வவுனியா – உலுக்குளம் மகாவித்தியாலயத்தில் பிறிதொரு நபருக்காக சாதாரண தரப்பரீட்சை எழுதிய அரச பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா மின்சாரசபையில் பணியாற்றும் ஒருவருக்கு சாதாரண தரப்பரீட்சையில் தோற்றுவதற்காக அனுமதியட்டை கிடைத்திருந்தது.
எனினும் இவருக்கு பதிலாக சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலயத்தில் கடமைபுரியும் ஆசிரியர் ஒருவர் பரீட்சை எழுதியுள்ளார்.
பரீட்சைக்கான அனுமதி கிடைத்த நபர், குறித்த பாடசாலை ஆசிரியருடன் ஒப்பந்தமொன்றினை மேற்கொண்டு பரீட்சையில் தோற்றச்செய்துள்ளார்.
இந் நிலையில் குறித்த நபர் மீது பரீட்சை மேற்பார்வையாளர்கள் சந்தேகம் கொண்டு பரிசோதித்தபோது பிறதொருவருக்காக பரீட்சை எழுத்தியமை தெரியவந்துள்ளது.
நேற்று கைதுசெய்யப்பட்ட ஆசிரியரை இன்று பிற்பகல் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 16.12.2016 வரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா மாவட்ட மேலதிக நீதவான் எஸ்.லெனின்குமார் உத்தரவிட்டார்.
வவுனியா தாண்டிக்குளம் விவசாயக் கல்லூரிக்கு அருகில் பிரதான கண்டி வீதியின் நடுவே அமர்ந்து பெண் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் இன்று (09.12.2016) இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்த மேலும் தெரியவருகையில்..
பெண்னொருவர் தாக்கியதாக தெரிவித்து மற்றுமொரு பெண்னொருவர் நடுவீதியில் அமர்ந்தமையினால் ஏ9 வீதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
தனது வீட்டில் திருட்டுச்சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்து வவுனியா விவசாய கல்லூரிக்கு முன்பாக இளம் பெண்னொருவரை மற்றுமொரு பெண் தாக்கியுள்ளார்.
இதன் காரணமாக குறித்த இடத்தில் பொதுமக்கள் ஒன்று கூடிய நிலையில் தாக்குதலுக்குள்ளான பெண் ஏ9 விதியின் நடுவில் அமர்ந்து தனக்கு நியாயம் கோரியுள்ளார்.
இதன் காரணமாக போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்ட நிலையில் அங்கிருந்தவர்கள் போக்குவரத்து பணியை சீர் செய்திருந்தனர்.
பல மணி நேரங்கள் வீதியை மறித்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய பெண்னை பொலிசார் அதிரடியாக கைது செய்தபோது வர மறுத்த பெண்னை வலுக்கட்டாயமாக தூக்கி வாகனத்தில் ஏற்றி வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
வீதியில் அமர்ந்த பெண்ணினால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
நின்று கொண்டு தண்ணீர் குடித்தால் வீட்டில் உள்ள பெரியவர்கள் திட்டுவார்கள், உடலில் ஒட்டாது என்று சொல்வதையும் கேட்டிருப்போம்.அது ஏன் என்று தெரியுமா? ஏனெனில் நின்று கொண்டு நாம் தண்ணீர் குடித்தால், நமது உடம்பின் சிறுநீரகம், இரைப்பை குடல்பாதை போன்றவை பாதித்து, ஆர்த்திரிடிஸ் போன்ற பிரச்சனை வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.எனவே இனிமேல் நின்று கொண்டே அல்லது நடந்து கொண்டு தண்ணீர் குடிப்பதைத் தவிர்த்து, உட்கார்ந்து குடிக்கும் பழக்கத்தை நாம் அனைவரும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
நின்று கொண்டு குடிப்பதால் ஏற்படும் விளைவுகள்
நாம் நின்று கொண்டு தண்ணீரைக் குடிக்கும் போது, நீரானது நமது குடலில் நேராக பாய்ந்து, குடல் சுவற்றை வேகமாக தாக்குகிறது. இதனால் குடல் சுவர் மற்றும் இரைப்பை குடல் பாதை முழுவதும் பாதிக்கப்படுகிறது. மேலும் இதேபோல் நீண்ட நாட்கள் நின்றவாறு நீரைக் குடிப்பதால், இரைப்பை மற்றும் குடல் பாதையின் மீள்தன்மை அதிகரித்து, செரிமான பாதையில் செயல்பாட்டைக் குறைக்கிறது.தண்ணீரை நின்றபடி அல்லது நடந்தவாறு குடித்தால், சிறுநீரகங்களின் வடிகட்டும் செயல்முறை குறைந்து, சிறுநீர்ப்பையில் உள்ள ரத்தத்தில் நச்சுக்கள் தங்கி, சிறுநீரகத்தின் செயல்முறையை முற்றிலும் பாதிப்படையச் செய்கிறது.
