வவுனியாவில் இன்று (21.12.216) காலை 9 மணியளவில் அரச விடுதி உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவினால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன்,காதர் மஸ்தான் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோஹன புஸ்பகுமார, மேலதிக அரசாங்க அதிபர் த.திரேஸ்குமார். வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா, மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், அரச அதிகாரிகள். பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
வவுனியா வெங்கல செட்டிகுளம் பிரதேச சபை சந்தைக்கடைத்தொகுதி வழங்குவதற்கான கேள்விக் கோரலை உடனடியாக இரத்துச் செய்யக்கோரி பொதுமக்கள் இன்று(21.12.2016) காலை 9 மணியளவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செட்டிகுளம் பிரதேச சபையினால் நெல்சிப் வேலைத்திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட சந்தைக் கட்டடத் தொகுதிக்கான மாவட்ட மட்ட கேள்விக் கோரலை உடனடியாக இரத்தச் செய்து பிரதேச எல்லைக்குள் வழங்கக்கோரி செட்டிகுளம் பிரதேச வாழ் மக்கள் இக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உள்ளுர் வியாபாரிகளின் வயற்றில் அடிக்காதே, செட்டிகுளம் பிரதேச சபை அதிகாரிகளே எமது பிரதேச கடைத் தொகுதியை எமது பிரதேச மக்களுக்கு வழங்கு என பல்வேறு வாசகங்களைத் தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
இக்கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்ற இடத்திற்குச் சென்ற வடமாகாண சுகாதார அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் ப.சத்தியசீலன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்..
செட்டிகுளம் பிரதேச சபையின் ஆட்சி எல்லைக்குள் அமைக்கப்பட்ட இந்தச் சந்தைத் தொகுதியானது வெங்கல செட்டிகுளம் பிரதேச சபையாலே அதற்கான கேள்வி மனுக்கோரப்பட்டிருந்தது. அது மாவட்ட மட்டத்தில் கோரப்பட்டுள்ளது.
மாவட்ட மட்டத்தில் கோரப்பட்டுள்ளமையால் செட்டிகுளம் பிரதேசசபை எல்லைப் பரப்பிற்குள் வாழுகின்ற பொதுமக்கள் அல்லது வியாபாரிகள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
செட்டிகுளம் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் நேற்றைய தினம் இவ்விடயத்தை வடமாகாண சுகாதார அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவந்ததையடுத்து இது தொடர்பாக இன்று காலை வடமாகாண முதலமைச்சரும் உள்ளுராட்சி அமைச்சருமாகிய சி.வி.விக்கினேஸ்வரனுடன் வடமாகாண சுகாதார அமைச்சர் கலந்துரையாடியபோது தற்போது கோரப்பட்டுள்ள கேள்வி மனுக்கோரலை உடனடியாக இரத்துச் செய்வதாகவும் புதிதாக பிரதேச மட்டத்தில் இந்தக் கேள்வி மனுக்கோரலை மேற்கொள்வதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
இறுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வடமாகாண சுகாதார அமைச்சரின் பிரத்தியேக செயலாளரிடம் வடமாகாண சுகாதார அமைச்சருக்கு மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.
சமீபத்தில் சில காலமாக ஸ்கைப் மற்றும் ஹேங்அவுட்ஸ் உள்ளிட்ட தளங்களில் சிறப்பு அம்சங்களாக இருந்து வந்த குரூப் கோலிங் வசதி தற்போது பேஸ்புக் தளத்திலும் அறிமுகமாகியுள்ளது.
எனவே பேஸ்புக் தளத்தில் சென்று, குரூப் சட் ஒப்ஷனை க்ளிக் செய்தால், அதில் குரூப் கோலிங் செய்வதற்கான ஒப்ஷன் இருக்கும்.
மேலும் இதனுடன் இந்த வசதி உங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதை தெரிவிக்கும் நோட்டிபிகேஷன் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.
