வவுனியா வர்த்தக சங்கத்தினருடன் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச சந்திப்பு!!

 
வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருந்த புத்தசாசன மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச இன்று வவுனியா வர்த்தக சங்கத்தினருடன் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டார்.

இன்று (23.12.2016) பிற்பகல் 1.30 மணியளவில் ஓவியா விருந்தினர் விடுதியில் வர்த்தக சங்கத் தலைவர் ரி.கே.இராலிங்கம் தலைமையில் இச் சந்திப்பு இடம்பெற்றது.

இச்சந்திப்பில் வவுனியா வர்த்தக உரிமையாளர்கள் தாம் எதிர்கொள்ளும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டு அமைச்சரினால் சில விடயங்களுக்கு தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டதாகவும் வர்த்தக சங்கத் தலைவர் தெரிவித்தார்.

இன்றைய சந்திப்பில் வவுனியா வர்த்தக சங்கத் தலைவர், செயலாளர், பொருளாலர், உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவனுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கிவைப்பு!!

வவுனியா புதுக்குளம் கனிஷ்ட வித்தியலாயத்தில் 2016இல் தரம் ஜந்து புலமைப் பரிசில் பரீட்சையில் 177 புள்ளிகளைப் பெற்று சித்தியைடைந்த கட்டையார் குளம் பகுதியைச் சேர்ந்த செல்வக்குமார் பிரணவனுக்கு இன்று (23.12.2016) காலை வவுனியா தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ்.சந்திரகுமாரால் துவிச்சக்கரவண்டி வழங்கப்பட்டது.

இவரது மகன் அபிலேஸின் முதலாவது பிறந்த தினத்தை முன்னிட்டு குறித்த மாணவன் வசதியற்ற நிலையில் பாடசாலைக்கு நடந்து செல்வதாகவும் துவிச்சக்கரவண்டி வழங்குமாறும் மாணவனின் தாயார் விடுத்த வேண்டுகோளினையடுத்து, இத் துவிச்சக்கரவண்டி தமிழ் விருட்சம் அமைப்பினரால் வழங்கப்பட்டது.

வவுனியாவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்த் திட்டம் அமைச்சரினால் திறந்துவைப்பு!!

 
வவுனியாவில் பொகஸ்வெவ பகுதியில் இன்று (23.12.2016) காலை 9 மணியளவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் புத்தசாசன, நீதி அமைச்சர் விஜயதாச ரஜபக்சவினால் உத்தியோகபூர்வமாக மக்களின் பாவனைக்குத் திறந்து வைக்கப்பட்டது.

பொகஸ்வெவ பகுதிமக்களின் வேண்டுகொளினையடுத்து இப்பகுதியில் பல மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இக் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை திறந்துவைத்ததையடுத்து நாமல்கம பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு அங்குள்ள விகாரைக்குச் சென்று விகாராதிபதி மற்றும் அப்பகுதி மக்களையும் சந்தித்து அவர்களின் தேவைகளையும் கேட்டறிந்து கொண்டார்.

பின்னர் மடுக்கந்தை பகுதிக்குச் சென்ற அமைச்சர் அப்பகுதிமக்களின் தேவைகளையும் கேட்டறியும் சந்திப்பு ஒன்றில் பங்குபற்றினர். அதனையடுத்து கொக்குவெளி இராணுவக்குடியிருப்புப் பகுதியில் அமைக்கப்பட்ட நீர் சுத்திகரிக்கும் இயந்திரப்பகுதியினையும் அமைச்சர் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

பின்னர் வவுனியா இறம்பைக்குளம் பகுதியிலுள்ள காளிகோவிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடுகளையும் மேற்கொண்டார். அமைச்சரின் இவ்விஜயத்தின் போது வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. கே. மஸ்தான், வன்னி மாவட்ட ஜக்கிய தேசியக்கட்சி அமைப்பாளர் கருணதாசா, வன்னி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், வவுனியா தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி விஜயமுனி சோமரத்தினா, மற்றும் அரச உயர் அதிகாரிகிள், எனபலரும் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் தகவலறியும் உரிமைச்சட்டம் தொடர்பான கருத்தரங்கு!!

