சென்னையில் கோர தாண்டவமாடும் வர்தா : கார்கள் பறந்தன, பலமாடிக் கட்டிடங்களின் கண்ணாடிகள் சரிந்து விழுந்தன!!( காணொளி)

சென்னையில் வர்தா புயலால் பலத்த காற்று வீசி வருகிறது. சூறாவளி காற்றால் வீதிகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் தூக்கி வீசப்பட்டுள்ளதோடு பல மாடிக் கட்டிடங்களின் கண்ணாடிகள் சரிந்து விழுந்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

வர்தா புயல் காரணமாக பாதுகாப்பு கருதி 4 மாவட்டங்களில் 4622 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதேவேளை புயல் காரணமாக மூவாயிரத்துக்கும் அதிகமான மின்கம்பங்கள் சரிந்து விழுந்துள்ளமையால் மின்சார சேவை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.

வர்தா புயல், சென்னைக்கு அருகே பழவேற்காடு – ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்க ஆரம்பமாகியுள்ளதால் 120 முதல் 140 கி.மீ., வேகத்தில் காற்று வீசுவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

வர்தா புயல் காரணமாக காஞ்சிபுரம், திருவள்ளூரில் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்வதால் மக்கள் வீடுகளை விட்டு இரவு 7 மணிவரை வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சூறாவளி காற்று வீசிவருவதால் சென்னையின் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கடைகள், வணிக நிறுவனங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகள் சூறைகாற்றால் தூக்கி வீசப்பட்டன.

பலத்த காற்றால் ஆங்காங்கே வீதிகளில்; மரங்கள் வேறுடன் முறிந்து விழுந்தன. வீதிகளில் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தன.

இதனிடையே சென்னை டிஎல்எப் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் காற்றில் பறந்தன. அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வர்தா புயல் : சென்னை விமான நிலையத்தில் 500 இலங்கையர்கள் சிக்குண்டனர்!!

வர்தா புயல் காரணமாக தம்பதிவ யாத்திரை மேற்கொண்டிருந்த இலங்கையர்கள் 500 பேர் சென்னை விமான நிலையத்தில் சிக்குண்டுள்ளதாக தெரிவிக்கிப்படுகின்றது.

வர்தா புயல் காரணமாக சென்னை விமான நிலையத்துக்கான அனைத்து விமான சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் உள்ளவர்களை வெளியேறுமாறு கோரியதால் அங்கு சிக்குண்டுள்ள இலங்கையர்கள் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

வவுனியாவில் முதன்முறையாக இடம்பெற்ற ஐயப்பன் மலையாள பூஜையின் பதிவுகள்!(வீடியோ)

வவுனியா இறம்பைகுளம்  அருள்மிகு கருமாரி ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய திருமண மண்டபத்தில் நேற்று  11.12.2016 ஞாயிற்றுக்கிழமை கிழமை காலை 9.00 மணிமுதல் 12.00 மணிவரை  வரை  இலங்கையில் இருந்து இதுவரைகாலமும் 5100 க்கும் மேற்பட்ட சாமிகளை  மலைக்கு அழைத்து சென்ற இந்துமத குருபீடாதிபதி சபரிமலை குருமுதல்வர் ஆன்மீக அருள்ஜோதி ஸ்ரீ ஐயப்பதாச சாம்பசிவ சிவாசாரியார் அவர்களின் தலைமையிலான மலையாள பூஜை இடம்பெற்றது .

வடபகுதியின்  பிரதேசங்களில் இருந்தும் ஏராளமான ஐயப்பன் பக்தர்கள்  இந்நிகழ்வில்  கலந்து கொண்டனர் .

 

வீடியோ :சுதன் சர்மா

 

வவுனியாவில் கராட்டியில் தேசிய ரீதியில் வெற்றியீட்டிய மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு!!

 
வவுனியாவின் பிரபல கராட்டி ஆசான் நந்தகுமார் (நந்தன்) அவர்களினால் பயிற்றுவிக்கபட்டு வடமாகாண மற்றும் தேசிய ரீதியில் தங்க பதக்கம் உட்பட பதக்கங்களையும், சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்ட மாணவ. மாணவியரை கெளரவிக்கும் நிகழ்வு கராட்டி ஆசான் அசனார் ,சிவராஜ் ஆகியோரின் பங்குபற்றலுடன் சிறப்பான முறையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் மற்றும் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார், செயலாளர் மாணிக்கம் ஜெகன், சந்திரபத்மன், யசோதரன் ஆகியோரும் கலந்து கொண்டு மாணவர்களை கெளரவித்திருந்தார்கள்.