ஆய்வுகளின் மூலம் நின்று கொண்டே தண்ணீர் குடிப்பதால், நமது உடலின் மூட்டுப் பகுதிகளில் உள்ள நீர்மங்களின் சமநிலைக்கு இடையூறை ஏற்படுத்தி, ஆர்த்ரிடிஸ் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.நாம் நின்று கொண்டிருக்கும் போது நமது உடம்பில் உள்ள சிம்பதெடிக் நரம்பு மண்டலமானது செயல்பட ஆரம்பிக்கும். இதனால் இதயத் துடிப்பு, ரத்த நாளங்கள், நரம்புகள், மன அழுத்தம், கல்லீரலில் இருந்து சர்க்கரை வெளியேற்றப்படுவது இது போன்றவை வேகமாக இயங்கும். எனவே நின்று கொண்டு தண்ணீர் குடிப்பதை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும்.
உடலின் மெட்டபாலிசம் சீராக நடைபெற, போதிய அளவில் தண்ணீரை உட்கார்ந்து கொண்டு தான் குடிக்க வேண்டும்.அதிலும் காலையில் எழுந்ததும் 3 டம்ளர் தண்ணீர், மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு முன்பு 3 டம்ளர் தண்ணீர், முக்கியமாக ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை ஒரு டம்ளர் தண்ணீர் என்று குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
ஜெயலலிதாவின் மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதிலும் நடிகை கௌதமி அன்றைய தினம் எப்படி கண்ணீர் விட்டு அங்கிருந்து நகர்ந்தார் என்பதை எல்லோரும் பார்த்திருப்போம்.இந்நிலையில் இவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியிடம் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல அதிரடி கேள்விகளை முன் வைத்துள்ளார்.
இதில் குறிப்பாக ’அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் மறைந்த நாள் வரை ஏன் யாரையும் பார்க்க விடவில்லை? ஏன் அவருடைய உடல்நலம் குறித்த தகவல்கள் ரகசியமாக உள்ளன? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவரைப் பற்றி மக்கள் தெரிந்துகொள்ளக்கூடாதா?’ என கேட்டுள்ளார்.
நயன்தாரா தற்போதெல்லாம் இளம் நடிகர்கள் படத்தில் தான் நடித்து வருகிறார். மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடி நயன்தாரா தான்.
இளம் நடிகர் என்பதால் இவர் தானும் இளமையாக இருக்க வேண்டும் என்று எண்ணியுள்ளார். இதனால் கேரளா வரை சென்று சில சிகிச்சைகள் மேற்க்கொண்டு முகத்தை புதுபொலிவுடன் மாற்றியுள்ளாராம்.
பாலி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பெண் ஒருவர் கால்நடை வளர்த்து அன்றாட தேவைகளை நிறைவேற்றி வரும் நிலை குறித்து அண்மையில் ஊடகங்களில் வெளியாகியிருந்தன.
இந்த செய்தி ஊடகங்களில் வெளியாகியதனை தொடர்ந்து பலருக்கு மத்தியில் இந்த விடயம் அதிகம் பேசப்பட்ட ஒன்றாகியது.
இந்த நிலையில் இது தொடர்பில் விசேட அவதானம் செலுத்திய திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க குறித்த பெண்ணுக்கு அரசாங்கத்தில் தொழில் வாய்ப்பு வழங்க பரிந்துரை செய்துள்ளார்.