 
வவுனியா கலாச்சாரமண்டபத்தில் இன்று ( 23.12.2016) காலை 10.00 மணிக்கு வடமாகாணத்திலிலுள்ள 5 மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கான தகவலறியும் உரிமைச்சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு ரான்ஸ்பிரன்சி இன்ரநெசனல் சர்வதேச நிறுவனத்தின் ஏற்ப்பாட்டில் இடம்பெற்றது.

இந் நிகழ்வின் வளவாளர்களாக ரான்ஸ்பிரன்சி இன்ரநெசனல் சர்வதேச நிறுவனத்தின் வடமாகாண இணைப்பாளர் ரவிந்திர டி சில்வா , திட்ட முகாமையாளர் சங்கீதா , சிறப்பு விருந்தினராக வவுனியா உதவி பிரதேச செயலாளர் திருமதி ச.கர்ணன், பொதுமக்கள் , பாடசாலை மாணவர்கள் என நூற்றுக்குக்கு மேற்ப்ட்டோர் கலந்து கொண்டனர்.

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தகவலறியும் உரிமைச்சட்டம் தொடர்பான மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் நோக்கிலும் தவல் அறியும் உரிமை சட்டத்தினை பொதுமக்கள் எவ்வாறு பயன்படுத்தாலாம் என்ற எண்ணக்கருவில் இவ் கருத்தரங்கு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் மனைவியையும் பிள்ளைகளையும் சேர்த்துவைக்கக் கோரி குடும்பஸ்தர் உண்ணாவிரதம்!!

 
வவுனியா பரநாட்டாகல் பிரதேசத்தில் 38 வயது குடும்பஸ்தவர் ஒருவர் இன்று (23.12.2016) உண்ணாவிரதம் இருந்து வருகின்றார். இவ் விடயம் குறித்து மேலும் தெரியவருவதாவது..

இன்று காலை 10.30 மணியிலிருந்து தனது மூன்று பிள்ளைகளையும் மனைவியையும் மீட்டுத்தருமாறு கோரி உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகின்றார்.

கடந்த திங்கட்கிழமை குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவியை விரட்டியுள்ளார். மனைவியும், பிள்ளைகளும் இதுவரை வீடு திரும்பாததையடுத்து சி.சிவகுமார்(38) என்ற குடும்பஸ்தர் மனைவி, பிள்ளைகள் வரும்வரை தான் சாகும் வரையான உண்ணாவிரதத்தில் ஈடுபடுவேன் என உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகின்றார்.

கிராம சேவகர் அலுவலகத்தில் உண்ணாவிரதத்தை மேற்கொண்ட போதும் அவ்விடத்தில் பொலிசார் அனுமதிக்காததன் காரணத்தினால் கிராம சேவகரின் அலுவலகத்திற்கு அண்மையில் உள்ள புளிய மரத்தின் கீழ் உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகின்றார்.

சம்பவ இடத்திற்கு வருகைதந்த ஓமந்தை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா வெண்கலசெட்டிக்குளத்தில் நடைபெற்ற பெண்கள் சுயதொழில் ஊக்குவிப்பு கண்காட்சியும் விற்பனையும்!!

 
பெண்கள் சுயதொழில் ஊக்குவிப்பு கண்காட்சியும் விற்பனையும் என்ற தொனிப்பொருளின் கீழ் வவுனியா வெண்கலசெட்டிக்குளம் பிரதேசத்தில் நேற்று மற்றும் நேற்று முன்தினம் (21.12.2016, 22.12.2016) இரு தினங்களும் ஊக்குவிப்பு கண்காட்சியும் விற்பனையும் இடம்பெற்றது.

