அமெரிக்காவில் சாதனைப்படைத்த இரட்டைச் சகோதரிகள்!!

அமெரிக்காவில் நடத்தப்பட்ட கணிதம், தொழில்நுட்பம், விஞ்ஞானம் முதலான அனைத்து போட்டிகளிலும் வெற்றிப் பெற்று இந்திய வம்சாவளி சிறுமிகள் இருவர் சாதனைப் படைத்துள்ளனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம், பிளேனோ நகரில் வசித்து வருகிற இந்திய வம்சாவளியை சேர்ந்த 16 வயதான இரட்டை சகோதரிகள் ஸ்ரீயா, ஆத்யா பீசம் ஆகியோரே குறித்த சாதனையை நிலைநாட்டியுள்ளனர்.

இதுதவிர அவர்கள் பல்வேறான கண்டுபிடிப்பகளுக்கும் முயற்சி செய்து வருகின்றனர். அண்மையில் ‘சச்சிஸோப்ரேனியா’ என்ற மூளை நோயை கண்டறிவதற்கு ஒரு புதிய வழிமுறையை கண்டறிந்துள்ளனர்.

மேலும் தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணத்தை கைவிடுவதற்கான புதிய தொழில்நுட்பத்தையும் குறித்த சகோதரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இவர்கள் இருவருக்கும் அமெரிக்க அரசினது பரிசாக (கல்வி உதவித்தொகை) 1 லட்சம் டொலர் (சுமார் ரூ.67 லட்சம்) வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலக அழிவை தடுக்க கோடீஸ்வரர்களின் அதிரடி நடவடிக்கை!!

காலநிலை மாற்றத்தினால் உலகம் முகம் கொடுத்துள்ள ஆபத்து தொடர்பில் உலகின் கோடீஸ்வரர்கள் அவதானம் செலுத்தியுள்ளனர்.

அதற்கமைய உடனடியாக சூழலுக்கு நெருக்கமான சக்தி முறை ஒன்றை உருவாக்குவதற்காக பில்லியன் டொலரை வழங்க அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதன் பிரதான கோடீஸ்வரர் மைக்ரோசொப்ட் உரிமையாளர் பில்கேட்ஸாகும். அவரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டத்திற்கு முதற்கட்டமாக பில்லியன் டொலர் (இலங்கை நாணய பெறுமதி 15,000 கோடி ரூபாய்) வழங்கியுள்ளார். இதனையடுத்து உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் உதவ முன்வந்துள்ளனர்.

அதற்கமைய, Richard Branson – தொழிலதிபர், Jeff Bezos – அமேசான் பிரதம நிறைவேற்று அதிகாரி, Jack Ma – அலிபாபா குழு தலைவர், Mukesh Ambani – தொழிலதிபர், Vinod Khosla, John Doerr, John Arnold, Hasso Plattner, Al-Waleed bin Talal, Ray Dalio, Patrice Motsepe, Shravier, Masayoshi Son, Shan shin and Pean shiyayi

இந்த கோடீஸ்வரர்களின் பொதுவான சொத்துக்களின் முழுமையான பெறுமதி 170 பில்லியன் டொலராகும்.

அவர்களினால் தற்போது இந்த செயற்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ள பணம் 22 பில்லியன் டொலராகும். அது இலங்கை பணத்தில் 30 லட்சத்து 30 ஆயிரம் கோடியாகும்.

இந்த திட்டத்திற்காக உலகின் மேலும் சில கோடீஸ்வரர்கள் இணைவார்கள் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அவர்களினால் வழங்கப்பட்டுள்ள பணத்தை பயன்படுத்தி 20 வருடத்திற்குள் உலகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாத ஆற்றலை செயற்பாடுகளை அடையாளப்படுத்திக் கொள்ளப்படவுள்ளது.

பஞ்சாங்கத்தில் முன்கூட்டியே கணிக்கப்பட்ட வர்தா புயலின் தாக்கம் : அதிர்ச்சித் தகவல்!!

வர்தா புயலின் தாக்கம் சென்னையையே நிலைகுலைய வைத்துள்ளது.

வங்கக் கடலில் கடந்த 7ம் திகதி உருவான காற்று நேற்று சென்னையையே நிலைகுலைந்து போகும் அளவிற்கு பாரிய சேதங்களை ஏற்படுத்தி சென்றிருக்கின்றது

அந்தவகையில் இவ்வாறான தொரு தாக்கம் ஏற்படும் என்று முன்கூட்டியே பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டிருக்கின்றது என்றால் நம்ப முடிகிறதா? நம்பிதான் ஆக வேண்டும்.

