கர்ப்பிணியின் வயிற்றை கிழித்த கொடூரம் : நடந்த விபரீத சம்பவம்!!

பிரேசில் நாட்டில் திருமணமான தம்பதியினர் தங்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தால் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசிலை சேர்ந்த Silva Pinto மற்றும் Fabio Luiz Lima ஆகிய தம்பதியினருக்கு திருமணமாக 3 வருடங்கள் கடந்தும் குழந்தை இல்லை.

இந்நிலையில் Pinto கருவுற்றபோது அவரது வயிற்றில் இருப்பது குழந்தை இல்லை என்றும், அது கட்டி என்பதால் அதனை நீக்கிவிட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அதன்படியே, அறுவை சிகிச்சையின் மூலம் Pinto வின் வயிற்றில் இருந்த கட்டி நீக்கப்பட்டது.

தங்களுக்கு குழந்தையே இல்லை என்ற கவலையில் இந்த Pinto மற்றும் அவரது கணவர் ஆகிய இருவரும் சேர்ந்து திட்டம் ஒன்றை தீட்டியுள்ளனர்.

அதாவது, வறுமையில் வாடும் கர்ப்பிணி பெண்கள் மற்றும் அவர்களுக்கு பிறக்கப்போகும் குழந்தைகளுக்கு ஆடை உதவிகள் செய்வதாக கூறி வாட்ஸ் அப்பில் குரூப் ஒன்றை ஆரம்பித்து அதன் மூலம் பலருடன் தொடர்பு கொண்டுள்ளார்.

இந்நிலையில் தான் 7 மாத கர்ப்பிணி பெண்ணான, ரியான் இவர்களிடம் சிக்கியுள்ளார். ரியானை சந்தித்து ஆடையை வழங்குவதற்காக ரியோவில் உள்ள ரயில் நிலையம் சென்ற இத்தம்பதியினர், அவரை கடத்திக்கொண்டு தங்களது வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ரியான் 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறார் என்று நினைத்துக்கொண்ட இவர்கள், கத்தியை எடுத்து ரியானின் வயிற்றை கிழித்து குழந்தையை எடுக்க முற்பட்டுள்ளனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக தாய் மற்றும் சேய் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த இந்த தம்பதியினர், இரண்டு சடலங்களையும் தங்கள் வீட்டில் புதைத்துவிட்டு, கத்தியை நீச்சல் குளத்தில் போட்டுள்ளனர்.

இந்நிலையில் ரியான் காணாமல் போய் 2 வாரங்கள் கடந்துவிட்ட நிலையில் அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் பொலிசார் விசாரணை நடத்தியதில், ரியோவில் உள்ள ரயில் நிலையத்தில் வைத்து ரியான், இந்த தம்பதியனர் பேசிக்கொண்டிருந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியிருந்துள்ளது.

அதனடிப்படையில், இந்த தம்பதியினரிடம் பொலிசார் விசாரணை நடத்தியதில் மேற்கூறிய தகவல்கள் தெரியவந்துள்ளது.

இரட்டை படுகொலை மற்றும் சடலங்களை மறைத்து வைத்த குற்றத்திற்காக இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வழக்கு விசாரணை நடைபெறும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ‘உலகத் தமிழர் விருது’!!

உலக தமிழ் வம்சாவளி என்ற அமைப்பு (GOTO- Global Organisation of Tamil Origin) உலகளாவிய தமிழர்களைக் குழுவாகக் கொண்டு இயங்கிவருகிறது. இந்த அமைப்பின் மூலமாக கடந்த 3 ஆண்டுகளாகக் கொண்டாடப்பட்டுவரும் உலகத் தமிழர் திருநாள் விழாவின், உலகத் தமிழர் வம்சாவளி ஒன்றுகூடல் நிகழ்ச்சி வருகிற ஜனவரி 6ஆம் திகதி கிண்டியில் உள்ள ராயல் மெரீடியன் நட்சத்திர ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ்த் தலைவர்கள் மற்றும் அறிஞர் பெருமக்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

உலக தமிழ் வம்சாவளி அமைப்பினால் வருடந்தோறும் வழங்கப்பட்டுவரும் உலகத் தமிழன் விருதுக்கு நாடுகடந்து தமிழன் பெருமையை உரக்க ஒலிக்கச் செய்த தமிழர்களில் ஒருவருக்கு ‘உலகத் தமிழர் விருது’ வழங்கப்படும்.