அவருடைய பரிந்துரைக்கமைய அந்த அமைச்சின் தலைவர் பேராசிரியர் சானக அத்துகோரலவினால், அந்த பட்டதாரியான சாலிக்க நவோதனி பெர்ணான்டோவுக்கு தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபையில் ஆய்வாளர் 111 தர பதவி வழங்கப்பட்டுள்ளது.
அவரது தொழிலுக்கான நியமன கடிதம் வழங்கும் நிகழ்வு அண்மையில் அந்த அதிகார சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.
நடப்பாண்டின் கடந்த மாதங்களுக்கு சமூக வலையமைப்பு தொடர்பில் 2100க்கும் அதிமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை அணி தெரிவித்துள்ளது.
அதில் பேஸ்புக் தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதுடன், டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் தொடர்பிலும் முறைப்பாடு கிடைத்துள்ளது.
பாதுகாப்பாக இணையத்தளம் பயன்படுத்துவது தொடர்பில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வூட்டு வேலைத்திட்டம் ஒன்றை செயற்படுத்துவதற்கு இலங்கை கணினி அவசர நடவடிக்கை அணி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கல்வி அமைச்சின் உதவியின் கீழ் மாகாண மட்டத்தில் இந்த வேலைத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.
இந்தியாவின் மிக துணிச்சலான மற்றும் சர்ச்சைக்குரிய அரசியல்வாதிகளில் ஒருவராக திகழ்ந்த காலஞ்சென்ற தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் தோழியாகவும், உற்ற துணையாகவும் விளங்கியவர் சசிகலா நடராஜன்.
அவருக்கு வயது 60. ஜெ, மறைவுக்கு பிறகு அடுத்தது என்ன என்பது குறித்து, ஜெயலலிதாவின் மறைவால் ஏற்படும் வெற்றிடத்தை தேசியக் கட்சிகளால் பிடிக்க முடியாது – ஞாநி
தஞ்சை மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த சசிகலா, கள்ளர் என்னும் பலம் பொருந்திய பிற்படுத்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர். சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர் தமிழக அரசின் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்து எம். நடராஜனை மணந்தார். 1980-களில், சசிகலா ஒரு வீடியோ கடையை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
சசிகலாவுக்கு ஜெயலலிதாவின் அறிமுகம் கிடைத்தது
ஒருங்கிணைந்த தென் ஆற்காடு மாவட்டத்தின் மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியாற்றி வந்த நடராஜன், அப்போதைய கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவரான சந்திரலேகாவுடன் கொண்டிருந்த நட்பின் மூலம் அவரிடம் தனது மனைவி சசிகலாவை அறிமுகம் செய்து வைத்தார்.
சந்திரலேகா, அப்போது அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவுக்கு சசிகலாவை அறிமுகப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இப்படித் ஜெயலலிதாவின் நட்பு வளையத்திற்குள் வந்த சசிகலா, வீட்டில் தனியே இருந்த ஜெயலலிதாவுக்கு வீடியோ கேசட்களை கொண்டு சென்று கொடுத்துள்ளார்.
பின்னர் ஜெயல்லிதா கலந்து கொண்ட அதிமுக பொதுக்கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை வீடியோ பதிவு செய்யும் வேலையும் அவருக்குக் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. பின்னாட்களில், இருவரும் பிரிய முடியாத தோழிகளாயினர்.
எம்ஜிஆரின் மறைவுக்கு பிறகு அதிமுகவின் ஜெயலலிதா பிரிவு என்ற அணியை ஜெயலலிதா தலைமை தாங்கி வந்த காலத்தில், சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள ஜெயலலிதாவின் வீடான வேதா இல்லத்தில் சசிகலா நிரந்தரமாக குடியேறினார்.
சில காலத்திலேயே ஜெயலலிதாவுக்கும், சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பால், நடராஜன், ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீடை அணுகுவதிலிருந்து தடை செய்யப்பட்டாலும், சசிகலா மட்டும் ஜெயலலிதாவின் தோழியாக, ஜெயலலிதாவின் வீட்டிலேயே இருந்து வந்தார்.
