வவுனியா தினச்சந்தையில் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி நிகழ்வு!!

 
வவுனியாவில் இன்று (08.12.2016) காலை 9 மணியளவில் தினச்சந்தைப் பகுதியில் உள்ளுர் விளைபொருள் விற்பனையாளர் சங்கம் ஏற்பாடு செய்த மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன், வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவர் ரி.கே.இராஜலிங்கம், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ். சந்திரகுமார், செயலாளர் மாணிக்கம் ஜெகன், உள்ளுர் விளைபொருள் விற்பனையாளர் சங்கத் தலைவர், செயலாளர், உறுப்பினர்கள், தினச்சந்தை வியாபார நிலைய விற்பனையாளர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

1 p1230330 p1230334 p1230337 p1230339 p1230346 p1230349 p1230353p1230361p1230365p1230369p1230372p1230374p1230376

வவுனியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக விழிப்புணர்வு வீதி நாடகம்!!

 
சிறுவர் அபிவிருத்தி அமைப்பு, யாழ்ப்பாணம் சிறுவர் மகிழ்ச்சி அகம் ஏற்பாட்டில் இடம்பெற்ற பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்போம் எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு வீதி நாடகம் வவுனியா பிரதேச செயலகம், வவுனியா மத்திய பேரூந்துதரிப்பிடத்திற்கு முன்பாக, மதவுவைத்தகுளம் போன்ற பகுதிகளில் வீதி நாடகம் இடம்பெற்றுள்ளது.

‘பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்போம்’ என்ற தொனிப்பொருளில் நவம்பர் 25 முதல் டிசம்பர் 10 வரை பெண்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

20161208_115538 20161208_115652 20161208_115829 20161208_115833 20161208_115850 1 20161208_115535

வவுனியா பெரியதம்பனை கிராமிய சுகாதார நிலைய திறப்பு விழா!!

 
வவுனியா பெரியதம்பனை பிரதேசத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட கிராமிய சுகாதார நிலையம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்களினால் இன்று (08.12.2016) காலை 9.30 மணியளவில் பொதுமக்களின் பாவனைக்காக வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் வடமாகணசபை உறுப்பினர் இ.இந்திரராஐா, வடமாகாண சுகாதார அமைச்சரின் பிரத்தியோக செயலாளர் ப.சத்தியசீலன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பவானி பசுபதிப்பிள்ளை, செட்டிக்குளம் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி சுதர்சன், தாதிய உத்தியோகத்தர்கள் , வைத்தியர்கள், அரச மற்றும் அரசார்பற்ற உத்தியோகத்தர்கள், பொலிஸார், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இப் பெரியதம்பனைக்குள கிராம சேவையாளர் பிரிவின் கீழ் 130 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த யுத்தகாலத்தின் போது இடம்பெயர்ந்த இக் கிராம மக்கள் 2010ம் ஆண்டு மீள் குடியேறியமை குறிப்பிடத்தக்கது.

img_7922 img_7923img_7926img_7927img_7928img_7929img_7930img_7931img_7932img_7934img_7941img_7942img_7946img_7950img_7952img_7953img_7959img_7963img_7964img_7966

பில்கேட்சுக்கே ஸ்க்ரீன் சேவர் காட்டி ஏமாத்திய எமதர்மன்: சுவாரசியமான சங்கதி!

