பிரான்சில் நான்கு துண்டாக வெட்டப்பட்டு மூன்று சூட்கேசில் கிடந்த சடலம்!!

பிரான்சில் ஆண் சடலம் ஒன்று நான்கு துண்டாக வெட்டப்பட்டு மூன்று சூட்கேசில் அடைக்கப்பட்டு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Toulon பகுதியிலே சடல துண்டுகள் அடைக்கப்பட்டிருந்த மூன்று சூட்கேஸ் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் அளித்த தகவலை அடுத்து பொலிசார் சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளனர்.

பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கண்டெடுக்கப்பட்ட சில நிமிடத்திற்கு முன்னரே மூன்று சூட்கேசும் தீ வைத்து கொளுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், 24 மணிநேரத்திற்குள்ளே இந்த கொலை நடந்திருக்கிறது. பின்னர், பிணம் வாகனம் மூலம் இந்த இடத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. உயிரிழந்தவருக்கு 20 முதல் 30 வயதிற்குள் இருக்கும்.

தலையில் பலமாக தாக்கப்பட்டதின் மூலம் அவர் உயிரிழந்திருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும், உடல் பாகங்களில் கத்தியால் வெடப்ட்ட தடயமும் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

எனினும், கைப்பற்றப்பட்டுள்ள உடல் பாகங்கள் பிரேத பரிசோதனை செய்யப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும், உயிரிழந்த நபரின் அடையாளம் குறித்து பொலிசார் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

உறவுக்கு மறுத்த இளம்பெண்ணை கொன்று அமிலத்தில் கரைத்த கொடூரன்!!

மெக்ஸிக்கோவில் இளைஞர் ஒருவர் உறவுக்கு மறுத்த இளம்பெண்ணை கொன்று அமிலத்தில் உடலை கரைத்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது.

26 வயதான Francia Ruth Ibarra என்ற பெண்ணே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். குறித்த குற்றத்தில் ஈடுபட்ட 26 வயதான Emmanuel Delani Valdez Bocanegr என்ற நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

Ibarra காணவில்லை என அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் பொலிசில் புகார் அளித்துள்ளனர். Ibarraவின் பேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்ததின் மூலம் அவர் Tinder என்ற டேட்டிங் தளத்தில் Bocanegrவுடன் பழகி வந்தது தெரியவந்துள்ளது.

இந்த தகவலை அறிந்த Ibarraவின் நண்பர்கள் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து Bocanegr குடியிருப்பில் பொலிசார் நடத்திய சோதனையில் ஒரு பையில் மனித எலும்புகள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

எலும்பிலிருந்து ஆறு கிலோ சதையை கைப்பற்றிய பொலிசார், அதை டிஎன்ஏ சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சதையிலிருந்த டிஎன்ஏ காணாமல் போன Ibarra டிஎன்ஏவுடன் பொருந்தியுள்ளது.

மேலும், குடியிருப்பில் நடத்திய சோதனையில் Ibarra ஆடைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

தற்போது, Bocanegr கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், Ibarra உறவுக்கு மறுத்ததால் தான் Bocanegr அவரை கொடூரமாக கொன்றதாக தெரியவந்துள்ளது.

பிரித்தானியாவில் ஈழத்து இளைஞர்கள் ஐவர் பலியானமைக்கு யார் காரணம் : புதிய சர்ச்சை!!

கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி பிரித்தானியாவின் எசிக்ஸ் மாநிலத்தில் உள்ள கம்பசாண்ட் என்னும் கடலில் மூழ்கி இலங்கை தமிழ் இளைஞர்கள் ஐந்து பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்ததுடன், குறித்த கடல் பிரதேசத்தின் பாதுகாப்பு தேவையினையும் எடுத்துக்காட்டியிருந்தது.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் தற்போது பலவேறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் அந்த கடல் பகுதியில், ஒரு உயிர் காக்கும் பாதுகாவலர் ஒருவர் கூட இல்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த இளைஞர்கள் உயிரிழந்தமை தொடர்பில் கவுன்சில் வெளியிடப்பட்ட அறிக்கையில், நீச்சல் தெரியாதவர்கள் கடலுக்கு செல்வதன் காரணமாகவே இவ்வாறான உயிரிழப்புகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், பல ஆயிரம் பேர் வந்து செல்லும் இவ்வாறான கடலில் எப்படி உயிர் காக்கும் பாதுகாவலர் ஒருவர் இல்லாமல் இருக்க முடியும் என தற்போது கேள்வி எழுப்பட்டுள்ளது.

மேலும், பணத்தை மீதப்படுத்தும் நோக்கில் இவ்வாறான ஆட்களை கவுன்சில் நியமிப்பதில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அத்துடன், பணம் உழைக்கும் நோக்கில் தேவைக்கு அதிகமான டிராபிக் வார்டனை அமைத்தல், மற்றும் பல இடங்களில் கமராக்களை பொருத்தி வேகமாக செல்லும் வாகனங்களை படம் எடுத்து பணம் சம்பாதிப்பதாகவும் கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும், உயிர் சம்பந்தப்பட்ட விடயங்களில் தொடர்ந்தும் அசமந்த போக்குடனேயே இருப்பதாக தற்போது புதிய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அன்னை தெரேஸாவின் சமாதியை இலக்கு வைக்கும் ஐ.எஸ் பயங்கரவாதிகள் : காரணம் என்ன?

இந்தியாவின் கொல்கொத்தாவிலுள்ள அன்னை தெரேஸாவின் சமாதியை, ஐஎஸ் தீவிரவாதிகள் இலக்கு வைத்திருப்பாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பங்களாதேஷ் டாக்கா நகரில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் பின்னர் கடந்த ஜுலை மாதத்தில் இந்தியாவில் மொஹமட் முசா என்ற சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இவரே இந்தத் தாக்குதல் திட்டத்தை மேற்கொள்ள திட்டமிட்டதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

ரஷ்யா மற்றும் அமெரிக்காவை சேர்ந்தவர்களும் பிரித்தானியாவை சேர்ந்தவர்களும் குறிப்பிட்ட இந்தப் பகுதிக்கு வருகின்றார்கள். இவர்களை இலக்கு வைத்து இந்த தாக்குதலுக்கு திட்டமிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ரஷ்யா ஐஎஸ் தீவிரவாதிகளை எதிரிகளாக கருதி செயற்பட்டு வருகின்றனர். இதனாலேயே அந்நாட்டு மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளவதற்கு திட்டமிடப்பட்டதாக ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கையில் பாரிய கொள்ளையில் ஈடுபட்ட 4 வெளிநாட்டவர்கள் கைது!!