இம்முறை கூகுளின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை, மின்னஞ்சலைக் கண்டுபிடித்த சிவா அய்யாதுரை மற்றும் முன்னாள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் நீதியரசர் நவநீதம் பிள்ளை, ஒஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் பெயரைக் குறிப்பிட்டு கொடுக்கப்பட்ட பட்டியலில், ஒஸ்கார் மேடையில் தமிழை உரக்க ஒலித்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இந்த உலகத் தமிழர் விருது வழங்கப்படுகிறது.

ஆர்ட்டிக் பிராந்தியத்தில் வரலாறு காணாத வெப்பம் : கடல் மட்டம் உயரும் அபாயம்!!

ஆட்டிக் பிராந்தியத்தில் சராசரியைவிட 20 டிகிரி செல்சியஸ் வரை அதிக வெப்பக்காற்று வீசுவதாக ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டிருக்கிறார்கள்.

வழக்கமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் சராசரியைவிட சுமார் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிக வெப்பம் இருக்கும்.

இம்முறை அந்த நிலை 20 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.

1000 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் இதுபோன்ற அரிதான நிகழ்வுகள் நடக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மனிதர்களால் உருவாக்கப்படும் பருவநிலை மாற்றமே இதற்குக் காரணம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

பூமி தொடர்ந்து வெப்பமடைந்து வருவதால், வட துருவத்தின் கடல் பகுதியிலும், நிலப் பகுதியிலும் மூடியிருக்கும் பனிக்கட்டிகள் உருகி வருவதாக ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.

வவுனியா விபத்தில் பலியான இளம் பெண் வைத்தியர்!!

வவுனியாவில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் 32 வயதுடைய பெண் வைத்தியர் உட்பட அவரது குடும்ப உறுப்பிர்கள் மூவரே உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த வைத்தியர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாணம், கண்டி, ஏ9 வீதியின் வவுனியா , பூஓய பாலத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வவுனியாவில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கொள்கலன் மற்றும் அதற்கு எதிர்திசையில் பயணித்துக் கொண்டிருந்த கெப் வண்டி ஒன்று நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டிருந்தது.

நாரஹென்பிட்டி பகுதியில் வசிக்கும் 32 வயதுடைய வைத்தியரான எம்.டீ.டீ.சுதேஷிகா என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

விபத்தில் கெப் வண்டியில் பயணித்த வைத்தியரின் மாமா மற்றும் அத்தை உயிரிழந்துள்ள நிலையில், கடும் காயமடைந்த வைத்தியரின் கணவர் வவுனியா அரசாங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ள நிலையில், சாரதிகள் இருவரில் ஒருவருக்கு ஏற்பட்ட நித்திரையே விபத்திற்கு காரணம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

உயிரிழந்த மூவரின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெறுகின்ற நிலையில், தற்போது வரையில் கணவர் சிகிச்சை பெற்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.

-தமிழ்வின்-

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் 12ம் திகதிக்கு முன் வெளியிடப்படவுள்ளது!!

இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஜனவரி மாதம் 12ம் திகதிக்கு முன்னதாக, வௌியிடப்படவுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை பரீட்சைப் பெறுபேறுகள் தாமதமடைவதாக சில தரப்பினர் பல்வேறு விமர்சனங்களை எழுப்பினர்.

