போதைப் பொருள் கடத்தல்காரர்களை கைது செய்த நத்தார் தாத்தா!!

போதைப் பொருள் கடத்­தல்­காரர்கள் மறைந்­தி­ருந்த இட­மொன்றை “நத்தார் தாத்தா” முற்­று­கை­யிட்டு சந்­தேக நபர்­களை கைது செய்த சம்­பவம் பெரு நாட்டில் இடம்­பெற்­றுள்­ளது.

பெரு நாட்டின் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­களே நத்தார் தாத்தா போன்று வேட­ம­ணிந்து சென்று இந்த முற்­று­கையை நடத்­தினர். பெரு தலை­நகர் லீமாவில் உள்ள வீடொன்றில் போதைப் பொருள் கடத்தல்கா­ரர்கள் சிலர் மறைந்­தி­ருப்­ப­தாக பொலி­ஸா­ருக்கு தகவல் கிடைத்­தது.

இக்­ க­டத்­தல்­கா­ரர்­களைக் கைது செய்­வ­தற்குத் தீர்­மா­னித்த பெரு பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் நத்தார் தாத்தா வேடத்தில் சென்று அவ் ­வீட்டை சுற்­றி­வ­ளைத்­தனர்.

நத்தார் தாத்தா வேஷத்­தி­லி­ருந்த பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒருவர், சம்­மட்டி ஒன்­றினால் கதவை உடைக்க ஏனைய பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் உள்ளே நுழைந்து சந்­தேக நபர்­களை மடக்கிப்பிடித்து கைவி­லங்­கிட்­டனர்.

இந்த முற்­று­கை­யின்­போது பதி­வு­செய்­யப்­பட்ட வீடியோ இணையத்தில் பெரும் எண்ணிக்கையானோரால் பார்வையிடப்பட்டுள்ளது.

11 ஆண்­களை ஏமாற்றி திரு­மணம் செய்த பெண் பொலிஸார் வலையில் சிக்­கி­னார்!!

தொழிலதி­பர்­களை குறி வைத்து 11 பேரை ஏமாற்றி திரு­மணம் செய்து, பின்னர் நகை, பணத்­துடன் தப்பியோடிய குற்றச்சாட்டில் பெண் ஒருவரை இந்திய பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

கேரள மாநிலம் கொச்­சியை சேர்ந்­தவர் லோரன் ஜஸ்டின் ஒரு தொழிலதிபர். இவர் கடந்த ஒக்­டோபர் மாதம் கொச்சி பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பா­டொன்ரை அளித்துள்ளார்.

அதில், தன்­னு­டைய மனைவி மேகா பார்கவ் (28) திடீ­ரென காணாமல் போய் விட்­ட­தா­கவும், வீட்டிலிருந்த 15 இலட்சம் ரூபா, நகை உள்­ளிட்­டவை மாய­மா­ன­தா­கவும் குறிப்­பிட்டிருந்தார்.

இத­னை­ய­டுத்து மேகாவின் புகைப்­படம், செல்போன் எண் உள்­ளிட்­ட­வை­களை வைத்து கொச்சி பொலிஸார் நடத்­திய விசா­ர­ணையில் இதேபோல் அவர் கேரள மாநி­லத்தில் மேலும் 3 பேரை ஏமாற்றி திரு­மணம் செய்து கொண்டு நகை, பணத்­துடன் தப்பியோடி­யமை தெரி­ய­வந்­தது. ஏனைய 3 பேரும் இதை வெளியில் சொன்னால் அவ­மானம் என கருதி பொலிஸில் முறை­யி­டாமல் இருந்­துள்­ளனர்.

இதை­ய­டுத்து மேகா எங்கு உள்ளார் என கொச்சி பொலிஸார் தீவிர விசா­ரணை மேற்­கொண்­டனர். அப்போது அவர் கேர­ளாவில் 4 பேர் மட்­டு­மன்றி மும்பை, புனே, இந்தூர், ஜெய்ப்பூர் உள்­ளிட்ட ஊர்­களில் மொத்தம் 11 பேரை ஏமாற்றி திரு­மணம் செய்த தகவல் கிடைத்­துள்­ளது.

இத­னி­டையே மத்­திய பிர­தேச மாநிலம் இந்­தூரைச் சேர்ந்த மேகா பார்கவ், டில்லி அருகே நொய்­டாவில் இருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. இதைத்­தொ­டர்ந்து கடந்த ஒரு வார­மாக மேகாவை நொய்டா பொலிஸாரின் உத­வி­யுடன் கொச்சி பொலிஸார் தேடினர்.

இந்தநிலையில் கடந்த வாரம் மேகா கைது செய்­யப்­பட்டார். இந்த மோச­டியில் அவ­ருக்கு உடந்­தை­யாக இருந்த அவ­ரது சகோ­தரி பிராசி, அவ­ரு­டைய கணவர் தேவேந்­திர சர்மா ஆகி­யோரும் கைது செய்யப்பட்­டனர்.

