வவுனியா ஒமந்தை சேமமடுவில் நேற்று (12.12.2016) இரவு 8 மணியளவில் யானை தாக்கி 77 வயது முதியவர் ஒருவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த முதியவரின் வலது பக்க கால் முறிவடைந்துள்ளாதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இப் பகுதியில் காட்டுயானைகளினால் மக்கள் பல்வேறு உள்ளாகின்றமை குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலியா ஆற்றில் வீழ்ந்து மாயமான இலங்கை பிரஜையை தேடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்று கிழமை குறித்த இலங்கை பிரஜை (Janaka Kumara Jayasooriya Mudiyanselag) தனது நான்கு நண்பர்களுடன் Carlton Gorge ஆற்றுக்கு சென்றதாக அந்நாட்டின் மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை பிரஜை, மிக உயரத்திலிருந்து ஆற்றில் செங்குத்தாக பாய்ந்துள்ளார் என்றும் 20 விநாடிகளின் பின்னர் அவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளாதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால்,காணாமல் போன நண்பர்களில் ஒருவர் அதே உயரத்திலிருந்த பாய்ந்துள்ளார் அப்போதும் குறித்த நண்பரை கண்டுப்பிடிக்க முடியவில்லை ஏதோ தவறு நடந்துள்ளது என அவரது நண்பர் கூறியுள்ளார்.
நண்பரை கண்டுப்பிடிப்பதற்காக அவர்கள் 40 நிமிடங்கள் முயற்சி செய்துள்ளனர்.
ஆனால் அவரை கண்டுப்பிடிக்க முடியவில்லை, இந்த விடயம் குறித்து இலங்கையில் உள்ள ஜனாக குமாரவின் குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்டதாக அதிகாரி தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த இலங்கை பிரஜையை மீட்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் Kununurra பகுதிக்கு விசேட மூன்று பொலிஸ் படகுகள் வரவழைக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சவுதி அரேபிய சட்டத்தை மீறிய பெண் கைது செய்யப்பட்டு நேற்றைய தினம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த பெண், ரியாத் நகரில் கடந்த மாதம் சவுதி அரசின் சட்டத்தை மீறி தைரியமாக புகைப்படங்களை எடுத்து டுவிட்டர் கணக்கில் பதிவேற்றம் செய்துள்ளார்.
தலைமுதல் கால் வரை மறைக்கும் ஆடைகளையே (நிகாப்) சவுதி பெண்கள் அணிய வேண்டும் என சவுதி சட்டத்தில் உள்ளது.
ஆனால் குறித்த பெண் அந்த சட்டத்தை மீறி புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார் என அந்நாட்டு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் Fawaz al-Maiman குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பெண் செய்த செயல் பல சர்ச்சைகளை ஏற்ப்படுத்தியிருந்த நிலையில் அவர் நேற்றைய தினத் கைது செய்யப்பட்டார் என பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும் குறித்த பெண்,உறவினர்களுடன் தொடர்பில்லாத ஆண்களுடன் வெளிப்படையாகவே பேசுவார் என்றும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நாட்டின் சட்டத்திற்கு முரணாக நடந்துக்கொள்ளும் இவ்வாறானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் என்றும் இவ்வாறு செயற்ப்படுபவர்களுக்கு இஸ்லாமிய போதனைகளை கற்பித்துக்கொடுக்க வேண்டும் என்றும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
உலக இந்துக்களால் இன்று(13.12.2016) கார்த்திகைத்தீப நிகழ்வு சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
வவுனியாவிலும் கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு வீடுகளிலும், ஆலயங்களிலும் வாழைக் குற்றி நாட்டிவைத்து அதன் மேல் தீபப்பந்தம் ஏற்றியும் வீடுகளுக்குள்ளும் வெளியிலும் சிட்டி விளக்குகளில் தீபமேற்றி, நேர்த்தியாக அலங்கரித்து வீடுகளை தீபங்களால் அழகுபடுத்தி வழிபடுகின்ற நிகழ்வு வெகு சிறப்பாக இடம்பெற்றது.