தனியார் வங்கி ATM இயந்திரத்தில் செலுத்தப்படும் அட்டைகளின் இரகசிய இலக்கங்களை திருடி மேற்கொண்ட பாரிய மோசடி, தகவல் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடி முறையின் கீழ் பல மில்லியன்கள் கொள்ளையடித்ததாக கூறப்படும் பல்கேரியன் நாட்டவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இரகசிய இலக்கங்களை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக அவர்களின் சில பொருட்களை ATM இயந்திரங்களில் பொருத்துவதாக தெரியவந்துள்ளதென குற்றப் புலனாய்வு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களினால் இலங்கை மற்றும் இந்தியாவில் இந்த மோசடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நேற்றைய தினம் குற்ற விசாரணை திணைக்களத்தின் அதிகாரிகள், குறித்த சந்தேக நபர்களின் பின்னால் சென்று ATM இயந்திரத்தில் பணம் பெற்றுக்கொண்ட சந்தர்ப்பத்தில் கைது செய்துள்ளனர்.

இந்த நடவடிக்கையில் மிரிஸ்ஸ பிரதேச பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் இவ்வாறு 5 மில்லியன் ரூபாய் பணம் மோசடி செய்துள்ளதாக தற்போது வரையில் தெரியவந்துள்ளதென குற்றப் புலனாய்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறான மோசடியின் மூலம் பணக் கொள்ளையில் ஈடுபட்ட இரு இலங்கையர்கள் முன்னர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யுவதி குத்திக் கொலை : காதலன் விளக்கமறியலில்!!

நான்கு வருட கால­மாக தன்னை காத­லித்து வந்த காதலி காதலை முறித்துக் கொண்டு வேறொரு இளை­ஞரை திரு­மணம் செய்­து­கொள்ள முற்­பட்­டதால் ஆத்­தி­ர­ம­டைந்த காதலன் காத­லியை வழி­ம­றித்து கத்­தியால் குத்தி கொலை செய்த சம்­பவம் ஒன்று மாத்­தளை மகா­வெல பொலிஸ் பிரிவில் நிகழ்ந்­துள்­ளது.

யுவ­தியை கொலை செய்த இளைஞன் விஷ­ம­ருந்­திய நிலையில் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள நிலையில் மாத்­தளை பதில் நீதிவான் இளை­ஞனை எதிர்­வ­ரும் ஜன­வரி மாதம் 3 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

குஜராத் கிரிக்கெட் வீரரின் உலக சாதனை!!

ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் காலிறுதியில் குஜராத்- ஒடிசா அணிகள் மோதி வருகின்றன. இதில் குஜராத் அணியின் துவக்க ஆட்டக்காரர் சமித் கோஹெல் 359 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உலக சாதனை படைத்துள்ளார்.

உலகில் முதல்நிலைப் போட்டிகளில், துவக்க ஆட்டக்காரர் ஒருவரின் அதிகப்பட்ச ரன் இதுதான். இதன்மூலம் 117 ஆண்டு சாதனையை அவர் முறியடித்துள்ளார். இதற்கு முன்பு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பாபி எபெல் என்பவர் கடந்த 1899-ஆம் ஆண்டு 357 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. அதேபோல், உலக அளவில், முதல் நிலைப் போட்டிகளில் 300 ரன்களுக்கு மேல் குவித்த நான்காவது வீரர் என்ற பெருமையையும் சமித் பெற்றுள்ளார்.

தங்கக் கொலுசு : இறந்த மகளின் இறுதி ஆசையை நிறைவேற்றிய தந்தை!!

தந்தைக்கு மகள்கள் எப்போதும் தேவதைகள்தான். எந்த பொருள் கேட்டாலும் தங்களால் முடிந்த வரை மகள்களின் விருப்பத்தை நிறைவேற்றி விடவே தந்தையர்கள் முயல்வார்கள். பணக்கரத் தந்தையாக இருந்தாலும் சரி ஏழையாக இருந்தாலும்…சரி மகள்கள் கேட்டால் ஏன்… எதற்கு என்ற கேள்வி எழாது. சத்தம் காட்டாமல் வாங்கிக் கொடுத்து விட்டு கமுக்கமாகப் போய் விடுவார்கள்.

பெரும்பாலான வீடுகளில் மகன்கள் அம்மா செல்லம் என்றால் மகள்கள் அப்பா செல்லமாக இருப்பார்கள். மகள்கள் தங்கக் கொலுசுக் கேட்டால் கூட, வாங்கிக் கொடுத்து விட்டு, ‘உங்க அம்மாட்ட சொல்லிடாத அப்புறம் உன் தம்பிட்டயும் மாட்டிவிட்டுடாதனு’ சொல்ற தந்தையர்களும் இருப்பார்கள். தந்தையுடனான மகள்கள் உறவு அப்படி.

தந்தை- மகள் உறவுக்கு எடுத்துக் காட்டாக கேரளத்தில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. இந்த தந்தையும் மகளின் ஆசையை நிறைவேற்றிதான் வைத்துள்ளார். ஆனால், மகள் இறந்த பிறகு என்பதுதான் சோகத்திலும் சோகம். கேரள மாநிலம் மால்மோட்டம் நகரைச் சேர்ந்தவர் அனில். இவரது மகள் அனகா. துருதுருவென இருக்கும் அனகா அங்குள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்தார்.

படிப்பு, விளையாட்டு என எதிலும் அனகா கெட்டி. தந்தை அனில் அனகா மீது உயிரையே வைத்திருந்தார். மகள் என்ன கேட்டாலும் வாங்கிக் கொடுத்து விடுவது அனிலின் சுபாவம். பன்னிரென்டாம் வகுப்பு மாணவியான அனகாவுக்கோ தங்க நகைகள் மீது ஈடுபாடு இல்லை. ஆனால், காலில் தங்கக் கொலுசு அணிய வேண்டுமென்பது ஆசை. தங்கக் கொலுசு வாங்கித் தருமாறு தந்தையிடம் கேட்டிருந்தார்.

எளிய குடும்பம் என்பதால் மகளின் ஆசையை உடனடியாக அனிலால் நிறைவேற்றி விட முடியவில்லை. மகளின் ஆசையை நிறைவேற்ற முயற்சித்துக் கொண்டிருந்தார். ‘கிறிஸ்துமஸ் தினத்தன்று தனக்கு கிஃப்டாக தங்க கொலுசு வாங்கி தந்து விடவேண்டுமென்று’ தந்தையிடன் அனல்கா கண்டிப்புடன் கூறியிருந்தார். அனிலும், நிச்சயம் கிறிஸ்துமஸ் பரிசாக தங்கக் கொலுசு வாங்கிக் தந்துவிடுவேன் ” என மகளிடம் வாக்குறுதி அளித்திருந்தார். இதற்கிடையேதான் அந்த சோகச் சம்பவம் நிகழ்ந்தது.