இது குறித்து பொலிஸார் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது, மேகா மிகவும் அழ­கான தோற்­றத்­துடன் உள்ளார். இதனால் அவ­ரு­டைய அழகில் மயங்­கிய தொழிலதி­பர்கள் அவரைப் பற்­றியும், அவ­ரு­டைய குடும்பத்தைப் பற்­றியும் அலசி ஆரா­யாமல் திரு­மணம் செய்து உள்­ளனர்.

தொழிலதி­பர்கள் உள்­ளிட்ட வசதி படைத்­த­வர்­களை குறி­வைத்து மேகா திரு­மண வேட்டை நடத்தி உள்ளார். மண­மகள் தேவை விளம்­ப­ரத்தில் வரும் விவா­க­ரத்து ஆன­வர்கள், மாற்­றுத்­தி­ற­னா­ளிகள் உள்­ளிட்ட பணக்­கார மண­ம­கன்­களே அவ­ரு­டைய இலக்காகும்.

திரு­மணம் குறித்து தன்­னு­டைய சகோ­தரி, அவ­ரு­டைய கணவர் மூலம் பேசவைத்த மேகா பின்னர் தானே பேசி, தன்­னு­டைய புகைப்­ப­டங்­களை அனுப்பி தொழிலதி­பர்­களை கவர்ந்துள்ளார்.

இதில் ஏமாந்த தொழிலதி­பர்­களைத் திரு­மணம் செய்து கொண்டு அவர்­களின் நம்­பிக்­கையை மேகா பெற்­றுள்ளார். சில மாதங்கள் அவர்களுடன் கணவன் மனைவியாக வாழ்ந்த அவர் பின்னர் கணவர் மற்றும் அவ­ரு­டைய குடும்­பத்­தி­ன­ருக்கு மயக்கமருந்து கொடுத்துவிட்டு நகை, பணத்­துடன் தப்பியுள்ளார்.

சுமார் 2 மாத கால தேடலின்பின்னர் அவர் சிக்­கி­யுள்ளார் என கூறி­யுள்­ளனர்.
ஆனால் தன் மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்டை பொலி­ஸா­ரிடம் மேகா மறுத்தார்.

இது குறித்து அவர், “நான் யாரையும் ஏமாற்­ற­வில்லை. கேர­ளாவில் திரு­மணம் செய்த 3 பேரையும் விவா­க­ரத்துச் செய்து விட்டேன். 4ஆவ­தாக லோரன் ஜஸ்­டி­னுடன் திரு­மணம் நடந்­தது. எங்களுக்கிடையே கருத்து வேறு­பாடு ஏற்பட்டதால் நான் பிரிந்து சென்றேன்” என கூறி­யுள்ளார்.

இதனிடையே மேகா எவ்வளவு பணம், நகை மோசடி செய்தார் என அறிய அவரிடம் பொலி­ஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொகேய்ன் உட்கொண்ட பின்னர் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த முன்னாள் அழகுராணி கைது!!

போதைப் பொருள் உட்­கொண்ட பின்னர் 4 மாத வய­தான குழந்­தைக்கு தாய்ப்பால் கொடுத்­தா­ரென அமெ­ரிக்­காவின் முன்னாள் அழ­கு­ராணி ஒரு­வ­ருக்கு எதி­ராக வழக்குத் தொடுக்­கப்­பட்­டுள்­ளது.

அமெ­ரிக்­காவின் அரி­ஸோனா மாநி­லத்தைச் சேர்ந்த கிறிஸ்டின் சோரிச் லிசையுஸ் எனும் இந்த யுவதி 2013ஆம் ஆண்டில் மிஸ் அரி­ஸோனா அழ­கு­ராணி போட்­டியில் பங்­கு­பற்­றி­யவர்.

இவர் கடந்த மே மாதம் கொகேய்ன் போதைப்­பொருள் உட்­கொண்ட பின்னர் தனது 4 மாத குழந்­தைக்கு தாய்ப்பால் கொடுத்­தா­ரென பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

தாய்ப்பால் அருந்­திய குழந்தை மயக்­க­ம­டைந்­ததால், அக் ­கு­ழந்­தையை லிசை­யுஸும் அவரின் கண­வரும் அரு­கி­லுள்ள வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு சென்­றனர்.

அங்கு குழந்­தையின் ரத்­தத்தை பரி­சோ­தனை செய்­வ­தற்கு மருத்­து­வர்கள் முயன்­ற­போது இவ்­வி­ரு­வரும் எதிர்ப்புத் தெரி­வித்­தனர். எனினும், குழந்­தையை மற்­றொரு வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­று­வ­தற்கு இவர்கள் சம்­ம­தித்­தனர்.

