சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பாதிரியாருக்கு இரட்டை ஆயுள்!!

சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய கேரளா மாநிலத்தை சேர்ந்த கத்தோலிக்க மத குரு ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கோட்டபுரம் மறை மாவட்டத்தின் உறுப்பினரான Fr.Figarez கத்தோலிக்க மத குருவிற்கே இந்த இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் செய்த முறைப்பாட்டை அடுத்து மத குரு கைது செய்யப்பட்டார்.

மத குரு பணியில் ஈடுபட்டிருந்த தேவாலயத்தில் பங்கு வகிகும் கத்தோலிக்க சமூகத்தை சேர்ந்த சிறுமியை கடந்த ஜனவரி மாதம் முதல் பல முறை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வந்துள்ளார்.

9 வகுப்பில் படித்து வந்த இந்த சிறுமியை குற்றவாளியான மத குரு தேவாலய வளாகத்திற்குள் வைத்து மூன்று மாதங்களாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.

மத போதகர் கைது செய்யப்படுவதை தவிர்க்க டுபாய் நாட்டுக்கு தப்பிச் சென்றிருந்தார். இதனையடுத்து கேரளா உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்துடன் நீதிமன்றம் மே மாதம் 15 ஆம் திகதி வரை பிணை வழங்கியிருந்தது. மே மாதம் 2 ஆம் திகதி அவர் நாடு திரும்பியிருந்தார்.

கோட்டபுரம் கத்தோலிக்க மறை மாவட்டம் மத குருவிற்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்திருந்தது. பொலிஸார் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தியதை அடுத்து, அவரை கத்தோலிக்க திருச் சபை சபையில் இருந்து தற்காலிகமாக நீக்கியது.

பெற்றோரின் முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், கத்தோலிக்க மத குருவை கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் திகதி கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த கேரளா நீதிமன்றம் குற்றவளியான கத்தோலிக்க மத குரு Edwin Figarez இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

2012 ஆம் ஆண்டு செல்வேஷன் ஆர்மி கிறிஸ்தவ மத பிரிவை சார்ந்த போதகர் சனில் கே. ஜேம்ஸ் என்பவருக்கும், மற்றுமொரு கிறிஸ்தவ சபை சேர்ந்த மத போதகருக்கும் இதே குற்றச்சாட்டில் 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

ஜெயலலிதாவுக்கு விஷம் வைத்த சசிகலா : ஓடியோ வெளியிட்ட வழக்கறிஞரை மிரட்டும் வீடியோ!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை சசிகலா தரப்பினர் விஷம் வைத்து கொலை செய்து விட்டதாக ஓடியோ வெளியிட்ட உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர், கிருஷ்ண மூர்த்தியை சிலர் அதற்கு மறுப்பு தெரிவிக்க கோரி மிரட்டிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை சரியில்லாத காரணத்தினால், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் கடந்த திங்கட் கிழமை திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

இந்நிலையில் ஜெயலலிதாவை மன்னார்குடி சசிகலா கும்பல் விஷம் வைத்து கொலைசெய்து விட்டதாக உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி வாட்ஸ் அப் ஓடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவியது.

தற்போது அதைத் தொடர்ந்து குறித்த நபர்கள் சிலர் வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தியை அக்கருத்துக்கு மறுப்பு தெரிவிக்கும் படி மிரட்டியுள்ள சம்பவம் வீடியோவாக வெளியாகி இணையத்தில் உலா வரத் தொடங்கியுள்ளது.

ஏழு நாட்களுக்குப் பின்னர் சசிகலா வைக்கப் போகும் புது செக்? கலக்கத்தில் பன்னீர் செல்வம்?

தமிழக முதல்வர் ஜெயலலிதா, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது கடந்த திங்கட் கிழமை திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் இன்று காலை போயஸ் கார்டனில் அமைச்சர்கள் பலர் சசிகலாவை சந்தித்து பேசியுள்ளனர்.

இதில் தற்போதைய முதல்வராக உள்ள பன்னீர் செல்வம், எடப்பாடி, தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் கூட்டுவது உள்பட பல விஷயங்களை விவாதித்ததாக கூறப்படுகிறது.

மேலும் சசிகலா, அமைச்சர்களிடம் நான் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருக்கிறேன். விவாதிக்கும் அளவுக்கு எனக்கு எந்த முக்கியத்துவமும் கிடையாது.

என்னிடம் இருந்து உத்தரவு வரட்டும் என நீங்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் கிடையாது எனவும் அம்மா ஜெயலலிதா இருந்திருந்தால் என்ன சொல்வாரோ, அதன்படியே நினைத்துச் செயல்படுங்கள் என கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில் கட்சியின் பொதுக் குழுவுக்குப் பிறகு அனைத்தையும் முடிவு செய்வோம். அதுவரையில் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாகச் செய்யுங்கள் என்றும் கூறியுள்ளார்.