கடந்த 16ம் திகதி சாலையில் நடந்து சென்றுக் கொண்டிருந்த அனகா மீது டெம்போ வேன் ஒன்று மோதியது. மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட. அனகா ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அனகா உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அனில் மற்றும் அவரது குடும்பத்தினர் கண்ணீரும் கம்பலையுமாக மருத்துவமனையில் தவம் கிடந்தனர்.

மகளுக்கு நினைவு எப்போது நினைவு திரும்பும் என்ற பரிதவிப்புடன் டாக்டர்களை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். அனகாவுக்கு சில சமயங்களில் நினைவு திரும்பும். அறைக்கு வெளியே காத்திருக்கும் தந்தை அனில் மகளிளடம் பேச ஆசையுடன் ஓடி வருவார்.

ஆனால், அதற்குள் அனகா திரும்பவும் மயக்க நிலைக்கு சென்று விடுவார். இப்படியாக கடந்த 10 நாட்களாக மருத்துவமனையில் போராடிக் கொண்டிருந்த அனகா கிறிஸ்துமஸ் தினத்தன்று இறந்து போனார். அனில் உள்பட குடும்பத்தினர் கதறினர். மால்மோட்டம் நகர அரசு பள்ளியில் அனகாவின்உ டல் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டிருந்தது. மகளின் உயிரற்ற உடலை துக்கம் தாளாமல் பார்த்துக் கொண்டிருந்தார் அனில்.

திடீரென்று அனிலுக்கு மகளுக்கு கிறிஸ்துமஸ் பரிசாக தங்கக் கெலுசு பரிசளிப்பதாக கூறியது நினைவுக்கு வந்தது. உயிருடன் இருக்கும் போதுதான் அவளுக்கு வாங்கிக் கொடுக்க முடியவில்லை. இறப்பிலாவது மகளின் இறுதி ஆசையை நிறைவேற்றி வைக்க, அனில் முடிவு செய்தார்.

பதறியபடி யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வேக வேகமாக ஓடிப் போனார். இறுதிச்சடங்குக்கு வந்தவர்கள் எல்லாம் அதிர்ச்சிக்குள்ளாகினர். ‘மகளின் சடலத்தை விட்டு விட்டு எங்கே ஓடுகிறார்’ என பலரும் பதறினர். சிலர் அவரது பின்னால் ஓடினர். வேக வேகமாக ஓடிய அனில்ந கைக் கடை ஒன்றுக்குள் புகுந்தார். மகளின் இறுதிச் சடங்குக்கு வைத்திருந்த பணத்தில் இருந்து தங்கக் கொலுசு வாங்கினார். மகளின் உயிரற்ற உடல் அருகே சலமற்று வந்த அனில், அவரது சலனமில்லாத கால்களில் இரு தங்கக் கொலுசுகளையும் கண்ணீர் மல்க மாட்டி விட்டார். இறுதிச்சடங்குக்கு வந்தவர்கள் கண்கள் குளமாகின.

அனகாவின் உயிரற்ற உடலை மண்ணுக்குள் புதைக்கும் போதும், அவரது கால்களில் கொலுசுகள் ஓசை எழுப்பிக் கொண்டிருந்தன.

2017ம் ஆண்டு புத்தாண்டுப் பலன்கள்!!

மேஷம்:

உங்கள் ராசிக்கு அதிபதி செவ்வாய் 11ல் சுக்கிரன், கேது ஆகியோருடன் கூடியிருக்கும் நிலை சிறப்பாகும். என்றாலும் குருவும் சனியும் அனுகூலமாக இல்லை. ஜனவரி 26 முதல் சனி 9ஆமிடம் மாறுவது ஓரளவுசிறப்பாகும். பிப்ரவரி 7 முதல் 9ம் தேதி வரையிலும் குரு வக்கிரமாக உலவுவதால் சுப காரியங்கள் நிகழ வாய்ப்பு உண்டாகும்.

பணப் பிரச்னை குறையும். மனக்குழப்பங்கள் விலகும். உடல்நலம் சீராகும். ஏப்ரல் 7 முதல் ஆகஸ்ட் 26 வரை சனி வக்கிரமாக உலவுவது சிறப்பாகாது. தந்தை நலனில் கவனம் தேவை. தொழில் சம்பந்தமாக பிரச்னைகள் ஏற்படும். ஆகஸ்ட் 19 முதல் ராகு 4 ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. தாய் நலனில் கவனம் தேவைப்படும். கேது 10-ஆமிடம் மாறுவது நல்லது. ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். சாது தரிசனம் கிடைக்கும்.

செப்டம்பர் 11 முதல் குரு 7-ஆமிடம் மாறுவது விசேடமாகும். தடைகளும் குறுக்கீடுகளும் விலகும். காரியத்தில் வெற்றி கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு அதற்கான வாய்ப்புக் கூடிவரும். திருமணம் ஆனவர்களுக்கு இல்லறம் நல்லறம் ஆகும். வெளியூர், வெளிநாட்டுப் பயணங்கள் பயன்படும்.

பெரியவர்களும் தனவந்தர்களும் உங்களுக்கு உதவுவார்கள். அயல்நாட்டு வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் அதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள். கூட்டுத் தொழிலில் வளர்ச்சி காண வழிபிறக்கும். எதிரிகளின் கரம் வலுக்குறையும். வழக்கில் நல்ல திருப்பமோ, வெற்றியோ கிடைக்கும். அக்டோபர் 25 முதல் சனி 9-ஆமிடம் மாறுவதால் தான, தர்மப்பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். பொதுவில் இந்த ஆண்டின் பின்பகுதி சிறப்பானதாகும்.

ரிஷபம்:

உங்கள் ராசிக்கு 5-ல் குருவும், 10-ல் செவ்வாய், கேது ஆகியோரும் உலவும் வேளையில் இந்தப் புத்தாண்டு பிறக்கிறது. புத்திசாலித்தனத்தாலும், செயல்திறமையாலும் சாதனை பல ஆற்றுவீர்கள். பொருளாதார நிலை திருப்தி தரும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். பக்தி மார்க்கத்திலும் ஞானமார்க்கத்திலும் தெளிவு உண்டாகும். துணிச்சலான காரியங்களில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். சனி மற்றும் ராகுவின் சஞ்சாரம் அனுகூலமாக இல்லாததால் சிறுசிறு இடர்ப்பாடுகள் அவ்வப்போது ஏற்படும். என்றாலும் சமாளிப்பீர்கள்.

