இவ் வருடத்திற்கான வடக்கு மாகாண விளையாட்டுத்துறை நட்சத்திர விருதை மகாஜனா கல்லூரி மாணவி அனித்தா ஜெகதீஸ்வரன் வென்றெடுத்தார்.
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற 42ஆவது தேசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் நிகழ்ச்சியில் 3.41 மீற்றர் உயரம் தாவி புதிய இலங்கை சாதனையை நிலைநாட்டிய அனிதா அகில இலங்கை பாடாசலைகள் விளையாட்டு விழா உட்பட இன்னும் சில விளையாட்டுப் போட்டிகளில் ஈட்டிய பெறுபேறுகளின் அடிப்படையில் வடக்கு மாகாண விளையாட்டு நட்சத்திரம் விருதை வென்றெடுத்தார்.
சாவகச்சேரி நகரசபை பொன்விழா மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஏழாவது வடக்கு மாகாண வர்ண இரவு விழாவில் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் பி. குருகுலராஜா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு விளையாட்டு நட்சத்திர விருது உட்பட மற்றைய பிரதான விருதுகளை வழங்கினார்.
சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை அணிகளில் இடம்பெற்ற 12 பேருக்கு விசேட விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் தேசிய மற்றும் அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற சுமார் 300 பேருக்கு வர்ண விருதுகள் வழங்கப்பட்டன.
விசித்திர நோயால் பாதிக்கப்பட்டு இறந்த 41 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் நுரையீரல் தானம் கொடுக்கப்பட்ட சம்பவம் வரலாற்று சாதனையாக கருதப்படுகிறது.
பிரித்தானியா நாட்டில் வசிக்கும் ஒரு தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்தது, அதற்கு தியோ ஆர்மோண்டி என்று பெயர் சூட்டி அவர்கள் மகிழ்ந்தார்கள்.
அந்த மகிழ்ச்சி குழந்தை பிறந்து 40 நாட்கள் வரை தான் நீடித்தது. திடீரென குழந்தைக்கு உடல் நல குறைவு ஏற்பட அவன் பெற்றோர் மருத்துவர்களிடம் காட்டியுள்ளனர்.
மருத்துவர்கள் தியோவை சோதித்ததில் அவனுக்கு விசித்திர உயிர் கொல்லி நோய் இருப்பதாகவும் அவன் பிழைக்க வாய்ப்பில்லை எனவும் கூறியுள்ளனர்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவன் பெற்றோர் மனதைரியத்தை வரவழைத்து கொண்டு தங்கள் குழந்தையின் உடலுறுப்பை தானம் செய்ய முடிவெடுத்தனர்.
அதன்படி, இமோகம் என்னும் ஐந்து மாத பெண் குழந்தைக்கு நுரையீரல் தேவைப்பட குழந்தை தியோவின் நுரையீரலை இமோகனுக்கு பொருத்தி மருத்துவர்கள் மாற்று அறுவை சிகிச்சை செய்தார்கள்.
இதன் மூலம் உலகிலேயே இளம் வயதில் அதாவது பிறந்து 41 நாட்களிலேயே தனது உடலுறுப்பை தானம் செய்த சாதனையை குழந்தை தியோ நிகழ்த்தியுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜனியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜனிகாந்துக்கும் தொழிலதிபர் அஸ்வினுக்கும் நான்கு வருடங்களுக்கு முன்பு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு வேத் என்ற மகன் உள்ளார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சௌந்தர்யா ரஜனிகாந்த் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவு செய்திருந்தார்.
அவர்கள் பிரிவுக்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. இந்நிலையில், தனது கணவர் அஸ்வினை சட்டரீதியாக விவாகரத்து செய்து வைக்குமாறு சௌந்தர்யா ரஜினிகாந்த் இன்று சென்னை குடும்ப நல முதன்மை நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவிருக்கின்றது. சௌந்தர்யா ரஜனிகாந்த் தற்போது தனுஷை வைத்து வேலையில்லா பட்டதாரி 2 படத்தை இயக்கவிருகின்றார்.
தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் தனது மகளை அடைய நினைத்த கள்ளக்காதலனை தீர்த்துக் கட்டிய பெண் உள்பட 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அருகேயுள்ள மேல்மாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயவேலு (வயது 45). மாற்றுத்திறனாளியான இவர் அதே பகுதியைச் சேர்ந்த முனியம்மாள்(54) என்பவருடன் நீண்ட காலமாக கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார்.
இந்நிலையில் முனியம்மாளின் மகள் துர்காதேவியை தன் ஆசைக்கு இணங்க வைக்க நினைத்துள்ளார். இதுகுறித்து முனியம்மாளிடம் கூறியதில் இருவருக்கும் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தன் மகளின் வாழ்க்கை போய்விடுமோ மிகுந்த ஆத்திரம் கொண்ட முனியம்மாள் ஜெயவேலுவை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியுள்ளார்.
இதன்படி, கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5-ந் திகதி ஜெயவேலுவை, முனியம்மாள் அந்த கிராமத்தில் உள்ள ஏரிக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு வைத்து, அதே கிராமத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி என்பவருடன் சேர்ந்து முனியம்மாள், ஜெயவேலுவை சரமாரியாக கட்டையால் தாக்கி கழுத்தை நெறித்து துடிக்க துடிக்க கொலை செய்துள்ளனர்.
இதையறிந்த கே.வி குப்பம் பொலிசார் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கு, வேலூர் சத்துவாச்சாரி ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்நிலையில், தற்போது, இந்த வழக்கில் ஜெயவேலுவை கொலை செய்த முனியம்மாள் மற்றும் சக்கரவர்த்தி ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதமும், கொலைக்கு உடந்தையாக இருந்த முனியம்மாள் மகள் துர்காதேவிக்கு ஆயுள் தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி லதா தீர்ப்பை வழங்கியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, 3 பேரும் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் வேலூர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அமேசான் காட்டில் உலகத்துடன் தொடர்பு இல்லாமல் இருக்கும் பழங்குடியின மக்களின் அற்புத புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த புகைப்பட கலைஞரான ரிகார்டோ ஸ்டுக்கர்ட் அமேசான் காடுகளை புகைப்படம் எடுப்பதற்காக சென்றுள்ளார்.
இந்த நிலையில் திடீரென மழை பெய்ததால் அவர் ஹெலிகொப்டரை வேறு வழியாக இயக்கியுள்ளார்.
அப்போது உலகத்துடன் தொடர்பில்லாமல் இருக்கும் பழங்குடியின் மக்கள் தென்பட்டுள்ளனர். உடனே தனது கமெராவை எடுத்து அவர்களை புகைப்படம் எடுத்துள்ளார்.
இதுகுறித்து ரிகார்டோ கூறுகையில், ஹெலிகொப்டரை திசைதிருப்பிய அந்த தருணம் எனக்கு மிகவும் அதிர்ஷ்டமான ஒன்று. பழங்குடியின் மக்கள் ஹெலிகொப்டரை பார்த்ததும் தங்களை பாதுகாத்துக் கொள்ள உடலில் சாயங்களை பூசிக்கொண்டனர். ஒரு சிலர் ஆயுதங்களை எடுத்தும் குறிபார்த்தனர் என்றார்.
அவர் எடுத்த இந்த அற்புத புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயேசு பிரானின் பிறப்பையொட்டி நத்தார் பண்டிகையைக் கொண்டாட வவுனியா மாவட்ட கிறிஸ்தவ மக்கள் தயாராகி வருகின்றார்கள்.
நத்தார் பண்டிகைக்கான பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் பெரும்ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மேலும் பொதுச்சந்தைகள், வியாபார நிலையங்களில் வியாபாரம் சூடுபிடித்துள்ளதையும் காணக்கூடியதாகவுள்ளது.
அத்தோடு வெளிமாவட்ட வியாபாரிகளும் இங்கு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இவை தவிர நத்தாரின் இன்னொரு சிறப்பான நத்தார் மரங்கள் வவுனியாவில் பல்வேறு இடங்களிலும் காட்சிப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதோடு சிறுவர்களை மகிழ்விக்க நத்தார் பாப்பாவும் அங்காங்கே வருகைதந்து குதூகலப்படுத்துவதையும் காணக்கூடியதாக உள்ளது.
பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் பொட்டி ரமேஷின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஐபர்தஸ்த் என்ற தெலுங்கு டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் பொட்டி ரமேஷ். நகைச்சுவை நடிகரான இவர் கடந்த ஆண்டு டிசம்பர் 12 ஆம் திகதி திரிபுரம்பிகா(22) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், திரிபுரம்பிகா கடந்த 19 ஆம் திகதி இரவு விசாகப்பட்டினத்தில் உள்ள தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதை வீட்டு ஜன்னல் வழியாக பார்த்த ரமேஷின் சகோதரி கதறி அழ, உடனே குடும்பத்தினர் வந்து கதவை உடைத்து காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால், அங்கு திரிபுரம்பிகாவை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெர்வித்துள்ளார்.
இதற்கிடையில் ஹைதராபாத்தில் ஷீட்டிங்கில் இருந்த ரமேஷுக்கு மனைவி இறந்த தகவல் தெரியவர உடனடியாக விசாகப்படினம் வந்தவர் மனைவியைப் பார்த்து கதறி அழுதக் காட்சி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், திரிபுரம்பிகாவின் பெற்றோர் தங்கள் மகளை ரமேஷ் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தி வந்ததால் இவ்வாறான அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது என பொலிசில் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து வழக்கு பதிவு செய்த பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வவுனியா, நெளுக்குளம், ஸ்ரார் போய்ஸ் (Star Boys Sports Club) விளையாட்டுக் கழகத்திற்கு வவுனியா மாவட்ட மாகாணசபை உறுப்பினரும், வடக்கு மாகாண சுகாதார அமைச்சருமாகிய Dr.பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்களின் 2016 இற்கான நிதியில் இருந்து விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.
நேற்று (23.12.2016) சுகாதார அமைச்சரின் வவுனியா இணைப்பு அலுவலகத்தில் வைத்து அமைச்சரின் செயலாளர் ப.சத்தியசீலன் மற்றும் அமைச்சரின் இணைப்பாளர் பாலச்சந்திரன் சிந்துஜன் ஆகியோரினால் குறித்த பொருட்கள் விளையாட்டு கழகத்தினரிடம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மோல்டாவில் கடத்தல்காரர்களால் கடத்தப்பட்ட விமானத்திலிருந்த பயணிகள் மற்றும் விமானபணியாளர்கள் என அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், விமானத்தை கடத்திய கடத்தல்காரர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
லிபியாவின் பயணிகள் விமானம் ஒன்று 118 பயணிகளுடன் பலவந்ததமாக தரையிறக்கப்பட்டுள்ளது. குறித்த விமானம் மோல்டா பகுதியில் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை ´விமானக் கடத்தல் நிலைமைக்கு சாத்தியமான´ விடயம் என மோல்டாவின் பிரதமர் அறிவித்துள்ளார்.
குறித்த ஏ320 ஏயாபஸ் லிபியாவிற்குள் அப்ரிகியா விமான நிறுவனத்தின் கீழ் சேவையில் ஈடுபட்டு வருவதாக உள்ளுர் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இந்த சம்பவத்துடன் இரண்டு கடத்தல்காரர்கள் தொடர்புபட்டுள்ள நிலையில், விமானத்தில் குண்டு இருப்பதாக வதந்தியை பரப்பியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், பாதுகாப்புத் தரப்பினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மோல்டா பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தை அடுத்து மோல்டா வானூர்தி நிலையத்திற்கு சட்டவிரோத குறுக்கீடு ஏற்பட்டுள்ளதாக மோல்டா சர்வதேச விமான நிலையம் தமது டூவிட்டர் தளத்தில் செய்தி வௌியிட்டுள்ளது.
.
19 வயதுக்குற்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை அணியை வெற்றிக்கொண்டு இந்திய அணி கிண்ணத்தை கைப்பற்றியது.
நேற்று ஆர்.பிரேமாதாச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
இதனடிப்படையில் இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுகளை இழந்து 273 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இந்திய அணி சார்பில் சப்மான் கில் 70 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் ரன்சிக மற்றும் ஜெயவிக்ரம தலா 3 விக்கட்டுகளை கைப்பற்றினர்.
இந்நிலையில் 274 என்ற ஓட்ட இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.4 ஓவர்கள் நிறைவில் 239 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.
