நடிப்பிற்காக உயிரை கொடுக்கவும் தயார் : தமன்னா!!

பாகுபலி படத்தில் நடிக்கும் வாய்ப்பு என்னை தேடி வந்தது. அது ஒரு கனவு போல இருந்தது. இந்த படத்தில் நடிக்க உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறேன் என்று நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.

பாகுபலி படத்தில் நடித்த தமன்னா, தற்போது பாகுபலி-2ல் நடித்து வருகிறார். இது பற்றி தெரிவித்த அவர்,

என்னுடைய திரைஉலக நிலைமை மோசமானதாக இருந்த போது, பல படங்கள் தோல்வியை சந்தித்தன. இந்த நிலையில் பாகுபலி படத்தில் நடிக்கும் வாய்ப்பு என்னை தேடி வந்தது. அது ஒரு கனவு போல இருந்தது. பாகுபலி பட வாய்ப்பு நான் எதிர்பாராதது. என்னுடைய கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது. பாகுபலி 2ம் பாகத்தில் இப்போது நடித்துக் கொண்டிருக்கிறேன்.

பாகுபலி-2 படப்பிடிப்பு இந்த மாதம் முடிந்து விடும். பாகுபலி படத்தில் நடிக்க உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கின்றேன் என்று தெரிவித்தார்.

வவுனியாவில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டு கடும் தாக்குதல்!!

வவுனியாவில் நேற்று இரவு உணவகம் வைத்திருக்கும் பிரபல வர்த்தகரின் மகன் மீது எட்டுப்பேரடங்கிய குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இத்தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன் வவுனியா பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா ஏ9 வீதியில் பிரபல உணவகத்தின் உரிமையாளரின் மகன் தனது உணவகத்தில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் குறித்த உணவகத்தில் தேனீர் கொடுப்பதில் ஏற்பட்ட முரண்பாட்டினையடுத்து நேற்று இரவு குறித்த இளைஞன் இரண்டாம் குறுக்குத் தெருவிலிருக்கும் தனியார் பேரூந்து நிலையத்திற்குச் சென்றுள்ளார்.

அங்கிருந்த 8 பேரடங்கிய குழுவினர் இளைஞர் மீது கண்மூடித்தனமான தாக்குதல் மேற்கொண்டதுடன் இளைஞன் மீது டீசல் ஊற்றப்பட்டுள்ளது. தாக்குதல் காரணமாக முயக்கமுற்ற நிலையில் இருந்த இளைஞனை பேரூந்தில் ஏற்றிக்கொண்டு சூடுவெந்தபுலவிற்கு சென்றுள்ளனர்.

இச்சம்பவத்தினை அறிந்த குறித்த இளைஞனின் சகோதரன் குறித்த பேரூந்தினை பின்தொடர்ந்து பேரூந்தில் ஏறியபோது இருவரையும் உள்ளே இருந்த நபர்கள் கீழே தள்ளி விட்டுச் தப்பிச் சென்றுள்ளனர்.

உடனடியாக தாக்குதலுக்குள்ளான தர்மலிங்கம் சுபராஜ் வயது 26 பூந்தோட்டம் ஸ்ரீநகரில் வசித்துவரும் இளைஞன் வவுனியா வைத்தியசாலையில் திவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொண்டதையடுத்து தாக்குதல் நடத்திய இரு வரையும் குறித்த பேரூந்தினையும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா சார்பாக வடமாகாண சபை உறுப்பினர் தியாகராஜாவால் விடுக்கப்பட்ட வேண்டுகோள்கள்!!

21.12.2016ம் திகதி வடமாகாணசபையின் வரவு செலவுத்திட் விவாதத்தின் போது மயில்வாகனம் தியாகராசா அவர்களினால் சமர்பிக்கப்பட்ட அறிக்கை

முதலமைசின் நிதித்திட்டமிடல் சமூகசேவைகள் புனர்வாழ்வு மின்சக்தி வீடமைப்பு உள்ளுராட்சி மற்றும் மாகாண நீர்வழங்கல் அமைச்சின் வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது ஆற்றிய உரையில் கோரப்பட்ட விடயங்கள்.

1. வவுனியா நகரசபைக்கு உட்பட்ட இடங்களில் திண்மக்கழிவுகள் அகற்றுதல் சம்பந்தமாக நல்முறையில் செயல்படுத்த உரியநடவடிக்கை எடுக்கவேண்டும்.