டிசம்பர் 11 முதல் 14 வரை பெருங்காற்று இயற்கை சீற்றம் ஏற்படும் என்று பஞ்சாங்கம் கணித்துள்ளது. மேலும் டிசம்பர் 17ம் திகதி முதல் 19 வரையிலும், 22, 24,28,29 ஆகிய திகதிளில் பாரிய இயற்கை சீற்றம் ஏற்படும் என்றும் பஞ்சாங்கம் கணித்துள்ளது.

இதற்கு காரணம் கேதுவும், சுக்ரனும் கும்பத்தில் ஒன்று கூடுவதால் இயற்கை சீற்றம் ஏற்படும் என்றும், ஜனவரியில் புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் பருவநிலையில் மாற்றம் ஏற்படும் என்றும் கணித்துள்ளது

இவ்வாறு அறிவித்ததைப் போலவே நேற்று பல பாகங்களிலும் சேதத்தை ஏற்படுத்தி சென்றிருக்கின்றது வர்தா புயல்.

பஞ்சாங்கம் கணித்தது போலவே டிசம்பர் 11ல் இயற்கை சீற்றம் ஏற்பட்டுள்ளது. வர்தா புயல் சென்னையை வளைத்து வளைத்து சூறையாடியது. டிசம்பர் இறுதியில் எப்படியிருக்குமோ பார்க்கலாம்.

யாழில் வாள்களுடன் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள்!!

யாழ். கிராமிய சிவில் பாதுகாப்பு குழு தலைவருடைய வீட்டிற்குள் மர்ம நபர்கள் சிலர் வாள்களுடன் நுழைந்த சம்பவம் ஒன்று நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து, குறித்த விடயம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்த போது சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும், சந்தேகநபர்கள் கொண்டு வந்ததாக கூறப்படும் வாள் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சுன்னாகம் பொலிஸாரினால் உருவாக்கப்பட்டுள்ள கிராமிய சிவில் பாதுகாப்பு குழுவின் தலைவர் துவாரகன் என்பவருடைய வீட்டுக்குள் இன்றைய தினம் அதிகாலை 2 மணியளவில் மர்ம நபர்கள் புகுந்துள்ளனர்.

இதனையடுத்து, துவாரகன் அயல் வீட்டாருக்கும், பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளார். உடுவில் அம்பலவாணர் வீதியில் உள்ள துவாரகனின் வீட்டுக்கு உடனடியாக பொலிஸார் வருகை தந்த நிலையில் மர்ம நபர்கள் தப்பி சென்றுள்ளனர்.

எனினும், பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது பொலித்தீன் பையினால் சுற்றப்பட்ட நிலையில்

வாள் ஒன்றையும், செருப்பு ஒரு சோடியையும் மீட்டுள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பிரான்சில் 10 பேர் அதிரடியாக கைது : காரணம் என்ன?

பிரான்சில் நேற்று அதிரடியாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் ஊடகங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

பிரான்சில் நீஸ் நகரில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் நடவடிக்கையுடன் தொடர்புடைய என சந்தேகிக்கப்படும் 10 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் இடம்பெற்ற இந்த தாக்குதலில் 86 பேர் உயிரிழந்திருந்த நிலையில் 100க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருந்தனர்.

இந்நிலையில், குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவிய 10 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர்களில் 9 பேர் நீஸ் நகரிலும், ஒருவர் Nantes நகரிலும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், Elite அதிரடிப்படையினர் மேற்கொண்டி சுற்றிவளைப்பின் போது அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள 10 பேரையும் 96 மணி நேர் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டவுள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

75 ஆண்டுக்குப் பின் புயலின் கோரத்தாண்டவம் : இன்றும் தொடரும் என எச்சரிக்கை!!

அதிதீவிர வர்தா புயல் சென்னையைத் தாக்கி கரையை கடந்த நிலையிலும் இன்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

புயல் கரையை கடந்த பின் வலுவிழந்ததால் காற்றின் வேகம் மணிக்கு 75 முதல் 85 கிலோ மீட்டர் வரை இருந்தது. புயல் கரையை கடந்தாலும் தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் இன்று பல இடங்களில் மழை பெய்யும்.

