அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுவேன் : சசிகலா புஷ்பா அதிரடி!!

அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு தாம் போட்டியிட உள்ளதாக ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர், அதிமுகவின் பொதுச் செயலாளராக வி.கே. சசிகலாவை தேர்ந்தெடுக்கக் கூடாது என்று ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் பொதுச் செயலாளர் பதவிக்கு தாம் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது அதிமுகவினரிடையே பரபரப்பை கிளப்பியுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா கடந்த 5ம் தேதி காலமானார்.

அதனைத் தொடர்ந்து அவரது தோழி சசிகலாவை அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொள்ளுமாறு அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மேலும், அவர்தான் அடுத்த முதல்வராக பதவியேற்க வேண்டும் எனவும் சில அமைச்சர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில சசிகலா புஷ்பா அளித்துள்ள பேட்டியில்,

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்து, அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுவது பற்றி நான் முடிவு செய்வேன்.

கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற அடிப்படையில் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட எனக்கு உரிமை உள்ளது.

அதிமுகவில் இருந்து இன்னும் என்னை நீக்கவில்லை. நான் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தால், என் மீது விசாரணை நடத்தி கடிதம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

தற்போது வரை மாநிலங்களவை ஆவணத்தில் நான் அதிமுக எம்.பி.யாகவே நீடிக்கிறேன்.

அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலா நடராஜன் வருவதை 75 சதவீத அதிமுக தொண்டர்கள் விரும்பவில்லை.

மக்கள் முன் நாடகம் ஆட கட்சி தொண்டர்களை நடராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் வற்புறுத்தி வருகின்றனர் என்று சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.

வரலாற்றில் முதல் முறையாக 152 ரூபாய் வரை அதிகரித்துள்ள டொலரின் பெறுமதி!!

இலங்கையின் வரலாற்றில் முதல் தடவையாக அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 152 ரூபா 12 சதமாக அதிகரித்துள்ளது.மத்திய வங்கிய நேற்று வெளியிட்டுள்ள நாணய மாற்று வீதத்திற்கமைய இந்த தகவல் வெளியாகயுள்ளது.

கடந்த காலங்களில் டொலரின் விலை அதிகரிக்கும் போதெல்லாம் ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வந்துள்ளதைக் காட்டுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வங்கிகளில் அமெரிக்க டொலர் பற்றாக்குறை நிலவுவதாக வங்கி தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இருப்பினும், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, வங்கிகளில் டொலர் பற்றாக்குறை இல்லையென தெரிவித்திருந்தார்.

எப்படியிருப்பினும் ரூபாயின் வீழ்ச்சியை கட்டுப்படுத்துவதற்காக விசேட தலையீட்டு நடவடிக்கைகள் ஒன்று மேற்கொள்ளப்படாதென அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் இளைஞன் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை தொடர்பில் சகோதரன் உட்பட நால்வர் கைது!!

வவுனியாவில் நேற்று முன்தினம் இரவு 26 வயதான த.சுபராஜ் என்ற இளைஞன் உணவகத்தில் வைத்து தாக்கப்பட்டு பின்னர் கடத்திச் செல்லப்பட்டு கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாகி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றார்.

இச் சம்பவம் இடம்பெற்ற தினத்தில் உணவகத்தில் இரவு பணியாற்றிய சகோதரன் உட்பட 4பேரை விசாரணைக்கு வருமாறு பொலிசார் அழைத்து விசாரணையின் பின்னர் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞன் மீது தாக்குதல் நடத்திய சந்தேகத்தில் பேரூந்தின் சாரதி, நடத்துநர் இருவரையும் கைது செய்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்தி :  வவுனியாவில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டு கடும் தாக்குதல்!!

அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்து நிவாரண விலையில் விற்பனை செய்யத் திட்டம்!!

கோரப்பட்டுள்ள அரிசிக்கான விலைகள் இன்று கிடைக்கவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.

