராகி விட வேண்டும் என்பதில் முனைப்புடன் இருக்கிறார் சசிகலா. அதற்கு ஏகப்பட்ட தடைகள் இருக்கின்றன.
இதனால், வரும் 29ம் திகதி சென்னையில் கூடும் பொதுக் குழு மூலம், கட்சியின் இணைப் பொதுச் செயலராக சசிகலா இறங்கி வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், போயஸ் தோட்டத்தில் கடும் குழப்பம் நிலவுகிறது. இது குறித்து அ.தி.மு.க. வட்டாரங்கள் கூறியதாவது..
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, அ.தி.மு.க.,வின் பொதுச் செயலராகவும் இருந்தார். அவர் மறைவுக்குப் பின், முதல்வராக பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார். அவரையே, கட்சியின் பொதுச் செயலராகவும் நியமிக்க வேண்டும் என, அவரது ஆதரவாளர்கள் விரும்பினாலும், அதை, சசிகலா தரப்பு கண்டு கொள்ளவில்லை.
இதற்காக, ஒவ்வொரு மாவட்ட செயலரையும் அழைத்து, சின்னம்மா சசிகலாதான், கட்சியின் பொது செயலராக வேண்டும் என்று தீர்மானம் போட்டு வரச் சொல்லி நிர்ப்பந்தப்படுத்தி உள்ளனர். அதன் அடிப்படையில், ஒவ்வொரு மாவட்ட செயலரும் அதே போலவே தீர்மானம் போட்டு வந்து, சசிகலாவிடம் அதை ஒப்படைத்துள்ளனர்.
அதேபோல, கட்சியின் அனைத்து அணிகள் தரப்பிலும் தீர்மானம் போட வலியுறுத்தப்பட்டு, அதன்படியே, செய்துள்ளனர். அமைச்சர்களில் துவங்கி, அனைத்து நிர்வாகிகளும் சசிகலாவை சந்தித்து, தங்கள் எண்ணத்தை வலியுறுத்த வேண்டும் என, நிர்ப்பந்திக்க, தினந்தோறும், வரிசையாக அக்காட்சிகள் நடக்கின்றன.
சசிகலா எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருந்த ராஜ கண்ணப்பன், செங்கோட்டையன், கே.பி.முனுசாமி போன்ற மூத்தத் தலைவர்களையும் அழைத்து சமாதானம் பேசி, அவர்களும் சசிகலா தலைமையை ஆதரிப்பது போல நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
ஆனால், சசிகலாவை கட்சியின் பொதுச் செயலர் ஆக்குவதற்கு, சசிகலா புஷ்பா போன்ற கட்சி உறுப்பினர்கள் சிலர் தடையாக உள்ளனர்.
2011ல் ஜெயலலிதாவால் துரோகி என அடையாளம் காட்டப்பட்டு, போயஸ் தோட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா, கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின், அவர், 2012 ஏப்ரலில்தான், கட்சியில் மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டார்.
கட்சியின் அடிப்படை விதிகளின் படி, ஒருமுறை கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, அவர் மீண்டும் சேர்ந்தால், சேர்ந்ததில் இருந்து ஐந்து ஆண்டு காலம், அவர் கட்சியின் எந்த நிர்வாகப் பொறுப்பிற்கும் போட்டியிட முடியாது.
இந்த விதியின் அடிப்படையில், சசிகலாவை, அ.தி.மு.க.,வின் பொதுச் செயலர் ஆக தடை விதிப்பதோடு, பொதுக்குழுவில் அவர், பொதுச் செயலராகவும் தேர்ந்தெடுக்க தடை விதிக்க வேண்டும் என கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் சசிகலா புஷ்பா.
வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், இது தொடர்பாக, தேர்த கமிஷன் வரையில், விளக்கம் கேட்கப்பட்டுள்ளதோடு, சசிகலா தரப்பில் கோர்ட்டில் ஆஜரான வழக்கறிஞர், கட்சியின் அடிப்படை விதிகளைப் பின்பற்றித் தான், கட்சியின் பொதுச் செயலர் தேர்வுக்கான தேர்தல் நடக்கும்; முறைப்படி எல்லாமே செய்யப்படும் என்று உறுதி மொழி அளித்துள்ளார்.
இதனால், அடிப்படை சட்டவிதிகளை மீறி, சசிகலா உடனடியாக அ.தி.மு.க.,வின் பொதுச் செயலர் ஆக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பொதுக் குழுவின் ஒப்புதலோடு இரண்டு விஷயங்களில் ஒன்றை செய்யலாம் என சசிகலா முடிவெடுத்துள்ளார்.
கட்சியில் இணைப் பொதுச் செயலர் என்ற புதிய பொறுப்பை ஏற்படுத்தி, அதில் தன்னை நியமித்துக் கொள்வது. அல்லது, கட்சியை வழி நடத்த மூத்த தலைவர்கள் அடங்கிய ஒரு குழுவை நியமிப்பது. அக்குழு, கட்சியை தற்காலிகமாக வழி நடத்திச் செல்லும்.
பின், மார்ச் – ஏப்ரலில் மீண்டும் பொதுக் குழுவைக் கூட்டி, அதன் மூலம் சட்டச் சிக்கல் எதுவும் இல்லாமல், தன்னை பொதுச் செயலராக நியமித்துக் கொள்வது என்பது சசிகலாவின் தற்போதைய திட்டம்.
ஆனால், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, கட்சியின் பொதுச் செயலர் பதவியில் சசிகலா அமரவில்லை என்றால், மீண்டும் அந்த வாய்ப்பை அடைவதற்கு மிகுந்த சிரமப்பட வேண்டும் என்று, சசிகலா உறவுகள், சசிகலாவுக்கு கடும் நெருக்கடி கொடுக்கின்றனர்.
ஆனால், இணைப் பொதுச் செயலர் அறிவிப்பில்தான், சசிகலா உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. அப்படி நடந்தால், வரும் ஜன.2ம் தேதி மாலை 6:00 மணிக்கு, சசிகலா, அ.தி.மு.க.,வின் இணைப் பொது செயலராக பொறுப்பேற்றுக் கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதில் எது நடக்கப் போகிறது என்பது கடைசி வரை சஸ்பென்சாகவே இருக்கும் போல தெரிகிறது என்று அக்கட்சி வட்டாரங்கள் கூறின.
மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கண்டறிவதற்காக பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கை ஜனவரி 6ஆம் திகதிவரை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நத்தார் தினத்தை முன்னிட்டு இந்த சோதனை நடவடிக்கைகள் கடந்த சில நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மதுபோதையில் வாகனம் செலுத்துவதால் அதிக விபத்துகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பண்டிகை காலம் என்பதால் இந்த நிலைமை மேலும் அதிகரிக்கலாம் என்பதைக் கருத்தில் கொண்டே விசேட சோதனை நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மேற்படி சோதனை நடவடிக்கையானது ஜனவரி மாதம் 6ஆம் திகதி வரை தொடரவிருப்பதாக பொலிஸ் தலைமையகத்தின் போக்குவரத்துப் பிரிவு பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம்.யு.சந்திரதாஸ தெரிவித்தார்.
புதுவருடத்தை முன்னிட்டு மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கண்டறிவதற்கான இந்த விசேட சோதனை நடவடிக்கைகள் தொடரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.