இலங்கை அணி சார்பில் கெல்லி 62 ஓட்டங்களையும் கமிந்து மெண்டிஸ் 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இந்திய அணி சார்பில் அபிசேக் சர்மா 4 விக்கட்டுகளை கைப்பற்றினார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஐவரும் நேற்று (24.12.2016) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
எழுவர் அடங்கிய விசேட சிங்கள ஜூரிகள் முன்னிலையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட குறித்த வழக்கின் தீர்ப்பை, ஜுரிகள் பரிந்துரைக்கமைவாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க அறிவித்தார்.
ரவிராஜ் கொலை வழக்கு தொடர்பில் கைதுசெய்யப்பட்டு சந்தேக நபர்களாக அடையாளப்படுத்தப்பட்ட கடற்படையைச் சேர்ந்த மூவர் உட்பட ஐவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராகிய ரவிராஜ் கடந்த 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி கொழும்பு நாரஹன்பிட்டி பகுதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
2016 ஆம் ஆண்டு ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அதி விரைவாக வளர்ச்சியடையும் நகராக கொழும்பு நகர் தெரிவாகியுள்ளது.
இதற்கிணங்க கொழும்பு நகரம் நான்காவது இடத்தை பிடித்துள்ளதாக அதி விரைவாக வளர்ச்சியடையும் நகர சுட்டெண் தரவுகள் தெரிவிக்கின்றன.
2009ஆம் ஆண்டுக்கு பின்னர், வெளிநாட்டவர்களின் வருகை 20 சத வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஜப்பானின் ஒசாகா நகரம் முன்னிலையில் உள்ளது.
ஒசாகா நகரிற்கு ஒரு மில்லியனுக்கு அதிகமான வெளிநாட்டவர்கள் வருகைத் தருகின்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை சுற்றுலாத் துறை மூலம் ஒரு பில்லியன் ரூபா வருமானம் பெற்றுக்கொள்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொழும்பு நகரம், சுற்றுலா பயணிகளுக்கு பொழுதுபோக்கு, உணவு, தங்குமிட வசதி வழங்குவதில் குறித்த நகரங்களில் முதல் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மசாலா கலவை ஒன்றை தயாரித்து Illana Smith என்ற பெண் “ஹரி ஹரி” என்ற விருதை பெற்று பிரபல்யம் அடைந்துள்ளார். குறித்த பெண் பிரித்தானியாவின் Poole என்ற பகுதியை சேர்ந்தவராவார்.
இலங்கையில் குறிப்பிட்ட காலம் வாழ்ந்த இந்தப் பெண், உள்ளூர் உணவுகள் மீது தான் காதல் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
“தன்னை பொறுத்தவரை, வீட்டில் சமைத்த புதிய உணவு, குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் சின்னமாக இலங்கை கறி காணப்படுகிறது.
ஹரி ஹரி என்பதில் “சரி சரி” என விளக்கங்கள் உள்ளன. இது இலங்கை வெளிப்பாடுதான் எனவும் Illana விளக்கியுள்ளார்.
ஹரி ஹரி என்ற மசாலா, உண்மையான இலங்கை மசாலா கறி பிரியர்களுக்கு தனிப்பட்ட ரீதியில் தெரியும். இதனை இந்திய கறியுடன் ஒப்பிட முடியாது. இது ஒரு தனித்துவமான சுவை கொடுக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கை கறியில் பயன்படுத்தப்படும் மசாலாவில் சுகாதார நலன்கள் உள்ளதாக சமீபகால ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
2016ஆம் ஆண்டின் சுவையான உணவு கலவையை ஹரி ஹரி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செம்மண் நிறைந்த மெக்சிகோ நாடு. அழகிய பெண்கள் நிறைந்த இந்த நாட்டின் மிக அழகான கிராமமாக லா பேட்ரோனாவை (La Patrona) சொல்லலாம். காரணம் அங்கிருக்கும் பெண்களின் மேனி அல்ல, அவர்கள் செய்யும் ஓர் உன்னத பணி.
