திரு­ம­ணத்­துக்கு மறுத்த 16 வயதுச் சிறுமி பெற்­றோரால் எரித்­துக்­கொ­லை!!

திரு­ம­ணத்­துக்கு மறுத்த 16வயது சிறு­மியை பெற்­றோரும் அவ­ரது சகோ­த­ரனும் கொலை செய்து எரித்த சம்­ப­வ­மொன்று தமி­ழ­கத்தில் இடம்­பெற்­றுள்­ளது. இந்­நி­லை­யி­லேயே சிறு­மியின் பெற்றோர் மற்றும் அவ­ரது சகோ­த­ர­னையும் பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

தமி­ழ­கத்தின் நாமக்கல் மாவட்ட வாழ­வந்தி கிரா­மத்தைச் சேர்ந்­தவர் தங்­கராஜ். இவ­ரது மகள் ஐஸ்வர்யா (16). தங்­க­ராஜும் அவ­ரது மனை­வியும் மகள் ஐஸ்­வர்­யா­வுக்கும் அவ­ரு­டைய உற­வினர் சுரேஷ் என்­ப­வ­ருக்கும் திரு­மணம் செய்ய முடிவு எடுத்­தனர்.

இந்த திரு­ம­ணத்­திற்கு எதிர்ப்பு தெரி­வித்த ஐஸ்­வர்யா, இந்த சம்­பவம் குறித்து நாமக்­க­லி­லுள்ள சிறார்கள் பாது­காப்பு நிலை­யத்தில் தகவல் அளித்தார். இத­னை­ய­டுத்து அந்த நிலைய அதி­கா­ரிகள் ஐஸ்­வர்­யாவை காப்­ப­கத்தில் சேர்த்­துள்­ளனர்.

இத­னி­டையே கடந்த புத ன்­கி­ழமை காப்­ப­கத்­துக்குச் சென்ற ஐஸ்­வர்­யாவின் உற­வி­னர்கள், அவருடைய தந்­தைக்கு உடல்­ந­லக்­கு­றைவு ஏற்­பட்­டுள்­ள­தாக கூறி, ஐஸ்­வர்­யாவை அழைத்துச் சென்றுள்­ளனர்.

இத­னை­ய­டுத்து ஐஸ்­வர்யா கடந்த சனிக்­ கி­ழமை இரவு உடல்­நிலை குறைவால் இறந்­து­விட்­ட­தாக கூறி அவ­ரது உடலை அவர்­க­ளது பெற்­றோர்கள் சுடு­கட்டில் எரித்து விட்­டனர்.

இது குறித்து பொலிஸார் தெரி­வித்­துள்ள­ தா­வது, ஐஸ்­வர்யா அதே பகு­தியை சேர்ந்த 17-வய­து­டைய ஒரு மாண­வரை காத­லித்­துள்ளார். இது­கு­றித்து அறிந்த, ஐஸ்­வர்­யாவின் பெற்றோர், அவர்­களின் உற­வினர் ஒரு­வ­ருக்கு திரு­மணம் செய்ய வைக்க வற்­பு­றுத்தி உள்­ளனர். இதற்கு மறுப்புத் தெரி­வித்த ஐஸ்­வர்யா, தனக்கு பிடித்­த­மான நப­ரைத்தான் திரு­மணம் செய்வேன் என அடம் பிடித்து இருக்­கிறார்.

இதனால் ஆத்­திரமடைந்த அவ­ரது 19-வய­து­டைய அண்ணன் சுபாஷ் ­சந்­துரு, ஐஸ்­வர்­யாவை துப்பட்டாவால் கழுத்தை இறுக்­கி­ய­தாக கூறப்­ப­டு­கி­றது. இதில் ஐஸ்­வர்யா உயி­ரி­ழந்­துள்ளார். பின்னர் ஐஸ்­வர்­யாவின் உடலை பொலி­ஸா­ருக்கு தெரி­விக்­காமல் அவ­ரது தந்தை தங்­கராஜ் மற்றும் உறவினர்கள் எரித்து விட்­டனர்.

