வவுனியா ஓமந்தை பொலிசாரினால் சமுதாய பொலிஸ் திட்டம்!!

 
பொலிஸ்மா அதிபர் பூசித ஜயசுந்தர அவர்களின் திட்டத்தின் கீழ் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் வழிகாட்டலில் கிராமம் தோறும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நாற்பது நாள் வேலைத்திட்டத்தின் இறுதிநாளான நேற்று (10.12.2016) ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கதிரவேலர் பூவரசங்குளம் கிராமத்தில் சமுதாய பொலிஸ் திட்டம் சிறப்பான முறையில் நடைபெற்றது.

ஓமந்தை பொலிஸ் அதிகாரி இந்திக்க சுரேஷ் அன்ரனிஷ்தசில்வா தலைமையில் இடம்பெற்ற இன் நிகழ்வில் ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 40 நாள் செயற்திட்டத்தின் இறுதி நாளை கொண்டாடியதுடன் மக்களுக்கும் பொலிசாருக்கும் இடையிலான ஒற்றுமையை பேணும் முகமாகவே இன் நிகழ்வு நடைபெற்றதுடன் பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான போட்டியில் பங்கு பற்றி வெற்றி ஈட்டியவர்ளுக்கான பரிசுப் பொருட்கள், கற்பிணிப் பெண்களுக்கான போசாக்கு பொருட்கள் போன்றன வழங்கப்பட்டன.

இன் நிகழ்வில் வன்னி பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமார, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் வெல்கம, வவுனியா மாவட்ட பிரதேச செயலாளர் கா.உதயராசா, ஓமந்தை பிரதேசத்துக்குட்பட்ட கிராம சேவகர்கள், மதகுருமார்கள், ஓமந்தை பிரதேச வைத்திய அதிகாரி செ.மதுரகன், பாடசாலை மாணவர்கள், கிராம மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியாவில் மருத்துவச்சான்றிதழ் பெறும் அலுவலகம் சனிக்கிழமையிலும் திறந்திருக்கும்!!

 
வவுனியா மாவட்ட செயலகத்திலுள்ள சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு மருத்துவச்சான்றிதழ் பெற்றுக்கொள்ளும் அலுவலகம் பிரதி சனிக்கிழமைகளிலும் திறந்திருக்கும்.

2017ம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் ஓட்டினால் ரூபா 25000 தண்டம் அறவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதையடுத்து பெருமளவான இளைஞர் யுவதிகள் முண்டியடித்தக்கொண்டு சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு காத்திருப்பதைக்காணக்கூடியதாக இருந்தது.

வவுனியாவில் சுதந்திரப்பயணம் மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு!!

 
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு பாரபட்சமற்ற தேசத்தைக்கட்டியெழுப்பும் நோக்கில் வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் இறுதி நிகழ்வு நேற்று (10.12.2016) காலை 10.00 மணியளவில் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தில் இடம்பெற்றது.

அன்பிற்கும் நட்பிற்குமான அமைப்பின் உறுப்பினர் சிவராசா பிரதீப் தலைமையில் இடம்பெற்றது இந்நிகழ்வில் பெருமளவான இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டனர்.

வேகக் கட்டுப்பாட்டை இழந்து பாரிய பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளான பேரூந்து!!

 
கொழும்பிலிருந்து மன்னார் நோக்கிப் பயணித்த தனியார் பேரூந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து மதவாச்சி மன்னார் வீதியில் பாரிய பள்ளத்தில் சாய்ந்தது.

இவ் விபத்தில் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

-கீதன்-

இணைய பயன்பாட்டாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

அடுத்தாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக இணைய சேவைக்கான வரி மீண்டும் குறைக்கப்படும் என பிரதி அமைச்சர் பேராசியரியர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இடம்பெற்ற தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பாடல், டிஜிட்டல் தொழில்நுட்பம் தொடர்பான அமைச்சுக்கான குழுநிலை விவாதத்தின் போதே பிரதி அமைச்சர் இந்தத் தகவல்களை குறிப்பிட்டுள்ளார்.

இந்த தீர்மானம் தொடர்பில் நிதி அமைச்சினால் அவதானம் செலுத்தப்படும் என பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று நாட்டின் மத்திய மலைநாட்டின் விவசாயிகள் முதல் அனைத்து தரப்பினரும் தங்களின் செயற்பாட்டினை வேகப்படுத்திக் கொள்வதற்காக இணையத்தள வசதிகளை பெற்றுக் கொள்கின்றார்கள்.