இதை தொடர்ந்து மருத்­து­வ­மனை நிர்­வாகம் டயமன்ட் குழந்­தைகள் நல மருத்­து­வ­ம­னைக்கு குழந்­தையை மாற்­றி­யது. ஆனால் அங்கும் குழந்­தைக்கு நச்­சு­யியல் சோதனை நடத்த மறுப்புத் தெரி­வித்துள்­ளனர்.

இவ்­ வி­டயம் குறித்து குழந்­தைகள் நலத்­துறை உய­ர­தி­க­ரி­க­ளுக்கு மருத்­து­வ­மனை நிர்­வாகம் தெரி­வித்­தது. அதை­ய­டுத்து குழந்­தைகள் நலத்­துறை அதி­கா­ரி கள் உத­வி­யுடன் மேற்­படி குழந்­தைக்கு பரி­சோ­தனை நடத்­தப்­பட்­டது.

அப்­போது குழந்­தையின் உடலில் கொகேய்ன் தட­யங்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன.
இது தொடர்­பாக த கிறிஸ்டின் சோரிச் லிசையுஸ் மற்றும் அவரின் கண­வ­ரிடம் அதி­கா­ரிகள் விசா­ரணை நடத்­தினர்.

தான் கொகேய்ன் உட்­கொள்­ள­வில்லை எனவும் ஆனால், குழந்­தையின் உடலில் எவ்­வாறு கொகேய்ன் சென்­றது என்­பது தெரி­யாது எனவும் த கிறிஸ்டின் சோரிச் லிசையுஸ் ஆரம்­பத்தில் தெரி­வித்தார்.

அவரின் கண­வரும் இதையே கூறினார். எனினும், ஒரு கட்­டத்தில் கிறிஸ்டின் சோரிச் லிசையுஸ் உண்­மையை ஒப்­புக்­கொண்டார். விருந்­தொன்றில் கொகேய்ன் உட்­கொண்டு 12 மணித்­தி­யா­லங்­களின் பின்னர் குழந்­தைக்கு தாய்ப்பால் கொடுத்­த­தாக அவர் கூறினார்.

அதன்பின் கிறிஸ்டின் சோரிச் லிசை­யுஸின்; வீட்டில் சோதனை நடத்திய பொலிஸார், கொகேய்ன் போதை பொருளை கைப்பற்றியதுடன் இருவரையும் கைது செய்தனர். தற்போது இவர்கள் இருவருக்கும் எதிராக வழக்குத் தொடுக் கப்பட்டுள்ளது.

கொஞ்சம் பணத்தை பார்ப்பதற்கு சினிமாவுக்கு வந்தேன் : ஹிப் ஹொப் தமிழா ஆதி!!

ஹிப் ஹொப் தமிழா ஆதி அடுத்து எடுத்­தி­ருக்கும் அவ­தா­ரத்தில் படு பிஸி. ‘மீசைய முறுக்கு’ முதல் முயற்சி. சோஷியல் மீடி­யாவில் ஹிப்ஹொப் ­பிற்கு அதி­ரி­பு­திரி வெற்­றிதான். ஒரு பக்கம் மியூசிக், இன்­னொரு பக்கம் நடிப்பு என ஒரே நேரத்தில் இரட்டைக் குதிரை சவாரி. ‘‘கன­வு­கள்தான் வாழ்க்­கையை அழ­காக்கும்.

கன­வுகள் நிறை­வே­று­கிற வேளை நம்­மையே அழ­காக்கும். மியூசிக் ஆல்பம் பண்­ணும்­போதே நிறைய பேர் என்னை ஹீரோவா நடிக்கச் சொல்லிக் கேட்­டார்கள்.

அப்ப இந்த அள­வுக்கு பக்­கு­வ­மில்லை. எல்­லாமே கூடி வர­ணும்னு நினைச்சேன். இப்ப அதுக்­கான நேரம் வந்­தி­ருக்கு. அதுதான் கம்­பீ­ரமா மீசையை முறுக்­கி­யி­ருக்கேன்…’’ – சந்­தோ­ஷ­மாகப் பேசு­கிறார் ஆதி.

பார­தி­யாரின் படம், அவ­ரது வரிகள். மெசேஜ் சொல்ல கிளம்­பிட்­டீங்­களா ப்ரோ?
அப்­ப­டி­யெல்லாம் இல்ல. காலேஜ் லவ் ஸ்டோரி இது. தனியா மியூசிக் பண்ண ஆரம்­பிச்ச கஷ்­டத்தை ஜாலியா சொல்­லி­யி­ருக்கேன். அது எல்­லா­ருக்கும் போகும். சமூக வலைத்­தள இளை­ஞர்­களை நிறைய அறி­மு­கப்­ப­டுத்­தி­யி­ருக்கேன்.

நீங்க அவங்­களைப் பார்க்­கும்­போது புது­மு­கமா தெரி­யாது. அவங்­க­கிட்ட ஒரு சரளம் இருக்கும். வாழ்க்­கை­யில எப்­பவும் வெற்­றியை எதிர்­பார்க்கக் கூடாது.