இதேவேளை, இப்படி ஒரு இயற்கை சீற்றம் வரும் என்று தமிழ் பஞ்சாங்கத்தில் முன்பே கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜனவரியில் புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் பருவநிலையில் மாற்றம் ஏற்படும் என்றும் கணித்துள்ளது.

பஞ்சாங்கம் கணித்தது போலவே டிசம்பர் 11இல் இயற்கை சீற்றம் ஏற்பட்டுள்ளது. வர்தா புயல் சென்னை வளைத்து வளைத்து சூறையாடியது.

டிசம்பர் இறுதியில் எப்படியிருக்குமோ? வர்தா புயலின் தாக்கமே இப்படி இருக்கும் நிலையில் இதைவிட ஒரு கொடூரமான தாக்குதல் சென்னைக்கு வந்தால் இதை அடுத்து அந்த தாக்குதலின் விளைவிற்கு இலங்கையும் முகம் கொடுக்க வேண்டும் என்பதும் உண்மை.

இதேவேளை, தமிழகத்தில் வர்தா புயல் பாதிப்பை தொடர்ந்து வெள்ளம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக தமிழக அமைச்சகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கட்டாரில் அடிமையாக்கப்படும் இலங்கையர்கள்!!

கட்டாரில் இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாட்டுப் பணியாளர்கள் அடிமைகளாக நடத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபையினால் இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

கட்டாரில் உலக கிண்ண காற்பந்தாட்டத் தொடருக்கான மைதான நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டுப் பணியாளர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

உரிய சம்பளம் வழங்கப்படாமல், நேரக் கட்டுப்பாடு இன்றி இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் கடுமையாக அங்கு வேலை வாங்கப்படுவதாக முன்னரே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலை தொடர்ந்தால் 2022ம் ஆண்டு அங்கு உலக கிண்ண தொடர் நடத்துவது தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தொழிலாளர்களின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான புதிய சட்டத்திருத்தங்களை கட்டார் அரசாங்கம் இன்று முதல் அமுலாக்குகிறது.

எனினும் இவ்வாறான சட்ட அமுலாக்கத்தின் பின்னரும் தொழிலாளர்கள் கடுமையாக நடத்தப்படக்கூடிய அபாயம் இருப்பதாக மன்னிப்பு சபை சுட்டிக்காட்டியுள்ளது.

வர்தா புயல் : 7 பேர் பலி, 2000 மின் கம்பங்கள், 15,000 மரங்கள் சாய்ந்தன!!

சென்னையை கடும் சூறைக் காற்றுடன் புரட்டிப் போட்ட வர்தா புயல், சென்னை துறைமுகத்தில் திங்கள்கிழமை மாலை 6.30 மணிக்கு கரையைக் கடந்தது.

புயல் கரையைக் கடந்தாலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

புயலின் சீற்றம் காரணமாக 7-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுமார் 40 பேர் காயம் அடைந்தனர். சென்னையிலும் புறநகர்ப் பகுதிகளிலும் 120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய கடுமையான சூறைக் காற்று காரணமாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன.

சென்னையில் அதிக பாதிப்பை வர்தா புயல் ஏற்படுத்தியதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டது.

தமிழகத்தில் காலதாமதமாக வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இந்த நிலையில் தென்மேற்கு வங்கக் கடலில் நவம்பர் 30ம் திகதி நடா புயல் உருவாகியது. இந்தப் புயலானது கரையைக் கடப்பதற்கு முன்பே வலுவிழக்கத் தொடங்கியது. இதன் காரணமாக, கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் சில இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. இருப்பினும், நடா புயலானது காரைக்கால் அருகே டிசம்பர் 2ம் திகதி கரையைக் கடந்தது.

தென்கிழக்கு வங்கக்கடலில் டிசம்பர் 7ம் திகதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் மாறி, விசாகப்பட்டினத்தின் அருகே நிலை கொண்டிருந்தது. அதனையடுத்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது புயலாக மாறியது. வர்தா என்று பெயரிடப்பட்ட இந்தப் புயலானது தீவிர புயலாக மாறியது.