இன்னும் ஒரு பக்கத்தில் இணையத்தளத்தின் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை அதிகரித்துக் கொள்வதற்கு தீர்மானித்துள்ள நிலையில் இணையத்தளத்திற்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதனை என்னால் தனிப்பட்ட ரீதியில் ஏற்றுக் கொள்ள முடியாது.

இந்த வரியினை குறுகிய காலத்திற்கு மாத்திரமே நிதி அமைச்சர் அதிகரித்திருப்பார் என நான் நம்புகின்றேன்.

வெகு விரைவில் அந்த வரி குறைக்கப்படும் என நான் எதிர்பார்க்கின்றேன் என்பதனை இங்கு கூறிக் கொள்கின்றேன் என பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் கால்கள் அகற்றப்பட்டதா : வைரலாகும் காணொளி!!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெ.ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் பல்வேறு மர்மங்கள் நீடித்துள்ளன.

கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி திடீர் உடல்நல குறைவு காரணமாக சென்னை அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா கடந்த 5ஆம் திகதி உயிரிழந்தார்.

இந்நிலையில் ஜெயலலிதா உயிரிழந்ததை தொடர்ந்து, அவரின் மரணம் குறித்து இன்று வரையிலும் பல்வேறு மர்மங்கள் நீடித்துகொண்டிருக்கின்றன.

குறிப்பாக ஜெயலலிதாவின் உயிரிழப்புக்கு அவரின் நெருங்கிய தோழியான சசிகலாவே காரணம் எனவும், அவர் மூளைச்சாவு அடைந்துள்ளார், அவரின் கால்கள் அகற்றப்பட்டுள்ளன என தெரிவித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், இதற்கு வைத்தியசாலை உள்ளிட்ட தரப்புகள் மறுப்பு வெளியிட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஜெயலலிதாவின் முகத்தில் காணப்பட்ட புள்ளிகளும் பெரும் சர்சையை ஏற்படுத்தியிருந்தன.

இந்நிலையில் தற்போது ஜெயலலிதாவின் இறுதி சடங்கின் போது எடுக்கப்பட்ட காணொளி ஒன்றில், அவரின் கால்கள் அகற்றப்பட்டுள்ளது போன்று இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்த காணொளி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

சவுதிக்கு பணிப்பெண்ணாக சென்ற இலங்கையருக்கு நேர்ந்த கதி!!

சவுதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக சென்ற இலங்கை பெண் எந்த சம்பளமும் இன்றி மீண்டும் நேற்று நாடு திரும்பியுள்ளார்.

மஸ்கெலியா பகுதியை சேர்ந்த 40 வயதுடைய மூன்று குழந்தைகளின் தாய் ஒருவரே, இரண்டு வருடமாக சவுதி அரேபியாவில் வேலை செய்து இவ்வாறு மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.

குறித்த பெண் தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் உள்ள முகவர் ஒருவரின் மூலமாக 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி பணிப்பெண்னாக வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளார்.

குறித்த முகவர் அந்த பெண்ணை வெளிநாட்டிற்கு அனுப்பும் போது 35 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கியே அனுப்பி வைத்துள்ளார்

வெளிநாடு சென்ற பெண்ணின் பிள்ளைகளில் மூத்த மகள் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் கல்வி பயில்கின்றார் என்றும் குறித்த பெண்ணின் தாயின் பாதுகாப்பின் கீழ் குழந்தைகள் மூன்றும் வளர்ந்து வந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பெண் தொடர்பில் எவ்வித தகவல்களும் அறியாமல் தனது உறவினர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு சென்று முறைப்பாடு செய்ததன் பின்னர் ரியாத் நகரில் உள்ள தூதரகத்தின் அதிகாரிகள் அந்த நாட்டு பொலிஸாருடன் சென்று குறித்த வீட்டு உரிமையாளரை கைது செய்துள்ளனர்.

இரண்டு வருடமாக சவுதி அரேபியாவில் பணியாற்றிய குறித்த பெண்ணுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் : உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய கோரிக்கை!!