டென்னிஸ் வீராங்­கனை மார்ட்­டினா நவ­ரத்­தி­லோ­வா­விடம் ஒரு தடவை, ‘உங்க சிறந்த வெற்றி எது’னு கேட்­டாங்க. அப்ப அவர், தான் சிறப்பா ஆடித் தோற்ற ஒரு மேட்ச் பத்தி சொன்னார்.

அது­மா­தி­ரிதான், ‘தோற்­றாலும் ஜெயிச்­சாலும் மீசையை முறுக்­கு’னு பொசிட்­டிவ்வா சொல்­லி­யி­ருக்கேன். ஏன்னா நம்ம இளை­ஞர்­க­ளுக்கு அதுதான் தேவை.

டைரக்‌­ஷன்ல அனு­பவம் இல்­லாம இறங்­கி­யி­ருக்­கீங்­களே..?
நாங்க நிறைய வீடி­யோக்கள் செய்த அனு­பவம் இருக்கு. எங்க ஆல்­பத்தில் ‘வாடி புள்ள வாடி’­யெல்லாம் இன்­னிக்கு வரை செம ஹிட். அப்­பவே, ‘நீங்க திரைப்­படக் கல்­லூரி மாண­வ­ரா’ன்னு கேட்­டி­ருக்­காங்க.

நான் ஓர் எஞ்­சி­னி­யரிங் ஸ்டூடன்ட்னு சொல்லிச் சொல்லி களைச்சுப் போயி­ருக்கேன். இப்ப பர­வலா அறி­யப்­பட்ட ‘ஜல்­லிக்­கட்டு’ வீடியோ கூட நான் டைரக்ட் பண்­ணி­ன­துதான்.

குறும்­ப­டங்கள் செஞ்­சுட்டு பெரிய திரைக்கு வந்த இயக்­கு­நர்கள் இல்­லையா? அந்த மாதி­ரிதான். இதுல கிடைச்ச அனு­ப­வமே நிறைய. என்­னால முடி­யும்னு நம்­புனேன். படத்தைப் பார்த்­துட்டு சுந்தர்.சி ‘நல்லா இருக்­கு’ன்னு பாராட்­டினார்.

அவர் மாதி­ரி­யான பெரிய அனு­பவம் வாய்ந்த இயக்­கு­நரே இப்­படிச் சொன்­ன­போ­துதான் எனக்கு மூச்சு வந்­தது. விவேக்கின் சமூக அக்­கறை எனக்குப் பிடிக்கும். அதை அவர் கொம­டி­யில சொல்­லுவார். படத்தில் அவர் எனக்கு அப்­பாவா வர்றார். கிட்­டத்­தட்ட அவர்தான் படத்­தோட ஹீரோ.

என்ன சொல்றார் சுந்தர்.சி?
‘ஆம்­பள’ படத்­துக்­காக என்­கிட்ட ‘ஒரே ஒரு பாட்டு போட்டுக் கொடு’னு கேட்டார். நான் கொடுத்­தது ‘பழ­கிக்­கலாம்…’ பாட்டு. ‘யப்பா ரொம்ப புதுசா இருக்­கு­துப்பா..’னு சொல்­லிட்டு மொத்த படத்­தையும் என் கையில கொடுத்­துட்டார்.

நான் அவ­ரோட மியூசிக் டெஸ்ட்­லேயும் பாஸ் பண்­ணினேன். அடுத்து ஜல்­லிக்­கட்டு வீடி­யோவைக் கொண்டு போய் காட்­டினேன்.

‘யோவ், என்­னய்யா… எல்லா பக்­கமும் சிக்ஸர் அடிக்­கி­றீ­யே’னு தட்­டிக்­கொ­டுத்தார். திடீர்னு ‘ஆம்­பள’ பட இசை விழாவில் ‘ஆதியை வைத்து ஹீரோவா படம் தயா­ரிப்­பேன்’னு சொல்­லிட்டார்.

சொன்­னதை செஞ்சார். நானே இயக்­கும்­போது, சொல்ல வந்த கருத்­து­களை, மண் சார்ந்த உணர்­வு­களைச் சொல்ல முடி­யும்னு நினைச்சேன். அதுக்கும் சம்­ம­திச்ச தங்­க­மான மனசு அவ­ரு­டை­யது. இப்ப பாருங்க… 40 நாள்ல மொத்த படத்­தையும் முடிச்சு அவர் கையில கொடுத்­துட்டேன்.

ஜல்­லிக்­கட்டு ஆல்பம் மாதிரி அடுத்து என்ன?
அந்த வீடியோ இளை­ஞர்­க­ளுக்கு ரொம்ப பிடிச்­சது. அதற்­க­டுத்து காவிரி நதிநீர் பிரச்­சினை என் மன­சுல இருக்கு.