சசிகலா எனது சகோதரி போன்றவர். அவரிடம் எனது மனதில் உள்ள பல விஷயங்களையும் நான் பகிர்ந்து கொள்வேன். என் தாய் இப்போது உயிரோடு இருந்தால் என்னை எவ்வாறு பார்த்து கொள்வாரோ, அவ்வாறு சசிகலா என்னை பார்த்துக் கொள்கிறார்.”
என்று சசிகலா குறித்து ஒரு முறை ஊடகங்களிடம் பேசிய போது ஜெயலலிதா தெரிவித்தார். சசிகலாவின் உறவினர்கள் பலரும் அதிமுகவில் செல்வாக்கு மிகுந்தவர்களாக இருந்தார்கள்.
சசிகலாவின் அக்கா மகன் டி.டி.வி. தினகரன் அதிமுகவின் செல்வாக்கு மிகுந்த நாடாளுமன்ற உறுப்பினராக வலம் வந்தார். டி.டி.வி. தினகரன் மூலமாகவே தற்போதைய தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஜெயலலிதாவின் அறிமுகம் கிடைத்தது.
சசிகலா மீதான குற்றச்சாட்டுகள்
சசிகலாவின் மற்றும் அவரது உறவினர்களின் தலையீடுகள் கட்சியிலும், ஆட்சியிலும் அதிகமாக இருந்ததாக அரசு அதிகாரிகள், அதிமுகவினர் மற்றும் ஊடகங்களில் பலமுறை புகார் எழுந்ததுண்டு.
தமிழகத்தில் 1991 முதல் 1996-ஆம் ஆண்டு வரை ஜெயலலிதா முதல்வராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 1996-இல் ஆட்சிக்கு வந்த திமுக அரசு வழக்குத் தொடுத்தது.
இந்த வழக்கில் ஜெயலலிதாவுடன், சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டு, அவர்களுக்கு தண்டனை விதித்து பெங்களூரு விசாரணை நீதிமன்றம் 2014-ஆம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. தற்போது அந்த வழக்கின் மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
அதிமுக ஆட்சியின் போது ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோரைப் பங்குதாரர்களாகக் கொண்ட ஜெயா பப்ளிகேஷன் மற்றும் சசி எண்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்கள் அரசுக்கு சொந்தமான டான்சி (தமிழ்நாடு சிறுதொழில் கழகம்) நிலத்தை வாங்கியது மிகப் பெரிய சர்ச்சையை உருவாக்கியதோடு, ஜெயலலிதாவுக்கு தண்டனையையும் பெற்றுத் தந்தது.
பின்னர் அந்த வழக்கை அவர் உச்சநீதிமன்றத்தில் வென்றார். சசிகலாவுக்கு வேண்டாதவர்களாகி விட்ட பல அதிமுக தலைவர்கள் அதற்கு பிறகு கட்சியில் ஒதுக்கப்பட்டதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு கூறப்படுவதுண்டு.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சசிகலா
கடந்த 1996ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற மற்றும் நாடளுமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தபோது, கட்சியில் இருந்து சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை ஜெயலலிதா ஒதுக்கி வைத்தார்.
ஆனால், அவர்கள் கட்சியை விட்டு விலக்கப்படவில்லை. கடந்த 2011 டிசம்பர் 11ஆம் தேதியன்று, யாரும் எதிர்பாராத வகையில், தனக்கும், தனது ஆட்சிக்கு எதிராக சசிகலாவின் குடும்பத்தினர் சில முயற்சிகளில் ஈடுபடுவதாகக் தெரிவித்த ஜெயலலிதா, சசிகலாவை தனது போயஸ் தோட்ட இல்லத்திலிருந்து வெளியேற்றினார்.
சசிகலா உள்பட பத்துக்கும் மேற்பட்ட அவரது குடும்பத்தினரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டார்.
அதற்குப் பிறகு அவரது அண்ணன் திவாகரன் கைது செய்யப்பட்டார். வி. மகாதேவனது கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டன. அவரது வீட்டில் சோதனைகளும் நடத்தப்பட்டன.
பின்னர், அதற்கு மூன்று மாதங்களுக்கு பின்னர், சசிகலா வெளியிட்ட அறிக்கையில், தனது உறவினர்கள் என்றும் நண்பர்கள் என்றும் கூறிக்கொண்டு, சிலர் ஜெயலலிதாவுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டது மிகப்பெரிய துரோகம் என்றும், ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்கள் தனக்குத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அதனை ஏற்றுக் கொண்டு மீண்டும், தனது தோழி சசிகலாவுக்கு எதிராக எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்வதாக ஜெயலலிதா அறிவித்தார்.