பெப்ரவரி 14, 1995ம் ஆண்டு. காலை 10 மணி. பெர்னார்டாவும், ரோசாவும் தங்களுக்கான காலை உணவு ஒரு பாக்கெட் பிரெட் மற்றும் ஒரு லிட்டர் பாலோடு, அந்த ரயில் தண்டவாளத்தைக் கடக்க நின்று கொண்டிருக்கிறார்கள்.
பெர்னார்டா தண்டவாளத்தில் காது வைத்து, அந்த சத்தத்தைக் கேட்டு மகிழ்கிறாள். அவளின் விளையாட்டைக் கண்டித்து ரயில் நெருங்குவதை உணர்த்தி பின்னுக்கு இழுக்கிறாள் ரோசா.
ஒதுங்கி நிற்கிறார்கள். வேகமாகக் கடக்கிறது அந்த சரக்கு ரயில். அதன் கூரைகளில், இண்டு இடுக்குகளில் எல்லாம் மனித கூட்டம் ஒட்டிக் கொண்டிருந்தது.
இவர்களின் கையிலிருந்த உணவைப் பார்த்து “பசி”..” மேடம் பசி…” என்று அலறியது பெருங்கூட்டம். ஒரு நொடி தான்… எதையும் யோசிக்காமல் தங்கள் கைகளிலிருந்த உணவை அவர்களை நோக்கித் தூக்கி எறிந்தார்கள்.
ரயில் கண்ணை விட்டு மறையும் வரை அதைப் பெற்றவரின் கைகள் இவர்களுக்கு நன்றி சொன்னபடியே இருந்தது.
வீட்டிற்கு சென்று தங்கள் அம்மாவிடம் நடந்ததை பயந்த படியே சொன்னார்கள். ஆனால், அவர் அம்மாவோ அவர்களைப் பாராட்டினார். இனி தினமும் ரயிலில் அப்படி செல்பவர்களுக்கு உணவளிக்கலாம் என்றும் சொல்கிறார்.
பெப்ரவரி 15, முதல் நாள் வீட்டில் 25 சாப்பாட்டுப் பொட்டலங்களைக் கட்டி, தண்டவாளத்தின் ஓரம் நின்றபடி உணவைக் கொடுத்தார்கள்.
அன்று தொடங்கி 21 ஆண்டுகளாகியும், இன்று வரை இதை ஒரு சேவையாக செய்து வருகின்றனர் “லாஸ் பேட்ரோனாஸ்” (Las Patronas) என்ற பெண்கள் அமைப்பினர்.
மத்திய அமெரிக்காவில் இருக்கும் கெளதமாலா, கோஸ்டரிகா, எல் சால்வேடர், ஹண்டுரஸ் போன்ற நாடுகளிலிருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள், பிழைப்புத் தேடி அகதிகளாய் அமெரிக்காவிற்குள் செல்ல முயற்சிப்பார்கள்.
கள்ளத் தோணியில், நடந்து, லாரியில் என பல வழிகளில், எல்லைக் கோடுகளைத் தாண்டும் இவர்கள் மெக்சிகோவை சரக்கு ரயிலின் கூரைகளில் அமர்ந்து கடக்கிறார்கள்.
உண்ண உணவில்லாமல், உடுத்த மாற்று உடையில்லாமல், பல நாட்கள் பல்லிகளாய் ஒட்டிக் கொண்டு ரயிலில் பயணிக்கும் இவர்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்குகிறது இந்தப் பெண்கள் குழு.
முதல் ஏழு வருடங்கள் தங்களின் கைக் காசைப் போட்டு இந்த சேவையை செய்து வந்தது பெர்னார்டா குடும்பம். பின்னர், கிராமத்தின் பிற பெண்களும் இந்த சேவையில் இணைய “லாஸ் பேட்ரோனாஸ்” குழு தொடங்கப்பட்டது.
அதிகாலையிலேயே சமைக்கத் தொடங்கி விடுகிறார்கள். அரிசி சாப்பாடு, பீன்ஸ், பிரெட், பழங்கள், மெக்சிகன் டார்டிலா ஆகியவற்றை இரண்டு கவர்களில் அடைத்து ஒன்றாக கட்டுகிறார்கள்.
தண்ணீர் போத்தல்களை கயிற்றைக் கொண்டு கட்டி விடுகிறார்கள்.