இதை­ய­டுத்து ஐஸ்­வர்­யாவை கழுத்தை இறுக்கி கொலை செய்­த­தாக அவ­ரது அண்ணன் சுபாஷ்சந்துரு­வையும், கொலைக்கு உடந்­தை­யாக இருந்­த­தாக தங்­க­ரா­ஜையும் பொலிஸார் கைது செய்­தனர்.

பின்னர் அவர்கள் நாமக்கல் நீதிமன்­றத்­தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மாணவியின் அண்ணன் சுபாஷ்சந்துரு பரமத்தியிலுள்ள சீர்திருத்தப்பள்ளியிலும், தங்கராஜ் சேலம் சிறையிலும் அடைக்கப்பட்டுள்­ள­னர்.

ஆசியக் கிண்ண இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இலங்கை!!

19 வய­திற்­குட்­பட்­டோருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையி­றுதிப் போட்டியில் வெற்றிபெற்று இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளது.

பங்களதேஷ் அணிக்கெதிரான இந்த போட்டியில் டக்வர்த் லூவிஸ் முறைப்படி 26 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களதேஷ் அணி 48.3 ஓவர்களில் 194 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.

பங்களாதேஷ் அணி சார்பில் ரயான் ரப்ஷான் 38 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், இலங்கை அணி சார்பில் ஜெயவிக்ரம 4 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 2 விக்கட்டுகளை இழந்து 106 ஓட்டங்களை பெற்றிருந்த போது மழை குறுக்கிட்டது.

இந்நிலையில் மழை தொடர்ந்து பெய்ததால், டக்வர்த் லூவிஸ் முறைப்படி இலங்கை அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இலங்கை அணி சார்பில் சத்துரங்க 68 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

அரையிறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை அணி இறுதிப்போட்டியில் இந்திய அணியை சந்திக்கவுள்ளது.

சமூக வலைத்தளத்தை பயன்படுத்தி லட்சக்கணக்கான மக்களை காப்பாற்றிய சிறுமிக்கு கிடைத்த கௌரவம்!!

சிரியாவில் மக்கள் தாக்கப்படாமல் இருப்பதற்கு உதவிய சிறுமி துருக்கியின் ஜனாதிபதியை சந்தித்தார்.

சிரியாவின் கிழக்கு அலெப்போ பகுதியிலிருந்து மீண்டு வந்த பானா அல் அபேத் என்ற ஏழுவயது சிறுமியை துருக்கி ஜனாதிபதி தயீப் ஏர்டோகன் தனது மாளிகைக்கு அழைத்து பாராட்டியுள்ளார்.

அலெப்போவில் தாக்குதல்களின் போது துருக்கி மற்றும் ரஷ்ய படைகள் பொது மக்கள் தாக்கப்படுகின்றார்களா என்பதை அறிவதற்கு வழியில்லாத நிலையில் குறித்த சிறுமி தனது ட்விட்டர் சமூக வலைத்தளம் மூலம் சாதாரண மக்கள் வாழ்கின்ற பகுதிகள் பற்றி அறியத்தந்து மக்கள் தாக்கப்படாமல் இருப்பதற்கு உதவியுள்ளார்.

அத்தோடு கிழக்கு அலெப்போ பகுதிகளிலிருந்து அகதிகளை மீட்பதற்கும் இவரது வலைத்தளப் பயன்பாடு பெரிதும் உதவியுள்ளது. இவரை பின் தொடர்ந்த சுமார் 330,000 பேருக்கு இவரே தகவல் பறிமாற்றாளராக இருந்துள்ளார்.

இது வரையும் 27 இலட்சம் அகதிகள் துருக்கியால் மீட்கப்பட்டுள்ளனர் என்பதும், அகதிகளை பாதுகாப்பாக மீட்பதில் துருக்கியின் ஆர்வமிகு பண்புகளும் வெளிப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தகு விடயமாகும்.

இயக்குநர்கள் தன்னை ஒதுக்குவதாக இலியானா கவலை!!

நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த இலியானாவிற்கு சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லை.

அவுஸ்திரேலிய இளைஞருடனான காதல் சர்ச்சைக்குப் பிறகு, புதிய படங்களில் ஒப்பந்தம் செய்ய இயக்குநர்கள் தயங்குகின்றனர்.

இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ், தெலுங்கில் நடிக்க தனக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை என இலியானா தெரிவித்துள்ளார்.

இந்தியில் மட்டுமே ஓரிரு படங்களில் நடிக்க வாய்ப்புக் கிடைத்துள்ளது.

இதனால், இயக்குநர்கள் தன்னை ஒதுக்குவதாகவும் அதற்கான காரணம் தனக்கு சரிவரத் தெரியவில்லை எனவும் இலியானா வருத்தம் வெளியிட்டுள்ளார்.

ஒவ்வொரு படமும், இதுதான் தனக்கு கடைசிப் படம் என்ற உணர்விலேயே நடிக்க வேண்டி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

37 வருடங்களின் பின்னர் சகாரா பாலைவனத்தில் ஏற்பட்ட அதிசயம்!!

 
உலகின் மிகப் பெரிய வெப்பமான பாலைவனமான சகாராவின் காலநிலையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சகாரா பாலைவனத்தின் பல பகுதிகள் பனியினால் மூடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன் காரணமாக சகாரா பாலைவனத்தின் எல்ஜுரியாவுக்கு அருகில் உள்ள பகுதி வெள்ளை நிறமாக காட்சியளிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள தகவல்களுக்கமைய சகாரா பாலைவனத்தில் மீண்டும் பூமியில் மாற்றமடைய கூடிய சுற்றாடல் ஏற்படும் பகுதியாகுவதற்கு ஆரம்பமாகியுள்ளது.

இதற்கு 37 வருடங்களுக்கு முன்னர் சகாரா பாலைவனத்தில் ஏற்பட்ட சூறாவளியின் போது பனி விழுந்திருந்தன.

எனினும் தற்போது அவ்வாறான ஒன்றும் ஏற்படாமல் பனி விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்க ஒரு விடயமாக கருதப்படுகின்றது.

அது தொடர்பிலான அரிய புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வயதானாலும் வானவேடிக்கை : சதத்தால் நியூசிலாந்தை கலக்கிய ஜெயவர்த்தன!!

நியூசிலாந்தில் நடக்கும் சூப்பர் ஸ்மாஷ் டி20 போட்டியில் ஜெயவர்த்தனவின் அதிரடி சதம் உலக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான ஜெயவர்த்தன சூப்பர் ஸ்மாஷ் டி20 போட்டியில் Central Districts அணிக்காக ஆடி வருகிறார்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் Central Districts அணி, Otago அணியை எதிர்கொண்டது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய Otago அணி அதிரடியாக விளையாடி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 249 ஓட்டங்கள் சேர்த்தது.

அந்த அணியின் தலைவர் ரூதர்போர்ட் 50 பந்துகளில் 9 பவுண்டரி 8 சிக்சர்கள் என 106 ஓட்டங்கள் சேர்த்தார். நெய்ல் பிரோம் (42), அன்ரூ கிட்சன் (54) ஆகியோரும் ஓட்டங்கள் குவித்தனர்.

இந்நிலையில் 250 ஓட்டங்கள் சேர்த்தால் வெற்றி என களமிறங்கிய Central Districts அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தது.

தொடக்க வீரர் ஜார்ஜ் வொர்கர் (35) விரைவில் ஆட்டமிழந்தாலும், அடுத்து வந்த ஜெயவர்த்தனே ருத்ரதாண்டவம் ஆடினார். அவர் 56 பந்தில் 12 பவுண்டரி, 7 சிக்சர்கள் என 116 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த டாம் பூரூசும் அதிரடி காட்டினார். இருப்பினும் கடைசி நேர வீரர்கள் சரியாக ஆடாததால் Central Districts அணியால் 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 248 ஓட்டங்களே சேர்க்க முடிந்தது.

இதனால் அந்த அணி 1 ஓட்டம் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. டாம் பூரூஸ் 3 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 61 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பரபரப்பான இந்த ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு நல்லவொரு விருந்தாக அமைந்தது.

42 வருடங்களுக்குப் பின்னர் பந்துவீச்சு தரவரிசையில் முதல் இரண்டு இடங்களில் இந்திய வீரர்கள்!!