புதுடில்லியிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஊடாக இந்தியாவிலிருந்து அரிசி விலைகளை கோரியுள்ளதாக அமைச்சின் செயலாளர் கே.பி. தென்னக்கோன் குறிப்பிட்டார்.

அரிசி விலைகள் கிடைத்தவுடன் முதற்கட்டமாக பத்தாயிரம் மெற்றிக்தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சுமார் ஒரு வாரத்திற்குள் அரிசி தொகையை இறக்குமதி செய்ய எதிர்ப்பார்ப்பதாகவும் அமைச்சின் செயலாளர் கூறினார்.

பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளிடம் இருந்தும் முன்னர் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால், அந்த நாடுகளிலும் அரிசியின் விலைகள் குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பண்டிகைக்காலத்தை முன்னிட்டு நெற் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலைகளில் கையிருப்பிலுள்ள அரிசி தொகையும் சந்தைக்கு விநியோகிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் பருப்பு, சீனி போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் இறக்குமதி செய்து மக்களுக்கு நிவாரண விலையில் விற்பனை செய்வதற்கு அமைச்சு திட்டமிட்டுள்ளது.

அத்தியாவசிய உணவுப் பொருட்களை சதொச நிறுவனத்தின் ஊடாக மக்களுக்கு விநியோகிக்கவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக விவகார அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்காலத்தில் 25 வகையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை மக்கள் இலகுவாக பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் நாடளாவிய ரீதியில் எண்ணாயிரம் விற்பனை அலகுகளை அமைப்பதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்த விற்பனை அலகுகளை அமைப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக விவகார அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.

விரல்களினால் சார்ஜ் செய்யக் கூடிய புதிய ஸ்மார்ட்போன் கண்டுபிடிப்பு!!

நேர்த்தியான தொழில்நுட்பங்களுடன் ஸ்மார்ட்போனை தொட்டாலே சார்ஜ் ஏறும்படி விரல்களை சார்ஜராக மாற்றியுள்ளனர் விஞ்ஞானிகள்.

ஸ்மார்ட்போனில் பெரிய பிரச்னை என்னவென்றால் சார்ஜ் தீர்ந்துவிடுவது தான். எவ்வளவு தான் விலையுயர்ந்த போனாக இருந்தாலும், அதில் புதிய தொழில்நுட்பங்கள் வந்தாலும் இன்றுவரை இந்த பிரச்சினை நீடிக்கிறது.

இதனை முறியடிக்கும் நோக்கில் பென்சில்வேனியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஓர்கானிக் பாலிமரினாலான (organic polymer) செல்போனை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த ஓர்கானிக் பொலிமரால் செய்யப்பட்ட ஸ்மார்ட்போனின் திரையை தொட்டால் சார்ஜ் ஏறும் விதத்தில் வடிவமைத்துள்ளனர். இதில் உள்ள மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் மழைத்துளி திரையில் விழும்போது அதனை மின்சாரமாக்கி பேட்டரி தானாக சார்ஜ் ஏறும்படி சோதனை நடத்தி வருகின்றனர்.

ஸ்மார்ட்போன்களில் உள்ள வயர்லெஸ் சென்சார்கள் இத்தகைய தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இதனால் ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் போது தானாக சார்ஜ் ஏறி விடுகிறது. அயனுக்குரிய டையோட. பேட்டரியில் பொருத்தபட்டுள்ளதால் பேட்டரிக்கு மைக்ரோவாட்ஸ் மின்சாரம் கிடைக்க பெறுகிறது.

அல்விரோ பீட்டர்சனுக்கு 2 ஆண்டுகள் போட்டித் தடை!!

ஊதியம் பெற்றுக் கொண்டு போட்டியை விட்டுக் கொடுத்தாக தென்னாபிரிக்காவின் துடுப்பாட்ட வீரர் அல்விரோ பீட்டர்சனுக்கு 2 ஆண்டுகள் போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவில் நடைபெறும் பிராந்தியப் போட்டிகளின் போதே இவர் ஊதியம் பெற்றுக் கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரனைகளை தென்னாபிரிக்காவின் பிராந்திய கிரிக்கெட் கழகங்களுக்கு பொறுப்பான குழுவொன்று ஆராய்ந்துள்ளது.