2. ஓமந்தை அரசவீட்டுத்திட்டத்தில் உள்ள வீதிகளை புனரமைத்தது வீதிகளுக்கு மின்விளக்கு பொருத்தவேண்டும்.

3. புற்குளம் கண்ணகை அம்மன் வீதி முற்றாதிருத்தம் செய்யவேண்டும்.

4. வவுனியா, நெடுங்கேணி, செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கிராமங்களில் உள்வீதிகளை திருத்தம் செய்து கொடுத்து மக்கள் பாவனைக்கு உதவிசெய்யவேண்டும்.

5. கனகராயன்குளம் கிராமத்தில் ஓர் சுற்றுலாமையம் ஒன்றை அமைத்துக் கொடுக்கவேண்டும்.

6. கருப்பணிச்சங்குளம், கள்ளிக்குளம் கிராமங்களில் உள்ள மக்களுக்கு மலசலகூடவசதி செய்து கொடுக்கவேண்டும் எனவும் வடமாகாண முதலமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா தபால் நிலையம் வழமைக்கு திரும்பியது : நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!!

 
இலங்கையில் தபால் நிலைய ஊழியர்கள் 48 மணிநேரம் மேற்கொண்ட வேலை நிறுத்தம் காரணமாக தபால் நிலையங்களில் தபால் பொதிகள் குவிந்து காணப்படுகின்றன.

இன்று தபால் நிலைய ஊழியர்கள் வழமையான தமது செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் முதியவர்கள் தமது முதியோர் கொடுப்பனவுகளை பெறுவதற்கு நீண்டவரிசையில் வவுனியா மத்திய தபாலகத்தில் காத்திருப்பதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

தொடர்புபட்ட செய்தி : வவுனியா தபாலத்தில் ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு!!

குடல் நோயை குணமாக்கும் கொய்யாப்பழம்!!

நெல்லிக்கு அடுத்து கொய்யாவில் அதிக அளவு விட்டமின் சி உள்ளது. கொய்யா இனிப்பும், அமிலச் சத்துகளும் கலந்த ருசியான பழம். குளிர்ச்சி மிகுந்தது.

100 கிராம் கொய்யாப்பழச்சாறில் உள்ள சத்துக்கள்.நீர் – 76%மாவுப்பொருள் – 15%புரதம் – 1.5%கொழுப்பு – 0.2%கல்சியம் – 0.01% பொஸ்பரஸ் – 0.04%இரும்புச்சத்து – 1 யூனிட் விட்டமின் C – 300 யூனிட்

மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்கிறது கொய்யாப் பழம். சிலருக்கு தொடர்ச்சியாக தலைவலி பிரச்சினை இருந்து கொண்டே இருக்கும்.

இப்படிப்பட்டவர்களின் ரத்தத்தில் உள்ள ஒருசில குறைபாடுகளால் தலைவலி ஏற்படும். இந்த வலியை நிரந்தரமாக தீர்த்து விடுகிறது கொய்யாப்பழம். இப்பழம் ரத்தத்தை சுத்திகரித்து தலைவலிக்கான மூலகாரணத்தை சரிசெய்து விடுகிறது.

இதனால் தீராத தலைவலியால் அவதிப்படுவோர் கொய்யாப்பழத்தை நிறைய சாப்பிடலாம்.நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதில் கொய்யாவுக்கு முக்கியபங்கு உண்டு. நீரிழிவு நோயாளிகள் இப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு பெருமளவில் குறைந்து விடும்.

கொய்யாப்பழம் ரத்தத்தை நன்றாக சுத்திகரிப்பதால் இதய நோய் பெருமளவில் குறையும். இந்நோய் வராமலும் தடுத்து விடும். குடல் நோய்களான ஜீரண கோளாறு, பேதி போன்றவற்றை குணப்படுத்தும்.

கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன. கொய்யாவில் வைட்டமின் ஏ, சி சத்துக்கள் அதிகம் உள்ளன.

இந்த வைட்டமின் குறைபாடு உள்ளவர்கள் தினமும் கொய்யாப்பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது.கொய்யாவின் தோலில் தான் அதிகசத்துக்கள் உள்ளன. இதனால் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது.

முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது. தோல் வறட்சியை நீக்குகிறது. முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராக மாற்றுகிறது.மது போதைக்கு அடிமையான மது பிரியர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட நினைத்தால் இப்பழத்தை அதிகம் சாப்பிடலாம்.

இதை தொடர்ந்து சாப்பிட்டால் மது அருந்தும் ஆசை, வெறி எல்லாம் தூள் தூளாகி விடும். மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம். கல்லீரல், மண்ணீரல் போன்றவற்றில் ஏற்படும் புண்ணை ஆற்றி விடுகிறது.

புகை பழக்கம் உடையவர்களின் நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும். இப்படிப்பட்டவர்கள் கொய்யா சாப்பிட்டால் நுரையீரல் கோளாறு நீங்கி சுகவாழ்வு பெறலாம். ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பு, ரத்த ஓட்டம் போன்றவற்றை கொய்யா சீராக்குகிறது.

உலகின் மிக ஆபத்தான விமான நிலையம்: உறைய வைக்கும் காட்சி!!

போர்த்துகலின் மெடீரா தீவின் விமான நிலையம் உலகின் மிக ஆபத்தான ஒன்றாக கருதப்படுகிறது.

கடல் மூலம் அங்கு வலுவான காற்று வெளிப்படுவதால் அப்பகுதியில் விமானத்தை இயக்குவது விமானிகளுக்கு கடும் சவாலாக திகழ்ந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த 17ம் திகதி சுவிஸின் பிரபல விமான நிறுவனமான Edelweissஸின் A320 பயணிகள் விமானம் மெடீரா தீவுக்கு பயணித்துள்ளது.

மெடீரா தீவில் விமானத்தை தரையிறக்கும் நேரத்தில் காற்று வலுவாக வீசியுள்ளது. கிட்டதட்ட மூன்று முறை விமானத்தை தரையிறக்க முயற்சி செய்தும் தரையிறக்க முடியாமல் விமானி திணறியுள்ளார்.

இந்நிலையில், நான்காவது முயற்சியில் விமானி திறமையாக விமானத்தை தரையிறக்கியுள்ளார். தற்போது, குறித்த நிகழ்வு வீடியோவாக வெளியாகி உறைய வைத்துள்ளது.

குழந்தையை அடித்துக் கொடுமைப்படுத்திய கொடூரத் தாய் : கமெராவில் சிக்கிய அதிர்ச்சிக் காட்சிகள்!!

டெல்லியில் 18 மாதமே ஆன மகனை அவரது தாய் கொடுமைப்படுத்தும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சிசிடிவி காட்சியில், பெண் ஒருவர் தனது குழந்தையை கீழே தள்ளி, காலால் மிதிக்கிறார். கதறி அழுதும் அந்த பிஞ்சு குழந்தையை விடாமல் கொடுமைப்படுத்துகிறார்.

இந்த சிசிடிவி காட்சிகளை அவரது மாமியார் சஹானா தான் பதிவு செய்துள்ளார்.

நீண்ட நாட்களாக நடந்து வந்த இந்த கொடுமைக்கு ஆதாரத்துடன் முடிவு கட்ட வேண்டும் என்று அவர் வீட்டின் அறையில் சிசிடிவியை பொறுத்தினார்.

இந்நிலையில் பதிவான இந்த காட்சிகளை அடிப்படையாக வைத்து சஹானா தனது மருமகள் மீது புகார் கொடுத்துள்ளார்.

சஹானா கூறுகையில், எனது மகனுக்கு இவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் 3 குழந்தைகள் மற்றும் எனது மகனை அவர் தொடர்ந்து அடித்து கொடுமைப்படுத்தி வந்தார். சரியான ஆதாரம் கிடைக்காததால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

தற்போது தகுந்த ஆதாரம் கிடைத்துள்ளது. அவரது மனநிலை குறித்து கண்டிப்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பொலிசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடுரோட்டில் பாலியல் துன்புறுத்தல் : தட்டிக்கேட்ட இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி!!(வீடியோ)

இந்தியாவில் இளம் ஜோடிகளை இரண்டு இளைஞர்கள் தடியால் அடித்து உதைக்கும் பரபரப்பு வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் மைன்புரி மாவட்டத்திலே இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

இளம் ஜோடிகள் அப்பகுதியில் ஒரு முகவரியை பற்றி விசாரித்துக்கொண்டிருந்த போது, இளைஞன் ஒருவன் பெண்ணின் துப்பட்டாவை பிடித்து இழுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெண்ணும் அவரது கணவரும், இளைஞரை தாக்கியுள்ளனர். இதைக்கண்ட அந்த இளைஞரின் நண்பர் தடியால் அந்த ஜோடியை சரமாரியாக தாக்குகிறார்.