ஒரு நாளைக்கு இரண்டு ரயில்கள். காலை 11 மணி அளவில் ஒன்று, மாலை ஆறு மணி அளவில் ஒன்று.
ரயில் வரும் சத்தம் கேட்டதும், உணவுப் பொட்டலங்களைக் கூடையில் அடுக்கி, தண்டவாளத்தின் ஓரத்தில் வரிசையாக நிற்கிறார்கள்.
ரயில் கடக்கும் நேரத்தில் உணவுப் பொட்டலங்களை வழங்குகிறார்கள். யாரையும் எதிர்பார்க்காமல் அந்தக் கிராமத்து பெண்களே மொத்த வேலைகளையும் செய்கிறார்கள்.
இவர்களின் இந்த சேவை ஆவணப்படமாகவும் எடுக்கப்பட்டிருக்கிறது. அதில் ஜூலியா என்ற பெண் தான் எப்படி இந்தக் குழுவில் இணைந்தேன் என்பதை விளக்கியுள்ளார்.
ஜூலியாவின் வீடு ரயில் தண்டவாளத்தை ஒட்டி இருந்தது. தன் வீட்டை ஒட்டி இது போன்ற விஷயங்கள் நடப்பது அவருக்கு ஆரம்பத்தில் பிடிக்கவில்லை.
ஒரு நாள் சிக்னல் கிடைக்காமல் ரயில் நின்றது. ஒரு 12 வயது பையன் அவன்… கதவைத் தட்டினான். குளிரில் நடுங்கியபடி இருந்தான். அவன் உடல்… எலும்பிற்கு போர்வைப் போர்த்தியது போன்றிருந்தது. ‘பசிக்கிறது… சாப்பிட ஏதாவது தாருங்கள்’ என்று கெஞ்சினான். நாய்க்கு வைத்திருந்த சாப்பாட்டை வெறுப்புடன் கொடுத்தேன். கண்ணீரோடு அதை அவ்வளவு அவசரமாகவும், ருசித்தும் சாப்பிட்டான். கிளம்பும் போது… என் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு. நீங்கள் என் அம்மாவிற்கும் மேல் என்று சொன்னபடியே அந்த இருட்டில் மறைந்து போனான்.
இந்த சேவையின் உன்னதத்தை அப்போது தான் உணர்ந்தேன். என்று உணர்ச்சி மேலோங்க சொல்கிறார்.
ரயில் போகும் வேகத்தில் உணவு கொடுக்கும் போது கைகளில் பலமாக அடிபடும். சமயங்களில் பொருளாதார பிரச்சினைகள் ஏற்படும்.
சட்டவிரோதமாக செல்லும் அகதிகளுக்கு உதவுவதற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வந்தன. அனைத்தையும் ஒற்றுமையாக இருந்து எதிர்த்து, கடந்து வந்திருக்கின்றனர் இந்தப் பெண்கள்.
எந்த விடுமுறை நாட்களிலும் இவர்களின் சேவை தடைபடுவதில்லை. பசிக்கு விடுமுறையில்லையே?
இந்த வழியாகப் போகும் சரக்கு ரயில்களை செல்லமாக “பீஸ்ட்” என்றழைக்கிறார்கள். ஆம், அது உண்மையிலேயே அரக்கன் தான்.
இரவு, பகல் கடந்து, குளிர், மழையில் நனைந்து, தூக்கம் தொலைத்து பயணிக்கும் எத்தனையோ அகதிகள் தவறி விழுந்து இறந்திருக்கின்றனர்.
சாதாரணமாக ஒரு நாளைக்கு 300 சாப்பாட்டு பொட்டலங்களை வழங்குகின்றனர் இந்தப் பெண்கள் குழுவினர்.
2005 – 2009 காலகட்டங்களில் புலம்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அந்த சமயங்களில் 800 சாப்பாட்டு பொட்டலங்கள் வரைக் கொடுத்திருக்கிறார்கள்.
சட்டங்கள் கடுமையாக்கப்பட்டதால், பலரும் இப்போது நடந்து வரவும் தொடங்கியிருக்கிறார்கள். அப்படி வருபவர்களுக்கு சில நாட்கள் ஓய்வெடுப்பதற்கு ஒரு விடுதியையும் இவர்களே சேர்ந்து கட்டியுள்ளனர். மேலும், அவர்களுக்கான மருத்துவ வசதிகளை செய்து கொடுக்கிறார்கள்.