தற்போது வரை பன்னீர்செல்வத்தின் பணிகளில் எந்தக் குறுக்கீடும் இல்லை. இப்படியே தொடருமா அல்லது பொதுக் குழுவுக்குப் பிறகு நிலைமை மாறுமா என்ற கேள்வி அதிமுக வட்டாரங்கள் இடையே எழுவதாக கூறப்படுகிறது.

ஆட்சி அதிகாரத்தைப் பொறுத்தவரையில், அனைத்து விஷயங்களையும் சசிகலா கவனித்து வருவதாகவும், சோ மறைவுக்கு வந்தபோது கூட அவருடைய செயல்பாடுகள் அனைத்தும் ஜெயலலிதாவின் மேனரிசத்தை ஒட்டியே இருந்ததாகவும், ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளர்களையும் தன் பக்கம் தக்க வைப்பதற்கான பணிகளும் துரித வேகத்தில் நடை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

ஜெயலலிதா இறப்பை முன்னிட்டு ஏழு நாட்கள் துக்க நாட்களாக அனுசரிக்கப்படுகிறது. அந்த ஏழு நாள் துக்கம் முடிந்த பிறகு, பொதுக் குழு குறித்த அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

கட்சியின் முழு அதிகாரம் நிரம்பிய பொதுச் செயலாளர் பதவி தேர்வுக்குப் பிறகே, ஆட்சியின் லகானை தன் பிடிக்குள் சசிகலா கொண்டு வருவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

பொய் வாக்குமூலம் அளித்து அப்பாவி ஒருவர் 5 மாதங்கள் சிறையில் : யுவதிக்கு ஒரு வருட சிறை!!

பொய் வாக்கு மூலம் அளித்­ததன் மூலம் அப்­பாவி நபர் ஒருவர் 5 மாதங்கள் சிறையில் வாடு­வ­தற்குக் கார­ண­மான யுவதி ஒரு­வ­ருக்கு பிரித்­தா­னிய நீதி­மன்­ற­மொன்று ஒரு வருட கால சிறைத்­தண்­டனை விதித்­துள்­ளது.

இங்­கி­லாந்தின் எசெக்ஸ் பிராந்­தி­யத்தில் 2014 ஆம் ஆண்டு பொலி­ஸாரால் மேற்­கொள்­ளப்­பட்ட முற்­று­கை­யின்­போது நபர் ஒருவர் கைது செய்­யப்­பட்டார். திரு­டப்­பட்ட துப்­பாக்­கி­யொன்றை அவர் வைத்­தி­ருந்­த­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டது.

அதன் பின்னர் மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­யின்­போது லீ குட்செல் எனும் மற்­றொரு நபரை சந்­தே­கத்தின் பேரில் பொலிஸார் கைது செய்­தனர்.

இரண்­டா­வது நபர் ஒரு­வரும் கைது செய்­யப்­பட்­டதை அறிந்த ஹேலி கார்ட்டர் எனும் யுவதி, அந்­ ந­ப­ருக்கு எதி­ராக பொலி­ஸா­ரிடம் வாக்­கு­மூலம் அளித்தார்.

இதனால், லீ குட்செல் 5 மாதங்கள் விளக்­க­ம­றி­யலில் இருந்தார். ஏற்­கெ­னவே கைது செய்­யப்­பட்ட நபர் மீதான வழக்கை பொலிஸார் கைவிட்­டனர். எனினும், லீ குட்­செ­லுக்கு எதி­ராக நீதி­மன்­றத்தில் நடை­பெற்ற வழக்கு விசா­ர­ணை­யின்­போது ஹேலி கார்ட்டர் சாட்­சியம் அளிப்­ப­தற்கு முன்­வ­ர­வில்லை.

இந்­நி­லையில் புத்­தாண்டு பிறப்புக் கொண்­டாட்­டத்­தின்­போது லீ குட்செல் அப்­பாவி என தனது நண்பர் ஒரு­வ­ரிடம் 23 வய­தான ஹேலி கார்ட்டர் கூறு­வதை அவரின் நண்பர் வீடி­யோவில் பதி­வு­செய்­து­கொண்டார்.

இந்த வீடியோ நீதி­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து, ஹேலி கார்ட்­ட­ருக்கு எதி­ராக வழக்கு விசா­ரணை நடை­பெற்­றது. இதில் குற்­ற­வா­ளி­யாகக் காணப்­பட்ட ஹேலி கார்ட்டர் 18 மாதங்கள் சமூக சேவை செய்ய வேண்டும் எனவும் 1,500 ஸ்ரேலிங் பவுண் அப­ராதம் செலுத்த வேண்டும் எனவும் நீதி­மன்றம் கடந்த ஒக்­டோபர் மாதம் தீர்ப்­ப­ளித்­தது.