இதில் அப்பெண்ணிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட ஜோடி தாக்குதலில் ஈடுபட்ட நபர் மீது பொலிசில் புகார் அளித்துள்ளனர்.

பேஸ்புக் பயன்படுத்துபவர்களா நீங்கள் : இந்த விடயங்களில் அவதானம்!!

பேஸ்புக் பாவனை குறித்து அவதானத்துடன் இருக்க வேண்டும் என இலங்கை கணினி அவசர தொடர்பாடல் வலையமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பேஸ்புக் தொடர்பில் கடந்த 11 மாத காலப்பகுதியில் 2 ஆயிரத்து 100 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தகவல்துறை பொறியிலாளர் ரொஷான் சந்திரகுப்தா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை போலியான முகப்புத்தகம் தொடர்பில் அதிக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் புகைப்படங்களைப் பயன்படுத்துவது தொடர்பிலேயே முறைப்பாடு கிடைக்கப் பெற்றவர்களில் பெரும்பாலானோர் அசௌகரியத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.

அத்துடன், தமக்கு அறிமுகமில்லாதவர்களே, பெரும்பாலானோரின் நண்பர் குழாமில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பாதுகாப்பை பெறுவதற்கு, முகப்புத்தக பாவனையாளர்கள் தமக்கு தெரிந்தவர்களை தமது நண்பர் குழாமில் இணைத்துக்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், தம்மால் பதிவேற்றப்படும் புகைப்படங்களை தமது நண்பர்கள் அல்லது தமக்குத் தேவையானர்கள் மட்டும் பார்க்கக்கூடியவாறு தனியுரிமை செய்ய வேண்டும் என்றும் ரொஷான் சந்திரகுப்தா அறிவுறுத்தியுள்ளார்.

வறட்சியை நோக்கி நகரும் இலங்கை!!

நாட்டில் கடந்த சில வருடங்களை விடவும் இவ்வருடம் மழைவீழ்ச்சி பெரிதும் குறைவடைந்துள்ளது. இதன் விளைவாக மீண்டும் வரட்சி நிலை ஏற்படக் கூடிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கின்றது.

கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கு பின்னர் நாட்டில் வரட்சி நிலை ஏற்பட்டது. அதனால் பல மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் பெரிதும் எதிர்கொண்டனர்.

எனினும் ஒக்டோபர் மாதமளவில் இடைப் பருவ பெயர்ச்சி மழைவீழ்ச்சி ஆரம்பமானதும் அவ்வரட்சி நிலைமை தீவிர நிலையை அடையவில்லை. ஆனால் அம்மழை போதியளவில் கிடைக்கப் பெறவில்லை.

அதேநேரம் வழமை போன்று வட கீழ் பருவப் பெயர்ச்சி மழை வீழ்ச்சிக் காலம் இவ்வருடம் ஆரம்பமாகி சுமார் ஒரு மாதம் கடந்தும் கூட இன்னும் மழை பெய்யத் தொடங்கவில்லை.

இவ்வாறான நிலையில் மழை வீழ்ச்சி குறைவடையக் கூடிய சமிக்ஞை தென்படுவதாக வளிமண்டலவியல் நிபுணர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வட கீழ் பருவப் பெயர்ச்சி மழை கிடைக்கப் பெறுவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தின் விளைவாக கிழக்கு மாகாணத்தின் பெரும்பகுதி வேளாண்மை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிக உஷ்ணம் காரணமாக விவசாயப் பயிர்கள் கருகும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளன.

இதேவேளை நாட்டின் சில பிரதேசங்களில் மீண்டும் குடிநீருக்குத் தட்டுப்பாடு தலைகாட்டும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

மேல் மதாகாணத்தின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்த போதிலும் நீரேந்து பிரதேசங்களில் போதியளவு மழை கிடைக்கப் பெறாதுள்ளது.

