ஜெயலலிதாவுக்கு நானே உண்மையான வாரிசு நானே : உரிமை கோரும் பெண்!!

சசிகலாவையோ அவரது உறவினர் ஒருவரையோ வாரிசாக ஒரு போதும் எனது அத்தை ஜெயலலிதா ஏற்று கொண்டதில்லை என்று அண்ணன் மகள் தீபா கூறினார்.

ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமார் மகள் தீபா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

இன்றைய சூழ்நிலையில் நான் அரசியலுக்கு வரும் வாய்ப்பு ஏற்பட்டால் அது தவறாக இருக்காது என்றே கருதுகிறேன். இந்த வி‌ஷயத்தை பொறுத்த வரை ஜனநாயக ரீதியாக மக்கள் முன் விடுகிறேன். அவர்கள் முடிவு சொல்லட்டும்.

மக்களின் முடிவை கட்சி ஏற்க வேண்டும். மக்களின் மனநிலைக்கு ஏற்றார்போல்கட்சி எதிர்காலத்தை வகுத்து கொள்ள வேண்டும்.

சசிகலாவையோ அவரது உறவினர் ஒருவரையோ வாரிசாக ஒரு போதும் எனது அத்தை ஜெயலலிதா ஏற்று கொண்டதில்லை. அவர்களை அரசியலுக்கு அப்பால்தான் நிறுத்தி வைத்திருந்தார்.

நான் ஜெயலலிதாவை சார்ந்தவள். எல்லா வி‌ஷயங்களும் எனக்கு தெரியும். இது சம்பந்தமாக பல முறை விவாதம் நடந்ததும் தெரியும். அத்தை ஜெயலலிதாவுக்கு நானே உண்மையான வாரிசு.

சசிகலாவை அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பதவி ஏற்று கொள்ளும்படி அ.தி.மு.க. நிர்வாகிகள் கூறுவது மிகவும் துரதிருஷ்டவசமானது.

இந்த வி‌ஷயத்தில் கட்சி தொண்டர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியாது. ஆனால், மக்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இது ஒரு மனக்கசப்பான சூழ்நிலையை ஏற்படுத்தும்

எனது அத்தை ஜெயலலிதாவுக்கு தெரியாமல் பல வி‌ஷயங்கள் நடந்துள்ளன. இவை எல்லாம் எங்கள் அத்தைக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இந்த வி‌ஷயங்கள் பெரும்பாலானவை கட்சி தொண்டர்களுக்கு தெரியாது.

சசிகலாவை தனது வாரிசாக எனது அத்தை ஜெயலலிதா அறிவிக்க நினைத்து இருந்தால் எப்போதோ அதை செய்து இருப்பார். ஏன் அதை செய்யவில்லை? இதுபற்றி அவர்கள் விளக்குவார்களா?

எனது அத்தையின் இறுதி சடங்குகள் முறையாக நடத்தப்படவில்லை. இது ஒரு சோகமான நிகழ்வு. உறவினர்களான எங்களுக்கு எந்த தகவலும் சொல்லப்படவில்லை. எங்களை கலந்து கொள்ளவும் அழைக்கவில்லை. எனது அத்தையின் இறுதி சடங்குகள், சம்பிரதாயங்கள் உரிய முறையில் பின்பற்றப்படவில்லை, இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை முழுதும் திடீர் மாற்றம் : காரணம் என்ன?

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவின் பொதுசெயலாளராக சசிகலா பதவியேற்று கொள்ள வேண்டும் என அமைச்சர்கள், கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தாலும் ஓபிஎஸ், மூத்த அமைச்சர்கள், தம்பிதுரை உள்ளிட்டோர் சசிகலா தான் கழகத்தையும் மக்களையும் காக்க வேண்டியவர் என பத்திரிக்கைகளிடம் கூறி வருகின்றனர்.

தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா, கடந்த 5 ம் திகதி உடல்நலக் குறைவால், அப்போலோ வைத்தியசாலையில் காலமானார்.

அப்போதே, கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் பொது செயலாளர் பதவி, கட்சியில் அங்கீகாரம் போன்றவற்றை மையப்படுத்தி சில பேப்பரில் கையெழுத்து வாங்கியதாக தகவல்கள் வெளியாகின.