ஹண்டுரஸில் இருந்து பயணம் செய்த 14 வயது சிறுவன் அல்ப்ரெடோ (Alfredo) ரயில் கூரையில் உட்கார்ந்து பயணிக்கும் போது, வழுக்கி கீழே விழுந்துவிட்டான். அவனின் ஒரு கையும், காலும் பிய்ந்து போனது. அவனுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை செய்து கொடுத்தார்கள் லாஸ் பெட்ரோனாஸ்.
“எனக்கு அப்பா இல்லை. அம்மா ரொம்ப கஷ்டப்படுறாங்க. அவங்கள நல்லா வச்சு பார்த்துக்கணுங்குறதுக்காகத் தான் அமெரிக்காவுக்கு கிளம்பினேன். இப்ப என்ன செய்றதுன்னு தெரில… நடந்தாவது போயிடலாம்னு பார்த்தா… காலும் இல்ல… என் அம்மா பாவம். நான் அவங்களவிட்டு வந்திருக்கக் கூடாது…” என்று சொல்லி அழுகிறான்.
ஆதரவற்ற அவனுக்கு ஆறுதலாய் அவனை சுற்றி நிற்கிறார்கள் அந்தப் பெண்கள். இதைப் பார்த்தபடி அருகில் நிற்கும் அல்ப்ரெடோவின் அண்ணன்…” என் தம்பியோட உயிர காப்பாத்திக் கொடுத்திட்டாங்க. இவங்க நிச்சயம் சொர்க்கத்துலருந்து வந்த தேவதைங்க தான்…” என்று கண்ணீரோடு சொல்கிறான்.
அழுக்குப் படிந்த தன் சட்டையைக் கொண்டு கண்ணீரைத் துடைத்துக் கொள்கிறான். ஆம்… ஒருவேளை தேவதைகள் இப்படித் தான் இருக்கக் கூடும்.
லிபியாவின் பயணிகள் விமானம் ஒன்று 118 பயணிகளுடன் பலவந்ததமாக தரையிறக்கப்பட்டுள்ளது. குறித்த விமானம் மோல்டா பகுதியில் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை ´விமானக் கடத்தல் நிலைமைக்கு சாத்தியமான´ விடயம் என மோல்டாவின் பிரதமர் அறிவித்துள்ளார்.
குறித்த ஏ320 ஏயாபஸ் லிபியாவிற்குள் அப்ரிகியா விமான நிறுவனத்தின் கீழ் சேவையில் ஈடுபட்டு வருவதாக உள்ளுர் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இந்த சம்பவத்துடன் இரண்டு கடத்தல்காரர்கள் தொடர்புபட்டுள்ள நிலையில், விமானத்தில் குண்டு இருப்பதாக வதந்தியை பரப்பியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், பாதுகாப்புத் தரப்பினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மோல்டா பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தை அடுத்து மோல்டா வானூர்தி நிலையத்திற்கு சட்டவிரோத குறுக்கீடு ஏற்பட்டுள்ளதாக மோல்டா சர்வதேச விமான நிலையம் தமது டூவிட்டர் தளத்தில் செய்தி வௌியிட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் பாரிய வீழ்ச்சி எற்பட்டுள்ளதாக வவுனியா வளிமண்டல அவதானிப்பாளர் தாமோதரம் சதானந்தம் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் கடந்த 2015ம் ஆண்டு காலப்பகுதியில் 1795.7 மில்லிமீற்றர் பதிவாகியள்ளதாகவும் 2016 இவ்வருடம் ஜனவரியிலிருந்து டிசம்பர் 22.12.2016 வரையான காலப்பகுதியில் 1114.5 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாகவும் இதனடிப்படையில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் மழை வீழ்ச்சியில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் இவ்வருடத்தில் அதிகூடிய வெப்பநிலை ஏப்ரல் மாதம் 31.4 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளதுடன் மற்றும் இவ் வருடத்தில் அதிகூடிய மழைவீழச்சி மே மாதம் 477.4 மில்லி மீற்றர் வரை பதிவாகியுள்ளது எனவும் மேலும் தெரிவித்தார்.