பேஸ்புக்கில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட குரூப் கோலிங் வசதி, எல்லோரும் பயன்படுத்துவதை தொடர்ந்து, நண்பர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் போன்ற நட்பு வட்டாரங்களில் அனைத்துக்கும் இந்த சிறப்பம்சம் பயன்படுகிறது.
நைஜீரியாவில் மூன்று நாட்கள் சுவருக்கு மத்தியில் சிக்கித்தவித்த சிறுவனை பொதுமக்கள் காப்பாற்றியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியா நாட்டின் Oduduwa பகுதியைச் சேர்ந்தவர் Aduragbemi Saka (12). இவர் தன் வீட்டில் சுமார் 12 அடி அங்குளமுள்ள மதில் சுவர் ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது திடீரென்று சிறுவன் அந்த 12 அடி அங்குளமுள்ள சுவர் இடிக்கிற்கு மத்தியில் விழுந்துள்ளார். இரு சுவருக்கும் மத்தியில் விழுந்தால் அங்கிருந்தவர்கள் யாருக்கு இச்சிறுவன் தென்படவில்லை.
ஆனால் கிழே விழுந்த பதற்றத்தில் சிறுவன் தொடர்ந்து கூச்சலிட்டுள்ளார். இது போன்று தொடர்ந்து மூன்று நாட்கள் சத்தம் போட்டுள்ளான். ஆனால் அங்கிருந்த பொதுமக்களே சற்று பதற்றமடைந்து பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார், அந்த மதில் சுவரை உடைக்கும் படி கூறியுள்ளனர். மதில் சுவரை உடைக்கும் போது சிறுவன் தொடர்ந்து கூச்சலிட்டுள்ளான். இதனால் பதற்றமடைந்த அவர்கள் சற்று நிதானமாக சுவரை உடைக்கத் துவங்கியுள்ளனர்.
அப்போது சிறுவன் தூசி படிந்த நிலையில் அழுது கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். வெளியே வந்த சிறுவன் உடனடியாக தன் பாட்டியின் மடியில் அமர்ந்து அழுத சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது.
இது குறித்து அவர் கூறுகையில், தான் இங்கிருந்தவர்களிடம் மதில் சுவரில் ஒரு குரல் வருகிறது என்று கூறியதாகவும், ஆனால் அவர்களே சற்று குழப்பமடைந்து, பொலிசாருக்கு தகவல் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
தென் ஆபிரிக்காவில் இராட்சத எலிகள் மூன்று மாத பெண் குழந்தையை உயிரோடு தின்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Johannesburg, Katlehong நகரத்திலே இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. உயிரிழந்த குழந்தையின் 26 வயதான தாயை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கணவனை பிரிந்து வாழ்ந்து வரும் 26 வயதான பெண், தினமும் குழந்தையை வீட்டில் தனியாக விட்டு விட்டு மது விடுதிக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவத்தன்று பெண் மது விடுதிக்கு சென்று அதிகாலை வீடு திரும்பிய போது, குழந்தை உடல் பாகங்களின்றி இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளது.
விசாரணையில் இராட்சத எலிகள் குழந்தையை கொடூரமாக கடித்து தின்றுள்ளது தெரியவந்துள்ளது. இதில், அந்த குழந்தை வலியால் துடி துடித்து உயிரிழந்துள்ளது.
இந்த பெண்ணின் மற்றொரு குழந்தை அவரை பிரிந்து வாழ்ந்து வரும் கணவரிடம் இருப்பதால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் சுமார் 3 ஆடி உள்ள இராட்சத எலிகள் அதிகாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. குழந்தை கவனிப்பாரற்று விட்ட தாயை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
பிரான்சில் 50 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
La Roche-sur-Yon, Sables-d’Olonne இடையேயான A87 நெடுஞ்சாலையிலே இந்த பயங்கர விபத்து இடம்பெற்றுள்ளது.
கார், லொறி, வேன் என 50 வாகனங்கள் மோதிக்கொண்டதில் 5 போர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடும் மூடுபனியில் வாகன ஓட்டிகள் வாகனத்தை மிக வேகமாக இயக்கியதே விபத்திற்கான முக்கிய காரணம் என கூறப்படுகிறது. விபத்தை தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் A87 நெடுஞ்சாலையில் மூடப்பட்டுள்ளது.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஜெயலிதாவின் நீண்ட நாள் தோழியான கீதா பரபரப்பை கிளப்பியுள்ளார்.