கடந்த 28 ஆண்டுகளாக, அதிமுகவின் பொது செயலாளராக இருந்தவர் செல்வி ஜெ ஜெயலலிதா. எந்தவித போட்டியோ, சிக்கலோ இல்லாமல், ஒரு மனதாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை, பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் ஜெயலலிதா. அதே போல், சசிகலாவும் போட்டியின்றி தேர்வாவதையே விரும்புகிறார் என்கின்றனர் அதிமுக வட்டாரங்கள். அதற்கேற்றாற் போல், காய்களை நகர்த்தி வருகிறார்கள் மன்னார்குடி குடும்பத்தினர்.

இந்நிலையில் சென்னையில் சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்களும் பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன.

“போற்றி வளர்த்த இந்த இயக்கத்தை அம்மா வழியில் தலைமையேற்க வாருங்கள் எங்க சின்னம்மாவே”

“அம்மாவுக்கே தாயை தந்தையாய் சகோதரியாய் யாதுமாகி நின்று தாயை காத்திட்ட எங்களின் இளைய தாயே.. கழகத்தை காத்தருள வேண்டும்”

ஒரு பொழுதும் உண்ணாமல் ஒரு நொடியும் உறங்காமல் புரட்சி தலைவி அம்மாவிற்கு அரணாய் உறுதுணையாய் இருந்து தியாகம் செய்த சின்னம்மாவே வருக” என்று பல்லாயிரகணக்கான போஸ்டர்கள் சென்னை முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக கழகத்தின் பொது செயலாளராக தலைமை ஏற்க தலைமகளே வாரீர் வாரீர் என மிகபெரிய பேனர் ஒன்று வைக்கப்பட்டுள்ளது சென்னையில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் தப்பி ஓட்டம்!!

வவுனியா பொது வைத்தியசாலையில் பொலிஸாரால் அனுமதிக்கப்பட்ட பெண் நேற்று(10.122016) வைத்தியசாலை காவலில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீதியை மறித்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதுடன் பொலிஸாரின் விசாரணைகளுக்கு ஒத்துழைக்க மறுத்த பெண்ணை பொலிஸார் வைத்தியசாலையில் நேற்று முன்தினம் அனுமதித்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண்ணுக்கு மருத்துவ அறிக்கையினைப் பெறுவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் வைத்தியசாலையில் உள்ள பொலிஸாரின் காவலில் இருந்த இந்த பெண் எவ்வாறு தப்பிச் சென்றார் என்பது தொடர்பாக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் அந்தோனியார் சிலை உடைப்பு : அதிர்ச்சியில் மக்கள்!!

 
வவுனியா இறம்பைக்குளம் பகுதியிலுள்ள புனித யோசப்வாஸ் திருச் சொரூபம் மீது நேற்று இரவு (10.12.2016) இனந்தெரியாதவர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

வவுனியா இறம்பைக்குளம், யோசப்வாஸ் வீதியில் அருகே வைக்கப்பட்ட புனித யோசப்வாஸ் திருச் சொரூபம் மீது நேற்று இரவு 10.45 மணியளவில் இனந்தெரியாதவர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் சொரூபம் பலத்த சேதமடைந்துள்ளது. சம்பவ இடத்திற்குச் சென்ற புனித அந்தோனியார் ஆலய பங்குத்தந்தை அருட்பணி எஸ்.சத்தியராஜ் சொரூபத்தினைப் பார்வையிட்டதுடன் வவுனியா பொலிசாருக்கும் தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவ இடத்திற்குச் சென்று பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் மூன்றாம் விதி குறும்படம் வெளியீடு!!

 
வவுனியா பூங்கா வீதியிலிருக்கும் வவுனியா வளாகத்தில் இன்று மாலை 3.30 மணியளவில் ஜி.வசந்சீலனின் மூன்றாம் விதி குறும்படம் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் திரு. ஞா.குணசீலன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோதரலிங்கம், வவுனியா பொது வைத்தியசாலையின் உளநல வைத்தியர் சிவதாஸ், வவுனியா வளாக முதல்வர் கலாநிதி. த.மங்களேஸ்வரன், மிருக வைத்தியர், தமிழ்மாமன்றத் தலைவர் திரு.கிருபானந்தகுமார், தமிழருவி சிவகுமாரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ் மாமன்றத் தலைவரிடம் இருந்து குறும்படத்தின் முதற் பிரதியை வவுனியா வளாக முதல்வர் பெற்றுக்கொண்டார்.