ஆனால், இத் ­தண்­டனை போது­மா­ன­தல்ல எனக் கூறி வழக்குத் தொடுநர்கள் மேன்முறையீடு செய்தனர். இதையடுத்து ஹேலி கார்ட்டருக்கு ஒரு வருட கால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஆணுறுப்பை வெட்டி துண்டித்துக் கொண்ட நபர் : அதிர்ச்சிக் காரணம்!!

இந்­தி­யாவைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது ஆணு­றுப்பை வெட்டித் துண்­டாக்­கி­யுள்ளார். கடந்த 10 வரு­டங்­க­ளாக தான் பாலியல் உறவில் ஈடு­ப­ட்ட­தால் ஏற்­பட்ட விரக்­தியே இதற்குக் காரணம் என அவர் தெரி­வித்­துள்ளார்.

உத்­த­ரப்­பி­ர­தேச மாநி­லத்தைச் சேர்ந்த காசிராம் எனும் நபரே இந்த விப­ரீத நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டுள்ளார். 37 வய­தான காசி ராமுக்கு 18 வரு­டங்­க­ளுக்கு முன் திரு­ம­ண­மாகி தனது மனை­வி­யுடன் குடும்பம் நடத்­து­கிறார்.

இத்­ தம்­ப­திக்கு ஒரு மகளும் இரு மகன்­களும் உள்­ளனர். இந்­நி­லையில், அண்­மை யில் மது­போ­தை­யுடன் தனது வீட்­டுக்கு வந்த காசி ராம், தனது ஆணு­றுப்பை துண்­டித்­துக்­கொண்டார்.

பாலியல் உறவில் ஈடு­ப­டு­வ­தற்கு தனது மனை­வியை தான் அழைத்­த­தா­கவும் இதற்கு மனைவி மறுப்புத் தெரி­வித்­ததால், தான் ஆணு­றுப்பை வெட்­டிக்­கொண்­ட­தா­கவும் காசி ராம் தெரி­வித்­துள்ளார்.

கடந்த 10 வருட கால­மாக தான் பாலியல் உறவில் ஈடு­ப­ட­வில்லை எனவும் அவர் கூறி­யுள்ளார். ஆனால், காசி ராம் கூறு­வதை அவரின் மனைவி மறுத்­துள்ளார். “அவர் ஒவ்­வொரு நாள் இர­விலும் மது­போ­தை­யுடன் வீட்­டுக்கு வருவார்.

நான் கூறு­வதை அவர் கேட்­ப­தில்லை. என்னைப் பற்றி அவர் அக்­கறை கொள்­வ­து­மில்லை” என காசி ராமின் மனைவி தெரி­வித்­துள்ளார். “அவர் மது­போ­தை­யுடன் வீட்­டுக்கு வந்­த­தா­லேயே உற­வுக்கு நான் மறுத்தேன்.

அவர் மீது நான் கடும் கோபத்தில் இருந்தேன். நான் எந்தத் தவறும் செய்­யாத போதிலும் தற்போது அவர் என் மீது குற்றம் சுமத்துகிறார்” எனவும் காசி ராமின் மனைவி தெரிவித்துள்ளார்.

போரின் கோரப் பிடியில் தவிக்கும் குழந்தைகள்!!(வீடியோ)

யேமனில் போரின் பாதிப்பு பேரழிவை தந்துள்ளது. தலைநகர் சனாவை ஹூத்தி கிளர்ச்சிக்காரர்கள் கைப்பற்றி இரண்டு வருடங்கள் ஆகின்றன.

ஜனாதிபதி தப்பி ஓட, அமெரிக்கா பிரிட்டன் ஆதரவுடன் சவுதி தலைமையிலான கூட்டணிப்படை பெரும் இராணுவ தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது.

சிறார் ஊட்டச்சத்தின்மை இரு வருடங்களில் இருமடங்காக அதிகரித்துள்ளது. ஹஜ்ஜாவில் இருந்து வரும் பிபிசியின் தகவல்கள்.

இந்த வீடியோவின் சில காட்சிகள் மனதுக்கு சங்கடத்தை தரலாம்.

ஜெயலலிதாவின் இடம் சசிகலாவிற்கு : அம்பலமாகும் உண்மைகள்!!

இந்தியாவின் மிக துணிச்சலான மற்றும் சர்ச்சைக்குரிய அரசியல்வாதிகளில் ஒருவராக திகழ்ந்த காலஞ்சென்ற தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் தோழியாகவும், உற்ற துணையாகவும் விளங்கியவர் சசிகலா நடராஜன். அவருக்கு வயது 60.