தமிழகத்தின் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் நிலவுவதால், அவரது உடலை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என பெங்களூரை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் வலியுறுத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக நரசிம்ம மூர்த்தி ‘தி இந்து’ விடம் கருத்து வெளியிடுகையில், கடந்த செப்டம்பர் மாதம் வரை நலமுடன் இருந்த ஜெயலலிதா திடீரென இரவில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

சாதாரண காய்ச்சல், நீர்ச்சத்து குறைப்பாடு, ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என முதலில் சொன்னார்கள். அடுத்த சில தினங்களில் வெளிநாட்டு மருத்துவர்களை வரவழைத்து சிகிச்சை அளித்தார்கள்.

அவரது உடலுக்கு என்ன பிரச்சினை என வெளிப்படையாக அறிவிக்காததால் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த 4 ஆம் திகதி இரவு திடீரென ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு என அப்பல்லோ மருத்துவமனை அறிவித்தது.

இதேவேளை 70 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்ததுடன் உடல்நிலை முற்றிலும் தேறிய‌ ஒருவருக்கு எப்படி திடீரென மாரடைப்பு வரும் என சந்தேகம் எழுந்தது.

கடந்த 5ஆம் திகதி அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

செல்வி ஜெயலலிதாவின் உடலை அவசர அவசரமாக மறுநாள் மாலையே அடக்கம் செய்துள்ள‌னர்.

மேலும் ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மக்கள் வெளி ஊர்களில் இருந்து வந்துகொண்டிருந்த நிலையில் உடனடியாக அடக்கம் செய்ய வேண்டிய அவசியம் என்ன?

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதால், அவரது உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும். நரசிம்ம மூர்த்தி எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரட்டைச் சதம் அடித்த விராட் கோஹ்லி!!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் பேட்டியில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார்.

இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி மும்பை வான்டே மைதானத்தில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 400 ஓட்டங்கள் எடுத்தது.

நேற்றைய 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 451 ஓட்டங்கள் குவித்தது. விராட் கோஹ்லி 147 ஓட்டங்களுடனும், ஜெயந்த் யாதவ் 30 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று தொடங்கிய 4ம் நாள் ஆட்டத்தில் விராட் கோஹ்லியும் ஜெயந்த்யாதவும் தொடர்ந்து விளையாடினார்கள்.

அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோஹ்லி 302 பந்துகளில் இரட்டை சதம் அடித்து அசத்தினார். 53வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 3வது இரட்டை சதமாகும்.

சொந்த மகளையே பட்டினி போட்டு கொன்ற பெற்றோர்!!

அமெரிக்காவில் தங்களது இளம்வயது மகளை பட்டினி போட்டு சித்திரவதை செய்து உயிரிழக்க காரணமான பெற்றோரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் குறித்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இங்குள்ள West Des Moines பகுதியில் குடியிருக்கும் Nicole Marie Finn (42) மற்றும் Joseph Michael Finn (42) ஆகியோரது 16 வயது மகள் நடாலி ஊட்டசத்து குறைபாடினால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் கடந்த அக்டோபர் மாதம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தை அடுத்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்ட பொலிசார் அதிர்ச்சி தரும் தகவலை வெளிக்கொண்டு வந்தனர்.

குறித்த பெற்றோர்கள் இருவரும் தங்களது மகள் நடாலியை இதுவரை பாடசாலையில் பதிவு செய்யவில்லை. மட்டுமல்ல ஒரே ஒரு உடையை மட்டுமே அவருக்கு உடுத்த அளித்துள்ளனர்.

பல நாட்கள் உணவு வழங்காமல் நடாலியை சித்திரவதைக்கு ஆளாக்கியுள்ளனர். நடாலி மட்டுமல்ல அவரது சகோதரர்கள் இருவரையும் குறித்த பெற்றோர் பட்டினி போட்டு சித்திரவதை செய்துள்ளனர்.

நடாலியுடன் சேத்து அவரது இரு சகோதரர்கலும் உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும், மனதளவிலும் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

காரணம் ஏதும் இன்றியே தங்களது சொந்த குழந்தைகளை அந்த நபர்கள் கொடூரமாக சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளனர். தேவையான உணவு, மருத்துவ சேவை என இதுவரை குறித்த குழந்தைகளுக்கு எதுவும் அளித்தது இல்லை என கூறப்படுகிறது.