மேலும் அனைத்து ஆலயங்களிலும் சிறப்புப் பூஜைகளும், விளக்கீட்டு நிகழ்வுகளும் நடைபெற்றதுடன் பெருமளவிலான மக்கள் கலந்துகொண்டத்தையும் காணக்கூடியதாக இருந்தது.
கார்த்திகை விளக்கீட்டின் தத்துவம்
படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும் காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பலவருடங்கள் போரிட்டனர்.
சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றினார். அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர்.
அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காட்டியருளினார். இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை விளக்கீடு ஆகும்.
வவுனியாவில் இன்று(13.12.2016) முற்பகல் நெடுங்கேணி பாடசாலை ஒன்றில் க.பொ.த சாதாரணப்பரீட்சை எழுதும் மாணவியை வவுனியாவிலிருந்து சென்ற நபர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ள முயன்றபோது பொலிசார் சம்பவ இடத்திற்குச் சென்று முறியடித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..
வவுனியா வடக்கு நெடுங்கேணி, சிவாநகர் பகுதியிலுள்ள காட்டுப்பகுதி ஒன்றிற்கு குறித்த பாடசாலை மாணவியை வருமாறு இளைஞன் இன்று முற்பகல் அழைத்துச் சென்றுள்ளார்.
குறித்த இளைஞன் வவுனியா நகரிலிருந்து பேரூந்தில் சென்று அப்பகுதியில் இறங்கி இருவரும் குறித்த காட்டுப்பகுதிக்குச் சென்றுள்ளனர்.
மாணவிகள் இருவர் துவிச்சக்கரவண்டியில் சென்று காட்டுப்பகுதிக்குச் செல்லும் இடம் ஒன்றில் துவிச்சக்கரவண்டியை நிறுத்திவிட்டு காட்டுப்பகுதியை நோக்கிச் சென்றபோது, இச்சம்பவங்களை தொலைவிலிருந்து குடும்பப் பெண்மணி அவதானித்து கொண்டிருந்துள்ளார்.
இவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதையடுத்து நெடுங்கேணிப் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் இருமாணவிகள், வவுனியா இளைஞன் மற்றும் துவிச்சக்கரவண்டி என்பனவற்றை நெடுங்கேணி பொலிஸ் நிலையத்திற்குச் கொண்டு சென்றுள்ளனர். மேலதிக விசாரணைகளை நெடுங்கேணிப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா சுந்தரபுரத்தில் இரு குழுக்களுக்கிடையே நேற்று (12.12.2016) மாலை ஏற்ப்பட்ட மோதலில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா சுந்தரபுரத்தில் நேற்று (12.12.2016) மாலை 5 மணியளவில் வர்த்தக நிலையத்திற்கு சென்ற இளைஞன் மீது மது போதையிலிருந்த மூன்று இளைஞர்கள் இடுப்புப்பட்டியால் ( பெல்ட்) தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இத் தாக்குதலுக்குள்ளான குறித்த இளைஞன் தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக தாக்குதல் மேற்கொண்டவர்களை தள்ளிவீழ்த்தியுள்ளார். இச் சம்பவத்தில் காயமடைந்த இரு இளைஞர்கள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
பிரான்ஸ் நாட்டில் இந்த ஆண்டு நடைபெற்ற Miss Elegante France அழகி போட்டியில் 30ற்கும் மேற்பட்ட நாட்டு அழகிகளுக்குள் Miss Elegante France அழகியாக ஈழத்து தமிழ் பெண் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சபறினா கணேசபவன் என்ற ஈழத்து தமிழ் பெணே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
காலி – வந்துரும்ப பகுதியில் சுப்பர் மார்க்கெட்டில் கைவரிசையை காட்டிய பெண் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் சுப்பர் மார்க்கெட்டிலிருந்து பால்மா பைக்கற்றுக்களை திருடியுள்ளார். சுப்பர் மார்க்கெட்டில் உள்ள சிசிடிவி கமராவின் காட்சிகளை வைத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்தே குறித்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சிசிடிவி கமராவின் காட்சிகளை வைத்து பார்க்கும் போது 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இந்த திருட்டில் ஈடுப்பட்டுள்ளார் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்னை பந்தேகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவரை இந்த மாதம் 20 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பில் வந்துரும்ப பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றன்றமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் தண்ணீர் இறைக்கும் மோட்டார், ஜெனரேற்றர் போன்றவற்றை திருடிய மூன்று இளைஞர்களை ஓமந்தை பொலிசார் இன்று(13.12.2016) கைது செய்துள்ளதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..