இந் நிகழ்வானது வீ எபெக்ட் (சுவீடன் கூட்டுறவு நிலையம்) நிறுவனத்தின் அனுசரனையுடன் வரையறுக்கப்பட்ட இலங்கை மகளிர் அபிவிருத்தி சேவை கூட்டுறவு சங்கமும்இ பெண் முயற்சியாண்மையாளர்கள் சமூகநலன் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்ததுடன் இலங்கை மகளிர் அபிவிருத்தி சேவை கூட்டுறவு சங்கத்தின் வட மாகாண திட்ட இணைப்பாளர் கோ.சுதஸ்கரன் தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் வீ எபெக்ட் நிறுவனத்தின் நிர்வாக உத்தியோகத்தர் மு.பிரசாத், வெண்கலசெட்டிக்குளம் பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திரு.சண்முகானந்தன், கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலகத்தின் திட்ட உத்தியோகத்தர் இந்திராணி சுபசிங்க, மகளிர் அபிவிருத்தி சேவை கூட்டுறவு சங்க நிதிமுகாமையாளர் தயா வலேவொட, மகளிர் கூட்டுறவு சங்கதிட்ட உத்தியோகத்தர் ஆ.நவரஞ்சன் ஆகியோர் இணைந்து இந்நிகழ்வினை சிறப்பித்தனர்.

இங்கு பெண்கள் தங்களது உள்ளுர் உற்பத்தி பொருட்களை மிகவும் மகிழ்ச்சியுடன் விற்பனை செய்தமையை காணக்கூடியதாக இருந்தது.

வவுனியா நெற் செய்திகளுக்காக கீதன்

மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் விடயங்கள் என்ன தெரியுமா?

 

குடும்பத்தில் உள்ள அனைவருக்காகவும் ஓடியாடி உழைக்கும் பெண்கள் தங்கள் உடல்நிலையை பற்றி அக்கறை எடுத்துக் கொள்வதில்லை.

ஏதேனும் உடல்நலக்குறைபாடு ஏற்பட்டால் மருந்துகளை விட கணவனின் பாசத்திற்காக ஏங்கும் பெண்களே ஏராளம்.

கணவன் தன்னுடைய மனைவிக்கு மனம் மற்றும் உடல் ரீதியாக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் அவர்களால் வேலைகள் செய்ய முடியாத போது, அவர்களின் அருகில் இருந்து உதவி செய்ய வேண்டும்.

அந்த தருணத்தில் அவர்களுக்கு உணவு சாப்பிடக் கொடுப்பது, நேரத்திற்கு மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொடுப்பது என அக்கறையாக கவனித்து கொள்ள வேண்டும்.

உடல்நலம் சரியில்லை என்றால் அதிகபட்சமாக பெண்கள், ஆண்களிடம் எதிர்பார்ப்பது, அவர்களின் அன்பான அரைவணைப்பை மட்டும் தான்.

அசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணின் சோகக் கதை!!

உலகெங்கிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர் கதையாகி வருகிறது. அப்படி பாதிக்கப்பட்டு தற்போது புது வாழ்வை தொடங்கியிருக்கும் பெண் தான் ஷபீனா. அவர் வாழ்க்கை கதையை அவரே சொல்கிறார் கேளுங்கள்,

நான் இந்தியாவின் கான்பூரில் பிறந்தவள், எனக்கு திருமண வயது ஆனவுடன் என் பெற்றோர் வாசிம் என்னும் நபரை எனக்கு திருமணம் பேசி முடித்தார்கள்.

திருமணத்துக்கு சில மாதம் இருந்த நிலையில் வாசிம் என்னிடம் எல்லை மீறியும், வெளியில் சுற்ற தன்னுடன் வரவும் வற்புறுத்தினான்.

நான் திருமணத்துக்கு முன்னர் இதெல்லாம் முடியாது என மறுத்ததால் கோபம் கொண்ட அவன் நான் தூங்கி கொண்டிருந்த சமயம் என் முகத்தின் மீது அசிட் வீசினான்.