தஞ்சை மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த சசிகலா, கள்ளர் என்னும் பலம் பொருந்திய பிற்படுத்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர். சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர் தமிழக அரசின் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்து எம். நடராஜனை மணந்தார். 1980-களில், சசிகலா ஒரு வீடியோ கடையை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

ஒருங்கிணைந்த தென் ஆற்காடு மாவட்டத்தின் மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியாற்றி வந்த நடராஜன், அப்போதைய கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவரான சந்திரலேகாவுடன் கொண்டிருந்த நட்பின் மூலம் அவரிடம் தனது மனைவி சசிகலாவை அறிமுகம் செய்து வைத்தார்.

சந்திரலேகா, அப்போது அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவுக்கு சசிகலாவை அறிமுகப்படுத்தியதாக கூறப்படுகிறது. இப்படித் ஜெயலலிதாவின் நட்பு வளையத்திற்குள் வந்த சசிகலா, வீட்டில் தனியே இருந்த ஜெயலலிதாவுக்கு வீடியோ கேசட்களை கொண்டு சென்று கொடுத்துள்ளார். பின்னர் ஜெயலலிதா கலந்து கொண்ட அதிமுக பொதுக்கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை வீடியோ பதிவு செய்யும் வேலையும் அவருக்குக் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. பின்னாட்களில், இருவரும் பிரிய முடியாத தோழிகளாயினர்.

எம்ஜிஆரின் மறைவுக்கு பிறகு அதிமுகவின் ஜெயலலிதா பிரிவு என்ற அணியை ஜெயலலிதா தலைமை தாங்கி வந்த காலத்தில், சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள ஜெயலலிதாவின் வீடான வேதா இல்லத்தில் சசிகலா நிரந்தரமாக குடியேறினார். சில காலத்திலேயே ஜெயலலிதாவுக்கும், சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பால், நடராஜன், ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீடை அணுகுவதிலிருந்து தடை செய்யப்பட்டாலும், சசிகலா மட்டும் ஜெயலலிதாவின் தோழியாக, ஜெயலலிதாவின் வீட்டிலேயே இருந்து வந்தார்.

´´சசிகலா எனது சகோதரி போன்றவர். அவரிடம் எனது மனதில் உள்ள பல விஷயங்களையும் நான் பகிர்ந்து கொள்வேன். என் தாய் இப்போது உயிரோடு இருந்தால் என்னை எவ்வாறு பார்த்து கொள்வாரோ, அவ்வாறு சசிகலா என்னை பார்த்துக் கொள்கிறார்.´´ என்று சசிகலா குறித்து ஒரு முறை ஊடகங்களிடம் பேசிய போது ஜெயலலிதா தெரிவித்தார்.

சசிகலாவின் உறவினர்கள் பலரும் அதிமுகவில் செல்வாக்கு மிகுந்தவர்களாக இருந்தார்கள். சசிகலாவின் அக்கா மகன் டி.டிவி. தினகரன் அதிமுகவின் செல்வாக்கு மிகுந்த நாடாளுமன்ற உறுப்பினராக வலம் வந்தார்.

டி.டிவி. தினகரன் மூலமாகவே தற்போதைய தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஜெயலலிதாவின் அறிமுகம் கிடைத்தது.

சசிகலாவின் மற்றும் அவரது உறவினர்களின் தலையீடுகள் கட்சியிலும், ஆட்சியிலும் அதிகமாக இருந்ததாக அரசு அதிகாரிகள், அதிமுகவினர் மற்றும் ஊடகங்களில் பலமுறை புகார் எழுந்ததுண்டு.

தமிழகத்தில் 1991 முதல் 1996-ஆம் ஆண்டு வரை ஜெயலலிதா முதல்வராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 1996-இல் ஆட்சிக்கு வந்த திமுக அரசு வழக்குத் தொடுத்தது.

இந்த வழக்கில் ஜெயலலிதாவுடன், சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டு, அவர்களுக்கு தண்டனை விதித்து பெங்களூரு விசாரணை நீதிமன்றம் 2014-ஆம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. தற்போது அந்த வழக்கின் மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

அதிமுக ஆட்சியின் போது ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோரைப் பங்குதாரர்களாகக் கொண்ட ஜெயா பப்ளிகேஷன் மற்றும் சசி எண்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்கள் அரசுக்கு சொந்தமான டான்சி (தமிழ்நாடு சிறுதொழில் கழகம்) நிலத்தை வாங்கியது மிகப் பெரிய சர்ச்சையை உருவாக்கியதோடு, ஜெயலலிதாவுக்கு தண்டனையையும் பெற்றுத் தந்தது. பின்னர் அந்த வழக்கை அவர் உச்சநீதிமன்றத்தில் வென்றார்.