பயிற்சிகள் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் காலை 8 மணி தொடக்கம் 10 மணி வரை சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் பண்டிகைக்காலத்தை முன்னிட்டு பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!!

வவுனியாவிலுள்ள வர்த்தக நிலையங்களில் கட்டுப்பாட்டு விலைகளில் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்வதில்லை என்றும், ஒவ்வொரு கடைகளிலும் ஒவ்வொரு விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில தினங்களாக பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பொருட்களை கொள்வனவு செய்வதற்காகச் சென்ற பொதுமக்கள் ஒவ்வொரு கடைகளிலும் ஒவ்வொரு விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதையறிந்து வியாபார நிலைய உரிமையாளர்களிடம் கேட்டபோது வவுனியாவில் மடடுமல்ல அனைத்துப்பாகங்களிலும் தற்போது பண்டிகைக்காலத்தை முன்னிட்டு பொருட்கள் அதிக விலையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் பொதுமக்களுக்கு வரி சுமையற்ற பொருட்களை கொள்வனவு செய்து விற்பனைக்கு அனுப்பியுள்ளதாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் இவ்வேளையில் பொருட்கள் அதிக விலையில் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்.

மகனின் கன்னக்குழியைப் பார்த்து பொறாமை கொண்ட பெண் செயற்கையாக முகத்தில் துளையிட்டுக்கொண்டார்!!

பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணொருவர், செயற்கையாக கன்னத்தில் குழி ஏற்படுத்துவத ற்காக பல லட்சம் ரூபாவை செலவிட்டு தனது முகத்தில் துளையை ஏற்படுத்தியுள்ளார்.

இங்கிலாந்தின் லின்கன்ஷயர் பிராந்தி யத்தைச் சேர்ந்த 44 வயதான ஏ.ஜே.வேய்ர் எனும் இப் பெண், 11 வயதான தனது மக­னின் கன்னக் குழியை பார்த்து பொறாமை கொண்டாராம்.

மகனின் கன்னத்திலுள்ளதைப் போல், தனது முகத்திலும் குழியை ஏற் படுத்திக்கொள்வதற்கு அவர் விரும்பினார்.

இயற்கையாக இதை செய்ய முடியாத நிலையில், சத்திரசிகிச்சை மூலம் இதை செய்வதற்கு அவர் தீர்மானித்தார்.

இப்படி செய்ய வேண்டாம் என வேய்ரை அவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அறிவுறுத்தினர். எனினும் அவர் அந்த அறிவுறுத்தல்களை புறக்கணித்தார்.

சத்திரசிகிச்சை மூலம் அவரின் கன்னத்தில் துளை ஏற்படுத்தப்பட்டு, தையல் இடப்பட்டது. கன்னக்குழியை ஏற்படுத்த வேண்டும் என தான் 10 வருடங்களாக காத்திருந்ததாக இப் பெண் தெரிவித்துள்ளார்.

ரஜினியின் 66 ஆவது பிறந்த தினம் இன்று!!

நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது 66 ஆவது பிறந்நாளை இன்று கொண் டாடுகின்றார். ரஜினியின் இயற்பெயர் சிவாஜிராவ் கெய்க்ட்வாட். ரஜினிகாந்த் என்று பெயர் சூட்டியது கே.பாலச்சந்தர்.

கே.பாலசந்தர், மகேந்திரன், முத்துராமன் உள்ளிட்ட இயக்குநர்களின் பயிற்சிப் பட்டறையின் மூலம் நடிகராக மாறியவர் ரஜினிகாந்த். இயக் குநருக்கான நடிகராக மட்டுமில்லாமல், தயாரிப்பாளருக்குமான நடிகரே ரஜினிகாந்த்.

ரஜினியின் அபூர்வ ராகங்களைத் தொடர்ந்து அவர் நடித்த மூன்று முடிச்சு, புவனா ஒரு கேள்விக்குறி, அவர்கள், 16 வயதினிலே, காயத்ரி படங்களே இவரை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளக் காரணமான முக்கிய படங்கள். வில்லன் கதாபாத்திரம் ஏற்றுக் கொண்டிருந்த ரஜினி நாயகனாக நடித்த முதல் படம் பைரவி. தொடந்து முள்ளும்மலரும், ஆறிலிருந்து அறுபது வரை, எங்கேயோகேட்ட குரல் உள்ளிட்ட படங்கள்.