வலியால் துடித்த நான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் எனக்கு 8 சத்திர சிகிச்சை முகத்தில் நடந்தது. ஆனாலும் என் பழைய அழகிய முகம் எனக்கு கிடைக்கவில்லை.

இந்த சம்பவத்தை செய்த வாசிமை பொலிசார் கைது செய்தார்கள். என் வாழ்க்கையே முடிந்து விட்டது போல இருந்தது எனக்கு!

அப்போது தான் முகமது ஷம்சத் என்னும் நபரை சந்தித்தேன், அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளார்கள்.

அவர் மனைவி வேறு ஒரு ஆணுடன் தன் வாழ்க்கையை தேடி போய்விட்டாள் என கேள்விப்பட்டேன். அவரின் இரண்டு குழந்தைகளும் எனக்கு பிரியமாக ஆனார்கள்.

முகமது என்னை திருமணம் செய்ய விரும்பினார், உன் முகம் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும், உன் மனம் ரொம்ப அழகு என அவர் கூறினார்.

எனக்கு அவரை பிடித்து போக சமீபத்தில் எங்கள் திருமணம் நடந்தேறியது. என் வாழ்க்கை முடியவில்லை இப்போது தான் தொடங்குகிறது மகிழ்ச்சியுடன் கூறுகிறார் ஷபீனா.

பேஸ்புக் அறிமுகம் செய்த புதிய வசதி!!

சமூக வலைத்தளங்கள் வரிசையில் அசைக்க முடியாத நிலையில் தொடர்ந்தும் முன்னணியில் திகழும் பேஸ்புக் ஆனது அடுத்தடுத்து பல புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றது.

அண்மையில் குழுக்களுக்கிடையிலான வீடியோ சட்டிங் வசதி, வதந்திகள் தொடர்பில் ரிப்போர்ட் செய்யும் வசதி என்பவற்றினை அறிமுகம் செய்திருந்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது நேரடி ஒலிபரப்பு செய்யும் வசதியினையும் அறிமுகம் செய்துள்ளது.

ஏற்கணவே வீடியோக்களை நேரடி ஒளிபரப்பு செய்யும் வசதியை அறிமுகம் செய்த நிலையிலேயே தற்போது Live Audio எனும் இப் புதிய வசதியினை அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும் இப் புதிய வசதியினை BBC World Service, LBC, Harper Collins, Adam Grant மற்றும் Brit Bennett ஆகியவற்றுடன் இணைந்தே ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக எதிர்காலத்தில் வானொலி ஒலிபரப்பு சேவைகளும் பேஸ்புக் வலைத்தளத்தின் ஊடாக மேற்ககொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பல லட்சம் பேரை கண்ணீர் விட வைத்த ஒரே ஒரு புகைப்படம்!!

கென்யா நாட்டில் மருத்துவமனைக்குச் செல்லும் போது நோயாளி ஒருவர், போக்குவரத்திற்கு மத்தியில் சிக்கிக் கொண்ட போது, பிச்சைக்கார சிறுவன் ஒருவன் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கென்யா நாட்டின் தலைநகரமான Nairobi என்ற பகுதியில் Gladys Kamande என்ற நோயாளி காரில் ஆக்ஸிஜன் மாஸ்க் மற்றும் கழுத்தில் பேண்ட் என போட்டுக் கொண்டு மருத்துவமனைக்கு செல்வதற்காக சென்றுள்ளார்.

அப்போது அப்பகுதியில் அதிக போக்குவரத்து நெரிசல் காரணமாக Gladys Kamande கார் செல்வதற்கு சற்று தாமதமாகியுள்ளது.

அதுமட்டுமின்றி குறிப்பிட்ட நேரத்திற்குள் மருத்துவரை சந்திக்க வேண்டும், அதுமட்டுமின்றி போதிய பணம் இல்லை என்று கண்ணீர் சிந்தியுள்ளனர்.

