முதன்முறையாக காமா கதிர்களை வெளியிடும் நட்சத்திரம் நாசாவால் கண்டுபிடிப்பு!!

பால்வெளி அண்ட பகுதியில் உள்ள விண்மீன் கூட்டங்களில் ஒரு நட்சத்திரம் காமா கதிர்களை (Gamma ray) முதன்முறையாக வெளியிடுவதாக நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

நாசாவின் பெர்மி காமா கதிர் ஸ்பேஸ் டெலஸ்கோப் நடத்திய ஆய்வில் நட்சத்திரம் ஒன்று காமா கதிர்களை வெளியிடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த காமா கதிர்களுக்கு LMC P3 எனப் பெயரிட்டுள்ளனர் மேலும் கதிர்களை வெளியிடும் நட்சத்திரம் பூமியிலிருந்து 163000 ஒளியாண்டு தூரத்தில் காணப்படுவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

வட்ட வடிவில் அதிக ஆற்றல் கொண்ட ஒளியினை இந்த நட்சத்திரங்கள் வெளியிடுவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

காமா கதிர்களை வெளியிடுவதால் இது நியூட்ரான் நட்சத்திரம் என அழைக்கப்படுகிறது. இந்த நியூட்ரான் நட்சத்திரம் பூமியை வட்டமிட்டு வருகிறது. LMC ஐயும் P3 நட்சத்திரத்தின் மேற்பரப்பில் 60,000 டிகிரி பரன்ஹீட் வெப்பத்தை உமிழ்வதாக நாசா தெரிவித்துள்ளது.

கரீனா கபூர் குழந்தைக்கு பெயர் சூட்டியதற்கு எதிர்ப்பு!!

நடிகை கரீனா கபூர் மகனுக்கு தைமூர் என்ற பெயர் சூட்டியதற்கு சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு வலுக்கிறது.

இந்தி நடிகை கரீனா கபூர் 2012 ஆம் ஆண்டு நடிகர் சயீப் அலிகானை திருமணம் செய்து கொண்டார். இந்த நட்சத்திர தம்பதிக்கு இரு தினங்களுக்கு முன்பு மும்பை வைத்தியசாலையில் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்துக்கு முன்பே தங்கள் குழந்தைக்கு சரித்திர காலத்தில் புகழ் பெற்ற ஒருவரின் பெயரை சூட்ட வேண்டும் என்று முடிவு செய்து இருந்தனர்.

ஆண் அல்லது பெண் குழந்தை பிறந்தால் என்ன பெயர் வைப்பது என்று பெயரையும் தேர்வு செய்து வைத்து இருந்தார்கள். இதனால் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்ததுமே அந்த குழந்தைக்கு உடனடியாக தைமூர் அலிகான் பட்டோடி என்று பெயர் சூட்டினார்கள். இந்த பெயர் தற்போது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.

இந்தியா மீது 14ம் நூற்றாண்டில் படையெடுத்து ஏராளமானோரை கொன்று குவித்த மங்கோலிய மன்னன் பெயரே தைமூர் என்பது ஆகும். இந்த பெயரை குழந்தைக்கு சூட்டியதால் கரீனா கபூருக்கு டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் எதிர்ப்புகள் கிளம்பி இருக்கிறது. அந்த பெயரை மாற்ற வேண்டும் என்றும் பலர் வற்புறுத்தி வருகிறார்கள்.

‘பாகிஸ்தான் ஏவுகணையின் பெயரும் கரீனா கபூர் குழந்தையின் பெயரும் ஒன்றுதான்’, என்றும் விமர்சித்து கருத்துகள் பதிவிட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் கரீனா கபூர் குழந்தை பெயரை விமர்சிப்பவர்களுக்கு அவரது உறவினரும் நடிகருமான ரிஷி கபூர் கண்டனம் தெரிவித்து உள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் ‘பெற்றோர்கள் அவர்களின் குழந்தைக்கு என்ன பெயர் சூட்டினால் மக்களுக்கு என்ன? அவரவர் வேலையை பாருங்கள். பெயர் சூட்டியதற்கும் உங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. பெயர் சூட்டுவது பெற்றோரின் விருப்பம்’ என்று கூறி இருக்கிறார்.