eman

பில்கேட்ஸ் இறந்தபின் எமனுடைய அவையில் நிறுத்தப்பட்டிருந்தார்.
எமன் சொன்னான்,
“நான் இந்த கேசில் மிகவும் குழப்பத்தில் இருக்கிறேன், உனக்கு சொர்க்கமா?.. நரகமா? … எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த சமுதாயத்தில் ஏறக்குறைய அனைத்து வீடுகளிலும் கணினி உபயோகிக்க செய்து விட்டாய், அதோடு “படு பயங்கரமான விண்டோஸையும் ” உருவாக்கிவிட்டாய்.
அதனால் நான் இதற்குமுன் செய்யாத ஒன்றை உனக்காக செய்யப்போகிறேன்… உனக்கு சொர்க்கமா? நரகமா? என்பதை உன் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்.”
“நல்லது கடவுளே!ஆனால் இரண்டுக்கும் என்ன வேறுபாடு?”
” ஒகே! இரண்டின் வேறுபாட்டையும் நீ நேரில் பார்த்து முடிவாக உன் பதிலை சொல்! , வா என்னோடு, முதலில் நரகத்தை பார்ப்போம்!”
“அப்படியே செய்வோம் எமதர்மராஜா ! வாருங்கள் போகலாம்”
நரகத்தைப் பார்த்ததும் ஆச்சர்யத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டார் பில்கேட்ஸ்.
இதுவா நரகம்? … தெளிவான நீரோடு, வெண்மையான பெரிய கடற்கரை, கண்ணை கவரும் இளம் நங்கைகள் சிரித்துக் கொண்டும், விளையாடிக் கொண்டும் இருக்க, இதமான சூரிய ஒளி…
“ஆஹா ! அருமை !” இதுதான் நரகம் என்றால், எனக்கு சொர்கத்தை பார்க்க அவகாசமில்லை..” என்று பில்கேட்ஸ் சொன்னபோதும்.
“வா சொர்கத்தை பார்க்கலாம்..” என சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்றார் எமன்.
அங்கே, நீல ஆகாயம், சிறு சிறு வெண் மேகங்கள், தேவதைகள் ஆடிப்பாடி களித்திருக்க .. அருமை. ஆனால் பில்கேட்ஸ்க்கு, நரகத்தை போல சொர்க்கம் அவரைக் கவரவில்லை..
நீண்ட யோசனைக்குப்பின்,
“தர்மராஜா!, நான் நரகத்திற்கே போக ஆசைபடுகிறேன்” என்றார் பில்கேட்ஸ்.
“உன் விருப்பம்”, எமன்.
இரண்டு வாரங்களுக்குப்பின்,
பில்கேட்ஸின் நிலையை சோதிக்க எமன் நரகத்திற்கு போனார்.
அங்கே, இருண்ட குகையில், கை, கால்கள் இரும்பு சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு பெரிய தீ சுவாலைகளுக்கு நடுவே துடித்துக்கொண்டிருக்க, எம கிங்கரர்கள் பில்கேட்ஸை சித்திரவதை செய்து கொண்டிருந்தார்கள்.
“எப்படி இருக்கே பில்கேட்ஸ்?” என்றான் எமன்.
பில்கேட்ஸ் கடுமையான வேதனையோடு, ஈனமான குரலில்,
“முடியல… நான் அன்று பார்த்த அழகிய கடற்கரை, இளம் மங்கைகள் எல்லாம் எங்கே?”
எமன் சொன்னான்,
“அட லூசு பய புள்ள, அது SCREEN SAVER டா !”

வவுனியா மாவட்டத்தில் 22500 ஏக்கரில் நெற் செய்கை ஆரம்பம்!!

paddy

வவுனியா மாவட்டத்தில் இம் முறை பெரும்போக நெற் செய்கை 22500 ஏக்கரில் இடம்பெற்றுள்ளதாகவும் மழை வீழ்ச்சி இன்மை காரணமாக விவசாயிகள் நெற்செய்கையில் ஆர்வம் குறைந்து காணப்படுவதாகவும் எனினும் சில தினங்களில் பருவமழை ஆரம்பிக்குமாக இருந்தால் மேலும் விவசாயிகள் ஆர்வத்துடன் நெற் செய்கையில் ஈடுபட முன்வருவார்கள் என்றும் கமநல உதவி ஆணையாளர் ஆர்.விஜயகுமார் தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர்..

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இம்முறை வவுனியா மாவட்டத்தில் விவசாயிகள் ஆர்வத்துடன் நெற் செய்கையினை ஆரம்பித்துள்ளனர். காலநிலை காரணமாக வவுனியா மாவட்டத்திலுள்ள குளங்களில் தண்ணீர் இன்றி காணப்படுவதனாலும், வவுனியா மாவட்டத்தில் மழையில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாகவும் இம் முறை விவசாயிகள் நெற் செய்கை மேற்கொள்வதற்கு ஆர்வம் இன்றி காணப்படுகின்றார்கள்.