தமிழ் கற்றுக்கொண்டால் உங்களை எங்கேயோ கொண்டுபோய் விடுவேன் என்று கே.பாலசந்தர் கூறியதற்காக சீக்கிரமாகவே தமிழ் பேசக் கற்றுக்கொண்டார் ரஜினி.

பில்லா, தனிக்காட்டுராஜா, போக்கிரிராஜா, முரட்டுக்காளை உள்ளி ட்ட படங்கள் இவரை ஆக்‌ஷன் நாயகனாகவும், தில்லுமுல்லு, முத்து, போன்ற படங்கள் இவரை நகைச்சுவை நாயகனாகவும் கொண்டு வெளியான படங்கள்.

அதுமட்டுமின்றி பணக்காரன், வேலைக்காரன், படிக்காதவன், தர்மத்தின் தலைவன், மிஸ்டர் பாரத் ஆகியன ரஜினியின் வெற்றியையும், சூப்பர் ஸ்டாராக உயர உதவிய வெற்றிப் படங்கள்.

தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், வங்காளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் சுமார் 170 படங்களில் நடித்துள்ளார். ஆங்கிலத் தில் இவர் நடித்து வெளியான பிளட் ஸ்டோன் 1988 இல் வெளியானது.

தொடர்ந்து அண்ணாமலை, பாட்ஷா, படையப்பா என்று தொடர் வசூல் வெற்றி ரஜினியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது.

இந்த வெற்றிகள் பாபா, குசேலன் படங்களின் மூலம் இறங்கினாலும், சந்திரமுகி, சிவாஜி, எந்திரன் படங்கள் மீண்டும் ரஜினியை உச்சத்தில் கொண்டு நிறுத்தியது.

இவ் வருடம் வெ ளியான ரஜினியின் கபாலி பல சாதனைகளை புரிந்து அதுவும் வெற்றிப் படமாகியது. அதிக பட்ஜெட்டில் அடுத்து வர இருக்கும் ‘2.O’ உம் ரஜினியை ரசிகர்கள் கொண்டாடக் காத்திருக்கும் படமாகவே அமையப்போகிறது.

இவர் நடித்தபடத்தில் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டால், அதனை ஈடுகட்ட இவரே பண உதவிகள் செய்வது, பொது நிகழ்ச்சிகளில் மேக்கப் இல்லாமல் தோன்றுவது, உள்ளதை உள்ளபடி சொல்லுவது உள்ளிட்ட குணங்களுமே இன்றும் ரஜினியை பலருக்குப் பிடிக்க காரணங்கள்.

பெற்ற விருதுகள்:

1984 இல் தமிழக அரசின் கலைமாமணி விருதும், 1989 இல் எம்.ஜி.ஆர் விருதும் 2007 இல் மகாராஷ்டிரா அரசின் ராஜ்கபூர் விருதையும் பெற்றார். 2011 இல் எம்.ஜி.ஆர்-., சிவாஜி விருது மற்றும் 2000 இல் பத்மபூஷன் விருதையும், 2016 இல் பத்மவிபூஷன் விருதையும் பெற்றுள் ளார்.

முள்ளும்மலரும், மூன்றுமுகம், முத்து, படையப்பா, சந்திரமுகி, சிவாஜி உள்ளிட்ட ஆறு படங்களுக்காகவும் தமிழ்நாடு மாநில விருதிற்கு தெரிவாகி, ஆறிலும் சிறந்த நடிகர் விருதினைப் பெற்றார் ரஜினி.

ரஜினியின் முத்து படம் இந்தியாவைத் தாண்டி ஜப்பானிலும் அமோக வெற்றி. இந்திய மொழிப் படம் முதன் முறையாக ஜப்பானிய மொழிமாற்றம் செய்யப்பட்டு ஹிட் அடித்தது என்றால் அது முத்து தான்.

சந்திரமுகி படம் 200 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது, இந்தியாவைத் தாண்டி டர்கிஷ் மொழியிலும், ஜெர்மன் மொழியிலும் டப்பிங் செய்யப்பட்டும் ஹிட் அடித்தது.