எதுஎவ்வாறு இருப்பினும், அவ்வாறு குறிப்பிடத்தக்களவு தாமதம் ஏற்படவில்லை எனக் கூறிய பரீட்சைகள் ஆணையாளர், இம்முறை தொழிநுட்ப விஞ்ஞானப் பிரிவில் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை 30,000க்கும் அதிகம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய இவர்களது நடைமுறைப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் அதிக காலம் எடுத்துக் கொண்டதாக, அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை 2015ம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியிடப்பட்டது 2016ம் ஆண்டு ஜனவரி 3ம் திகதியே எனவும் புஸ்பகுமார மேலும் கூறியுள்ளார்.

இதற்கமைய இம்முறை பெறுபேறுகள் தாமதமாவதாக வௌியான தகவல்கள் ஆதாரமற்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று மழை : மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!!

நாட்டின் பல பிரதேசங்களில் இன்றைய தினம் மழை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளின் வானம் மேகங்களினால் மூடியுள்ளமையில், மழையுடனான காலநிலை ஒன்றை எதிர்பார்க்க முடியும் என குறிப்பிடப்படுகின்றது.

நாட்டின் பல பிரதேசங்களில், விசேடமாக கிழக்கு, ஊவா, வடக்கு, வட மத்திய, மத்திய மற்றும் மேல் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சில இடங்களில் ஓரளவு கடுமையான (75 மீல்லி மீற்றர்) மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களை குறைத்துக் கொள்ள அவதானமாக செயற்பாடுமாறு மக்களிடம் திணைக்களம் கேட்டுள்ளது.

வவுனியாவில் 370 குடும்பங்களுக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கல்!!

 
வவுனியா கற்பகபுரம் அதக பாடசாலையில் இன்று (28.12.2016) பிற்பகல் 1 மணியளவில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் இப்பகுதியில் நீண்டகாலமாக காணி அனுமதிப்பத்திரம் இன்றி வசித்து வந்த 370 குடும்பங்களுக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர், வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா, வன்னி மாவட்ட ஐக்கிய தேசியக்கட்சியின் அமைப்பாளர் கருணதாச, வவுனியா இணைப்பாளர் சிவலிங்கம், வவுனியா உதவிப் பொலிஸ் பொறுப்பதிகாரி, கிராமசேவையாளர், பிரதேச செயலக காணிப்பிரிவு உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இரவில் பெண்ணாக மாறும் கணவர் : விவாகரத்து கோரி இளம்பெண் மனு!!

கர்நாடகாவில் ஐடி ஊழியரான தனது கணவர், வீட்டில் பெண்களைப் போல நடந்து கொள்வதாக கூறி, தனக்கு விவாகரத்து வழங்க இளம்பெண் ஒருவர் பொலிசில் புகார் அளித்துள்ளார்.

பெங்களூருவைச் சேர்ந்தவர் அனிதா(29). இவரது கணவர் நவீன். இவர் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றார். இவர்களது திருமணம் பெற்றோர் பார்த்து நிச்சயித்த திருமணமாகும். இவர்களுக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆகின்றது. இந்நிலையில் கணவரிடம் இருந்து பிரிந்து வாழ விரும்புவதாக இந்திரா நகர் காவல் நிலையத்தில் இளம்பெண் அனிதா புகார் அளித்துள்ளார்.
புகாரில் அனிதா தெரிவித்துள்ளதாவது..

எங்களுக்கு திருமணமாகி ஓராண்டு ஆகிறது. ஆனால் எங்கள் இருவருக்கும் இடையே தாம்பத்திய உறவு கிடையாது. ஐடி நிறுவனத்தில் வேலை செய்யும் எனது கணவர், பெண்களைப் போல் நடந்து கொள்கின்றார். முதலிரவு அன்று கூட அவர் புடவை அணிந்து கொள்வதற்குதான் விரும்பினார். பகல் நேரத்தில் வேலைக்கு செல்லும் அவர் மாலை வீட்டிற்கு வந்தவுடன் புடவை அணிந்து, அலங்காரம் செய்து கொண்டு பெண்ணாக மாறிவிடுன்கிறார்.