தற்போது நெற் செய்கையினை மேற்கொண்டவர்களுக்கு மானிய அடிப்படையில் அரசாங்கத்தினால் ஐந்து ஏக்கருக்கு 25000 ரூபா மானியமாக வழங்கப்பட்டு வருகின்றது.

விவசாயிகள் நெற் செய்கையினை ஆரம்பித்தபோதும் பசளை பெற்றுக் கொள்வதற்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் பசளை வீசவேண்டிய காலத்தில் வீசமுடியாமல் போயுள்ளதாகவும் விவசாயிகள் குற்றசாட்டினை முன்வைத்துள்ளனர்.

இதற்கு கருத்துத் தெரிவித்த கமநல உதவி ஆணையாளர், காலதாதம் ஏற்படுவதற்கு நாம் பொறுப்பல்ல. உரிய நேரத்தில் விண்ணப்பப்படிவங்களை பயனாளிகள் சமர்ப்பிக்காத காரணத்தினால் காலதாதம் ஏற்பட்டுள்ளது.

இருந்தும் மானியத்தினைப் பெற்றுக் கொடுப்பதில் நாம் ஆர்வம் காட்டி வருகின்றோம். இலங்கையில் எப்பாகத்திற்கும் இன்னும் மானியம் வழங்கப்படவில்லை.

விவசாய அமைச்சர் அலுவலகத்திலிருந்து மானியம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அடுத்த கிழமைக்குள் பயனாளர்களின் வங்கியில் மானியத்திற்கான பணம் வைப்பிலிடப்படும் என்றும் கமநல உதவி ஆணையாளர் தெரிவித்தார்.

வவுனியாவில் ஐயப்பன் குருசாமிகள் கௌரவிப்பும் குருபூஜையும்!!

image-0-02-06-3865d2c8483c7b3be155dcac130639bf9681c11e6166826fb677faf4fd541c7c-v

அகில இலங்கை பாரத ஐயப்ப சேவா சங்க ஒன்றியத்தலைவர் குருநாதர் (ரவிகுமார்) அவர்களுக்கு நாளை (09.12.2016) அன்று காலை 9.30 மணியளவில் வவுனியா தவசிகுளத்தில் குருபூஜை நாடத்தவுள்ளதாலும் வவுனியா மாவட்ட குருசாமிமார்களும் ஏனைய குருசாமிகளும் கௌரவிக்கப்படவுள்ளதால் அனைவரையும் அன்புடன் ஏற்ப்பாட்டுக் குழுவினர் அழைத்து நிற்கின்றனர்.

காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாத உணவுகள்!!

food1

காலைப் பொழுதே பலருக்கும் தேநீரில் தான் விடியும், ஆனால் ஒரு சில உணவுகளை காலையில் எழுந்தவுடனே வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது.

ஏனெனில் நாம் சாப்பிடும் உணவுகளில் அதன் அமிலங்களின் தன்மை அதிகமாக இருப்பதால் அது இரைப்பையில் சுரக்கும் அமிலத்துடன் கலந்து பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகிறது.

சோடா

சோடாவில் கார்போனேட்டட் அசிட் அதிகமாக உள்ளது. எனவே இந்த சோடாவை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது. ஏனெனில் சோடாவானது, நமது வயிற்றில் உள்ள அமிலத்துடன் கலந்து வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சனையை ஏற்படுத்துகிறது.

தக்காளி

தக்காளியில் அசிட் உள்ளதால், இதை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் தக்காளியில் இருக்கும் அசிட்டானது, இரைப்பையில் சுரக்கும் அசிட்டுடன் கலந்து கரைக்க முடியாத கற்களை வயிற்றில் உருவாக்குகிறது.

மாத்திரைகள்

மாத்திரைகளை நாம் வெறும் வயிற்றில் சாப்பிடும் போது, மாத்திரையானது, நமது வயிற்றில் உள்ள படலத்தை அரித்து, வயிற்றில் சுரக்கும் அமிலத்துடன் கலந்து, வயிறு தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

அல்கஹால்

அல்கஹால் பொதுவாக ஆரோக்கியமற்றது. அதிலும் அதை வெறும் வயிற்றில் குடித்தால், அல்கஹாலில் இருக்கும் சேர்மங்கள் நமது வயிற்றின் படலத்தை அரித்து, எரிச்சலை ஏற்படுத்துகிறது.