சிறுவர் நலம் எனும் தொனிப் பொருளில் மனநல மருத்துவர் சிவதாஸ் உரையாற்றினார். குறும்பட விமர்சனத்தினை தமிழருவி சிவகுமாரன் நிகழ்த்தியிருந்தார். ஈழத்துச் சினிமா எனும் பொருளில் குறும்பட இயக்குநர் மதிசுதா உரையை நிகழ்த்தியிருந்தார்.

கலந்து கொண்டவர்களுக்கு குறும்படத்தின் சிறப்பு காட்சி காண்பிக்கப்பட்டது.

வவுனியாவில் வீதியில் அமர்ந்து இடையூறு ஏற்படுத்திய பெண் வைத்தியசாலையில் அனுமதி!!

 
வவுனியா தாண்டிக்குளம் விவசாயக்கல்லூரிக்கு அருகில் நேற்று (09.12.2016) பிற்பகல் 2 மணியளவில் பிரதான யாழ் வீதியில் அமர்ந்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதுடன் பொலிசாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்த குறித்த பெண்ணை வவுனியா பொது வைத்தியசாலையில் நேற்று (09.12.2016) மாலை பொலிசார் அனுமதித்ததுடன் மருத்துவ அறிக்கையினை வைத்தியர்களிடம் கோரியுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று 10.12.2016 தெரிவித்தனர்.

குறித்த பெண் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழக்காததால் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலே குறித்த பெண்ணை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா வைரவப்புளிங்குளத்தில் விபத்து!!

 
வவுனியா வைரவப்புளியங்குளம் வைரவர் கோவில் வீதியில் இன்று (12.10.2016) மதியம் 1.45 மணியளவில் சாரதிபயிற்சி முச்சக்கரவண்டியொன்றும் மோட்டார் சைக்கில் ஒன்றும் விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிலின் ஓட்டுநர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவத்தினை நேரில் பார்த்த பொதுமகன் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்..

யங்ஸ்டார் மைதான வீதியுடாக வைரவப்புளியங்குளம் நோக்கி பயணத்த முச்சக்கரவண்டி வீதியின் மறுபக்கம் மாற முற்ப்பட்ட வேளை வவுனியாவிலிருந்து வைரப்புளியங்குளம் வீதியுடாக பயணித்தக்கொண்டிருந்த மோட்டார் சைக்கில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவித்தார்.

மீண்டும் மலைநாடாக மாறும் கிளிநொச்சி : அதிகரிக்கும் பனி மூட்டம்!!

 
அதிகரிக்கும் பனிபொழிவினால் கிளிநொச்சியில் விவாசாயிகள் மற்றும் நகர்ப்பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மார்கழி மாதம் என்றால் பெரும் மழைகாலம் என்று அனைவருக்கும் தெரிந்த விடையமாகும். ஆனால் இயற்கை அன்னை மாற்றம் ஒன்றை தந்துள்ளது. மலைநாடுகளின் இடங்கள் போன்று தற்போது கிளிநொச்சியும் கடும் குளிருடனும் கடுமையான பனிப்பொழிவுடன் காணப்படுகின்றது.

இதனால் விவசாய வயல் நிலங்கள் பூச்சி தாக்கங்களினால் பாதிக்கப்படுகிறது என விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். கிளிநொச்சி நகர் பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் முற்றிலும் பனியினால் மூடிடப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை முதல் சுமார் 11.00 மணிவரையும் கடும் குளிருடன் கூடிய பனி பொழிவு மிக அதிகமாக காணப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மக்களின் இயல்வு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பனி பொழிவு காரணத்தால் விவசாய நிலங்களில் உள்ள பயிர்கள் கிருமிகளின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

பருவமழை பெய்துதுவரும் பட்சத்தில் விவசாய நிலங்கள் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் அனைத்தும் கருகிவிடும் நிலைக்கு போய்விடும் என்று விவசாயிகள் அங்கலாய்க்கிறார்கள்.

டென்மார்க்கில் இளம் வயது தமிழ் மாணவி வைத்தியசாலையில் உயிரிழப்பு!!

டென்மார்க்கில் தமிழ் மாணவி ஒருவர் சிகிச்சை பலனியின்றி உயிரிழந்த பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது.