இதன் பிரகாரம் இவர் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டதையடுத்து 2 ஆண்டுகள் போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த குற்றச்சாட்டினை அல்விரோ பீட்டர்சன் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமக்கு எதி­ராகப் போரா­டிய யுவ­தியை கொல்­ப­வ­ருக்கு 10 லட்சம் டொலர் சன்­மானம் வழங்­கு­வ­தாக ஐ.எஸ். அறிவிப்பு!!

ஐ.எஸ். தீவி­ர­வாத இயக்­கத்­துக்கு எதி­ராகப் போரா­டி­வரும் 23 வயதான் ஜோன்னா பலானி எனும் யுவதியை கொல்­ப­வ­ருக்கு ஒரு மில்­லியன் டொலர் அன்­ப­ளிப்பு அளிப்­ப­தாக ஐ.எஸ். தீவி­ர­வாத இயக்கம் அறி­வித்­துள்­ளது.

குர்திஷ் கிளர்ச்­சி­யா­ளர்­ க­ளுடன் இணைந்து, ஐ.எஸ். தீவி­ர­வாத இயக்­கத்­துக்கு எதி­ராக போரா­டிய ஜோன்னா பலானி தற்­போது டென்­மார்க்கில் சிறை யில் அடைக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

ஈரானை பூர்­வீ­க­மாகக் கொண்­டவர் ஜோன்னா பலானி, இவ­ரது குடும் பம் பல ஆண்­டு­க­ளுக்கு முன்பு டென்மார்க் நாட்டில் குடி­யே­றி­யது. பின், டென்மார்க் பல்­க­லைக்­க­ழ­கத்தில் கல்வி கற்றுவந்த ஜோன்னா பலானி, தனது கல்­வியை இடை­நி­றுத்­தி­விட்டு குர்திஸ் இயக்­கத்­தோடு இணைந்து ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்­கத்­துக்கு எதி­ராக துப்­பாக்கி ஏந்தி போரா­டினார்.

சிரி­யா­வுக்கு சென்று போராட்­டத்தைத் தொடர்­வ­தற்கு ஜோன்னா முயற்­சித்­த­போது, சிரிய எல்லைப் பகு­தி­களில் அந்த நாட்டு இரா­ணு­வத்­தி­னரால் கைது செய்­யப்­பட்டார்.

அதை­ய­டுத்து டென்மார்க் அரசு, ஜோன்னா பலா­னியின் கட­வுச்­சீட்டு மற்றும் அடை­யாள அட்­டையை பறி­முதல் செய்து தமது நாட்­டுக்கு அழைத்துச் சென்­றது. சட்டவிரோ­த­மாக நாட்­டை­விட்டுத் தப்பிச் சென்­ற­தாலும், போராட்டக் குழு­வோடு இணைந்து செயற்­பட்ட குற்­றத்­துக்­கா­கவும் டென்மார்க் நீதிமன்­றத்தில் ஜோன்னா பலா­னிக்கு எதி­ராக வழக்குப் பதிவு செய்­யப்­பட்­டது.

ஜோன்னா மீண்டும் யுத்­தத்தில் பங்­கு­பற்­று­வதைத் தடுப்­ப­தற்­காக கடந்த செப்­டெம்பர் மாதம் அவருக்கு 12 மாத கால பய­ணத்­தடை விதிக்­கப்­பட்­டது. ஆனால், கடந்த ஜூன் மாதம் தான் கத்­தா­ருக்கு பயணம் செய்­ததை கடந்த வாரம் ஜோன்னா பலானி ஒப்­பு­க­கொண்டார்.