1974 ஆம் ஆண்டிற்குப் பின்னர் டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் 2 இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளனர்.

ஐசிசி பந்துவீச்சு தரவரிசையில் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடத்திலும் ரவீந்திர ஜடேஜா இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

1974 ஆம் ஆண்டு இந்திய சுழற்பந்து வீச்சாளர்களான பிஷன் சிங் பேடி மற்றும் பகவத் சந்திரசேகர் ஆகியோர் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தனர்.

அதன் பிறகு, தற்போதுதான் இந்தியர்கள் இருவர் அந்த இடத்தைப் பிடித்துள்ளனர்.

சென்னை டெஸ்ட் போட்டியில் 2 ஆவது இன்னிங்ஸில் 7/48 என்று இங்கிலாந்தை எதிர்கொண்ட ஜடேஜா, தொடரில் 26 விக்கெட்டுக்களை 25.84 என்ற சராசரியில் எடுக்க, அஸ்வின் 28 விக்கெட்டுக்களை 30.25 என்ற சராசரியில் எடுத்துள்ளார்.

டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் இலங்கையின் ரங்கன ஹேரத் மூன்றாம் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்தை ஜெயலலிதா மரணத்தில் எந்த மர்மமும் இல்லை : தீபக் பேட்டி!!

அத்தை ஜெயலலிதாவின் மரணத்தில் எந்த மர்மமும் இல்லை என அவரது அண்ணன் மகன் தீபக் கூறியுள்ளார்.

அத்தை ஜெயலலிதா மறைவில் எந்த மர்மமும் இல்லை என அவரது அண்ணன் ஜெயக்குமாரின் மகன் தீபக் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

உடல் நலக்குறைவு காரணமாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார்.

அவருடன் இருந்தவர்கள் தவிர தமிழக மக்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், உறவினர்கள் யாராலும் ஜெயலலிதாவை பார்க்க முடியாமலேயே போய் விட்டது எனக் கூறப்பட்டது.

இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.

அந்த பேட்டியில், கடைசியாக 6 மாதத்திற்கு முன்புதான் எனது அத்தை ஜெயலலிதாவை பார்த்தேன். அப்போது தான் பேசினேன். அதன் பின்பு வெளிநாடு சென்றுவிட்டேன்.

பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு 15 நாட்களுக்கு முன்பு இந்தியா வந்தடைந்தேன். அதற்கு பிறகு அவருடன் பேசவில்லை.

உடல் நலம் சரியில்லாமல் அத்தை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது நானும் அங்கு தான் 70 நாட்கள் இருந்தேன்.

அத்தைக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை தொடர்பாக ஆவணங்கள் சிலவற்றில் நானும் சசிகலா அத்தையும் கையெழுத்திட்டோம்.

அப்பல்லோவில் அத்தை ஜெயலலிதா 72 நாட்களாக சிகிச்சை பெற்றபோது எய்ம்ஸ் மருத்துவர்கள், அப்பல்லோ மருத்துவர்கள் குழு, லண்டன் டாக்டர் ரிச்சர் பீலே ஆகியோர் சிகிச்சை அளித்தனர்.

சிகிச்சைக்கு பின்னர் உடல்நிலை தேறிவந்தநிலையில் அதிகாரிகளுடன் அவர் பேசினார். தொடர்ந்து தலைவர்கள் வந்து பார்த்து சென்றனர்.

அப்படி இருக்கும் போது அப்பல்லோ போன்ற பெரிய தனியார் மருத்துவமனையில் மர்மம் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை.

எனக்கு தெரிந்த வகையில் கார்டியாக் அரெஸ்ட் வருவதற்கு முன்பு அன்றைய தினம் 3.30 மணிவரை நன்றாக தான் இருந்தார்.

எனவே அவரது மரணத்தில் மர்மம் எதுவும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இவ்வாறு தீபக் கூறியுள்ளார்.

வெடித்துச் சிதறிய கொலம்பிய விமானம் : பதற வைக்கும் வீடியோ காட்சிகள்!!