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லாவும் கரீனா கபூர்-சயீப் அலிகானுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். குழந்தை பெயர் சர்ச்சையாகி இருப்பது கரீனா கபூருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருப்பதாக நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். பெயரை மாற்றுவது குறித்து அவர் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

7 வயது தம்பியை துடி துடிக்க கொன்ற அண்ணன் : பின்னணி என்ன?

இந்தியாவில் அண்ணன் ஒருவன் தனது 7 வயது தம்பியை கிணற்றில் தள்ளி துடி துடிக்க கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்டம் பவானிப்பூர் கிராமத்திலே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது. இக்கொடூர செயலில் ஈடுபட்ட 22 வயதான அங்கிட் என்ற நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சம்பவத்தன்று வெளியே சென்ற அங்கிட் தம்பி ஆதித்யா வீடு திரும்பாததால் பெற்றோர் அவரை தேடி அலைந்துள்ளனர்.

இந்நிலையில் ஆதித்யா கிணற்றில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவம் குறித்து குடும்பத்தினரிடம் பொலிசார் நடத்திய விசாரணையில் அண்ணன் அங்கிட் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.

இதனையடுத்து பொலிசாருக்கு அங்கிட் மீது சந்தேகம் வர அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் தம்பியை இரண்டு பேருடன் சேர்ந்து கிணற்றில் தள்ளி கொன்றதை அங்கிட் ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும் குடும்ப சொத்து முழுவதையும் தானே கைப்பற்ற வேண்டும் என்பதற்காக அங்கிட் தன் தம்பியை கொன்றதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அங்கிட்டை கைது செய்துள்ள பொலிசார் தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனர்.

வவுனியாவில் பேருந்தில் மோதுண்டு ஒருவர் படுகாயம்!!

 
சேவை முடிந்து தரிப்பிடம் நோக்கிச் சென்ற தனியார் பேரூந்து ஒன்று நேற்று (24.12.2016) வவுனியா பத்தினியார் மகிழங்குளம் பகுதியில் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

இவ்விபத்தில் படுகாயமடைந்த மார்கண்டு திருச்செல்வம் (வயது 52) என்பவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறீரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசாவின் நத்தார் வாழ்த்துச் செய்தி!!

இப் பூவுலகில் வாழும் உயிர்களை பாவங்களில் இருந்து மீட்பதற்கான மீட்பராக, இறைதூதராக கன்னி மரியின் திருவயிற்றில் பிறந்து இந்த உலகிற்கு ஒளியூட்டிய ஜேசுபிரான் பிறப்பு தினமான நத்தார் பண்டிகையை கொண்டாடும் கிறிஸ்துவை பின்பற்றும் அனைத்து உறவுகளுக்கும் எனது இதயம் கனிந்த நத்தார் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெரும் மகிழ்வடைகின்றேன் என சிறீரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் ஒரு அரசியல் நிர்ணய சூழலை நெருங்கியுள்ள நிலையில் தமிழ் மக்கள் தங்களுக்கான சரியான அங்கீகாரங்களையும் அபிலாசைகளையும் பெற்று வாழக்கூடிய ஒரு அரசியல் அமைப்பை பெற்று சுதந்திரமாக தனித்துவத்துடன் வாழ வழிபிறக்க வேண்டுமெனவும், இவ்வருடம் ஏற்பட்டுள்ள ஏற்படப்போகின்ற கடும் வறட்சியிலும் பொருளாதார நெருக்கடிகளிலும் இருந்து எமது மக்கள் மீண்டுவர அருள் புரிய வேண்டுமென இந்நேரத்தில் அனைவரும் பிராத்திப்பதுடன், அனைத்து மதங்களும் போதிக்கின்ற அன்பு என்னும் உன்னத வழியில் சென்று இன மத பேதங்களை கடந்து வேற்றுமைகளில் ஒற்றுமை கண்டு ஒருவருக்கொருவர் அன்புசெலுத்தி குரோதங்களை மறந்து அனைவரும் இயேசுபிரானின் பிறப்பை அர்த்தப்படுத்த உறுதி எடுத்துக்கொள்வோம்.