அதை­ய­டுத்து பய­ணத் ­த­டையை மீறி­ய­மைக்­காக அவர் மீண்டும் கைது செய்­யப்­பட்டார். அவ­ருக்கு 2 வரு­ட­ம் வ­ரை­யான சிறைத்­தண்­டனை விதிக்­கப்­ப­டலாம் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அதே­வேளை, ஐ.எஸ்.தீவி­ர­வா­தி­க­ளுடன் இணைந்து போரா­டிய பின்னர் தாயகம் திரும்­பு­வர்­க­ளுக்கு டென் மார்க் அரசு தொழில் வாய்ப்­பையும் வழங்கும் நிலை யில், டென் மார்க் அரச படைகள் போராடும் தரப்­புடன் இணைந்து போரிட்­ட­மை க்­காக ஜோன்­னாவை தண்­டிப்­பது அபத்­த­மா­னது என அவரின் சட்டத்­த­ரணி கூறி­யுள்ளார்.

இந்­நி­லையில், தமக்கு எதி­ராக ஆயுதப் போராட்டம் நடத்­திய ஜோன்னா பலா­னியை கொல்­ப­வ­ருக்கு 10 லட்சம் அமெ­ரிக்க டொலர் வழங்­கப்­படும் என ஐ.எஸ். இயக்கம் அறி­வித்­துள்­ளது.

மனைவியின் நடத்­தையில் சந்தேகத்தால் மனை­வியை கொலை செய்த கண­வர்!!

மனை­வியின் நடத்­தை­யில் சந்­தே­கப்­பட்டு திரு­ம­ண­மான சில தினங்­களில் கண­வ­ரொ­ருவர் மனை­வியை கொலை செய்த சம்­ப­வ­மொன்று தமி­ழ­­கத்தில் இடம்­பெற்­றுள்­ள­து.

தமி­ழ­கத்தின் திருச்சி மாவட்டம் ஆலம்பாக்கம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த சிவானந்தம் மகன் ஜோர்ஜ் பிரபு (26). டிரைவர். இவருக்கும், அரியலூர் கருணாநிதி நகரை சேர்ந்த சின்னத்துரை மகள் பவிதா (21) என்பவருக்கும் கடந்த ஏப்ரல் 29ஆம் திரு­மணம் நடந்­துள்­ளது.

சில நாட்கள் கணவன் மனைவி சந்­தோ­ஷ­மாக இருந்த நிலையில், மனைவியின் நடத்தையில் ஜோர்ஜ் பிரபுவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்­ளது.
இத­னை­ய­டுத்­து தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

கடந்த 15 நாட்க­ளுக்கு முன்பு பவிதா கணவருடன் தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். கடந்த 10ஆம் திக­தி இரவு ­ஜோர்ஜ் பிரபு, மாமனார் சின்னத்துரைக்கு தொலை­பே­­சியில் தொடர்பு கொண்டு, பவிதாவுக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் புள்ளம்பாடியிலுள்ள வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்து செல்வதாகவும், உதவிக்கு வரும்படியும் அழைத்­துள்ளார்.

அதற்கு சின்னத்துரை, தான் வெளியூரில் இருப்பதாகவும், மறுநாள் மாமியாரையும் அழைத்து வருவதாகவும் கூறியுள்­ளார்.

சிறிதுநேரம் கழித்து சின்னத்துரை, மருமகனுக்கு தொடர்பு கொண்­டு மகளின் உடல்நிலை குறித்து விசாரித்தபோது பவிதாவை மேல் சிகிச்சைக்காக திருச்சி அருகேயுள்ள இருங்களூர் தனியார் வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்வதாக கூறியுள்ளார்.

தொடர்ந்து நள்ளிரவில் சின்னதுரை போன் செய்தபோது ஜோர்ஜ் பிரபுவின் செல்­போன் சுவிட்ச்­ஓப் செய்யப்பட்டிருந்தது.

மீண்டும் போன் செய்தபோது தனியார் வைத்­தி­ய­சாலை தாதி­யொ­ருவர் செல்­போனை எடுத்து இந்த போனில் பேசியவரின் மனைவி இறந்து விட்டதாக தெரி­வித்­துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சின்னதுரை அவரது மனைவி ஜெசிந்தா மேரி மற்றும் உறவினர்கள் கல்லக்குடி பொலிஸ் நிலை­யத்­துக்குச் சென்­று பவிதாவை ஜோர்ஜ் பிரபு அடித்து கொலை செய்­ததாக முறைப்­பாடு செய்­துள்­ளனர்.