5 மாதங்களுக்கு முன்னர் இவர்களின் அருகாமையில் வசிக்கும் ஒருவர், குழந்தைகளின் பரிதாப நிலை கண்டு பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார். குறித்த நாளில் நடாலி தமது சகோதரர்களுக்கு ஏதும் உணவிருந்தால் வழங்க முடியுமா என்று நடாலி விசாரித்துள்ளதாக அந்த அண்டை வீட்டார் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து குறித்த குழந்தைகளை மீட்ட பொலிசார் அவர்களை மருத்துவமனையில் சேர்ப்பித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் வைத்து மாரடைப்பு காரணமாக நடாலி உயிரிழந்ததை அடுத்து, குறித்த சம்பவத்தை கொலை குற்றமாக கருதி பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சவப்பெட்டியில் அடைக்கப்பட்ட பெண்ணின் உடலில் இருந்து வந்த ரத்தம் : அதிர்ச்சி சம்பவம்!!

சீனாவில் இன்னும் பல கிராமங்களில் ஒரு விசித்திர பழக்கம் இருந்து வருகிறது. அது தான் பேய் திருமணம். அதாவது ஒரு குடும்பத்தில் யாராவது திருமணம் செய்யாமல் இறந்து விட்டால் அவர் சடலத்துடன் ஏற்கனவே இறந்த எதிர் பாலினம் சடலத்தை அருகருகில் வைத்து எரிக்க வேண்டும்.

சீனாவின் கவுண்டியில் வசித்து வரும் Li என்பவர் குடும்பத்தில் ஒரு திருமணமாகாத ஆண் இறந்து விட்டார், அவருக்கு பேய் திருமணம் செய்ய £3,448 கொடுத்து Zhao Mei என்னும் பெண்ணின் சடலத்தை Li குடும்பத்தினர் வாங்கியுள்ளனர்.

சுடுகாட்டுக்கு இருவர் சடலத்தையும் எடுத்து சென்று சவப்பெட்டியில் அவர்கள் வைத்துள்ளனர். அப்போது சவப்பெட்டியிலிருந்து ஏதோ சத்தம் வர திறந்து பார்த்தால் Zhao Mei உயிருடன் மயக்க நிலையில் இருந்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த Li குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்தனர்.

பின்னர் சுடுகாடு ஊழியர்கள் இது பற்றி பொலிசுக்கு தகவல் கொடுக்க விரைந்து வந்த பொலிசார் Zhaoவை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அணுப்பி வைத்தனர்.

பின்னர் Li மற்றும் அவர் குடும்பத்தாரை கைது செய்த பொலிசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மனைவியை வெட்டி சூட்கேஸில் அடைத்த கணவன் : அதிர்ச்சிக் காரணம்!!

மும்பையில் தனது மனைவியை வெட்டி சூட்கேஸில் அடைத்து வீசிய கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மும்பையில் காண்டிவலி ரயில் நிலைய பகுதியில் கடந்த நவம்பர் 14 ஆம் திகதி உடல் வெட்டி கூறுபோட்டு சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கிடந்தது.

இதையறிந்த மும்பை கிரைம்பிரான்ச் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று பெண்ணின் உடலை கைப்பற்றி அது யாருடையது என அறிய சடலத்தின் கைரேகையை வைத்து ஆதார் கார்டு வழங்கும் மையத்தில் சோதனை செய்தனர். ஆனால் யார் என கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து, சமூக வலைதளங்கள், பத்திரிக்கைகளில் கொலைசெய்யப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டு யார் என்பதை அறிய முற்பட்டனர்.

இந்நிலையில், இந்த விளம்பரத்தை பார்த்த மும்பை போரிவாலி போய்சர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தகவல் அளித்துள்ளார்.

அதில், கொலை செய்யப்பட்டுள்ளது பிரியங்கா வர்மா(29) எனவும், பிரியங்கா வர்மா (29), அவரது கணவன் தினேஷ் வெர்மா (35) என்று கூறினார்.