இந்தப் புயலானது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்தது. மணிக்கு மெதுவாக 2 கி.மீ. வேகத்தில் மட்டுமே நகர்ந்து கொண்டிருந்த புயலானது, ஆந்திர மாநிலம் நெல்லூர்-காகிநாடா இடையே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டது. இதனால் தமிழகத்துக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், புயலின் திசையானது மேற்கு தென்மேற்காக மாறத் தொடங்கியது. இதன் காரணமாக, புயலானது அதிதீவிர புயலாக மாறி சென்னையை நோக்கி நகரத் தொடங்கியது. மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த புயலானது, சென்னைக்கு அருகே திங்கள்கிழமை நண்பகல் கரையைக் கடக்கத் தொடங்கியது. இதையடுத்து, சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

சென்னைக்கு அருகில் 300 கி.மீ. தொலைவில் வர்தா புயல் வந்தபோதே, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதலே மழை பெய்யத் தொடங்கியது.

வர்தா புயலானது திங்கள்கிழமை 2 பிரிவுகளாக மாறி கரையைக் கடந்தது. புயலின் மத்தியப் பகுதியானது திங்கள்கிழமை நண்பகல் 12 மணி முதல் 3.30 மணி வரை கரையைக் கடந்தது.

இதன் காரணமாக திங்கள்கிழமை காலை முதலே சென்னை உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் கன மழை பெய்யத் தொடங்கியது. புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் சூறைக் காற்றுடன் மழை கொட்டத் தொடங்கியது. மழையும், காற்றும் ஒரு சேர அடித்தது. இதனால் சாலையில் மக்கள் நடமாட முடியாமலும், வாகனங்கள் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டது.

புயலின் கிழக்குப் பகுதியானது மாலை 4 மணி முதல் 6.30 மணியளவில் கரையைக் கடந்தது. புயலானது கரையைக் கடந்தபோது மணிக்கு 110 முதல் 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. காற்றின் வேகத்தாலும், மழையின் தாக்கத்தாலும் மக்கள் வெளியே வராமல், வீடுகளிலேயே முடங்கினர்.

புயல் கரையைக் கடந்து நிலப்பகுதிக்குள் நகர்ந்து வர வர மேலும் வலுவிழக்கும். காற்றின் வேகமும் படிப்படியாகக் குறையத் தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன் கூறியது:- அதிதீவிர புயல் வர்தா, சென்னை துறைமுகப் பகுதியில் நுழைந்து கரையைக் கடந்து திங்கள்கிழமை இரவு கிழக்கு திசையை நோக்கிச் செல்கிறது. இதன் காரணமாக மரக்காணம் முதல் ஸ்ரீஹரிகோட்டா வரை மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகம் வரை காற்று வீசக்கூடும்.

புயல் கரையைக் கடந்த பிறகு, தொடர்ந்து வலுவிழக்கத் தொடங்கும். இதன் காரணமாக மழையின் தாக்கமும், காற்றின் வேகமும் குறையத் தொடங்கும். இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் கன மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கத்தில் திங்கள்கிழமை அதிகபட்சமாக 160 மி.மீ. மழையும், அதற்கு அடுத்தபடியாக ஸ்ரீபெரும்புதூரில் 150 மி.மீ. மழையும் பெய்துள்ளது என்றார் அவர்.

புயலானது கரையைக் கடந்தாலும், தென்தமிழக கடல் பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகம் வரையில் பலமான காற்று வீசக்கூடும்.

மேலும் தமிழகம், புதுவை கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடனும், சீற்றத்துடன் காணப்படும். எனவே மீனவர்கள் செவ்வாய்க்கிழமையும் கடலுக்குள் செல்ல வேண்டாம். கடலோரப் பகுதிகளில் குடிசைப் பகுதியில் வசிப்போர் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

-தினமணி-

யாழில் கைக்குண்டு மீட்பு!!

ஏழாலை தெற்கு – மயிலங்காடு பகுதியில் உள்ள தோட்ட வளவினுள் இருந்து, கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

நேற்று (12.12.2016) வளவினை துப்புரவு செய்த உரிமையாளர், கைக்குண்டு இருப்பதனை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவுக்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் கைக்குண்டு மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.

22 ஆண்டுகளுக்குப் பின் சென்னையை நாசக்காடாக்கிய புயல்!!

வர்தா புயல் நேற்று பிற்பகல் சென்னை துறைமுகம் அருகே கரையைக் கடந்தது. 22 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னையை மிக சக்திவாய்ந்த புயல் தாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையை 22 ஆண்டுகளுக்குப் பின்னர் சக்தி வாய்ந்த புயல் இன்று தாக்கியது. அந்த புயல் சென்னை துறைமுகம் அருகே பிற்பகலில் கரையைக் கடந்தது.