வவுனியா ஓமந்தையிலிருந்து சேமமடு செல்லும் பிரதான வீதியில் ஆட்கள் இல்லாதவீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த தண்ணீர் இறைக்கும் மோட்டார், ஜெனரேற்றர் என்பனவற்றை திருடியுள்ளதாக கடந்த வாரம் ஓமந்தை பொலிசில் முறைப்பாடு ஒன்றினை வீட்டின உரிமையாளர் மேற்கொண்டுள்ளார்.
இதன் அடிப்படையில் ஓமந்தை பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளின்போது ஓமந்தை மற்றும் பென்னாவரசன்குளம் பகுதிகளிலுள்ள மேசன் தொழில் செய்யும் மூன்று இளைஞர்களை கைது செய்துள்ளதாகவும் அவர்களிடமிருந்து திருட்டுப்போன தண்ணீர் இறைக்கும் மோட்டார் மற்றும் ஜெனறேற்றர் என்பனவற்றையும் நேற்று (12.12.2016) மீட்டுள்ளதாகவும் ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர்.
இவர்களை மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
வவுனியா இராசேந்திரகுளம் ஆடைத் தொழிச்சாலைக்கு அருகில் நிலை கொண்டிருந்த விஷேட அதிரடிப்படையின் தமது பாவனையிலிருந்த இராணுவ முகாமினை நேற்று முன்தினம் (11.12.2016) அவ்விடத்திலிருந்து அகற்றியுள்ளனர்.
கடந்த 19 வருடமாக யுத்தம் இடம்பெற்றபோதிலிருந்து இப்பகுதியில் விஷேட அதிரடிப்படையினர் முகாமினை அமைத்து தமது பாவனையில் வைத்திருந்தனர்.
அத்தோடு வவுனியா செட்டிகுளம் பிரதான வீதியில் சோதனைச்சாவடியாகவும் யுத்த காலத்தில் இருந்து வந்துள்ளது.
வன இலாகா திணைக்களத்திற்குரிய குறித்த காணியிலிருந்து இராணுவத்தினர் முகாமினை அகற்றி தமது பொருட்களை ஏற்றிச் செல்வதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
அரசின் அறிவிப்பையும் மீறி பல சென்னைவாசிகள் மெரினாவில் குவிந்து செல்ஃபி எடுத்து மகிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வர்தா என்ற கோரப் புயல் நேற்று பிற்பகலில் தாக்கக் கூடும் என கூறி, கடற்கரைப்பக்கம் செல்ல வேண்டாம், வீட்டிலேயே இருக்கவும் என பொதுமக்களை அரசு அறுவுறுத்தியிருந்தது.
அதே போல கடல் மிகுந்த கொந்தளிப்புடன் பலத்த காற்று, மழையுடன் புயல் கரையை கடந்தது.
மக்களின் பாதுகாப்பிற்காக கடற்கரை பக்கம் செல்ல வேண்டாம் என தெரிவித்து அங்கு பாதுகாப்பு பணியிலும் பொலிஸார் ஈடுபட்டனர்.
இருப்பினும் அரசின் அறிவிப்பை அலட்சியப்படுத்தும் விதமாக சில சென்னை வாசிகள் மெரினா கடற்கரைக்கு சென்று புயலுடன், கொந்தளிப்புள்ள கடலுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.