அப்போது அப்பகுதியில் வழக்கமாக பிச்சை எடுக்கும் சிறுவன் பிச்சை எடுப்பதற்காக அந்த சாலையில் சென்று கொண்டிருந்த போது, இவர்கள் இருந்த கரையும் பார்த்துள்ளான்.

அப்போது அவர் படும் வேதனையைக் கண்ட அச்சிறுவன் இவர்களால் வேகமாக மருத்துவனைக்கு செல்ல முடியவில்லையே, பணம் வேற இல்லாமல் கஷ்டப்படுகிறார்களே என்று மனம் தாங்காமல் கண்ணீர் விட்டு அழுதுள்ளான்.

இதைக் கண்ட அங்கிருந்த சிலர் அச்சிறுவனை சமாதானப்படுத்தியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் Gladys Kamande குடும்பத்தார் இதுவரை அவருடைய மருத்துவ செலவாக 54, 500 பவுண்ட் வரை செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இரண்டு மகன்களை கொன்றுவிட்டு தற்கொலை செய்த தந்தை : மனதை உருக்கும் சம்பவம்!!

கனடாவில் இரண்டு மகன்களை கொலை செய்துவிட்டு தந்தை ஒருவர் தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அல்பேர்ட்டா மாகாணத்தில் உள்ள Whitecourt நகரில் Tracy Stark என்ற தாயார் Ryder MacDougall(13) மற்றும் Radek(11) ஆகிய இரண்டு மகன்களுடன் வசித்து வந்துள்ளார்.

தாயாருக்கு தனது கணவர் மீது ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து மற்றொரு நபருடனும் வசித்து வருகிறார்.

தாயை விட்டு பிரிந்து தனியாக வசித்து வரும் தங்களது தந்தையை இரண்டு பிள்ளைகளும் அடிக்கடி சென்று பார்த்துவிட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த திங்கள் கிழமை அன்று தனது தந்தையை பார்க்க சென்ற இருவரும் தாயார் வீட்டிற்கு திரும்பவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த தாயார் தனது காதலனுடன் முன்னாள் கணவர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

வீட்டிற்கு சென்று கதவை தட்டிய பிறகும் யாரும் கதவை திறக்காததால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

விரைந்து வந்த பொலிசார் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது, வீட்டில் உள்ள அறை ஒன்றில் இரண்டு மகன்களும் உயிரற்ற சடலங்களாக கிடந்ததை பார்த்து தாயார் அலறி துடித்துள்ளார்.

மகன்களின் சடலங்களுக்கு அருகில் அவர்களது தந்தையும் உயிரிழந்து கிடந்துள்ளார்.

உடனடியாக மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர், சடலங்களை பொலிசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இது குறித்து பொலிசார் வெளியிட்டுள்ள தகவலில், தந்தை தனது பிள்ளைகள் இருவரையும் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

எனினும், இக்கொலை-தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு மகன்களை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு கணவனுக்கு 15 நாட்கள் : 11 பேரை ஏமாற்றி திருமணம் செய்த பெண்!!

மத்தியபிரதேசத்தில் 11 பேரை ஏமாற்றி திருமணம் செய்த பெண் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் லெனின்ஜிதேந்திரா, இவர் எர்ணாகுளம் பொலிஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

அதில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியை சேர்ந்த மேகாபார்கவி ( 27) என்ற பெண் தன்னை திருமணம் செய்ததாகவும், சில நாட்கள் கழித்து தன்னிடம் இருந்த 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் 25 பவுன் நகைகள் எடுத்துச் சென்று மாயமாகி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்துகையில், அவர் மத்திய பிரதசே மாநிலம் நொய்டாவில் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர் அவர் அளித்த வாக்குமூலம் தான் திடுக்கிடும் வகையில் இருந்துள்ளன.

அவர் கூறுகையில், வசதியான ஆண்களை தொடர்பு கொண்டு, திருமணம் செய்து கொள்வதாக வசியப்படுத்தியதாக கூறியுள்ளார்.

குறிப்பாக பணக்கார குடும்பத்தில் உள்ள மாற்றுத்திறன் கொண்ட இளைஞர் தான் இவருடைய இலக்காக கூறப்படுகிறது.