இதன் விளைவாக ‘கடந்த காலங்களில் இதே காலப் பகுதியில் இந்நாட்டின் நீர்த் தேக்கங்கள் 95 வீதம் தண்ணீரைக் கொண்டிருக்கும்.

ஆனால் இப்போது இந்நீர்த்தேக்கங்களில் சுமார் 40 வீதத் தண்ணீரே காணப்படுகின்றது என்று மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சில் நேற்று முன்தினம் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்திருக்கின்றார்.

கடந்த பத்தாண்டு காலப் பகுதியில் இவ்வருடம் தான் இக்காலப் பகுதியில் இவ்வாறு நீர்த்தேக்கங்களில் தண்ணீர் குறைவடைந்துள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுக் கூறியுள்ளார்.

இதேவேளை காற்றின் வேகமும் குறைவடைந்திருக்கின்றது.வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள இந்நிலைமை இந்நாட்டின் மின் உற்பத்தி துறைக்கு எதிர்வரும் நாட்களில் பெரும் சவாலாக அமையுமா என்ற அச்சம் பல மட்டங்களிலும் ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் இந்நாட்டுக்கு நாளொன்றுக்கு 3000 மெகா வார்ட் மின்சாரம் தேவை. இம்மின் தேவையைத் தண்ணீர், டீசல், நிலக்கரி மற்றும் காற்றலை, சூரிய சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க சக்தி என்பவற்றைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யும் மின்சாரத்தைக் கொண்டுதான் நிறைவேற்றப்படுகின்றது.

என்றாலும் இந்நாட்டில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் பெரும் பகுதி நீர்மின் உற்பத்தி நிலையங்கள் மூலமே உற்பத்தி செய்யப்படுகின்றனது.

ஆனால் தற்போது நிலவும் மழைவீழ்ச்சி குறைந்த நிலை நீடித்தால் மின்வெட்டு அமுலுக்கு வருமா என்ற அச்சமும் கூட ஏற்பட்டிருக்கின்றது.

இருந்தும் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, ‘நீரேந்து பிரதேசங்களுக்கு போதிய மழைவீழ்ச்சி கிடைக்காத போதிலும் மின்வெட்டை அமுல்படுத்த வேண்டிய தேவை ஏற்படாது.

ஆனால் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பாவிக்குமாறு நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.இது வரவேற்கக் கூடிய வேண்டுகோள் தான்.

ஆனாலும் வீடுகளிலும், அரசாங்க மற்றும் தனியார் அலு-வலகங்களிலும் மின்சாரம் வீண்விரயம் செய்யப்படுவதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

அதனைத் தவிர்ப்பதற்காக மின்சக்தியின் முக்கியத்துவம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்.

ஏனெனில் மின்சாரத்தின் முக்கியத்துவத்தை உணராததன் வெளிப்பாடாகவே வீடுகளிலும், அரசாங்க மற்றும் தனியார் அலுவலகங்களிலும் மின்குமிழ் மற்றும் மின்விசிறி என்பன இயங்கிக் கொண்டிருப்பதைப் பரவலாக அவதானிக்க முடிகின்றது.

அதன் மூலம் எவருக்குமே பயன் கிடைப்பதில்லை. இவ்வாறு விரயமாகும் மின்சாரத்தை சேமிப்பது நாட்டுக்கு நிச்சயம் நன்மை பயக்கும்.

அதனால் இதனைக் கருத்தில் கொண்டு மின்சாரம் விரயம் செய்யப்படுத்துவதைக் கட்டுப்படுத்துவது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

அதேநேரம் காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் விளைவாகவே மழைவீழ்ச்சி குறைவடைந்துள்ளதோடு குறுகிய நேர காலத்தில் அதிக மழைவீழ்ச்சியும் கிடைக்கப் பெறுகின்றது.

இந்நிலைமை அண்மைக் காலமாகவே ஏற்பட்டிருக்கின்றது. ஆனால் இவ்வாறு கிடைக்கப் பெறும் மழைநீரில் பெரும்பகுதி கடலில் கலக்கின்றது.

அவை எவ்விதத்திலும் பயன்படுத்தப்படுவதில்லை. மழைநீரின் முக்கியத்துவம் உணரப்படாததன் விளைவே இது. அதனால் மழைநீரின் பெறுமதியை மக்களுக்கு தெளிவுபடுத்துவது அவசியம்.

அதனூடாக மழை நீரை சேமிக்கும் ஆர்வத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும்.