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த வர்தா புயல் சென்னை பழவேற்காடு அருகே நேற்று 3 மணி முதல் 4 மணிக்குள் கரையைக் கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையின் முக்கிய சாலைகளில் மரங்கள் விழுந்து கிடப்பதால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மின் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை உட்பட கடலோர மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

22 ஆண்டுகளுக்குப் பின்னர்

கடந்த 1994ம் ஆண்டு அக்டோபர் 31ம் திகதி சென்னை மாநகரை புயல் நேரடியாகத் தாக்கியது. தற்போது 22 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னையை நேரடியாக புயல் தாக்கியுள்ளது.

ஒரே நாளில் 24 செமீ மழை

அப்போது மணிக்கு 116 கிமீ முதல் 132 கிமீ வரையில் மிக பலத்த காற்று வீசியது. அன்றைய ஒரே நாளில் சென்னையில் 24 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது.

நிலம் புயல்

2012ம் ஆண்டு நீலம் புயல் சென்னையை அடுத்த மகாபலிபுரம் அருகே கரையைக் கடந்தது. தற்போதைய புயல் சென்னை துறைமுகம் அருகே கரையக் கடந்துள்ளது. இதனால் கடலோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் 33 குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்குமாறு மக்கள் கோரிக்கை!!

 
வவுனியா கணேசபுரம் பத்தினாதபுரம் பகுதியில் நேற்று (12.12.2016) காலை 10 மணியளவில் ஒன்றிணைந்த பொது மக்கள் தமது நீண்டகாலகோரிக்கையினை அரச அதிகாரிகள் தீர்த்துவைக்கவில்லை, தமது அடிப்படைத் தேவையான வீட்டுத்திட்டத்தில் தம்மை பறக்கணித்துவருவதாகவும் தெரிவித்து ஊடகங்களுக்கு தமது நிலையினைத் தெரிவித்து இப்பிரச்சினையினை வெளிக்கொணருமாறும் கோரியுள்ளனர்.

குறிப்பாக இந்தியாவிலிருந்து திரும்பி வந்த குடும்பங்கள் உட்பட 33 குடும்பங்கள் வீடுகளின்றி தமது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் நீண்டகாலமாக வசித்து வருவதாகவும் இதில் 15ற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிரந்தரக்காணிகள் அற்ற நிலையில் வாழ்ந்து வருவதாகவும் தமது இக்கோரிக்கையினை அரச அதிகாரிகள் கண்டும் பாராமுகமாக இருந்து வருவதாகவும் இக்கிரமத்திற்கு கிராமசேவையாளர் பணியாற்ற வருவதில்லை, அருகிலிருக்கும் கிராமத்திற்கு இப்பகுதி மக்கள் கால் நடையாக சென்று தமது தேவைகளைப் பூர்த்தி செய்து வருவதாகவும் தமது விசனத்தைத் தெரிவித்துள்ளனர்.

33 குடும்பங்களைச் சேர்ந்த குடும்ப அங்கத்தவர்கள் ஒன்றிணைந்து தமது தேவைகளைப் பூர்ர்திசெய்து தருமாறு கோரியுள்ளனர்.

வவுனியா பூந்தோட்டம் கலைமகள் முன்பள்ளி பெற்றோர் தின விழாவும் கலை விழாவும்!!

 
வவுனியா பூந்தோட்டம் கலைமகள் முன்பள்ளி பெற்றோர் தின விழாவும் கலை விழாவும் நேற்று முன்தினம் (11.12.2016) காலை 9 மணிக்கு நரசிங்கர் ஆலய கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.

பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளுடன் ஆரம்பமான இன் நிகழ்வில் க.வேலாயுதபிள்ளை (பூந்தோட்டம் பிரதேச முன்பள்ளிக்கட்டமைப்புத் தலைவர்), செந்தில்நாதன் மயூரன் ( வடமாகாணசபை உறுப்பினர்) , வடமாகாண சுகாதார அமைச்சரின் இணைப்பாளர் பாலச்சந்திரன் சிந்துஜன், கோ.தர்மபாலன்(முன்பள்ளி உதவிக்கல்விப் பணிப்பாளர், வவுனியா தெற்கு), கி.நந்தபாலன் (அதிபர், பூந்தோட்டம் மகாவித்தியாலயம்), பெற்றோர்கள், பொதுமக்கள், அரச மற்றும் அரசார்பற்ற நிறுவனங்களின் ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மாணவர் கௌரவிப்பு , மாகாணமட்ட மாணவர் கௌரவிப்பு , பெற்றோர் கௌரவிப்பு, விருந்தினர் உரை என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா ஓமந்தை முருகன் ஆலயத்தில் திருடர்கள் கைவரிசை!!