அப்போது தான் எளிதாக மோசடி செய்யலாம் என்று எண்ணியுள்ளார். ஒவ்வொரு ஆண்களுடன் திருமணம் முடிந்த பிறகு 15 நாட்கள் தான் அவர்களுடன் உல்லாசமாக இருப்பாராம்.

அதன் பின்னர் அவர்கள் வீட்டில் உள்ள பணம் மற்றும் நகைகளை எடுத்துக்கொண்டு தன் உறவினர்களுக்கு உடல் நிலை சரியில்லை சென்று விட்டு வருகிறேன் என்று கூறிச் செல்வாராம். அதன் பின்னர் வீடு திரும்பவே மாட்டேன் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

மேலும் சத்தீஸ்கர் மாநிலத்தை சோந்த ராஜேஷ் கோலேஜா என்பரிடம் ரூ.90 லட்சமும், குஜராத் மாநிலம் சூரத் பகுதியை சேர்ந்த ஹேமந்த்குமார் என்பவரிடம் ரூ.13 லட்சமும், ராஜஸ்தான் மாநிலம் ஜோட்பூர் பகுதியை சேர்ந்த சஜேந்திரராஷ் என்பவரிடம் ரூ.15 லட்சமும், சூரத் பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவரிடம் ரூ.10 லட்சமும் மோசடி செய்துள்ளார்.

இதுபோல 11க்கும் மேற்பட்ட ஆண்களை அவர் திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மோசடிக்கு அவளது அக்கா பிராச்சிபார்கவி, உறவினர் தேலேஷ்சர்மா ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர் என கூறப்படுகிறது.

போராட்டத்தில் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்ட இளைஞர் : அதிர்ச்சிப் புகைப்படங்கள்!!

இந்தியாவில் அரசாங்கத்திற்கு எதிராக இடம்பெற்ற போராட்டத்தின் போது இளைஞர் ஒருவர் கொடும்பாவியை எரிக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக தனக்குத்தானே தீ வைத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப், Bathinda பகுதியிலே இச்சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட Sukhminder Singh Mann என்ற இளைஞன் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.

பஞ்சாப்பில் இரண்டு வருட ஒப்பந்த சேவை முடிந்தும் பணி நிரந்தரம் செய்யாமல் இருக்கும் அரசை கண்டித்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது இளைஞர் ஒருவர் அரசாங்கத்தை கண்டிக்கும் வகையில் நடுரோட்டில் கொடும்பாவியை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றார்.

அப்போது, எதிர்பாராத விதமாக அவரது ஆடையில் பெட்ரோல் பட அவரும் தீ பிடித்து எரிந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் மிகப் பெரிய மற்றும் சிறிய தேள்கள் இலங்கையில் கண்டுபிடிப்பு!!

உலகில் வாழும் மிகப்பெரிய மற்றும் மிகச் சிறிய தேள் இனங்கள் இலங்கையில் வாழ்வதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் விலங்கு அறிவியல் திணைக்களத்தின் குழுவொன்று மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது. அத்துடன் இலங்கையில் வாழும் 18 வகை தேள்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

பேராதனை பல்கலைக்கழகத்தின் விலங்கு அறிவியல் திணைக்களத்தின் பேராசிரியர் கீத்சிறி ரணவன மற்றும் தேள்கள் தொடர்பில் உலகில் அதிக ஆய்வுகளை மேற்கொண்ட ஆய்வாளரான செக் குடியரசை சேர்ந்த பென்டிசெக் கொவாரி என்பவரும் இந்த ஆய்வில் இணைந்துள்ளார்.

அதற்கமைய உலகில் வாழும் மிகப்பெரிய 9 அடி நீளமான ஹெடோரொடேரஸ் என்ற பெயருடைய தேள் மற்றும் ஒரு சென்றி மீற்றர் அளவு நீளமுடைய சாமுஸ் சரலதியேல் என்ற தேள் இனங்கள் இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளன.