19 வயதான சட்டத்துறை மாணவி செல்வி. மதுரா சிவகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சட்டத்துறையில் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்று அதிக புள்ளிகளை மதுரா பெற்றுள்ளார்.

படிப்பில் சிறந்த விளங்கிய குறித்த மாணவி நோய் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த துயர சம்பவம் உலக வாழ் தமிழர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

திடிரென அவர்களின் உயிர் பிரிய வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டது. இதேவேளை மதுரா சிவகுமாரின் இறுதிக்கிரியைகள் டென்மார்க் நாட்டில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் காணாமற்போனோரின் உறவினர்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!!

 
வவுனியாவில் இன்று (10.12.2016) காலை 10 மணியளவில் கந்தசாமிகோவில் ஆலய முன்றலில் ஒன்றிணைந்த கானமற்போனோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டதுடன் பேரணியாக பசார் வீதி, மில் றோட் வழியாகச் சென்று வவுனியா சுவர்க்கா விருந்தினர் விடுதியை சென்றடைந்து.

அங்கு சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு தமது காணாமற்போன உறவுகளுக்கு நீதி வேண்டியும், பக்கச்சார்பற்ற விசாரணைகள் வேண்டியும், காணமல்போனோர் விடயத்தில் நம்பிக்கையினைக் கட்டியெழுப்பக்கூடிய ஆக்கபூர்வமான நடவடிக்கையினை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும் எனவும் வலியுறுத்தியும் கூட்டம் ஒன்றினையும் நடாத்தியிருந்தனர்.

வடகிழக்கு மாவட்டங்களிலிருந்து வந்த உறவுகள் தமது ஆதங்கங்களைத் தெரிவித்திருந்தனர்.

வவுனியா மாவட்ட கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சங்கத் தலைவி திருமதி. கே.ஜெயவனிதா தலைமையில் ஆரம்பமான கூட்டத்தில் வடகிழக்கு மாவட்டங்களிலிருந்து கையளிக்கப்பட்டு காணமல் ஆக்கப்பட்ட சங்கத் தலைவர்கள், உறுப்பினர்கள், காணாமற்போனவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினரும் இந்நிகழ்வில் இணைந்து கொண்டனர்.

          

தந்தைக்காக பிச்சையெடுக்கும் சிறுமி : சிரியாவின் போர் அவலம்!!

சிரியாவின் அலெப்போ நகரில் நடைபெற்று வரும் போரானது தீவிரமடைந்துள்ளது.

கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுக்குள் நான்கு ஆண்டுகளாக இருந்த கிழக்கு அலெப்போவிலுள்ள 75 சதவீத பகுதிகளை அரசு படையினர் மீண்டும் கைப்பற்றியுள்ளனர்.

இந்த போரில் பொதுமக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனார், பலர் கொல்லப்பட்டது மட்டுமில்லாமல் பொது சொத்துக்களும் பெருமளவில் சேதமடைந்து வருகிறது.

குடியிருப்புப் பகுதிகள், மருத்துவமனைகள், வழிப்பாட்டு தளங்கள், பள்ளி கூடங்கள் என்று அனைத்து இடங்களிலும் கிளர்ச்சியாளார்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் சிரியாவிலிருந்து ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் போரில் காயமடைந்த ஒரு ஆண் நடக்க முடியாததால் சக்கர நாற்காலியில் உட்கார்ந்துள்ளார்.

அவரின் மகளான ஒரு சிறுமி தன் தந்தையின் மருத்துவ செலவுக்கு பணம் வேண்டும் என அழுது கொண்டே சாலையில் செல்லும் ஒரு பெண்ணிடம் கையேந்தி கொண்டே கேட்பது போலவும், அதை பார்த்த அவள் தந்தை செய்வதறியாது கண்களை மூடி கொண்டு அழும் வகையில் வெளியாகியுள்ள புகைப்படம் பார்ப்போர் மனதை உருக்கும் வகையில் அமைந்துள்ளது.

காதலியை உயிரோடு தின்ன முயன்ற காதலன் : அதிர வைக்கும் பின்னணிக் காரணம்!!

பிரித்தானியாவில் காதலன் ஒருவன் முன்னாள் காதலியை உயிரோடு தின்ன முயன்ற சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது.