 
கொலாம்பிய நாட்டில் 6 பேருடன் சென்ற விமானம் தரையிறங்கும் போது கட்டுப்பாட்டை மீறி வெடித்துச் சிதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலாம்பிய நாட்டில் German Olano என்ற விமான நிலையத்தில் இருந்து 6 பேருடன் தனி விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றுள்ளது.

இவ்விமானம் the Boeing 727 என்ற விமானத்தைச் சேர்ந்தது என கூறப்படுகிறது.

விமானம் Puerto Carreno என்ற விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சிக்கும் போது கட்டுப்பாட்டை மீறி அங்கிருந்த வேலி கம்பிகளை எல்லாம் தாண்டியது மட்டுமில்லாமல், அந்த விமானத்தை வீடியோ எடுத்த முற்பட்ட பொதுமக்கள் பலரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ஆனால் சிறிது தூரம் சென்ற விமானம் கண் இமைக்கும் நொடியில் வெடித்துச் சிதறியது.

இதில் 5 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஒருவர் உடனடியாக அருகில் உள்ள San Juan de Dios மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த விமானம் கொலாம்பிய தலைநகர் Bogota பகுதியில் உயர பறந்த போது கட்டுப்பாட்டை இழந்துள்ளதாக கூறப்படுகிறது.

அண்மையில் தான் 77 பேருடன் சென்ற விமானம் கொலாம்பியாவின் Medellin என்ற விமான நிலையத்திற்கு அருகில் விபத்துக்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் மாணவி ஒருவர் தீ மூட்டி தற்கொலை!!

கிளிநொச்சி கனகாம்பிகைகுளம் பகுதியில் 17 வயது மாணவி ஒருவா் இன்று அதிகாலை தீ மூட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை மூன்று முப்பதுக்கும் நான்கு மணிக்கும் இடையில் இடம்பெற்றுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தனக்குதானே தீ மூட்டியுள்ளதாகவும், சம்பவ இடத்திலேயே மாணவி உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கனகாம்பிகைகுளத்தைச் சோ்ந்த கிருஸ்ணகுமார் வார்னுஜா வயது 17 எனும் மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவியின் தந்தை இறுதி யுத்த காலத்தில் இறந்துள்ள நிலையில் தாய் உயர்தரம் கற்கும் மாணவியை யாழ்ப்பாணத்தில் படிப்பித்து வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

சம்பவ இடத்திற்குச் சென்ற கிளிநொச்சி பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்த 6 பிள்ளைகளின் தாய்!!

 
நில்வள கங்கையில் நீரிழ் மூழ்கி உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்த 6 பிள்ளைகளின் விதவைத் தாய் காப்பாற்றப்பட்டுள்ளார்.

மாத்தறை சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரிவு பொலிஸ் அத்தியட்சகர் வருனி போகஹவத்தவினாலேயே இந்த தாய் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தாய் மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே தனது கணவனை இழந்துள்ளார்.

இதனால் தன் குழந்தைகளை பராமரிக்க முடியாமையினாலேயே இந்த தாய் தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார்.

அத்துடன் தாய்க்கு ஐந்து மகள்கள் மற்றும் ஒரு மகன் இருப்பதாகவும் அவர்களின் வயது 6 முதல் 17 வரை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனது நான்கு இளைய மகள்களுடனேயே நீரில் மூழ்க இந்த பெண் முயற்சித்துள்ளதுடன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இப்பெண் காப்பாற்றப்பட்டுள்ளார்.

இருப்பினும், பொலிஸ் அதிகாரிகளால் பெண்ணின் மனதை மாற்ற முடியாமையினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.

மேலும் நான்கு இளைய பெண் குழந்தைகளும் நன்னடத்தை திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாலத்திற்குள் பாய்ந்த முச்சக்கர வண்டி : ஆறு பேர் படுகாயம், இருவரின் நிலை கவலைக்கிடம்!!