மேற்கொண்ட ஆய்வின் மூலம் இது உறுதியாகி உள்ளதாக ஆய்வு நடவடிக்கையில் ஈடுபட்ட சஞ்சீவ ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

தேள்களை மக்கள் கொலை செய்கின்றமையினால் அந்த இனம் அழிவிற்கு முகம் கொடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

39000 ஆண்டுகளுக்கு பின்னர் ஏற்படபோகும் பேரழிவு : நடக்கப் போவது என்ன?

இத்தாலியின் நப்லி நகரத்தை அண்மித்த பகுதியில் நீண்ட காலமாக உறங்கும் நிலையில் இருந்த கேம்பி பிளக்கெரி எரிமலை தற்போது வெடிக்கும் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலி நாட்டில் எரிமலை ஆய்வாளர்கள் இதனை தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டு சர்வதேச ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.

இந்த எரிமலை வெடிக்குமாக இருந்தால் புவியியல் ரீதியில் பாரிய பேரழிவு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் எரிமலையின் மக்மா தீக்குழம்பு திரவ வெளியீட்டு நிலையை கண்டுப்பிடித்துள்ள முதல் சந்தர்ப்பம் இதுவெனவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த 39000 ஆண்டுகளுக்கு முன்னர் குறித்த எரிமலை வெடித்தபோது சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் வரையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது 200000 ஆண்டுகளில் ஐரோப்பாவில் இடம்பெற்ற மிகவும் பாரிய எரிமலை வெடிப்பு எனவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில், தற்போது குறித்த எரிமலை வெடிக்குமாக இருந்தால் சுமார் 5 லட்சம் பேர் வரையில் பாதிக்கப்படுவார்கள் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2005ஆம் ஆண்டு வரையில் உறங்கும் நிலையில் இருந்த குறித்த எரிமலையானது 2012ஆம் ஆண்டு மீண்டும் உயிர்ப்பு பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

சுவிஸ்லாந்தில் காதலியை கொடூரமான முறையில் கொலை செய்த இலங்கை தமிழர்!!

சுவிஸ்லாந்தில் தன் காதலியை கொலை செய்ததாக கூறப்படும் இலங்கை தமிழர் ஒருவருக்கு கடுமையான தண்டனை விதிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2000ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் திகதி இடம்பெற்ற இந்த கொலை தொடர்பிலேயே குறித்த நபருக்கு தண்டனை விதிக்க கூடும் என அந்நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளன.

1998ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டு வரையில் 23 வயதான தன் காதலியுடன் குறித்த நபர் சுவிட்ஸர்லாந்தில் பேசல் நகரில் வசித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் கடந்த 2000ஆம் ஆண்டு குறித்த கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

எவ்வாறாயினும், கொலை செய்ததாக கூறப்படும் இலங்கை தமிழர் போலி கடவு சீட்டு மூலம் நியூசிலாந்துக்கு தப்பி சென்றுள்ளார் எனவும் கூறப்படுகின்றது.

2004ஆம் ஆண்டு நியூசிலாந்தில் குடியுரிமை பெற்றுக்கொண்ட அவர், Auckland நகரில் குடியேறிய வேறு ஒரு திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார்.

எனினும், கடந்த 2014ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட காதலியின் உடலில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட மரபணு மூலம் குறித்த தமிழர் தான் கொலையாளி என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, நியூசிலாந்து அரசின் உதவியுடன், 2015ஆம் ஆண்டு சுவிட்ஸர்லாந்துக்கு அழைத்து வரப்பட்ட அவரிடம் கொலை குற்றம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை, கொலை வழக்கின் இறுதி தீர்ப்பு நாளைய தினம் வழங்கப்படவுள்ள நிலையில். கடுமையான தண்டனை விதிக்க கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவும் அந்நாட்டின் பிரதான செய்தித்தாள் ஒன்று தகவல்கள் வெளியிட்டுள்ளது.