கோப்பி மற்றும் டீ

பொதுவாக கோப்பி மற்றும் டீ ஒரு ஆபத்தான பானமாகும். ஏனெனில் கோப்பி மற்றும் டீயில், காபின் என்னும் வேதிப் பொருள் நமது உடலின் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

எனவே இதை காலையில் வெறும் வயிற்றில் குடிக்காமல், ஒரு டம்ளர் தண்ணீர் குடித்த பின் குடிப்பது மிகவும் சிறந்தது.

தயிர்

தயிரில் நல்ல பக்டீரியாக்கள் இருந்தாலும் நாம் அதை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் தயிரில் உள்ள பக்டீரியாக்கள் நமது வயிற்று படலத்துடன் சேர்ந்து வினை புரிந்து வயிற்று உப்பிசம் போன்ற பிரச்சனையை ஏற்படுத்துகிறது.

அறிமுகமாகியது Android Nougat இயங்குதளம்!!

os

கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்த Android இயங்குதளமானது மொபைல் சாதன பயனர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளமை அனைவரும் அறிந்ததே.

பிரத்தியேக இயங்குதளத்துடன் மொபைல் சாதனங்களை அறிமுகம் செய்த முன்னணி நிறுவனங்களும் சமகாலத்தில் அன்ரோயிட் இயங்குதத்தில் செயற்படக்கூடிய மொபைல் சாதனங்களையே அறிமுகம் செய்கின்றன.

இதன் காரணமாக கூகுள் நிறுவனம் தொடர்ச்சியாக அன்ரோயிட் இயங்குதளத்தின் புதிய பதிப்புக்களை அறிமுகம் செய்து வருகின்றது.

இவ்வாறு இறுதியாக Android 7.0 Nougat எனும் புதிய பதிப்பினை அறிமுகம் செய்திருந்தது.

பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் எதுவும் இல்லாது வெளியான இப்பதிப்பானது புதிய மொபைல் சாதனங்களில் நிறுவப்பட்டு பாவனை செய்யப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தற்போது வரை 0.4 சதவீதமான மொபைல் சாதனங்களில் இயங்குதளம் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 26.3 சதவீதத்துடன் Android Marshmallow முதல் இடத்திலும், 24% சதவீதத்துடன் Android Lollipop இரண்டாவது இடத்திலும் காணப்படுவதுடன் ஏனைய பதிப்புக்கள் இவற்றினைத் தொடர்ந்து காணப்படுகின்றன.

ஐபோன் பாவனையாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை!!

iphone

தற்போது ஸ்மார்ட் கைப்பேசிகளின் வெடிப்பு சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன.

இவற்றில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மற்றும் சம்சுங் நிறுவனத்தின் கைப்பேசிகளே அதிகளவில் பாதிக்கப்படுகின்றன. இதேவேளை ஐபோன் பாவனையாளர்களுக்கு மற்றுமோர் அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது ஐபோன்களுடன் தரப்படும் ஒரிஜினல் சார்ஜர்கள் தவிர்ந்த ஏனைய போலி சார்ஜர்களை பயன்படுத்த வேண்டாம் என்பதே அதுவாகும்.

கனடாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் 99 சதவீதமான போலி சார்ஜர்கள் சிறந்தவை அல்ல எனவும் இவை எப்போது வேண்டுமென்றாலும் வெடிக்கலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

400 சார்ஜர்கள் இந்த ஆய்விற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்போலி சார்ஜர்கள் அனைத்தும் ஐபோன்களுக்கானது என ஒன்லைனில் ஓர்டர் செய்து பெற்றுக்கொள்ளப்பட்டவையாகும்.