ஆகஸ்ட் 19 ம் முதல் ராகு 3-ஆமிடம் மாறுவது வரவேற்கத் தக்கது. வெளிநாட்டுத் தொடர்பு வலுக்கும். பயணம் மூலம் ஆதாயம் கிடைக்கும். செப்டம்பர் 11 முதல் குரு 6-ஆமிடம் மாறுவது குறை. உடல் நலனில் கவனம் தேவை. பெற்றோருக்கும் மக்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சுப காரியங்கள் நிகழக் குறுக்கீடுகள் முளைக்கும். பொருளாதாரப் பிரச்னைகள் தலைதூக்கும். பெரியவர்களிடம் பணிவோடு நடந்து கொள்வது நல்லது. மூத்த சகோதர, சகோதரிகளால் பிரச்னைகள் உருவாகும். தொழில் அதிபர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. மறைமுக எதிரிகள் இருப்பார்கள்: எச்சரிக்கை தேவை.

பொதுவில் செப்டம்பர் 10 வரை உள்ள காலம் மிகச் சிறப்பானதாக அமையும்.

மிதுனம்:

புத்தாண்டின் ஆரம்பத்தில் சுக்கிரன், சனி, ராகு ஆகியோரது பலம் கூடியிருக்கிறது. திறமைக்கும் உழைப்புக்கும் உரிய பயன் நிச்சயமாக கிடைக்கும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழில் விருத்தி அடையும். தந்தையால் சில இடர்ப்பாடுகள் ஏற்படும். தொலைதூரப் பயணத்தின்போது விழிப்புடன் செயல்படுவது நல்லது. ஆகஸ்ட் 19 முதல் ராகு 2-ஆமிடத்துக்கும் கேது 8-ஆமிடத்துக்கும்மாறுவது சிறப்பாகாது. குடும்பத்தில் பிரச்னைகள் சூழும். விஷ பயம் ஏற்படும். வீண்வம்பு, வழக்குகளைத் தவிர்ப்பது நல்லது.

செப்டம்பர் 11 முதல் குரு பலம் பெறுவதால் பிரச்னைகள் விலகும். புத்திசாலித்தனம் பளிச்சிடும். மக்களாலும், வாழ்க்கைத்துணைவராலும் நலம் உண்டாகும். பொருளாதாரப் பிரச்னைகள் குறையும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். தடைப்பட்டிருந்த சுப காரியங்கள் நிகழச் சந்தர்ப்பம் உருவாகும். தனவந்தர்கள் உதவுவார்கள். தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவற்றைப் பெறச் சந்தர்ப்பம் கூடிவரும். வாழ்வில் சுபிட்சம் கூடும். பொன்னும் பொருளும் சேரும்.

பொதுவில் இந்தஆண்டின் பின்பகுதி சிறப்பானதாகும்.

கடகம்:

புத்தாண்டின் ஆரம்பத்தில் செவ்வாய், குரு, சனி ஆகிய முக்கியமான கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் சோதனைகளும் வேதனைகளும் ஏற்படவே செய்யும். உடல் ஆரோக்கியம் பாதிக்கும். குடும்பத்தில் அமைதி குறையும். பொருளாதாரநிலை சாதாரணமாகவே காணப்படும். அதிர்ஷ்ட வாய்ப்புக்களுக்கு இடமிராது. எக்காரியத்திலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடுவது நல்லது. அவசரப்போக்கு அடியோடு கூடாது. மக்களால் மன நிம்மதி கெடும். கெட்ட பழக்கவழக்கங்களுக்கு இடம் தரலாகாது. வீண்வம்பு, வழக்குகளைத் தவிர்க்கவும்.

ஆகஸ்ட் 19 முதல் ராகு உங்கள் ஜன்ம ராசிக்கும் கேது 7-ஆமிடத்துக்கும் மாறுவது குறையே ஆகும். செப்டம்பர் 11 முதல் குரு 4-ஆமிடம் மாறுவது ஓரளவு நலம் தரும். நல்லவர்களின் தொடர்பு பயன்படும். செய்து வரும் தொழிலில் அதிக கவனம் செலுத்தினால் வளர்ச்சி காணலாம். அக்டோபர் 25 முதல் சனி 6-ஆமிடம் மாறுவதால் மக்கள் நலம் சீராகும். சிந்தனையில் தெளிவு பிறக்கும். ஆன்மிகப் பணியாளர்களுக்கு வரவேற்பு கூடும். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் கிடைக்கும். வாழ்க்கைத்துணை நலம் பாதிக்கும்.

மொத்தத்தில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய ஆண்டு இது. ஜாதக பலம் இருப்பவர்களுக்கு சோதனைகள் குறையும். இறை வழிபாட்டிலும் கிரக வழிபாட்டிலும் ஈடுபடுவதன் மூலம் நலம் பெறலாம்.

சிம்மம்:

குருவின் சஞ்சாரம் சிறப்பாக உள்ளது. இதர கிரகங்கள் கோசாரப்படி சிறப்பாக இல்லாவிட்டாலும் குரு பலம் உங்களைக் காக்கும். தெய்வானுக்கிரகம் ஏற்படும். பெரியவர்களும் தனவந்தர்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அவர்களது ஆசிகளையும் பெறுவீர்கள். எதிர்ப்புக்கள் அடங்கிப் போகும். பிரச்னைகள் குறையும். செய்து வரும் தொழிலில் முன்னேற்றம் காணலாம். ஆசிரியர்களது நிலை உயரும். உத்தியோகஸ்தர்கள் வளர்ச்சி காண்பார்கள். கொடுக்கல்-வாங்கல் ஒழுங்காகும். ஜனவரி 26 முதல் சனி 5-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். மக்களின் முன்னேற்றம் மந்த கதி அடையும். அதிர்ஷ்டம் குறையும்.

ஆகஸ்ட்19 முதல் ராகு 12-ஆமிடம் மாறுவதால் வீண் செலவுகளும் இழப்புக்களும் ஏற்படும். கேது 6-ஆமிடம் மாறுவது சிறப்பாகும். மனோபலம் கூடும். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைவரின் நலம் சீராகும். செப்டம்பர் 11 முதல் குரு 3-ஆமிடம் மாறுவதால் பணப் பிரச்னை ஏற்படும். தொழில் அதிபர்களுக்கு முன்னேற்றம் தடைப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு இடமாற்றமும் நிலைமாற்றமும் உண்டாகும். மார்பு, நுரையீரல், முதுகு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். புனிதமான காரியங்களில் ஈடுபாடு உள்ளவர்களுக்குத் தெளிவான பாதை புலப்படும்.