இவ்வாறான ஏற்பாடுகளை ஒழுங்குமுறையாக மேற்கொள்ளும் போது மின்சாரத் தட்டுப்பாட்டுக்கோ, குடிநீர்ப் பற்றாக்குறைக்கோ, விவசாய நீர்த் தட்டுப்பாட்டுக்கோ வரட்சி ஏற்பட்டாலும் முகம் கொடுக்க நேராது.

பஸ் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை!!

அரை சொகுசு பஸ்களுக்கு சமமான வசதிகளை கொண்ட குறுகிய சேவை பஸ்களிலும், அரை சொகுசு பயணங்களுக்கான கட்டணத்தை அறவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை தனியார் போக்குவரத்து பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த யோசனையை நேற்று போக்குவரத்து அமைச்சில் ஒப்படைத்ததாகவும், அதற்கான அனுமதி கிடைத்தாலும், கிடைக்கவில்லை என்றாலும், கட்டணம் அறிவிடப்படும் என அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கையினுள் அரை சொகுசு பஸ் சேவை என்ற பெயரில் 500 பஸ்கள் பயணிப்பதாகவும், அந்த பஸ்கள் பயண கட்டணங்களுக்காக ஒன்றரை அளவு பணம் அறிவிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அரை சொகுசு என கூறப்படும் பஸ்களில் காணப்படும் வசதிகள் குறுகிய பயண சேவைகளிலும் 75 வீதம் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

டொலரின் பெறுமதி 160 ரூபா வரை அதிகரிக்கும் அபாயம்!!

அடுத்து வரும் ஆண்டுகளில் இலங்கையில் பாரிய நிதி நெருக்கடி நிலை ஏற்பட கூடும் என கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டில் காணப்படுகின்ற நிதி நெருக்கடி நிலைமை காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் டொலரின் பெறுமதி 160 ரூபா வரை அதிகரிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எப்படியிருப்பினும் இந்த இரண்டினையும் தடுக்க முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் 1300 கோடி பணத்தை 5000 ரூபாய் நாணய தாள்களாக மத்திய வங்கியிலிருந்து கொண்டு செல்லப்பட்டது. இந்தப் பணம் ஜனாதிபதி தேர்தல் கூட்டங்களில் கலந்துக் கொண்டவர்களுக்கு வழங்குவதற்காக பயன்படுத்தப்பட்டதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அது முற்றிலும் போலியான தகவல் எனவும், அதனை உத்தியோகபூர்வமாக நிரூபிக்க வேண்டும் எனவும் நிதி அமைச்சருக்கு அவர் சவால் விட்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நிலைமைக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் பொறுப்பு கூற வேண்டும் என குறிப்பிட்டார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

சூரிய சக்தியை கொள்ளையடிக்கும் வேற்றுகிரகவாசிகள் : இலங்கை விஞ்ஞானி தகவல்!!

சூரியனை சுற்றி அடையாளம் காணப்படாத பொருள் ஒன்றின் ஊடாக சூரிய சக்தியை, வேற்றுக்கிரகவாசிகள் கொள்ளையடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய விண்வெளி கண்காணிப்பு மையம் மற்றும் அமெரிக்காவின் நாசா நிறுவனம் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் இது உறுதியாகி உள்ளதாக, இலங்கை வானியல் உயிரியல் தொடர்பிலான ஆராய்ச்சியாளர் கீர்த்தி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

நாசா நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தொடர்பான தகவல் கடந்த 27ம் திகதி வெளியிடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

சூரிய மண்டலத்திற்கு அருகிலுள்ள மர்ம பொருளின் செயற்பாடு மிகவும் அற்புதமான நிகழ்வொன்றாகும் என ஐரோப்பிய விண்வெளி கண்காணிப்பு மையம் மற்றும் அமெரிக்காவின் நாசா நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக கீர்த்தி விக்ரமரத்ன குறிப்பிட்டுள்ளார்.