அவர் ஓரினச் சேர்கையையே விரும்புகின்றார். அவரிடம் இருந்து எனக்கு விவாகரத்து வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தம்பதிகளுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது. ஆனால் ஆண்மை தன்மை இல்லாத கணவருடன் வாழ விரும்பவில்லை என அனிதா திட்டவட்டமாக கூறியுள்ளார். அதேபோல் மறுப்பு எதுவும் கூறாமல் மனைவியை பிரிவதற்கு கணவர் நவீனும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

8 ஆண்டுகள் அடாத முயற்சியில் சொந்தமாக 1,000சிசி பைக்கை உருவாக்கிய குஜராத் இளைஞர்!!

1000CC மோட்டார்சைக்கிள் ஒன்றை குஜராத் மாநிலத்தை சேர்ந்த ரித்தேஷ் என்ற இளைஞர் சொந்தமாக உருவாக்கி அசத்தி இருக்கிறார். இது லிம்கா புத்தகத்திலும் இடம்பெற்று இருக்கின்றது.

சூப்பர்பைக் என்பது எல்லா இளைஞர்களுக்கும் தீராத கனவாக உள்ளது. மில்லியன்களை தாண்டும் விலைதான் பெரும்பாலானோருக்கு அது பகல் கனவாகவே நீடிக்கிறது. ஆனால், இலக்கை நோக்கி தீரத்துடன் பயணித்தால் பணமும், தடைகளும் ஒரு பொருட்டல்ல என்பதை குஜராத்தை சேர்ந்த இளைஞர் ரித்தேஷ் வியாஸ் நிரூபித்துள்ளார்.

ஆம், எல்லா இளைஞர்களை போல ரித்தேஷுக்கு சூப்பர் பைக் வாங்குவது கனவாக இருந்துள்ளது. ஆனால், அது மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாகவும், அதனை சொந்தமாக உருவாக்கவும் முடிவு செய்தார். இதன்மூலமாக, தன்னிடம் பணம் இருக்கும்போதெல்லாம் இந்த பைக்கிற்கான பாகங்களை வாங்கி உருவாக்க முடிவு செய்தார்.

இதையடுத்து, ஒவ்வொரு உதிரிபாகங்களாக சொந்தமாக தயாரித்தும், வாங்கி கோர்த்தும் இப்போது அதனை ஒரு முழுமையான கஸ்டமைஸ் சூப்பர் பைக் மொடலாக உருவாக்கி அசத்தி இருக்கின்றார்.

ஒன்றிரண்டு ஆண்டுகள் இல்லை. கடந்த 8 ஆண்டுகள் தொடர் முயற்சியில் தனது கனவு பைக்கை தயாரித்து முடித்து பிரம்மிக்க வைத்திருக்கிறார் ரித்தேஷ்.

சொந்த முயற்சியில் சாதாரணமாக உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் 1,000 சிசி பைக் மொடல் என்ற பெருமையையும் இந்த பைக் பெற்றிருக்கிறது. இந்த சாதனை லிம்கா புத்தகத்திலும் இடம்பிடித்து இருக்கின்றது.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் புகழ்பெற்ற சாப்பர் ரக மோட்டார்சைக்கிளாக இதனை உருவாக்கி இருக்கிறார். மிக நீளமான முன்னோக்கி நீண்டிருக்கும் ஃபோர்க்குகளுடன் தன்னை சாப்பர் ரக கஸ்டமைஸ் பைக் மொடலாக வடிவம் பெற்றிருக்கிறது.

மொத்தம் 400 கிலோ எடை கொண்ட இந்த பைக்கில் 1,000சிசி எஞ்சினுடன் 6 ஸ்பீட் கியர்பொக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கின்றது. இது சங்கிலி பிணைப்பு இல்லாமல், சாஃப்ட் டிரைவ் சிஸ்டம் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்த பைக்கில் பொருத்தப்பட்டிருப்பது கார் எஞ்சின் என்பது உப தகவல். மேலும், இந்த கஸ்டமைஸ் பைக் மணிக்கு 170 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டதாகவும் ரித்தேஷ் தெரிவிக்கின்றார். உலோகத் துறையில் ரித்தேஷ் இருப்பதால், இந்த பைக்கின் பல உலோக உதிரிபாகங்களை சொந்தமாகவே தயாரித்து பொருத்தி இருப்பதுதான் முக்கிய விடயம்.