பொதுவில் வருடத்தின் முன்பகுதியில் செப்டம்பர் 10 வரை உள்ள காலம் மிகச் சிறப்பானதாக அமையும்.

கன்னி:

புத்தாண்டு ஆரம்பத்தில் செவ்வாய், சனி, கேது ஆகியோரது பலத்தால் அனுகூலம் உண்டாகும். மனத்தில் துணிவு பிறக்கும். செயலில் வேகம் கூடும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். பக்தி மார்க்கத்தில் நாட்டம் அதிகரிக்கும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். இன் ஜினீயர்களது நோக்கம் நிறைவேறும். ஜன்ம ராசியில் குரு இருப்பதால் அலைச்சலைத் தவிர்க்க இயலாது. விரும்பத்தகாத இடமாற்றம் ஏற்படும். ஜனவரி 26 முதல் சனி 4-ஆமிடம் மாறுவதால் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். சொத்துக்கள் மூலம் ஓரளவு வருவாய் கிடைக்கும்.

ஆகஸ்ட் 19 முதல் ராகு 11-ஆமிடம் மாறுவது நல்லது. வெளியூர், வெளிநாட்டுத்தொடர்பு மூலம் ஆதாயம் கிடைக்கும். ஆராய்ச்சியாளர்களுக்கு மதிப்பு உயரும். கடல் வாணிபத்தில் வளர்ச்சி காணலாம். கேது 5-ஆமிடம் மாறுவதால் மக்களால் பிரச்னைகள் சூழும். மறதி உண்டாகும். செப்டம்பர் 11 முதல் குரு 2-ஆமிடம் மாறுவது சிறப்பாகும். பண நடமாட்டம் அதிகமாகும். பேச்சாற்றல் கூடும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். கடன் தொல்லை குறையும். பிரச்னைகள் எளிதில் தீர வழிபிறக்கும். செய்து வரும் தொழிலில் முன்னேற்றம் காணலாம். அக்டோபர் 25 முதல் சனி 4-ஆமிடம் மாறுவதால் வீண் அலைச்சலும், உடல் அசைதியும் ஏற்படும். சொத்து மூலம் வருவாய் கிடைத்தாலும் சில பிரச்னைகளும் உண்டாகும்.

பொதுவில் இந்த ஆண்டின் பின்பகுதி முன்பகுதியை விடச் சிறப்பானதாகும்.

துலாம்:

புத்தாண்டில் ஆரம்பத்தில் குருவும் சனியும் செவ்வாயும் அனுகூலமாக இல்லை. மனத்தில் ஏதேனும் சலனம் ஏற்படும். பேச்சிலும் செயலிலும் நிதானம் தேவை. வயிறு, கால் சம்பந்தமான உபாதைகள் உண்டாகும். பண நெருக்கடி ஏற்படும். சுப காரியங்கள் நிகழக் குறுக்கீடுகள் முளைக்கும். தீய பழக்கங்களுக்கு இடம்தராமல் இருப்பது அவசியமாகும். முக்கியமான பணிகளை ஒத்திப்போடுவது நல்லது. ஜனவரி 26 முதல் சனி 3-ஆமிடம் மாறுவதால் வெற்றி வாய்ப்புக்கள்கூடிவரும், திறமை வெளிப்படும். ஏப்ரல் 7 முதல் ஆகஸ்ட் 25 வரை சனி வக்கிரமாக உலவும் நிலை அமைவதால் குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படும். யாருக்கும் வாக்கு கொடுக்கவேண்டாம்.

 ஆகஸ்ட் 19 முதல் ராகு 10-ஆமிடம் மாறுவதால் தொழிலில் நல்லதொரு மாற்றம் ஏற்படும். கேது 4-ஆமிடம் மாறுவதால் சுகம் குறையும். தாய் நலனிலும் கவனம் தேவைப்படும். செப்டம்பர் 11 முதல் குரு ஜன்ம ராசிக்கு மாறுவது சிறப்பாகாது. விரும்பத்தகாத இடமாற்றமும் நிலைமாற்றமும் உண்டாகும். தலை சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். பொருளாதாரப் பிரச்னை உண்டாகும். எதிரிகள் இருப்பார்கள். பிறரிடம் விழிப்புடன் பழகுவது நல்லது. மக்களாலும், வாழ்க்கைத்துணைவராலும் நலம் பெறலாம். தர்ம காரியங்களிலும் தெய்வ காரியங்களிலும் கலந்து கொள்ளச் சந்தர்ப்பம் கூடிவரும். கூட்டாளிகள் ஒத்துழைப்பார்கள். அக்டோபர் 25 முதல் சனி 3-ஆமிடம் மாறுவதால் மனத்தில் தெளிவும் தன்னம்பிக்கையும் கூடும். முயற்சி பலிதமாகும். குடும்ப நலம் சீராகும். உழைப்பு வீண்போகாது.

மொத்தத்தில் சாதாரணமான ஆண்டு இது.

விருச்சிகம்:

புத்தாண்டின் ஆரம்பத்தில் குரு, சுக்கிரன், ராகு ஆகியோர் அனுகூலமாக உலவுகிறார்கள். தெய்வ பலம் உங்களுக்கு உற்றதுணையாக இருக்கும். குரு அருளும் துணைபுரியும். பொருளாதார நிலை உயரும். குடும்ப நலம் சிறக்கும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் கிடைக்கும். ஸ்பெகுலேஷன், கொடுக்கல்-வாங்கல் இனங்களால் வருவாய் கிடைத்துவரும். மந்திரம், தந்திரம், யந்திரம் இவற்றில் ஈடுபாடு உண்டாகும். சுப காரியங்கள் கைகூடும். பயணத்தின் மூலம் முக்கியமான காரியங்கள் நிறைவேறும். பெரியவர்கள், தனவந்தர்கள் ஆகியோரது ஆதரவைப் பெறுவீர்கள். புதிய திட்டங்கள் நிறைவேறும். பொன்னும் பொருளும் சேரும்.

இந்த ஆண்டு முழுவதும் சனி பலம் குறைந்திருப்பதால் சனிப் பிரீதியைத் தொடர்ந்து செய்து வருவது நல்லது. ஆகஸ்ட் 19 முதல் ராகு 9-ஆமிடத்துக்கு மாறுவது சிறப்பாகாது. கேது 3-ஆமிடம் மாறுவதால் மன உறுதி கூடும். பக்தி மார்க்கத்தில் நாட்டம் உண்டாகும். எதிர்ப்புக்களை வெல்லும் சக்தி பிறக்கும். செப்டம்பர் 11 முதல் குரு 12-ஆமிடம் மாறுவதால் குடும்ப நலம் பாதிக்கும். பண நடமாட்டம் குறையும். மக்களால் மன அமைதி கெடும். குழந்தைகளை விட்டுப் பிரிந்திருக்க வேண்டிவரும். அதிர்ஷ்ட வாய்ப்புக்களை எண்ணி ஏமாற வேண்டாம். யாருக்கும் வாக்கு கொடுக்கலாகாது.