அதன்பேரில் லால்குடி பொலி­ஸார் தனியார் வைத்­தி­ய­­ சா­லைக்கு சென்று பவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனு­ப­்பி வைத்­தனர்.

மேலும் ஜோர்ஜ் பிரபுவை கைது செய்­து விசாரணை நடத்தியதில், கணவன் மனைவியிடையே ஏற்பட்ட தகராறில் பவிதாவை ஜோர்ஜ் பிரபு அடித்து, துண்டால் கழுத்தை இறுக்கியதாகவும், மூச்சு திணறல் ஏற்பட்டதால் கழுத்து பகுதியில் வலி வந்ததாக கூறியதையொட்டி பவிதாவை வைத்­தி­­ய­­சா­லைக்­கு அழைத்து சென்றிருக்கிறார்.

ஆனால் அங்கு பவிதா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குடும்பத்தகராறில் மனைவியை கழுத்தை இறுக்கி கொலை செய்ததை ஜோர்ஜ் பிரபு விசாரணையில் ஒப்புக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பின்னர் ஜோர்ஜ் பிர­­பு­­வை கைதுசெய்த பொலிஸார் சிறையில் அடைத்­தனர்.

சொந்த முடியால் அவதிப்பட்ட செல்லப்பிராணி : மீள்வதற்கு போராடிய தருணங்கள்!!

பென்சுவெலியாவின் பிட்ஸ்பேர்க் நகரில் அமைந்துள்ள மிருக வைத்திசாலையில் மிகவும் அபூர்வமான முடியமைப்பைக்கொண்ட பூனை அதன் இயல்பான நிலைக்கு மாற்றப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்கள் ஊடாக தெரியவந்ததாவது,

போல் ரொஸல் என்பவரின் அயலவரான அல்செய்மர் தான் வளர்த்த ஹய்டே எனும் பூனையை ரொஸலிடம், விட்டுவிட்டு தனது வேலைக்காக இடமாறி சென்றதால் மிக நீண்டகாலமாக வீட்டிற்குள் மறைந்து வாழ்ந்த குறித்தப் பூனையின் உடலில் சுமார் இரண்டு கிலோகிராம் அளவில் முடி வளர்ந்துள்ளது.

முடியானது சிக்கல் மிகுந்த பிடிகளாக இருந்ததால் அது வேறு ஒரு மிருகம் என எண்ணும் அளவில் பார்வைக்கு தெரிந்துள்ளது. இந்நிலையில் நடக்க முடியாமல் கஷ்டப்படவேண்டிய நிலை ஏற்பட்டது. முடியை அகற்றுவதற்கு பேர்ஸ்பேர்க்கில் உள்ள மிருக நல பராமரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலேயே குறித்த விலங்கு பூனை என்பது பராமரிப்பாளர்களால் இணங்காணப்பட்டுள்ளது.

குறித்த பூனையானது பாதுகாப்பான முறையில் முடிகள் அகற்றப்பட்டுள்ளதுடன் அழகான தோற்றத்தைப் பெற்றுள்ளது. மிருக பராமரிப்பு நிலையத்திலிருந்து அதன் உரிமையாளர் புனையை கொண்டு சென்று தான் வளர்க்கும் 17 வயதான பூனையுடன், 14 வயதான ஹய்டேயையும் வளர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பல்வேறு சத்திர சிகிச்சைகளுக்கு பிறகும் உயிருக்கு போராடும் 18 மாதக் குழந்தை!!

படுக்கையிலிருந்து விழுந்த 18 மாத குழந்தை உயிரை காப்பாற்ற பல்வேறு சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் குழந்தைக்கு சத்திர சிகிச்சை செய்ய வேண்டிவரும் என வைத்தியர்கள் அறிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

அவுஸ்ரேலியாவை சேர்ந்த லிபர்ட்கோ என்பவரின் 18 மாத குழந்தை “ஹெட்டி” உறங்கும் போது கட்டிலிருந்து விழ, தலைப்பகுதி தரையில் பட்டு இரண்டாக பிளந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. குழந்தைக்கு ஏற்பட்ட கொடுர காயங்களை சத்திரசிகிச்சை மூலம் சரி செய்த வைத்தியர்கள் சில வாரங்களுக்கு பிறகு அவரை வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.