ஆனா, அத­னு­டைய உள்ளும் புற­முமான அர­சியல் எனக்குத் தெரி­யல. தக­வல்­களை முழுக்க சேக­ரிக்­கிறேன். அப்­பு­றம்தான் இறங்­குவேன். அது­வ­ரைக்கும் சினி­மாதான்.

அப்போ மியூசிக் ஆல்பம் எல்லாம் அவ்­வ­ள­வு­தானா?
தமிழ்­நாட்­டுல மியூசிக் ஆல்பம் என்­பது ‘கிணத்­துல போட்ட கல்’ மாதி­ரிதான். அது­லேயே சாதிக்க நினைச்சேன். ஆனா இப்ப சூழல் அதுக்­கா­னதா இல்ல. பிடி­வா­தமா இருந்­த­துல, சாப்­பாட்­டுக்கே வழி­யில்­லாத நிலைக்கும் போயிட்டேன். ஒண்ணு புரிஞ்சது. கூட்டத்துல இருந்து எதையும் சொன்னா யாருக்கும் கேட்காது.

பத்தோட பதினொண்ணா போகும். நாமளே ஓர் உயரத்துக்குப் போனா நாம விருப்பப்பட்டதை செய்யலாம். கொஞ்சம் பணம் பார்க்க சினிமாவுக்கு வந்தேன். ஆசைப்பட்ட தனி ஆல்பத்தை இன்னும் சிறப்பா பண்ணுவேன். ப்ளீஸ் வெயிட்..

வவுனியாவில் சேதமாக்கப்பட்ட யோசப்வாஸ் திருச்சொரூபம் மீண்டும் அதே இடத்தில்!!

 
வவுனியா இறம்பைக்குளம் புனித யோசப்வாஸ் வீதியில் அமைக்கப்பட்டிருந்த புனித யோசப்வாஸ் திருச் சொரூபம் கடந்த 10.12.2016 அன்று நள்ளிரவில் விஷமிகளால் தாக்கி சேதப்படுத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து புனித அந்தோனியார் ஆலய பங்குத்தந்தை அருட்பணி எஸ்.சத்தியராஜ் அடிகளால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டது.

தற்போது கடந்த ஞாயிற்றுக்கிழமை (18.12.2016) காலை திருப்பலியின் பின்னர் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்ட புனித யோசப்வாஸ் திருச்சொரூபம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு, மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்தி : வவுனியாவில் அந்தோனியார் சிலை உடைப்பு : அதிர்ச்சியில் மக்கள்!!

வவுனியாவில் சர்வதேச கற்கைமொழி சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் கிறிஸ்மஸ் நிகழ்வும்!!

 
வவுனியாவில் இயங்கிவரும் யூரோப்பியன் லங்வேஜ் தனியார் சர்வதேச கற்கைமொழி பயிற்சி நிலையத்தின் மூன்றாம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் கிறிஸ்மஸ் சிறப்பு நிகழ்வும் நேற்று (20.12.2016) காலை 10 மணியளவில் இறம்பைக்குளம் விருந்தினர் விடுதியில் நிர்வாக இயக்குநர் கே.வின்சட் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அந்நிறுவனத்தில் சர்வதேச மொழியினை பயின்ற 28 மாணவர்களுகளுக்கு சர்வதேச தரச் சான்றிழ் வழங்கி வைக்கப்பட்டதுடன் கிறிஸ்மஸ் சிறப்பு நிகழ்வும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஓய்வு நிலை அதிபர் திருமதி.ஜி.நடராசா, போதகர் ஜெயசீரன், போதகர். றோலனஸ், போதகர், சரத்குமார் மற்றும் நிறுவனத்தின் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.

சர்வதேச மொழியினை பயின்ற மாணவர்களின் அனுபவப்பகிர்வுகள், மாணவர்களின் கலை நிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.

வவுனியா வேப்பங்குளம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற மகரஜோதி பெருவிழா!!

 
வவுனியா வேப்பங்குளம் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் ஸ்ரீ அரிஹர சுதன் ஐயன் ஐயப்ப சுவாமியின் மகரஜோதி மண்டல விரத சக்தி பூஜை பெருவிழா கடந்த திங்கட்கிழமை (19.12.2016) காலை இந்து அன்பக இயக்குனர் கு.ஜெயராணி (சாமி அம்மா) தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.

சபரிமலை செல்லவுள்ள சுவாமிகளுக்கு மாலை அணிவித்து இப் பூஜை சிறப்பாக இடம்பெற்றது.

இன் நிகழ்வில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வருகைதந்த சுவாமிகள் கெளரவிக்கப்பட்டதுடன், அலங்கார தீபாராதனை, ஆனந்தமிகு ஐயப்பனின் பஜனைகள், பதினெட்டாம் படிப்பூஜை, மகா தீபாராதனை, பாத தரிசனம், சக்தி பூஜை(அன்னதானம்) என்பன சிறப்பாக இடம்பெற்றன.