பொதுவின் இந்தப் புத்தாண்டில் செப்டம்பர் 10 வரை உள்ள காலம் மிகச் சிறப்பானதாகும்.

தனுசு:

உங்கள் ராசிக்கு 10-ல் குருவும், 12-ல் சனியும் உலவுவது சிறப்பாகாது. விரும்பத்தகாத இடமாற்றமும் நிலைமாற்றமும் ஏற்படும். குடும்ப நலனில் அக்கறை தேவைப்படும். பொருள் வரவு குறைந்து, செலவுகளும் இழப்புக்களும் கூடும். கைப்பொருளைப் பத்திரப்படுத்து வைத்துக் கொள்வது அவசியமாகும். கண், கால் சம்பந்தமான உடல் உபாதைகள் ஏற்படும். மக்களாலும், வேலையாட்களாலும் பிரச்னைகள் சூழும். சகோதர, சகோதரிகளால் சங்கடங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களும் தொழிலாளர்களும் தங்கள் கடமைகளைச் சரிவர ஆற்றிவருவதன் மூலம் சரிவுக்கு ஆளாகாமல் தப்பலாம். கணவன் மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பக்குவமாகச் சமாளிக்கவும்.

ஆகஸ்ட் 19 முதல் ராகு 8-ஆமிடத்துக்கும் கேது 2-ஆமிடத்துக்கும் இடம் மாறுவது குறை ஆகும். விஷ பயம் ஏற்படும். பயணத்தால் சங்கடம் உண்டாகும். வீண்வம்பு கூடாது. செப்டம்பர் 11 முதல் குரு லாப ஸ்தானத்துக்கு மாறுவது விசேடமாகும். எண்ணிய எண்ணம் ஈடேறும். பொன், பொருள் சேர்க்கை நிகழும். நிலபுலங்களால் ஆதாயம் கிடைக்கும். செல்வாக்கும் மதிப்பும் உயரும். தாயாராலும், மக்களாலும் அனுகூலம் உண்டாகும். நல்லவர்கள் உங்களுக்கு உதவி புரிய முன்வருவார்கள். உத்தியோகஸ்தர்களுக்குப் பிரச்னைகள் விலகும். புதிய துறைகளில் முதலீடு செய்ய வாய்ப்புக் கூடிவரும். இந்த ஆண்டு முழுவதும் சனிக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்து வருவது நல்லது.

மொத்தத்தில் செப்டம்பர் 11 முதல் வாழ்வில் நல்ல திருப்பத்தைக் காணலாம்.

மகரம்:

புத்தாண்டின் ஆரம்பத்தில் குரு, சனி ஆகியோரது சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் சுப காரியங்கள் நிகழும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருந்துவரும். தொலைதூரத்தொடர்பு பயன்படும். பெற்றோரால் மக்களுக்கும் மக்களால் பெற்றோருக்கும் நலம் உண்டாகும். தான, தர்மப்பணிகளில் நாட்டம் கூடும். பிறர் நலனுக்காகப் பாடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். உயர் பொறுப்புக்களும் பதவிகளும் கிடைக்கும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். ஸ்பெகுலேஷன் துறைகளால் ஆதாயம் கிடைக்கும். மக்கள் நலம் மகிழ்ச்சி தரும். சாதுக்கள், மகான்களின் தரிசனம் கிடைக்கும்.

ஜனவரி 26 முதல் ஏப்ரல் 7 வரையிலும் சனி 12-ஆமிடத்தில் உலவும் நிலை அமைவதால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். இடமாற்றம் உண்டாகும். ஜூன் 21 முதல் அக்டோபர் 25 வரை உள்ள காலத்தில் சனி அனுகூலமாக இருப்பதால் திறமைக்குரிய பயன் கிடைக்கும். ஆகஸ்ட் 19 முதல் ராகு 7-ஆமிடத்துக்கும், கேது ஜன்ம ராசிக்கும் இடம் மாறுவது சிறப்பாகாது. இந்த ஆண்டு முழுவதுமே நாகரை வழிபடுவது அவசியமாகும். செப்டம்பர் 11 முதல் குரு 10-ஆமிடம் மாறுவது குறை. தொழிலில் மாற்றம் உண்டாகும். சகோதர நலனிலும் மக்கள் நலனிலும் கவனம் தேவை. அக்டோபர் 25 முதல் சனி 12-ஆமிடம் மாறுவதால் விரும்பத்தகாத இடமாற்றமும் நிலைமாற்றமும் ஏற்படும். பொருள் வரவைக் காட்டிலும் செலவுகள் அதிகமாகும். சிக்கனம் தேவை.

பொதுவில் இந்த ஆண்டின் முன்பகுதிக் காலம் சிறப்பாக இருக்கும்.

கும்பம்:

இந்தப் புத்தாண்டு முழுவதும் சனி அனுகூலமாக உலவுகிறார். இதனால் உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயனைப் பெறுவீர்கள். நண்பர்களும் உறவினர்களும் ஓரளவு உதவுவார்கள். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். குரு பலம் இல்லாததால் சிறுசிறு இடர்ப்பாடுகள் அவ்வப்போது ஏற்படும். பணப் பிரச்னை ஏற்படும். குடும்பத்தில் அமைதி காண அரும்பாடுபட வேண்டிவரும். சிலர் குடும்பத்தை விட்டுப் பிரிந்து இருக்க வேண்டிவரும். தொழில் அதிபர்களுக்குச் சோதனைகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் முன்னேற்றம் தடைப்படும். கொடுக்கல்-வாங்கலில் எச்சரிக்கை தேவை. சுப காரியங்கள் நிகழ ஜாதக பலம் தேவை.

ஆகஸ்ட் 19 முதல் ராகு 6-ஆமிடம் மாறுவது சிறப்பாகும். கடல் வாணிபம் லாபம் தரும். ஏற்றுமதி-இறக்குமதி இனங்களால் ஆதாயம் கிடைக்கும். கேது 12-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. செப்டம்பர் 11 முதல் குரு 9-ஆமிடம் மாறுவது வரவேற்கத் தக்கது. உடல் ஆரோக்கியம் சீராகும். பண நடமாட்டம் அதிகரிக்கும். தடை, தாமதம் ஆன சுப காரியங்கள் நிகழச் சந்தர்ப்பம் உருவாகும். பெரியவர்கள், தனவந்தர்களின் ஆசிகளும் ஆதரவும் கிடைக்கும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்ளச் சந்தர்ப்பம் கூடிவரும். செல்வாக்கும் மதிப்பும் உயரும். அக்டோபர் 25 முதல் சனி 11-ஆமிடம் மாறுவதால் வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். நீண்ட கால எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். பல வழிகளில் ஆதாயம் வந்து சேரும்.