சில சந்தர்ப்பங்களில் இந்த வேற்றுக்கிரகவாசிகள் பறக்கும் தட்டு, சூரிய சக்தியை இழுத்துக் கொள்ளும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

1960ஆம் ஆண்டில் இயற்பியல் விஞ்ஞானி பரிமன் டய்சன் சமர்ப்பித்த கருத்திற்கமைய சூரியனை சுற்றி பெரிய செயற்கைக்கோள் அமைப்பொன்றை நிர்மாணித்து அதன் ஊடாக பெரிய மூலப்பொருளினால் சூரிய சக்தியை உறிஞ்சுவதற்காக வேற்றுகிரகவாசிகள் செயற்படுவதாக வெளியிட்ட கருத்து தற்போது உறுதியாகியுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய சூரிய சக்தியை பூமியில் வாழ்பவர்கள் மாத்திரம் இன்றி வேற்றுகிரகவாசிகளும் தொழில்நுட்ப முறையை பயன்படுத்தி அதன் நன்மையை பெற்றுக் கொள்வதாக தெரியவந்துள்ளதாக ஆராய்ச்சியாளர் கீர்த்தி விக்ரமரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

60 ஆண்டுகளின் பின்னர் இலங்கையில் நுழையும் கார்!!

ஜப்பானின் பிரபல கார் நிறுவனமான நிசானின் இந்திய தயாரிப்பான Datsun கார்கள் ஆறு தசாப்தங்களின் பின்னர் இலங்கையில் அறிமுகமாகியுள்ளது.

இலங்கையில் உத்தியோகபூர்வ புதிய Datsun காட்சியறை அதிகாரப்பூர்வமாக, Datsun மற்றும் அசோசியேட்டட் மோட்டர்வேய்ஸ் (AMW) இரண்டின் பிரதிநிதிகளின் மூலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம் நாடு முழுவதும் ஏழு நகரங்களில் Datsun கார்களின் விற்பனையை விரிவாக்க திட்டமிட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம், இந்த நிறுவனத்தின் சமீபத்திய வரவான Datsun – Redi-GO கார்களின் விற்பனை முன் வெளியீட்டு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

தற்போது 300 Datsun Redi-GO கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. காரின் விலைகளுக்கு 10 சதவீத பங்குகளே இலங்கையின் சந்தை பிரிவிற்கு கொடுக்க வேண்டும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் 1957 ஆம் ஆண்டு Datsun உத்தியோகபூர்வமாக இலங்கை சந்தையில் நுழைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குப்பை சேக­ரிக்கும் இடத்தில் நிறுத்­தப்­பட்ட காரை சூழ 40 குப்பைத் தொட்­டி­களை அடுக்­கி­வைத்த ஊழியர்!!

குப்­பைகள் சேக­ரிக்­கப்­படும் இடத்தில் நபர் ஒருவர் கார் ஒன்றை நிறுத்­தி­வைத்துச் சென்­றதால், அக்­காரை சூழ குப்பைத் தொட்­டி­களை சுத்­தி­க­ரிப்பு ஊழியர் ஒருவர் அடுக்கி வைத்த சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது.

சீனாவின் அன்ஹுய் மாகா­ணத்­தி­லுள்ள குப்பை சேக­ரிக்­கப்­ப­டும் பகு­தி­யொன்றில் நபர் ஒருவர் தனது ஆடம்­பர வாக­னத்தை நிறுத்­தி­விட்டுச் சென்றார்.

இவ் ­வா­கனம் தமது பணி­க­ளுக்கு இடையூறாக இருப்­பதை உணர்ந்த சுத்­தி­க­ரிப்பு ஊழியர் ஒருவர் கடும் ஆத்­தி­ர­ம­டைந்தார். அதனால், அவ்­வா­க­னத்தை அங்­கி­ருந்து நகர்த்த முடி­யா­த­வாறு குப்பைத் தொட்­டி­களை அடுக்க ஆரம்­பித்தார்.

சுமார் 40 குப்பைத் தொட்­டிகள் அவ்­ வா­க­னத்தை சூழ அடுக்­கப்­பட்­டி­ருந்­ததை சிலர் படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

ரஷ்ய மீனவர்களால் பிடிக்கப்பட்ட விசித்திர கடல்வாழ் உயிரினங்கள்!!

 
வடமேற்கு ரஷ்யாவின் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் தாம் பிடித்த விசித்திர கடல் உயிரினங்களை புகைப்படங்களாக வெளியிட்டுள்ளனர்.

குறித்த கடல் வாழ் உயிரினங்கள் அனைத்தும் மிகவும் பயங்கரமான தோற்றம் கொண்டுள்ளதாக காணப்படுகின்றன.