வவுனியா தமிழ் யூனியன் இளைஞர் கழகத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபைத் தெரிவும்!!

 
தமிழ் யூனியன் இளைஞர் கழகத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் நேற்றையதினம் (24.12.2016) காலை 10.00 மணியளவில் யங் ஸ்டார் விளையாட்டு கழக வளாகத்தில் நடைபெற்றது.

புதிதாக நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டு எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டது.

இக்கூட்டத்திற்கு இளைஞர் சேவைகள் அதிகாரி அஜித் சந்திரசேன, வவுனியா மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகரன் கேசவன், தமிழ் யூனியன் இளைஞர் கழகத்தின் இளைஞர்கள் யுவதிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி நிகழ்வு!!

 
வவுனியாவில் நேற்று (24.12.2016) காலை 10.30 மணியளவில் நகரசபை மண்டபத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதாவிற்கு மாவட்ட மட்டத்திலான அஞ்சலி நிகழ்வு மேழிக்குமரன் தலைமையில் இடம் பெற்றது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் நினைவுரைகளும் கலந்து கொண்டவர்களினால் நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறப்பினர் சிவசக்தி ஆனந்தன்,வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் வவுனியா மாவட்ட பொது அமைப்புக்கள், சமூக ஆர்வலர்கள் கலைஞர்கள், சிவில் அமைப்பின் பிரதிநிதிகள், பொது மக்கள் என நூற்றுக்கு மேற்பட்ட பலரும் கலந்து கொண்டனர்.

கின்னஸ் சாதனைக்காக உருவாக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரம் வெற்றிகரமாக திறந்து வைப்பு!!

கின்னஸ் சாதனைக்கென உருவாக்கப்பட்ட உலகின் உயரமான கிறிஸ்மஸ் மரம் வெற்றிகரமாக திறந்துவைக்கப்பட்டது.

நள்ளிரவு 12 மணியளவில் குறித்த கிறிஸ்மஸ் மரம் துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அலுவல்கள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவினால் திறந்து வைக்கப்பட்டது.

நாடெங்கிலும் இருந்து வருகை தந்துள்ள பெருந்திரளான மக்கள் கிறிஸ்மஸ் மரத்தை பார்ப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவின் ஏற்பாட்டில் தனியார் நிதியீட்டில் அமைக்கப்பட்டஉலகின் உயரமான கிறிஸ்மஸ் மர நிர்மாணத்தின் அதிக செலவை கருத்திற்கொண்டு கர்தினாலின் கோரிக்கைக்கு இணங்க நிர்மாணப்பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இதன் காரணமாக உரிய நேரத்துக்குள் நிர்மாணப் பணிகளை முடிக்க முடியாத நிலை உருவானது.

எனினும் தென்சீனாவில் ஏற்கனவே அமைக்கப்பட்ட செயற்கை கிறிஸ்மஸ் மரத்தின் சாதனையை முறியடிக்கும் வகையில், 57 மீற்றர்(187 அடி) அளவான மரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கை இந்த மரத்தை கின்னஸ் சாதனையில் சேர்க்குமாறு கோரிக்கை விடுக்கவுள்ளது.

இந்த மரத்தில் சுமார் 60ஆயிரம் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. 6 அடி உயரமான நத்தார் தாத்தா உருவமும் இந்த மரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இன்னமும் குறித்த கிறிஸ்மஸ் மரம் கின்னஸ் சாதனை மரமாக அங்கீகரிக்கப்படவில்லை.

அரசாங்கத்தால் அங்கீகாரம் வழங்கப்பட்டு. கின்னஸ் சாதனை குழுவால் தணிக்கைப் படுத்தப்பட்டதன் பின்பே குறித்த மரம் கின்னஸ் சாதனை மரமாக ஏற்றுக் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மகன்களை துடிக்க துடிக்க தாக்கிய பாசக்கார தாய் : பதற வைக்கும் காரணம்!!

அமெரிக்காவில் தாய் ஒருவர் தனது இரண்டு மகன்களை கொடூரமாக தாக்கியுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Indianapolis, Greenfield பகுதியை சேர்ந்த 36 வயதான Sascha Collins என்ற பெண்ணே இக்கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட 7 மற்றும் 9 வயது சிறுவன்கள் பொலிசில் அளித்த தகவலின் படி, Sascha Collins குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் பரிசு வாங்கி அதை மறைத்து வைத்திருந்துள்ளார். இதை அறிந்த இரண்டு மகன்கள், தாயிக்கு தெரியாமல் பரிசை திறந்து பார்த்துள்ளனர்.