தவறு செய்த உறவினர்களின் தொடர்புகளைத் துண்டித்துக் கொள்வதாக சசிகலா அறிக்கை மூலம் தெரிவித்திருந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டு, அவரை அதிமுகவிலிருந்து நீக்கி, ஏற்கெனவே எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்வதாக தெரிவித்த ஜெயலலிதா
அதே நேரத்தில், சசிகலாவின் கணவர் நடராஜன் உள்பட, அவரது உறவினர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லை என்றும், கட்சித் தொண்டர்கள் அவர்களோடு எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் ஜெயலலிதா அறிவித்தார்.
சசிகலா அரசியலில் இறங்குவாரா?
முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா நடராஜன் நேரடி அரசியலில் களமிறங்க இருப்பதாக கடந்த சில மாதங்களாகவே செய்திகள் உலவி வந்தன.
தஞ்சாவூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் சசிகலா நடராஜன் போட்டியிடக் கூடும் எனவும் தகவல்கள் வெளிவந்தன. ஆனால், அவ்வாறு நடக்கவில்லை.
தற்போது ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், தற்போதுள்ள சூழலில் சசிகலா நடராஜன் நேரடி அரசியலுக்கு வருவதற்கான சாத்தியம் இருப்பதாக கூறப்படுகிறது.
ஆட்சி பொறுப்பு ஓ.பன்னீர்செல்வம் கையில் இருந்தாலும், சசிகலா அதிமுகவின் பொது செயலாளராக வேண்டுமென்றும், கட்சியையும், ஆட்சியையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமானால் அவர் அரசியலில் நுழைந்தால் மட்டுமே முடியும் என்று அவரது ஆதரவாளர்கள் எண்ணுவதாக கூறப்படுகிறது.
ஆனால் இது வரை கட்சியில் எந்த ஒரு பொறுப்பையும் வகிக்காத , ஜெயலலிதாவின் ஒரு சர்ச்சைக்குரிய தோழியாக மட்டுமே கருதப்பட்ட சசிகலா, ஜெயலலிதாவின் காலத்திலேயே அரசியல் சட்டத்துக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியாக, அதிகார மையமாக மட்டுமே விளங்கினார்.
ஜெயலலிதாவை அவர் மூலம் மட்டுமே கட்சியினர் அணுக முடிந்த நிலையில், அப்போது அவருக்கிருந்த செல்வாக்கு, ஜெயலலிதாவின் காலத்துக்கு பின்னர் தனியாக மக்கள் மத்தியில் செல்வாக்காக மாறுமா , கட்சியினர் கூட அவரை ஒரு தலைவியாக ஏற்றுக்கொள்வார்களா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயம்.
ராஜாஜி அரங்கில் ஜெயலலிதாவின் அஞ்சலி நிகழ்ச்சியின் போது 20 செல்போன்கள், 30 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்த இரண்டு பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஜெயலலிதா, கடந்த டிசம்பர் 5ம் தேதி காலமானார். பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் சென்னை ராஜாஜி அரங்கில் டிசம்பர் 6ம் தேதி வைக்கப்பட்டது.
மாலை 4.30 மணியவரை பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர். லட்சக்கணக்கான மக்கள் அங்கு திரண்டனர். இந்த கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பலரது செல்போன்கள், பணம் கொள்ளையடிக்கப்பட்டது. செல்போன்களைப் பறிக்கொடுத்தவர்கள் புலம்பினர்.
இது குறித்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாரிடமும் அவர்கள் தகவல் கொடுத்தனர்.
இந்த சமயத்தில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி ஒருவருடைய செல்போனை திருடும் போது பொதுமக்களிடம் திருடன் கையும் களவுமாக சிக்கினான். உடனடியாக பொது மக்கள் அவனை நன்றாக கவனித்து போலீஸிடம் ஒப்படைத்தனர்.