சசிகலாவுக்கு வேண்டாதவர்களாகி விட்ட பல அதிமுக தலைவர்கள் அதற்கு பிறகு கட்சியில் ஒதுக்கப்பட்டதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு கூறப்படுவதுண்டு.

கடந்த 1996-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற மற்றும் நாடளுமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தபோது, கட்சியில் இருந்து சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை ஜெயலலிதா ஒதுக்கி வைத்தார். ஆனால், அவர்கள் கட்சியை விட்டு விலக்கப்படவில்லை.

கடந்த 2011 டிசம்பர் 11-ஆம் திகதியன்று, யாரும் எதிர்பாராத வகையில், தனக்கும், தனது ஆட்சிக்கு எதிராக சசிகலாவின் குடும்பத்தினர் சில முயற்சிகளில் ஈடுபடுவதாகக் தெரிவித்த ஜெயலலிதா, சசிகலாவை தனது போயஸ் தோட்ட இல்லத்திலிருந்து வெளியேற்றினார்.

சசிகலா உள்பட பத்துக்கும் மேற்பட்ட அவரது குடும்பத்தினரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டார்.

அதற்குப் பிறகு அவரது அண்ணன் திவாகரன் கைது செய்யப்பட்டார். வி. மகாதேவனது கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டன. அவரது வீட்டில் சோதனைகளும் நடத்தப்பட்டன.

பின்னர், அதற்கு மூன்று மாதங்களுக்கு பின்னர், சசிகலா வெளியிட்ட அறிக்கையில், தனது உறவினர்கள் என்றும் நண்பர்கள் என்றும் கூறிக்கொண்டு, சிலர் ஜெயலலிதாவுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டது மிகப்பெரிய துரோகம் என்றும், ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்கள் தனக்குத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அதனை ஏற்றுக் கொண்டு மீண்டும், தனது தோழி சசிகலாவுக்கு எதிராக எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்வதாக ஜெயலலிதா அறிவித்தார். தவறு செய்த உறவினர்களின் தொடர்புகளைத் துண்டித்துக் கொள்வதாக சசிகலா அறிக்கை மூலம் தெரிவித்திருந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டு, அவரை அதிமுகவிலிருந்து நீக்கி, ஏற்கெனவே எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்வதாக தெரிவித்த ஜெயலலிதா.

அதே நேரத்தில், சசிகலாவின் கணவர் நடராஜன் உள்பட, அவரது உறவினர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லை என்றும், கட்சித் தொண்டர்கள் அவர்களோடு எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் ஜெயலலிதா அறிவித்தார்.

முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா நடராஜன் நேரடி அரசியலில் களமிறங்க இருப்பதாக கடந்த சில மாதங்களாகவே செய்திகள் உலவி வந்தன. தஞ்சாவூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் சசிகலா நடராஜன் போட்டியிடக் கூடும் எனவும் தகவல்கள் வெளிவந்தன. ஆனால், அவ்வாறு நடக்கவில்லை.

தற்போது ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், தற்போதுள்ள சூழலில் சசிகலா நடராஜன் நேரடி அரசியலுக்கு வருவதற்கான சாத்தியம் இருப்பதாக கூறப்படுகிறது.

ஆட்சி பொறுப்பு ஓ.பன்னீர்செல்வம் கையில் இருந்தாலும், சசிகலா அதிமுகவின் பொது செயலாளராக வேண்டுமென்றும், கட்சியையும், ஆட்சியையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமானால் அவர் அரசியலில் நுழைந்தால் மட்டுமே முடியும் என்று அவரது ஆதரவாளர்கள் எண்ணுவதாக கூறப்படுகிறது.

ஆனால் இது வரை கட்சியில் எந்த ஒரு பொறுப்பையும் வகிக்காத, ஜெயலலிதாவின் ஒரு சர்ச்சைக்குரிய தோழியாக மட்டுமே கருதப்பட்ட சசிகலா, ஜெயலலிதாவின் காலத்திலேயே அரசியல் சட்டத்துக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியாக, அதிகார மையமாக மட்டுமே விளங்கினார். ஜெயலலிதாவை அவர் மூலம் மட்டுமே கட்சியினர் அணுக முடிந்த நிலையில், அப்போது அவருக்கிருந்த செல்வாக்கு, ஜெயலலிதாவின் காலத்துக்கு பின்னர் தனியாக மக்கள் மத்தியில் செல்வாக்காக மாறுமா, கட்சியினர் கூட அவரை ஒரு தலைவியாக ஏற்றுக்கொள்வார்களா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயம்.