இதை தெரிந்துக்கொண்ட தாய் Sascha Collins, இருவரையும் பெல்ட்டால் அடித்து அறையின் சுவரில் தூக்கி வீசியுள்ளார். சகோதரர்களின் உடலில் காயத்தை கண்ட இளம் சகோதரி உடனே அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார்.

குழந்தைகளை தாக்கிய குற்றத்திற்காக Sascha Collinsஐ கைது செய்த பொலிசார், அவர் மீது வழக்கு பதிவு செய்து காவலில் வைத்துள்ளனர். ஏற்கனவே Sascha Collins மீது இரண்டு வழக்குகள் உள்ளதால், அவர் குற்றவாளி என நிரூபணமானால் 12 ஆண்டு சிறை தண்டனை சந்திக்க கூடும் என கூறப்படுகிறது.

பெண்ணை கொன்று பிணத்துடன் உறவுக் கொண்ட இளைஞன் : உறைய வைக்கும் காரணம்!!

அமெரிக்காவில் இளைஞன் ஒருவன் காதலியின் உறவினர் பெண்ணை கொன்று பிணத்துடன் உறவுக் கொண்டுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது.

புளோரிடா மாநிலத்திலே இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. நான்கு குழந்தைகளின் தாயை கொன்ற 21 வயதான Christopher Snows என்ற இளைஞனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அவனிடம் நடத்திய விசாரணையில், ஒரு கொலை அனுபவம் எப்படி இருக்கும் என்பதை உணரவே இச்செயலில் ஈடுபட்டதாக கூறி அதிர வைத்துள்ளார்.

சம்பவத்தன்று Snows, காதலியின் உறவினரான Suarez என்ற பெண்ணின் குடியிருப்பிற்கு சென்றுள்ளார். அவர் அத்துமீறி நடக்க Suarez அதிரடியாக தடுத்துள்ளார்.

இதனால் கோபமடைந்த Snows தனது காரிலிருந்த துப்பாக்கியை எடுத்து Suarezக்கு பின்னால் சுட்டுள்ளார். பின்னர், உடலை சமையலறைக்கு இழுத்துச் சென்று உறவில் ஈடுபட்டு தப்பிச்சென்றுள்ளார்.

தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்ட பொலிசார், காணாமல் போன Suarezயின் போனை அருகிலுள்ள தேவாலய சாலையில் கண்டுபிடித்துள்ளனர்.

தப்பிச்செல்லும் போது Snows தேவாலய சாலை ஓரத்தில் இரத்தத்துடன் போனை வீசி விட்டு சென்றதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

போனில் சம்பவத்திற்கு முன் இருவரும் எடுத்து புகைப்படங்கள் ஆதாரமாக இருந்துள்ளது. இதை வைத்து விசாரணை மேற்கொண்ட பொலிசார் குற்றவாளி Snowsவை கைது செய்துள்ளனர்.

தந்தையின் சடலத்தை தோளில் சுமந்து சென்ற மகன் : காரணம் இதுதான்!!

ஒடிசாவில் அம்புலன்ஸ் வசதி இல்லாததால் இறந்த தந்தையின் சடலத்தை மகன் தோளில் சுமந்து சென்ற செல்ல வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

சரியான அம்புலன்ஸ் வசதி இல்லாத காரணத்தால் ஒடிசாவில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. தற்போது அங்கு மேலும் ஒரு சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொதசகி எனும் கிராமத்தை சேர்ந்த சரத் பாரிக் என்பவரின் தந்தை உடல் நலக்குறைவு காரணமாக கிராம சுகாதார மையத்தில் இறந்துள்ளார்.

இந்த நிலையில் மருத்துவமனையில் அம்புலன்ஸ் வசதி இல்லாததால் கொதசகி தன் தந்தையின் சடலத்தை ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு தன் தோளில் தூக்கி சென்றுள்ளார்.