உடனடியாக திருவல்லிக்கேணி போலீஸார், அந்த நபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். போலீஸ் விசாரணையில், செல்போனை திருட முயன்றது வேலூர் மாவட்டம், குடியாத்தத்தை சேர்ந்த சுரேஷ் என்பது தெரியவந்தது.
அவர் கொடுத்த தகவலின்படி அவரது கூட்டாளி தினேஷ்குமாரையும் போலீஸார் கைது செய்தனர்.இவர்களிடமிருந்து 20 செல்போன்கள், 30 ஆயிரம் பணம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில்,
கூட்டமாக இருக்கும் இடங்களுக்கு சென்று திருடுவதே இவர்களின் வேலை. அதுபோலத்தான் ஜெயலலிதா அஞ்சலி நிகழ்ச்சியின் போதும் வேலூரிலிருந்து ஒரு கும்பல் வந்து கைவரிசை காட்டியுள்ளது.
ஜெயலலிதா இறந்த துக்கத்திலிருந்த தொண்டர்களிடமும், பொது மக்களிடமும் எளிதாக செல்போன், பணம் ஆகியவற்றை சுரேஷ், தினேஷ்குமார் திருடியுள்ளனர்.
சூளையை சேர்ந்த கௌரி கொடுத்த புகாரின் பேரில் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார். போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், ஜெயலலிதாவின் அஞ்சலி நிகழ்ச்சியின் போது அருகில் நின்றவர்களிடம் அனுதாபமாக முதலில் பேசுவார்கள்.
அப்போது அவர்களும் சுரேஷ், தினேஷ்குமாருடன் ஜெயலலிதாவைப் பற்றி பேசும்போது அவர்களின் கவனத்தை திசை திருப்பி செல்போன், பணத்தை திருடி விட்டு அடுத்த இடத்துக்கு நைசாக சென்று விடுவார்கள்.
ஒரே நபரிடம் இரண்டு செல்போன்களை கூட இவர்கள் திருடி உள்ளனர். செல்போன், பணத்தை பறிகொடுத்தவர்களில் ஒருசிலர் மட்டுமே புகார் கொடுத்துள்ளனர்.
திருடப்பட்ட செல்போன்களில் 10க்கும் மேற்பட்டவைகள் விலை உயர்ந்தவைகள். திருடிய பணத்தில் பழைய 500, ஆயிரம் ரூபாய் தாள்களும் உள்ளன என்றனர்.
நத்தார் பண்டிகையை முன்னிட்டு சில கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட உள்ளது.
நத்தார் பண்டிகையை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்ட சில கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவது வழமையானதாகும்.
அதன் அடிப்படையில் இம்முறை நத்தார் பண்டிகையை முன்னிட்டு சுமார் 400 கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட உள்ளதாக சிறைச்சாலை திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெலிக்கடை உள்ளிட்ட பிரதான சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவித்து வரும் சில கைதிகள் இவ்வாறு பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்பட உள்ளனர்.
அபராதம் செலுத்த முடியாது தண்டனை அனுபவிப்போர், பாரிய பாரதூரமான குற்றச் செயல்களுடன் தொடர்புபடாத கைதிகள் இவ்வாறு விடுதலை செய்யப்பட உள்ளனர்.
கம்போடியாவில் இளைஞன் ஒருவன் மிருகத்தனமாக 2 வயது ஆண் குழந்தைக்கு மின்சாரம் வைத்து துடிதுடிப்பதை ரசித்த சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த வீடியோவில், இளைஞன் ஒருவன் மின் கம்பியை குழந்தை உடலில் வைத்து கொடுமை செய்கிறான். வீடியோவை பதிவு செய்த இளைஞன் அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளான்.
இதைக்கண்டு பலர் அதிர்ச்சியடைந்து பொலிசில் புகார் அளித்துள்ளனர். மேலும், பாதிக்கப்ட்ட குழந்தையின் பெற்றோரும் புகார் அளித்துள்ளனர்.
சம்பவம் குறித்து விசாரணை நடத்திய பொலிசார், வீடியோவில் இருந்த வெளிநாட்டு நபர் உட்பட கம்போடியாவை சேர்ந்த இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.
இதில், முக்கிய குற்றவாளி வியட்நாமை சேர்ந்த 25 வயதான Nguyen Thanh Dung என தெரியவந்துள்ளது.