வவுனியா வேப்பங்குளம் அன்பகத்தில் கொண்டாடப்பட்ட 5 சிறுவர்களின் பிறந்ததினம்!!

 
வவுனியா வேப்பங்குளம் இந்து அன்பகத்தில் கடந்த 15.12.2016 அன்று 5 சிறுவர்களின் பிறந்ததினம் இந்து அன்பக இயக்குனர் கு.ஜெயராணி (சாமி அம்மா) தலைமையில் கொண்டாடப்பட்டது.

பிறந்தநாளை 5 சிறுவர்களும் மிகவும் மகிழ்வுடன் அன்பக சிறுவர்களுடன் இணைந்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

இவ் அன்பகத்தில் 60 க்கும் மேற்ப்ட்ட சிறுவர்கள் பராமரிக்கப்பட்டு வருவதுடன். இவர்களுக்குத் தேவையான உதவிகளை புலம்பெயர் உறவுகள் செய்து வருவதுடன் இங்குள்ளவர்களும் நேரடியாகச் சென்று குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவர்களுக்கு நீங்களும் நேரடியாகச் சென்று பார்வையிட்டு உதவிகளை செய்யமுடியும்.

இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட்: இன்னிங்ஸ் மற்றும் 75 ஒட்டங்களால் இந்திய அணி வெற்றி!!

ரவீந்திர ஜடேஜாவின் துல்லியமான பந்துவீச்சின் மூலம் இங்கிலாந்திற்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியையும் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 75 ஒட்டங்களால் வெற்றி கொண்டது.

இந்த வெற்றியின் மூலம் 05 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 4-0 எனும் கணக்கில் இந்திய அணியின் வசமானது.

சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்கும் நோக்குடன் விக்கெட் இழப்பின்றி 12 ஓட்டங்களுடன் இன்றைய ஐந்தாம் நாள் ஆட்டத்தை இங்கிலாந்து தொடர்ந்தது.

அலிஸ்டயர் குக் மற்றும் கீட்டன் ஜென்னிங்ஸ் ஜோடி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கியதோடு, 103 ஓட்டங்களைப் பெற்ற வேளையில், இங்கிலாந்து அணியின் முதல் விக்கெட் வீழ்த்தப்பட்டது.

அலிஸ்டயர் குக் 49 ஓட்டங்களுடன் வெளியேற, கீட்டன் ஜென்னிங்ஸும் 54 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து வந்த இங்கிலாந்து துடுப்பாட்ட வீர்ரகள் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாற்றத்தை எதிர்க்கொண்டனர்.

அணியின் அதிகபட்ச ஓட்டமாக கீட்டன் ஜென்னிங்ஸ் பெற்ற 54 ஓட்டங்கள் மாத்திரமே பதிவானதோடு இங்கிலாந்தின் ஏனைய 07 துடுப்பாட்ட வீரர்களும் 20 க்கும் குறைவான ஓட்டங்களோடு ஆட்டமிழந்தனர்.

பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜா அபாரமாக பந்துவீசி இங்கிலாந்தின் துடுப்பாட்ட வீரர்களை நிலைகுலையச் செய்ததோடு, 07 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக இங்கிலாந்து அணியின் லியம் டொவ்சன் தெரிவு செய்யப்பட்டதோடு, இந்தப் போட்டியில் முச்சதம் கடந்து அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பிய கருண் நாயர் தொடரின் சிறப்பாட்டக்காரர் விருதிற்கு பாத்திரமானார்.

வவுனியாவில் கஞ்சாவை பாவித்துக் கொண்டிருந்த இரு இராணுவ வீரர்கள் கைது!!

வவுனியாவில் இன்று(20.12.2016) இரவு 7 மணியளவில் மூன்றாம் குறுக்குத் தெருவில் இரண்டு இராணுவ வீரர்கள் கஞ்சா பாவனையில் ஈடுபட்டபோது பொலிசார் இருவரையும் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று 20.12.2016 இரவு 7 மணியளவில் மழை பெய்து கொண்டிருந்தபோது மக்களற்ற பகுதியில் சிவில் உடையில் இரண்டு இராணுவ வீரர்கள் கஞ்சா பாவனையில் ஈடுபட்டிருந்தபோது பொலிசார் கைது செய்துள்ளதாகவும் இவ்விருவரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.

வவுனியா பொதுப்பூங்கா புதுப்பொலிவுடன் நாளை திறந்துவைப்பு!!

 
வவுனியா நகரசபையின் பொதுப்பூங்கா நெல்சிப்(NELSIP) திட்டத்தில் புனர்நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நாளை 21.12.2016 அன்று உத்தியோகபூர்வமாகத்திறந்து வைக்கப்பட உள்ளதாக வவுனியா நகரசபைச் செயலாளர் ஆர்.தயாபரன் தெரிவித்தார்.