 
மட்டக்களப்பு நகருக்குள் உள்ள வெள்ளப்பாலத்தில் முச்சக்கர வண்டி குடைசாய்ந்ததில் அதில் பயணித்த சாரதி உட்பட கர்ப்பிணிப்பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் என ஆறு பேர் படுகாயமடைந்துள்ளதுடன் இருவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று புதன்கிழமை பிற்பகல் ஏறாவூரில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை செல்லும்போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளன.

ஏறாவூர் காட்டுப்பள்ளி வீதியைசேர்ந்தவர்களே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானபோது இராணுவ வீரர் ஒருவர் துரித கதியில் செயற்பட்டு ஆறு பேரையும் மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்ததாக சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆறு பேரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுமி ஒருவரும் கர்ப்பிணிப்பெண்ணும் ஆபத்தான நிலையில் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சம்பவ இடத்திற்கு சென்ற மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு பொலிஸார் இதுதொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் காணிப்பதிவகமும் மாவட்ட பதிவகமும் திறந்துவைப்பு!!

 
வவுனியா மாவட்ட செயலகத்தில் புனர்நிர்மாணிக்கப்பட்ட காணிப்பதிவகமும் மாவட்ட பதிவகமும் இன்று காலை 10 மணியளவில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவினால் உத்தியோகபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.ரேஹன புஸ்பகுமார தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், கே.கே.மஸ்தான், வடமாகாணசபை உறுப்பினர் வி.ஜெயதிலக, வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் த. திரேஸ்குமார், ஐக்கியதேசியக்கட்சி வன்னி மாவட்ட அமைப்பாளர் கருனதாச, வவுனிய பிரதேச செயலாளர் கா.உதயராசா, அரச அதிகாரிகள், செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

விமா­னத்தில் வழங்­கப்­பட்ட விசித்­திர உரு­வத்­தி­லான உண­வினால் அதிர்ச்­சி­ய­டைந்த பெண்!!

அவுஸ்­தி­ரே­லி­யாவைச் சேர்ந்த பெண் ஒருவர், விமா­னத்தில் பயணம் செய்த போது, தனக்கு உணவுப் பொருட்­களில் ஒன்று விநோ­த­மான உரு­வத்தில் இருப்­பதைக் கண்டு அதிர்ச்­சி­ய­டைந்­துள்ளார்.

இப் பெண் கடந்த வெள்­ளிக்­கி­ழமை சிட்­னி­யி­லி­ருந்து பிறிஸ்பேன் நக­ருக்கு அவுஸ்­தி­ரே­லி­யாவின் கான்டாஸ் விமான சேவை நிறு­வ­னத்தின் விமா­னத்தின் வர்த்த வகுப்பில் பய­ணித்தார்.

இதன்­போது தனக்கு உண்­ப­தற்­காக வழங்­கப்­பட்ட உணவுப் பொதியில் 6 டப்­லிங்ஸ்­க­ளுடன் விசித்திரமான உண­வொன்றும் இருந்­தது. இந்த உண­வுப்­பொருள் ஆணு­றுப்பு போன்ற உரு­வத்தில் இருந்­ததால் தான் அதிர்ச்ச்­சி­ய­டைந்­த­தாக அப் பெண் தெரி­வித்தார்.

அப் பெண் மேற்­படி உண­வு­களை படம் ­பி­டித்து சமூக வலைத் ­த­ளங்­க­ளிலும் வெளி­யிட்­டுள்ளார். உணவுப் பொதி­யி­லி­ருந்த 6 டப்­லிங்ஸ்­க­ளையும் தான் உட்­கொண்­ட­தா­கவும் அவை சுவை­யாக இருந்ததா­கவும் அவர் தெரி­வித்­துள்ளர்.

எனினும், விசித்­திர தோற்­றத்­தி­லி­ருந்த உணவை தான் உட்­கொள்­ள­வில்லை என அவர் கூறி­யுள்ளார். இதே­வேளை, விசித்­திர தோற்றத்திலிருந்த உணவானது அவிக்கப்பட்ட கிழங்கு வகையான தாவர உணவே என கான்டாஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வவுனியாவில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!!

வவுனியா நீலியாமோட்டை கிராமத்தில் யானைக்கு வைக்கப்பட்ட மின் இணைப்பில் சிக்கி ஒருவர் நேற்று (20.12.2016) இரவு 7 மணியளவில் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..