‘2.0’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, ஜப்பனிஷ், சைனீஷ், ஆங்கி லம் ஆகிய 6 மொழிகளில் படம் தயாராகிறது. 6 மொழிகளில் தயாரா கும் முதல் இந்தியப் படம் இது தான். படம் முடிவடையும் நிலையில் உள்ளது.

படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெறுகிறது. படத்தை அடுத்த வருடம் (2017) தீபாவளி விருந்தாக திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.

காலுக்குப் பதிலாக சக்கரம் பொருத்தப்பட்ட ஆமை!!

பிரிட்­டனில் கால் ஒன்றை இழந்த ஆமை­யொன்று நட­மாட உத­வு­வ­தற்­காக சக்­கரம் ஒன்று பொருத்தப்பட்­டுள்­ளது. இங்­கி­லாந்தின் ஒக்ஸ்­போர்ட்­ஷ­ய­ரி­லுள்ள 7 வய­தனா இந்த ஆமை, காரா பெய்ன்டோன் என்­ப­வரின் வீட்டில் வளர்க்­கப்­பட்­டது.

அவ் ­வீட்­டி­லி­ருந்து தப்பிச் சென்ற இந்த ஆமை, காய­ம­டைந்த நிலையில் கடந்த ஓகஸ்ட் மாதம் உள்ர் அய­ல­வர்­களால் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. அதன்பின் வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்­லப்­பட்ட இந்த ஆமைக்கு மருத்­து­வர்கள் சத்­தி­ர­சி­கிச்சை செய்­தனர்.

எனினும், இந்த ஆமை கால் ஒன்றை இழந்­தி­ருந்­தது. அதை­ய­டுத்து, நேதன் அலன் எனும் பொறியியலாளரின் உத­வி­யுடன் இந்த ஆமைக்கு சக்­கரம் பொருத்தப் பட்டதாக 33 வயதான காரா பெய்ன்டோன் தெரிவித்துள்ளார்.

மீண்டும் எச்சரிக்கை : வருகின்றது வர்தா சூறாவளி!!

வர்தா சூறாவளி காங்கேசன்துறையிலிருந்து 400 கடல்மைல் தூரத்தில் நிலைகொண்டுள்ளதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த சூறாவளி இன்று மாலை வேளையில் தமிழகம் சென்னையை ஊடறுத்து செல்லும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதனது நேரடி தாக்கம் நாட்டினுள் ஏற்படாவிடினும், மன்னார் வளைகுடா மற்றும் காங்கேசன்துறை கடற் பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் ஊடாக இடைக்கிடையில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடா சூறாவளி தாக்கம் காரணமாக மேல், வடமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களுடன் யாழ்ப்பாணத்திலும் மழை பெய்யக்கூடும் என காநிலை அவதானம் நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

மேலும், தெற்கு ஆந்திரா- வடதமிழகம் இடையே வர்தா புயல் இன்று கரையைக் கடக்கிறது.

புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் 90 கி.மீ. வேகத்துக்கு காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த நேரத்தில் மின் இணைப்பு நிறுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வர்தா புயல் நிலை கொண்டுள்ளமையினால் மன்னார் மீனவர்கள் தொழிலுக்குச் செல்லவில்லை

வர்தா புயல் நிலை கொண்டுள்ளமையினால் வடக்கு,கிழக்கு கடற்பரப்பில் இன்று (12) திங்கட்கிழமை மீனவர்கள் கடற்தொழிலுக்குச் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

இதற்கு அமைவாக மன்னார் மாவட்டத்தில் மீனவர்கள் இன்றைய (12) தினம் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.

இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் ஆழ் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் இன்றைய தினம் தொழிலுக்குச் செல்லவில்லை.கடல் மட்டம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் மன்னார் கடலில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை. கடல் சீராக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் சாதனை படைத்த இலங்கை மாணவர்கள்!!

உலக அளவில் பாடசாலைகளுக்கிடையே நடத்தப்பட்ட செஸ் சாம்பியன்சிப் போட்டியில் (Chess Championship), 13 வயதுக்கு கீழ்ப்பட்ட பிரிவில் போட்டியிட்ட இலங்கையை சேர்ந்த மாணவன் வெள்ளிப்பதக்கம் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

குருநாகலை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் ஹர்ஷண திலகரத்ன என்ற சிறுவனே பதக்கம் வென்றுள்ளார்.