பொதுவில் இந்தப் புத்தாண்டின் பின்பகுதிக் காலம் சிறப்பானதாகும்.

மீனம்:

புத்தாண்டின் ஆரம்பத்தில் குரு வலுத்திருக்கிறார். அவர் உங்கள் ராசியைப் பார்ப்பதுடன் 3, 11-ஆம் இடங்களையும் பார்க்கிறார். இதனால் உங்கள் மதிப்பு உயரும். பிறரால் போற்றப்படுவீர்கள். உடல்நலம் சீராகவே இருந்துவரும். பொருளாதார நிலை திருப்தி தரும். உடன்பிறந்தவர்களாலும் வாழ்க்கைத்துணைவராலும் மக்களாலும் நலம் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு அதற்கான வாய்ப்புக் கூடிவரும். திருமணம் ஆனவர்களுக்கு இல்வாழ்வு இனிக்கும். முயற்சி வீண்போகாது. துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். எதிரிகள் அடங்குவார்கள். வழக்கில் வெற்றி கிட்டும். கூட்டுத் தொழில் வளர்ச்சி பெறும். கூட்டாளிகள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.

ஆகஸ்ட் 19 முதல் ராகு 5-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. மக்கள் நலனில் கவனம் தேவை. குறுக்கு வழிகளில் செல்லலாகாது. கேது 11-ஆமிடம் மாறுவதால் ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். சாது தரிசனம் கிடைக்கும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். செப்டம்பர் 11 முதல் குரு 8-ஆமிடம் மாறுவது குறை. செய்து வரும் தொழில் எதுவானாலும் அதில் முழு அக்கறை தேவை. சிறு தவறு செய்தாலும் பெரிய தண்டனைக்கு ஆளாக வேண்டிவரும். சகோதர நலனில் கவனம் தேவை. மக்களால் மன அமைதி கெடும். தந்தையால் செலவுகள் அதிகரிக்கும். மனத்துக்குச் சலனத்தைத் தரும் சம்பவங்கள் வாழ்க்கையில் இடம்பெறும். ஜாதக பலம் உள்ளவர்கள் கவலைப்படத் தேவையில்லை.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டின் முன்பகுதிக் காலம் சிறப்பானதாக அமையும். பின்பகுதியில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

மனித வெடிகுண்டாய் மாறிய இளம்பெண் : சில நொடியில் நேர்ந்த பயங்கரம்!!

வடகிழக்கு நைஜீரியாவில் பல மக்களை கொல்லும் நோக்கில் வெடிகுண்டோடு வந்த இளம் பெண் அந்த வெடிகுண்டு வெடித்ததில் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

வடகிழக்கு நைஜீரியாவின் தலைநகரான Maiduguriல் புகழ்பெற்ற மார்க்கெட் வீதி ஒன்று உள்ளது. மக்கள் நடமாட்டத்துடன் எப்போதும் பரபரப்பாக காணப்படும் அந்த இடத்துக்கு இரண்டு பெண்கள் வந்தனர்.

மனித வெடிகுண்டான அவர்களில் ஒரு பெண் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்து அங்குள்ள மக்களை கொல்ல நினைத்தார். ஆனால் அவர் நினைத்த மாதிரி வெடிகுண்டு வெடிக்கவில்லை.

அவருடன் இருந்த இன்னொரு பெண் அந்த வெடிகுண்டை அழுத்த அது வெடித்து உடலில் வெடிகுண்டை கட்டியிருந்த அந்த பெண் மட்டும் அதே இடத்தில் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், Boko Haram என்னும் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் தான் அந்த பெண்கள் என கூறியுள்ளனர்.

அந்த வெடிகுண்டு சரியான அளவில் வெடித்திருந்தால் மிக பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும். அது தவறாக போனதால் அந்த பெண் மட்டுமே இறந்துள்ளார் என கூறியுள்ளனர்.

கடந்த வாரம் நைஜீரியாவின் ஜனாதிபதி Muhammadu Buhari, Boko Haram தீவிரவாத இயக்கத்தின் முக்கிய நபர்களை அழித்து விட்டோம் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

49 நாட்களில் உலகைச் சுற்றி சாதனை படைத்த நபர்!!

பிரான்சை சேர்ந்த தாமஸ் கோவில்லோ என்பவர் 49 நாட்களில் படகு மூலம் உலகைச் சுற்றி வந்து சாதனை படைத்துள்ளார்.

பிரான்சை சேர்ந்தவர் தாமஸ் கோவில்லே (48). இவர் கடல் பயணம் மேற்கொள்வதில் ஆர்வம் மிகுந்தவர் என கூறப்படுகிறது. இவர் படகு மூலம் உலகை சுற்றி வர திட்ட மிட்டுள்ளார்.

அதற்காக 31 மீட்டர் நீள படகில் தனி ஆளாக பயணம் மேற்கொண்டுள்ளார்.

தனது பயணத்தை முடித்த அவர் 49 நாட்களில் மேற்கு பிரான்சில் உள்ள பிரெஸ்ட் துறை முகத்துக்கு மீண்டும் திரும்பினார்.

அங்கு திரும்பிய அவர் தன்னுடைய சாதனையை நினைத்து தன்னை அறியாமல் கண்ணீர் விட்ட சம்பவம் அங்கிருந்தவர்கள் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இவர் 49 நாட்கள், 3 மணி 7 நிமிடம் மற்றும் 38 வினாடிகளில் உலகை சுற்றி முடித்துள்ளார்.

இதற்கு முன்பு கடந்த 2008 ஆம் ஆண்டு பிரான்சிஸ் ஜோயன் என்ற பிரான்ஸ்காரர் 57 நாட்கள் மற்றும் 13 மணி நேரத்தில் படகில் உலகை சுற்றி வந்தார்.

தற்போது அவரை விட 8 நாட்கள் முன்னதாகவே உலகை சுற்றி வந்து சாதனை படைத்துள்ளார்.

இது குறித்து கோவில்லே, கூறும் போது, இச்சாதனை படைக்க தான் 10 ஆண்டுகள் கடுமையாக உழைத்தேன் என்றும் பிரான்சிஸ் ஜோயனின் சாதனையை முறியடிக்க கோவில்லே 5 முறை முயற்சி செய்து தற்போது தான் வெற்றி பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது.