மிகவும் குறும்புத்தனமான ஹெட்டி தனக்கு செய்திருக்கும் சத்திரசிகிச்சையின் நிலைதெரியாமல் தனது தலையை சுவரில் மோதி விளையாடவே அவரது தலைப்பகுதியில் அடிபட்டு கண்கள் கருமை நிறமாக மாறி, தலைப்பகுதியில் சிறுகட்டியை போல் உருவாகியுள்ளது.

கட்டி காலப்போக்கில் பெரிதாகி அகற்றுவதற்க மீண்டுமொரு சத்திரசிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும் சிகிச்சையின் பிறகு தலைப்பகுதியில் இரத்த கசிவு தொடரவே இரண்டு நாட்கள் கடந்த நிலையில் மூன்றாவது சத்திர சிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும் இரண்டு நாட்களில் இரத்த கசிவு மூளையை தாக்கும் நோயை உருவாக்கியுள்ளது.

இருப்பினும் உறைநிலை மருந்துகளை கொண்டு இரத்த கசிவு கட்டுப்படுத்தப்பட்டாலும், அவரது மூளையை பாதுகாப்பதற்கு எப்பொழுதும் தலை கவசம் ஒன்றை அணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வைத்திர்கள் தலைப்பகுதியில் எலும்புகள் வளராதவிடத்து அடுத்த கட்ட சத்திரசிகிச்சை மேற்கொண்டால் மாத்திரமே குழந்தையை காப்பாற்ற முடியும் என அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் குழந்தையை காப்பாற்றுவதற்கு வெளிநபர்களிடமிருந்து பொருளாதார உதவிகளை பெறவேண்டிய நிலைக்கு சிறுவனின் பெற்றோர் தள்ளப்பட்டுள்ளனர்.

வைத்திய துறை நவீனமயமடைந்திருந்தாலும் அதற்கான கட்டணங்கள் அதிகம் என்பதால் நடுத்தரமான நபர்கள் இன்றளவும் இன்னல் மிக்கவர்களாவே கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியுள்ளது.

ஐ.சி.சி. டெஸ்ட் அணியில் இடம்பிடித்த ரங்கன ஹேரத்!!

சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ள 2016 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி. டெஸ்ட் அணியில் இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் இடம்பிடித்துள்ளார்.

ஆண்டுக்கு ஒருமுறை ஐ.சி.சி. டெஸ்ட் அணி அறிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இந்த வருடம் அறிவி்க்கப்பட்டுள்ள ஐ.சி.சி. டெஸ்ட் அணியில் இலங்கை அணியைச் சேர்ந்த ரங்கன ஹேரத் மற்றும் இந்திய அணியைச் சேர்ந்த அஸ்வின் ஆகியோர் சுழற்பந்துவீச்சாளர்களாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஐ.சி.சி.டெஸ்ட் அணியின் தலைவரான இங்கிலாந்து அணியின் டெஸ்ட் தலைவர் அலஸ்ரியா குக் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

ஐ.சி.சி. தெரிவுசெய்துள்ள 2016 ஆம் ஆண்டுக்கான டெஸ்ட் அணி இதோ…

1. டேவிட் வோர்னர் (அவுஸ்திரேலியா)

2. அலஸ்ரியா குக் (இங்கிலாந்து) (அணித் தலைவர்)

3. கேன் வில்லியம்சன் (நியுஸிலாந்து

4. ஜோ ரூட் (இங்கிலாந்து)

5. எடம் வோட்ஜஸ் (அவுஸ்திரேலியா)

6. ஜோனி பெயர்ஸ்டோவ் (இங்கிலாந்து)

7. பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து)

8. ரவிச்சந்திரன் அஸ்வின் (இந்தியா)

9. ரங்கன ஹேரத் (இலங்கை)

10.மிச்சல் ஸ்டார்க் (அவுஸ்திரேலியா)

11. டேல் ஸ்டெயின் (தென்னாபிரிக்கா)

12. ஸ்டீவ் ஸ்மித் (அவுஸ்திரேலியா)

வவுனியா பொது வைத்தியசாலையின் வருடாந்த நிகழ்வுகள்!!