சாலையில் சடலத்தை தூக்கி சென்ற அவருக்கு இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் உதவி செய்து அவரது தந்தையை வீட்டில் கொண்டு சேர்த்துள்ளார்.

இறந்தவர்களின் உடலை கொண்டு செல்வதற்கு மருத்துவமனையில் எந்த வசதியும் இல்லாததால் இது போன்று நடந்திருப்பதாக அம்மருத்துவமனை மருத்துவர் அஜித் தாஸ் கூறியுள்ளார்.

இருப்பினும் இந்த சம்பவம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்துள்ளார்.

சரத் பாரிக் தந்தையின் உடல் இறந்து பல மணி நேரத்திற்கும் மேலாக அங்கு வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

போலித் துப்பாக்கியால் கடத்தப்பட்ட லிபியா விமானம் : விசாரணையில் அம்பலம்!!

கடத்தப்பட்ட லிபிய விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக மால்டா பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

கடத்தலை மேற்கொண்ட இரண்டு நபர்களும் பொலிஸாரிடம் சரணடைந்ததாக மால்டா பிரதமர் ஜோஸப் மஸ்கட் தெரிவித்தார்.

விமானத்தை கடத்த பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு மற்றும் துப்பாக்கியை பொலிஸார் கைப்பற்றினர்.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் விமானத்தை கடத்த பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த கடத்தல் சம்பவத்தை மேற்கொண்ட இருவரும் லிபியாவின் முன்னாள் தலைவர் கர்னல் கடாபியின் ஆதரவாளர்கள் என தெரியவந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆட்கொல்லி வீதியாக மாறியுள்ள ஏ9 : வடக்கு மக்களின் கவனத்திற்கு!!

நடப்பாண்டில் கண்டி, யாழ்ப்பாணத்துக்கு இடையிலான ஏ9 வீதியிலேயே அதிகளவான வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த வீதியில் இடம்பெற்ற விபத்துக்களினால் மாத்திரம் 117 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதில் அண்மையில் சாவகச்சேரி, சங்கத்தானைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தும் உள்ளடங்குகின்றது.

குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களுக்குட்பட்ட ஏ-9 பாதையிலேயே அதிகளவிலான விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாலும், மதுபோதையில் வாகனங்களைச் செலுத்தியதாலுமே இவ்வாறான விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் பொலிஸ் மீது அசிட் வீச்சு : பயந்து ஒதுங்கிய மக்கள்!!

தமிழகத்தில் பெண் பொலிஸ் மீது அசிட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் நகரத்திலே இக்கொடூர தாக்குதல் அரங்கேறியுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் லாவண்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவத்தன்று பணி முடிந்து இரவு லாவண்யா வீட்டுக்கு செல்லும் வழியில் மர்ம நபர் ஒருவர் அவர் மீது அசிட் வீசி விட்டு தப்பி ஓடியுள்ளார்.

வலியால் அலறி துடித்த லாவண்யாவை பார்த்து பொதுமக்கள் பயந்து ஒதுங்கியுள்ளனர். பின்னர், அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். தற்போது லாவண்யாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அசிட் வீசிய நபர் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை

பொலிசார் குற்றவாளியை தீவிரமாக தேடி வரும் நிலையில் இச்சம்பவம் அப்பகுதியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் தேங்கிக்கிடக்கும் குப்பைகளால் பாதிப்பை எதிர்நோக்கும் மக்கள்!!

 
வவுனியா நகரசபை எல்லைக்குட்பட்ட தாண்டிக்குளத்தில் இருந்து சாஸ்திரிகூழாங்குளம் செல்லும் வீதியோரத்தில் கழிவுகள், குப்பைகள் கொட்டப்பட்டுள்ளமையால் போக்குவரத்து செய்பவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வீதியில் காணப்படும் நீர் பாய்ந்து ஓடும் பகுதியில் வீட்டு கழிவுகள், குப்பைகள் கொட்டப்பட்டு அவை குப்பை மேடாக காணப்படுவதாக கூறப்படுகின்றது.