வவுனியா நீலியாமோட்டையில் வசிக்கும் செல்வநாதன் (வயது 45) என்ற குடும்பத்தவர் வீட்டுக்கு அருகில் இருக்கும் தனது வயல் பிரதேசத்தில் யானைக்காக மின்சார இணைப்பை வைத்துவிட்டு அவர் அதனை மறந்து வயல் பிரதேசத்துக்கு மீண்டும் சென்ற போது மின்னின் தாக்கத்திற்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்திசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இக் கிராமத்தில் யானையின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாகவும், கிராம மக்கள் அச்சத்துடனே வாழ்ந்து வருவதாகவும், கிராமத்திற்குள் யானை உள்நுளையாதவாறு வேலி அமைத்துத் தருமாறு கிராம மக்கள் உரிய அதிகாரிகளை கேட்டு நிற்கின்றனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்னரும் இக் கிராமத்தில் யானையினால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

7 வயதுச் சிறுமியை தற்கொலைத் தாக்குதலுக்கு முத்தமிட்டு வழியனுப்பும் தாய்!!(காணொளி)

சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ் நகரில் உள்ள பொலிஸ் நிலையமொன்றில் கடந்த 16 ஆம் திகதி சிறுமி ஒருவரால் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இத் தாக்குதலில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த தற்கொலைத் தாக்குதலுக்கு தனது குழந்தைகளை தாய் முத்தமிட்டு அனுப்பும் காணொளி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன.

கொலை செய்வதற்காக முத்தமிட்டு அனுப்பப்பட்ட குழந்தை – 7 வயது சிரிய குழந்தையின் கடைசி நிமிடங்கள

சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ் நகரிலுள்ள பொலிஸ் நிலையத்தில் கடந்த டிசம்பர் 16 ஆம் திகதி ஜிகாதி என்ற 7 வயது சிறுமி தற்கொலை தாக்குதல் ஒன்றை நடத்தியிருந்தார்.

குறித்த சிறுமி தான் ஒரு தற்கொலை தாங்கியாக மாறுவதற்கு முதல் தனது 9 வயது சகோதரியுடன் இணைந்து அன்பு பரிமாற்றங்களை செய்யும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

அதில் குறித்த சிறுமியின் தாய் தனது இரு குழந்தைகளையும் முத்தமிட்டு அரவனைத்து வழியனுப்பி வைக்கிறார்.

சிறுமிகள் இருவருக்கும் இஸ்லாமிய உடையை அணிவித்து அவர்களின் உடைகளுக்குள் தற்கொலை குண்டை பொருத்திய தாக்குதல் சூத்திரதாரி அவர்களுக்கு தற் கொலை தாக்குதல் பற்றிய விளக்கங்களை கொடுக்கவே இறுதியில் அல்லாஹ்வு அக்பர் என சத்தமிட்டவாறு சிறுமிகள் குறித்த கட்டிடத்தை விட்டு வெளியில் வருகின்றனர்.

இது பற்றி பொலிஸ் தரப்பு விளக்கும் போது, குறித்த சிறுமி தனிமையாக பொலிஸ் நிலையத்திற்குள் வந்து தான் ஓய்வரைக்கு போக வேண்டும் எனக்கூறிய நிலையில் தன்னை வெடிக்க செய்துள்ளார்.

அத்தாக்குதலில் பொலிஸ் நிலையத்திலிருந்த மூன்று பொலிஸ் அதிகாரிகள் காயமுற்றதோடு குறித்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

அத்தோடு குறித்த சிறுமியின் தந்தை பற்றி அறிய வருவதாவது, அவர் அல்கைதா தீவிரவாத அமைப்புடன் தொடர்பான அல் நூஸ்ரா அமைப்புடன் இருந்தவர் என் தெரியவந்துள்ளது.

இத்தாக்குதல் யாரால் வழி நடத்தப்பட்டது என்பது பற்றிய தரவுகளை ஆராய்ந்து வருவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சிரிய தீவிரவாத தாக்குதல் சம்பவங்களால் இதுவரையும் சுமார் 310,000 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.