கடந்த 8 ஆண்டுகால உழைப்பில் தயாரிக்கப்பட்டு இருக்கும் இந்த பைக்கை உருவாக்க 8 லட்சம் ரூபாய் வரை செலவிட்டுள்ளதாக ரித்தேஷ் தெரிவித்தார்.

வவுனியா நகரை சுத்தமாக வைத்திருக்க பொதுமக்கள் ஒத்துழைக்கவும் : நகரசபைச் செயலாளர் வேண்டுகோள்!!

வவுனியாவில் வீதி ஓரங்களில் குப்பைகள் கொட்டப்படுவதால் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன. எனவே பொதுமக்கள் எமது நகரை சுத்தமாக வைத்திருக்க நகரசபைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வவுனியா நகரசபை செயலாளர் ஆர்.தயாபரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா புதுக்குளம் செல்லும் பிரதான வீதியில் தண்ணீர் செல்லும் வாய்க்கால் பகுதி அருகே பொதுமக்கள் குப்பைகளை வீசி வருவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக கிடைத்த முறைப்பாட்டினையடுத்து அங்கு சென்று அப்பகுதியை நகரசபை ஊழியர்களின் உதவியுடன் சுத்தம் செய்துகொண்டிருக்கையில் நகரசபை செயலாளர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்..

வவுனியா நகரை சுத்தமாக வைத்திருப்பது எமது கடமை அதேபோல நகரை சுத்தமாக வைத்திருக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம் வீட்டிலுள்ள குப்பைகளை வீட்டில் வைத்து எரிக்கலாம் அல்லது கிடங்கு வெட்டி புதைத்துவிடலாம், அல்லது நகரசபை கழிவகற்றும் வாகனம் வரும்போது அவற்றை ஒப்படைக்கலாம்.

மாறாக தண்ணீர் செல்லும் வாய்க்காலில் கொட்டுவதால் அப்பகுதியால் சென்றுவருபவர்களுக்கும், அயலில் உள்ளவர்களுக்கும் தொற்று நோய் ஏற்படுவதுடன், தண்ணீர் மற்றும் சூழல் மாசடைதல் போன்றன இடம்பெறுகின்றன.

எனவே பொதுமக்கள் குப்பைத் தொட்டிகளில் குப்பைகளைப் போட்டால் அதனை நகரசபை ஊழியர்கள் அகற்றுவார்கள். மாறாக வீதி ஓரங்களில், வாய்க்காலில் கொட்டுவதால் குப்பைகளை அகற்ற நகரசபை ஊழியர்கள் பல சவால்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளது.

வவுனியா புதுக்குளம் செல்லும் வீதியிலுள்ளவர்கள் ஒத்துழைப்பு வழங்கி இப்பகுதியில் குப்பைகளை கொட்டுவதை நிறுத்த வேண்டும். இப்பகுதியில் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மேலும் தெரிவித்தார்.

எனினும் நேற்று இப்பகுதி நகரசபை ஊழியர்களால் சுத்தம் செய்யப்பட்டபோதும் இன்று காலை மறுபடியும் குறித்த பகுதியில் பொதுமக்கள் குப்பைகளைக் கொட்டிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்தி : வவுனியாவில் தேங்கிக்கிடக்கும் குப்பைகளால் பாதிப்பை எதிர்நோக்கும் மக்கள்!!

பெண்கள் ஆண்களை சந்தேகப்பட காரணம் என்ன தெரியுமா?