மேலும் இந்த சார்ஜர்கள் அமெரிக்கா, கனடா, கொலம்பியா, சீனா, தாய்லாந்து மற்றும் அவுஸ்திரேலியா போன்ற 8 நாடுகளில் இருந்து கொள்வனவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

charger

கோஹ்லியை கமராவுக்கு போஸ் கொடுக்க வற்புறுத்திய அனுஷ்கா : வைரலாகும் சுவாரஸ்ய வீடியோ!!

kholi

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர்களுக்குள் மோதல் ஏற்பட்டதாகவும், இதனால் இவர்கள் பிரிந்து விட்டதாகவும் கூறப்பட்டது.

ஆனால் அதற்கு பிறகே இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாக சென்று வர ஆரம்பித்தனர்.

கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் திருமணத்திலும் இருவரும் ஜோடியாக பங்கேற்றது மட்டுமல்லாது ஜோடியாக நடனமாடியும் அசத்தினர்.

இலங்கையில் இரண்டரை கோடி கையடக்கத் தொலைபேசிகள் பாவனையில்!!

mobile

இலங்கையில் நிலையான தொலைத் தொடர்பாடல் தற்போது முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக தொலைத்தொடர்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

1990ம் ஆண்டு முவாயிரம் முகவரிகளில் மட்டுமே நிலையான தொலைத்தொடர்புஇருந்துள்ளதாகவும் தற்பொழுது 26லட்சத்தி ஆயிரத்து196 நிலையான தொலைபேசிகள்பயன்பாட்டில் உள்ளதாக தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின்அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே நேரம் இரண்டு கோடி 43 லட்சத்திற்க மேற்பட்ட கையடக்க தொலைபேசிகள்பயன்பாட்டில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிலையான தொலைத் தொடர்பை விரிவுபடுத்தும் வேலைத்திட்டம் அடுத்த ஆண்டுமுன்னெடுக்கப்படும் என்று ஆணைக்குழு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

ஜெயலலிதா எப்பப்பா சரியாவாங்க : இறந்தது தெரியாமல் கண்ணீர் விட்டு கதறிய சிறுமி!!

jeya

தமிழக முதல்வரான ஜெயலலிதா நேற்று முந்தினம் இரவு 11.30 மணிக்கு காலமானார் என அப்பல்லோ மருத்துவமனை அதிகார பூர்வ அறிக்கை வெளியிட்டது.

இந்த அறிவிப்பு வெளியானவுடன் தமிழகம் முழுவதும் சோகக்கடலில் மூழ்கியது. இதைத் தொடர்ந்து நேற்று மாலை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்ஜிஆர் நினைவிடத்திற்கு அருகில் முதல்வர் ஜெயலலிதாவின் பூத உடல் மண்ணில் விதைக்கப்பட்டது.

முதல்வர் ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்தை பல தொலைக்காட்சிகளும் நேரடியாக ஒளிபரப்பு செய்தன. இதைத் தமிழகம் மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து மக்களும் பார்த்து கண்கலங்கினர்.

இதைத் தொடர்ந்து தற்போது சிறுமி ஒருவர் ஜெயலலிதா இறந்ததை அறியாமல் கண்கலங்கி கதறிய சம்பவம் வீடியோவாக வெளியாகி, சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அதில், அச்சிறுமி ஜெயலலிதா எப்போ சரியாவார்கள் என்று கேட்டபடி தொடர்ந்து கண்கலங்கியதும், அதற்கு அருகில் இருக்கும் நபர் ஒருவர் சரியாகி விடுவார்கள், விரைவில் வந்துவிடுவார்கள் என கூறும் சம்பவம் பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.

வாகனம் குடைசாய்ந்ததில் இருவர் படுகாயம்!!

 
மட்டக்களப்பு கொழும்பு நெடுஞ்சாலை ஊறணி பகுதியில் நேற்று (07.12) கார் ஒன்று குடை சாய்ந்ததில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்துக்கான காரணம் என்று கூறப்படுகின்றது.

படுகாயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை குறித்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

31 32 33 34

9 நாட்களாக குழந்தைகளை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு காதலனுடன் இருந்த தாய் : துடி துடிக்க இறந்த குழந்தை!!

child

உக்கிரைனில் இரண்டு குழந்தைகளை 9 நாட்களாக வீட்டு அறையில் பூட்டி வைத்து விட்டு தாய் வெளியே சென்றதால் உணவின்றி ஒரு குழந்தை பரிதாபமாக இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உக்கிரைன் நாட்டின் Kiev தலைநகரைச் சேர்ந்தவர் Vladislava Podchapko( 20). இவர் அங்குள்ள பகுதியில் தன் காதலருடன் கடந்த ஒன்பது நாட்களாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவர் தன் குழந்தைகளான Daniil மற்றும் Anna வை தன்னுடைய வீட்டில் பூட்டி வைத்து விட்டு, அவர்கள் சாப்பிடுவதற்கு சிறிதளவு இனிப்பு வகை உணவுப்பொருட்கள் மற்றும் நொறுக்கு தீனிகள் போன்றவற்றை வைத்துச் சென்றுள்ளார்.

பின்னர் அவர் வீடு திரும்புகையில் Daniil 23 மாத குழந்தை பரிதாபமாக உணவின்றி இறந்துள்ளார். மற்றொரு குழந்தையான Anna வை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அக்குழந்தையும் அபாயகட்டத்தில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பொலிசார் அங்கு சென்று சோதனை செய்ததில் சில உணர்ச்சிபூர்வமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அதில் குழந்தைகள் தங்களுடைய கை வண்ணத்தை அறையின் சுவற்றில் வரைந்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து குழந்தைகள் தொடர்ந்து அழுதுள்ளனர். ஆனால் அருகில் இருந்த யாரும் இது தொடர்பாக எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை. குழந்தைகள் கதவுகளை உடைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அது பலன் அளிக்கவில்லை.

தங்களால் முடிந்த அளவுக்கு அனைத்து முயற்சிகளையும் செய்துள்ளனர். ஆனால் எதுவும் பலன் அளிக்கவில்லை. அவர்கள் கடந்த ஆறு நாட்களாக அவர் தாயார் வைத்துச் சென்ற நொறுக்குத் தீனி உணவுப் பொருட்களை சாப்பிட்டு இருந்துள்ளனர்.

தங்க நகைகளை உற்றுப் பார்த்தமைக்காக கேலி செய்யப்பட்டவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!!

11

சவூதி அரேபியாவில் அமைந்துள்ள நகைக் கடையொன்றில் தங்க நகைகளை உற்றுப் பார்த்த நபருக்கு மாபெரும் அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது.

சவூதி அரேபியாவில் பணிபுரியும் பங்களாதேஷை சேர்ந்த 65 வயதான அப்துல் கரீம் என்பவருக்கே இவ்வாறான அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

குறித்த நபர் சவூதியில் ஆடம்பர மாளிகை யொன்றில் தங்க நகைகளை விநோதமாக பார்த்துக் கொண்டிருக்கும் காட்சி சமூக வலைதளங்களில் மிகப் பரவலாக வெளியிடப்பட்டது.

இதனைப் பார்த்த பலரும் குறித்த நபரை பலவாறாக விமர்சிக்க தொடங்கினார்கள். இவர் குப்பைத் தொட்டியை பார்ப்பதற்குத்தான் தகுதியானவர் என பலவாறான விமர்சனங்களை வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் இவரின் பரிதாபத்தை பார்த்த பலரும் இவருக்கு உதவி செய்யும் முகமாக பல்வேறான விலையுயர்ந்த பரிசுப் பொருட்களை அனுப்பிக் கொண்டிருக்கின்றனர்.

குறித்த விடயத்தினால் தாம் மகிழ்ச்சியடைந்திருப்பதாக அப்துல் கரீம் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

12 13

கோடரியால் தாக்கப்பட்டு இளைஞன் படுகொலை!!

murder

பிபில – அரவாகும்புர பகுதியில் இன்று (07) கோடரியால் தாக்கப்பட்டு 21 வயதுடைய இளைஞரொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இந்த சம்பவத்தின் போது 15 வயதுடைய அவரின் சகோதரர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர்களின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் இளைஞர்களது பெரியப்பாவினால் குறித்த இருவரும் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதேவேளை சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில், விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.