இதையடுத்து கம்போடியா பொலிசார் அளித்த தகவலின் படி, வியட்நாம் பொலிசார் நடத்திய சோதனையில் Ho Chi Minh வைத்து குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான்.
அமெரிக்காவில் கிறிஸ்மஸ் தாத்தா 9 வயது சிறுவனிடம் மன்னிப்பு கோரிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கிறிஸ்மஸ் தாத்தா வேடமிட்ட St Nick என்ற நபர், Anthony Mayse என்ற 9 வயது சிறுவனை அவமானப்படுத்தியதற்காக அவனிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
சம்பவத்தன்று Anthony Mayse அம்மா தனது இரண்டு ஆண் குழந்தைகளையும் கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் புகைப்படம் எடுக்க வட கரோலினாவின் மத்திய நகரத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.
அப்போது Anthony Mayse கிறிஸ்துமஸ் தாத்தாவிடம் தனக்கு கிறிஸ்துமஸ்பரிசாக ஐபாட் மற்றும் ஆளில்லா விமானம் ஒன்று வேண்டும் என கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்த கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்ட ஸ்ட.Nick, சிறுவனின் உடலை கண்டு அவனை அவமானப்படுத்தும் வகையில் பர்கர் போன்ற உணவுகள் உண்பதை நிறுத்துமாறு தெரிவித்துள்ளார்.
இதைகேட்டு மனமுடைந்த சிறுவன் அழுது கொண்டு வெளியே வந்துள்ளான். இதைக்கண்ட சிறுவனின் தாய் நடந்ததை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
பின்னர், அவமரியாதையாக நடந்துக்கொண்ட கிறிஸ்துமஸ் தாத்தாவை சிறுவனிடம் மன்னிப்பு கேட்க வைத்துள்ளார்.
விண்வெளியில் உள்ள செயற்கைக்கோள் குப்பைகளை சிதற செய்து அழிப்பதா அல்லது அவற்றை ஒருங்கிணைத்து மீண்டும் பூமிக்குள் கொண்டு வருவதா என்பது தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து வருவதாக விஞ்ஞானி அந்தோணி ஜீவரத்தினம் கூறியுள்ளார்.
இவர் இந்தியாவின் புதுச்சேரி மாகாணத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றிற்கு சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார். அங்கு மாணவர்கள் பலரிடம் கலந்துரையாடினார்.
அதன் பின் மாணவர்கள் கேட்ட ஒவ்வொரு கேள்விகளுக்கும் தெளிவான பதிலை அளித்துள்ளார். அதில் பல்வேறு நாடுகள் அனுப்பும் செயற்கை கோள்கள் தனது பயன்பாடு முடிந்த பிறகு விண்வெளியில் சுற்றி வருகின்றன.
இதனால் இவற்றை சிதறச் செய்து அழிப்பதா அல்லது அவற்றை ஒருங்கிணைத்து மீண்டும் பூமிக்குள் கொண்டு வருவதா என்பது தொடர்பான, பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.
மேலும் பெர்முடாவில் செல்லும் விமானம், கப்பல்கள் மாயமாக மறைந்து போய் விடுகின்றன. இது காந்த புலத்தினால் ஏற்பட்டு இருக்கலாம். வேற்று கிரகவாசிகள் எல்லாம் பெர்முடா முக்கோணத்தில் இல்லை என உறுதிபட கூறியுள்ளார்.
பூமி பேரளிவை சந்திக்கிறது, விரைவில் பூமி அழியப் போகிறது என்பது தொடர்பான பல்வேறு செய்திகள் வெளிவந்தன.
இது குறித்து மாணவர் ஒருவர் பூமியின் ஆயுட்காலம் எப்போது முடிகிறது என்று கேட்ட கேள்விக்கு, உயிரினங்கள் வாழும் இந்த பூமியானது 70 ஆயிரம் மில்லியன் ஆண்டுகள் முன் தோன்றி இருக்கிறது என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
இன்னும் 5 ஆயிரம் மில்லியன் ஆண்டுகளுக்கு பூமி ஆயுட்காலம் இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது தான் பூமியின் இறுதிக்காலம் என, யாரும் நிரூபிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.