ஆண்கள் கேட்கும், செய்யும் விஷயங்களை கூட பெண்கள் சில சமயங்களில் தவறான கண்ணோட்டத்துடன் தான் பார்கிறார்கள்.பெண்கள் சில சமயங்களில் ஆண்களை பற்றி தவறாகவும் நினைப்பதுண்டு. ஆண்கள் கேட்கும், செய்யும் விஷயங்களை கூட பெண்கள் சில சமயங்களில் தவறான கண்ணோட்டத்துடன் தான் பார்கிறார்கள்.

* நண்பர்களுடன் வெளியே சென்றால் ஆண்கள் மதுவருந்த தான் செல்கிறார்கள் என்ற எண்ணம். ஆண்கள் எப்போதும் பெண்கள் முன்பு எளிதாக புலம்பவோ, கலங்கவோ மாட்டார்கள், நண்பர்களுடன் பகிர்ந்துக் கொள்வார்கள்.

* எதையாவது பற்றி ஆண்கள் ஆழ்ந்து சிந்தனை செய்தால், தட்டிக்கழிக்க முயற்சி செய்கிறார்கள் என்று கருதுவது. ஆண்கள் எதையும் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று செய்ய முற்படுவதில்லை என்பதை பெண்கள் பெருமளவில் புரிந்துக் கொள்ள மாட்டார்கள்.

* ஷாப்பிங் செல்ல அழைத்து ஆண்கள் வர மறுத்தால், தங்கள் மீது அன்பு குறைந்துவிட்டது, நாட்டம் இல்லை என்று எண்ணுவது. காலை முதல் மாலை வரை கணினி முன்பு உட்கார்ந்து அலுத்து போய் வருபவனை மாலை வெளியே அழைத்தால் அவன் வர மறுப்பது உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என்பதால் தான். ஆனால் அதை புரிந்து கொள்ளாமல் சில சமயங்களில் பெண்கள் தவறாக புரிந்து கொள்கிறார்கள்

* அலுவலகத்தில் இருந்து நேர தாமதமாக வந்தால், நண்பர்களுடன் அரட்டையடித்துவிட்டு வருகிறார்கள் என்ற எண்ணம் பெண்களின் மனதில் சந்தேகம் எழுகிறது. டார்கெட், டேட்லைன் போன்றவை பற்றி பெண்களுக்கு பெரிதாய் தெரிவதில்லை என்பதால் தான் இந்த எண்ணங்கள் எழுகின்றன.

* வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளும் போதெல்லாம் ஆண்கள் தப்புத்தண்டா செய்வார்களோ என்ற எண்ணம் சில பெண்களுக்கு எழுவது இயல்பு. சில ஆண்கள் அப்படி இருக்கிறார்கள் என்பதற்காக மொத்தமாக எல்லா ஆண்களையும் குறை சொல்ல கூடாது.

– எப்போதும் சந்தேக கண்ணுடன் பெண்கள் ஆண்களை பார்ப்பதால் தான் ஆண்கள் சில விஷயங்களை பெண்களிடம் சொல்லாமல் மறைக்கிறார்கள். மேலும் பொய் சொல்லவும் செய்கிறார்கள். இதனால் தான் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

இந்த பெண் சொல்வதை கேட்டால் வாயடைத்து போவீர்கள்!!

ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர் மூன் ரிபாஸ்(31), நடனக்கலைஞரான இவருக்கு இயற்கையிலேயே ஒரு சக்தி உள்ளது.

ஆம், உலகில் நடைபெறும் ஒவ்வொரு நிலநடுக்கத்தையும் அவரால் உணர முடியும். அவர் தன் கையில் சீஸ்மிக் சென்சார் என்ற சிறிய கருவியைப் பொருத்தியிருக்கிறார்.

தோலுக்கு அடியில் இருக்கும் இந்தக் கருவி, ஆன்லைன் சீஸ்மோ கிராப் உதவியுடன் இயங்க, உலகின் மூலை முடுக்குகளில் அதிரும் நிலநடுக்கங்களை துல்லியமாக சொல்லிவிடுகிறார்.