198 ஆண்டுகளின் பின் தேசத் துரோக பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட புரட்சியாளர்கள்!!

ஊவா வெல்லஸ்ஸ புரட்சியில் ஈடுபட்டவர்களின் பெயர்கள் தேசத் துரோக பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

1818ம் ஆண்டு இடம்பெற்ற ஊவா வெல்லஸ்ஸ புரட்சிக்கு மொணரவில கெப்பெட்டிபொல தலைமை தாங்கினார்.

இதற்கமைய, மொணரவில கெப்பெட்டிபொல உள்ளிட்ட குழுவினரை அப்போது ஆட்சி பீடத்தில் இருந்த பிரித்தானிய ஆளுனர் தேசத்துரோக பட்டியலில் பதிவு செய்திருந்தார்.

இந்தச் சம்பவம் இடம்பெற்று 198 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தற்போது அவர்களின் பெயர்களை தேசத்துரோக பட்டியலில் இருந்து நீக்கும் வகையிலான அறிக்கையொன்றை ஜனாதிபதி வௌியிட்டுள்ளார்.

பயங்கர நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை!!

அவுஸ்திரேலியாவுக்கு மேலே பாப்புவா தீவுக்கு அருகில் உள்ளது சொலமன் தீவு. சொலமன் தீவுப் பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 8 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க வானியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இலங்கை நேரப்படி சுமார் 11 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டரில் 8 ஆக பதிவானதால், சொலமன் தீவு பகுதியில் சுனாமி எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரகிராவின் தென்மேற்கு பகுதியில் இருந்து சுமார் 42 மைல் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டு இருந்தது. நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இதுவரை தகவல்கல் எதுவும் வெளியாகவில்லை.

சுனாமியால் அடுத்த மூன்று மணி நேரத்திற்கும் பாதிப்பு இருக்கும் என்று பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

-மாலைமலர்-

ஆப்கானிஸ்தான் விமானப்படையின் விமானியாக பணிபுரியும் அகதிப்பெண்!!

afcan

ஆப்கானிஸ்தானில் அகதிப்பெண் ஒருவர் விமானப்படை விமானி ஆகியிருக்கின்றார், மேலும் இவர் ஆப்கானிஸ்தான் 2 ஆவது பெண் விமானி என்ற பெருமையை பெற்றுள்ளார்.

ஆப்கானிஸ்தான் விமானப்படையில் பெண் விமானி ஆக இருப்பவர் கேப்டன் சபியா பெரோஷி. இவர் ஆப்கானிஸ்தானின் 2 ஆவது பெண் விமானி என்ற பெருமையை பெற்றுள்ளார். விமானப்படையில் சரக்கு விமானம் ஓட்டி வருகிறார்.

அதில் என்ன விசே‌டம் என்றால் இவர் குழந்தையாக இருந்த போது பாகிஸ்தானில் அகதியாக தங்கி இருந்தவர்.

1990 ஆம் ஆண்டுகளில் ஆப்கானிஸ்தான் தலிபான் தீவிரவாதிகள் வசம் இருந்த போது காபூலில் இருந்து வெளியேறி குடும்பத்தினருடன் பாகிஸ்தானில் தங்கியிருந்தார்.

தலிபான்களின் ஆதிக்கம் வீழ்ந்ததும் மீண்டும் ஆப்கானிஸ்தான் வந்து படித்து பட்டம் பெற்றார்.

உயர்நிலைப்பள்ளியில் படித்த போது பெண்கள் இராணுவத்தில் சேர வேண்டும் என்று டி.வி.யில் வலியுறுத்தப்பட்டது. இது அவரது மனதில் பதிந்தது. கல்லூரி படிப்பை முடித்தவுடன் அவர் விமானப்படையில் விமானி ஆக சேர்ந்தார்.

இப்பணியில் சேர அவருடன் 12 பெண்கள் போட்டியிட்டனர். அவர்களில் பெரோஷி ஒருவர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இது குறித்து அவர் கூறும் போது, இராணுவ சீருடை அணிந்தவுடன் பெண்ணான நான் மிகவும் பெருமை அடைவதாக உணர்ந்தேன். இப்பணி எனக்கு மிகவும் பிடித்துள்ளது என்றார்.

afcan1 afcan2

அந்தமானில் புயல், மழையால் மின்சாரம் துண்டிப்பு : 1400 சுற்றுலாப்பயணிகள் நிர்க்கதி!!

anthaman

அந்தமான் தீவில் புயல் மற்றும் கன மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

அந்தமான் தீவுகள் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அந்தமான் அருகே ஹெவ்லாக், நீல் தீவுகளுக்கான படகுப் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.

தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால், ஹெவ்லாக் தீவில் 1,400 சுற்றுலாப்பயணிகள் நிர்க்கதியாகியுள்ளனர்.

வானிலை மோசமாக இருப்பதால், சுற்றுலாப்பயணிகளை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கடற்படை தகவல் தெரிவித்துள்ளது.

இறந்து விடுவான் என கூறப்பட்ட குழந்தையைத் தத்தெடுத்து மறுவாழ்வளித்த தம்பதியர்!!

dead

பல்கேரியாவைச் சேர்ந்த ரியான் எனும் சிறுவன் வளர்ச்சிக் குறைபாடு, இதயக் கோளாறுடன் பிறந்ததால் 7 வயதில் வெறும் மூன்றரைக் கிலோவுடன் காட்சியளித்தான்.

ஆதரவற்றோர் இல்லத்தில் விசேட கவனிப்பு செலுத்தப்பட வேண்டிய நிலையில் இருந்த ரியானை, இணையத்தளம் மூலம் அறிந்த அமெரிக்காவில் வசிக்கும் டேவிட், பிரிசில்லா மோர்ஸ் தம்பதியர் தத்தெடுத்தனர்.

விரைவில் இறந்து விடுவான் என்று தெரிவிக்கப்பட்டு வழங்கப்பட்ட ரியானை, அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்றனர் அந்த தம்பதியர்.

சிகிச்சைக்காக அவனை மருத்துவமனையில் சேர்த்த போது, அமெரிக்க மருத்துவர்களும் அவன் இறந்துவிடுவான் என்றே கூறிவிட்டனர்.

எப்படியாவது ரியானைக் காப்பாற்ற வேண்டும் என விரும்பிய டேவிட், பிரிசில்லா மோர்ஸ் தம்பதியர், அவனை வேறொரு மருத்துவமனையில் சேர்த்து குழாய் மூலம் சத்தான உணவுகளை உட்செலுத்தினர்.

விசேட சிகிச்சைகளையும் தொடர்ந்ததன் பயனாய், ஏதோ அற்புதம் நிகழ ஆரம்பித்தது. ரியானின் உடல் கொஞ்சம் கொஞ்சமாகத் தேறி, ஒரு வருடத்தில் 10.5 கிலோ எடையை அடைந்தான்.

மருத்துவர்களின் வார்த்தைகளைத் தாண்டியும் ரியான் பிழைத்திருக்கிறான். சின்னச் சின்ன வார்த்தைகளைப் பேசவும் பழகிவிட்டான். அடுத்த வருடம் அவனைப் பாடசாலையில் சேர்க்கும் முனைப்புடன் இருக்கிறார் பிரிசில்லா மோர்ஸ்.

டேவிட், பிரிசில்லா தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். ரஷ்யாவில் இருந்து ஒரு பெண் குழந்தையையும் தத்தெடுத்திருக்கிறார்கள்.

ஆனாலும் ரியான் மீது இவ்வளவு அன்பு செலுத்த பிரிசில்லாவிற்குக் காரணங்கள் இருந்தன. பிரிசில்லாவின் அண்ணனும் விசேட தேவையுடைய குழந்தையாகப் பிறந்தது தான் அந்தக் காரணம்.

தனது பெற்றோர் அவனை அக்கறையாகப் பார்த்துக்கொண்ட போதும், தனது அண்ணன் 9 வயதில் தங்களை விட்டுப் பிரிந்ததாக பிரிசில்லா கூறினார்.

தன் பெற்றோர் தனது அண்ணனுக்கு வழங்கிய அந்த அதீத அக்கறையை தானும் ஒரு விசேட தேவையுடைய குழந்தைக்கு வழங்க வேண்டும் என்பதை பிரிசில்லா ஓர் இலட்சியமாகவே கொண்டிருந்தார்.

ரியான் தற்போது, ஓரளவு குணம்பெற்ற குழந்தையாகிவிட்டான்.

d1 d2 d3 d4 d5 d6

48 பேர் பலியான பாகிஸ்தான் விமானம் விபத்திற்கான காரணம் வெளியானது!!

 
பாகிஸ்தான் விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறினாலே குறித்த விமானம் விபத்துக்குள்ளாகியதாக கண்டறியப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத் நகரில் இருந்து சிட்ரல் நோக்கி 48 பேருடன் பயணித்த விமானம் அபோட்டாபாத் அருகே மலையில் ஒன்றில் நேற்று விழுந்து நொறுங்கியது .

குறித்த விமானம் விபத்துக்குள்ளாவதற்கு சில வினாடிகளுக்கு முன்னர் விமானியினால் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு தொடர்பாக பிரதான கட்டுப்பாட்டு அறைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் குறித்த விமானத்தில் இருந்த 48 பேரும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்காகம் அறிவித்துள்ளது.