27 வயதான Jamie Mitchell என்ற நபரே இக்கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார். இதில்,Yeovil பகுதியை சேர்ந்த 25 வயதான Melody Moon என்ற இளம்பெண் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, இருவரும் காதலித்து வந்த நிலையில் Jamie Mitchellலின் வன்முறை குணத்தை அறிந்த Melody Moon அவரை விட்டு பிரிந்துள்ளார்.

இந்நிலையில், Jamie Mitchell முன்னாள் காதலியை பழிவாங்க நாடகமாடி Melody Moonனை அவரது வீட்டிற்கு அழைத்துள்ளார்.

Melody Moonனும் Jamie Mitchell திருந்திவிட்டார் என கருதி அவரது அழைப்பை ஏற்று வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், வீட்டிற்கு வந்த முன்னாள் காதலியை Jamie Mitchell கடுமையாக தாக்கியுள்ளார். “உன்னை கொல்ல போகிறேன்” என கூறி Melody Moonனை கடுமையாக கடித்து குறியுள்ளார்.

பின்னர், பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு Jamie Mitchell வீட்டிற்கு விரைந்து அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் Jamie Mitchellலை கைது செய்துள்ளனர். பின்னர், கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த Melody Moon-னை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் Jamie Mitchell-லுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை வழங்கியுள்ளது.

மேலும், இனி அவர் Melody Moonனை காண தடைவிதித்து, அவருக்கு ஏற்பட்டுள்ள மன நோய்க்கு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளது. Jamie Mitchell தாக்குதலில் கடுமையாக பாதிக்கப்பட்ட Melody Moon தீவிர தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.

60 ஆண்டுகளுக்கு பின்னர் ஒன்றிணைந்த பிரித்தானிய சகோதரர்கள் : நெகிழ வைக்கும் சம்பவம்!!

 
பிரித்தானியாவில் அனாதை இல்லத்திற்கு அனுப்பட்ட சகோதரர்கள் நான்கு பேர் 60 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒன்றிணைந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் டேவன் பகுதியில் கடந்த 1956 ஆம் ஆண்டு தாயார் ஒருவர் தமது ஏழ்மை நி்லையை கருத்தில் கொண்டு தனது 4 மகன்களை அங்குள்ள அனாதை இல்லத்தில் சேர்த்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த காப்பகம் அந்த நான்கு சகோதரர்களையும் வேறு வேறு காப்பகங்கலுக்கு அனுப்பி வைத்துள்ளது. இதனால் நாளடைவில் குறித்த சகோதரர்களுக்கு தொடர்பு எதையும் ஏற்படுத்திக்கொள்ள முடியாமல் போனது.

இதனிடையே இவர்களின் தாயாரும் தமது 37-வது வயதில் அதிர்ச்சிகரமாக மரணமடைந்துள்ளார். இதனால் சகோதரர்கள் ஒன்றிணையும் வாய்ப்பு மிகவும் அரிதானதாக மாறியது. ஆனாலும் நம்பிக்கை கைவிடாத சகோதரர்கள் நான்கு பேரும் தங்களது எஞ்சிய சகோதரர்களை தங்களால் இயன்ற முறையில் தீவிரமாக தேடி வந்துள்ளனர்.

இந்த நிலையில் சால்வேஷன் ஆர்மி துணையுடன் நான்கு சகோதரர்களில் ஒருவரான டேவ் மோரிஸ் தமது சகோதரர்கலில் ஒருவரான கீத் மோரிஸ் என்பவரை கண்டுபிடித்துள்ளார்.

இதனையடுத்து எஞ்சிய இருவரையும் தேடும் பணிகளை குறித்த சகோதரர்கள் இருவரும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

தொடர்ந்து 60 ஆண்டுகளுக்கு பின்னர் சகோதரர்கள் நான்கு பேரும், சிறுவயதில் ஒன்றாக கால்பந்தாடிய பிளைமவுத் விளையாட்டு அரங்கில் ஒன்று கூடி தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இதில் 3 சகோதரர்கள் குறித்த மைதானத்தில் 1950களில் கால்பந்து போட்டிகள் நடைபெறும் நாளில் ஆட்ட இடைவேளையின் போது இசைக்கருவிகள் வாசித்துள்ளனர்.

தம்பியை கொலை செய்து புதைத்த அண்ணன் : அதிர வைக்கும் பிண்ணனிக் காரணம்!!