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குற்றம்சாட்டிய கீதா, ஜெயலலிதா விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜெயலலிதாவின் உறவினர் தீபா-வுக்கு தனது ஆதரவு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக சென்னை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில், ஜெயலலிதாவின் மரணத்தை சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சசிகலா, நடராஜன், இளவரசி, அப்பல்லோ பிரதாப் ரெட்டி, முதல்வர் பன்னீர் செல்வம், தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ், ஆலோசகர் ஷீலா பாலாகிருஷ்ணன், சிகிச்சை அளித்த டாக்டர் சிவகுமார், காவல் துறை ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட 20 பேரிடம் விசாரணை நடத்தவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பதவி, அதிகாரம், சொத்து ஆகிய காரணங்களுக்காக கொலை செய்ய, தவறான சிகிச்சை அளிக்க முன்வந்ததாக சந்தேகம் எழுந்துள்ளாதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்ப ட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் பணியில் ஈடுபடும் போது உயிரிழந்த 39 இலங்கை பணிப்பெண்களுக்காக அவர்களின் குடும்பங்களுக்கு 720 லட்சம் ரூபா இழப்பீடு வழங்கியதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராஜ்ஜியம், கட்டார், குவைத், ஓமன், லெபனான், ஜோர்தான் ஆகிய நாடுகளில் உயிரிழந்த பணிப்பெண்களின் குடும்பங்களுக்கே இந்த இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
அவ்வாறு வெளிநாட்டில் உயிரிழந்த மற்றும் ஊனமடைந்துள்ள நிலையில் உள்ள இலங்கையர்களின் குடும்ப உறவினர்களுக்காக இழப்பீடு வழங்கும் நடவடிக்கை அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் தலதா அத்துகோரளவின் தலைமைத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு இழப்பீடு வழங்குவது இந்த வருடத்தில் ஐந்தாவது முறை என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியினுள் வெளிநாட்டில் பணி செய்து கொண்டிருக்கும் போது உயிரிழந்த 196 பேரின் குடும்பத்தினருக்காக 3450 லட்சம் பணம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் கடந்த 5 வருட காலத்தினுள் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ள பணத்தில் அதிகமான பணம் இந்த வருடம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சமகாலத்தில் ஐரோப்பா, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு படையெடுத்துள்ளனர்.
இந்நிலையில், இலங்கையில் சுற்றுலா துறையினை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறிப்பாக தலைநகர் கொழும்பில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் கொழும்பில் பல வான் உயர்ந்த கட்டிடங்கள் நிர்மானிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் 2017ஆம் ஆண்டு இலங்கையில் நிர்மானிக்க எதிர்பார்த்துள்ள உயரமான கட்டிடம் தொடர்பில் காணொளி ஒன்று வெளியிடப்படடுள்ளது.
117 மாடிகளை கொண்ட குறித்த கட்டிடமானது 625 மீட்டர் உயரம் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் இதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கபடவுள்ளதாக கூறப்படுகின்றது.
முழுமையான கொழும்பு நகரம் போன்று கடலும் அழகாக தெரியும் வகையில் நிர்மாணிக்கப்படுகின்ற இந்த கட்டிடத்தில் நட்சத்திர ஹோட்டல், வீட்டுத்தொகுதிகள் மற்றும் வணிக வளாகங்கள் உட்பட பொருளாதார கேந்திர நிலையத்திற்கு அவசியமான அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கும்.
எவ்வாறாயினும், குறித்த கட்டிடம் நிர்மானிக்கப்பட்டு முடியும் பட்சத்தில் இலங்கையில் மிக உயரமான கட்டிடமாகவும், உலகின் 9வது உயரமான கட்டிடமாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதனால் எதிர்வரும், மூன்று மாதங்களுக்கு விமான நிலையம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனவரி 6ஆம் திகதியில் இருந்து ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வரையிலான மூன்று மாதங்களுக்கு தினமும் காலை 8 மணியில் இருந்து பிற்பகல் 4.30 மணி வரை விமான நிலையம் மூடப்படவுள்ளது.