இவர் தன் அனுபவங்களை கூறுகையில், மனிதர்கள் மட்டும் அங்குமிங்கும் அசைவதில்லை. இந்த பூமி உருண்டை கூட தினமும் சுற்றுகிறது, ஆடுகிறது, இதை நாம் உணராமல் இருக்கிறோம்.

இதனுடன் சேர்ந்து செயல்ப்பட நான் விரும்பினேன். அதற்காக அசூர உயரத்தில் வளர்ந்து நிற்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினேன்.

அந்த சென்சாரை என் உடலில் பொருத்திய பிறகு பத்து நிமிடத்துக்கு ஒரு முறை பூமி அதிர்வதை கூட என்னால் உணரமுடிகிறது.

நிலநடுக்கத்தின் தன்மையைப் பொறுத்து, என் உடலும் குலுங்கும். நேபாளத்தில் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, நள்ளிரவில் என் உடல் அவ்வளவு நடுங்கியது. நானே நேபாளத்தில் இருந்ததுபோல உணர்ந்தேன்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்படும் மக்களின் உணர்வுகளை நானும் உணர்கிறேன். இரண்டாவது இதயம் போல சீஸ்மிக் சென்சார் எப்போதும் என்னுள் துடித்துக்கொண்டே இருக்கிறது.

பூமியைப் புரிந்துகொண்டு, அதற்கேற்றவாறு இயற்கையுடன் இணைந்து வாழ்ந்தால் பூமிக்கும் அதில் வாழும் மனிதர்களுக்கும் நல்லது.

பூமியை அறிந்துகொள்வதற்காகவே இன்னும் பல பரிசோதனைகளை என் உடலில் நிகழ்த்த இருக்கிறேன் என கூறியுள்ளார்.

நடனம் தான் என் தொழில் என்றாலும், என்னிடம் இந்த விசித்திர சக்தி இருப்பதால் பலர் நடன நிகழ்ச்சிக்கு என்னை கூப்பிட தயங்குகிறார்கள் என சிறிய புன்னகையுடன் கூறுகிறார் மூன் ரிபாஸ்!

தண்டவாளத்தில் சிக்கிய நண்பனை இரண்டு நாட்கள் போராடி உயிரை காப்பாற்றிய நாய்!!(வீடியோ)

உக்ரைனில் நாய் ஒன்று இரண்டு நாட்களாக ரயில் தண்டவாளத்தில் போராடி காயமடைந்த மற்றொரு நாயின் உயிரை பாதுகாத்து வந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி நெகிழ வைத்துள்ளது.

Uzhgorod, Tseglovka கிராமத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது. குறித்த சம்பவத்தை Denis Malafeyev என்ற நபர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குறித்த வீடியோவில், ரயிலில் அடிப்பட்டு காயமடைந்த நாய் ஒன்று நகர முடியாமல் தண்டவாளத்தில் கிடக்கிறது. அதன் அருகே மற்றொரு நாய் பாதுகாத்து வருகிறது.

திடீரென அந்த தண்டவாளத்தில் ரயில் ஒன்று வருகிறது, ரயிலின் சத்தத்தை அறிந்த நாய் அடிப்பட்டுகிடக்கும் நாயின் தலையை தரையோடு தரையாக அழுத்தி பிடிக்கிறது.

இரண்டு நாய்களும் தண்டவாளத்தின் குறுக்கே கிடக்க வேகமாக வரும் ரயில் நாய்களை பத்திரமாக கடந்து செல்கிறது. அதுமட்டுமின்றி அப்பகுதியில் கடும் பனி பொழிந்து வருகிறது.

இதுகுறித்து Denis Malafeyev தனது பதிவில் கூறியதாவது, கடந்த இரண்டு நாட்களாக அந்த நாய் அடிப்பட்டுகிடக்கும் நாயை ஒவ்வொரு முறை ரயில் கடக்கும் போது பாதுகாத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

Denis Malafeyevவின் பதிவு வைரலாக அதிகாரிகள் சம்பவயிடத்திற்கு விரைந்து இரண்டு நாய்களையும் மீட்டு சிகிச்சை அளித்து உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.

ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!

மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று பொதுமக்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று இரவு குணசுந்தரி என்ற பெண், ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு அந்த வளாகத்தில் இருந்த புல்தரை வழியாக நடந்து சென்றுள்ளார்.

அப்போது அவர் தரையில் கிடந்த மின்சார வயரை கவனக்குறைவாக மிதித்ததால் அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது.

இதனால் தூக்கியடிக்கப்பட்ட அந்த பெண்ணை அங்கிருந்த காவல்துறையினர் உடனடியாக அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மின்சார வயரை அஞ்சலி செலுத்த வருபவர்கள் செல்லும் வழியில் போதிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யாமல் வைத்ததே இந்த சம்பவத்திற்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு ரயில் நிலையத்தில் வெடிகுண்டு : காதலனை நிறுத்த காதலி செய்த வேலை!!

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் தபால் ரயிலில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து தீவிர சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணிக்கவிருந்த இரவு நேர ரயில் ஒன்றிலேயே, நேற்று முன்தினம் இரவு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தொலைப்பேசி அழைப்பின் காரணமாகவே இந்த தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலையில் இளம் பெண் ஒருவரே இவ்வாறு தொலைப்பேசி அழைப்பு மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காதல் சம்பவம் காரணமாக இந்த வதந்தி பரப்பப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த ரயிலில் தனது காதலன் வேறு பெண்ணை திருமணம் செய்துக் கொள்வதற்கு ஊருக்கு செல்வதாகவும், அதனை தடுக்கும் நோக்கிலேயே இந்த பெண் இவ்வாறு குண்டு வைத்துள்ளதாக போலியான தொலைப்பேசி அழைப்பு மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மது போத்தல்களில் இந்துக்கடவுள்களின் உருவப்படம் : மன்னிப்பு கேட்குமாறு கோரிக்கை!!

பிரேசில், சாயோ போலோவை தலைமைபீடமாக கொண்டு செயற்படும் அம்பரோ மது உற்பத்தி செய்யும் நிறுவனம் இந்துக்களின் கடவுள்களான பிள்ளையார், விஷ்ணு உருவம் பொறித்த மது போத்தல்களை அறிமுகப்படுத்தியுள்ளமையால், இந்து சமயத்தவர் தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

குறித்த விடயம் தொடர்பில் அமெரிக்கா, நிவேடாவில் உள்ள இந்து இயக்க தலைவர் ராஜன் ஜெட், அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

மது போத்தல்களில் இந்து கடவுளர்களின் உருவங்கள் அச்சிடப்பட்டுள்ளமை முறையற்ற செயல். இதனால், இந்து மதத்தை சேர்ந்தவர்களின் மனம் பெரிதும் புண்பட்டுள்ளது.

இந்து கடவுள்கள் கோவில்களிலும், இல்லத்திலும் இந்துக்களால் பூஜிக்கப்படுபவை. இந்நிலையில், அவற்றை இழிவுபடுத்தும் வகையில் மது போத்தல்களில் இந்து கடவுள்களின் உருவங்களை அச்சிடுவது மிகவும் கண்டிக்கத்தக்கது.

மேலும் கடவுள்களை மது விற்பனைக்கு பயன்படுத்தி உள்ளது மரியாதை குறைவான செயல் ஆகும். உலகின் மிகப் பழமையான மதங்களில் முதன்மையானது இந்து மதம். வளமையான ஆன்மிக, யோக தத்துவங்களை தன்னுள் அடக்கியது.

இந்நிலையில், இந்து கடவுளர்களின் உருவங்களையோ, இந்து சின்னங்களையோ சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ தவறாக பயன்படுத்தக் கூடாது. என அந்த அறிக்கையில் ராஜன் ஜெட் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பில் சமூக வலைத்தளங்களிலும் பலத்த கண்டனங்கள் தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.