 
வவுனியா பொது வைத்தியசாலையின் வருடாந்த நிகழ்வுகள் நேற்று(21.12.2016) வைத்தியசாலையில் பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன் தலைமையில் இடம்பெற்றது.

வவுனியா பொது வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர்கள், உத்தியோகத்தர்களிடையே ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தும் விதமாகவே இவ்வருடாந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வவுனியா வைத்தியசாலையின் தாதியர், தாதிய பயிற்சியாளர், உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் கலை நிகழ்வுகளுடன் ஆரம்பமான இன் நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிவமோகன், சிவசக்தி ஆனந்தன், கே.கே.மஸ்தான், வைத்தியசாலையின் மனநலப் பிரிவு வைத்திய நிபுணர் எஸ். சிவதாஸ், சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி.பவானி பசுபதிராஜா, தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார், மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் ஸ்ரீனிவாசன், வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவர் ரி.கே.இராஜலிங்கம், மற்றும் சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியா ஓமந்தை அரச ஊழியர் வீட்டுப்பகுதியில் திருட்டு!!

வவுனியா ஓமந்தை அரச ஊழியர் வீட்டுப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று (22.12.2016) அதிகாலை பணம், நகை என்பன திருடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

இன்று அதிகாலை பூட்டிய வீட்டிற்குள் பின்பக்க கதவினை உடைத்துக்கொண்டு உட்புகுந்த திருடர்கள் வீட்டின் உரிமையாளர்கள் உறக்கத்திலிருந்து போது உரிமையாளரின் காற்சட்டைப் பையிலிருந்த பணம், மற்றும் வீட்டின் சுவாமி அரை அலுமாரியினைத் திறந்து பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த சிறு மோதிரம் என்பனவற்றை திருடியதுடன் அருகிலிருந்த அறையில் பெண்கள் கைபையினை எடுத்து அதிலிருந்த பணம் உட்பட 40 ஆயிரம் ரூபாவரையில் திருடர்களால் திருடிச் செல்லப்பட்டுள்ளதாகவும்,

அதிகாலை 2.30 மணியளவில் வீட்டின் உரிமையாளரின் மனைவி தண்ணீர் குடிப்பதற்கு எழுந்து சென்றபோது வீட்டில் திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதையடுத்து ஓமந்தைப் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நியூசிலாந்தில் இலங்கையருக்கு ஏற்பட்ட பரிதாபம் : விபத்தில் மனைவி, பிள்ளை, மாமியார் பலி!!

நியூஸிலாந்தில் இடம்பெற்ற தீ விபத்து காரணமாக இலங்கையைச் சேர்ந்த குடும்பம் ஒன்று உயிரிழந்துள்ளது.

தென் ஒக்லாந்து பகுதியில் இன்று இடம்பெற்ற பாரிய தீ விபத்தில் ஒரு முக்கிய குடும்பத்தின் மூன்று தலைமுறைகளை நியூஸிலாந்து அகதி வழக்கறிஞர் இழந்துள்ளதாக நியூஸிலாந்து ஊடகம் தெரிவித்துள்ளது.

குறித்த தீ விபத்தில் இலங்கையைச் சேர்ந்த கைலாஷ் தனபாலசிங்கம் என்பவரின் ஐந்து வயது மகன், மனைவி மற்றும் மாமியார் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைலாஷை காப்பாற்ற வைத்தியர்கள் போராடி வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் மூன்று தலைமுறையினர் உயிரிழந்துள்ளதாக கைலாஷின் குடும்ப நண்பர் சிவராம் ஆனந்தசிவம் தெரிவித்துள்ளார்.