குறித்த சிறுவன், உஸ்பெகிஸ்தான் நாட்டு சிறுவனுடன் போட்டியிடும் போது 0.5 புள்ளியில் தங்கப் பதக்கம் வெல்ல தவறவிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2014 ஆம் ஆண்டு பிரேசிலில் இடம்பெற்ற செஸ் சாம்பியன்சிப் போட்டியில் 10 வயதுக்கு கீழ்ப்பட்ட பிரிவில் போட்டியிட்ட குறித்த சிறுவன் தங்கப் பதக்கம் வென்று சாதனைப்படைத்தார்.

மேலும்,கொழும்பில் அமைந்துள்ள பிரபல பாடசாலையில் கல்வி பயிலும் Niklesha Tharushi என்ற மாணவி, 13 வயதுக்கு கீழ்ப்பட்ட பெண்கள் பிரிவில் போட்டியிட்டு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

ரஸ்யாவில் இடம்பெற்ற செஸ் போட்டியில் Niklesha Tharushi என்ற மாணவி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

13 வயதுக்கு கீழ்ப்பட்ட பெண்கள் பிரிவில் போட்டியிட்ட அமெரிக்காவைச் சேர்ந்த Naomi Bashkansky என்ற மாணவி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றுள்ளார்.

உலகளாவிய ரீதியில் இடம்பெற்ற செஸ் சாம்பியன்சிப் போட்டியில் குறித்த மாணவர்கள் இருவரும் பங்குப்பற்றி இலங்கைக்கு பெறுமை சேர்த்துள்ளனர்.

குறித்த போட்டியில் இலங்கையில் உள்ள 30 தேசிய மட்ட பாடசாலைகளில் உள்ள செஸ் விளையாட்டாளர்கள் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவில் கரையொதுங்கும் கடல்பாம்புகள்!!

 
முல்லைத்தீவு கடற்கரையில் இறந்த நிலையில் கடல்பாம்புகள் கரை ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வர்தா புயலின் தாக்கத்தில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு காரணமாக கடல்பாம்புகள் இவ்வாறு உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகின்றது.

எனினும் இவ்வாறு ஆழ்கடல் உயிரினங்களின் இறப்புகளின் காரணமாக கரையோர மக்களை அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏன் வெடித்தது என சம்சுங்கிற்கே தெரியாதாம்!!

சம்சுங் நிறுவனம் இந்த ஆண்டு அறிமுகம் கலக்ஸி நோட் 7 வெடித்துச் சிதறியதால் திரும்பப் பெறப்பட்டது. இன்று வரை இந்த போன்கள் வெடித்ததற்கான காரணம் சம்சங்கிற்கே தெரியவில்லை.

சம்சுங் நிறுவனத்தின் இந்த ஆண்டு ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களான கலக்ஸி நோட் 7 ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. உலகின் சில நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் வாடிக்கையாளர்களின் கலக்ஸி நோட் 7 வெடித்து சிதறியது.

செப்டம்பர் மாதம் நோட் 7 போனில் ஏதோ பிழை இருப்பதை சம்சுங் ஒப்புக் கொண்டு சுமார் 35 போன்கள் அதிக சூடானதால் பட்டரி வெடித்ததாகவும், சில போன்களில் பேட்டரி தயாரிப்பு பணிகளில் ஏற்பட்ட பிழை காரணமாக வெடித்ததாக சம்சங் தெரிவித்தது.

கேலக்ஸி நோட் 7 போனில் நிர்ணயம் செய்யப்பட்டதை விட பெரியளவு பட்டரி வழங்கயிதாலேயே பட்டரிகள் வெடித்ததாக அமெரிக்க நுகர்வோர் பொருட்களின் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்தது. இதற்கு சம்சுங் அளித்த பதிலில் பட்டரிகள் வெடித்ததன் காரணம் கண்டறியப்பட்டு விட்டது வாடிக்கையாளர்களுக்கு புதிய மற்றும் பாதுகாப்பான போன்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தது.