வவுனியா – ஒமந்தை, ஆறுமுகத்தான் புதுக்குளம் பகுதியில் அமைந்துள்ள முருகன் ஆலயத்தில் திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இன்று பகல் 11 மணியளவில் பூஜைக்காக குருக்கள் ஆலயத்திற்குச் சென்ற போதே ஆலயம் உடைக்கப்பட்டு திருடப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து ஓமந்தை பொலிசாருக்கு ஆலய நிர்வாகத்தால் தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வவுனியா, ஓமந்தை, ஆறுமுகத்தான் புதுக்குளம் பகுதியில் உள்ள முருகன் ஆலயம் பழமை வாய்ந்தது. ஆறுமுகத்தான் புதுக்குளத்தை சூழவுள்ள சேமமடு, மாளிகை, அலைகல்லுப்போட்டகுளம், பன்றிக்கெய்தகுளம் என 15க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வழிபட்டு வரும் ஒரு ஆலயம் ஆகும்.

1954ஆம் ஆண்டு முதல் கட்டுமானவேலைகள் இடம்பெற்று காட்சியளித்த இவ் ஆலயத்தின் மதில் வழியாக உள் நுழைந்த திருடர்கள் வலது புறமாக உள்ள கதவை உடைத்து ஆலயத்தின் மூலஸ்தானத்தில் இருந்த ஐம்பொன் முருகவேல், ஆலயத்தில் இருந்த வள்ளி, தெய்வானை சிலைகள் என்பவற்றை திருடிச் சென்றுள்ளதுடன், ஆலய உண்டியலும் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணமும் திருடப்பட்டுள்ளது.

செப்பில் செய்யப்பட்டிருந்த வைரவர் சிலை உடைக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

வர்தா புயலின் தாக்கத்தினால் முல்லைத்தீவில் 4,500 குடும்பங்கள் பாதிப்பு!!

வர்தா புயல் தாக்கத்தினால் 4,500 க்கும் அதிகமான குடும்பங்கள் முல்லைத்தீவில் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா தெரிவித்துள்ளார்.

கடந்த நான்கு நாட்களாக முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்லாத நிலையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வர்தா புயல் இன்று மாலையில் தமிழகம் சென்னையை ஊடறுத்து செல்லும் என ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், இன்று பிற்பகல் வர்தா புயல் சென்னையை தாக்கியதாகவும் 2 பேர் பலியாகி உள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா பம்பைமடுவில் விபத்து :  ஒருவர் படுகாயம்!!

 
வவுனியா பம்பைமடுவில் இன்றைய தினம் (12.12.2016) இரவு 7.00 மணியளவில் பட்டா வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..

வவுனியாவில் இருந்து பம்பைமடு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த அப்பாச்சி ரக மோட்டார் சைக்கிளும் பம்பைமடுவிலிருந்து வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பட்டா வாகனமும் பம்பைமடு சந்திக்கு அருகாமையிலுள்ள வளைவில் சென்று கொண்டிருக்கும் போது நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயங்களுக்குள்ளானதால் அவர் உடனடியாக அருகில் இருந்தவர்களால் பூவரசங்குளம் வைத்தியசாலைக்கு அழைப்பினை மேற்கொண்டு அம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அவ்விடத்துக்கு வருகைதந்த பூவரசங்குளம் போக்குவரத்துப் பொலிசார் மதுபோதையில் வாகனம் செலுத்தியதாலே இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையின் போது தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை பூவரசங்குள பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

மாபெரும் கிருஸ்மஸ் மரத்தின் நிர்மாணப் பணிகள் மீளவும் ஆரம்பம்!!

தற்காலிகமாக நிறுத்தப்பட்ட, மாபெரும் கிருஸ்மஸ் மரத்தின் நிர்மாணப் பணிகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

காலி முகத்திடல் பகுதியில் குறித்த கிருஸ்மஸ் மரத்தின் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

எனினும், கர்திணால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் கோரிக்கைக்கு அமைய, இந்த நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.

எதுஎவ்வாறு இருப்பினும், மீளவும் இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, இப் பணிகளை முன்னெடுக்கும் குழுவின் தலைவர் மங்கள பி.குணசேகர தெரிவித்துள்ளார்.