நீண்டகாலமாக இப் புணரமைப்புப்பணிகள் இடம்பெற்று வந்ததுடன் அனைத்து வேலைகளும் தற்போது பூர்த்தி செய்யப்பட்டு நாளை (21.12.2016) பிற்பகல் 3 மணிக்கு பொதுமக்களின் பாவனைக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.

வவுனியா நகரசபைச் செயலாளர் தலைமையில் வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளரும் நெல்சிப் திட்டப்பணிப்பாளருமான பொ.குகநாதன் மற்றும் உலக வங்கி உயர் அதிகாரிகள், அரச அதிகாரிகள், எனப் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

வவுனியா நகரசபை, நெல்சிப் திட்டம் என்பன இணைந்து சுமார் 10 மில்லியன் ரூபா செலவில் பொதுப் பூங்கா புணர்நிர்மாணம் செய்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா வேப்பங்குளம் அன்பகத்திற்கு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினால் அன்பளிப்பு!!

 
வவுனியா வேப்பங்குளம் இந்து அன்பகத்தில் உள்ள மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் நேற்றயதினம் (19.12.2016) சுவிஸ் வாழ் உறவுகளான தீபன் சுகந்தினி தம்பதிகளின் புதல்வி செல்வி .ஆர்.றஸ்மியா அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஒழுங்கமைப்பில் வழங்கப்பட்டது.

இன் நிகழ்வுகள் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் சு.காண்டீபன் தலைமையில் நடைபெற்றது, நிகழ்வின் பிரதம அதிதியாக வவுனியா நகரசபையின் முன்னாள் உபநகர பிதாவும், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகருமாகிய க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் கலந்து கொண்டதுடன், சிறப்பு அதிதிகளாக வவுனியா வாடி வீட்டின் இயக்குனரும், இந்து அன்பகத்தின் ஆயுள் கால உறுப்பினருமான மா.கதிர்காமராஜா, தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஆலோசகரான முத்தையா கண்ணதாசன் ஆகியோர் கலந்து கொண்டு கற்றல் உபகரணங்களினை இந்து அன்பக இயக்குனர் கு.ஜெயராணி (சாமி அம்மா) அவர்களின் முன்னிலையில் வழங்கினார்கள்.

இன் நிகழ்வுகளில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் பொருளாளர் த.நிகேதன், உபதலைவர் பி.கெர்சோன், அமைப்பாளர் வ.பிரதீபன், கலாசார பிரிவின் ஒழுங்கமைப்பாளர் தே.பிரகாஸ்கர், உறுப்பினர் த.ரவி ஆகியோருடன் இன் நிகழ்வில் அன்பத்தின் நிர்வாகசபை உறுப்பினர்களுடன், ஆசிரியர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் பார ஊர்தி மின்கம்பத்துடன் மோதி விபத்து : சாரதி படுகாயம்!!

 
வவுனியாவில் பார ஊர்தி ஒன்று கனகராயன்குளம் ஏ9 வீதியில் இன்று(20.12.2016) அதிகாலை மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பொருட்களை ஏற்றிக் கொண்டு சென்ற பார ஊர்தியானது வீதியை விட்டு விலகி உயர் அழுத்த மின் விநியோக கம்பம் ஒன்றுடன் மோதியது.

இதனால் மின்கம்பம் முற்றாக முறிந்து வீழ்ந்துள்ளது. மின் கம்பம் முறிந்து விழுந்தமையால் அப்பகுதியில் மின் தடையும் ஏற்பட்டுள்ளது. விபத்து காரணமாக பார ஊர்தியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகிறார்கள்.

ரஷ்யத் தூதுவர் சுட்டுக்கொலை : படம்பிடித்த புகைப்படக் கலைஞரின் பதற்றமான நிமிடங்கள்!!

துருக்கி தலைநகர் அங்காராவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் துருக்கிக்கான ரஷ்யத் தூதுவர் ஆண்ட்ரை கார்லோவ் பலியாகியுள்ளார்.

துருக்கி பொலிஸ் அதிகாரி ஒருவராலேயே அவர் சுட்டுக்கொல்லப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவத்தை தனது கெமராவில் பதிவு செய்த அசோசியேட்டட் பிரஸ்ஸின் புகைப்படக் கலைஞர் புர்கான் ஒஸ்பிலிக் தனது ஆபத்தான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது,

ரஷ்யாவைப் பற்றிய புகைப்படக் கண்காட்சி அது. ரஷ்யாவின் கலின்ங் கிராட் நகர் முதல் கம்சாட்கா நகர் வரையான புகைப்படங்கள் அந்தக் கண்காட்சியில் இடப்பெற்றிருந்தன. எனவே, அந்த கண்காட்சியில் நான் கலந்துகொள்ள முடிவு செய்தேன். ஏனெனில், என் அலுவலகத்திற்கு செல்லும் வழியில்தான் அந்தக் காண்காட்சி நடைபெற்றது.