காதல் கணவருடன் சேர்த்து வையுங்கள் : கதறும் இளம்பெண்!!

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் காதல் கணவரை சேர்த்து வைக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் சாணர்பட்டியைச் சேர்ந்த துரைசாமி என்பவரது மகன் நிர்மல்ராஜ்(26). இவர் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் பல் மருத்துவம் படித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டதாக கூறி திண்டுக்கல் கோவிந்தாபுரத்தைச் சேர்ந்த கணேசன் என்பவருடைய மகள் கார்த்திகா (26) என்பவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதை அறிந்த பொலிசார் அங்கு வந்து கார்த்திகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இது குறித்து பொலிசாரிடம் கார்த்திகா கூறியதாவது, நான் கடந்த 2009ம் ஆண்டு நத்தத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி படித்துக்கொண்டிருந்தேன்.

அப்பொழுது, அங்கு பயின்ற சீனியர் மாணவர் ஒருவர் மூலம், சாணார்பட்டியை சேர்ந்த நிர்மல்ராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நீண்ட நாட்களாக காதலித்து வந்தோம்.

இந்நிலையில், கட்டாயமாக திருமணம் செய்து கொள்வேன் ஏமாற்றமாட்டேன் என்று கூறி பலமுறை என்னுடன் உல்லாசமாக இருந்தார். பின்னர், அவர் குடும்பத்தார் என்னை ஏற்கவில்லை எனக் கூறி திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தார்.

இதனால் நான் திண்டுக்கல் மகளிர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்ததால் பொலிசார் வழக்குப்பதிவு செய்து நிர்மல்ராஜை கைது செய்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, இருவரும் பதிவு திருமணம் செய்துகொண்டு நன்றாக தான் வாழ்ந்து வந்தோம்.

இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மதுரையில் பல் மருத்துவம் படிப்பதற்காக என்னைவிட்டு சென்றார். அதன்பிறகு நான் பலமுறை அவரிடம் தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை.

இதற்கிடையில் அவரது குடும்பத்தினர் எங்கள் இருவரையும் பிரிக்க முயல்கின்றனர். எனவே அதைத் தடுத்து எனது கணவரை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என கதறியுள்ளார்.

பின்னர், இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக பொலிசார் உறுதி அளித்ததையடுத்து அந்த பெண் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.

சசிகலாவை சந்தித்த பிரபல நடிகை ஸ்ரீதேவி : அரசியல் உலகில் பரபரப்பு!!

பிரபல நடிகை ஸ்ரீதேவி போயஸ் கார்டன் சென்று சசிகலாவை சந்தித்துள்ளது அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் தினமும் லட்சக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் திரையுலகினர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவி நேற்று ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு போயஸ் கார்டன் சென்று சசிகலாவை சந்தித்துள்ளார்.

ஏற்கனவே அதிமுகவினர் சசிகலாவை சின்னம்மா என்று தலையில் வைத்து கொண்டாடி வருகின்ற நிலையில், தற்போது ஸ்ரீதேவி சசிகலாவை சந்தித்துள்ளது அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேருக்கு நேர் மோத வந்த விமானங்கள் : வைரலாகும் புகைப்படம்!!

புதுடெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இரு விமானங்கள் நேருக்கு நேர் வந்த சம்பவத்தினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சுமார் 176 பயணிகளுடன் லக்னோவில் இருந்து வந்த இண்டிகோ விமானம், எதிரே வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்துடன் நேருக்கு நேர் மோத முற்பட்டுள்ளது.

இரு விமானங்கள் நேருக்கு நேர் மிகவும் நெருக்கமாக வந்ததன் காரணமாக அதிகாரிகள் மற்றும் பயணிகள் பெரிதும் அச்சம் அடைந்தனர்

விமான ஓட்டிகள் ஸ்பைஸ்ஜெட் விமானத்தை பார்த்ததும் உடனடியாக முழு திறனையும் பயன்படுத்தி விமானத்தை நிறுத்திஉள்ளனர் என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

இண்டிகோ விமானம் 6இ 769 விளக்கை அணைத்து இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றன

குவைத் சென்ற இலங்கை பெண் அங்கவீனமுற்ற நிலையில் நாடு திரும்பிய சோகம்!!

குருணாகல் – மஹவ பிரதேசத்தில் இருந்து பணம் சம்பாதிக்கும் நோக்கில் வெளிநாட்டுக்குச் சென்று அங்கவீனமுற்ற நிலையில் நாட்டுக்கு வந்த 3 பிள்ளைகளின் தாயொருவர் தொடர்பாக தெரியவந்துள்ளது.

மஹவ – பாலமுல்ல பிரதேசத்தை சேர்ந்த பத்மினி ஸ்வர்ணலதா என்ற 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு அங்கவீனமுற்று உள்ளார்.

அவர் தனது குடும்ப வறுமை நிலையை கருத்தில் கொண்டு 2011 ஆம் ஆண்டு குவைத் நாட்டிற்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளார். அவர் அண்மையில் மீண்டும் நாட்டிற்கு அங்கவீனமுற்றே திரும்பியுள்ளார்.

இவரின் இந்த நிலை காரணமாக தமது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அவரின் கணவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த நிலைமை தொடர்பாக இதுவரை எந்தவொரு இழப்பீடும் வழங்கப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.

குறித்த பெண் தனது இந்த நிலையை கருத்தில் கொண்டு காப்புறுதி இழப்பீட்டை பெற்றுத் தருமாறு உரிய அதிகாரிகளிடம் கோரியுள்ளார்.

உரிய அதிகாரிகள் இது தொடர்பாக கவனத்தில் எடுத்து காப்புறுதி இழப்பீட்டை பெற்றுக் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

பல இடங்களில் பாரிய மோசடியில் ஈடுபட்ட நபர் சிக்கினார்!!

ஹட்டனில் பொது சுகாதார பரிசோதகர் எனக்கூறி பணம் பறிக்க முற்பட்ட நபரொருவர், உணவக உரிமையாளரின் அறிவித்தலுக்கு அமைய கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று (26.12) ஹட்டனில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த நபர் ஹட்டன் நகரில் உள்ள விற்பனை நிலையங்கள் மற்றும் உணவகங்களுக்கு சென்று அவற்றை பரிசோதனை செய்து, குறைபாடுகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு உரிமையாளர்களிடம் பணம் பெற்றுக் கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.

பொகவந்தலாவை பிரதேசத்தை சேர்ந்த 45 வயதான இந்த சந்தேகநபர், நுவரெலியா மாவட்டத்தில் பல பிரதான நகரங்களுக்கு நீண்ட நாட்களாக சென்று இவ்வாறான முறையில் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.