இந்த தகவலைக் கொண்டு பொலிசார் விசாரனை மேற்கொண்டதில், பிரியங்கா வர்மா தனது கணவரை விட்டு வேறொருவருடன் தொடர்பில் இருந்ததாகவும், அதனால் அவரது கணவன் தினேஷ் வர்மா தனது நண்பர் கௌதமுடன் சேர்ந்து, கொலை செய்து விட்டு தனது குழந்தையுடன் தினேஷ் தலைமறைவாகி விட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, தினேஷ்,கெளதமை தேடிய பொலிசார் கெளதமை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கள்ளத்தொடர்பில் இருந்ததாக சந்தேகித்து, தினேஷின் மனைவி பிரியங்கா வர்மாவை கொள்ள கெளதம் மற்றும் புல்மாடியும் உதவியுள்ளனர். பிரியங்கா வர்மாவை கொலை செய்து சூட்கேசில் வைத்து மும்பை காண்டிவலி ரயில் நிலையத்தில் வீசினார் என கெளதம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து தப்பி ஓடிய தினேஷ் வர்மா மற்றும் புல்மாட்டியை பொலிசார் தேடிவருகின்றனர்.

பெற்ற குழந்தையை கால்வாயில் வீசிய கொடூரத் தாய்!!

காஞ்சிபுரம் அருகே அழகாக இல்லை என்பதால் பெற்ற குழந்தையை கால்வாயில் வீசிய தாயால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் வள்ளல் பச்சையப்பன் தெர் சந்து பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் (சமையல் உரிமையாளர்). இவரது மனைவி திலகவதி.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த திலகவதி கடந்த வியாழக்கிழமை ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

இந்நிலையில், குழந்தை பிறந்ததை கண்டு மகிழ்ச்சியடைவதற்கு மாறாக குழந்தையின் முகம் சரியில்லை என வருந்தியுள்ளார்.

இதனால், அழகாக இல்லாத குழந்தை வேண்டாமென்று முடிவெடுத்த திலகவதி மற்றும் அவரது கணவர் நடராஜன் இருவரும் சேர்ந்து தனது வீட்டிற்கு அருகில் செல்லும் மஞ்சள் நீர் கால்வாயில் குழந்தையை வீசியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று குழந்தையின் சடலம் கால்வாயில் மிதப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் பொலிசாரிடம் தகவல் கொடுத்துள்ளனர்.

தகவல் பெற்ற பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையின் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அப்போது, அப்பகுதி மக்கள் அனைவரும் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில் திலகவதி மட்டும் வெளியே வரவில்லை.

இதனால், சந்தேகித்த பொலிசார் திலகவதி வீட்டிற்கு சென்று கதவை தடியுள்ளனர். ஆனால் நீண்ட நேரமாகியும் திலகவதி கதவை திறக்காததால் கதவை உடைத்துக் கொண்டு பொலிசார் வீட்டின் உள்ளே சென்றனர்.

பொலிசாரைக் கண்ட திலகவதி கதறி அழுது குழந்தையை கால்வாயில் வீசி கொன்றதை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து, திலகவதியை பொலிசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மேலும், தலைமறைவாகியுள்ள திலகவதியின் கணவரை பொலிசார் தேடிவருகின்றனர்.

ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக மாறும் : விஞ்ஞானிகள் தெரிவிப்பு!!

பூமியில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் காரணமாக, இன்னும் 200 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமி, அதன் சுற்றுப்பாதை, விண்வெளி, சுற்றுச்சூழல் இவை தொடர்பாக சர்வதேச அளவில் விஞ்ஞானிகள் ஆய்வு நடந்தி வருகின்றனர்.

அதன் ஒரு கட்டமாக, கடந்த சில நூற்றாண்டுகளாகவே பூமி சுற்றும் அளவு இரண்டு மில்லி நொடிகள் அதிகரித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

தற்போது பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 மணித்தியாலங்களை எடுத்துக்கொள்கிறது. இந்நிலையில், இந்த இரண்டு மில்லி நொடிகள், இன்னும் 6.7 மில்லியன் ஆண்டுகளில் ஒரு நிமிடமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கணக்கின் அடிப்படையில், இன்னும் 200 மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர் இது ஒரு மணி நேரமாக மாறும் என கூறப்படுகிறது.
எனவே அப்போது ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்பது மாறி 25 மணி நேரமாக மாறக்கூடும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

கடந்த கால ஆய்வுகளின் அடிப்படையில், இங்கிலாந்து ஆய்வாளர்களால் இந்த புதிய ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இது மிகவும் மெதுவான நிகழ்வாக இருக்கும் என தங்களது ஆய்வில் தெரியவந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

500 கிலோ எடை கொண்ட எகிப்தியப் பெண்ணுக்கு இந்தியாவில் அறுவை சிகிச்சை!!