சம்சுங் உறுதி செய்து வழங்கிய நோட் 7 போன்களும் வெடித்ததையடுத்து கேலக்ஸி நோட் 7 போன்களின் தயாரிப்பு பணிகளை அடியோடு நிறுத்திவிட்டு நோட் 7 போன்களை திரும்ப பெறுவதாக சம்சுங் அறிவித்தது. இந்நிலையில் நோட் 7 போன்கள் வெடித்ததற்கான காரணம் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன்கள் ஏன் வெடித்தது என்ற காரணத்தை சாம்சுங் ஆய்வாளர்களால் இன்னமும் கண்டறிய இயலவில்லை என கூறப்படுகின்றது. மேலும் பாதுகாப்பான கருவிகள் என சம்சுங் அறிவித்த ஸ்மார்ட்போன்களும் வெடித்ததற்கான காரணங்களும் தொடர்ந்து மர்மமாக இருப்பது சம்சுங் நிறுவனத்தின் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்து கவலை எழுப்புவதாக அமைந்துள்ளது.

துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி!!

மீடியாகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை 45 வயதான பழக்கடை உரிமையாளர் ஒருவரே இதன்போது பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. சடலம் படபொல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

எதுஎவ்வாறு இருப்பினும், துப்பாக்கிப் பிரயோகத்திற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், மீடியாகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் 32 ஆண்டுகளுக்குப் பின்னர் காய்த்த மரம் : மகிழ்ச்சியில் மக்கள்!!

 
நெடுங்கேணி – ஒலுமடு கிராமத்தில் முப்பத்திரண்டு ஆண்டுகளின் பின்னர் கணிசமான அளவில் முரளி மரம் காய்த்துள்ளது. இதனால் அந்த பகுதியினர் சந்தோசத்தில் பழத்தினை பிடுங்கி விற்பனை செய்து வருகின்றனர்.

இப்படியான ஒரு சம்பவம் 1984 ஆம் ஆண்டிலும் நிகழ்ந்துள்ளது. சிலர் பழங்களை பிடுங்குவதற்காக கோடரிகளைப் பயன்படுத்தி மரங்களை அறுத்து விழுத்துவதனால் அவ்விடத்தில் பொலிஸாரும் வனவள பகுதியினரும் சென்றுள்ளனர்.

பழங்களை பிடுங்கி ஒரு கிலோ கிராம் 160 ரூபா தொடக்கம் 200 ரூபா வரை விற்பனை செய்து வருகின்றார்கள். பல பிரதேசங்களில் இருந்தும் மக்கள் வருகை தந்து பழங்களை பிடுங்கி சாப்பிடுகின்றார்கள்.

நெடுங்கேணியில் ஒலுமடு, ஊஞ்சல்கட்டி, மருதோடை, தண்ணிமுறிப்பு மற்றும் காஞ்சிர மோட்டை வயல் பிரதேசம் ஆகிய பகுதிகளிலும் வழமைக்கு மாறாக கணிசமான அளவில் காய்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் இருந்து சென்னைக்கு சென்ற விமானம் மீளத் திரும்பியது!!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு சென்ற விமானம் ஒன்று, மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

மீனம்பாக்கம் விமான நிலையப் பகுதியில் நிலவும் சீரற்ற காலநிலையே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

இதேவேளை, துபாயில் இருந்து சென்னை சென்ற விமானம் ஒன்றும், கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இளைஞர் குழுக்களுக்கு இடையில் கடும் மோதல் : ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!!

 
வவுனியாவில் இளைஞர் ஒருவர் மீது நேற்று மாலை மர்மநபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வைரவ புளியங்குளம் பகுதியில் வைத்து இளைஞன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் காயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா வைரவபுளியங்குளம், வைரவர் கோவில் வீதிப் பகுதியில் உள்ள ஆங்கில மொழிப் பாடசாலை அருகில் முச்சக்கர வண்டி ஒன்றில் வந்த இளைஞர் குழுவுக்கும், மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

இதன்போது முச்சக்கர வண்டியில் வந்த குழு தாக்கியதில் ஒரு இளைஞன் காயமடைந்து வீதியில் விழுந்து கிடந்துள்ளார். இதன்போது அவ்விடத்திற்கு வந்த வேறு இளைஞர்களால் காயமடைந்த குறித்த இளைஞன் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

குறித்த சம்பவத்தில் வவுனியாவின் வேறு பகுதியைச் சேர்ந்தவர்களே வைரவபுளியங்குளம் பகுதியில் வந்து மோதிக் கொண்டதாக தெரியவருகிறது.

இதேவேளை, வவுனியா வைரவபுளியங்குளம், வைரவகோவில் வீதியில் பொலிஸ் காவலரண் ஒன்று அமைக்குமாறு வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கோரப்பட்டிருந்த போதும் இதுவரை அது அமைக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-