கடந்த மூன்று தசாப்தங்களாக கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கிட்டத்தட்ட 950,000 க்கும் அதிகமான விமானங்கள் வந்து சென்றுள்ளன.
1980ஆம் ஆண்டு நடுப்பகுதியில், அப்போதைய தேவைக்கமைய வடிவமைக்கப்பட்ட ஓடுபாதையே இப்போதும் பயன்பாட்டில் உள்ளது.
குறித்த மூன்று தசாப்தங்களாக ஒரு ஓடுபாதை மாத்திரமே உள்ளதாகவும், அந்தக் காலப் பகுதியில் பாரிய புனரமைப்பு பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
இதனால், ஓடுபாதை தற்போதைய தேவைக்கமைய புனரமைக்கப்பட்டு விரிவாக்கப்படவுள்ளது.
எனவே புனரமைப்பு பணிகளின் போது விமான நிலையம் மூடப்படவுள்ளது. குறித்த காலப்பகுதியில் விமான நிலையத்தின் பணிகள் மட்டுப்படுத்தப்படவுள்ளன.
இதனால், கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக சேவைகளை மேற்கொள்ளும் அனைத்து விமான சேவை நிறுவனங்களையும், பிற்பகல் 4.30 மணிக்கும், காலை 8 மணிக்கும் இடையில் சேவைகளை மாற்றியமைக்குமாறு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அனைத்து நகர்வுகளும் வருடத்திற்கு ஒன்பது மில்லியன் பயணிகளின் தேவைக்கமைய கையாளுவதற்காகவே மேற்கொள்ளப்படுகின்றது.
மேலும் வருடத்திற்கு வரும் 9 மில்லியன் பயணிகளை 15 மில்லியான அதிகரிப்பதற்காக முயற்சிகளும் இதன் ஊடாக மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகின்றது.
தபால் சேவை ஊழியர்கள் மேற்கொண்டுள்ள அடையாள பணிபகிஸ்கரிப்பின் காரணமாக நேற்று நாடுமுழுவதும் 15 இலட்சம் கடிதங்கள் தேங்கிக் கிடந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவி உயர்வு, ஆட்சேர்ப்பு மற்றும் ஊதியம் உள்ளிட்ட 7 விடயங்கள் குறித்து திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் 48 மணிநேர அடையாள பணிபகிஸ்கரிப்பில் நாடுமுழுவதுமுள்ள தபால் சேவை ஊழியர்கள் ஈடுபட்டள்ளனர்.
இந்த நிலையில், நேற்று நாடுமுழுவதும் தபால் சேவை முடங்கியதால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்தனர்.
மேற்படி கோரிக்கைகளை முன்வைத்து சம்பந்தப்பட்ட அமைச்சருடன் நடத்திய கலந்துரையாடலில் தீர்வு கிடைக்கவில்லை எனக் குறிப்பிட்டே இந்த அடையாள பணிபகிஸ்கரிப்பில் தபால் சேவை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், தமது கோரிக்கைகளுக்கு இன்னும் 14 நாட்களுக்கு தீர்வு கிடைக்கவில்லையாயின் தொடர் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு தயார் என தபால் சேவை ஊழியர்கள் சங்கத்தினர் எச்சரித்துள்ளனர்.
யாழ்.சாவகச்சேரி சங்கத்தானைப் பகுதியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றதென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள் 11 பேர் உயிரிழக்கக் காரணமான வாகன விபத்துச்சம்பவம் தொடர்பில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இ.போ.ச பஸ் சாரதியை ஐம்பதாயிரம் ரூபா ஆட்பிணையில்செல்ல சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை அனுமதியளித்துள்ளது.