தீக்காயங்களுக்கு உள்ளான கைலாஷ் தனபாலசிங்கம் தற்போதுவரையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அவரது நண்பர் குறிப்பிட்டுள்ளார்.

தனபாலசிங்கம் தற்போது நியூஸிலாந்து அகதிகள் சபையின் ஒரு நிர்வாக அதிகாரியாக செயற்படுகின்றார். இந்த நிலையில் அவர் அந்த நாட்டில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள குடிமக்களுக்கு உதவி செய்வதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பனித்துள்ளார்.

பாடசாலை மாணவரும் 39 மற்றும் 66 வயதுடைய இரண்டு பெண்களும் Flat Bush பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் உயிரிழந்துள்ளதாக இன்று பிற்பகல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த குறித்த பாடசாலை மாணவின் சகோதரியும் 69 வயதுடைய தாத்தாவும் சம்பவத்தில் தீக்காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

47 வயதுடைய தந்தை இன்னமும் ஆபத்தான கட்டத்திலேயே உள்ளார்.

மின்சாரம் தாக்கி 4 பிள்ளைகளின் தந்தை பரிதாபமாக பலி!!

ஹப்புதளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒஹிய உடவேரியா தோட்டத்தை சேர்ந்த தோட்ட தொழிலாளி ஒருவர் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே நேற்று (21.12) மாலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

உடவேரியா தோட்டத்தை சேர்ந்த ஆறுமுகம் சுப்ரமணியம் எனும் 32 வயது மதிக்கத்தக்க 04 பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

விறகு சேகரிப்பதற்கென சென்றவர் அங்கு மரத்தின் கிளையொன்றினை வெட்டி இழுக்க முயற்சித்த போது அவ் மரக்கிளையானது மின்சாரக்கம்பியில் பட்டதால் உடலில் அதி சக்தி வாய்ந்த மின்சாரம் தாக்கியதால் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த தொழிலாளியின் சடலம் பிரேத பிரசோதனைக்காக பொரலாந்தை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை ஹப்புதளை பொலிஸார் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.

68 பாடசாலைகள் 2ம் திகதி திறக்கப்படாது!!

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் இரண்டு கட்டங்களாக இடம்பெறும் என, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவற்றில் முதற்கட்டப் பணிகளில் 2017.01.02 தொடக்கம் 2017.01.13ம் திகதி வரை நடைபெறவுள்ளதோடு, 87 பாடசாலைகள் இதற்காக பயன்படுத்தப்படவுள்ளன.

குறிப்பாக இவற்றில் 68 பாடசாலைகள் முழுமையாக பயன்படுத்தப்படுவதால் இவை அடுத்த வருடம் முதலாம் தவணைக்காக ஜனவரி 16ம் திகதி திறக்கப்படவுள்ளன.

பகுதியளவில் பயன்படுத்தப்படும் 19 பாடசாலைகள் உள்ளிட்ட ஏனைய பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் 2ம் திகதி முதலாம் தவணைக்காக திறக்கப்படவுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், 150 இலட்சம் வரையான விடைத்தாள்கள் இம்முறை கிடைக்கப் பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, விடைத்தாள் திருத்தப் பணிகளுக்காக, ஹட்டன் ஷாந்த ஜோன் பொஸ்கோ மகா வித்தியாலயம், ஹட்டன் ஹய்லண்ட் வித்தியாலயம், திருகோணமலை ஒரிசில் விவேகானந்தா வித்தியாலயம், மட்டக்களப்பு மைக்கல்ஸ் கல்லூரி, மட்டக்களப்பு வின்சன் மகளிர் உயர்தரப் பாடசாலை, வவுனியா தமிழ் மகா வித்தியாலயம், கிளிநொச்சி மகா வித்தியாலயம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துப் பெண்கள் பாடசாலை மற்றும் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம் உள்ளிட்ட 68 பாடசாலைகளே முழுமையாக பயன்படுத்தப்படவுள்ளன.