தமிழகத்தில் தம்பிக்கு மயக்கமருந்து கொடுத்து அண்ணனே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாண்டியராஜ் (29). டிரைவரான இவர் தம்பி தனபாண்டியனிடம் பணம் கேட்டு தகராறு செய்து அரிவாளால் வெட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த 2 வது தம்பியான சுந்தரபாண்டியன், 27, அவரை கண்டிப்பதற்காக கடந்த டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி அவர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு இருவருக்கு நடந்த வாக்குவாதம் முற்ற இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். அப்போது சுந்தரபாண்டியன், அவருடைய மனைவியை கண்மூடித்தனமாக கடித்துள்ளார்.

இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற பாண்டியராஜ், கயிற்றால் அவரின் கை,கால்களை கட்டி அறையில் பூட்டியுள்ளார். சுந்தரபாண்டியன் தொடர்ந்து சத்தம் போட அவருக்கு, உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளனர்.

சாப்பிட்ட அவர் சிறிது நேரத்திலே மயக்கமடைந்துள்ளார். பின்னர் பாண்டியராஜ், அவரின் கழுத்தை கயிறால் இறுக்கி கொலை செய்துள்ளார்.

அதன்பின்னர் அவர் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போல் பாண்டியராஜ் நாடகமாடியுள்ளார். அதைத் தொடர்ந்து அவரது உடலை புதைத்துள்ளனர்.

அவருடைய தாயார் ராஜாமணி கேட்ட போது, தகராறில் கொலை செய்து புதைத்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதனால் பதற்றமடைந்த அவரின் தாயார் காவல்நிலையத்தில் சென்று புகார் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து பொலிசார் நடத்திய விசாரணையில் புதைத்த இடத்தில் அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சியில் காணாமல் போன வயோதிபர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!!

 
கடந்த மூன்று நாட்களாக காணவில்லை எனத் தேடப்பட்டு வந்த கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தை சேர்ந்த 80 வயதான இராசரத்தினம் என்ற நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கனகாம்பிகைக்குளம் பாடசாலைக்கு முன்பக்கமாக இருக்கும் வீட்டின் பாழடைந்த கிணற்றில் இருந்து நேற்று (09.12.2016) குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

தனியாக வசித்து வந்த இவரை காணவில்லை என கிராம வாசிகளால் தேடப்பட்டு வந்த நிலையில், குறித்த கிணற்றில் சடலமாக மிதப்பதனை அவதானித்த கிராம மக்கள் கிளிநொச்சிப் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த கிளிநொச்சிப் பொலிஸார் கிளிநொச்சி குற்றத் தடகவியல் பொலிசார் மற்றும் சட்டவைத்திய அதிகாரி ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதேவேளை குறித்த சடலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது

அத்துடன் குறித்த வயோதிபரின் மரணம் தொடர்பில் சந்தேகம் இருப்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

காணாமல் போய் மூன்று நாட்களான நிலையில் அவரது சடலத்தினைப் பார்க்கும் பொழுது இறந்து ஒரு நாட்களே ஆன சடலம் போன்று உள்ளதாகவும் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறித்த வயோதிபருற்கு ஒரு மகளும் ஒருமகனும் இருப்பதாகவும் மகள் புலம்பெயர் நாட்டில் இருப்பதாகவும் மகனும் வயோதிபரது மனைவியும் வெளி மாவட்டம் ஒன்றில் இருப்பதாகவும் பொதுமக்கள் குறிப்பிடுகின்றனர்.

குறித்த நபரது மரணம் தொடர்பில் குடும்பத்தினருக்கு தகவல் அளித்துள்ள போதும் அவர்கள் இவ்விடயம் தொடர்பில் அக்கறை எடுத்துக் கொள்ளாதது தமது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக பொது மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

மின்சாரம் தாக்கி நபரொருவர் பலி!!

மொனராகலை – தம்பகல்ல – கெசல்வத்த பிரதேசத்தில் மின்சார தாக்குதலுக்கு இலக்காகி நபரொருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மின்சார கோளாறு காரணமாக தனது வீட்டில் மின் திருத்தப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே மின்சாரம் தாக்கி குறித்த நபர் பரிதாபகரமாக பலியாகியுள்ளார்.

குறித்த சம்பவத்தில் 31 வயதுடைய ஒருவரே பலியாகியுள்ள அதேவேளை சடலம் பிரேத பரிசோதனைக்காக மொனராகலை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.