சாவகச் சேரி நீதவான் நீதிமன்றப் பதில் நீதவான் செ-கணபதிப்பிள்ளை முன்னிலையில்சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்ட போதே மேற்படி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது விபத்தை நேரில் கண்ட சாட்சிகள் மூவரின் சாட்சியமும் நீதவான் முன்னிலையில்பதிவு செய்யப்பட்டது.
அத்துடன் எதிர்வரும் ஜனவரி மாதம் 19ம் திகதி நீதவானால் குறித்த வழக்குத்தவணையிடப்பட்டுள்ளது.
இலங்கை சுற்றுலா பயணி ஒருவருக்கு யானை ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யால தேசிய பூங்காவில் ஜுப் வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிக்கு சொந்தமான பை ஒன்றை கெமுனு என்ற யானை விழுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கெமுனு தனது தும்பிக்கையை ஜுப் வண்டியினுள் விட்டு அந்த பையை விழுங்கியுள்ளது.
சுற்றுலா பயணிகளின் ஜுப் வண்டியில் இருந்து பொருட்களை எடுத்துக் கொள்வதற்கு கெமுனுவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்த பையில் 1200 அமெரிக்க டொலர் (கிட்டத்தட்ட 180000ரூபாய்) இருந்ததாக சுற்றுலா பயணிகள் வனவிலங்கு அதிகாரிகளிடம் அறிவித்துள்ளனர்.
அதற்கு மேலதிகமாக அந்த பையில் கமரா ஒன்று காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மெக்ஸிக்கோ வானவேடிக்கை சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்ட பட்டாசு தீ பிடித்து வெடித்ததில் 27 பேர் உயிரிழந்துள்ளதோடு 70 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சான் பப்ளீட்டோ சந்தையில் கிறிஸ்மஸ் பண்டிகைக்காக விற்பனைக்கு வைக்கப்பட்ட வானவேடிக்கை பட்டாசு தீ பிடித்து வெடித்ததில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து மெக்ஸிக்கோ நேரப்படி நேற்று மாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.மேலும் இவ்விபத்தில் 300 விற்பனை நிலையங்கள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
12 ஆவது சென்னையில் திருவையாறு என்ற இசை நிகழ்ச்சி நேற்று முன்தினம் சென்னை காமராஜர் அரங்கத்தில் தொடங்கியது.
இதன் தொடக்கவிழாவில் நூற்றாண்டு காணும் மக்களின் அன்பிற்குரியவர்களான புரட்சி தலைவர் எம்ஜிஆர் மற்றும் இசை மேதை எம் எஸ் சுப்புலட்சுமி ஆகியோர்களின் மெழுகு சிலைகளை இயக்குநர் இமயம் பாரதிராஜா திறந்துவைத்தார்.
இதன் போது பேசிய அவர்,‘ திருவையாற்றில் நடைபெறும் கர்சாடக இசை நிகழ்ச்சியை இங்கு கொண்டு வந்திருப்பது பெருமைக்குரிய விடயம். நமது பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் இசை மூலம் உலகம் முழுவதும் கொண்டு சென்றவர் எம் எஸ் சுப்புலட்சுமி. எம்ஜிஆர் ஒரு தேவதூதர்.அவர் ஒரு சகாப்தம். இன்னும் 100 ஆண்டுகள் சென்றாலும் இருவரும் இதே புகழுடன் இருப்பார்கள். அவர்களின் மெழுகு சிலை வைத்திருப்பது ஆச்சரியமாக உள்ளது’ என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து நடைபெற்றநிகழ்வில் வயலின் இசை கலைஞர் எல் சுப்ரமணியத்திற்கு அவரின் இசை சேவையைப் பாராட்டி இசை ஆழ்வார் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதையடுத்து அவரின் வயலினிசைக் கச்சேரி நடைபெற்றது.
சென்னையில் திருவையாறு இசை நிகழ்ச்சி நேற்றிலிருந்து தொடங்கி வரும் ஞாயிற்றுகிழமை வரை தொடர்ந்து நடைபெறுகிறது. தினமும் காலை 7 மணிக்குத் தொடங்கும் இசை நிகழ்ச்சிகள் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.