20 21 22 23 26 27 28

ஜெயலலிதா போல் உயிரிழந்த 16 முதலமைச்சர்கள்!!

cm

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த திங்கட்கிழமை இரவு உடல் நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் உயிரிழந்தார்.

இதனால் பதவியில் இருக்கும் போதே உயிரிழந்த முதலமைச்சர்கள் பட்டியலில் ஜெயலலிதாவும் சேர்ந்துள்ளார். தமிழகத்தில் மட்டும் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்-ஐ தொடர்ந்து 3வது நபராக ஜெயலலிதா பதவியில் இருக்கும் போதே உயிரிழந்துள்ளார்.

இந்த ஆண்டில் இதற்கு முன்பாக கடந்த ஜனவரி மாதம் ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சராக இருந்த முப்தி முகமது சயது உடல் நலக்குறைபாடு காரணமாக காலமானார்.

பதவியில் இருக்கும் போதே உயிரிழந்த முதல்வர்கள் விவரம்:-

1. கோபிநாத் போர்தோலோய், அசாம் (ஆகஸ்ட் 6, 1950)
2. ரவிசங்கர் சுக்லா, மத்திய பிரதேசம் (டிசம்பர் 31, 1956)
3. ஸ்ரீ கிருஷ்ணா சிங், பீகார் ( ஜனவரி 31, 1961)
4. பிதன் சந்திர ராய், மேற்கு வங்காளம் (ஜூலை 1, 1961)
5. மரோட்ராய் கன்னம்வர், மகாராஷ்டிரா (நவம்பர் 24, 1963)
6. பல்வந்த்ராய் மேத்தா, குஜராத் (செப்டம்பர் 19, 1965)
7. சி.என்.அண்ணாதுரை (பிப். 3, 1969)
8. தயானந்த் பந்தோட்கர், கோவா (ஆகஸ்ட் 12, 1973)
9. பர்கதுல்லா கான், ராஜஸ்தான் (அக்டோபர் 11, 1973)
10. ஷேக் அப்துல்லா, ஜம்மு-காஷ்மீர் (செப்டம்பர் 8, 1982)
11. எம்.ஜி.ஆர் (டிசம்பர் 24, 1987)
12. சிமன்பாய் படேல், குஜராத் (பிப்ரவரி 17, 1994)
13. பீண்ட் சிங், பஞ்சாப் (ஆகஸ்ட் 31, 1995)
14. ஒய்.எஸ்.ஆர் ரெட்டி, ஆந்திர பிரதேசம் (செப்டம்பர் 2, 2009)
15. டார்ஜி காண்டு, அருணாச்சல பிரதேசம் (ஏப்ரல் 30, 2011)
16. முப்தி முகமது சயது, ஜம்மு-காஷ்மீர் (ஜனவரி 7, 2016)

ஐஸ்வர்யா ராய் தற்கொலைக்கு முயற்சி?

aiswarya

உலக அழகியும், பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய் தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

கரண் ஜோகதர் இயக்கத்தில் ‘ஏக் தில் ஹை முஷ்கில்’ என்ற படத்தில் ரன்பீர் கபூருடன் ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார்.

இந்த படத்தில் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சர்ச்சையை கிளப்பியது, ஐஸ்வர்யா ராய் மீது அமிதாப் பச்சன் குடும்பம் கடும் கோபத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன.

இதனால் மன உளைச்சலில் இருந்த ஐஸ்வர்யா ராய் தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியாகின.

பொலிவுட் உலகமே பதறிப் போக வதந்தி என தெரியவந்தது, பாகிஸ்தானை சேர்ந்த ஊடகமே இவ்வாறான தகவலை வெளியிட்டதும் தெரியவந்தது.

மேலும் ஐஸ்வர்யா ராய், “என்னை சாகவிடுங்கள், இதுபோன்ற பரிதாப வாழ்க்கையை வாழ்வதை விட சாவதே மேல்” என கூறியதாகவும் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொத்து கொண்டு வருவதில் தாமதம் : மூவர் வைத்தியசாலையில், ஒருவர் கைது!!

kothu

மொனராகலை நகர் உணவகம் ஒன்றில், இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் மூவர் காயமடைந்துள்ளனர்.

உணவை (கொத்து) வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்தை அடுத்து ஏற்பட்ட கருத்து வேறுபாடே முரண்பாட்டுக்கு காரணம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை இந்த விடயம் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட மொணராகலை பொலிஸார் தற்போது ஒருவரைக் கைதுசெய்துள்ளனர்.

சந்தேகநபரை நாளை மொணராகலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.