நான் கண்காட்சிக்கு நுழையும் முன்னே அங்கு உரைகள் தொடங்கப்பட்டு விட்டன. அதற்கு பின் ரஷ்ய தூதர் ஆண்ட்ரை கார்லோவ் தனது உரையைத் தொடங்கினார்.

நான் புகைப்படம் எடுப்பதற்காக அவரது அருகில் சென்றேன். துருக்கி – ரஷ்ய உறவுக்கு உபயோகிக்கப்படும் வகையில் அந்தப் படங்கள் இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டே புகைப்படங்கள் எடுக்க ஆரம்பித்தேன்.

அதுவரை அவ்விடம் வழக்கமான புகைப்பட கண்காட்சி நிகழ்ச்சியாகவே அது இருந்தது.

பிறகு திடீரென்று கருப்பு நிற கோட் சூட் அணிந்த அந்த நபர் துப்பாக்கியை வெளியே எடுக்கும்போது நான் திகைத்து நின்றேன். நான் அதனை திரைப்பட காட்சி என்று முதலில் நினைத்தேன்.

குறுகிய முடி வைத்திருந்த அந்த நபர் துப்பாக்கியை எடுத்து துருக்கிக்கான ரஷ்ய தூதர் ஆண்ட்ரை கார்லோவை 8 முறைச் சுட்டார். அங்கிருந்த மக்கள் பயந்து அங்கிருந்த மேசைகளுக்கு அடியில் பதுங்கிக் கொண்டனர். நான் சற்று பயந்து குழம்பிய நிலையில் இருந்தேன். இருந்தாலும் நான் சுவருக்கு பின்னால் ஒழிந்துகொண்டு புகைப்படங்களை எடுக்க ஆரம்பித்தேன். மிக நிதானமாக திட்டமிட்டு இந்தப் படுகொலையை அந்த நபர் செய்தார்.

அதன்பின் அங்கு நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் பார்வையாளர்கள் பீதி அடைந்தனர். சுடப்பட்ட ரஷ்ய தூதர் எனக்கு சிறிய தொலைவிலே தரையில் வீழ்ந்து கிடந்தார். அவரது உடலிலிருந்து எந்த இரத்தமும் வெளிவரவில்லை. ஒரு வேளை அந்த நபர் அவரை பின்னால் சுட்டிருக்கக்கூடும் என நினைத்துக்கொண்டேன் என தெரிவித்துள்ளார்.

19 வயது மாணவி உலக அழகி 2016 ஆகத் தெரிவு!!

‘உலக அழகி 2016’ உலக அழகிப்போட்டி அமெரிக்காவின் மேரிலேண்டில் உள்ள அக்சான் கில்நகரில் நடைபெற்றது.

அதில் 50க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர்.

பல சுற்றுகளாக போட்டிகள் நடைபெற்றன. நேற்று இறுதி போட்டி நடைபெற்றது. அதில் கென்யா, பிலிப்பைன்ஸ், புவேர்ட்டோ ரிக்கோ, டொமிகன் குடியரசு மற்றும் இந்தோனேசியா ஆகிய 5 நாடுகளின் அழகிகள் கலந்து கொண்டனர்.

அதில் புவேர்ட்டோ ரிக்கோ நாட்டை சேர்ந்த ஸ்டெபானி டெல்வாலே என்ற 19 வயது இளம்பெண் உலக அழகி பட்டம் வென்றார்.

இந்நிலையில், உலக அழகிப் போட்டியில் முதல் 20 இடங்களுக்குள் இந்திய பெண் ஒருவர் இடம்பெற்றுள்ளார். மிஸ்வேர்ல்டு 2016 போட்டியில் இந்திய அழகி ப்ரியதர்ஷினி சாட்டர்ஜி 17வது இடத்தைப் பிடித்துள்ளார். டெல்லியில் வசித்து வரும் பிரியதர்ஷினி, சமூகவியல் படித்து வருகிறார்.

இறுதியாக இந்தியாவின் சார்பில் பிரியங்கா சோப்ரா கடந்த 2000ம் ஆண்டு உலக அழகிப் பட்டம் வென்றார். அதற்கு முன்பாக ரீட்டா பரியா(1966), ஐஸ்வர்யா ராய்(1994), டையானா ஹைடன்(1997) மற்றும் யுக்தா முக்கே பட்டங்களை வென்றுள்ளனர்.

வவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இருவர் படுகாயம்!!

வவுனியா மகாறம்பைக்குளத்தில் நேற்று (19.12.2016) இரவு 9 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

வவுனியா மாகாறம்பைக்குளத்தில் நேற்று இரவு 9 மணியளவில் இரு அயலர்களுக்கிடையே வாக்குவாதம் இடம்பெற்று இவ் வாக்குவாதம் மோதலாக மாறி வாள் வெட்டுச்சம்பவத்துடன் முடிவடைந்துள்ளது.

இவ் வாள்வெட்டுச் சம்பவம் காரணமாக 21 மற்றும் 27 வயதுடைய இரு இளைஞர்கள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.