நெடுங்கேணி ஒலுமடு கிராமத்தில் முரளி மரம் பளுத்துள்ளது. ஒரு பகுதியினர் அச்சத்திலும், ஒரு பகுதியினர் சந்தோசத்திலும் பழத்தினை பிடுங்கி விற்பனை செய்து வருகின்றனர்.
இப்படியான ஓர் சம்பவம் 1984ம் ஆண்டு நிகழ்ந்துள்ளது. அக் காலப்பகுதியில் மக்கள் வரட்சியால் பாதிக்கப்பட்டார்கள்.
அதன் பின்னர் முப்பத்திரண்டு ஆண்டுகளின்பின்னரே இப்படியான ஓர் சம்பவம் 2016ம் ஆண்டு இம் மாதமே அதிகப்படியான பழம் காய்த்துள்ளது. அதனால் இப் பகுதிவாழ் மக்கள் ஒரு பகுதியினர் அச்சத்தில் வாழ்ந்து வருகின்ற வேளை ஒரு பகுதியினர் பழங்களை பிடுங்கி விற்பனை செய்தும் வருகின்றனர்.
சிலர் பழங்களை பிடுங்குவதற்காக மரம் அறுக்கும் கருவியை பயன்படுத்தி மரங்களை அறுத்து விழுத்துவதனால் அவ்விடத்தில் பொலிசார் சென்று மரத்தை வெட்ட தடை விதித்துள்ளனர்.
மக்கள் பழங்களை பிடுங்கி ஒரு கிலோகிராம் 160 ரூபா தொடக்கம் 200 ரூபா வரை விற்பனை செய்து வருகின்றார்கள்.
பல பிரதேசங்களில் வருகைதரும் மக்கள் பழங்களை பிடுங்கி சாப்பிடுகின்றார்கள். காஞ்சிர மோட்டை வயல் பிரதேசம், முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு பகுதிகளிலும் முரளிப்பழம் காய்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா நெளுக்குளம் பொலிஸார் இன்று (13.12.2016) காலை கசிப்பு காய்சிய ஒருவரை கைது செய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
இன்று (13.12.2016) காலை 6 மணியளவில் வவுனியா நெளுக்குளம் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து நெளுக்குளம் பொலிஸ் பொருப்பதிகாரி எஸ்.அத்தனாயக்க தலமையிலான நிரோஷன் (88567), வீரசிங்க (34690 ), ரூபசிங்க(53595 ), பத்திரன(74480 ) ஆகிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் டிஸ்கோ சந்தி, தம்பனைப்புளியங்குளம் சந்தி காட்டுப்பகுதிக்குள் மறைத்து கசிப்பு காச்சிய 39 வயதுடைய ஒருவரையும் ஆறு போத்தல் கசிப்பு , கோடா , கசிப்பு வடிப்பதற்கான உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவரை மேலதிக விசாரணைகளின் பின்னர் 14.12.2016ம் திகதி வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக நெளுக்குளம் பொலிசார் தெரிவித்தனர்.
வங்கதேச பிரிமியர் லீக் டி20 தொடரில் விளையாடிய பாகிஸ்தான் வீரர் ஒருவர் தனது ஹொட்டல் அறையில் இளம்பெண் ஒருவரை தங்க வைத்திருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சமீபத்தில் வங்கதேச வீரர்களான சபீர் ரஹ்மான் மற்றும் அல் அமின் ஹொசன் இருவரும் தங்கள் அறையில் பெண்களை தங்க வைத்ததாக சிக்கலில் சிக்கினர்.
இதனால் அவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த வங்கதேச கிரிக்கெட் வாரியம், அபராதமும் விதித்தது.
இந்நிலையில் பாகிஸ்தான் வீரர் ஒருவரும் தனது அறையில் இளம்பெண் ஒருவரை தங்க வைத்திருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அந்த பெண் மீது ஏற்கனவே ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அந்த பாகிஸ்தான் வீரர் யார் என்பது தொடர்பான விபரங்களை வெளியிடவில்லை.
இந்நிலையில் அந்த பாகிஸ்தான் வீரருக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவருக்கு அபராதம் போன்ற ஏதுவும் விதிக்கப்படவில்லை.