உலகின் அதிக எடை கொண்ட, எகிப்தைச் சேர்ந்த பெண், உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சைக்காக இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளார்.

36 வயதான எமான் அஹமத் அப் எல் ஆதி என்ற எகிப்திய பெண் 500 கிலோ எடை கொண்டவராக உள்ளார்.

மும்பையில் உள்ள உடல் பருமனைக் குறைக்கும் அறுவை சிகிச்சை மருத்துவரான (bariatric surgeon) முஃபாசல் லக்டாவாலா அவருக்கு சிகிச்சை அளிக்கவுள்ளார்.

எமான் அஹமத் அப் எல் ஆதி தனியாக எகிப்தில் இருந்து பயணம் செய்ய முடியாத காரணத்தால், கெய்ரோவில் உள்ள இந்திய தூதரகம் முதலில் அவருக்கு விசா கொடுக்க மறுத்தது.

மருத்துவர் முஃபாசல், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிற்கு ட்விட்டர் மூலம் தகவல் அளித்தார்.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சுஷ்மா ஸ்வராஜ் உடனடியாக பதில் தந்ததும், அந்த நிலை மாறியது.

அதிக உடல் எடை காரணமாக, கடந்த 25 ஆண்டுகளாக வீட்டில் இருந்து வெளியே வர முடியாமல் எமான் சிரமப்பட்டு வருகிறார்.

இதுவரை அதிக உடல் எடை கொண்ட பெண்ணாக கின்னஸ் சாதனை புத்தகப்படி நம்பப்படும் பாலின் பாட்டர் என்பவரின் எடை 292 கிலோ ஆகும்.

எமானின் மருத்துவ அறிக்கை மற்றும் புகைப்படங்களைப் பார்க்கும் போது, அவரின் எடை குறைந்த பட்சமாக 450 கிலோவாக இருக்கும் என்று தான் நம்புவதாக மருத்துவர் முஃபாசல் பிபிசி க்கு தெரிவித்துள்ளார்.
மருத்துவர் முஃபாசல், இந்தியாவின் மத்திய அரசு அமைச்சர்களான நிதின் கட்கரி மற்றும் வெங்கய்ய நாயுடு ஆகியோருக்கு உடல் எடைக்குறைப்பு அறுவை சிகிச்சை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் மகளின் கோரிக்கை ஏற்பு : சிறந்த சண்டை காட்சிக்கும் இனி தேசிய விருது!!

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனுஷின் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு அடுத்த ஆண்டில் இருந்து சிறந்த சண்டை காட்சிக்கும் தேசிய விருது வழங்க தீர்மானித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா தனுஷ், சினிமா இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், இருந்து வருகிறார். சினிமா துறையில் சண்டை காட்சிகளை அமைத்த கலைஞர்களைப் பற்றிய திரைப்படம் ஒன்றை அவர் உருவாக்கி வருகிறார்.

சண்டைக்காட்சி நடிகர்கள் சங்கத்தின் 50வது ஆண்டை பெருமைப்படுத்தும் வகையில் ‘சினிமா வீரன்’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்துக்கு குரல் கொடுக்க ரஜினிகாந்த் சம்மதித்துள்ளதாக முன்னர் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், கடந்த ஒக்டோபர் மாதம் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி வெங்கய்யா நாயுடுவை சந்தித்த ஐஸ்வர்யா தனுஷ், இந்திய சினிமாவுக்கான தேசிய விருதுகள் வழங்கும் பட்டியலில் ஸ்டண்ட் காட்சி இயக்குனர்களும் கவுரவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக பரிசீலித்த மத்திய மந்திரி வெங்கய்யா நாயுடு அடுத்த ஆண்டு நடைபெறும் 64வது தேசிய விருது வழங்கும் விழாவில் சிறப்பான வகையில் சண்டை காட்சிகளை அமைக்கும் ஸ்டன்ட் மாஸ்டருக்கு தேசிய விருது அளிக்க ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

மேலும், சிறந்த ஒலியமைப்பு மற்றும் சிறந்த லொக்கேஷன் ஒலிப்பதிவாளர் என்ற பிரிவின்கீழும் அடுத்த ஆண்டில் இருந்து தேசிய விருதுகள் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.