இந்த பகுதியில் கழிவுகள் நிரம்பி காணப்படுவதால் துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளதுடன் அவை காற்று மற்றும் விலங்குகளால் அருகில் உள்ள மக்கள் குடியிருப்புகளுக்குள் எடுத்துச் செல்லப்படுவதாக தெரிய வந்துள்ளது.

இதனால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக மக்கள் அறிவித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் வவுனியா நகரசபை உடனடியாக கவனம் செலுத்தி அந்த பகுதியை இயல்பு நிலைக்கு கொண்டு வர உதவ வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்புக்கு இணையாக யாழ்ப்பாணத்தில் உயரமான கட்டடம்!!

இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ள உலகின் உயரமாக கட்டடம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.

World Capital Centre திட்டம் இந்த நாட்களில் அனைவரின் அவதானமும் செலுத்தப்பட்ட ஒரு திட்டமாக மாறியுள்ளது.

கொழும்பில் அமைக்க திட்டமிட்டுள்ள இந்த திட்டத்திற்காக 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி அடிக்கல் நாட்டப்படவுள்ளது.

117 மாடியிலான இந்த திட்டம் தெற்காசியாவில் நிர்மாணிக்கப்படுகின்ற உயரமான கட்டடமாக பெயரிடப்படவுள்ளது. இந்நிலையில் அது உலகின் மிக உயரமான கட்டடங்களில் 9வது இடத்தை பிடிக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தன.

இந்த கட்டடம் 625 மீட்டர் என இதற்கு முன்னர் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தன. எப்படியிருப்பினும் தற்போது இந்த கட்டடம் தொடர்பில் மேலும் சில புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த திட்டத்தை அல் அமான் குழு என்ற நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்படுகின்றது. இது மத்திய கிழக்கு நிறுவனம் ஒன்றினை போன்றே தெரிகின்ற நிலையில் அல் அமான் குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் 2001ஆம் ஆண்டு இலங்கையில் இணைந்துக் கொண்ட சர்வதேச வர்த்தன நிறுவனமாகும். அதன் துணைக்களை தற்போது வரையில் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் நிறுவப்பட்டுள்ளது.

கொழும்பு நகரத்தினுள் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த பாரிய கட்டடத்திற்குள் சொகுசு வீடுகள், கண்காட்சிசாலைகள், வங்கிகள், கல்வி நிறுவனங்கள், மாநாட்டு மண்டபங்கள், பொழுதுபோக்கு இடங்கள்,

5 நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் பொருளாதார மையத்திற்கான போன்றவைகளுக்காக அனைத்து விடங்களும் உள்ளடக்கப்பட்டிருக்கும். 2020ஆம் ஆண்டில் இந்த திட்டத்தை நிறைவு செய்வதற்கு அல் அமான் குழு திட்டமிட்டுள்ளது.

World Capital Centre திட்டத்திற்கு மேலதிகமாக மேலும் பாரிய வர்த்தகங்கள் இரண்டிற்கு அல் அமான் குழு திட்டமிட்டுள்ளது. இவற்றில் ஒன்று வடகொழும்பு கடற்கரைக்கு அருகில் நிர்மாணிக்கப்படுகின்ற Aman 101 – Royal Empire திட்டமாகும்.

101 மாடியிலான இந்த திட்டத்தில் பொழுது போக்கு மையங்கள், சொகுசு மாடி வீடுகள், கடைகள் ஆகியவைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அல் அமான் குழுவினால் செயற்படுத்தப்படவுள்ள மற்றைய திட்டம் யாழ். குடாநாட்டின் மண்டைதீவில் நிர்மாணிக்க திட்டமிட்டுள்ள Aman Royal Island திட்டமாகும்.

அங்கு 5 நட்சத்திர ஹோட்டல் மற்றும் தங்குமிட வசதிகளை கொண்ட சூழல் ஒன்று உருவாக்கப்படவுள்ளது. 37 மாடியிலான இந்த திட்டத்திற்கு மண்டைதீவில் 33 ஹெக்டேர் பயன்படுத்தப்படவுள்ளது.

இந்த கட்டடத்தொகுதியில் விடேச அம்சங்களாக Tower Hotel building, Apartment Complex, Water Park, Water Sports 9 hole Golf course ஆகியவைகள் உள்ளடக்கப்படவுள்ளது.